Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 19 2

அதன் பிறகு அதே எடையை பாராமரிப்பதற்கான டிப்ஸையும் கொடுத்து, ரெகுலர் ஒர்க்அவுட்டுகளையும் சொல்லி கொடுத்து, இனி கடைபிடிக்க வேண்டிய உணவு முறையை சாட் போட்டு கொடுத்துவிட்டு, அன்றோடு ஜிம்மில் இருந்து விடுதலை கொடுத்து அனுப்பி விட்டாள் மேனகா.

ஆயிரம் மேனகாவிற்கு, அதே அளவு நன்றிகளை டாக்டர் ராஜிற்கும் கூறிவிட்டே ஹாஸ்டலுக்கு திரும்பிவிட்டாள். “அப்பாடா.. இனி நம்ப இரண்டு பேரும் ஹாஸ்டலுக்குள்ளயே கும்மியிடிக்கலாம்” என தர்ஷி தான் ஏக குஷியானாள். ஆயிற்று எதிர்பார்த்த உடல்எடையை இருவருமே வரமாய் வாங்கி விட்டனர்.

அதற்கு மேல் காத்திருக்க தேவையில்லை என கோகுலின் வீட்டார் சிறது கால இடைவெளியிலே திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டனர்.

ஒரு பக்கம் சந்தோஷம் தான், ஆனால் மறுபக்கம் கவலை தான்.



Advertisement

டைனிங் ஹாலில் இரவு நேர உணவருந்தி கொண்டிருந்தவள் “உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் கமலி” என அவள் தோள் சாய்ந்தாள் தர்ஷி.

அவள் முகத்தை சற்றே சரிந்து பார்த்தவள் “அப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இங்கேயே இருந்திடேன்” என்றாள் உணவுண்டபடியே.

தோளில் சாய்ந்திருந்தவள் முகம் சுருங்கி “ம்ஹூம்.. நீயும் வேணும் கோகுலும் வேணும்” என்றிட

Advertisement

“எதே, நான் வேணுமா? கேளேன் உன் மாம்ஸ் கிட்ட” இவள் நக்கலாய் பார்க்க

Advertisement

தர்ஷியின் முகம் போன போக்கை பார்த்து “முடியாதுல்ல.. ஏண்டி கிடந்து அல்லாடுற.. நீ ஹாஸ்டலை விட்டு ஒரு நாள் கிளம்புனா, நான் ஒரு நாள் கிளம்பிட போறேன். வாழ் நாள் முழுக்க இங்கேவா இருக்க போறோம். விடுடி அடிக்கடி எங்கையாவது மீட் பண்ணிக்கலாம்” என கமலி தான் அவளை சமாதானம் செய்தாள்.

திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் தர்ஷி வேலையை ரிசைன் செய்தாள்.  அதன் பின் தர்ஷி, கமலியை கட்டிகொண்டு, அழுது வடிந்து ஹாஸ்டலை காலி செய்ததெல்லாம் வேறு கதை.

தர்ஷி இல்லாமல் கமலிக்கு தான் கஷ்டமாக இருந்தது. தனியாகவே வேலைக்கு சென்று, அறைக்குள் தனியாகவே ஒர்கவுட்டுகளை செய்து, தனியாகவே உணவுண்டு என ‘என் இனிய தனிமையே’ என பாட்டு படிக்காத குறையாய் வலம் வந்தாள்.

Advertisement

இதற்கிடையில் தர்ஷியின் திருமணமும் முடிந்திருந்தது. மணப்பெண் தோழியாக இருந்து ஒரு நாள் முழுதும் அவளுடனே நேரத்தை கழித்தாள்.

அதன் பின் தர்ஷி இல்லாமல் வேலை, ஹாஸ்டல் என ஓட துவங்கியது கமலிக்கு. அரக்க பறக்க ஜிம் ஓடி, வார்டனிடம் திட்டு வாங்கி, அதோடு வேலைக்கும் ஓடி, விடுமுறை நாட்களில் தர்ஷியோடு சேர்ந்து கொட்டம் அடித்து என கழிந்த தர்ஷியோடு கழித்த அழகான நாட்களை மிஸ் செய்தாள் கமலி.

