துர்க்காவை மாலை கொண்டு வந்தது. ஆப்ரேஷன் தியேட்டர் கொண்டு சென்று, காயத்திற்கு தையல் போட்டு, அப்படியே ஐ.சி.யூக்கு மாற்றி இருந்தனர். இதுவரை எந்த நல்ல செய்தியும் கூறவில்லை.
Advertisement
கிருபாகரன் அகிலனையும் அந்த அடியாட்களையும் போலிஸில் ஒப்படைத்து விட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான்.
தன்னவளின் ரத்தம் தோய்ந்த உடையுடன், அவள் குருதி காய்ந்து இருந்த கையையே பார்த்துக் கொண்டிருந்தான் பரணி. கற்சிலையும் தோற்று விடும் அப்படி ஒரு இறுக்கத்தில் இருந்தான் .
Advertisement
Advertisement
பிரபாகரனுக்கு தங்கையை பற்றி கவலைப்படுவதா, இல்லை நண்பனை தேற்றுவதா என்று தெரியாமல் அவனுமே உறைந்து போய் தான் அமர்ந்து இருந்தான்.
அஞ்சனாதான் இரு ஆண்களுக்கும் சேர்த்து அழுது கொண்டிருந்தாள்.
Advertisement
மணி 12ஐ தெட சில நிமிடங்கள் இருந்த நிலையில் தான் ஐ.சி.யூவில் இருந்து மருத்துவர் வெளியே வந்தார்.
துர்க்கா இருக்கும் அறை கதவு திறந்ததும் தான் தலையை நிமிர்த்தி பார்த்தான் பரணி. மருத்துவரை கண்டவன் தெய்வத்தை கண்டது போல் வேகமாக எழுந்து அவர் முன்பு போய் நிற்க, மற்றவர்களும் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்று தவிப்பாக பார்த்து நிற்க,
மருத்துவர் “அவங்க இப்போ ஓகே தான்.. கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டாங்க.. இப்போ மயக்கத்துல இருக்காங்க மயக்கம் தெளிஞ்சதும் யாராவது ஒருத்தர் போய் பாருங்க.. நாளைக்கு மார்னிங் ஒரு தடவ பாத்துட்டு நார்மல் வாட்டுக்கு ஷிஃப்ட் பண்ணலாம்…” என்று நற்செய்தி கூறிச் செல்ல
தோய்ந்து அப்படியே நிலத்தில் விழுந்துவிட்டான் பரணி. அவளுக்கு ஒன்றுமில்லை என்று கேள்விப்பட்ட பின்னர் தான் அவனுக்கு உயிரே வந்தது போல, உணர்வுகள் இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்தது போல, கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்து.
பிரபாகரனும் மண்டியிட்டு அமர்ந்தவன் நண்பனின் தோளை தொட்டு “மச்சான் அதுதான் ஒன்னும் இல்லையே.. கொஞ்ச நேரத்துல அவள பாக்கலாம் டா…” என்று சொல்ல
பாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டவன் சத்தமாக விசும்பி அழ ஆரம்பித்தான். அங்கு இருந்த யாரும் பரணியின் இப்படி ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவில்லை.
“செத்துருப்பேன்டா.. அவளுக்கு ஏதாவது ஒன்னுனா செத்து இருப்பேன்.. எப்படிடா அவளுக்கு மனசு வந்துச்சு.. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு நினைச்சவ என்ன பத்தி நினைக்கலையா?.. எனக்கு அவ மட்டும் தானேடா.. நேத்து இந்த நேரமெல்லாம் என் கையில…” என்று சொல்லி தன் இரு கைகளையும் தூக்கி காட்டியவன், அதில் இருந்த அவள் குருதியை பார்த்து “ஐயோ துர்காம்மா!.. எதுக்குடி இப்படி பண்ணுன.. நேத்து அத்தன சந்தோஷத்த அள்ளி தந்தயே இப்படி என்ன சிதைச்சிட்டு உள்ள போய் படுத்திருக்கியே.. ஏன்டி…” என்று அழுதவன்
பிரபாகரனின் சட்டையை பிடித்து “என் தங்கச்சிய நான் காப்பாத்திருக்க மாட்டேனா டா.. எதுக்குடா இவ இப்படி பண்ணுனா.. என் கூட ஒரு நாள் வாழ்ந்தது போதும் என்ற திருப்தியில இருந்து முடிவுக்கு வந்துட்டாளா.. நூறு வருஷம் வாழ்ந்தாலும் எனக்கு போதாதேடா, என்ன பத்தி அவ ஏன்டா யோசிக்கல…” என்று தன் அழுகை ஆதங்கம் என்று அத்தனையும் கொட்டி தீர்த்தான் பிரபாகரனின் தோளில்
அவனை தேற்றி ஆறுதல் படுத்த அத்தனை கஷ்டமாக இருந்தது பிரபாகரனுக்கு.
