Skip to content
Post Views: 197
அத்தியாயம் 13
இரண்டு நாட்கள் சென்று கிரியே போன் செய்தான் கமலிக்கு
“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..” என்ற பாடல் வரிகள் அவளை ஈர்க்க, எந்த நேரத்தில் இந்த பாட்டை வச்சனோ.. வாழ முடியாமலேயே போய்டும் போல.. எரிச்சலாய் நினைத்தபடி தான் வந்து போனை எடுத்தாள்.
‘கிரி’ குரலிலேயே மின்சாரம் பாய்ச்சியது போல் வரும் அவள் குரலில் இன்று அது இல்லை.
Advertisement
“ஹலோ..” என்றதிலேயே கிரியின் புருவங்கள் சுருங்கிட..
“விடீயோ கால் வா கமலி” என இவன் கட்டளை இட
“ப்ச்.. விடீயோ கால் பேசுற நிலைமையில இல்லை. என்னனு சொல்லுங்க” என்றாள் இவள் சட்டமாய்.
Advertisement
“என்ன மேடம்.. இன்னும் கோபமா இருக்கிங்களா என்ன..!” இவன் கேட்க
Advertisement
“அதெல்லாம் இல்லை”
“அப்போ வீடியோ கால் வாடி” இம்முறை அதட்டினான் இவன்.
சலித்து கொண்டே தான் இவள் அட்டெண்ட் செய்தாள்.
Advertisement
“என்ன? இப்ப சொல்லுங்க” என்றாள், அவள் முகத்தை ஆராய்ந்தவன்
“முகமே சரியில்லையே.. என்ன யாரும் எதுவும் சொன்னாங்களா?” அவள் முகத்தை ஆராய்ந்தபடியே
“நீங்க சொன்னவரை போதாதா? இன்னும் யார் என்ன சொல்லனுமாம்! அதெல்லாம் யாரும் ஒன்னும் சொல்லலை” இவள் உடனே மறுத்துவிட
“என்ன கமலி, ரொம்ப சூடா இருக்க.. அடுப்பில் இருந்து அப்படியே இறங்கி வந்துட்டியா என்ன?” இவன் கேட்க
“ஓ.. பார்க்க கரிகட்டை மாதிரி இருக்கனா என்ன?” இவனும் கேள்வி கேட்க, அவளும் கேட்டு வைத்தாள்.
‘நாம ஒன்னு சொன்னா இவ ஒன்னு சொல்றா!’ இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியதன் தாக்கம் இன்னும் இவளிடம் குறையவில்லை என்பதை முகத்தை வைத்தே கண்டு கொண்டான். ஆனால் பிரபாவும் ஒரு காரணம் என அறியாது போனான்.
அவளது கோபம் புதிதாய் தெரிந்தது. எப்படி சமாளிக்க, சமாதானம் செய்ய புரியவில்லை இவனுக்கு..! “சாப்ட்டியா?” என இவன் கேட்க, இல்லையென இவள் மறுக்க,
“இங்கையே மணி 8.30 அங்க எப்படியும் 11.00 வது இருக்கும்.. இன்னுமா சாப்பிடாமல் இருக்க.. போ போய் எடுத்துட்டு வா.. நானும் சாப்பிடலை, இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என பேச்சை நேக்காய் மாற்றிவிட்டான்.
சரியென தலையசைத்தவள், போனை ஹோல்டரில் போட்டுவிட்டு சாப்பாடு எடுத்து வர சென்றாள்.
இவன் சாப்பாடு எடுத்த வந்த பின்னும் இவள் வந்த பாடில்லை. இவனும் போனை ஹோல்டரில் போட்டுவிட்டு, போன் வழியே பார்வை பதித்திருந்தான்.
அவளில்லாத அந்த சில நிமிடங்களில் அறையை வலம் வந்தது இவன் விழிகள். முதலில் பேசுகையில் கையில் இருந்த போன் வழியே பின்புறம் அவ்வளவு தெரியவில்லை. ஆனால் கட்டிலில், ஹோல்டரில் போட்டுவிட்டு சென்றதும் கட்டிலும் அதன் பின்புறமும் நன்றாகவே தெரிந்தது.
அப்படி பார்க்கையில் கட்டிலில் கிடந்த டீசர்ட் இவனது கவனத்தை இழுத்தது. முதலில் ஏனோ தானோ வென பார்த்திருந்தவன், அது தன்னுடைய டீசர்ட் என தெரிய, அதிர்ந்து போனான். சிலையாகி விட்டான் அந்த ஒரு நொடி.
கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களில் ஓர் நாள் இரவு தன்னை அவள் நெருங்கி படுத்ததும், தன் நெஞ்சில் கை போட்டு தூங்கியதும், நெற்றியில் இதழ் பதித்ததும் இன்றும் இனுக்கு குறையாமல் வரிசை கட்டி நிற்க, அவன் கைகள் தன்னாலேயே முகத்தை அழுத்தமாய் மூடிக்கொண்டது.
