Skip to content
Post Views: 140
அத்தியாம் 11
“வச்சிடாதீங்க ஒரு நிமிஷம்!” என குரலை உயர்த்தி “ஒன்னே ஒன்னு கேட்கனும், கேட்கவா?” என மெதுவாய் கேட்டாள்.
“என்ன?” என கேட்டான்.
“நீங்க டென்சன்ல இருக்கீங்களா?”
Advertisement
“அது எப்பவும் இருக்கிறது தானே? ஏன் அக்கா, அம்மானு அட்வைஸ் பண்ண போறியா.. அதெல்லாம் வேணாம்” மிகுந்த எரிச்சல் தெரிந்தது அவன் குரலில்.
“ஓ.. அட்வைஸ் பண்றது தான் என் வேலைனு நினைச்சிட்டீங்களா?”
“பின்ன இல்லையா?”
Advertisement
“இல்லை..”
Advertisement
“அப்பறம் ஏன் டென்சனா இருக்கீங்களானு கேட்ட?”
“உங்ககிட்ட ஒன்னு கேட்கனும், நீங்க டென்சனில் இருந்தா ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்க கிரி.” எடுத்து கூறினாள் கமலி.
நெற்றியை நீவிக்கொண்டவன் “அதெல்லாம் பாத்தா பேச முடியுமா? இல்லை கேட்க தான் முடியுமா? என்ன கேட்கனும் கேளு” அசால்ட்டாய் இவன் பேசினாலும் உள்ளுக்குள் தடக் தடக் என தடுமாறியது.
Advertisement
“கேட்பேன்! ஆனால் சரியா பதில் சொல்லனும், எஸ்கேப்பாகி ஓட கூடாது” முதலிலேயே இவள் டிஸ்கிளைமரை போட்டுவிட, கண்மூடி திறந்தவன், அமைதியாகிவிட்டான்.
அவன் அமைதியே இவளுக்கு போதுமானதாய் இருந்தது, பேச துவங்கிவிட்டாள் “இந்த மூனு மாசம் தவிர்த்து, கல்யாணத்துக்கு முன்னையும் சரி, இப்போவும் சரி போனில் நல்லா பேசுறீங்க, ஆனால் நேரில்.. நிமிர்ந்து கூட பார்க்க மாட்றீங்க! முகம் பார்த்து கூட பழக மாட்றீங்க!” என்றுவிட
எதை இவள் கேட்டு விட கூடாதென்று ஓடி ஓடி மறைந்தானோ அதை தான் கேட்டாள். என்ன செய்வது இன்று இந்த கேள்விக்கு தயாராகவில்லையே.. துடித்த நெஞ்சை தடவிக்கொடுத்தான் கிரி.
“கல்யாணம் ஆனப்போ, வீட்டில் என்னை பார்த்தாலே பேய பார்த்த மாதிரி ஓடுனீங்க, வீட்டில் தங்கினதே இல்லையே? ஏன்?”
“கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட போட்டோ பார்த்து தானே ஓகே சொன்னீங்க?”
“ஆனால் கல்யாணம் ஆன பிறகு அன்னைக்கு, அன்னைக்கு!” தொடர்ந்தவளின் பேச்சு சிறிதாய் தடுமாறி
“என்னை கண்ணாடி முன்னாடி நிப்பாட்டி, பிடிக்கிற மாதிரி உன்கிட்ட எதுவுமே இல்லைனு சொன்னீங்க? ஏன்?” உடைந்தது இவள் குரல்..
லேசாய் செருமியவள் அழுகையை அடக்குகிறாள் என்பது வரை புரிந்தது.
“அப்புறம் லாஸ்ட் டைம் போனில் பேசும் போது கூட, பிடிக்கலைனு சொல்லிட்டாவது வாழ்ந்திருவேன்னு சொன்னீங்க!” என நிறுத்தியவள்
“ரொம்ப கான்ட்ராவரசியா இருக்கு உங்க பேச்சு, ஹேபிட் எல்லாமே. இதுக்கெல்லாமே எனக்கு பதில் வேணும். பதில் தெரியாம தூக்கம் கூட வர மாட்டுது” எல்லா கேள்விகளும் வரிசை கட்டி வந்து நின்றது அவன் முன்.
