Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 15 2

சிறிய சிரிப்போடு அவளை வரவேற்றவனிடம், பெரியதாய் புன்னகையை பரவ விட்டவள், “இவ என் ப்ரண்ட் கமலி” என்றும் “இவர் கோகுல்..” என்றும் இருவருக்குமே அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஹாய் ணா..” இவளும் புன்னகை பூக்க, “ஹாய் சிஸ்” என இவனும் பதிலுக்கு புன்னகை பூத்தான்.

“சரி.. போலாமா..” என அனுமதி கேட்டுவிட்டு, இவன் முன் செல்ல.. இவர்கள் இருவருமே பின் தொடர்ந்தனர்.

சின்ன ரிசப்ஷன் போல இருந்தது, ஆனால் அந்த பக்கம் என்ன நடக்கிறது என்பதை இந்த பக்கமிருந்து பார்க்கும் படி முழு கண்ணாடி தடுப்பு இருக்க, ஆச்சர்யமாய் பார்த்திருந்தாள் கமலி.



Advertisement

அவளை பார்த்த கோகுலோ.. “ரொம்ப ஆசையா இருந்தா உள்ள போய் பாரு கமலி.. பிரான்ச் மேனேஜர் என் பிரண்டு தான்.. நான் சொல்லிகிறேன்” எனவும், சட்டென இவளும் கண்ணாடி தடுப்பை திறந்து உள்ளே சென்றுவிட்டாள்.

அதன் பின் கோகுலோ தர்ஷியின் பக்கம் பார்வையை திருப்பியபடி ரசனையோடு பார்த்திருந்தான் “கடிச்சு தின்னுருவனா என்ன.. துணைக்கு ஆள் கூட்டிட்டு வந்திருக்க” அவள் காதுகளில் கிசுகிசுத்தான் கோகுல்.

“அது.. அது..” என இவள் திக்கி திணற

Advertisement

“தனியா மாட்டாமலா போய்டுவ.. இருக்கு உனக்கு” என்ற அவனது மிரட்டல் தோனியில் சட்டென இவள் நிமிர்ந்து அவனை பார்க்க, பட்டென கண்ணடித்தான் கோகுல்.

Advertisement

அதற்கு இவளோ பே.. என திறந்த வாய் மூடாமல் பார்த்திருக்கு, அவள் வாயை தன் கைவைத்து அடைத்து “மேனேஜர், டிரையினர் இரண்டு பேரையும் பார்க்கனும்.. வா.. அப்புறமா ஷாக் ஆகிக்கலாம்” என அவளை அழைத்து சென்றான் கோகுல்.

ஆனால் அங்கே உள்ளே சென்ற கமலியின் பார்வையோ சுற்றி சுழன்றது. ஒரு சுவர் மட்டுமே வெளிப்படையான கண்ணாடியுடனும், மற்ற மூன்று சுவர்களும் முகம் பார்க்கும் கண்ணாடிகளால் ஆக்கிரமிக்கப்ட்டு இருந்தது. எங்கிருந்து பார்த்தாலும் ஏதாவது ஒரு கண்ணாடியில் பார்பவர்களின் உருவம் பிரதிபலிக்கும்படி தான் இருந்தது.

சுவரெங்கும் கண்ணாடிகளோடும் பளிச்சென்ற வெளிச்சத்தோடும், நிறைய எக்ஸர்ஸைஸ் எக்க்யூப்மெண்ட்களோடும் ஏதோ ரோபாடிக் உலகத்திற்குள் நுழைந்தது போல் காட்சி அளித்தது அந்த இடம்.

Advertisement

ஆங்காங்கே ஆண்கள் பெண்கள் என வயது வித்யாசம் பாராமல் நிறைய பேர் அங்கு ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களை வழிநடத்துவதற்காக ஆங்காங்கே டிரெயினர்களும் நின்றிருந்தனர்.

எல்லா இடமும் சுற்றி வந்த இவளின் விழிகள் இறுதியாய் சுவரெங்கும் பதிக்கப்பட்ட கண்ணாடிகளில் வந்து நின்றது.

