“காய்ச்சலா, கமலி பிரச்சனையா? எது சரியாகிடுச்சு! சரியாகிடுச்சுன்னா, ஏன் உன் முகம் தேவதாஸ் மாதிரி இருக்கு?” இம்முறை நேரடியாகவே ராம் கேட்டுவிட
“ண்ணா.. இரண்டுமே சரியாகிடுச்சு” என்றான் கிரி
அவனையே பார்த்து பின் “அப்புறம் ஏன் கமலியை இன்னும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு வராமல் இருக்க! அவ வர மாட்டேன்னு சொன்னாளா? இல்லை நீ வர கூடாதுன்னு சொல்லியிருக்கியா” சற்று அழுத்தமாகவே கேட்டிட கிரி சங்கடப்பட்டு போனான்.
Advertisement
“உன் முகத்தை பார்த்தாலே, ஏதோ சரியில்லாதவன் மாதிரி தான் இருக்க. காய்ச்சலும் சரி, கமலியும் சரி, இரண்டுமே சரியாகலை அப்படி தானே” என சேர்த்தே கேட்க
பதறி கமலியை பார்த்து, பின் “அதெல்லாம் நேத்தே சரியா போச்சுண்ணா. நீயா ஏதாவது நினைச்சிட்டு இருக்காத! காய்ச்சலோட எபக்ட்டால டயர்டா தெரியுறனோ என்னவோ” அதற்குமேல் அண்ணனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் ராமை விட அழுத்தமாய் இவன் சொல்ல நிறுத்திட,
அதற்கு ராமோ நம்பாத பார்வை ஒன்றை பார்க்க, கிரியோ ‘இவன் சொன்னாலும் நம்ப மாட்டானே’ என தலையை லேசாய் தேய்த்துவிட்டு கொண்டு சங்கடமாய் அமர்ந்திருந்தான்.
Advertisement
“ஏன் கமலி இன்னும் உன் வீட்டுக்கு வராமல் இருக்க?” கிரியிடம் கேட்டு வீண் என நேரடியாக கமலியிடம் கேட்டுவிட்டான் ராம்.
Advertisement
கிரி திடுக்கிட்டு பார்க்க, மோகன், கமலி இருவருமே பேசுவதை விடுத்து இவனிடம் திரும்பினர். “என்ன ராம்..” என மோகன் கேட்டிட, “ண்ணா.. என்னதிது” என கிரி கேட்டிட
“கிரி கொஞ்சம் அமைதியா இரு” என்றுவிட்டு, மோகன் புறமாய் திரும்பி “நீங்க கமலிகிட்ட கேட்க மாட்டேன்னு சொல்லிடீங்க தானே, நீங்களும் ஊட பேசாதீங்க” என அவரையும் கண்டித்துவிட்டு, கையில் இருந்த பேனைவை ஓரமாய் வைத்துவிட்டு, கமலியின் பக்கமாய் திரும்பினான். “என்னை கர்ணனா நினைச்சேன்னா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும். இல்லை மூனாவது மனுசா நினைச்சேன்னா.. நான் எதுவும் பேசலை” நேரடியாக இவன் கமலியிடம் பர்மிஷன் கேட்க
கிரியும், மோகனும் விழிக்க, கமலியோ சங்கடமாய் அமர்ந்திருந்த கிரியை பார்த்துவிட்டு “என்ன.. என்ன பேசனும்” என ராமிடம் நேரடியாக கேட்டாள்.
Advertisement
“கிரிக்கும், உனக்கும் பிரச்சனை முடியலையா கமலி” இவன் கேட்டு முடிக்கும் முன்,
இவளோ, கணவன் மனைவிக்குள் வர இவன் யார் என நினைத்து “பிரச்சனையே இல்லையே” என மறுத்திட
“அப்புறமும் ஏன் இன்னும் உன் வீட்டுக்கு வராமல், உங்க அம்மா வீட்டிலேயே இருக்க?” நெத்தியடி கேள்வியை கேட்டு வைக்க, பதில் சொல்ல முடியாமல் இவள் கிரியை பார்த்து “அண்ணி வளைகாப்பு இருக்கு” என சமாளிக்க
“உன் வளைகாப்புன்னா ஒரு நியாயம் இருக்கு. உன் அம்மாவீட்டுக்கு போ அங்கேயே இரு, தப்பில்லை. உன் அண்ணி வளைகாப்பு முக்கியம், ஆனால் கிரி முக்கியமில்லை அப்படிதான” கிரிக்கு மேல் பேசினான் ராம்.
“அப்படி நான் சொல்லவே இல்லை. இப்போ இருக்குற வீடு சிறுசு, அங்கே ராஜி அண்ணி குழந்தைகள் எல்லாரும் இருக்கும் போது நான் எப்படி அங்கே போக முடியும்” மனதிலுள்ளதை இவள் கூறிட
“ஓ.. இதெல்லாம் ஒரு காரணமா.” என இழுத்து “மத்தவங்களுக்காக பார்க்க ஆரம்பிச்சா உங்க வாழ்க்கையை நீங்க வாழ முடியாது” என ராம் பேச
“இது பேச வேணா சரியா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது” என்றாள் இவளும்.