“ஒன்னே ஒன்னு கேட்கனும்னு சொல்லிட்டு! எத்தனை!” இத்தனை நேரமாய் பேரா பேராவாக இவள் பேசியதற்கு, ஒரே கேள்வியில் முடித்துவிட்டான்.
“என்னை ஏன் பிடிக்கலை? பிடிக்காமலா தாலி கட்டினீங்க?” விடவில்லை இவளும், மீண்டும் அத்தனை கேள்விகளையும் சேர்த்து வைத்து ஒற்றை கேள்வியால் அவனை தாக்கினாள்.
காதிலிருந்து போனை எடுத்து முகத்தின் முன்னே பிடித்து, கண்களை மூடி ஒற்றைகையால் பிடறியை அழுத்தமாய் வருடிக்கெண்டான்.
பின் ஆழமாய் மூச்செடுத்து, மீண்டும் போனை காதுக்கு கொடுத்து “பிடிக்காம தான் தாலி கட்டினேன்” என்றுவிட
கமலிக்கோ.. ஷாக் தான்.. கூடவே ‘எதிர்பார்த்தேன்’ என்பது போல ஒரு மனநிலை தான்.
“அப்போ என்னை பிடிக்கலைன்னா, தாலி கட்டாமல் போயிருக்கலாமே, அப்போவே வேண்டாம்னு போயிருக்கலாமே! ஏன் நீங்களும் கஷ்டபட்டு, என்னையும் கஷ்டபடுத்தி” குரல் திக்கியது இவளுக்கு.
“ஏற்கனவே சொல்லிட்டனே! பிடிக்கலைன்னாலும் உன் கூட தான் வாழ்க்கைன்னு பிறகென்ன?”
“பிடிக்கலைன்றீங்க.. பிறகெப்படி வாழ முடியும்! இது தான் நம்புற மாதிரி இல்லை” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
இருந்தும் விடவில்லை “என்னை என் உருவத்தை பிடிக்கலைன்னா, அப்போவே சொல்லி இருக்காலமே! நானே நிறுத்தியிருந்திருப்பேன் கல்யாணத்தை!
இல்லைன்னா முதலிலேயே உங்க டேஸ்ட் பத்தி உங்க அம்மா அக்காகிட்ட சொல்லியிருக்கலாம் தானே, உங்க கலர், உயரம்னு, பாடிபிட்னு இந்த மன்மதனுக்கு ஏத்த ரதியா பார்த்திருப்பாங்க தானே” ஆதங்கத்தில் ஆரம்பித்து அதீத கோபத்தில் முடித்தாள்.
இவனோ, சிறிதும் தளராதவனாய் “உங்கப்பா மாதரி எனக்கொரு அப்பா இருந்தா ரதியா பார்த்திருப்பாரோ என்னவோ” என்றுவிட
“இவ்வளவு புலம்புறதுக்கு நீங்களே உங்களுக்கு பொண்ணு தேடியிருக்கலாமே, உங்களுக்கு பொருத்தமா?” என்றாள் பல்லை கடித்து கொண்டு.
“என்னை சொல்றவ.. சொட்டையோ, வழுக்கையோ, குண்டாவோ கருப்பாவோ ஏன் உனக்கு பொருத்தமானவனா சூஸ் பண்ணல..” எகிறினான் கிரி.
“அப்படி பட்ட யாரையும் எங்கப்பா, என்கிட்ட காட்டல” பட்டென இவள் கூறிட
“காட்டியிருந்தா, கட்டியிருப்பியோ” இவன் கேட்டதில் அதிர்ந்து தான் போனாள்.
“மாட்ட தானே! பையன் அழகா இருக்கனும், கெட்ட பழக்கம் இருக்க கூடாது. நல்லா சம்பாத்யம் பண்ணனும், வீடிருக்கனும், எத்தனை கன்டிசன் போடறீங்க உங்க சைட்ல இருந்து.
ஆனா நான் எனக்கு ஏத்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டது தான் பெரிய தப்பா தெரியுது” மேலும் பேசினான்.
