Skip to content
Post Views: 1,956
அத்தியாயம் 16
கந்தசாமி வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தனர் முத்தாயியும் ஹிருதய்யும்.
Advertisement
இருவரும் மேலே இருந்து கீழே பார்த்தனர். அங்கே ஜே ஜே என்று கல்யாண கூட்டம் போல இருந்தது.
“பொண்ணு பார்க்க தானே வர சொன்னாங்க, அதுக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம்?” என்றான் ஹிருதய் முதல் கேள்வியாக.
Advertisement
Advertisement
“இங்க அப்படித்தான்.. எல்லாம் பாசக்காரங்க.. “ என்றாள் முத்து.
“எனக்கு.. இல்ல எங்களுக்கு.. இது எல்லாமே புதுசு.. பழக்கம் இல்லை..”
Advertisement
“ஆனா உங்க அம்மா இந்த ஊர் தானே, அவங்களுக்கு இது எல்லாம் பழக்கம் இருக்குமே”
“இருக்கலாம், ஆனா நாங்க சின்னதா இருக்கிறப்பல இருந்து சென்னை தான். இங்க இப்பத்தான் ரொம்ப நாள் இருக்கிறோம். உனக்கு எப்படி சென்னை பிடிச்சிருக்கா?”
‘அட லூசே! பொண்ணு பார்க்க வந்த இடத்துல என்ன கேள்வி இது?’ என்று பார்வை ஒன்றை வீசினாள் ஹிருதய்யை பார்த்து.
“அது இல்லைங்க.. நாம ரெண்டு பேரும் வெவ்வேறு சூழல்ல வளர்ந்தவங்க.. நம்ம ரெண்டு பேருக்கும் இந்த சூழல் எல்லாம் ஒத்து போகுமான்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்” என்றான் சின்ன சிரிப்புடன்.
‘பாருடா, நம்ம மனசுல நினைக்கிறத கேட்ச் பிடிச்சிட்டாரு..’ என்று மனதிற்குள்ளே மெச்சிக்கொண்டே,
“நான் எங்கே இருந்தாலும், அந்த இடத்தை எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திப்பேன்” என்றாள்.
“சூப்பருங்க… நீங்க நிஜமாலுமே சூப்பர் தான்”
“நீங்களும் இந்த சூழலை பழக்கமில்லைனு தானே சொல்றீங்க.. பிடித்தம் இல்லைன்னு சொல்லல்ல. நம்ம இந்த விஷயத்துல ஒரு மாதிரி தான் போல”
“நிஜமா இப்ப கல்யாணம் அப்படின்னு எல்லாம் நான் யோசிக்கலை. இன்னும் வேலைக்கே போக ஆரம்பிக்கல.. பிசினெஸ் பண்ணலாம்னு யோசிக்கிறேன்.. அதுக்குள்ள கல்யாணமான்னு தோன்னுச்சு தான்..”
முத்தாயி அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“உங்களை ப்ர்ஸ்ட் ரயில்வே ஸ்டேஷன்ல பார்த்தப்பவே உங்களை பிடிச்சுது”
அவள் அப்படியா என்று புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்க்கவும்,
“பிடிச்சிருக்குன்னா, இப்படி தான் தைரியமா இருக்கணும்னு நினைச்சேன். ஸ்வீட்டிம்மா பேக்கை தூக்கிட்டு வந்த உங்க அக்கறை, தப்புன்னு தெரிஞ்சதும் தட்டி கேட்ட உங்க துணிச்சல், அடி பட்டாலும் அலட்டிக்காத உங்க நிதானம், தாத்தா கூட இருக்க உங்க நெருக்கம், வீட்ல சொல்ல கூடாதுன்னு என்ன மிரட்டலா பார்த்த உங்க திமிரு, உங்க குறும்பு.. இப்படி உங்களை பிடிச்சது..”
“அடப்பாவி! உங்களை அமுல் பேபின்னு நினைச்சா நீங்க சரியான ஆள் மயக்கியா இருப்பீங்க போலயே!”
“லைஃப்ல சாதிச்சதுக்கு அப்புறமா தான் கல்யாணம்ன்னு சொல்லி, உங்களை மிஸ் பண்ண எனக்கு விருப்பமில்லை”
வெளிப்படையான நேரடியான அவனது பேச்சு முத்துவை மிகவும் ஈர்த்தது.
