Skip to content
Post Views: 1,602
நதி 30
இதோ அதோவென தீனதயாளன் யமுனா திருமணம் முடிந்து இன்னும் இரு மாதத்தில் முதல் திருமண நாள் வரக்காத்திருந்தது.
Advertisement
வீட்டு நிர்வாகத்தை மொத்தமாய் தன் வசமாக்கிக்கொண்டு ஜெயசீலனை செல்லாக் காசாக்கி உட்கார வைத்திருக்கும் யமுனாவின் மீது பெரும் கோபம் ஜெயசீலனுக்கு உண்டு.
சில முறை தீனாவிற்காக ஜெகதீஷை அடித்தது போல.. யமுனா மீதான கோபத்தை அவன் மீது காட்ட முயன்றாலும், அவனுக்கு காவலாக வந்து நிற்பதும் யமுனாவே.
Advertisement
Advertisement
அதில் உண்டாகும் வார்த்தைகளை அசால்ட்டாக தட்டிவிட்டு, பதிலடி கொடுத்து செல்லும் பெண்ணை கண்டு பெரும் மலைப்பு அவருள்.
மாமனார் மருமகளுக்குள் நடக்கும் இது போன்ற பனிப்போர் பல நேரங்களில் தீனா அறியாத படி தான் அரங்கேறிக்கொண்டிருந்தது.
Advertisement
ஜெயசீலனால் எளிதாக நெருங்க முடிந்த சகுந்தலாவிடம் மட்டும் அவர் தனது கோபத்தால் வரும் வக்கிரமான பேச்சை வெளிப்படையாக காட்டியதே இல்லை இத்தனை வருடங்களில்.
காரணம் அவர் மீதான அன்பு.. என நினைத்தால் அது மிகப்பெரிய தவறு..!!!
இது அவரின் ஊர். சுற்றியிருப்பவர்கள் எல்லாரும் அவரை பிறந்தது முதல் பார்த்து பழகிய ஆட்கள்.
சகுந்தலா சோம்பேறியே தவிர.. மற்றபடி அவரிடம் தவறென ஒன்றும் சொல்லிவிட முடியாது.
இவரை கஸ்தூரிக்கு சொன்னது போல எந்த காரணத்தையும் சொல்லி மூலையில் ஒடுக்க முடியாது.
சக்தியிடம் விசயம் நேரடியாக சென்றுவிடும். அப்படி சென்றால் அவன் இவரை சும்மா விடுவானா தெரியாது..?!
அதோடு ஏற்கனவே மனைவி இறந்து, அதில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த பயம்.. இன்னும் அவர் உள்ளிருந்து கொண்டு தான் இருக்கிறது.
அன்று அங்கு பணம் வேலை செய்த போதும்.. அதுவரை அவரை அவர்கள் விசாரித்த விதம், அவர்களின் பார்வை எல்லாம் ஒருவித கிலியை உண்டாக்கியே இருந்தது.
இவரெல்லாம் வாயில்லாத பூச்சிகளை மட்டுமே வதைக்க தெரிந்த இனப்பிறவி. அவரிடம் துணிந்து.. எதிர்த்து நின்றால் கோழை போல ஒதுங்கி ஓடிவிடுவார்.
ஜெகதீஷை அடித்தால், “சின்ன புள்ள எதாவது தப்பு செஞ்சிருப்பான்.. அடிச்சு வளக்காம விட்டு நாளக்கி கெட்ட பேரு வந்தா..” என ஆகிடும்.
ஓயாமல் அவனை அடித்து துன்புறுத்தும் சைகோ இல்லை அவர். அதனாலேயே அது பெரிய விசயமாய் வெளியே தெரியாமல் போயிருந்தது.
அதனால் தானோ என்னவோ, அவன் அவருக்கு சிக்கிய அடிமையாகி இருந்தான் யமுனா இந்த வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கும் வரை.
இப்போது அவனை நெருங்க நினைக்க கூட முடியாது. பள்ளி விட்டு வந்த கணம் முதல் அவனின் இருப்பு யமுனா இருக்குமிடம் தான்.
தீனா யமுனா வெளியே சென்றாலும்.. அவர்களோடு கூட்டி செல்வதோ.. இல்லை வாணி வீட்டில் விட்டு செல்வதோ.. வழக்கமாகி இருக்க தன்னிடம் அகப்படாமல் போகும் அவன் மீதான ஏதோ ஒரு வித எரிச்சலும் அவருக்குள் பதுங்கி கிடந்தது.
மொத்தத்தில் தீனா தன் மீது கை வைத்த கோபமெல்லாம் இப்போது பின் சென்று, இவ்விருவர் மட்டுமே அவரின் முக்கியமான இலக்காகி இருந்தனர்.