“பொண்ணுன்னா பொம்மை நினைச்சீங்களா, எதையும் பார்க்காமல் தூக்கி குடுக்க”
“அப்ப ஆம்பளைங்களை எதையும் பார்க்காமல் தூக்கி குடுத்துடலாம்.. ல்ல..” என இவன் கேட்க, விக்கித்து போனாள்.
பதிலில்லை இவளிடம், கோபமான இவனது குரலை விடாமல் ஒலித்து கொண்டிருந்தது இவள் காதுகளில்.
“உங்க வீட்டில் மட்டும் வாழறதுக்கு பையன பார்ப்பீங்க.. ஆனால் எங்க வீட்டில்! வாழறதுக்கு பொண்ணு பாருன்னா, வச்சு பூஜை பண்றதுக்கு ஒரு பொறுமைசாலியை பார்த்து வச்சுருக்கு எங்கம்மா..
உன்னை வச்சு எங்க வாழ, வேணா உருட்டி விட்டு விளையாடலாம்” அசால்ட்டாய் இவன் பேசியதில் இவளுக்கு தான் இன்னமும் கோபம் எகிறியது.
“ஓவரா பேசுறீங்க..”
“சரியா தான் பேசுறேன்.. நீ மட்டும் வாழ்றதுக்கு பையன பார்ப்பியாம், நான் மட்டும்..” ஏதோ சொல்ல வந்தவன் “தியாகம் பண்ணிட்டே திரியனும்” அழுத்தமாய் பேச
“அப்படியொன்னும் தியாகம் பண்ணி வாழ தேவையில்லை” இவள் கூற
“ப்ச்.. அது தான் என் வாழ்க்கைனு ஆயிடுச்சு போல.. முதலில், அம்மாக்காக, அப்புறம் அக்காவுக்காக, அப்புறம் அவ குடும்பத்துக்காக!” சலிப்பாய் பேசியவன்
முகத்தை சீரியசாக மாற்றி, “இனி மேல் உனக்காக.. இருந்துட்டு போறேன். ஆனால் உன்னை விடற ஐடியா இல்லை” கூறினான்.
“இந்த.. இந்த வார்த்தையை சொல்லி தான் ஏமாத்துறீங்க! இப்படியே போனிலேயே பேசி வாழ்றதை வாழ்க்கைன்னு எப்படி என்னால எப்படி ஏத்துக்க முடியும்?”
“அது மட்டுமே வாழ்க்கைனு நானும் சொல்லைலயே! முதலில் இருந்தே நமக்கு போனில் பேசி தானே பழக்கம், இனி அப்படியே பழகிப்போம்.. எப்படியும் நான் அங்க வர ஒரு ஏழெட்டு மாசம் ஆகும், அதுக்குள்ள நீ எனக்கு பழகிடுவ..”
“ஒரு வேளை அதுக்கு பிறகும், அழகு தான் பிரதானாமா உங்களுக்கு தெரிஞ்சா..”
“எப்படியும் நீ ஒல்லியாக மாட்ட.. உனக்கேத்த மாதிரி நான் குண்டாயிடுறேன்.. பிராப்ளம் சால்வ்ட்.. ஓகேவா”
“ஓகேயில்லை”
“இப்போ என்ன?”
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை”
“அத தானே இவ்வளவு நேரமும் சொன்னேன்”
“நான் பேட் வேர்ட் யூஸ் பண்ணதில்லை.. பண்ண வச்சிடாதீங்க.. பிடிக்கலைனு சொல்றீங்க. அது என்னோட போட்டோ பார்க்கும் போதே தெரியலையா. அப்போ உங்க பார்வைக்கு ஓகே வா தெரிஞ்ச நான் இப்போ ஏன் ஓகே இல்லாம தெரியனும்”
இத்தனை வருடங்களில் கமலியின் உச்ச பட்ச கோபமே இதுவாகத்தான் இருந்திருக்கும். நல்ல வேளை கதவு பூட்டியிருந்தது. இல்லையெனில் நிச்சயம் இந்நேரம் கர்ணன் வந்திருப்பான்.
error: Content is protected !!