கிருபாகரனுமே அழுதான். தங்கையின் நிலையை நினைத்து இல்லை, தங்கை மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் கணவன் கிடைத்ததை நினைத்து.
ஒருவாறு பரணியை தேற்றி வைத்திருக்க, தாதி பெண் ஒருவர் வந்து துர்க்கா கண் விழித்து விட்டதாக கூறிச் செல்ல, பிரபாகரன் பரணியை போக சொல்ல
“இல்ல.. நான் போகல.. நீ போய் பாத்துட்டு வந்து சொல்லு…” என்று அரற்றியவனை
“உள்ள போடா.. ரத்தத்தோட அவள பாத்ததையே நினைச்சுட்டு இருப்ப.. இப்ப அவ நல்லா இருப்பா போய் பாத்துட்டு வா…” என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தான் பிரபாகரன்.
உள்ளே சென்று அவன் பூங்கொடியை பார்த்தவனுக்கு மட்டுப்பட்டு இருந்த கண்ணீர் மீண்டும் மடை திறந்து கன்னத்தில் ஆறாக ஓடியது.
உடலில் இருந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறி, ஓய்ந்து வெளிறிபோய் துவண்ட கொடியாக கண்களை மூடி படுத்திருந்தாள்.
சில்லிட்டு போயிருந்த உள்ளங்கைகள் இரண்டையும் இறுக பொத்தி, மெதுவாக நடந்து அவள் அருகில் வந்து நின்றான்.
எமனுடன் போராடி கலைத்து போன தோற்றம். முகத்தில் இன்னமும் வலியின் சாயல் மிச்சம் இருந்தது. உதடுகள் உலர்ந்து வறண்டு போய் இருந்தது.
அவளை பார்க்க பார்க்க அவனுக்குள் உணர்வுகள் கொந்தளிக்க ஆரம்பித்தது. குனிந்து அந்த ரத்த பசையற்ற இதழ்களில் அழுத்தி ஒரு முத்தம் வைத்தான்.
நேற்று இதே நேரம் அவளின் அந்த இதழ்கள் இரண்டும் அவன் மேனி முழுவதும் இன்ப அச்சாரங்களை பதித்தது. அந்த தேன் ஊறும் இதழ்களை தன் அதரங்களுக்குள் திகட்ட திகட்ட பதுக்கி வைத்திருந்தானே, இப்போது துவண்டு காய்ந்துபோய் இருந்தது.
அவனால் அழுகையை அடக்க முடியவில்லை, அவனது கண்ணீர் துளிகள் முகத்தில் பட்டு தான் கண்களைத் திறந்தாள் துர்க்கா .
கண்ணில்லாத குருடனுக்கு பார்வையை தந்து, ஒரே நாளில் பறிக்க பார்த்தது போல், திகட்ட திகட்ட அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க, ஒரு நொடியில் அதை ஒன்றும் இல்லாமல் மாற்ற இருந்தாளே ராட்சசி கடிந்து கொள்ள கூட முடியவில்லை அவனால்.
தன் முகத்தை இரு கைகளிலும் தாங்கி அழுது கொண்டிருந்தவனை “அத்தான்!…” என்று அழைக்க
“பேசாதடி கொன்னுடுவேன்.. என்ன பத்தி நீ யோசிக்கல இல்ல…” என்று விம்ம
“எனக்கு எதுவும் ஆகாதுன்னு தெரியும் அத்தான்.. எனக்காக இல்ல உங்களுக்காக, உங்க நேசத்துக்காகவே கடவுள் நான் உங்க கூட இருக்கணும்னு தான் நினைப்பாரு .. அதுதான் தைரியமா அஞ்சுவ காப்பாத்த போனேன்…” என்று சொல்ல
“என்ன இந்த அளவுக்கு கதற விட்டுட்டு பாசத்த பத்தி பேசுறியா.. போடி!.. ஐ ஹேட் யூ!…” என்று அவனும் முறுக்கிக் கொள்ள
“ஆனா நான் உங்கள விரும்புறேனே.. ஐ லவ் யூ அத்தான்!…” என்று அவள் சொல்ல மீண்டும் அவள் இதழில் அழுத்தமாக முத்தம் வைத்தவன்
“நான் சொல்ல மாட்டேன்…” என்று முரண்டு பிடிக்க, சிரித்து விட்டாள் பெண்ணவள்.
