Skip to content
Post Views: 41
அத்தியாயம் 34
இன்று துர்க்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று வைத்தியர் கூறி விட, பரணி, பிரபாகரன் அஞ்சனாவுடன் அறையை விட்டு வெளியேறியவள் “அண்ணா நான் சொன்னத செஞ்சிங்களா?…” என்று கேட்க
Advertisement
பிரபாகரனும் “ம்ம் வா!…” என்று சொல்லி அந்த மருத்துவமனையில் பரணிக்கு சிகிச்சை செய்த மருத்துவரை பார்க்க அழைத்துச் சென்றான்.
“இங்க எதுக்கு இப்போ.. எனக்கு கால்ல வீக்கம் இல்ல…” என்று பரணி சொல்ல
Advertisement
Advertisement
“எனக்கு கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் அத்தான்.. நீங்க வெளியவே இருங்க.. நான் பேசிட்டு வாரேன்…” என்று பரணியை வெளியேவே விட்ட துர்க்கா பிரபாகரனுடன் உள்ளே சென்றாள்.
பரணியின் மருத்துவ அறிக்கையை ஏற்கனவே பிரபாகரன் மருத்துவரிடம் சமர்ப்பித்து இருக்க, அவருக்கும் பரணியை நன்கு நினைவு இருந்தது.
Advertisement
அதற்கு காரணமே இப்போது துர்க்கா கேட்க வந்த சந்தேகம் தான். ஆம் பரணியின் இறுதி அறுவை சிகிச்சைக்கு பிறகு அவனை ஊன்று கோலின் உதவி இன்றி சிறுக சிறுக பயிற்சி எடுத்து தனியாக நடக்க முடியும் என்று சொல்ல.
தேவையில்லை நான் இப்படியே இருக்க ஆசைப்படுகின்றேன் என்று சொன்னவன் ஆயிற்றே அதனால் அவனை ஞாபகம் வைத்திருந்தார்.
துர்க்காவும் அன்று அவள் வெட்டுப்பட்டு கிடந்த போது ஊன்று கோலின் உதவி இன்றி அவளை தூக்கிக்கொண்டு ஓடியதும், அதற்குப் பிறகும் அவள் கண் விழிக்கும் வரை ஊன்று கோல் இன்றி இருந்ததும், அதன் பின்னர் அவன் கால் வீக்கமானதையும் கூறி,
பரணியால் ஊன்றுகோல் இன்றி நடக்க முடியுமா, இல்லை நடந்தால் அதேபோல் கால் வலி எடுத்து வீங்குமா என்று கேட்கவே வந்திருந்தாள்.
“இத பத்தி நான் ஏற்கனவே பரணி கிட்ட சொல்லிட்டேன்.. முறையாக கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி எடுத்துக்கிட்டா அவரால ஊற்றுகோல் உதவி இல்லாம நடக்க முடியும்.. என்ன வேகமாக நடக்க முடியாது, வெயிட் தூக்க முடியாது.. ஆனா வாக்கிங் ஸ்டிக் இல்லாம கஷுவல அவருடைய வேலைகள அவரால செஞ்சுக்க முடியும்.. அதுக்கு அவர் தயாரா இல்ல…” என்று சொல்ல
“ஏன் டாக்டர் ரொம்ப வலிக்குமா?…” என்று துர்க்கா கேட்க
மெலிதாக சிரித்தவர் “இல்ல அவருக்கு அந்த கால் பிரச்சனையானப்போ அவரோட மொத்த குடும்பத்தையும் இழந்துட்டு துணைக்கு யாரும் இல்லாம இருந்தாரு இல்ல.. அப்போ அவரோட காலும் பிரச்சனையாச்சு அந்த டைம்ல இருந்து அவர் அந்த ஸ்டிக் கூடயே இருந்து பழகிட்டாரு.. இது ஒரு சைக்காலஜிக்கல் ப்ராப்ளம்.. தனக்குன்னு யாருமே இல்லனு நினைக்கிறவங்க தன் கூட இருக்கிற பொருள துணையா நினைச்சுப்பாங்க.. அந்த மாதிரி தான் பரணியும் அவர யாராவது தாங்கி பிடிக்க மாட்டாங்களான்னு எதிர்பார்த்த நேரத்துல அவர தாங்கி பிடிச்சது அந்த ஊன்றுகோல் தான்.. அதனால அதவிட அவருக்கு மனம் இல்ல.. இதை ஈஸியா சரி பண்ணிட முடியும் அவருக்கு துணையா நீங்க இருக்கிறதா அவர் மனசுல பதிய வைங்க.. உங்களுக்காக அவர மாத்திக்க சொல்லுங்க.. மேபி மாற சான்ஸ் இருக்கு… என்று மருத்துவர் சொல்ல
“தேங்க்ஸ் டாக்டர்…” என்று அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அண்ணன் தங்கை இருவரும் வெளியே வந்தனர்.
துர்க்கா எப்படியாவது பரணியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக் கொண்டாள்.
அதன் பின்னர் அனைவரும் புறப்பட்டு பரணியின் வீட்டிற்கு வந்திருந்தனர். எப்போது போல் பரணி தன் மனைவியை உள்ளங்கையில் வைத்து பார்த்துக்கொள்ள, பிரபாகரன் கிருபாகரன் மனைவிகளோடு வந்து தினமும் தங்கையை பார்த்துவிட்டு சென்றனர். நாட்கள் ஓடி துர்காவின் காயம் பூரணமாக குணமாகி இருந்தது.
அதன் பின் பரணி துர்க்காவின் வாழ்க்கை மீண்டும் சந்தோஷமாக செல்ல, கிருபாகரன் நித்தியா வாழ்க்கை புதுவித சீண்டலும் அதிக நெருக்கமுமாக செல்ல, பிரபாகரன் அஞ்சனா வாழ்க்கை தான் எந்த மாற்றமும் இன்றி சென்றது.
அந்த மாற்றத்தை கொண்டு வரும் நாளும் வந்தது. வீட்டை விட்டு வரும் போது பிரபாகரன் அறையில் இருந்த பெட்டி ஒன்றில் தான் துணிகளை எடுத்து வைத்து கொண்டு வந்தாள் அஞ்சனா.
