Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 20

அத்தியாயம் 20

“ஓகேவா அனு நீ?” நீண்ட நேரமாய் வயிற்றை வருடியபடி இருந்த மனைவியிடம் விவேக் கேட்க,



Advertisement

“இல்ல விவேக்! என்னவோ பண்ணுது! சொல்ல தெரியல!” எனஅனன்யா தண்ணீரை குடித்தாள்.

“உங்க உடம்புக்கு நிறையவே ரெஸ்ட் வேணும்! பீபி ஷூட்டப் ஆகி இருக்கு! ரொம்ப கேர்லெஸ் அண்ணி நீங்க!” என அவளை பரிசோதித்து விஜயலக்ஷ்மி முறைக்க,

Advertisement

Advertisement

“ஒண்ணுக்கு ரெண்டு முட்டாளுங்க வீட்டுல இருந்தா பீபி மட்டுமா எகிறும்!” என அனன்யாவும் முறைத்தாள் பதிலுக்கு.

“ஹாஸ்பிடல் போய்டலாம் மாமா!” என்றான் அர்ஜுன்.

Advertisement

மணி எட்டை கடந்து கொண்டிருந்தது. அலை அடித்து ஓய்ந்தது போல வீடு ப்ரணித்தா சென்றபின் அமைதியாய் இருக்க, மீண்டும் லேசான வலி சுருக்கென அனன்யாவிற்கு.

மறைக்காமல் விவேக்கிடம் சொல்லிவிட்டாள். அப்பொழுதே மருத்துவமனை அழைத்தும் அனன்யா தான் மறுத்தது.

“இல்ல அண்ணி! டாக்டர் கன்சல்ட் பண்ணியே ஆகணும்!” என விஜயலக்ஷ்மியும் கூறினாள்.

கலையரசி சந்தானத்திற்கு ஆட்டோ புக் செய்திருந்தான் விவேக் கோவிலில் இருந்து திரும்புவதற்கு. அவர்கள் உள்ளே வரும் பொழுது அனன்யாவை சுற்றி மூவரும் நிற்க கண்டவர்கள்,

“என்னாச்சு அனு?” என பதறி அருகே வந்தவரிடம் அனன்யாவிற்கு வலி என்று மட்டும் கூற,

“வலிக்குதுன்னா பார்த்துட்டா இருப்பிங்க? செக் பண்ணியா இல்லையா டி?” என விஜயலக்ஷ்மியை கேட்ட அன்னை,

“நீ போய் காரை எடு!” என விவேக்கிடம் சொல்ல,

“நான் எடுக்குறேன்! நீங்க அனுவை கூட்டிட்டு வாங்க மாமா!” என்று அர்ஜுன் வெளியே சொல்ல, விஜயலக்ஷ்மி அன்னையிடம் அனன்யாவிற்கு பிரஷர் அதிகம் கூடவே ஸ்ட்ரெஸ்ஸும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

“சொன்னா கேட்கணுமே! எல்லாப் பிரச்சனையையும் மண்டைக்குள்ள தினமும் ஓட்டி ஓட்டி நியாபகப்படுத்தி பார்த்துட்டு இருந்தா…!” என பேசியவர்,

“இன்னைக்கெல்லாம் நீ சொல்லாம வெளில போன கவலையா தான் இருக்கும் அனுவுக்கு! அவளுக்கு இம்சையை கூட்டுறதே நீ தான் டி!” என காரிலும் விஜயலக்ஷ்மியை தான் வசைபாடி வந்தார் கலையரசி.

கண்ணாடி வழி விஜயலக்ஷ்மியை அவ்வபோது கவனித்துக் கொண்டான் அர்ஜுன். 

அவளின் இந்த அமைதி இப்பொழுது தான் வலியை கூட்டியது அர்ஜுனிற்கு. பேசவும் முடியாமல் பார்க்கவும் முடியாமல் என தன் நிலை என்னவோ முன்பை விட மிக மோசமானதாய் தெரிந்தது இப்பொழுது தான்.

அனன்யாவும் வலி என்றுவிட மற்ற பேச்சுக்கள் எல்லாம் அங்கேயே நின்றுவிட்டது விவேக், அனன்யாவோடும்.

தன்னால் எத்தனை கடினமாய் கூற முடியுமோ அவ்வளவுக்கு கூறிவிட்டார் மருத்துவரும்.