“இனி நீங்க தான் சொல்லணும்.. இப்பொழுதைக்கு வேலை இல்லை, ஆனா சீக்கிரம் பிசினெஸ் ஆரம்பிச்சிடுவேன்.. நல்ல நிலைமைக்கும் வந்துடுவேன்.. ”
“அது எல்லாம் ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா உங்க பிஸ்னஸ்ஸ ஆரம்பிங்க.. எனக்கும் உங்களை பிடிச்சு இருக்குன்னு தான் நினைக்கிறேன்”
“என்னங்க இப்படி இழுக்குறீங்க?” என்றான் பாவமாக.
“நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்ப நல்ல பொண்ணுன்னு எல்லாம் சொல்ல முடியாது.. என்னை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்..”
“ஏங்க, இந்த நாலு மாசமா நான் உங்க தாத்தாக்கூட தான் சுத்திட்டு இருக்கேன். அவர் செல்ல பேத்தி பத்தி தான் அதிகமா பேசுவாரு. அதனால் உங்களை பத்தி எனக்கு நிறைய தெரியும்”
“ஆனா உங்களை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாதே?”
“தெரிஞ்சுக்க ஆசைப்படறீங்களா?”
“நான் இப்ப மனசுல தோன்றதை சொல்றேன். உண்மையை சொல்றேன், வருத்தப்படக்கூடாது”
திக் திக் என்று இருந்தது ஹிருதய்க்கு.
“என் கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாருக்கும் ஆள் இருக்கு. எனக்கு வாய் பேசுறதுக்கு முன்ன கை தான் அதிகம் பேசும். அதனாலேயே எனக்கு யாரும் லவ் லெட்டர் கூட கொடுத்ததே இல்லை. எனக்கும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்கு. அதனால உங்களுக்கு ஓகேன்னா கல்யாணம் பண்ணி, நான் படிச்சு முடிக்கிற வரைக்கும் நீங்க உங்க பிஸ்னஸ் ஆரம்பிச்சு ஸ்டேடியாகற வரைக்கும் நாம லவ் பண்ணுவோமா?”
“கண்டிப்பா… கடைசி மூச்சு இருக்கிற வரை நாம காதலிக்கலாம்…”
“இந்த முத்தாயியை ஒரே வரில இப்படி கவுத்திடீங்களே!”
“சரி வாங்க கீழே போகலாம்.. எல்லாரும் நம்ம சம்மதத்துக்காக காத்துகிட்டு இருப்பாங்க”
———————–
ஹிருதய், சிவங்கரி, ஸ்ரீகாந்த், பூம்பாவை, ஹாசினி, மிருதுளா, தணிகாச்சலம், ப்ரதமேஷ் என்று இவர்கள் இரு கார்களில் வந்து இறங்கினார்கள்.
கந்தசாமியின் வீட்டில் பெரிய கூட்டமே இருந்தது. சிவங்கரிக்கே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இவ்வளவு கும்மலை எப்படி சமாளிக்க என்று.
ப்ரதமேஷ் தான்,”பாட்டி நீ பார்க்காத கூட்டமா? சும்மா கெத்தா இரு” என்று அவர் காதில் கூறினான்.
இவன் வேற, என்று நொடித்து கொண்டான் ஹிருதய்.
அனைவரயும் அறிமுகப்படுத்தினர் நித்யகல்யாணியும் மாலதியும்.
சிரித்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினர் மாப்பிள்ளை வீட்டார்.
“நீங்க ஒன்னும் பயப்டாதீங்க.. அது ரெண்டு பேரும் டீச்சருங்க இல்ல, பழக்க தோஷம்.. அதான் வந்திருக்கவங்களை எல்லாம் அட்டெண்டன்ஸ் எடுக்குறாங்க”
என்றார் கந்தசாமி சிரிக்காமல்.
பின்னே, இவ்வளவு பேர்களை எப்படி நியாபகம் வைத்துக்கொள்ள முடியும்.
மாலதியும் நித்யகல்யாணியும் பாசமாக பார்த்ததை எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை.
“எல்லாருக்கும் பலகாரம் கொண்டு வந்து கொடுங்க” என்றார் மனைவியிடம்.
“இன்னிக்கு என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லுங்க பார்ப்போம்?” என்றார் தணிகாச்சலத்திடம்.
“என்ன இருக்க போகுது, காலக்காலமாக செய்யும் கேசரியும் பஜ்ஜியும் தானே?”