இன்று அந்த பெட்டியில் இருந்த எல்லாத்தையும் எடுத்து அறையில் வைத்து விட்டு, அதை அலமாரியின் மேல் வைக்கலாம் என்று அதன் உள் வேறு பொருட்கள் உள்ளதா என்று ஆராயும் போது, அந்த பெட்டியின் மேல் பக்கத்தில் இருந்த சிறிய பையனுள் ஒரு டைரி.
“மாமா டைரி எழுதுவாரா!…” என்று எடுத்து பார்த்தவளுக்கு கண்ணீர் பட்டது முதலாவது பக்கம். (என் செல்லம்மாவுக்கு) என்று இருந்தது. புருவம் சுருங்க அதை திறந்து பார்த்தாள்.
செல்லம்மா உனக்கே நல்லா தெரியும் என் மன கஷ்டங்கள நான் யாருகிட்டயும் சொல்ல விரும்புறதில்லனு.. ஆனா உன்கிட்ட மட்டும் சொல்ல தோணும்.. இப்போ நீயும் இல்ல, ஆனா இதுக்கு மேல என் மனச பொத்தி வைக்க முடியல.. இப்ப நான் ஹாஸ்பிடல் இருக்கேன்.. பூர்ணா ஆக்சிடென்ட் ஆகி உள்ள படுத்து இருக்கா.. புருஷன் என்ற கடமைக்கு நான் கூடவே இருக்கணுமே அதான் இருக்கேன்..
…ஆனா ஒரு மனுஷனா அவ எப்படியாவது பொழச்சு வந்துடனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.. ஆனா ஒரு புருஷனா பொண்டாட்டி உயிருக்கு போராடிகிட்டு இருக்கான்ற பரிதவிப்பு என்கிட்ட இல்ல.. நான் ஏன் இப்படி ஆயிட்டேன்னு எனக்கே புரியல செல்லம்மா.. எனக்கும் அவளுக்கும் குட்டி தேவதை ஒருத்தி இருக்கா.. ஆனா அந்த குழந்தைய கூட அவ ஆசையா தூக்கி கொஞ்சுனது கிடையாது.. என் பொண்ணுக்காக நான் என்னெல்லாம் பண்ணி இருக்கேன் தெரியுமா.. இப்போ என் பொண்ணுக்காகவாவது, அம்மானு சொல்ல அவள் வேணும்னு தோணுது.. நான் சண்ட போட்டு இருக்க கூடாது.. ஆனா நான் எதுவுமே சொல்லல அவளாவே சண்டை போட்டுக்கிட்டா, கோவிச்சிட்டு கார எடுத்துட்டு போய் ஆக்சிடென்ட் பண்ணிக்கிட்டா,
…அவ என்ன கேட்டா தெரியுமா, அவள நான் சந்தோஷப்படுத்தணுமாம்.. என்ன சிரிப்பா இருக்கா.. பொண்டாட்டி புருஷன் கிட்ட தானே கேட்க முடியும்னு தோணுது இல்ல.. ஆனா என்னால முடியலையே..
…கல்யாணமான அன்னைக்கே என் மனசு என்னன்னு பூர்ணா கிட்ட சொல்லிட்டேன்.. அவ என்ன புரிஞ்சிப்பான்னு எதிர்பார்த்தேன் ஆனா..
…கட்டாயத்தின் பேர்வ அவ கூட வாழ சொன்னா, எப்படி முடியும்.. கொஞ்சம் டைம் கேட்டேன் நீ ஆம்பளையே இல்லன்னு எல்லார்கிட்டயும் சொல்லி மானத்த வாங்கி விடுவேன்னு மிரட்டுனா.. அவ மிரட்டலுக்கு நான் பயப்படல ஆனா அவ சொன்ன மாதிரி செஞ்சிட்டா எனக்கு பிறகு தம்பி இருக்கான், ஏற்கனவே தங்கச்சி வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கு இதுல நானும் இப்படினு ஊருக்க பேச்சு அடிபட்டா.. தம்பி வாழ்க்கைய பத்தி யோசிச்சு தான் சரின்னு மனச ஒரு மாதிரி தயார்படுத்திட்டு வாழ ஆரம்பிச்சேன்..
…இப்பவே இந்த நிமிஷமே நீ எனக்கு வேணும்னு கட்டாயப்படுத்தும் போது எப்படி முழு மனசோட ஒன்ற முடியும்.. என்னால் முழுசா அவ கூட சேர முடியல, அதுக்கு கூட உன் ஸ்டாமினா அவ்வளவுதான்னு கேட்டுட்டா.. என் மூஞ்ச பாத்துட்டு முடியலைன்னா அவள நினைச்சுக்கோன்னு சொல்றா என்னால முடியல செல்லம்மா.. ஏன்டி என்ன விட்டுட்டு போன உன்ன மறக்கவும் முடியாம நினைக்கவும் முடியாம தினம் தினம் சாகுறேன்..
…ஆனா சத்தியமா உன்ன என் காதலியா பாக்கல, இந்த நிமிஷம் பூர்ணா தான் என் மனைவி அது என் மனசுல பதிஞ்சிடுச்சு.. ஆனா அவளுக்கு அத எப்படி புரிய வைக்கிறதுனு எனக்கு தெரியல.. எப்பவுமே எனக்கு ஆறுதல் சொல்லுற அந்த செல்லம்மாவ தேடுறேன் ஏதாவது சொல்லு செல்லம்மா…
…தாம்பத்தியம்னு வரும்போது பொண்ணுங்களுக்கு விருப்பம் இல்லனாலும் மரக்கட்ட மாதிரி படுத்துக்க முடியும்.. ஆனா ஒரு ஆம்பளைக்கு விருப்பம் இல்லனா உணர்வுகள் கிளர்ந்து எழாது.. அதுலயும் நீ இவ்வளவு தானானு ஒரு பார்வை பாப்பா பாரு அங்கேயே கூனி குறுகி செத்துரலாம் போல இருக்கும்..