“அஞ்சு வருஷமா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பிங்க? உங்களுக்கு தெரியலையா இதோட சீரியஸ்னஸ்? ஹெல்தியா தான் சாப்பிடுறேன் சொல்றிங்க! அது மட்டும் போதுமா? மனசையும் ரிலாக்ஸா வச்சுக்கணும்! பொதுவா இல்ல சைன்ஸ் ரீதியாவும் சொல்றோம்! உங்க மெண்டல் ஹெல்த் கண்டிஷன் தான் உங்க வயித்துல இருக்க பிள்ளைக்கு எல்லாம் தீர்மானிக்கும்! இனி கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் உங்க உடம்புக்கு!” பரிசோதித்து தேவையான சிகிச்சை அளித்து என முடிந்த மட்டும் கோபமாய் சொல்லி இருந்தார் மருத்துவர்.

மீண்டும் திரும்பி வரும் போது வாயை திறக்கவே பயம் அனன்யாவிற்கு. விவேக் அவள்மீது கோபமாய் இருக்கிறான் என பார்வையிலேயே புரிந்த போதும் அமைதியாய் இருக்க முடியாமல் “மாமா!” என்று காரில் வைத்து அழைக்க,

“பேசாத அனு! செம்ம கோவத்துல இருக்கேன். ஏதாவது சொல்லிட போறேன்!” என விவேக் சொல்ல, அதற்கு காரணமானவர்களாய் தங்களை தாங்களே எண்ணிக் கொண்டது விஜயலக்ஷ்மி அர்ஜுனின் மனங்கள்.

“விவேக்! கீழ ஒரு கெஸ்ட் ரூம் இருக்குல்ல! அங்க இனி விஜி தங்கிக்கட்டும். இனி குழந்தை பிறக்குற வரை விஜி ரூம் தான் அனு உனக்கு!” என கலையரசியும் சொல்ல மௌனமாய் கேட்டுக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

பத்து மணிக்கு வீடு வந்து சேரவும் அர்ஜுன் அலைபேசி இசைக்க, தீபக் தான் அழைத்திருந்தான்.

“சொல்லு டா!” அர்ஜுன் கேட்க,

“என்ன சொல்லு டா! எங்க இருக்க நீ? மதியம் நான் ஆர்டர் பண்ணின சாப்பாடு அப்படியே இருக்கு பிரிக்காம! சாப்பிட்டியா இல்லையா? இப்ப எங்க இருக்க?” என தீபக் கேட்க, அப்போது தான் சாப்பிடவே இல்லை என்ற நியாபகமும் வந்தது அர்ஜுனிற்கு.

“எப்ப இருந்து கால் பண்றேன்? கால் போகவே இல்ல! எங்க இருக்க நீ?” என்ற தீபக்கிற்கு மதியமாய் விஜி வந்தபின் நடந்ததை கேட்கும் ஆவல் இருந்தாலும் முதலில் அவன் வீட்டுக்கு வரட்டுமே என்று தான் நினைத்தான்.

“அனு அக்காக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸு டா! இப்ப ஓகே தான். ஹாஸ்பிடல் போய்ட்டு வர இவ்வளவு நேரம்! நான் வந்திடறேன்! நீ தூங்கு!” என்றான் சுருக்கமாய் அர்ஜுன்.

“சாப்பிட்டு வந்துடு டா. இல்ல எதாவது செஞ்சு வைக்கவா?” தீபக் கேட்க,

“ப்ச்! ட்ராவெல் பண்ணி வந்த டயர்ட் இருக்கும்ல? பேசாம தூங்கு டா! நான் பார்த்துக்குறேன்!” என்ற அர்ஜுன் தீபக் பேசும் முன் கட் செய்துவிட்டான்.

“சரி நான் கிளம்புறேன் மாமா! பார்த்துக்கோங்க!” அர்ஜுன் சொல்ல, விவேக் மனைவியின் உடல்நலம் பற்றிய எண்ணத்தில்,

“ம்ம் ஓகே டா!” என்று சொல்ல,

“பார்த்து போ அர்ஜுன்!” என்றாள் அனன்யாவும்.

“ஹ்ம்! நீ பார்த்துக்கோ!” என்றான் அர்ஜுனும்.

“அண்ணி! மதியமே அவங்க சாப்பிடல!” என்ற விஜயலக்ஷ்மியின் குரல் அத்தனை மெல்லியதாய் என்றாலும் அனைவரின் காதிலும் நிறைந்தது அந்த வார்த்தைகள்.