இப்படியிருக்கையில் மல்லிகா போன் செய்தார் கமலிக்கு. “சொல்லுமா..” என இவள் ஆரம்பிக்க,

“வேலையை எப்போ ரிசைன் பண்ண போற?” என எடுத்த எடுப்பிலேயே கேட்க

“ஏன்மா.. இப்போ கொஞ்ச மாசமா தான் நான் நல்லா இருக்கேன். அது உனக்கு பிடிக்கலையா?” என இவளும் அதிர்ந்து போய் கேட்க

“அடுத்த மாசம் இருபதாம் தேதி, உன் அண்ணிக்கு வளைகாப்புடி, ஒரு வாரத்துக்கு முன்னாடியே வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்து சேரு” என்றார் மல்லிகா.

“ஏன்மா, என்னாச்சும்மா உனக்கு? வளைகாப்பு போடுறதுக்கெல்லாம் வேலையை ரிசைன் பண்ண சொல்ற?” என்றாள் கமலி.

“அது மட்டும் காரணமில்லை, கிரியும் வராரே! கிரி வர்ற வரை தான் வேலைக்கு போவேன், அவர் வந்துட்டா நான் போக மாட்டேன்னு வியாக்கானம் பேசுன?” என்றார் நக்கலாய்.

மற்ற எல்லாத்தையும் விடுத்து “கிரி வர்றாரா? எப்போ?” என்றாள் அதிர்ச்சியாய்.

“ஏண்டி, உனக்கிட்ட கிரி சொல்லையா?” என இவர் சந்தேகமாக கேட்க

“ம்.. அது அது..” என இவள் இழுக்க,

“ஏதாவது சொல்லி மழுப்பாதடி.. மாப்பிள்ளைகிட்ட சண்டை கிண்ட எதுவும் போட்டியா” என திட்ட துவங்கிட

“அதெல்லாம் இல்லைம்மா..” இவள் அவசரமாய் மறுக்க

“ம், நம்பமுடியலையே” என நம்பாத வார்த்தையை இவர் விட

“ஆமாம்மா.. சின்ன சண்டை தான்.. அதை நாங்க சரி பண்ணிப்போம். இவர் எப்போ வாராரு அதை சொல்லு முதல்ல” என கமலி எகிறினாள்.

“நல்லா சமாளிக்க கத்துகிட்டடி” என்றவர் “அடுத்த மாசம் கடைசி வராதா சொன்னாரு, ஆனால் தேதி சொல்லலை. இப்போ சொன்னா தான் நீ்தான் வேலையை ரிசைன் பண்ணுவ.. இல்லைன்னா… செம்ஸ்டர் ஊடால ரிசைன் பண்ண விட மாட்டாங்க.. ஒன் மன்த் நோட்டீஸ் வேற குடுக்கனும்னு காரணம் சொல்லுவ.. அதான் இப்போவே உன் காதில் போட்டு வச்சிட்டேன்” என நீளமாய் பேசியவர்.

“வேலையை ரிசைன் பண்ணிடுவ தானே” என உறுதியாய் கேட்க

“மறுபடி அவர் பாரின் போய்ட்டா.. நான் எங்க போக.. மறுபடியும் ஹாஸ்டல் வந்து தானே ஆகனும்” இவள் முடிக்கும் முன்னே..

“அதுக்குள்ள, குழந்தை வந்துட்டா, என்கிட் இருந்து தப்பிச்சு, நீ ஹாஸ்டல் போக முடியாதே” மல்லிகா கேட்க, அதிர்ச்சியானாள் கமலி.

கிரி கத்தாரை வீட்டு இனி இந்தியாவில் தான் தங்க போகிறான் என மோகன் அவர் குடும்பம் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாதே!

‘நான் இனி இங்கே தான்.. இனி நோ பாரின்’ என கிரி யாரிடமும் சொல்லவில்லையே, அதனாலேயே இருவருக்கும் தெரியவில்லை.

“நீ ஹாஸ்டல் போய் கிட்டதட்ட ஒரு வருஷம் கிட்ட ஆக போகுது கமலி, உங்கப்பாக்காக, உனக்காகனு தான் இத்தனை மாசம் வாயை மூடிட்டு இருந்தேன் கமலி. இனி இருக்க மாட்டேன்” என்றார் உறுதியாய்.