…ஆனாலும் எல்லாம் ஒரு நாள் சரியாயிடும் என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிச்சேன்.. ஏதாவது வேலை விஷயமா வெளியே போறேன்னு சொல்லிட்டு நிறைய நாள் இரவுல வீட்டுல தங்குறதில்ல.. அப்பதான் பூர்ணா கர்ப்பமானா.. எனக்கு அவ்வளவு சந்தோஷம் தெரியுமா எங்க ரெண்டு பேருக்கு இடையில் இருக்கிற மனக்கசப்பு சரியாகிடும்.. எங்களால இந்த உலகத்துக்கு வர போற அந்த குட்டி உயிர் எங்க வாழ்க்கைய சரி பண்ணிடும்னு நினைச்சேன்.. அவளை நல்லபடியா பாத்துக்கணும்னு என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாமே பண்ணனுனேன்..
…மூணு மாசம் தான் எல்லாம் சரியா போச்சு.. திரும்பவும் பொண்டாட்டிய இப்படி மட்டும் பாத்துக்கிட்டா போதுமா உடல் தேவைன்னு ஒன்னு இருக்கேனு ஆரம்பிச்சிட்டா.. எனக்கு வேற வழி தெரியல, அதுலயும் ஒரு நாள் நான் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து மனசு விட்டு பேசி, குழந்த பிறந்ததுக்கு அப்புறம் புதுசா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன்.. இல்ல நீ எல்லாத்தையும் மறந்துடு இந்த நிமிஷம் நான் உன் புருஷன் அத மட்டும் நம்புனு கூட சொல்லி பார்த்தேன் அவ கேட்கல..
…நீ மட்டும் இப்ப நான் கேக்குறத கொடுக்கலைன்னா இந்த குழந்த வயத்துல இருக்காதுன்னு சொல்லிட்டா.. அவ என் செல்லம்மா, உன்ன தான் கைக்குள்ள வச்சுக்க தெரியாம விட்டுட்டேன்.. இந்த செல்லம்மாவையும் விட மனசு வரல திரும்பவும் படுக்கையில அடிமையானேன்.. அதுக்கு பிறகு செல்லம்மா பிறக்க நாள் நெருங்கிச்சு அப்போதுல இருந்து குழந்தைக்கு மூணு மாசம் ஆகுற வரைக்கும் பூர்ணா என்ன தொந்தரவு பண்ணல..
அதுலயும் செல்லம்மாவ முதல் முறை கையில வாங்கினப்போ அப்படி ஒரு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா.. என்னோட மொத்த சந்தோஷமும் திரும்பி கெடச்ச மாதிரி இருந்துச்சு.. ஆனா அத அனுபவிக்க பூர்ணா விடல.. மூணு மாசம் முடிய திரும்பவும் என்ன வற்புறுத்த ஆரம்பிச்சிட்டா, முடியாதுன்னு சொன்னா குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா, திரும்பவும் என் குழந்தைக்காக… குழந்தைக்காகனு மட்டும் சொல்ல முடியாது, ஒரு குழந்தையாகிடுச்சு எப்படியாவது அவளையும் சரி பண்ணனும்னு தான் நினைச்சேன்..
…எவ்வளவுதான் நீ என் பொண்டாட்டினு அவ மனசுல நான் பதிய வச்சாலும் அவள பாத்து சாதாரணமா சிரிச்சா கூட, அவள பாத்தும் இப்படித்தான் சிரிப்பியானு கேக்குறா.. அவள கட்டியிருந்தா ஒரு நாளைக்கு ரெண்டு தடவைன்னாலும் படுக்கையில உருண்டிருப்பலன்னு கேக்குறா.. பூ வாங்கி கொடுத்தா கூட எனக்கு என்றதால ஒரு முழம் அவளுக்குனா நாலு முழம் வாங்கி இருப்பலனு கேக்குறா.. முடியல செல்லம்மா…
…எப்படியோ என் குட்டி செல்லம்மாவுக்கு ஒரு வயசு வரைக்கும் சமாளிச்சேன்.. அதுக்கு மேல முடியாதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.. அவ இன்னும் மோசமா மாற ஆரம்பிச்சிட்டா.. யார் இருக்கா இல்ல எதையும் பார்க்க மாட்டா சட்டைய பிடிச்சு இப்பவே உள்ள வானு கூப்பிடுவா.. அசிங்கமா இருக்கும், அதுதான் ஒரு நாள் எல்லார் முன்னாடியும் கத்தி விட்டுட்டேன்.. எதுவா இருந்தாலும் அறைக்குள்ள வச்சுக்க, நீ என் பொண்டாட்டி என்றது ரூமுக்க மட்டும் தான்னு.. அவ என்ன பண்ணுனானு வீட்ல இருக்குற யாருக்குமே தெரியாது.. நான் கத்துனத மட்டும் வெச்சி என் மேல தான் தப்புனு சொன்னாங்க..
…என்னால எப்படி வெளியே சொல்ல முடியும் நானும் தங்கச்சி தம்பி வீட்ல இருக்காங்க, அதனால கொஞ்சம் தள்ளி இருக்க சொன்னேன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.. வீட்டுக்கு மூத்த மருமகளா அவ நடந்து கிட்டதே இல்ல.. சில நேரம் ரொம்ப வேலையா இருந்து தாமதமா வீட்டுக்கு வந்தா சிரிச்ச முகமாக வரவேத்து சாப்பாடு போட வேணாம்.. இவ்வளவு நேரம் அவ கூட தான் இருந்துட்டு வாரயான்னு கேட்காம இருக்கலாம்ல.. எத்தன நாள் சாப்பிடாமலே படுத்திருக்கேன் தெரியுமா.. என் மேல தான் கோபம்னு பாத்தா அவ வயித்துல பிறந்த செல்லம்மா மேலேயும் அம்மானு பாசத்தை காட்டுனது இல்ல.. எப்பவுமே நான் அவளை ஏமாத்திட்டேன்னு சொல்லிட்டே இருப்பா..