கிரிக்கு தன்னை பிடிக்கவில்லை, தன் உருவத்தை பிடிக்கவில்லை என அறிந்து கொண்டபின், அவள் உருவத்தை அவளே வெறுத்து வெறுத்து, ஒரு கட்டத்தில் கண்ணாடியில் தன்னை பார்ப்பதை கூட நிறுத்தி இருந்தாள்.

அப்படி நிறுத்தியிருந்தவளுக்கு, இன்று மூன்று சுவர்களிலும்  இருந்த கண்ணாடிகளில் பட்டு எங்கும் எதிலும் அவள் பிம்பமே என்பது போல் பிரதிபலித்தது.

இவள் எண்ணங்களை கலைப்பது போல் அங்கு வந்து நின்றாள் மேனகா.

“மேடம்” என அழைத்து தன் பக்கம் திருப்பியவள் “உங்க பெயர், அட்ரஸ், கான்டாக்ட் டீட்டெயல்ஸ், அப்புறம் கொஞ்சம் பர்சனல் இன்பர்மேஷனும் இருக்கும், எல்லாத்தையும் இதில் பில் பண்ணிடறீங்களா?” ஒரு பார்மையும், பேனாவையும் இவள் முன்பு நீட்டினாள் மேனகா.

கமலியோ புரியாமல்  அவளையும், அவள் கையில் இருந்த பேப்பரையும்  மாற்றி மாற்றி பார்த்தாள்.

“பயமும், கவலையும் எதுக்கு மேடம், உங்களை பிட்டா மாத்துறது என் பொறுப்பு.. கவலைய விடுங்க. சார் உங்களை பத்தி நிறைய சொன்னாங்க. உங்க லவ்வருக்கு ஏத்த லவ்லியா உங்களை மாத்தி, சாரை உங்க பின்னாடியே அலைய விடல, என் பேரு மேனகா இல்லை” என, வலுக்கட்டாயமாய் அவள் கைகளில் பேப்பரை திணித்துவிட்டு,

“அதோ அந்த டேபிளை யூஸ் பண்ணிக்கோங்க, நீங்க இந்த பார்மை பில் பண்ணிட்டு இருங்க.. இதோ வந்திடறேன்” என கூறிவிட்டு அந்த பெண் சென்றுவிட்டாள்.

தெரிந்தோ தெரியாமலே அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மரத்தில் அடிக்கப்படும் ஆணியாய் உள் இறங்கிவிட்டது. ‘லவ்வருக்கேத்த லவ்லியா உங்களை மாத்தி’ என்ற மந்திரத்திலேயே அடிமையாகிப்போனாள்.

தன் கையில் இருந்த விண்ணப்ப படிவத்தை விழியகலாது பார்த்தாள் பார்த்தாள் பார்த்து கொண்டே இருந்தாள்.

பின் நிமிர்ந்து பார்க்க கண்ணாடி முழுதும், சமீப காலமாக அவள் வெறுக்கும், வெறுத்து கொண்டிருக்கும் அவளது பிம்பம் தான்.

கூடவே கிரி அவளை இழுத்து சென்று கண்ணாடி முன் நிறுத்தியதும். ‘உயரம் தவிர என்ன பொருத்தம் இருக்கு’ என கேட்டதெல்லாம் நினைவுக்கு வர, கீழ் உதட்டை அழுந்த கடித்தாள். கண்மூடி ஓர் நிமிடம் யோசித்தாள்.

யோசித்த பின் கண்களை நிதானமாய் திறந்தாள். இப்போது எதிரில் இருந்த கண்ணாடியை பார்க்கையில் ஏதோ பிரகாசமான வாழ்க்கை இவள் முன் தெரிந்தது. கை நீட்டி அவளை வா வென அழைத்தது.

பின் சிறிதும் யோசிக்கவில்லை. அந்த டேபிளுக்கு சென்று விண்ணப்பத்தை நிரப்ப துவங்கினாள்.

இவள் எழுதிக் கொண்டிருக்கையிலேயே வந்தாள் மேனகா. அவளெதிரில் இருந்த சேரில் அமர்ந்தவள் அப்போது தான் பார்மை பார்த்தாள். அதில் கமலி எனும் எழுத்துகள் இடம் பெற்றிருக்க, “மேடம் நீங்க தர்ஷினி மேடம் இல்லை, கோகுல் சார் பியான்சே இல்லையா” அதிர்ச்சியாய் கேட்டாள்.

எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தவள் ‘இல்லை’ என மறுப்பாய் தலையசைத்து, ‘ஐ ம் மிசஸ் கிரி’ என்றாள் அழகாய் புன்னகைத்து.

அந்த நேரம் தர்ஷி, கோகுலும்  இருவருமே அங்கே வந்து சேர,

“ஏய், என்னடி எழுதுற” தர்ஷி இவள் புறமாய் வர,

மேனகாவோ “மேடம் சாரி, நீங்க தான்…” என அந்த மேனகா கமலியிடம் பதில் சொல்ல முடியாமல் சங்கடமாய் நிற்க, கோகுலுமே புரியாமல் பார்த்து வைக்க.

ஆனால் கமலி மூவருக்குமே பதில் சொல்வதை போல, “நானும் இங்க ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்” என பெரிதாய் ஒரு புன்னகையை பரிசளித்தாள்.

தர்ஷிக்கோ ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “தனியா வரனுமேன்னு நினைச்சிட்டு இருந்தேன் கமலி..  இனி நிம்மதியா வருவேன்” என கமலியிடம் கூறி.. கோகுலிடமும் கூறினாள் தர்ஷி.

கூடவே, ஏதேனும் பிரச்சனையாகிப்போகுமோ என நினைத்த மேனகாவிற்கு மகிழ்ச்சி தான், ஒன்றுக்கு இரண்டாக அட்மிஷனை போட்டு விட்டாள்.

தர்ஷிக்கு கோகுல் பணத்தை கட்ட, கமலி, ஜிபே மூலம் தனக்கான பணத்தை கட்டிவிட்டாள்.

பின் “சார்.. நீங்க தர்ஷினி மேடமை, டாக்டர் ராஜ் கிட்ட அழைச்சிட்டு போகும் போது, கமலி மேடமை கூட்டிட்டு போங்க. மேனேஜரை விட்டு பேச சொல்லிடுறேன். இரண்டு பேருக்கும் சேர்ந்தாப்புல டெஸ்ட் எல்லாம் எடுத்திடலாம்” என மேனகா கோகுலிடம் கூற

“கோகுல்.. என்ன டெஸ்ட்” என்றாள் பதட்டமாக, கமலியும் கூட கோகுலை தான் பார்த்திருந்தாள்.

“ஹே.. கூல் தர்ஷினி.. சும்மா வெயிட், ஹயிட், பிளட் பிரசர், மசில் அன்ட் ஃபேட் (fat) மாஸ் இதெல்லாம் பேசிக்கா செக் பண்ணி ரிப்போர்ட்டா தருவாங்க. அதை வச்சு தான் டயட் பிளான், ஒர்க்அவுட் பிளான் இதெல்லாம் டிசைட் பண்ணுவோம். இதுக்கே ஜெர்க் ஆனா எப்படி?” என்றவன்

கமலியிடம் திரும்பி, “பயப்பட ஒன்னுமில்லை கமலி, Dr.ராஜ் கிட்ட இவளுக்காக ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு. நீயும் வந்தேன்னா சேர்ந்து பார்த்திடலாம்”   என தைரியம் கூற

மூவருமே ராஜிடம் சென்றனர்.

முதலில் டெஸ்டே வெயிட் தான். தர்ஷி அறுபதைந்து கிலோ என காட்ட, கமலிக்கோ எண்பத்து எட்டு கிலோ என காட்ட பீதியானாள் கமலி.

கடைசியாய் கல்லூரி மூன்றாம் வருடம் படிக்கையில் குடும்பத்துடன் திருப்பதி சென்ற போது, ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த வெயிட்.. ‘அறுபத்தி இரண்டு’ என நியாபகம். இப்போது ‘எண்பத்தி எட்டா?’ சற்று திகைத்து தான் போனாள்.

அதன் பின் நடந்த டெஸ்களுக்கு உடன் பட்டாளே ஒழிய கவனம் அதில் பதியவில்லை.

திருமணத்திற்கு முன்பு ‘அம்மா எனக்கு புது டிரெஸ் வாங்கி தா.. எல்லாம் சின்னதா போச்சு’ என மல்லிகாவுடன் சண்டையிட்டது தான் நியாபகம் வந்தது.