“ஏய் சாரப்பாம்பு சிரிக்காதடி.. காயம் வலிக்க போகுது…” என்று சொல்ல
புன்னகையுடனே “எப்படி எல்லாம் என்ன கூப்பிடுறீங்க.. துர்க்காம்மா, சாரப்பாம்பு, இப்ப புதுசா டி…” என்று அவள் கேட்க
“என் பொண்டாட்டிய என்ன சொல்லி கூப்பிடனும்னு தோணுதோ அப்படி கூப்பிடுவேன்.. உன்ன கூப்பிட என்கிட்ட நூறு சொல் இருக்கு …” என்று சொல்லி அவள் நெற்றி முட்டி சிறிது நேரம் அப்படியே இருந்தான் .
பின் மனதே இல்லாமல் முத்தங்களால் தன் தவிப்பை உணர்த்தி, அவளை விட்டு வெளியே வர, மற்றவர்கள் ஒவ்வொருத்தராக உள்ளே சென்று துர்க்காவை பார்த்து விட்டு வந்தனர்.
விடிந்ததும், அஞ்சனா மருத்துவமனையில் இருக்க, மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். பரணியை கிளப்புவதுதான் சிரமமாக இருந்தது. உடையை மாற்றி விட்டு வரலாம் என்று ஒருமாதிரியாக பேசி சரி கட்டியதான் கூட்டி வந்தனர்.
பிரபாகரன் கிருபாகரனை விட்டுவிட்டு பரணி எப்போதோ உடையை மாற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தான் .
நித்தியா அனைவருக்கும் சமைத்து பரணிக்கும் துர்க்காவுக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் வந்திருந்தாள்.
அவளும் துர்க்காவை பார்த்து விட்டு, தான் கூட இருப்பதாக சொல்லி, அஞ்சனாவை மற்றவர்களுடன் அனுப்பி வைத்தாள். அதில் விதிவிலக்கு பரணி மட்டுமே.
தன்னவளுக்கு முகம் கழுவி, சாப்பாடு ஊட்டி விட்டு என்று அனைத்தும் அவன் தான் செய்தான்.
இதில் எல்லோரும் குறுகுறுவென்று பார்த்தது என்னவென்றால் துர்க்காவை ஐ.சி.யூவில் சென்று பார்த்து விட்டு வரும் வரை பரணிக்கு ஊன்றுகோல் தேவைப்படவில்லை.
அதன் பின்னர் தான் அவன் கால் வீங்கி இருப்பதை மற்றவர்கள் கண்டு கொண்டனர். அங்கேயே வைத்தியரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டான். அதன் பின் பிரபாகரனை பிடித்துக் கொண்டு தாங்கி தாங்கி தான் நடந்தான்.
வீட்டிற்கு சென்றவன் திரும்பும் போது ஊன்று கோலுடன் தான் வந்தான். நேற்று தன் உயிரானவளுக்கு ஒன்று என்றதும் தன் இயலாமையையும் மறந்து அவன் செயல் பட்டது ஆச்சரியம் தான்.
துர்க்காவிற்கு நடந்த அசம்பாவிதம் கேள்வி பட்டு முருகானந்தம், பிரேமாவதி, சகுந்தலா மூவரும் மருத்துவமனை வந்தனர். பிரபாகரன் அவர்களை உள்ளே விடவே இல்லை.
வருத்தமாக திரும்பி செல்ல இருந்தவர்களில் சகுந்தலாவிடம் மட்டும் “அத்த ரெண்டு நாள் கழிச்சு நீங்க மட்டும் வாங்க.. ஒரு இடத்துக்கு போகணும்…” என்று சொல்ல அவரும் சரியென சென்றார்.
இரண்டு நாட்கள் ஓடியது.