“கிரி.. கிரி” என இவள் அழைக்கும் வரை அப்படியே தான் இருந்தான்.
“இங்க இட்லி.. அங்க?” என்றபடி அவனெதிரில் இருக்கும் படி அமர்ந்தாள்.
அவள் முகத்தை பார்த்தவன், “ம்.. இங்க ரொட்டி, தக்காளி தொக்கு” என்றபடி இருவருமே உண்ண துவங்கினர்.
தட்டில் கைகள் அலைந்தாலும், அவன் பார்வை முழுதும் அவளிடம் தான். அவளோ உணவே கவனம் என இருந்தவள், இரண்டு மூன்று முறை, அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவனின் விடாத பார்வையில், திடுக்கிட்டு “என்ன? ஏன் இப்படி பார்க்குறீங்க?” என வினவ
“ஒன்னமில்லை” என தலையசைத்துவிட்டு, பின் “கட்டில் மெத்தையை மட்டும் ஏன் திருப்பி அனுப்பிட்ட, காரணம் என்ன?” இவன் கேட்க
“அது.. அது” என திணறிப்போனவள் “இங்க போட இடமில்லை அதான்” இவள் மழுப்பினாள்.
“துரையும், அம்மாவும் கேள்வி கேட்டே கொல்றாங்க? உண்மையை சொன்னா, நான் அதுக்கு தகுந்த மாதிரி அவங்களை சமாளிச்சிப்பேன்” இப்போது நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
அதுவரை அவன் முகம் பார்த்திருந்தவள், சட்டென பார்வையை வேறு பக்கம் மாற்றி கொண்டு “அது உங்க அக்காவும், மாமாவும் யூஸ் பண்ணது. எனக்கு வேணாம்னு தோணுச்சு, திருப்பி அனுப்பிட்டேன்” என்றாள் தெளிவாய்.
முதலில் இமைகள் சுருங்க அவளை பார்த்தவனுக்கு, அதற்கான பதில் புரிய வெகு நேரமெல்லாம் தேவைபடவில்லை.
ஆனால் அதன் பின் தான் முகத்தை எங்கு போய் வைத்து கொள்வது என தெரியாமல் தடுமாறி, உணவில் கவனம் பதித்தான்.
அவன் தடுமாற்றம் கண்டு இவளுமே உணவில் கவனம் பதித்தாள்.
சாப்பிட்டு முடித்தவன் “வச்சிடவா” என்றதோடு முடித்திட, “அப்பாடா, இன்னும் பேசி நமக்கு சங்கடம் வைக்கல, சந்தோஷம்” என நினைத்து கொண்டு, “சரி” என்றவள், பட்டென கட் செய்துவிட்டாள்.
————-
இதோ இரு வாரம் ஓடி விட்டது.. கமலிக்கு மூளைக்குடைச்சல் குறைந்த பாடில்லை ஒருபக்கம் கிரி மூளையை குடைந்து கொண்டிருந்தான் எனில் மறு பக்கம் அண்ணி என்ற கொடுக்குகள் வேறு.
பேசாமல் ‘மீண்டும் கல்லூரிக்கே வேலைக்கு சென்றால் என்ன?” மூளை கேட்க
‘அப்போவும் வீட்டுக்கு வந்த பிறகு நீ பிரிபாகிட்ட இடி வாங்கி தான் ஆகனும்’ என மனது பதில் கூற
‘பஸ் பயணமாய் இல்லாமல் ஹாஸ்டலிலேயே தங்கிவிட்டால்?’ மூளையில் பளிச் என தோன்றிய ஐடியாவால் உப் என சந்தோஷமாய் பெரு மூச்சு கிளம்ப, ம்மா.. என கூச்சலிட்டபடியே சமையலறைக்குள் ஓடினாள்.
“ம்மா.. நான் மறுபடியும் வேலைக்கு போகட்டுமா..” என மூச்சு வாங்க கேட்டவளை அதிர்ந்து தான் பார்த்தார் மல்லிகா.
“அதே காலேஜில் கேட்டு பார்க்கிறேன்ம்மா.. கிடைச்சா போறேன்.. அதுவும் கிரி வர வரைக்கும் தான்” என்றிட
அடுத்த கனமே “வேணாம் கமலி.. நீ பிரபா பேசுறதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத.. நான் கர்ணாகிட்ட பேசுறேன்” பிரச்சனையின் நுனியை அசால்ட்டாய் இவர் கண்டுபிடித்திட
“ம்மா..” என அதிர்வில் குரலுயர்த்த
“நீ கொஞ்சம் தான் கேட்ட, நான் முழுசா அவ பேசினதை கேட்டுட்டேன்” என கலவையான உணர்வுகளோடு கூறியவர்
“வேலையெல்லாம் வேணாம்டி, இங்க கண் முன்னாடி இருந்துட்டு போ.. கண்குளிர வச்சு பார்த்துப்பேன். அங்கே கண்காணாத இடத்துக்கு போய்ட்டா தவிச்சு போய்டுவேன்டி” மல்லிகா இப்படியெல்லாம் பேசியே கேளாதவளுக்கு அழுகை வரும் போல் தான் இருந்தது.