கலையரசி புரியாமல் விழித்தார் மகளுக்கு எப்படி தெரியும் என்பதை போல. 

“கலை! என்ன நின்னுட்டு இருக்க? போய் சாப்பிட எதாவது ரெடி பண்ணு!” சந்தானம் கூற,

“ப்ச்! அர்ஜுன்!” என அவன் அருகே வந்தான் விவேக்.

“சாரி டா! ஏதோ நியாபகத்துல இருந்துட்டேன்! உக்காரு சாப்பிட்டு போகலாம்!” என விவேக்கும் சொல்ல, இப்போதும் கூட கவலையில் கண்கள் கலங்கப் பார்த்தது அனன்யாவிற்கு தம்பியை நினைத்து.

“சாப்பிடலனா சொல்ல மாட்டியா டா?” என முறைத்த போதும் அர்ஜுன் புன்னகைக்க,

“நீங்களே பாருங்க! நான் என்ன பண்ணுவேன்? பசிக்குதுன்னு கேட்கும் முன்ன அம்மா எல்லாம் தயாரா வச்சிடுவாங்க! இப்ப சாப்பிட்டியான்னு அவனை கேட்க கூட….” என்ற அனன்யா அழுதுவிட, விவேக் கோபமெல்லாம் காணாமல் போய்விட்டது அந்த நொடி.

“என்ன அனு! டாக்டர் சொன்னதை கேட்டதுல இருந்து ஒரு டென்ஷன்! அதுல தான் நான் அர்ஜுனை கவனிக்க விட்டுட்டேன்! இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்குற?” என்று சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட்டான் விவேக் மனைவியை.

“ஹே பைத்தியம்! தீபக் தான் கால் பண்ணினான். செஞ்சு வச்சது வீணா போய்டும் வந்து சாப்பிடுன்னு சொன்னான். என்ன நீ இவ்வளவு யோசிக்குற இதுக்கெல்லாம்!” என்ற அர்ஜுனுக்கும் அனன்யா கூறியதும் அன்னை நினைவு எழாமல் இல்லை.

விஜயலக்ஷ்மி பார்த்தபடி நின்றாளே தவிர்த்து அவர்கள் அருகில் செல்ல முயலவில்லை. மனம் முழுதும் அத்தனை பாரமாய் இருந்தது.

அடுத்த பத்து நிமிடங்களில் ஏற்கனவே அனன்யா பாதி முடித்திருந்த சமையல் வேலைகளை முடித்து எடுத்து வந்து அனைவரையுமாய் சாப்பிட அழைத்தார் கலையரசி.

அதற்குமேலும் மறுக்க முடியுமா என்ன? அர்ஜுனும் அவர்களோடு சாப்பிட அமர, கலையரசி பேசியபடி அனைவரின் தேவையையும் கவனித்து சாப்பிட வைத்தார்.

இத்தனை வருடங்கள் கழித்து இன்று மட்டும் அதுவும் அத்தனை பெரிய பிரச்சனை நடந்து முடிந்ததில் இருந்து தன்னைக் கேளாமலே அர்ஜுனின் கண்கள் அடிக்கடி விஜயலக்ஷ்மியிடம் செல்வதை தடுக்க முடியவில்லை அவனுக்கு.

“இதென்ன?” என அவனே நினைத்தாலும் என்னவோ அவளை கவனிப்பதை மட்டும் நிறுத்தவில்லை அவன்.

சாப்பிட்டு முடித்ததும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் அர்ஜுன்! வந்து படுக்கையில் விழுந்த பின்பும் சுத்தமாய் உறக்கம் இல்லாமல் விஜயலக்ஷ்மியின் நினைவுகள் மட்டும் மனதை ஆக்கிரமிக்க, ப்ரணித்தா செயலை அறிந்தது முதல் இவள் மனம் எவ்வளவு வருந்தும்? என்ன செய்வாள்? எப்படி தாங்குவாள்? என நினைவுகள் முழுதும் அங்கே தான் இருந்தது.

கூடவே அந்த வார்த்தைகள்! ‘மதியமே அவங்க சாப்பிடல!’ மனம் நிறைந்தது என்னவோ நிஜம் அந்த வார்த்தைகளில் அர்ஜுனுக்கு.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொள்ள தான் நினைத்தான் அர்ஜுன். அங்கிருக்கும் நிலைமைக்கும் அத்தனை அலைச்சலிற்கும் என அவர்களை அர்ஜுன் வேறேதும் நினைக்கவே இல்லையே! 