..இதோ செல்லமாக்கு நாலு வயசு.. மூணு வருஷமா எங்களுக்குள்ள எதுவுமே இல்ல.. ஆனா அவ எப்பவுமே இத பத்தி சண்ட போடுவா இன்னைக்கு கொஞ்சம் அதிகமா போச்சு.. எப்பவுமே கோவிச்சுட்டு போற மாதிரி வீட்ட விட்டு போனா.. சரி ரெண்டு நாள்ல போய் சமாதானப்படுத்தலாம்னு நானும் விட்டுவிட்டேன்.. ஆனா இப்போ ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆனா நான் கொஞ்சம் தணிஞ்சு போயிருந்தா ஒரு உயிர் போயிருக்காதுலனு காலத்துக்கும் வருந்த வச்சிடுவா.. அப்படி எதுவும் நடக்காது தானே செல்லம்மா.. என்னால முடியும்னா கண்டிப்பா அவ கேட்டத குடுத்திருப்பேன், தாம்பத்யம்னாலே கசந்து போயிடுச்சு சத்தியமா இப்போ எந்ந உணர்வுகளும் எனக்கு வாரதில்ல.. பூர்ணா என்ன ஆம்பள இல்லன்னு சொல்லி சொல்லியே அப்படி மாறிட்டேன் போல.. நானா இப்படின்னு எனக்கே என்ன புடிக்கல, இப்போ நான் உன் மாமா பிரபா இல்ல செல்லம்மா.. மொத்தமா உருக்குலஞ்சு போய் நிக்கிற பிரபாகரன்.. பூர்ணாவோட பிரபாகரன்… என்று முடிந்து இருந்தது அந்த டைரி.
அதைப் படிக்கும்போது கோடாக கன்னத்தில் வழிந்த அஞ்சனாவின் கண்ணீர் இப்போது தாரைதாரையாக வழிந்து அவள் மார்பை நனைத்தது.
பூர்ணா விபத்தில் சிக்கி ஓர் இரவு மருத்துவமனையில் இருந்து, அடுத்த நாள் தான் உயிர் பிரிந்தது. ஆக அன்று இரவு தான் இதை எழுதி இருக்க வேண்டும் என்பது புரிந்தது.
டைரியை மூடி மெத்தைக்கு அடியில் வைத்தவள் வேகமாக எழுந்து சென்று குளியல் அறையில் அடைந்து கொண்டாள். கதறி அழுதாள், வேதனை நெஞ்சை அடைத்து வெடித்து விடும் போல் இருந்தது.
பிரபாகரன் அன்று ஆற்றுவார் தேற்றுவார் இன்றி தன் மனதுக்குள் அழுத அழுகைகள் மொத்தமும் இன்று இவள் விழிவழி வெளிவந்தது போல் அழுது தீர்த்தாள்.
அதன் பின் ஒரு முடிவு எடுத்தவளாக அழுத சுவடே தெரியாமல் குளித்து முடித்து வெளியே வந்தாள். எப்பவும் போல் அவளவனுக்கு பிடித்த ஆலிவ் பச்சை நிறத்தில் ஒரு புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள்.
பிரபாகரனும் இன்று அஞ்சனாவிடம் மனம் விட்டு பேச வேண்டும், அவள் தயக்கம் என்னவென்று கேட்டு போக்க வேண்டும் என்ற முடிவில் தான் வீட்டிற்கு வந்திருந்தான்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்த பின்னர், கிருபாகரனும் நித்தியாவும் தங்கள் அறைக்கு சென்று விட, அஞ்சனாவும் அறைக்கு வந்து விட்டாள் ஆதூரியை தூங்க வைக்க.
பிரபாகரன் சற்று நேரம் சென்று அறைக்குள் வர ஆதூரி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அஞ்சனா கட்டிலில் அமர்ந்து இருந்து யோசனையாக இருக்க, முதல் முறை கட்டிலில் அவள் அருகே அமர்ந்தான் பிரபாகரன்.
“செல்லம்மா என்ன யோசனை?…” என்று கேட்க
“ஒன்னும் இல்ல மாமா?…” என்றவளால் அவன் முகம் பார்க்க முடியவில்லை, பார்த்தால் எங்கே அழுது விடுவோமோ என்று பயந்தாள்.
ஆனால் பிரபாகரன் விடவில்லை, அவள் இரு கன்னங்களிலும் தன் இரு கைகளையும் வைத்து, அவள் முகம் தாங்கியவன் “என்ன பாரு செல்லம்மா.. என்ன நெருங்க உன்ன எது தடுக்குது.. நமக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சு, இன்னும் நாம வாழ ஆரம்பிக்கல.. ப்ளீஸ் செல்லம்மா எனக்கு காரணம் வேணும்.. எதுக்கு என் கிட்ட இருந்து விலகி இருக்க…?” என்று கேட்க
அவளுக்கு மறைக்க தோன்றவில்லை எனவே “அது.. குழந்த…” என்று முழுதாக சொல்லாமல் நிறுத்த, இது அவன் யூகித்த காரணம் தான்.
“தாம்பத்யம் என்றது குழந்தைக்காக மட்டுமா?…” என்று அவள் கன்னங்களை இரு கைகளாலும் அழுத்தி பிடிக்க, அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. “இதோ நான் தொட்டதும் உன் உடம்பு சிலிர்த்து அடங்குதுல.. இது மாதிரி நீ தொட என் உடம்பு சிலிர்க்கணும்.. உன் மூச்சு காத்து என் நாசியில ஏறி என் சுவாசத்துல கலக்கணும்.. உன் வாசனை என் உடம்பு முழுவதும் வீசணும்.. உன்ன எனக்குள்ள உணரணும் அதுக்கு இந்த தாம்பத்தியம் நமக்குள்ள நடக்கணும்…” என்று பிரபாகரன் ஆசையாக சொல்ல
அஞ்சனா முகத்தை மூடி அழ, அவனுக்கு திகைப்பு தான். இப்போது எதற்கு அழுகின்றாள் என்று புரியவில்லை.
“செல்லம்மா என்ன ஆச்சு?.. உனக்கு டைம் வேணும்னா எடுத்துக்க, இப்பவே எல்லாம் நடக்கணும்னு இல்ல.. ஆனா தாம்பத்தியம் என்றது உன்ன நான் என்ன நீ உணரக்கூடிய ஒரு அழகான சங்கம் அதை மட்டும் மனசுல பதிய வச்சுக்க.. அழாத எதுக்கு அழுற எனக்கு புரியல…” என்று அவன் பரிதவித்து கூற
அழுகையினூடே மெத்தைக்கு அடியில் இருந்த டைரியை எடுத்து அவன் கையில் கொடுக்க, அதை பார்த்தவனுக்கு புரிந்து விட்டது. எந்த விடயம் அவளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்திருந்தானோ அது அவளை சென்று அடைந்து இதயத்தை பலமாக தாக்கி விட்டது என்று .