துர்க்கா ஓரளவு தேறி இருந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் வீட்டிற்கு செல்லலாம் என வைத்தியர் சொல்லி விட்டார்.
சகுந்தலாவும் எதற்கு என்று புரியாமல் மருத்துவமனை வந்து சேர, பிரபாகரன் பரணி அவரை அழைத்தக் கொண்டு சென்ற இடம் சிறைச்சாலை
ஆம் அகிலனை பார்க்க தான் அழைத்து வந்திருந்தனர்.
தடுப்புக்கு அந்தப் பக்கம் அகிலன் வந்து நிற்க, சகுந்தலாவிற்கு வளத்த பாசம் எட்டிப் பார்த்தது. “அகி ஏன்டா இப்படி பண்ணுன.. நீயாடா இது?…” என்று கேட்க
பரணியோ “சித்தி ரொம்ப பாசத்துல உருகாதீங்க.. கொஞ்ச நேரத்துல நீங்களே இவன கொன்னு போட சொல்லுவீங்க…” என்று பரணி சொல்ல
அவனை திரும்பி பார்த்த சகுந்தலா “ஏன்? என்ன ஆச்சு?…” என்று கேட்க
“கேட்கிறாங்க இல்ல.. அவங்க முகத்தப் பாத்து சொல்லு.. அவங்களுக்கு நீ என்ன பண்ணுனனு…” என்று பரணி அடக்கப்பட்ட கோபத்துடன் அகிலனை பார்த்து சொல்ல
“நான் என்ன பண்ணுனேன்.. உன் தங்கச்சியும் இவனும் தான் என் வாழ்க்கைய கெடுத்தது.. நான் யாருக்கும் எதுவுமே பண்ணல…” என்று அவன் வாய் கூசாமல் பேச
“இன்னமும் நீ எங்கள புரிஞ்சுக்கலல.. கோட்டுக்கு உன்ன கொண்டு போகாம ஸ்ட்ரைட்டா ஜெயில்ல தூக்கி போட்டப்போ கூட உனக்கு பொறி தட்டல இல்ல.. சரி இப்பவாச்சும் பல்ப் எரியுதானு பாக்கலாம்.. பொண்டாட்டி கிட்ட கிடைக்கிற சுகம் பத்தலன்னு தானே என் தங்கச்சிக்கு துரோகம் பண்ணுன.. இப்போ உள்ள வகை வகையா சுகம் கிடைக்குமே.. எப்படி சந்தோஷமா இருக்கீயா?…” என்று பரணி நக்கலாக கேட்க
“டேய் அதுக்கு காரணம் நீயா?…” என்று கம்பியை இறுக்கி பிடித்தான் அகிலன்.
பிரபாகரனுக்கும் புரியவில்லை “என்னடா?…” என்று பரணியிடம் கேட்க
“சார் உடல் சுகம் இல்லாம இருக்க மாட்டார் இல்ல.. அதான் ஜெயில்ல கூட சந்தோஷமா இருக்கட்டும்னு அழகிகளுக்கு பதிலா ஆறடி உயரத்துல நாலு கட்டழகனுகள உள்ள இறக்கி இருக்கேன்.. என்று பிரபாகரனிடம் சொன்ன பரணி
“ஒரு நாளைக்கே இப்படி அலர்ற.. நீ சாகுற வரைக்கும் இது தொடர்ந்து நடக்கும்.. என்ன நாலு ஆம்பளைங்க தாக்கு பிடிப்பியா?…” என்று அகிலனிடம் கேட்க
“ஐயோ என்ன அசிங்கம் இதெல்லாம்…” என்று சகுந்தலா கத்த
“இருங்க சித்தி.. முழுசா இன்னும் விசயம் வெளிய வரல…” என்று சொன்ன பரணி
“பொண்ணுங்கன்னா உன் பார்வ தப்பா தான் இருக்கும் இல்ல.. துர்க்கா உனக்கு தங்கச்சி முறை டா, அவ மேலயே கை வைக்க பாத்திருக்க.. உன்ன விட்டுவிடுவேன்னு நினைச்சியா?.. இதோ இவங்க பெத்த தாய் போல தானே உன்ன பாத்துக்கிட்டாங்க.. இவங்கள வெச்சி சம்பாதிச்சு இருக்க.. இவங்க மட்டும் தானா இல்ல உன் அம்மாவையும் அந்த மாதிரி வீடியோ எடுத்து இருக்கியா?…” என்று கேட்க
“சகுந்தலா அதிர்ந்து பரணியை திரும்பி பார்க்க, “மன்னிச்சிடுங்க சித்தி.. இது உங்களுக்கு தெரிய கூடாதுனு தான் நான் நினைச்சேன்.. ஆனா பிரபா தான் இந்த நாயோட சுயரூபம் உங்களுக்கு தெரியட்டும்னு சொன்னான்…” என்று பரணி சொல்ல