அந்த நேரத்தில் அவள் குரல் தனக்காக என இவன் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. சிறு மென்னகை முகத்தையும் அகத்தையும் என அழகாக்கியது.

காலையில் சோம்பலாய் கண் விழித்த அர்ஜுன் மணியைப் பார்க்க எட்டைக் கடந்திருந்தது. இவ்வளவு நேரமா? என வேகமாய் எழுந்து குளித்து முடித்து கீழே வர, தீபக் சமையலை முடித்து அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“என்ன டா நல்ல தூக்கமா? அக்கா எப்படி இருக்காங்க? என்னாச்சு அக்காக்கு?” தீபக் கேட்க,

“ஸ்ட்ரெஸ் ஆக கூடாதாம் டா. ஃபுல் ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க!” என்றான் அர்ஜுன்.

“ஹ்ம்! அக்கா ஸ்ட்ரெஸ் ஆகுற அளவுக்கு என்ன நடந்துச்சு?” தீபக் கேட்டவன்,

“வேறெதுவும் பிரச்சனையா? விஜி கூட நேத்து வந்துச்சே?” என்றும் கேட்க,

“ஹ்ம்ம்!” என்றவன் நடந்ததைக் கூறினான்.

“ப்ரணித்தாவா?” பெரிய அதிர்ச்சி தான் தீபக்கிற்கும்.

“ஹ்ம்ம்! பாவம் டா விஜி! மொத்தமா எல்லாம் ஒரே நாள்ல… அவளுக்கு எவ்வளவு ஷாக்கா இருக்கும்? என்ன பன்றாளோ!” அர்ஜுன் சொல்ல,

“டேய் லூஸு! முதல்ல உன்னை பத்தி நீ நினை டா. நீ என்னனு டா தாங்கின?” என்றவனுக்கு தெரியுமே பிரணித்தாவை அவன் எப்படி நினைத்திருந்தான் என்று.

“கடந்து போக வேண்டியது தான். வாழ்க்கைல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு லெஸன் சொல்லி தர்றாங்க!” என்றான் அர்ஜுன்.

“என்னோடவே போகட்டும்னு நான் நினைச்சதெல்லாம் நேத்து அவ சொன்னப்போ… ப்ச்! இப்ப நினைச்சாலும் ஒரு மாதிரி இருக்கு. ஒரு பொண்ணு என்ன எண்ணத்தோட என்கிட்ட பேசுறானு கூட தெரியாம இருந்திருக்கேன் பாரேன்!” என்றவன் தன் காதலை ப்ரணித்தா ஒப்பிட்ட விதத்தோடு கூற, கேட்ட தீபக்கும் வியந்தான் இவன் காதலை எண்ணி!

“அந்த பொண்ணு அவ்வளவு தெளிவா உன்னை ஏமாத்தி இருக்கா டா! ஆனாலும் நீ என்கிட்ட கூட மறைச்சுட்ட இல்ல உன் விருப்பத்தை?” தீபக் சொல்ல,

“சொல்லிருந்தா மட்டும் என்ன ஆகி இருக்கும்? நடக்கும்னு சின்னதா ஒரு வெளிச்சம் இருந்தா கூட அதை பேசி இருக்கலாம். ஆனா அப்ப தோணல!” என்றான் அர்ஜுன்.

“அப்போ இப்போ?” தீபக் கேட்க, ஒரு தோள் குலுக்கள் மட்டும் அர்ஜுனிடம்.

“சரி விடு! ஆமா பொண்ணு பார்க்க போனியே என்னாச்சு?” என்று அர்ஜுன் கேட்க,

“நேத்து வந்ததுல இருந்து அதை சொல்ல தான் பார்த்தேன். எங்க! அதுக்குள்ள தான் நீ ஆயிரத்தெட்டு பிரச்சனைல இருந்தியே! பார்த்துட்டு வந்தாச்சு டா. எல்லாம் ஓகே தான். நெக்ஸ்ட் மன்ந்த் மேரேஜ்!” என்று சொல்ல,

“டேய்!” என்று மகிழ்ந்தவன்,

“இவ்வளவு லேட்டாவா சொல்லுவ?” என அவன் தோளில் ஒரு அடி வைக்க,

“அதான் சொல்லிட்டேன்ல! அனு அக்கா தான் வர முடியாது இல்ல டா?” என்றான்.