“அதான் இல்ல.. எங்க சம்மந்தி அம்மா ஸ்பெஷல் கோதுமை அல்வா.. “
அங்கே அமர்ந்திருந்த மாலதியின் அம்மா எழுந்து உள்ளே ஓடிவிட்டார்.
“அப்பா சும்மா இருங்களேன்” என்று அவர் காதை கடித்தார் சௌந்தர்.
பின் முத்தாயி தான் அனைவருக்கும் பலகாரம் கொண்டு வந்து கொடுத்தாள்.
“பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா பேசட்டும், உங்க கிராமத்துல பழக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனா நாங்க பசங்க மனசை புரிஞ்சுகிறவங்க.. அதனால் மறுப்பு எதுவும் சொல்லாமல் அனுப்பி வைங்க” என்றார் நம் ராஜமாதா.
மாலதியும் அவர் அம்மாவும் கொஞ்சம் உள்புறம் அமர்ந்திருந்தார்கள்.
“என்ன மாலு மாப்பிள்ளையோட அப்பத்தா நாம என்னமோ ரொம்ப பட்டிகாடுங்கிற மாதிரியே வந்ததுல இருந்து பேசுது”
“சும்மா இரும்மா.. அவங்க சுபாவம் அப்படித்தான்.. அவங்களுக்கு நீ யாருன்னு இன்னும் தெரியாது.. சாக போற எங்க அம்மாவோட கடைசி ஆசைக்காக தான் இங்க வந்திருக்காங்க”
“என்னடி சொல்ற?”
“நீ போட்ட நாடகத்தோட செகண்ட் பார்ட்.. போம்மா” என்று எழுந்து சென்றுவிட்டார்.
அதன்பிறகு தான் முத்தாயியும் ஹிருதய்யும் மாடிக்கு சென்று பேசியது.
அவர்கள் மேலே பேசிக் கொண்டிருக்கையில், இங்கே கீழே அனைவரும் சலசலத்து கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீகாந்த் சௌந்தருடன் அமர்ந்து கொண்டார். சௌந்தரின் அண்ணா கும்பகோணத்தில் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவரும் இவர்களுடன் இணைந்து கொண்டார். கந்தசாமி ஓரிடத்தில் நிற்காமல் சுற்றி சுற்றி அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்.
“பேத்தி கல்யாணம்னதும் இளமை திரும்புதோ” என்றார் வம்பு பிடித்த ஒரு உறவினர்.
“நான் என்னய்யா உம்மை போல கிழவனாவா இருக்கேன், இளமை திரும்புதான்னு கேக்குற?”
“அப்படி சொல்லுங்க மச்சான்” என்றார் மாலதியின் அப்பா.
சௌந்தரின் அக்கா விசாலாட்சி, அவரது கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தார். அவர்கள் சேலத்தில் இருக்கிறார்கள். அக்கா கணவர்
அங்கே உள்ள சேலம் ஸ்டீல் பிளான்டில் உயர் பதவியில் இருக்கிறார்.
முத்தாயின் மாமாக்கள் ஒருபுறம் அமர்ந்து தாய் மாமா சீரை எப்படி ஊரே மெச்சும்படி செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
பின் புறம் இரவிற்கான உணவு ஏற்பாடாகி கொண்டிருந்தது.
அப்பொழுது கந்தசாமி ஸ்ரீகாந்த்தை அழைத்துக்கொண்டு மாடிப்படியின் கீழே வந்தார். அவருக்கு ஸ்ரீகாந்த்திடம் தனியாக பேச வேண்டி இருந்தது.
“நம்ம இதயா, வேலைக்கு இன்னும் போகலைன்னு எல்லாம் நீங்க ஒன்னும் விசனப்படாதீங்க. தங்கமான புள்ள, புதுசா பிசினஸ் ஆரம்பிக்கனும்னு சொல்றான். நிச்சயம் மேலே வந்துடுவான். அவனுக்கு நான் பொறுப்பு” என்றார்.
உண்மையில் என் பையனை பத்தி என் கிட்டவே சொல்றாரே என்று எல்லாம் ஸ்ரீகாந்த்திற்கு தோன்றவில்லை. இவர்களிடம் அவன் சேர்ந்திருப்பது நிச்சயம் அவனுக்கு நல்லது என்றே மனதிற்கு பட்டது.
“சரிங்க” என்று கூறி சிரித்துக்கொண்டார்.