“ஒருவேளை செந்தில், ராஜி பிரச்சனை சரியாகாமல் போனால் என்ன செய்வ? அதுக்கு பிறகு ராஜி குழந்தைகள் எல்லாரும் அங்கேயே இருந்துட்டா என்ன செய்வ? அந்த வீட்டு பக்கமே வர மாட்ட!, கிரி பக்கம் வரவே மாட்ட! உன் அம்மா வீட்டிலேயே இருந்துடுவ அப்படி தானே” என கேட்க
“அவங்க பிரச்சனையை அவங்க பார்த்துப்பங்க ராம். நீ தலையிடாத” என தடை போட்ட மோகனிடம் “என் தம்பிப்பா.. நான் கேட்பேன்” என உறுதியாய் கூற
“ண்ணா இதெல்லாம் நான் பேசிக்கிறேன் விட்ரு” என கிரி சற்று அழுத்தமாய் பேச
கிரியை முறைத்தபடியே “என்ன பேசுவ? என்னடா பேசுவ?” என பற்களை கடித்துகொண்டு “இதுவரைக்கும் என்ன பேசிருக்கீங்க இரண்டு பேரும்?” “பேச வேண்டிய இடத்தில் பேசாமல் விட்டுட்டு பீரின் கிளம்பி வந்தாச்சு. இனி மேல் பேச போறானாம்” என கிரியை ஆப் பண்ணிவிட்டு
கமலி பக்கம் திரும்பினான் “நீ கிரியை பத்தி தெரிஞ்சுக்கனும் கமலி. அவன் எதையும் உன்கிட்ட சொல்லி இருக்க மாட்டான். நான் சொல்றேன் கேளு!” என ஆரம்பித்து, சுமையிலேயே கழிந்த கிரியின் இளமை காலம், குடும்பத்திற்காக உழைத்து ஓடியது, ராஜி, வசந்தா என இருவரும் கிரியை ஏமாற்றி கைகுள்ளேயே வைத்து கொண்டது, கமலியை எப்படி இவர்கள் தலையில் கட்டினார்கள், அதன் பின் நிஜ கமலிக்கும், ஏஐ கமலிக்குமிடையில் மாட்டிய இவனது வாழ்க்கை போராட்டம் என ஒன்று விடாமல் இவன் கூறிமுடித்தான் ராம்.
இதில் சில விசயங்கள் அரசல் புரசலாக இவள் காதுகளுக்கு வந்திருந்தாலும், அவன் படிப்போடு வேலைக்கு சென்றதும், ராஜிக்கு பணத்தை வாரி இறைத்ததும், அவனுக்கு பிடித்த கமலியுடன் எதிர்பார்த்திருந்த வாழ்வை பற்றியும், ராஜி வீட்டை அபகரிக்க நினைத்ததின் பின்புலம் பற்றியும், இன்னும் பல விசயங்கள் முழுமையான விளக்கத்துடன், கிரியின் வரலாறு இப்போது தான் இவள் காதுகளை வந்து அடைந்திருக்கிறது. அதுவும் ராம் மூலமாக.
கிரியின் மேல் படிந்தது இவள் பார்வை. கிரியோ தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
இவனோ தொடர்ந்தான் “சின்ன வயசில் இருந்து அவள் ஆசைபட்ட எதுவுமே கிடைச்சதில்லை. படிப்பு, வேலை அப்புறம் பொண்ணும் கூட. எல்லாத்திலையும் அவன் குடும்பம் அவனை ஏமாத்திட்டாங்க” இவன் சொல்ல.. முதலில் அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவள் இறுதியில் முறைத்து நின்றாள் ராமை.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த கிரி, ராமின் பேச்சில் சடாரென நிமிர்ந்து, “மறுபடியும் முதல்ல இருந்தா.. டேய் அண்ணா.. ஆப்பு வச்சிடாதடா” என கிரி பல்லைகடித்து கொண்டிருக்க..
“நீ முறைச்சாலும் அது தான் நிஜம், அவனுக்கு யாருமே உண்மையா இருந்ததில்லை கமலி” என்றான் ராம்.
ராமையும், மோகனையும் பார்த்து “ஏன் நீங்கலாம் இல்லையா?” பட்டென கோபம் ஏழ கேட்டாள் கமலி.
“நாங்க இருக்கோம். ஆனால் அவனுக்கு அவனோட அம்மா, அக்கா தானே குடும்பம், அவங்களையும் விட கிரிக்கு இப்போ நீ தான் முக்கியம். நீங்களாம் இருக்கும் போது, நாங்க எவ்வளவு சப்போர்ட் குடுத்தாலும் அது அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்காது கமலி. பாரினில் இருந்ததுக்கும் இங்கே இருக்குறதுக்கும் ரொம்பலாம் வித்யாசம் இல்லை. அங்கேயும் தனியா தான் இருக்கான், இங்கேயும் தனியா தான் இருக்கான். அம்மா, அக்கா, அக்கா குடும்பம், பொண்டாட்டி, பொண்டாட்டி குடும்பம்னு இத்தனை பேர் இருந்து என்ன பிரயோஜனம், நேத்து கடையை பார்க்குறதுக்கு ஒத்த காட்டு மரமாய் தனியா வந்து நிக்கிறான். இந்த கனை அவனோட கனவு, இலட்சியம். அவன் கஷ்டத்துல தான் யாரும் கூட இல்லை சந்தோஷத்திலாவது கூட இருங்க” மனதை அரித்தவைகளை ராம் வெளியே கொட்ட
இவன் யார் என்னை கேட்பது என்ற கோபமே இவளுள் முன்னுக்கு வந்து நிற்க “அவரோட கஷ்டத்தில் நான் இல்லைன்னு இவ்வளவு கோபம் வருது, அவர் மட்டும் என்னோட கஷ்டத்தில் கூட இருந்துட்டாரோ.. தனியா விட்டுட்டு ஓடுனவரு தானே உங்க தம்பி” கமலியும் பேசிவிட, ராம் கிரியை பார்த்தானே ஒரு பார்வை.