“மாமா வருவாங்க டா. மேரேஜ் முடிஞ்சதும் இங்க தானே வர போற! விடு பார்த்துக்கலாம்!” என்று அர்ஜுன் சொல்லவும் காலிங் பெல் சத்தம் கேட்க,

“இன்னைக்கும் சொல்லாம வந்துட்டியா என்ன?” என்ற தீபக்கை முறைத்துவிட்டு அர்ஜுன் கதவை திறக்க, நின்றது விஜயலக்ஷ்மியே தான்!

“இன்னைக்குமா?” தீபக் அர்ஜுனின் பின் நின்று பார்த்தவன் சத்தமாய் அதிர்ச்சியோடு சொல்ல, ஒற்றைப் புருவம் உயர்த்தி அதிர்ச்சியும் ஆச்சர்யமாகவும் பார்த்த அர்ஜுனும் அவன் சொல்லில் முறைத்தபடி அவன்புறம் திரும்பியவன்,

“வா!” என்று சொல்லி அவளுக்கு வழி விட,

“என்ன டா தினம் ஒரு பஞ்சாயத்து கொண்டு வர்ற?” என்றவன் புஜத்தில் ஒரு குத்து வைத்தான் அர்ஜுன்.

உள்ளே வந்தவள் நேற்றை போலவே அத்தனை தயக்கத்தோடு தான் வந்திருந்தாள். 

நேற்று நடந்த நிகழ்வுகளை அர்ஜுன் சொல்லின்படி கவனித்த தீபக்,

“ஹப்பாடா! இன்னைக்கு லீவ் தான்! நிம்மதியா டிவியை போட்டு உக்கார வேண்டியது தான்!” அர்ஜுனை ஆராயும் பார்வை பார்த்து சொல்ல,

“விவேக் மாமா உன்னை ஆபீஸ் வர சொன்னார்!” என்ற அர்ஜுனின் ஒற்றை சொல்லும் அவன் முகத்தில் சற்று முன் கூறியதற்கு மாறாய் ஒரு வெளிச்சமும் தெரியவும்,

“நீயாடா என்னை கொலை பண்ண பார்த்த?” என்ற தீபக்,

“ஆபீஸ்க்கு இன்னைக்கு சீக்கிரமே வர சொல்லிருக்காங்க! நான் கிளம்புறேன்!” என்று சொல்ல, என்னவோ அத்தனை புன்னகை வந்தது அர்ஜுனுக்கு.

அமர சொல்லி விஜயலக்ஷ்மிக்கு சைகை செய்தவன், தீபக் சொல்லில் புன்னகையை வாய்க்குள் அடக்கவும் புரியாமல் விழித்தபடி அமர்ந்தாள் விஜயலக்ஷ்மி.

“தீபக்!” அர்ஜுன் அழைக்க,

“சொல்லு டா! உங்க டிஸ்கசன்ல இந்த நண்பனும் இருக்கனும்னு ஆசைப்படுற தானே?” தீபக் அர்ஜுனின் அருகில் வந்து கேட்க,

“ம்ம்ஹும்ம்! பால் காய்ச்சுட்ட தானே? ரெண்டு காபி மட்டும் கலந்து தந்துட்டு போ!” என்று சொல்ல, 

“நான்?.. என்னை போய்?…” என அதிர்ச்சி காட்டினாலும் அர்ஜுனின் இந்தப் பேச்சு அத்தனை பிடித்தது தீபக்கிற்கு.

எத்தனை வருடங்கள் ஆகிறது அவனை இப்படி பார்த்து என நினைக்காமல் இல்லை.

என்னவோ பேச வந்திருக்கிறாள் என்று அர்ஜுன் புரிந்து கொண்டாலும் அது எந்த விதமாகவும் இருக்கலாம் என்றும் புரியாமல் இல்லை.

மனதின் கிலேசங்கள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாய் மாயையாகிக் கொண்டிருக்க, இந்த ஒரு வாய்ப்பை தானுமே பயன்படுத்திக் கொள்ள தான் இப்போது தோன்றியது அர்ஜுனிற்கு.

சட்டென முடிவு செய்தவனை தீபக் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்க, அர்ஜுனுமே அவனுக்கு ஈடு கொடுத்ததை தான் தீபக்கால் நம்ப முடியவில்லை.