“வேற எதுனாலும் தயங்காம என்கிட்டே கேளுங்க தம்பி” என்றார் அவர் தோளில் தட்டி கொடுத்து.
“இவ்வளவு பேர் வந்திருக்காங்க? உங்க பிள்ளை வரலையா?” என்றார்.
அப்பொழுது கந்தசாமியை தேடி நித்யகல்யாணி அங்கே வந்தார்.
“யாரை கேக்குறீங்க.. இதோ சௌந்தர், அவன் அண்ணன் சுந்தர். ரெண்டு பேரும் இங்கன தானே இருக்காங்க” என்றார் அவர்களை சுட்டி காட்டி.
“அதோ என் பொண்ணு விசாலாட்சி” என்றார் கந்தசாமி அவரை காட்டி.
“இவங்க இல்லைங்க, உங்க கமிஷ்னர் புள்ள வரலையா?”
“கமிஷ்னாரா?”
“எங்களுக்கு மூனு பசங்க தான், சுந்தர், சௌந்தர், விசலாட்சி” என்றனர் ஒன்றாக.
“இல்லையே முத்து சொன்னுச்சே? அவங்க சித்தப்பா சென்னையில கமிஷ்னர்.. நேர்மையானவர்.. எங்கேயும் பதவியை உபயோகிக்க மாட்டார்.. அவரை இன்னிக்கு பார்க்கலாம்னு ஆசையா இருந்தேன். கல்யாணத்துக்கு வந்துடுவாரு இல்ல?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் சரியாக முத்துவும் ஹிருதய்யும் கீழே இறங்கி வந்தனர்.
பேத்தி தான் எதோ சொல்லி இருக்கிறாளென்று கந்தசாமி சுதாரித்துவிட்டார்.
“முத்து, தம்பி யாரை கேக்குறாரு? யார் உனக்கு கமிஷ்னர் சித்தப்பா?” என்றார் நித்யகல்யாணி பல்லை கடித்துக்கொண்டு.
“அதுவா இப்ப முக்கியம்? நீ வா அப்பத்தா” என்று அவரை அவ்விடம் விட்டு நகர்த்த பார்த்தாள் முத்து.
“அதானே, வீட்ல இம்புட்டு ஆள் இருக்கிறப்ப என்னத்துக்கு வெட்டி கதை பேசிகிட்டு , போய் வேலையை பாரு” என்றார் தாத்தா.
உள்ளே செல்லும் வழியை மறைத்தவாறு நின்றுகொண்டிருந்தார் நித்யகல்யாணி.
“அது அன்னிக்கு ஒரு பஞ்சாயத்து.. அதுக்காக அடிச்சு விட்டேன்.. ஒரு நல்லது நடக்கணும்னா பொய் சொல்றது தப்பு இல்லைன்னு தான் அய்யா சொல்லி கொடுத்திருக்காங்க” என்றாள் அசால்ட்டாக.
“என்னது அடிச்சு விட்டியா? அதுக்கப்புறம் நான் கேட்டப்ப கூட நிஜமாலுமே சித்தப்பா இருக்கிற மாதிரி சொன்னியே ம்மா” என்றார் ஸ்ரீகாந்த்
“அது பொய் சொன்னா அதை மெயின்டெய்ன் பண்ண வேணாமா லட்சுமி சார்” என்றாலே பார்க்கலாம்,
‘நங்’ என்று அவள் தலையில் கொட்டிவிட்டார் நித்யகல்யாணி.
“என்ன பண்றீங்க நீங்க?” என்று ஹிருதய் வேகமாக வந்து முத்தாயியை அவன் பக்கம் இழுத்துக்கொண்டான்.
“பேச்ச பார்த்தீங்களா தம்பி, அவளுக்கு செல்லம் கொடுத்தீங்க நாளைக்கு உங்க தலை மேலே ஏறி உட்கார்ந்துக்குவ பார்த்துக்கோங்க”
“யாருக்கோ உதவ தானே பொய் சொல்லிருக்கா.. அப்படியே தப்புனாலும் எதுக்கு அடிக்கிறீங்க?” என்றான் ஹிருதய் வருத்தமாக. தன்னிச்சையாக அவன் கை முத்தாயியின் தலையை தடவி கொடுத்தது.
அவர் கொட்டியே சத்தம் அப்படி கேட்டது. ஹிருதய்கு ஒரு வினாடி கண்கள் கலங்கிவிட்டது.
