இத்தனை மாதாமாக இல்லாத அலைபுறுதல், எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என அட்டை பூச்சியாய் அவனுள் ஒட்டிகொண்டது.
நெஞ்செல்லாம் படபடவென அடித்து கொண்டது. ஒரு வேளை அவளுக்கு ஏதும்…? இதற்கு மேல் யோசிக்க கூட பயமாய் இருந்தது கிரிக்கு.
நெஞ்சை அழுத்தமாய் வருடிக்கொண்டான்.
பிளைட் ஏறிவிட்டால் போன் உபயோகிப்பது முடியாத ஒன்று, என யோசனையை விடுத்து, தயக்கத்தை விடுத்து செல்வத்திற்கு போன் அடித்தான்.
Advertisement
“மாப்பிள்ளை சொல்லுங்க..” செல்வத்தின் ஆரவார பேச்சிலேயே, கமலிக்கு ஒன்றுமில்லை என தெரிந்து போனது.
தன்னை அறியாது பெரு மூச்சு ஒன்று கிளம்பியது. அதன் பின்பே படபடவென அடித்த இதயம், சீராக துடிக்க துவங்கியது.
சில பல நல விசாரிப்புகளுக்கு பிறகு, “கமலிக்கு போனே போகலை.. என்னாச்சு மாமா?” என இவன் வெகு தயக்கத்துடனே கேட்க
Advertisement
“அதுவா.. காலேஜ்ல கேன்டீன் போனவ, போனை எங்கையோ மறந்து வச்சிட்டு, போல, அப்புறம் போன் தொலைஞ்சு போச்சுன்னு, நேத்து நைட்டு தான் சொன்னா மாப்பிள்ளை. வார்டனோட போனில் இருந்து கூப்பிட்டு பேசுனா!” என கூறவும் தான் கொஞ்சம் நிம்மதியானான்.
Advertisement
இவன் அமைதியை வைத்தே “வார்டன் நம்பர் வேணா தரவா மாப்பிள்ளை பேசுறீங்களா” என இவரே ஊகித்து கேட்டிட, “வேணாம் மாமா, நாளைக்கு வந்திடுவேன், நேரிலயே பார்த்துகிறேன்” என இவன் கூறிட
‘இரண்டு பேரும் பேசி வச்சிட்டு வராங்க போல’ என மனதினுள் நினைத்த செல்வம் “மாச கடைசியில தான் வருவீங்கனு சொன்னீங்க.. சீக்கிரமா கிளம்பியாச்சா.. ரொம்ப நல்லது மாப்பிள்ளை” என இவரும் கூற, வார்த்தைகளிலேயே அத்தனை சந்தோஷம் தெரிந்தது.
லேசாய் புன்னகைத்து கொண்டான் கிரி.. ஒரு வேளை தானும் அப்பன் எனும் ஸ்தானத்திற்கு வந்துவிட்டால் இப்படி தான் இருப்பேனோ? மனம் போன போக்கில் யோசித்திட, பக்கென இருந்தது கிரிக்கு. கூடவே இவனுக்கும் புன்னகை எழுந்திட “அவளுக்கு லீவு எப்போ மாமா, எப்போ ஹாஸ்டலில் இருந்து வருவா?” என கேட்க
Advertisement
“இனி அவ இங்க தான் மாப்பிள்ளை.. வேலையை ரிசைன் பண்ணிட்டா.. நாளைக்கு வந்திடுவா” எனவும்
என்ன இவளும், வேலையை விட்டுட்டாளா! ஏதேச்சியா நடந்தா இப்படியெல்லாம் ஒன்னு போல நடக்குமா? அதிவும் ஒரே நேரத்தில், ஒரே நாளில்? என இவனுமே வியந்து நான் போனான்.
அதன் பின் இவருமே, எந்த பிளைட், டைமிங் என்ன, எப்போது மதுரை ஏர்ப்போர்ட் வருவார்கள் என விசாரித்து கொண்டார். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறியவன் “சரி மாமா.. நாளைக்கு நேரிலேயே வந்துடுறேன்” என இவனும் “நேரில் வாங்க மாப்பிள்ளை பேசலாம்” என இவரும் வைத்துவிட்டார் போனை.
அதன் பிறகு போனை அனைத்து சீட்டில் போட்ட வேகத்திலேயே, அருகில் அமர்ந்திருந்த ராம் “என்னடா கமலி போன் எடுக்கலைன்னு பயந்திட்டியா?” என வினவ
முதல் வளைகாப்பிற்கு பிரபாவின் தாய் வீட்டில் வளைகாப்பு முதல் பிள்ளை பேரு வரை எல்லாம் செய்திருக்க, இரண்டாவது வளைகாப்பு கர்ணா வீட்டில் செய்வதாக திட்டமிட்டிருந்தனர்.