“அனுகிட்ட சொல்லிடுறேன்! நேத்து மாதிரி தேட போறாங்க!” அர்ஜுன் சொல்லிவிட்டு மொபைலை கையில் எடுக்க,

“சொல்லிட்டு தான் வந்தேன்!” என்ற பதிலில் கண்களை மட்டும் உயர்த்தி அவளைப் பார்க்க அவள் திரும்பிக் கொண்டாள்.

“ம்மா! நான் அர்ஜுனை பார்க்க போறேன்!” காலையில் கிளம்பி வெளியே வந்து விஜயலக்ஷ்மி கலையரசியிடம் சொல்ல ஒன்றும் புரியவில்லை அவருக்கு. இன்னமும் விஷயத்தை யாரும் கூறி இருக்கவும் இல்லை.

அனன்யா விவேக் சந்தானம் என அனைவரும் அங்கே இருக்க,

“ஏன்?” என்ற கலையரசி மகனைப் பார்க்க, அவனுக்கு மட்டும் தெரியுமா என்ன?.

“போய்ட்டு வரட்டுமே த்தை?” என்று கெஞ்சலாய் கேட்டு வைத்த அனன்யாவை கலையரசியோடு விஜயலக்ஷ்மியும் திரும்பிப் பார்த்தாள்.

“ஏன் எதுக்குன்னு எனக்கும் தெரியாது! ஆனா போகட்டும்னு தோணுது! உங்க விருப்பம்!” அனன்யா சொல்ல கலையரசி கணவனைப் பார்த்தார். சந்தானமும் தலையசைக்க,

“வந்து சாப்பிடுறேன்!” என்று சொல்லி கிளம்பிவிட்டாள் ஒன்பது மணிக்கெல்லாம்.

அதன்பின் தான் விவேக் நேற்றைய தினம் நடந்ததை அன்னை தந்தையிடம் கூற,

“இப்படியும் ஒரு பொண்ணா?” என ப்ரணித்தாவை சந்தானம் கேட்க,

“மண்ணாந்தை மாதிரி எவளோ சொன்னதை கேட்டு இருந்திருக்கா உங்க பொண்ணு! இவளை எதுவும் சொல்லிடாதீங்க!” என அப்பொழுதுமே கலையரசி மகளை தான் திட்டி வைத்தார்.

இரண்டு காபி கப்பை பிளேட்டில் வைத்து அத்தோடு அன்னை நேற்று கொடுத்துவிட்ட பாதுஷாவையும் வைத்துக் கொண்டு வந்து கண்ணாடி மேஜையில் வைத்த தீபக் அர்ஜுனைக் காண, என்ன என சாதாரணமாய் புருவம் உயர்தினான் அவனிடம் அர்ஜுன்.

“கல்யாணமாக போகுது சீக்கிரமா வீடு பாருன்னு அம்மா சொல்லி தான் அனுப்பிச்சாங்க! இல்லைனாலும் பார்க்க வேண்டியது தான் போல!” என்று தீபக் சொல்லிவிட்டு அர்ஜுனைப் பார்க்க, அதற்கு மறுப்பேதும் இல்லாமல் தோள்களைக் குலுக்கினான் அர்ஜுன்.

“ஓவரா தான் டா போற! உன்னை அப்புறம் பார்த்துக்குறேன்!” என்ற தீபக் தனது அலுவலக பேகை எடுத்து மாட்டிக் கொள்ள,

“கிளம்பு டா!” என்று சொல்லி மேலே தன் அறைக்கு சென்றான் அர்ஜுன்.

தோன்றிய வேகத்தில் கிளம்பி வந்துவிட்டாலும் எப்படி பேச? எங்கு ஆரம்பிக்க என தெரியாமல் கைகள் நடுங்க, மனது படபடக்க அமர்ந்திருந்த விஜயலக்ஷ்மியிடம் திரும்பினான் தீபக்.

“ண்ணா!” என அவள் எழுந்து கொள்ள,

“உக்காரு டா!” என்றவன்,

“எல்லாத்தையும் இழந்த ஒருத்தனுக்கு எது மேலயும் அவ்வளவு சீக்கிரம் பிடிப்பு வந்துடாது விஜி!” என்று சொல்லவும் விஜயலக்ஷ்மி உதடு மடித்து தலை குனிய,

“இன்னைக்கு நான் பாக்குற அர்ஜுனை முன்னாடி நான் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு! யாரோ பண்ணின தப்புக்கு நீங்க தண்டனை எடுத்துக்காதீங்க! வரேன்!” என்று சொல்லி நகர, தலையசைத்து அமர்ந்தாள் அர்ஜுன் வருகைக்காக.