“இனிமே இப்படி அடிக்காதீங்க” என்றான் மீண்டும்.
“ஆமா ம்மா, பாவம் பொண்ணு. நான் தான் புரிஞ்சுக்காம சொல்லிட்டேன். அன்னிக்கு அவளால நல்லதுதான் நடந்துச்சு” என்று ஸ்ரீகாந்த்தும் முத்தாயிக்கே ஆதரவாக பேசவும்,
“நல்லா கேளுங்க மாமா.. இப்படி கொட்டி கொட்டித்தான் நான் குள்ளமா இருக்கேன் தெரியுமா?” என்றாள் சலுகையாக.
“இனிமே நான் பார்த்துகிறேன், நீ கவலை படாதே” என்றார் ஸ்ரீகாந்த்.
நித்ய கல்யாணி சரி தான் என்று தலையை ஆட்டிக்கொண்டார்.
அதற்குள் இவர்கள் பேச்சு குரல் கேட்டு அனைவரும் வெளியே வரவே இவர்களும் உள்ளே சென்றுவிட்டனர்.
பெண் மாப்பிள்ளை தங்கள் சம்மதத்தை சொல்லவும், அப்பொழுதே ஒப்பு தாம்பூலம் மாற்றி கொண்டார்கள்.
விரைவில் நல்ல நாள் பார்த்து கல்யாண தேதியை குறித்துக்கொள்ளலாம் என்று ஒரு மனதாக முடிவு எடுத்து அனைவரும் மனநிறைவுடன் வீடு திரும்பினார்கள்.
—————
“பார்த்தியா எப்படி என் தேர்வு?” என்றார் கந்தசாமி மனைவியிடம் தனிமையில்.
“பாவம்ங்க அந்த புள்ள..”
“யாரை சொல்ற டீச்சரு?”
“எல்லாம் உங்க இதயாவை தான்.. இப்படி அப்பிராணியா இருக்கானே? நம்ம முத்து கூட எப்படி குப்பை கொட்டுவான்னு தான் எனக்கு கவலையா இருக்கு”
“ஹா ஹா ஹா.. தங்கமான புள்ள நித்யா.. ஆனா நீ நினைத்திற மாதிரி அப்பிராணி எல்லாம் கிடையாது. மனசு வெள்ளை ஆனா வைராக்கியமான புள்ள.. ஆர்ப்பாட்டம் இல்ல ஆனா நினைச்சதை சாதிக்கிற குணம் இருக்கு”
“நல்ல சம்பந்தம் தாங்க.. நாளைக்கு நம்ம ஜோசியர்கிட்ட நானும் மாலதியும் போய் பார்க்கலாம்னு இருக்கோம்”
“அப்படியே பாவையையும் சேர்த்துக்கோங்க. அது மட்டும் அப்புறம் தனியாவா போகும்?”
“சரி சரி”
அந்த ஜோசியரோ அடுத்த மாதத்திலே கல்யாணம் நடப்பது தான் நல்லது, இல்லன்னா ரெண்டு பேருக்கும் எட்டு வருஷத்துக்கு கல்யாணமே நடக்க வாய்ப்பில்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார்.
அதன் படி மின்னல் வேகத்தில் வேலைகள் நடந்தது.
பூம்பாவையும் ஸ்ரீகாந்தும் தான் விழித்து நின்றனர்.
“நீங்க கவலையே படாதீங்க லட்சமி மாமா..” என்று முத்து தானே அவர்களுக்கு உதவ முன் வந்தாள்.
“பொண்ணு வீட்டு பக்கம் வேலை பார்க்க பல பேர் இருக்காங்க, அதனால் நானும் எங்க அய்யாவும் மாப்பிள்ளை வீட்டு சார்ப்பா எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோம்” என்றாள்.
“நாம சென்னைல இருந்தே வேலையே பாப்போம் வாங்க.. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்ன வந்துடலாம்” என்று அவரையும் இழுத்து கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டாள்.
கூறியதோடு நீக்காமல், கந்தசாமியும் முத்தாயியும் மாப்பிளை வீட்டின் சார்பாக அனைத்தையும் பார்த்துக்கொண்டார்கள் என்றும் சொல்லலாம், பெண் வீட்டார் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி படுத்தி வைத்தனர் என்றும் சொல்லலாம்.
இவர்கள் கலாட்டவோடு, திருமண நாளும் நெருங்கியது.
—————–
error: Content is protected !!