அதைவிட உறுதியாய் இருந்தாளோ கமலி “ம்மா.. ப்ளீஸ் மா.. இப்படி வேலை பார்க்குறது பிடிச்சிருக்கும்மா. நம்ப வீட்டில் ஒரு அண்ணி, அந்த வீட்டில் ஒரு அண்ணினு எங்கேயும் என்னால் நிம்மதியா இருக்க முடியாதும்மா. கிரி இங்க இருக்குற அத்தனை நாளும் லீவ் வேணா எடுத்துட்டு வாரனே” என முழுதாய் பேசி முடித்தாள்.

பெரிதாய் மூச்சுவிட்டவர் “ராஜி விசயத்தில், கிரி இந்த முறை தெளிவா முடிவு எதாவது எடுப்பாரு கமலி. இல்லைன்னா. பிரபா விசயத்தில் நான் எடுப்பேன்” இவரது உறுதி கண்டு

“ம்மா..” என இவள் அதிர

“இரண்டுல கண்டிப்பா ஒன்னு நடக்கும். அப்போ உனக்கு பிரச்சனை இல்லை தானே?” என்ற மல்லியின் உறுதியான பேச்சுகளில் அயர்ந்து போனாள் கமலி.

அதற்கு மேலும் கமலி தன் தரப்பு நியாயங்களை பேச, அதையெல்லாம் தன் பேச்சாலேயே நோ பால் ஆக்கி கொண்டிருந்தார் மல்லிகா. இறுதியில் “சரி ம்மா.. ரிசைன் பண்ணிட்டு வந்திடுறேன் போதுமா” என கமலி சொல்லிய பின்பு தான் போனையே வைத்தார்.

ஒர்க்அவுட்டில் களைப்படையாத உடல் , அம்மாவின் பேச்சில் ஒட்டு மொத்தமாய் களைப்படைந்தது. ஆனால் இத்தனை களைப்பிற்கும் பின்பும், அசதிக்கும் பின்பும் “கிரி வருகிறான்” என்ற செய்தி அவள் நாடி நரம்பெல்லாம் புகுந்து விளையாடி அவளை ஒரு வழி செய்துவிட்டது.

தன் அறையின் சுவற்றில் மாட்டபட்ட மூன்றடி கண்ணாடியின் முன்பு போய் நின்றாள். அவளது தலை முதல் இடைவரை பிரதிபலித்தது அக்கண்ணாடி.

போட்டிருந்த டீசர்ட்டை உயர்த்தினாள். கிச்சென இருந்தது. உடல் வளைவு நெளிவுகளை பார்க்க, முழுநிறைவுடன் இதழ்கள் அழகாய் விரிய அதற்குள் முத்து பற்கள் அழகாய் வரிசைகட்டி நின்றது.

இப்படி பட்ட ஒரு தோற்றத்தில் பார்க்கையில் என்ன செய்வான்?  எப்படி ரியாக்ட் செய்வான்? அதிர்ச்சியடைவானா? என்னை போல சிரிப்பானா? இல்லை அகமகிழ்ந்து போவானா? இப்படி போனது அவளது எண்ணம்.

கூடவே ‘இறுதியாய் போனில் அவனிடம் பேசிய பேச்சுகள் யாவும் வரிசை கட்டி வந்து நிற்க’ டீசர்ட்டை இழுத்துவிட்டு கொண்டு வந்து கட்டிலில் தொப் என அமர்ந்தாள்.

கிரியுடன் பேச்சை நிறுத்தி, கிட்டதட்ட ஒரு வருடம் நெருங்க போகிறது. அவனும் பேசவில்லை, இவளும் பேசவில்லை.

‘உயிரோட இருக்கனா, செத்தனானு கூட விசாரிக்கலை.. இவன் என்னை பார்த்தா என்ன? பார்க்கலைன்னா என்ன?’ வேண்டுமென்றே கோபம் முன்னுக்கு வந்து நின்றது.

கிரிக்கு குறையாத கோபமும், ரோசமும் இவளிடமும் இருந்தது. யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். பார்ப்போம் யார் விட்டு கொடுக்கிறார்கள், யாரை விட்டு கொடுக்கிறார்கள் என!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!