பிரபாகரன் “அத்த இவன் ரியல் எஸ்டேட் பண்றனு வாங்கி போடுற நிலமெல்லாம் சீக்கிரமே வித்திடும் எப்படின்னு தெரியுமா?.. பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஓனரோட இவனுக்கு தொடர்பு.. அந்த ஆளும் இவன் எந்த நிலம் வாங்கி போட்டாலும் அத வாங்கிப்பாரு.. அதுக்கு இவன் கூலியாக கொடுத்தது…” என்று சொல்லி அவர் முகம் பார்க்காமல் திரும்பியவன்
“உங்க பாத்ரூம்ல கேமரா வெச்சு சூட் பண்ண வீடியோ…” என்று சொல்ல
கூனி குறுகி போனார் சகுந்தலா. கண்ணீர் கூட வரவில்லை. அப்படி ஒரு அதிர்ச்சி.
அவரின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த பரணி “சித்தி ரொம்ப யோசிக்காதீங்க.. இவனோட வண்டவாளம் எல்லாம் துப்பு துலக்கும் போது தான் இது எங்களுக்கு தெரிய வந்தது.. அந்த ஆள் கிட்ட மட்டும் தான் குடுத்து இருக்கான்..இப்போ எல்லாத்தையும் அழிச்சாச்சு.. எங்களுக்கு கூட அது என்ன வீடியோன்னு சொன்னது டிடெக்டிவ் ஏஜென்சில இருந்த ஒரு பொண்ணு தான்.. சோ நீங்க கவலைப்படாதீங்க.. அதவிட ஒரு முக்கியமான விஷயம் அந்த பணக்காரனுக்கு நேத்து ஒரு கார் ஆக்சிடென்ட் ,அதுல கார் கண்ணாடி சில்லு சில்லா உடைஞ்சு அவன் கண்ணுல ஏறி, அவன் பார்வை போயிடுச்சு …” என்று அகிலனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு சொல்ல
அதை செய்தது யார் என்பது அவனுக்கு மட்டுமே புரிந்தது.
“போதும்!…” என்றவர் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியே காரில் அமர்ந்து கொண்டார்.
அவர் கொஞ்சமும் எதிர்பாக்காத இடத்தில் இருந்து தாங்கிக் கொள்ள முடியாத ஒரு துரோகம், தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
சகுந்தலா அவ்விடம் விட்டு நகரவும் “என்ன ஒரு ஈன பிறவி டா நீ.. என் துர்க்காவயே கஷ்டப்படுத்தி இருக்க, இப்போ காயபடுத்தி இருக்க.. உன்ன சும்மா விடுவேன்னு நினைச்சயா?.. அந்த சிவாவயே சாவு வராதானு ஏங்கி சாகுற அளவுக்கு தண்டன குடுத்தேன்.. உனக்கும் அதே போல ஒரு ஸ்பெஷல் தண்டனை தான்.. நீ சாகவும் முடியாது உள்ள நடக்குற சித்திரவதையில இருந்து தப்பிக்கவும் முடியாது…” என்று பரணி சொல்ல
“டேய் வேணாம்.. வேற எந்ந தண்டனை வேணும்னாலும் குடு அவனுகள என்ன நெருங்க வேணாமனு சொல்லு.. இல்ல வெளிய வந்ததும் முதல் கொல நீ தான்… என்று அகிலன் கத்த
பிரபாகரனோ “உனக்கு வெளிய வந்துடலாம் என்ற நினைப்பு வேற இருக்கா?.. உன் மேல ஏழு கேஸ் இருக்கு, எல்லாமே போதை பொருள் கடந்தல் மாதிரி ஸரோங் கேஸ்.. தேச துரோக வழக்கு கூட போட முடியுமானு சோடிக்க ஆதாரம் தேடுறேன்.. சரியா கிடைச்சா அதையும் போட்டுடுவேன்.. என் தங்கச்சிய தப்பா பாத்திருக்க, என் செல்லம்மாவ கொல்ல பாத்திருக்க, உன்ன அவ்வளவு ஈஸியா என் கண் பார்வைல இருந்து விட்ருவேன்னு நினைக்காத.. நீ சாகுற வரைக்கும் உன்னோட ஒவ்வொரு நாளும் என் பார்வைக்கு வந்துடும்…” என்று சொன்ன பிரபாகரன்
“வா மச்சான் இவன் மூஞ்ச பாத்தா கூட பாவம் சேரும்…” என்றவன் பரணியின் தோளில் கையை போட்டுக் கொண்டு நடக்க
அகிலன் வேண்டாம் விட்டு விடு என்று கத்தியது இருவரின் காதிலும் கேட்கவில்லை.
