நாட்கள் செல்ல செல்ல, கமலியின் உடல் எடை குறைய துவங்கி இருந்தது, கூடவே பற்களும் சீரான வரிசைக்கு மாறிக்கொண்டிருந்தது. முன்பெல்லாம் கண்ணாடியை பார்த்தாலே பயந்து ஓடுபவள் இப்போதெல்லாம் கண்ணாடியை பார்ப்பதே வழக்கமாக்கி கொண்டாள். அவள் அழகை அவளே ரசிப்பதில் அப்படி ஒரு ஆனந்தம். இதில் இப்படி ஒரு போதை இருக்கிறதா? என அவ்வப்போது நினைத்து கொள்வாள்.
தடையில்லா ஒர்க்அவுட் பயணங்களும், கண்டதையெல்லாம் உண்ணாத கட்டுப்படான உணவு முறையும் அவர்களின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தையே உண்டாக்கியது. கமலி இருபது கிலோ வரை குறைத்திருக்க, தர்ஷியோ பத்து கிலோவரை எடையை குறைத்திருந்தாள்.
ஜிம்மில் சுற்றி இருக்கும் கண்ணாடிகளில் தன் உருவத்தை பார்த்தபடி “பரவாயில்லை கமலி, வெயிட் கரெக்டா மெயின்டெய்ன் பண்ணா நல்லா தான்டி இருக்கு. அழகாயிட்டேன்ல.. என்னையவே நான் விரும்ப ஆரம்பிச்சுட்டேன் கமலி” என கமலி ஆரம்பத்திலேயே உணர்ந்ததை இவள் தாமதமாக தான் உணர்ந்தாள். “நீ மட்டும் இல்லைன்னா, இவ்வளவு வெயிட்லாஸ் ஆகி இருப்பனான்னே தெரில கமலி” என்றாள் தர்ஷி.
“ஹலோ மேடம் அது நான் சொல்ல வேண்டிய டயலாக்” என்றாள் கமலி.
Advertisement
“சும்மா சொல்லாத கமலி, நான் இல்லைன்னா கூட நீ ரெகுலரா ஜிம் போய் வெறியோட வெயிட்லாஸ் பண்ணிருப்ப. ஆனால் நீ என்னோட இல்லைன்னா நான் கோகுலை வேணாம்னு சொல்லிட்டு, வேற அலையன்ஸ் பார்க்க சொல்லிருப்பேன்” என்றாள் பிராக்டிக்கலாய்.
“அப்படிலாம் இல்லடி..” என கமலி மறுக்க, “அப்படி தான்டி” என தர்ஷியும் சண்டை போட்டு கொண்டிருந்தனர், “என்ன அங்க சத்தம்” என மேனகா கத்துவரை. பதறி போய் ஒர்க்கவுட்டுகளை தொடர்ந்தனர் இருவரும்.
இப்படி ஜிம்மில் வைத்து பேச்சு ஒரு பக்கமும் ஒர்க்அவுட் ஒரு பக்கமும் என ஓடிக்கொண்டிருந்தது.
Advertisement
கோகுலுக்குமே சந்தோஷம் தான்.. தர்ஷி சொன்னது போல சில பல மாதங்களிலேயே எடையை குறைத்துவிட்டாள் என. அந்த சந்தோஷத்தில் இன்னும் அதிகமாய் வெளியே ஊர் சுற்ற துவங்கிவிட்டனர்.
Advertisement
ஆனால் கமலியோ உடல் எடையை இருபது கிலோ வரை தான் குறைத்திருந்தாள். என்பத்தெட்டில் இருந்து அறுபத்தெட்டிற்கு வந்திருந்தாள். இன்னும் பதினைந்து கிலோ வரை குறைத்தால் ‘சக்சஸ்’ என துள்ளி குதித்து விடுவாள். ஆனால் அது முடியுமா என பயமும் எழுந்தது.
அதற்கான ஐடியாவை மேனகாவிடமே கேட்டாள். அவளோ டாக்டர் ராஜிடமே அனுப்பி வைத்தாள். அவரின் ஆலோசனைப்படி ஆரோக்கியமான முறையில் இன்னும் எடை குறைப்பதற்காக “ஆட்டோ பேகி” எனும் ட்ரிட்மெண்டை இவர் எடுத்து கூற, உடனே சரியென்றுவிட்டாள்.
16:8, முதல் பதினாறு மணிநேரங்களுக்கு ஒரு வகை உணவு என்றால், அடுத்த எட்டு மணி நேரத்திற்கு ஒரு வகை உணவு, என ஒரு நாளைக்கு இரு வேளை உணவு மட்டுமே ஆட்டோ பேகி மூலம் எடுத்து கொண்டாள்.