“ஹாஸ்பிடல் போகல?” என்றபடி மொபைலை தன் அறையில் சார்ஜரில் போட்டுவிட்டு வந்தான் அர்ஜுன்.

“போகணும்! மதியம்!” என்றவள் கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.

சுவற்றில் சாய்ந்து ஒற்றைக் காலை மடித்து நின்றவன் அவளை கவனிக்க, அதை கவனிக்கவில்லை அவள்.

“சொல்லு!” என்றான் அவனே!

“ஹ்ம்!” என்று அவனைப் பார்த்தவள்,

“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று கேட்க, எந்தப் பக்கமும் தலை ஆடவில்லை அவனுக்கு. பார்வையும் அவளிடம் மட்டும்.

சில நிமிடங்களுக்கு பின் ஒரு பெருமூச்சைக் கொடுத்தவன் நகர்ந்து வந்து காபியை தட்டோடு எடுத்து அவளிடம் கொடுக்க, அதிலிருந்த பாதுஷாவைப் பார்த்துக் கொண்டே காபியை எடுத்துக் கொண்டாள்.

தானும் மற்றொன்றை எடுத்துக் கொண்டு அவள் இருக்கைக்கு அருகில் மற்றொரு சோஃபாவில் அமர்ந்தான்.

காபியைக் குடிக்கும் வரை இருவருக்குமே அமைதி. விஜயலக்ஷ்மி முகத்தில் இருந்து எதையும் கணிக்க முடியவில்லை அர்ஜுனுக்கு.

திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாகட்டும், வேண்டாம் என்று மறுத்ததாகட்டும், உடனே நாட்டை விட்டு சென்றதாகட்டும், இதோ நேற்று ஒரு பெண்ணுக்காக தன்னிடம் வந்து நின்றதாகட்டும் என எதையும் சட்டென்று முடிவெடுத்து விடுகிறாள் இவள் என தோன்றிய நொடி சிறு இதழ் பிரியா புன்னகை ஒன்று அவனிடம் வெளிப்பட, அந்த சிறு சத்தத்தில் அவன் பக்கம் திரும்பி அவன் புன்னகையை கேள்வியாய் பார்த்தாள் விஜயலக்ஷ்மி.

“நேத்து ஒருத்தருக்காக நியாயம் கேட்டு வந்த மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு?” என்றவன் கேள்விக்கு பதிலை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாதே!

“என்னால நார்மலாக முடியல! இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு!” விஜயலக்ஷ்மி கூற, அவளை மட்டுமே கவனித்து அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

“நானெல்லாம் என்ன பொண்ணுன்னு என் மேலயே கோவமா வருது! உங்களோட இந்த நிலைமைக்கு நான் மட்டும் தான் காரணம் இல்ல?” என்று கேட்க, அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

“என் பக்க நியாயம்னு நான் எவ்வளவு சொன்னாலும் அது என்னோட முட்டாள்தனமா தான் தெரியும் பாக்குறவங்களுக்கு!” என்று சொல்ல, அதை புரிந்து கொள்ள முடிந்தது அர்ஜுனிற்கு.

“தனக்குன்னு யாரும் இல்லாத ஒரு பொண்ணுக்கு எல்லா சொந்தமும் கிடைச்சு அவ சந்தோசமா வாழுறதை பார்க்கணும்னு நினச்சு நான் செஞ்ச காரியத்துனால இப்படி நீங்க யாரும் இல்லாம தனியா இருப்பிங்கன்னு நினைக்கவே இல்ல!” என்ற பொழுது கண்கள் கலங்கி குரல் கமற, அப்போதும் அர்ஜுன் அசையவில்லை.

“நான் என்ன பண்ணட்டும் அர்ஜுன்?” என்று அவனிடமே கேட்க, 

“இதுல நீ பண்ண என்ன இருக்கு?” என்றான். தானாய் பேச விரும்பவில்லை. அவள் விருப்பம் அவள் முடிவு என முதலில் தெரிந்து கொள்ளவே காத்திருந்தான்.