ஒரு வழியாய் எல்லாம் முடிந்து “நீங்க இரண்டு பேருமே தாரளமா ஜிம் போகலாம், உங்களுக்கான புட் சார்ட்டை ஜிம்க்கே நான் அனுப்பிடறேன்” என சொன்னார் டாக்டர் ராஜ்.

எல்லாம் முடியவே ஆறுக்கு மேலாகி போக, அடித்து பிடித்து ஆட்டோவில் வந்தனர் கமலியும், தர்ஷியும். கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டுவிட்டார் டெப்யூட்டி வார்டன்.

“என்னடி, இந்த பொம்பளை இந்த கிழி கிழிக்குறா” காதை குடைந்து கொண்டாள் தர்ஷி. ஆனால் கமலியோ ஏதும் காதில் வாங்காதவளாய் தான் இருந்தாள்.

எப்படியோ இருவரும், அவரிடம் பாவமன்னிப்பை யாசித்து, பின் உணவுண்டுவிட்டு அவரவர்களது அறைக்கு சென்றனர்.

அன்றிரவு போன் செய்த கிரியிடம், ‘கிரி நான் ஜிம்முக்கு போறேன்’ என சொன்னால் இவனது எதிர்வினை எப்படியிருக்கும் என பார்க்க ஆசை. ஆனால் ஏற்கனவே அக்கா அம்மாவினால் ஏமாற்றபட்டவனுக்கு, மேலும் தானும் எதிர்பார்ப்பை தூண்டி, தானும் அவனை ஏமாற்றிடும் நிலை வந்துவிட்டால்? தாங்கவே மாட்டான் கிரி.

தவிர ஜிம் எத்தனை தூரம் ரிசல்ட் கொடுக்கும் என தெரியவில்லையே! என நினைத்து, இப்போதைக்கு இவனிடம் சொல்ல வேண்டாம் என முடிவே செய்துவிட்டாள்.

எப்போதும் போல சில பல விசாரிப்புகளோடு, சிற்சில வாக்குவாதங்களோடு அன்றைய இரவும் கழிந்தது.

********

மறுநாளில் இருந்து,  ஜிம்மிற்கு சென்றார்கள். வழக்கம் போல இருவருக்கும் பயிற்சி கொடுப்பதற்காக, மேனகா வருவதாகவும், ஓரிரு நிமிடங்கள் காத்திருக்கும் படி ரிசப்சனில் சொல்ல.

சுற்று முற்றும் தேடியவள் “என்னடி அண்ணாவ காணோம், அவர் வர மாட்டாரா” கமலி கேட்க

“அவர் வேற பிரான்ஜ்ஜில் வேலை பார்க்கார்டி. எனக்காக இங்க வந்தா, அங்க அவரோட கஸ்டமர்ஸ்க்கு கஷ்டம்ல” என

“ஓஹோ.. அப்போ அதான் காரணமா.” என நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

“வேற என்னன்னு நீ நினைச்சே?”” தர்ஷி பல்லை கடிக்க

“அண்ணாவும் நீயும் இங்க ஒரே இடத்தில் இருந்தால் இது பார்க்- ஆ மாறிடும்ன்ற பயத்தினால தான் அண்ணா இங்க வரலன்னு நான் நினைச்சேன்” கமலி கலாய்க்க

“வாய மூடுடி” என பேச்சை நிறுத்தினாள் தர்ஷினி.

அந்நேரம் அவர்களை நெருங்கியிருந்த மேனகா “பேசி முடிச்சாச்சா, டிரையினிங் ஸ்டார்ட் பண்ணலாமா” என கேட்டபடி அங்கே வந்தாள்.

செம்ம பிட்டான அவள் உடையும் உடல்வாகும், நான் ஒரு பிட்னஸ் ப்ரீக்கர் என கூறும் அளவிற்கு இருந்தது.

டிராக் பேண்ட், டீசர்ட்டில் வர சொல்லி இருக்க, அதில் தான் வந்திருந்தனர் கமலியும் தர்ஷியும்.

அதன் பின் சிறு சிறு பயிற்சிகள் மூலம் உடல் இலகு தன்மையை பெறுவதற்கான ஒர்க்அவுட்களை சொல்லி தந்தாள்.

அவர்களுமே ஆசையாய், ஆர்வமாய் கற்க துவங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!