Advertisement
அதற்கான அட்டவனையே போட்டு அதை கமலியின் கையில் கொடுத்துவிட்டார் டாக்டர் ராஜ். அதை அப்படியே தினம் தோறும் பின்பற்றியதோடு, மீதி நேரங்களில் எல்லாம் தண்ணீர், இல்லையென்றால் ஓஆரெஸ் ஜீஸூம் எடுத்து கொண்டாள்.
நாட்கள் மீண்டும் வேகமெடுத்தது, நாளாக நாளாக, இதில் அவளுக்கு கிடைத்த நன்மை.. உடல் எடை படிபடியாய் குறைய துவங்கியது. டெட் செல்கள், டார்க் ஸ்கின், டார்க் சர்க்கிள் என அனைத்தும் அவளில் இருந்து விலகி முகம் பொலிவுற துவங்கியது.
இது அவளே எதிர்பார்க்காத டிவிஸ்ட் தான். கருப்பில் இருந்தவள் கோதுமை நிறத்திற்கு மாறினாள்.
“என்னடி ஒருவேளை தோல் நோய் எதுவுமா?” என பீதியை கிளப்பினாள் தர்ஷி. கமலியும் ‘ஒருவேளை இருக்குமோ?’ என பதறி போய் டாக்டர் ராஜிடமே சென்றாள்.
அவரோ பலமாய் சிரித்துவிட்டு “ஆட்டோ பாகி ட்ரிட்மெண்டில் இரண்டு வேளை உணவு மட்டும் சாப்பிடறதால, மற்ற நேரம் நமக்கு தேவைபடுற சக்தியை நம்ப உடம்பில் இருக்கும் எக்ஸஸ் எனர்ஜியை அழிச்சு எடுத்துக்கும், அதனால டெட் செல், ஃபேட் கண்டன்ட்னு எல்லாத்தையும் நம்ப உடம்பே சாப்பிடுடும். சோ.. செல்கள் எல்லாமே புதுபிக்கபடுறதால ஸ்கின் கலர் கூடுது” என கிளாஸ் எடுக்க, மனித உடலை நினைத்து அதிசயித்து போனாள். கூடவே நின்றிருந்த தர்ஷியோ..
“எனக்கு இப்படி ஒரு கிளாஸை, எங்க சயின்ஸ் மிஸ் கூட எடுத்ததில்லையே! கமலி உனக்கு எதுவும் எடுத்தாங்க” என சத்தமாகவே கேட்டு வைக்க, சத்தமிட்டு சிரித்து விட்டார் ராஜ்.
கதலி இவளை முறைத்து வைக்க, “ஆத்தி முறைக்கிறா” என நைசாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள். அதன் பின் “இப்படியாடி பயம் காட்டி வப்ப?” என வேண்டுமட்டும் தர்ஷிக்கு ஊமை குத்தாய் குத்தி ஹாஸ்டலுக்கு இழுத்து வந்ததெல்லாம் வேறு கதை.
இப்படி உடலளவில் எதிர்பார்க்காத ஆச்சர்யங்களும், அதிசயங்களும் நிறைய நடக்க துவங்கியது கமலியின் வாழ்வில். என்னடா இது நமக்கு நினைச்சதெல்லாம் நடக்குது. அப்படி நடக்க வாயப்பில்லையே.. ஒரு வேளை கனவோ? என வியந்த நாட்களும் உண்டு. அப்படி ஒரு மாற்றம் அவளிடம். இதை கவனித்த தர்ஷி கூட “என் மாம்ஸ்க்கு போட்டியா வந்திடுவ போலயே!” என காட்டமாய் பார்த்து செல்வாள். கல்லூரியில் வேலை பார்ப்பவர்கள் கூட இவளை பார்க்கையில், “கமலி எங்களுக்கும் டிப்ஸ் கொடேன்” என கேட்கும் படி இருந்தது.
இடையிடையே தாய் வீட்டிற்கும் சென்று வந்தாள். அவள் உடல் மற்றும் முக மாற்றத்தில் வீட்டினருக்குமே வெகு திருப்தி தான். “ஆத்தி எம் பொண்ணு இம்புட்டு அழகா” என நெட்டி முறித்த தாயின் முகத்திலேயே சந்தோஷம் தாண்டவ மாடிடும்.
இத்தனைக்கும் உறுதுணையாய் உடனிருந்த தந்தையோ, “இப்படியே நீ சந்தோஷமா இருக்கனும்டா” என ஒரே வார்த்தையில் மொத்த சந்தோஷத்தையும் கூறி விடுவார்.