வீடு மிக பெரிதாக இல்லையென, வீட்டுலிருந்து சிறிது தூரத்திலேயே சிறிதாய் மண்டபம் ஒன்றை பிடித்துவிட்டனர்.
சொந்த பந்தங்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களை எல்லாம் வளைகாப்பிற்கு அழைத்து விட்டாயிற்று.
இன்னும் ஒரு வாரத்தில் வளைகாப்பு என்பதால் சாப்பாட்டிற்கு ஆர்டர்கொடுக்க சென்றிருந்தார் செல்வம்.
பேரனுக்கு உணவூட்டிக்கொண்டே இவர்களை பார்ப்பதும், பின் கடிகாரத்தை பார்ப்பதும், பின்பு வாசலை பார்ப்பதுமாய் இருந்தார் மல்லிகா
சாப்பாடு ஊட்டி முடித்த மல்லிகா அவனை கர்ணாவின் அருகே சோபாவில் உக்கார்வைத்துவிட்டு, பெரு மூச்சு விட்டபடி ‘இதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியாது’ என, “டேய், கர்ணா, கமலியை காலேஜில் இருந்து கூட்டிட்டு வர்றியா, நீ வருவன்னு அவ வெயிட் பண்ணிட்டு இருப்பாடா” என கேட்டு வைக்க.
மனைவியின் கால்களை விடுத்து, சாவகாசமாய் நிமிர்ந்து மல்லியின் முகம் நோக்கியவன், “ஏன்மா.. எப்பவும் லீவுக்கு அவ பஸ்ஸில் வந்திடுவா தானே.. இப்போ என்ன புதுசா என்னை போக சொல்லுற?” சலிப்பாய் கேட்டுவிட்டு, மீண்டும் மனைவியின் விரல்களில் சொடுக்கெடுத்தான்.
எரிச்சலானது அவருக்கு, “வேலையை ரிசைன் பண்ண சொல்லிட்டேன் கர்ணா, ஹாஸ்டலையும் வெக்கேட் பண்ண சொல்லிட்டேன். நிறைய லக்கேஜ் இருக்கு. பஸ்ஸில் எல்லாத்தையும் எடுத்துட்டு வர முடியதுடா?” என
“என்னது கமலி வேலையை விட போறாளா” கர்ணா ஆச்சர்யமாய் கேட்க, பிரபாவோ மனதினுள் ‘ஐய்யய்யோ இங்கேயா இருக்க போறா?’ என மனதினுள்ளே நினைத்து கொண்டாள். கர்ணா சாதாரணமாய் கேட்டாலும், பிரபாவின் முகத்தையும், அவள் காட்டிய உணர்வுகளையும் சரியாய் படித்துவிட்டார் மல்லிகா.
“ஏன்டா அவளும், புருஷன், புள்ளைன்னு வாழ வேண்டாமா? ஹாஸ்டலிலேயே இருக்கட்டும்னு விட்டுட முடியுமா?” மல்லி கேட்ட அந்த ஒரு கேள்வியில் அத்தனை ஆதங்கம் தெரிந்தது.
“அய்யோ ம்மா.. நான் சும்மா தான் கேட்டேன். இப்போ என்ன அவளை கூட்டிட்டு வரணுமா.. போயிட்டு வரேன்மா” என மனைவியின் கால்களை சோபாவில் இறக்கி வைத்துவிட்டு இவன் எழ, “மாமாவை போக சொல்லுங்கத்தை.. எங்க வீட்டிலிருந்து எல்லாரும் கிளம்பிட்டாங்க, அவங்க வரும் போது இவர் இல்லைன்னா நல்லாருக்காதுத்தை” பிரபாவே நேரடியாக மல்லியிடம் கூறிவிட, மல்லிகாவோ அசூசையாய் முகத்தை வைக்க, கர்ணாவோ இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டான்.
மல்லிகா அதற்கு மேல் எதுவும் பேசாமல் டைனிங் டேபிளில் இருந்த போனை எடுத்து, கணவனுக்கு அழைத்து விட்டார்.
“சொல்லு மல்லி” என செல்வம் கூற
“வீட்டுக்கு வர லேட்டாகுமாங்க” என கேட்க..
“ஒரு பத்தே நிமிஷம்.. இதோ வந்துடுவேன், என்ன? எதுவும் வாங்கிட்டு வரனுமா? என கேட்க
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. வாங்க” என கூறிவிட்டு வைத்துவிட்டார் மல்லிகா.