ஆனால் மல்லிகா இன்னும் தளர்ந்திடுவார், என்பதாலேயே, அவரை இடையூடு கட்டி கொண்டவள் “நானும் பாவந்தானேம்மா.. கொஞ்ச நாள் தர்ஷினியோட இருந்துட்டு வாரேனே, கொஞ்சம் சேன்ஜ் கிடைக்கும். பத்திரமா இருந்துப்பேன். எதுவும் பிரச்சனைன்னா கண்டிப்பா திரும்ப இங்கேயே வந்திடுவேன்.. ப்ளீஸ்ம்மா.. என் செல்ல அம்மால்ல..! அண்ணாவையும் அப்பாவையும் மட்டும் சமாளி ப்ளீஸ்” கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்தாள் கமலி.
“முடியவே முடியாது” என மறுத்த மல்லிகாவின் பின் குட்டி போட்ட நாயாய் சுற்றி கொண்டிருந்தாள்.
அவரும் சம்மதமெல்லாம் கூறவில்லை. ஆனாலும் விடுவாளா கமலி, தன் பக்க நியாயங்களை பேசி பேசியே, மல்லிகாவின் மனதை கரைய வைப்பதற்குள் பெரும்பாடு பட்டு போனாள்.
இறுதியில் கமலியின் நியாயங்களே வெல்ல, “சரி.. சரி.. உனக்கு சந்தோஷம் அதான்னா.. நான் பேசுறேன்! ஆனால் ஏற்கனவே பஸ் டிராவல் சேரலைன்னு தான் வேலையை விட்டு நின்ன, இப்போ மட்டும் அதே டிராவல் பிரச்சனை இருக்கு தானே!” மல்லிகா கேட்க
அப்போதும் அவள் ஹாஸ்டல் பற்றியெல்லாம் பேசவில்லை.. வேலை உறுதியான பின் கூறிக்கொள்ளலாம் என “அப்போ சரியாபடலை.. இப்போ சரியா படுதே.. ப்ளீஸ்மா” என சரிகட்டினாள்.
“சரிடி பேசுறேன்..” என்ற பின் தான் மல்லிகாவை விட்டாள் கமலி.
அதன் பின் தன்னுடன் ஏற்கனவே வேலை பார்த்த தோழி தர்ஷினிக்கு போனில் அழைத்தாள்.
கமலி வேலைக்கு சேர்ந்த அதே காலகட்டத்தில் லேப் டெக்னீஷனாக சேர்ந்தவள். இன்டர்வ்யூ எல்லாம் ஒன்றாக அட்டென்ட் செய்து, நான் டீச்சிங் ஸ்டாப் என்ற க்ரூப்பில் நண்பர்களாகிப் போனவர்கள்.
டீ ப்ரேக், லன்ச் மற்றும் கல்லூரி விழாக்கள் என அனைத்திலும் ஒன்றாகவே சுற்றுபவர்கள். வெறும் ஆறு மாத நட்பு தான். ஆனால் கொஞ்சம் வலுவானதும் கூட. கமலி ஹாஸ்டல் கிடையாது ஆனால் தர்ஷினி ஹாஸ்டல் வாசி. அது ஒன்று தான் வித்யாசம்.
இவளது அழைப்பை உடனே ஏற்றாள் தர்ஷினி “ஹே.. கம்ஸ்.. புதுப்பொண்ணு எப்படி இருக்க..” ஆரவாரமாய் இவள் தொடங்க
“அதெல்லாம் பழைய பொண்ணாகி ரொம்ப நாளாச்சி.. பேசாத.. நீ.. பிரண்டு மேரேஜ்க்கு கூட வர முடியாத உன்னையெல்லாம் ப்ரண்ட் லிஸ்டில் வச்சிருக்கேன் பாத்தியா.. என்னை சொல்லனும்” என வசைபாட ஆரம்பித்தாள் கமலி.
“ஹே சாரிடி உன் கல்யாணத்தன்னைக்கு தான் அப்பாக்கு உடம்பு சரியில்லாம போச்சு.. சாரிடி வரமுடியலை, அதுக்கு பிறகு வந்து நின்னா நல்லாவா இருக்கும். ப்ரியா ஆன நீயே கூப்பிடுவன்னு தான் நானும் உன்னை கூப்பிடலை” நீண்ட விளக்கவுரை ஒன்றை தர்ஷி கொடுக்க
error: Content is protected !!