“அப்போ சிவாவோட நிலமைக்கு நீ தான் காரணம்…” என்று பிரபாகரன் கேட்க
“கண்டுபிச்சிருப்பனு நினைச்சேன்.. இல்லையா…” என்று பரணி அமர்த்தலாக கேட்க
“ம்ம்.. அவன் சாவ பத்தி விசாரிச்சப்போ மர்மமாவே இருக்கு, ஒருவேள வர்மக்கலை மூலம் யாராவது தாக்கி இருக்கலாம்னு தகவல் வந்துச்சு.. அப்போவே தெரியும் நீ தான்னு.. நீ போலிஸாகனும்னு முடிவெடுக்க முன்னாடியே அந்த கலைய கத்துக்கிட்டது எனக்கு மட்டும் தானே தெரியும்…” என்று சொன்ன பிரபாகரன்
“ஆனா ஏன் மச்சான்.. அப்போ துர்க்கா உனக்கு யாரோ தானே.. அவளுக்காக கொல பண்ற அளவுக்கு போயிறுக்க…” என்று கேட்க
“நானும் அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன்.. அவ எனக்கு நண்பனோட தங்கச்சி மட்டும்னு.. ஆனா அந்த நாயால துர்க்கா என்னலாம் கஷ்டப்பட்டானு அஞ்சு சொன்னதும் என் உயிர் துடிச்சுது டா.. அவன அணு அணுவா சித்திரவத பண்ணி கொல்லனும்னு ஆத்திரம் வந்துச்சு.. நீயும் அவன சும்மா விட மாட்டனு தெரியும்.. அதான் உன்ன ஃபாலோ பண்ணுனேன்.. நீ அவன் கிடைச்சதும் உடனே கொல்ல திட்டம் போட்ட, அதான் நானே அவன காப்பாத்தி நான் நினைச்ச தண்டனைய குடுத்தேன் …” என்று சொல்ல
பரணியை மேலும் தோளோடு நெருக்கி கொண்டவன், “நீ கிடைக்க நானும் என் தங்கச்சியும் ஏதோ புண்ணியம் பண்ணிருக்கோம்டா…” என்றான் முகம் விகாசிக்க
காரின் அருகே வரவும் தான் சகுந்தலாவை நினைத்து கஷ்டமாக இருந்தது. ஆனால் இருவரும் அவரிடம் எதுவும் பேசவில்லை.
அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த கார் ஆதிசிவன் ஆசிரமத்தை தாண்டும் நேரம் “பிரபா வண்டிய நிறுத்து…” என்று சகுந்தலா சொல்ல
பிரபாகரனும் வண்டியை நிறுத்த, இறங்கிக் கொண்ட சகுந்தலா “நீ கிளம்பு…” என்று சொல்ல அவரின் முடிவு என்ன என்பது புரிந்தவன், அங்கு சரி அவருக்கான மன அமைதி கிடைக்கட்டும் என்று நினைத்து, சகுந்தலாவை அங்கேயே விட்டுவிட்டு பரணியுடன் ஊர் வந்து சேர்ந்தான்.
எந்த துறவறத்தை துர்க்காவிற்கு திணித்தாரோ அதே துறவறத்தை சகுந்தலாவின் மனம் இன்று நாடியது போலும், உடைவது கூட ஒரு புதிய மாற்றம் தான்.
Padupaavi enna vela ellam pannirukan. Athum amma vaa parga vendiyavara thappa eduthurukan😡😡😡🤬🤬🤬🤬…