அத்தியாயம் 34
இன்று துர்க்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று வைத்தியர் கூறி விட பரணி பிரபாகரன் அஞ்சனாவுடன் அறையை விட்டு வெளியேறியவள் அண்ணா நான் சொன்னத செஞ்சிங்களா என்று கேட்க பிரபாகரனும் ம்ம் வா என்று சொல்லி அந்த மருத்துவமனையில் பரணிக்கு சிகிச்சை செய்த மருத்துவரை பார்க்க அழைத்துச் சென்றான் இங்க எதுக்கு இப்போ எனக்கு கால்ல வீக்கம் இல்ல என்று பரணி சொல்ல எனக்கு கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் அதான் நீங்க வெளியவே இருங்க நான் பேசிட்டு வரேன் என்று பரணியை வழியே இருக்கச் சொன்ன துர்க்கா பிரபாகரனுடன் உள்ளே சென்றாள் பரணியின் மருத்துவ அறிக்கையை ஏற்கனவே பிரபாகரன் மருத்துவரிடம் சமர்ப்பித்து இருக்க அவருக்கும் பரணியை நன்கு நினைவு இருந்தது அதற்கு காரணமே இப்போது துர்கா கேட்க வந்த சந்தேகம் தான் ஆம் பரணியின் இறுதி அறுவை சிகிச்சைக்கு பிறகு அவனை ஊன்று கோலின் உதவி என்று சிறுக சிறுக பயிற்சி எடுத்து தனியாக நடக்க முடியும் என்று சொல்ல தேவையில்லை நான் இப்படியே இருக்க ஆசைப்படுகின்றேன் என்று சொன்னவன் ஆயிற்றே அதனால் அவனை ஞாபகம் வைத்திருந்தார் துர்காவும் அன்று அவள் வெட்டுப்பட்டு கிடந்த போது மூன்று கவலையின் உதவி என்று அவளை தூக்கிக்கொண்டு ஓடியதும் அதற்குப் பிறகும் அவள் கண் விழிக்கும் வரை மூன்று கால் இன்று இருந்ததும் அதன் பின்னர் தான் கால் வீக்கம் ஆனதையும் கூறி அவரால் ஊன்றுகோல் இன்று நடக்க முடியுமா இல்லை நடந்தால் அதேபோல் கால் வலி கொண்டு வீங்குமா என்று கேட்கவே வந்திருந்தாள்
இத பத்தி நான் ஏற்கனவே பரணி கிட்ட சொல்லிட்டேன் முறையாக கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி எடுத்துக்கிட்டா அவரால ஊற்றுகோல் உதவி இல்லாம நடக்க முடியும் என்ன வேகமாக நடக்க முடியாது வெயிட் தூக்க முடியாது ஆனா ஓபனிங் ஸ்டிக் இல்லாம கிஷுவல் அவருடைய வேலைகள் அவரால் செஞ்சுக்க முடியும் அதுக்கு அவர் தயாரா இல்லை என்று சொல்ல ஏன் டாக்டர் ரொம்ப வலிக்குமா என்று கேட்க மெலிதாக சிரித்தவர் இல்லை அவருக்கு அந்த கால் பிரச்சனையானப்போ அவரோட மொத்த குடும்பத்தையும் இழந்துட்டு துணைக்கு யாரும் இல்லாமல் இருந்தாரு இல்ல அப்போ அவரோட காலும் பிரச்சனை ஆச்சு அந்த டைம்ல இருந்து அவர் அந்த ஸ்டிக் கூடயே இருந்து பழகிட்டாரு இது ஒரு சைக்காலஜி ப்ராப்ளம் தனக்குன்னு யாருமே இல்லை என்று நினைக்கிறவங்க தன் கூட இருக்கிற பொருளை துணையா நினைச்சுப்பாங்க அந்த மாதிரி தான் பரணியும் அவர் யாராவது தாங்கி பிடிக்க மாட்டாங்களான்னு எதிர்பார்த்த நேரத்தில் அவரை தாங்கி பிடிச்சது அந்த ஊன்றுகோல் தான் அதனால அதைவிட அவருக்கு மனம் இல்லை இதை ஈஸியா சரி பண்ணிட முடியும் அவருக்கு துணையா நீங்க இருக்கிறதா அவர் மனசுல பதிய வைங்க உங்களுக்காக அவரை மாத்திக்க சொல்லுங்க மேபி சான்ஸ் இருக்கு என்று மருத்துவர் சொல்ல தேங்க்ஸ் டாக்டர் என்று அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அண்ணன் தங்கை இருவரும் வெளியே வந்தனர் துர்கா எப்படியாவது பரணியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக் கொண்டாள்.
அதன் பின்னர் அனைவரும் புறப்பட்டு பரணியின் வீட்டிற்கு வந்திருந்தனர் எப்போது போல் பரணி தன் மனைவியை உள்ளங்கையில் வைத்து பார்த்துக்கொள்ள பிரபாகரன் கிருபாகரன் மனைவிகளோடு வந்து தினமும் உன் தங்கையை பார்த்துவிட்டு சென்றனர் நாட்கள் ஓடி துர்காவின் காயம் பூரணமாக குணமாகி இருந்தது.
அதன் பின் பரணி துர்க்காவின் வாழ்க்கை மீண்டும் சந்தோஷமாக செல்ல கிருபாகரன் நித்தியா வாழ்க்கை புதுவித சீண்டலும் அதிக நெருக்கமாக செல்ல பிரபாகரன் அஞ்சனா வாழ்க்கை தான் எந்த மாற்றமும் இன்றி சென்றது.