“கிரி எதுவும் சொல்லி, அதுனால நீ எதுவும் வெயிட்லாஸ், டென்டல் ட்ரீட்மெண்டுனு இறங்கிட்டியா” கிடுக்கி பிடி போட்ட கர்ணனை மட்டும் சமாளிக்க தெரியாமல் அடிக்கடி துவண்டு போய்விடுவாள் கமலி.
ஆனாலும் முகத்தை அதன் உணர்வுகளை மறைத்தவளாய் “நீ மட்டும் அண்ணிக்கு மேட்சா இருக்க தானே.. நான் கிரிக்கு மேட்சா இருக்குறதில் என்ன தப்பு” என அவனை மடக்கிடுவாள்.
“இருந்துக்கோ.. ஆனால் கிரிக்கு சொல்லாமலேயே ஏன் இவ்வளவு மாற்றம்?” அப்போதும் இவன் விடாமல் கேட்க
“கிரிக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கம்னுனா” அவளே அறியாமல் குழைந்து வந்த இவள் குரலில், “சரி தான்” ஒரு மார்க்கமாய் தலையாட்டிக்கொண்டவன் தான், அதன் பின் இதை பற்றி கமலியிடம் கேட்டவே மாட்டான்.
இதில் அதிகமாய் பாதிக்கப்பட்டது பிரபா தான். சதா கமலியை பற்றி பேசியே நேரம் கழித்தவளின் வாய்க்கு அவல் கிடைக்காமல் தள்ளாடிக்கொண்டிருந்தாள். “அண்ணி அதுக்குள்ள ஐஞ்சு மாசம் முடிச்சிட்டா.. வயிறு நல்லா தெரிதுண்ணி.. நான் தொட்டு பார்க்கட்டா” என ஆசையாய் அருகில், அழகின் சொரூபமாய் அமரும் கமலியை தவிர்க்க முடியாமலும், அவளின் அழகு முகத்தை ஏற்று கொள்ள முடியாமலும் நொந்து போனாள்.
******
நாட்களும் மாதங்களும் கடந்து கொண்டிருந்த இந்த நேரத்தில், ஏற்கனவே அண்ணனும் தம்பியும் முடிவு செய்தது போல ‘டிபார்மெண்ட் ஸ்டோர் ஆரம்பிப்பதற்கான பிள்ளையார் சுழியை மோகனின் காதில் போட்டுவிட்டனர்.
கிரி, ராம் இருவரையும் பிரித்து பார்க்காதவர் மோகன், இப்போது இருவரும் ஊருக்கே திரும்பி வர போகிறார்கள். வந்த பிறகு ஒன்று போல் தொழில் தொடங்க போகின்றார்கள் என்றதும் மனிதர் பத்து வயது குறைந்தார்ப்போல் சுறுசுறுப்பாகிப்போனார்.
சில நாட்களிலேயே இடம் பார்ப்பது, விலை விசாரிப்பது, வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? இல்லாத பட்சத்தில் அந்த இடம் மக்கள் வந்து போக சரியாக இருக்குமா? என விசாரணையில் இறங்கிவிட்டார்.
இப்படி விசாரித்ததில் எல்லா எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்த ஒரு இடத்தை தேடி பிடித்துவிட்டார் மோகன். அதன் பின் கிரி, ராம் என இருவரிடமும் கலந்தாலோசித்து இடத்தையும் முடித்துவிட்டார்.
என்ஜினியருடன் பேசி, இதோ ப்ளூ பிரின்ட் வரை முடித்து அதை வாட்சப்பில் இருவருக்குமே அனுப்பிவிட்டார் மோகன்.
“டேய்.. சித்தப்பா ப்ளூபிரிண்ட் அனுப்பி இருக்காரு.. பாரு” என ராமின் முன் போனை காட்டினான் கிரி.
“ம்.. அப்பா எனக்கும் அனுப்புனார்டா, பார்த்தேன். எனக்கு ஓகேடா.. உனக்கு” என்றான் ராம். “சித்தப்பா செஞ்சு எது ராங்காயிருக்கு. ஒரு பர்சர்சன்ட் கூட குறை சொல்ல முடியாதுண்ணே” மலர்ந்து முகத்தோடு கிரி கூற
“ம்.. ஆரம்பிக்க சொல்லுண்ணா.. இன்னும் மூனு மாசத்தில் இங்கிருந்து கிளம்பிடுவோம்.. அதுக்குள்ள கன்ஸ்ட்ரக்ஷன் முடிஞ்சிட்டுன்னா, ஸ்டாக் எடுக்குற வேலையை நாம போய் ஆரம்பிச்சரலாம்” கிரியும் மகிழ்வாய் அனுமதி கொடுத்திட
மோகன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆரம்பிப்பதற்கான வேலையை துவங்கி வைத்துவிட்டார்.