“எதுக்கும் அசற மாட்டிங்கறாளே.. இந்த புள்ளே..! எங்கன்னு புடுச்சானோ இவென்..?
இத்தன வருசமா நா சொல்றத தாண்டி ஒத்த வார்த்த பேசதவன என்னையவே எதுத்து பேச வைச்சுட்டா..
இந்த பொடிப்பைய கூட அவள உரசிட்டு கொஞ்சிட்டு திரியறான்.
இருக்கு இதுங்களுக்கு.. வசமா சிக்கட்டும்..” என கருவிக்கொண்டு காத்திருந்தார் தக்க சமயத்துக்காக.
அப்படியான சமயமும் அவருக்கு வாய்த்தது ஒரு நாள். அந்த நாள் பல அனர்த்தங்களை ஆயாசமாய் அள்ளி தெளித்துவிட்டு சென்றிருந்தது.
***
தீனாவிற்கு அன்று கிளம்பும் நேரத்தில் முக்கியமான பார்ட்டி ஒருவர் போன் செய்து தனக்கு உடனடியாக தேவை.. என சில ஐட்டங்களை சொல்ல,
அவருக்கு சரக்கு அனுப்ப செக் செய்யும் போது.. அவர் கேட்ட ஐட்டத்தில் இன்னும் ஐநூறு செட்டுக்கும் மேல் தேவைப்பட்டது.
நாளை அது தயாராக வேண்டுமென்றால் இன்றே கட்டிங்கை முடித்தால் மட்டுமே இயலும் என்பதால்,
கட்டிங் செக்ஷனில் இருப்பவர்களை கொஞ்ச நேரம் ஓவர் டைம் பார்க்க வைத்து.. வேண்டிய மட்டும் வெட்ட வைத்துவிட்டு வர அன்று எப்போதும் வரும் நேரம் கடந்து போயிருந்தது.
“பாப்பா, நா வர லேட் ஆகும். இங்கேயே சாப்பிட்டு தான் வருவேன்.. எனக்காக வெயிட் பண்ணாதே..” என யமுனாவிற்கு முன்னதாகவே அழைத்து தகவலை சொல்லியிருந்தான் தீனா.
அவன் தனது வேலையை முடித்து வீடு வந்து சேர்ந்த நேரத்தில் யமுனா மட்டும் வெளி திண்ணையில் அமர்ந்திருந்தாள் சோர்வாக.
‘இப்படி காத்திருப்பது வழமை தான் என்றாலும்.. இத்தனை சோர்வாக அவள் இருந்ததே இல்லையே..?’ என்பதால்,
“பாப்பா என்னடா..?” என்றவாரே வண்டியை விட்டு கீழிறங்கியவன் அவளை நெருங்க,
அனைவரும் தூக்கத்தில் பிடியில் இருந்ததால், இவர்களை கவனிக்க ஆளில்லை என்பதை கொண்டு.. நின்றிருந்தவனின் இடையோடு கையிட்டு அணைத்தவள் வயிற்றில் தலை சாய்த்தாள்.
அவள் தலை முடியை கோத வந்தவன் கை உணர்ந்த ஈரம் அவளின் நிலையை அவனுக்கு உணர்த்த,
“பீரியட்ஸா பாப்பா..?” என்றான் ஆதுரமாய்.
‘ஆமாம்..’ என்பது போல தலையாட்டியவள் அவனை விட்டு விலகவே இல்லை.
அவளின் தோளை பரிவோடு தடவி ஆற்றுப்படுத்தியவன், “இவ்வளவு நேரம் ஏன்டா காத்துட்டு இருக்கே..? நானே லேட் ஆகுமுன்னு சொன்னேன் தானே..?
உனக்கு முடியலன்னா உள்ள போய் தூங்கியிருக்கலாமே..?
பாரு தலையும் ஈரமா கெடக்கு. உள்ள போய் பேன போட்டு காய வச்சுட்டாச்சும் இருந்திருக்கலாம்..” என்றவனை அவள் இன்னும் இறுக்க,
புரியாது பார்த்தவன் இங்கு வைத்து பேச விரும்பாது, “வா உள்ள போலாம்..” என அவளை அணைத்த வாக்கிலேயே எழுப்பி கூட்டி வந்தான்.
அறைக்குள் வந்து பார்த்த போது அவளின் முகத்தில் தெரிந்த வலியின் வீரியமும் லேசாக கலங்க தொடங்கிய விழியும் ஏதோ சரியில்லை என உணர்த்த,
“ஹேய் என்னடாம்மா.. என்ன பண்ணுது..? ரொம்ப பெயினா இருக்கா..?