அந்த மாற்றத்தை கொண்டு வரும் நாளும் வந்தது வீட்டை விட்டு வரும் போது பிரபாகரன் அறையில் இருந்த பெட்டி ஒன்றில் தான் துணிகளை எடுத்து வைத்து கொண்டு வந்தாள் அஞ்சனா இன்று அந்த பெட்டியில் இருந்த எல்லாத்தையும் எடுத்து அறையில் வைத்து விட்டு அதை அலமாரியின் மேல் வைக்கலாம் என்று அதன் உள் வேறு பொருட்கள் உள்ளதா என்று ஆராயும் போது அந்த பெட்டியின் மேல் பக்கத்தில் இருந்த சிறிய பையனுள் ஒரு டயரி
மாமா டைரி எழுதுவாரா என்று எடுத்து பார்த்த வேலைக்கு தாட்சியாக கண்ணீர் பட்டது முதலாவது பக்கம் என் செல்ல மாவுக்கு என்று இருந்தது புருவம் சுருங்க அதை திறந்து பார்த்தாள்
செல்லம்மா உனக்கே நல்லா தெரியும் என் மன கஷ்டங்களை நான் யாருகிட்டயும் சொல்ல விரும்புவதில்லை ஆனா உன்கிட்ட மட்டும் சொல்ல தோணும் இப்போ நீயும் இல்லை ஆனா இதுக்கு மேல என் மனச பொத்தி வைக்க முடியல இப்ப நான் ஹாஸ்பிடல் இருக்கேன் ஒருநாள் ஆக்சிடென்ட் ஆகி உள்ள படுத்து இருக்கா புருஷன் என்ற கடமைக்கு நான் கூடவே இருக்கணுமே அதான் இருக்கேன் ஆனா ஒரு மனுஷனா அவ எப்படியாவது பொலிச்சு வந்துடனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் ஆனா ஒரு புருஷனா பொண்டாட்டி உயிருக்கு போராடிகிட்டு இருக்கான்ற பரிதவிப்பு எனக்கு கிட்ட இல்ல நான் ஏன் இப்படி ஆயிட்டேன்னு எனக்கே புரியல செல்லம்மா எனக்கும் அவளுக்கும் குட்டி தேவதை ஒருத்தி இருக்கா ஆனா அந்த குழந்தையை கூட அவ ஆசையா தூக்கி கொஞ்சுவது கிடையாது என் பொண்ணுக்காக நான் இதெல்லாம் பண்ணி இருக்கேன் தெரியுமா இப்போ என் பொண்ணுக்காகவாவது அம்மா என்று சொல்ல அவள் வேணும்னு தோணுது நான் சண்டை போட்டு இருக்க கூடாது ஆனா நான் எதுவுமே சொல்லல அவளவே சண்டை போட்டுக்கிட்டா குளிச்சிட்டு கார் எடுத்துட்டு போய் ஆக்சிடென்ட் பண்ணிக்கிட்டா அவ என்ன கேட்டா தெரியுமா அவளை நான் சந்தோஷப்படுத்தணுமாம் என்ன சிரிப்பா இருக்கா பொண்டாட்டி புருஷன் கிட்ட தானே கேட்க முடியும்னு தோணுது இல்ல ஆனா என்னால முடியலையே
கல்யாணமான அன்னைக்கே என் மனசு என்னன்னு பூர்ணா கிட்ட சொல்லிட்டேன் அவ என்ன புரிஞ்சிப்பான்னு எதிர்பார்த்தேன் ஆனா
கட்டாயத்தின் பேர்வ அவ கூட வாழ சொன்னா எப்படி முடியும் கொஞ்சம் டைம் கேட்டேன் நீ ஆம்பளையே இல்லன்னு எல்லார்கிட்டயும் சொல்லி மானத்த வாங்கி விடுவேன்னு மிரட்டுனா அவ மிரட்டலுக்கு நான் பயப்படல ஆனா அவ சொன்ன மாதிரி செஞ்சிட்டா எனக்கு பிறகு தம்பி இருக்கான் ஏற்கனவே தங்கச்சி வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கு இதுல நானும் இப்படினு ஊருக்க பேச்சு அடிபட்டா தம்பி வாழ்க்கையை பத்தி யோசிச்சு தான் சரின்னு மனச ஒரு மாதிரி தயார்படுத்திட்டு வாழ ஆரம்பிச்சேன் இப்பவே இந்த நிமிஷமே நீ எனக்கு வேணும்னு கட்டாயப்படுத்தும் போது எப்படி முழு மனசோட ஒன்ற முடியும் என்னால் முழுசா அவ கூட சேர முடியல அதுக்கு கூட உன் ஸ்டாமினா அவ்வளவுதான்னு கேட்டுட்டா என் மூஞ்ச பார்த்துட்டு முடியலைன்னா அவள நினைச்சுக்கோன்னு சொல்றா என்னால முடியல செல்லம்மா ஏன்டி என்ன விட்டுட்டு போன உன்ன மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் தினம் தினம் சாகுற ஆனா சத்தியமா உன்னைய காதலியா பாக்கல இந்த நிமிஷம் பூர்ணா தான் என் மனைவி அது என் மனசுல பதிஞ்சிடுச்சு ஆனா அவளுக்கு அது எப்படி புரிய வைக்கிறது எனக்கு தெரியல எப்பவுமே எனக்கு ஆறுதல் சொல்லுற அந்த செல்லம்மாவ தேடுறேன் ஏதாவது சொல்லு செல்லம்மா…
தாம்பத்தியம்னு வரும்போது பொண்ணுங்களுக்கு விருப்பம் இல்லனாலும் மரக்கட்ட மாதிரி படுத்துக்க முடியும் ஆனா ஒரு ஆம்பளைக்கு விருப்பம் இல்லனா உணர்வுகள் கிளர்ந்து எழாது அதுலயும் நீ இவ்வளவு தானானு ஒரு பார்வை பாப்பா பாரு அங்கேயே கூனி குறுகி செத்துரலாம் போல இருக்கும் ஆனாலும் எல்லாம் ஒரு நாள் சரியாயிடும் என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிச்சேன் ஏதாவது வேலை விஷயமா வெளியே போறேன்னு சொல்லிட்டு நிறைய நாள் இரவிலே வீட்டில் தங்குவதில்லை அப்பதான் பூர்ணா கர்ப்பமான எனக்கு அவ்வளவு சந்தோஷம் தெரியுமா எங்க ரெண்டு பேரு இடையில் இருக்கிற மருத்துவமெல்லாம் சரியாகிவிடும் எங்களால் இந்த உலகத்துக்கு வர போற அந்த குட்டி உயிர் நீங்க வாழ்க்கையை சரி பண்ணிடும்னு நினைச்சேன் அவளை நல்லபடியா பார்த்துக்கணும்னு என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாமே பண்ணனுனேன் மூணு மாசம் தான் எல்லாம் சரியா போச்சு திரும்பவும் பொண்டாட்டியை இப்படி மட்டும் பார்த்துக்கிட்டா போதும் உடல் தேவை இன்னும் ஒன்று இருக்கிறது ஆரம்பிச்சிட்டா எனக்கு வேற வழி தெரியல அதுலயும் ஒரு