“நேத்து அந்த ப்ரணித்தா சொன்னது… என்னால இன்னும் நம்ப முடியல! நீங்க என்னை…” என்றவள்,

“நான் அதுக்கெல்லாம் தகுதியே இல்லாதவ!” என்று மறுப்பாய் தலையசைத்து சொல்ல, அப்போதும் கைகட்டி அமர்ந்திருந்தான்.

“அவ சொன்ன மாதிரி நான் என்ன பண்ணிட்டேன் உங்களுக்கு? கடந்து போன இத்தனை காலமும் உங்களோட முழு வலிக்கும் பொறுப்பு நான் மட்டும் தான். என்னால அதை ஜீரணிக்கவே முடியல. அதுவும் உங்க மனசுல நான் இருந்தது தெரியாம… எவ்வளவு கஷ்டத்தை குடுத்துட்டேன்? என்னை பார்த்தா கோவம் வரலையா உங்களுக்கு?” விஜயலக்ஷ்மி கேட்க,

“முடிஞ்சதையே பேசிட்டு இருக்க நீ! இன்னும் வந்த காரணத்தை சொல்லல!” அர்ஜுன் சொல்ல, தலையசைத்தாள் ஆமாம் எனும் விதமாய்.

“நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” நேராய் விஜயலக்ஷ்மி கேட்க,

“புரில!” என்றான் உடனேயே!

“உங்க கல்யாணம்… பொண்ணு பார்க்க மாமா..” என தயங்கியவள் பின் தலையை உலுக்கிக் கொண்டாள்.

“நேத்து அந்த ப்ரணித்தா சொன்ன மாதிரி எனக்கு தகுதியே இல்லை உங்களை கல்யாணம் பண்ணிக்க!” விஜயலக்ஷ்மி மீண்டும் கூறவும் அர்ஜுன் எழுந்து கொண்டான்.

சொல்ல வந்ததை சொல்லிவிட முடியாமல் மனதின் எண்ணத்திற்கு வார்த்தை கிடைக்காமல் தடுமாறி நின்றாள் விஜயலக்ஷ்மி.

‘அப்பவும் எப்பவும் என் காதல் அவ மட்டும் தான்னு சொல்லும் போது எனக்கு எப்படி இருக்கும்?’ நேற்று கூறி இருந்தாளே ப்ரணித்தா.

அது இவன் கூறிய வார்த்தைகள் என்றால் இவன் வாழ்க்கை?

‘கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களானு கேட்டதுக்கு ஈஸியா ஆமாம்னு சொல்லிட்டாங்க!’ என்ற ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் ஆடி வருத்தத்தை கூட்டிச் சென்றது விஜயலக்ஷ்மிக்கு.

மொத்தமாய் விஜயலக்ஷ்மி நொறுங்கிய ஒரு இடமும் உண்டு. இப்போது நினைத்தாலும் உயிரை அறுக்கும் அந்த வார்த்தை.

‘எங்கேஜ்மென்ட் நடந்தா தானே உங்க காதலை அவகிட்ட சொல்லனும்னு இருந்திங்க?’ 

ப்ரணித்தாவின் அந்த சொல்லில் அந்த நினைவில் இப்பொழுதும் நெருப்பில் நிற்பதாய் மனம் வதைத்தது இந்த பெண்ணிற்கு. 

தன்னை நிச்சயம் செய்ய ஒருவன் எத்தனை ஆசைகளோடு வந்து சேர்ந்திருக்க, தன் கையில் கிடைக்க இருந்த எத்தகைய வாழ்க்கையை தான் உதைத்து தள்ளி காயப்படுத்தி இருக்கிறோம்! என்ற நினைவில் அதற்கு மேல் அந்த பாரத்தை சுமக்க முடியாமல், முகத்தை மூடி அழ ஆரம்பித்தவளைப் பார்த்து புரியாமல் அதிர்ந்தான் அர்ஜுன்.

“விஜி!” என அருகில் வந்துவிட்டாலும் என்ன செய்வதென தெரியாமல் அவன் தடுமாறி நிற்க,

“ஐம் சாரி அர்ஜுன்!” என அழுகையோடு கூறியவள், தன் நினைவுகளோடு போராடி, அவன் கடந்து வந்த துயரத்தை நினைத்து தவித்து, அவன் எதிர்பாரா நேரமாய் அழுகையோடு எழுந்து அவனை அணைத்துக் கொண்டு அழ, விழிகள் விரிந்து அதிர்ச்சியில் நின்று துடித்தது அர்ஜுனின் இதயம்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!