இத்தன மாசத்துல இவ்வளவு துவண்டு போய் நீ இருந்து நா பார்க்கலையே..! ஹாஸ்பிடல் போயிடலாமா..?” என்றான் பதட்டமாய்.
“இல்லங்க.. என்னமோ இந்த மாசம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீடிங்கும் கொஞ்சம் அதிகமா இருக்கற மாதிரி இருக்கு. அதான் கஷ்டமா இருக்கு. சில டைம் இப்படி ஆகும் தான்.
நாளைக்கு பார்த்துட்டு தேவைப்பட்டா போலாம்..” என்றவளை கவலையோடு பார்த்தவன், அங்கிருந்த துண்டை எடுத்து அவளின் தலையை துவட்ட முயல,
அமர கூட முடியாது இதழை அழுந்த கடித்த படி அப்படியே அவளின் வயிற்றை கட்டுக்கொண்டு சுருண்டு விட்டவளை பார்த்த தீனாவிற்கு தூக்கம் எப்படி வரும்..?
“ஹாஸ்பிடல் போலாம் பாப்பா.. உன்னால முடியல தானே..? நா மாமாக்கு போன் பண்ணி காரெதாவது ஏற்பாடு பண்ண சொல்லவா..?” என்றிட,
“ம்ப்ச்.. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. எனக்கு ஒண்ணுமில்ல.. இதெல்லாம் பொண்ணுங்களுக்கு சாதாரணம் தான்..” என சொல்ல செய்வதறியாது அவளோடே இருந்தவன் அவளை கவனித்து.. அவ்வப்போது,
“சுடு தண்ணி வச்சு தரவா..?”
“சரியா சாப்பிட்டிருக்க மாட்டே பால் காய்ச்சி தரவா..?”
“மோர் அடுச்சு கொண்டு வரவா..?”
“வெந்தயம் சாப்பிடறையா..?”
“எண்ணெய் போட்டு விடவா வயித்துக்கு..?” என கேட்டு, ஓயாமல் கிச்சனுக்கும் அறைக்கும் நடந்து கொண்டிருந்தான்.
‘எப்படியாவது அவளின் வேதனை தீர்ந்துவிடவேண்டும்..’ என்ற எண்ணத்தோடு அனைத்தையும் அவன் செய்ய.. அவளின் முகமோ இன்னும் வலியின் சாயலை அப்பட்டமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அவளின் வேதனை கண்டு, “முதுகு வலிக்கும். காலெல்லாம் குடையுமுன்னு சொல்லுவீயே.. லேசா அமுத்தி விடறேன். தூங்கறையா..?” என பரிவோடு கேட்டு அவளின் முதுகை இதமாய் அழுத்தி விட்டவன், அவளின் காலடியில் அமர்ந்து மெதுவாக கால்களை அழுத்தி விட, பெண்ணவளின் விழிகள் நிறைந்தது பூரிப்பில்.
அதை கண்டு இன்னும் வலி அதிகமாகி விட்டதோ என நினைத்து பதறியவனை ஆற்றுப்படுத்த நினைத்தவள்,
“கண்ணழகா.. எனக்கு இப்படி இருக்கறது கஷ்டமா இருக்கு தானே..?” என எழுந்து அமர முயல, அவளை வாகாய் தூக்கி தன் தோள் சாய்த்துக்கொண்டவன்,
“ஆமா பாப்பா.. பாரு எப்படி இருக்கேன்னு..” என்றான் அவளுக்கு வலிக்காத வண்ணம் பூ போல அணைத்தவாரே.
“இதுக்கு என்கிட்ட தீர்வு இருக்கே..” என்றவளை அதிர்வோடு கண்டவன்,
“என்ன..! உனக்கு என்ன செய்யனுமுன்னு தெரியுமா..? தெரிஞ்சுட்டே இவ்வளவு நேரம் பெயினோட இருந்தீயா..? சொல்லு முதல்ல..” என்றான் பரபரப்பாக.
“பொறுங்க.. தயா. அது என்னால மட்டும் முடியாதே. நீங்க இல்ல மனசு வைக்கனும்..” என்றவள் முகம் தாழ்த்தி அவனின் சட்டை பொத்தானை விரலால் திருக,
அவளின் பாவனை கண்டு குழம்பிப்போன போதும், இப்போது அவளின் வலி தீர வேண்டும்.. என்பதை மட்டுமே மனதில் கொண்டு,
“நானா.. உனக்காகன்னா நா செய்யாம இருப்பேனா..? சொல்லு உடனே செய்யறேன்..” என சொன்னதும் யமுனா சொன்ன பதிலில்,
‘ஞே..’ என ஒரு நொடி விழித்தவன் பின் கோபமாய் முறைக்க துவங்கினான்.
error: Content is protected !!