நாள் நாம் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து மனசு விட்டு பேசி குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் புதுசா ஒரு வாழ்க்கை ஆரம்பிக்கலாம் எவ்வளவோ எடுத்து சொன்னேன் இல்ல நீ எல்லாத்தையும் மறந்து இந்த நிமிஷம் நான் உன் புருஷன் அது மட்டும் நம்புனு கூட சொல்லி பார்த்தேன் அவ கேட்கல நீ மட்டும் இப்ப நான் கேக்குறது கொடுக்கலைன்னா இந்த குழந்தை வயத்துல இருக்காதுன்னு சொல்லிட்டா அவ என் செல்லமா உன்ன தான் கைக்குள்ள வச்சுக்க தெரியாம விட்டுட்டேன் இந்த செல்லம்மாவையும் விட மனசு வரல திரும்பவும் படுக்கையில அடிமையானேன் அதுக்கு பிறகு செல்லமா பிறக்க நாள் நெருங்கிச்சு அப்போதுல இருந்து குழந்தைக்கு மூணு மாசம் ஆகுற வரைக்கும் பூர்ணா என்ன தொந்தரவு பண்ணல அதுலயும் செல்லமாக முதல் முறை கையில வாங்கினேன் போ அப்படியே இருந்துச்சு தெரியுமா என்னோட மொத்த சந்தோஷமும் திரும்பி கெடச்ச மாதிரி இருந்துச்சு ஆனா அத அனுபவிக்க அவ விடல மூணு மாசம் முடிய திரும்பவும் என்ன வற்புறுத்த ஆரம்பிச்சிட்டா முடியாதுன்னு சொன்னா குழந்தைக்கு பால் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா திரும்பவும் என் குழந்தைக்காக குழந்தைக்காகனும் சொல்ல முடியாது ஒரு குழந்தையை ஆயிடுச்சு எப்படியாவது அவளையும் சரி பண்ணனும்னு தான் நினைச்சேன் எவ்வளவுதான் நீ என் பொண்டாட்டி அவ மனசுல நான் பதிய வச்சாலும் அவள பாத்து சாதாரணமா சிரிச்சா கூட அவளைப் பார்த்தும் இப்படித்தான் சிரிப்பியானு கேக்குறா அவள கட்டியிருந்தா ஒரு நாளைக்கு இரண்டு தடவைன்னாலும் படுக்கையில உருண்டிருப்பலன்னு கேக்குறா பூ வாங்கி கொடுத்தா கூட எனக்கு என்றதால ஒரு முழம் அவளுக்கு என்ன நாலு முழம் வாங்கி இருப்பலனு கேக்குறா முடியல செல்லம்மா
எப்படியோ செல்லம்மாவுக்கு ஒரு வயசு வரைக்கும் சமாளிச்சேன் அதுக்கு மேல முடியாதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்ல ஆரம்பிச்சுட்டேன் அவ இன்னும் மோசமா மாற ஆரம்பிச்சிட்டா யார் இருக்கா இல்ல எதையும் பார்க்க மாட்டா சட்டைய பிடிச்சு இப்பவே உள்ள வானு கூப்பிடுவா அசிங்கமா இருக்கும் அதுதான் ஒரு நாள் எல்லார் முன்னாடியும் கத்தி விட்டுட்டேன் எது வந்தாலும் அதுக்குள்ள வச்சுக்க நீ என் பொண்டாட்டி என்றது ரூமுக்கு மட்டும் தான்னு அவ என்ன பண்ணலாம்னு வீட்ல இருக்கியா யாருக்கும் தெரியாது நான் கத்துனது மட்டும் வெச்சிட்டு என் மேல தான் தப்பு சொன்னாங்க என்னால் எப்படி வெளியே சொல்ல முடியும் நானும் தங்கச்சி தம்பி வீட்ல இருக்காங்க அதனால கொஞ்சம் தள்ளி இருக்க சொன்னேன்னு சொல்லி சமாளிச்சிட்டேன் வீட்டுக்கு மூத்த மருமகளா அவ நடந்து கிட்டதே இல்ல சில நேரம் ரொம்ப வேலையா இருந்து தாமதமா வீட்டுக்கு வந்தா சிரிச்ச முகமாக வரவேற்று சாப்பாடு போட வேணாம் இவ்வளவு நேரம் அவ கூட தான் இருந்துட்டு வரையான்னு கேட்காம இருக்கலாம் எத்தனை நாள் சாப்பிடாமலே படுத்திருக்கேன் தெரியுமா என் மேல தான் கோபம்னு பார்த்தா அவ வயித்துல பிறந்த செல்லம்மா மேலேயும் அம்மானு பாசத்தை காட்டுனது இல்லை எப்பவுமே நான் அவளை ஏமாத்திட்டேன்னு சொல்லிட்டே இருப்பா இதோ செல்லமாக்கு நாலு வயசு மூணு வருஷமா எங்களுக்குள்ள எதுவும் இல்ல ஆனா அவ எப்பவுமே இத பத்தி சண்டை போடுவா இன்னைக்கு கொஞ்சம் அதிகமா போச்சு எப்பவுமே கோவிச்சுட்டு போற மாதிரி வீட்டை விட்டு போனா சரி ரெண்டு நாள்ல போய் சமாதானப்படுத்தலாம் என்று நானும் விட்டுவிட்டேன் ஆனால் இப்போ ஒரு வேளை அவளுக்கு ஏதாவது ஆனா நான் கொஞ்சம் தணிஞ்சு போயிருந்தா ஒரு உயிர் போயிருக்காதுலனு காலத்துக்கும் வருந்த வச்சிடுவா அப்படி எதுவும் நடக்காது தானே செல்லம்மா என்னால முடியும்னா கண்டிப்பா அவ கேட்டத குடுத்திருப்பேன் தாம்பத்யம்னாலே கசந்து போயிட்டு சத்தியமா இப்போ எந்ந உணர்வுகளும் எனக்கு வாரதில்ல பூர்ணா என்ன ஆம்பள இல்லன்னு சொல்லி சொல்லியே அப்படி மாறிட்டேன் போல நானா இப்படின்னு எனக்கே என்ன புடிக்கல இப்போ நான் உன் மாமா பிரபா இல்ல செல்லம்மா மொத்தமா குரூப்ல இருந்து போய் நிக்கிற பிரபாகரன் பூர்ணாவோட பிரபாகரன் என்று முடிந்து இருந்தது அந்த டைரி அதைப் படிக்கும்போது கோடாக கன்னத்தில் வழிந்து அவள் கண்ணீர் இப்போது தாரைதாரையாக வலிந்து அவள் மார்பை நனைத்தது பூர்ணா விபத்தில் சிக்கி ஓர் இரவு மருத்துவமனையில் இருந்து அடுத்த நாள் தான் உயிர் பிரிந்தது ஆக அன்று இரவு தான் இதை எழுதி இருக்க வேண்டும் என்பது புரிந்தது டைரியை மூடி பட்டியலுக்கு அடியில் வைத்தவர் வேகமாக எழுந்து சென்று குளியல் அறையில் அடைந்து கொண்டார் கதறி அழுதால் வேதனை நெஞ்சை அடைத்து வெடித்து விடும் போல் இருந்தது.