இங்கு அதற்குள் கர்ணா ‘போயிட்டு வரானே’ என மனைவியிடம் பார்வையாலேயே அனுமதி வாங்கி நிற்க, ‘போக கூடாது’ என அனுமதியை மறுத்து நின்றாள் பிரபா. கர்ணாவிற்கு துணிந்து ஒரு முடிவை எடுக்க முடியாமல் நின்றிருந்தான்.
‘காலை பிடிச்சு விடுங்க’ என இவள் கண்களாலேயே கூற, கடுகடுப்போடு அருகில் அமர்ந்து விட்ட வேலையை தொடர்ந்தான்.
சரியாய் ஒரு பத்து நிமிடங்களுக்கு பின் வந்தார் செல்வம். ‘அப்பா வந்துட்டார்’ என கர்ணாவும் ‘அப்பாடா மாமா வந்துட்டார்’ என பிரபாவும், பெரு மூச்சு விட,
‘இதென்ன இவர் இவ்வளவு களைப்பா வந்திருக்காரு’ மல்லிகா அவர் தோற்றத்தை வைத்தே கண்டு கொள்ள, அதற்கு தகுந்தார்ப்போல, அயர்ச்சியாய் வந்து அமர்ந்தார் சோபாவில்.
தண்ணீர் மோந்து வந்து கொடுத்தார் மல்லிகா. “என்னாச்சு இவ்வளவு டயர்டா இருக்கீங்க?” என மல்லி கேட்க..
“வெயில் ரொம்ப மோசம் மல்லி.. அலச்சலும் சேரலை போல” என கூறியவர், அவர் முகத்தை கண்டு கொண்டு “நீ ஏன் டென்சனா இருக்க?” என பதிலுக்கு இவர் மல்லிகாவிடம் கேட்டார்.
“அது.. அது..” என இழுத்தவர் கமலியை கூப்பிடனுங்க.. நேரமாச்சு. நீங்க வருவீங்கன்னு காத்திட்டு இருப்பா” என மெதுவாய் கூற
கடிகாரத்தை பார்த்தவர் “ஐய்யோ அப்போவே நியாபக படுத்த வேண்டியது தானே மல்லி..” என்றவர், “கர்ணா நீ வீட்டில தானே இருந்த போயிருக்கலாமேடா, அம்மா எதுவும் சொல்லலையா” என அழுத்தமாய் கேட்க,
“இதோ நான் போயிட்டு வாரேன்பா..” என இவள் பிரபாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு இவன் கிளம்ப எத்தனிக்க
“மாமா.. அது எங்க வீட்டில் இருந்து” என பிரபா அதே ரெக்கார்டிங் வாய்ஸை எடுக்க
“அவன் போக மாட்டான்.. இப்போ நீங்க போக முடியுமா? முடியாதா?” என மல்லி கேட்டதில்,
கர்ணா விழி பிதுங்கி போக, செல்வமோ, அயர்ச்சியுடன் கண் மூடி திறந்தவர், மகள் தனக்காக காத்திருப்பாள் என அறிந்து, “கார் சாவி எடுத்துட்டு வா, மல்லி” என கூற, இவரும் எடுத்து வந்து, செல்வத்தின் கையில் கொடுத்துவிட்டார்.
சாவியை கையில் வாங்கவும், அவரின் போன் ரிங்காகவும் சரியாய் இருக்க, “கமலி” அழைக்கிறாள் என வேகமாய் எடுக்க, அழைத்ததோ கிரி.
“மாப்பிள்ளை…” என இவர் அழைத்து முடிக்கும் முன், “மதுரை ஏர்போர்ட் வந்துட்டேன் மாமா.. வரும் போது கமலியை அப்படியே எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டவா?” என இவன் கேட்க
“அய்யோ மாப்பிள்ளை, அவள் இன்னும் வீட்டுக்கே வரலையே.. இப்போ தான் கமலியை கூப்பிட போறேன், நீங்க வாங்க, நான் அவளை அழைச்சிட்டு வந்திடுறேன்” வேகமாய் கூறிட
சிறிது யோசித்தவன் “கமலி வேலை பார்க்குற காலேஜ் நான் வர்ற வழி தான் மாமா.. நானே கூட்டிட்டி வரவா?” என கேட்டான் கிரி. அருகில் இருந்த ராமோ சத்தமாய் சிரித்து வைத்திட, அவன் தொடையில் கிரி நங்கென விட்டான் ஒரு குத்து.