பிரபாகரன் என்று ஆற்றுவார் தியேற்றுவார் இன்றி தன் மனதுக்குள் அழுத அழுகைகள் முத்தமும் இன்று இவள் விழிவழி வெளிவந்தது போல் அழுது தீர்த்தாள்.
அதன் பின் ஒரு முடிவு எடுத்தவளாக அழுத சுவடே தெரியாமல் குளித்து முடித்து வெளியே வந்தாள் எப்பவும் போல் அவளவனுக்கு பிடித்த ஆலிவ் பச்சை நிறத்தில் ஒரு புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள்.
பிரபாகரனும் இன்று அஞ்சனாவிடம் மனம் விட்டு பேச வேண்டும் அவள் தயக்கம் என்னவென்று கேட்டு போக்க வேண்டும் என்ற முடிவில் தான் வீட்டிற்கு வந்திருந்தான்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்த பின்னர் கிருபாகரனும் நித்தியாவும் தங்கள் அறைக்கு சென்று விட அஞ்சனாவும் அறைக்கு வந்து விட்டாள் ஆதூரியை தூங்க வைக்க பிரபாகரன் சற்று நேரம் சென்று அறைக்குள் வர ஆதூரி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அஞ்சனா கட்டிலில் அமர்ந்து இருந்து யோசனையாக இருக்க முதல் முறை கட்டிலில் அவள் அருகே அமர்ந்தான் பிரபாகரன்.
செல்லம்மா என்ன யோசனை என்று கேட்க
ஒன்னும் இல்ல மாமா என்றவளால் அவன் முகம் பார்க்க முடியவில்லை பார்த்தால் எங்கே அழுது விடுவோமோ என்று பயந்தாள்.
ஆனால் பிரபாகரன் விடவில்லை அவள் இரு கன்னங்களையும் தன் இரு கைகளையும் வைத்து அவள் முகம் தாங்கியவன் என்ன பாரு செல்லம்மா என்ன நெருங்க உன்ன எது தடுக்குது நமக்கு கல்யாணமாகி ரொம்ப நாளாச்சு இன்னும் நாம வாழ ஆரம்பிக்கல ப்ளீஸ் செல்லம்மா எனக்கு காரணம் வேணும் எதுக்கு என் கிட்ட இருந்து விலகி இருக்க என்று கேட்க
அவளுக்கு மறைக்க தோன்றவில்லை எனவே அது குழந்த என்று முழுதாக சொல்லாமல் நிறுத்த இது அவன் யூகித்த காரணம் தான்.
தாம்பத்யம் என்றது குழந்தைக்காக மட்டுமா என்று அவள் கன்னங்களை இரு கைகளாலும் அழுத்தி பிடிக்க அவள் உடல் சிலிர்த்து அடங்கியது இதோ நான் தொட்டதும் உன் உடம்பு சிலிர்த்து அடங்குதுல இது மாதிரி நீ தொட ஏன் உடம்பு சிலிர்க்கானும் உன் மூச்சு காத்து என் நாசியில ஏறி என் சுவாசத்துல கலக்கணும் உன் வாசனை என் உடம்பு முழுவதும் வீசணும் உன்ன எனக்குள்ள உணர வேண்டும் அதுக்காக தாம்பத்தியம் நமக்குள்ள நடக்கணும் என்று பிரபாகரன் ஆசையாக சொல்ல
அஞ்சனா முகத்தை மூடி அழ அவனுக்கு திகைப்பு தான் இப்போது எதற்கு அழுகின்றாள் என்று புரியவில்லை
செல்லம்மா என்ன ஆச்சு உனக்கு டைம் வேணும்னா எடுத்துக்க இப்பவே எல்லாம் நடக்கணும்னு இல்ல ஆனா தாம்பத்தியம் பண்றது உன்ன நான் உன்ன நான் என்ன நீ உணரக்கூடிய ஒரு அழகான சங்கம் அதை மட்டும் மனசுல பதிய வச்சுக்க அழாத எதுக்கு அழுற எனக்கு புரியல என்று அவன் பரிதவித்து கூற அழுகையினூடே கட்டிலுக்கு அடியில் இருந்த டயர் எடுத்து அவன் கையில் கொடுக்க அதை பார்த்தவனுக்கு புரிந்து விட்டது எந்த விடயம் அவளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்திருந்தானோ அது அவளை சென்று அடைந்து இதயத்தை பலமாக தாக்கி விட்டது என்று .
error: Content is protected !!