Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 29 3

அவர் செல்வதை பார்த்தவன்   “நீ என்ன பண்ணுவன்னு தெரியாது, உங்கம்மா இன்னும் ஒரு வாரத்துக்கு இங்க தான் இருக்கனும்” என்றான் இவளிடம்.

“ஏன்.. ஏன்.. என்ன திடீர் பாசம், அதுவும் என் அம்மா மேல” என்றாள் மூக்கின் மேல் ஏறிய கோபத்தோடு.

“நான் இப்போ பேசினதுக்கு எப்படியும் ஒரு வாரம் பட்னி போட்ருவ”

“அதுக்கு..”



Advertisement

“உன் தம்பியாவது சந்தோஷமா இருக்கட்டும்”

“ஹ.. என்ன!” இவள் புரியாமல் கேட்க

“வளைகாப்பு முடிஞ்சதும் கண்டிப்பா உன் தம்பி அவன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வந்துடுவான். கொஞ்ச நாளைக்கு அவனை நிம்மதியா வாழ விடுங்க. நாட்டாமை பண்றேன், பஞ்சாயத்து பண்றேனு, நீயும் உங்கம்மாவும் சேர்ந்து அவனை வாழ விடாமல் பண்ணிடாதீங்க” உடைத்து பேச

Advertisement

“இதென்ன கொடுமையா போச்சு. ஏதோ நாங்க டைவர்ஸ் வாங்கி விட்ருவோம்ன்ற அளவுக்கு பேசிட்டு இருக்கீங்க” தாங்கவே முடியவில்லை ராஜியால்.

Advertisement

“இப்படியே கண்டிக்காமல் விட்டா அடுத்து நீங்க அதை தான் செய்வீங்க. அதான் இப்போவே சொல்லி வைக்கிறேன்.

உங்கம்மா நல்லா இருக்குற வரை தான் உனக்கு அவங்க தேவைபடுவாங்க. இப்போ கூட வீட்டு வேலையை, குழந்தைகளை சமாளிக்க முடியாமல் தான் நீ உங்கம்மாவை அழைச்சிட்டு வந்திருக்க..

ஒரு வேளை உங்கம்மாக்கு உடம்பு முடியலைன்னா கிரியும், அவன் பொண்டாட்டியும் தான் பார்க்கனும், நீ கண்டிப்பா பார்க்க மாட்ட.

Advertisement

இதுக்கு பிறகு உங்கம்மாக்கு நீ கீ குடுக்குற வேலையை விட்ரு. நம்ப குடும்ப விசயத்தில் அவங்க தலையிடுறதையும் நீ அனுமதிக்காத.

நமக்கும் பொண்ணு இருக்கா. கர்மானு ஒன்னு இருக்கு. எது பண்ணாலும் நியாபகம் வச்சிட்டு பண்ணு” சொல்லிவிட்டு இவன் வெளியே சென்றிட, தலையே வெடிப்பது போல் இருந்தது ராஜிக்கு.

**********

கடைக்கு வந்தவன் முதலில் சென்ற இடம் குடோன் தான். கொடுத்த ஆர்டர்கள் எல்லாம் குடோனில் வந்து இறங்கி இருந்தது. யூனிபார்ம் அணிந்த வேலையாட்கள் அரிபரியில் இருந்தனர்.

மொத்த விலைக்கு வாங்கியிருந்த மளிகை பொருட்களை கால், அரை, முக்கால், ஒரு கிலோ, இரண்டு கிலோ என பாக்கெட் போடும் வேலைகள் ஒரு பக்கம் ஜரூராய் நடந்து கொண்டிருக்க, மற்ற பொருட்களுக்கு ப்ரைஸ்டேக் போடும் வேலை ஒரு பக்கமும் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது.

அதன் பின் கடையின் உட்பகுதியை கடந்து அலுவல் அறைக்குள் நுழையும் போதே இவன் பார்வை கடை முழுதும் வட்டமடித்துவிட்டது. முக்கால்வாசி கடையே பொருட்களால் நிரம்பிவிட்டது

பொருட்களை பகுதி வாரியாய், ரகம் வாரியாய் பிரித்து ஒரு பக்கம் அடுக்கி கொண்டிருக்க, அதை கடைக்குள் எடுத்து வைக்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. ஆக மொத்தம் விட்டகுறை, தொட்டகுறை என ஒரு கால் வாசி வேலைகள் மட்டுமே எஞ்சி இருந்தது.

இவன் கவனித்து கொண்டிருக்கையிலேயே, அவனருகில் வந்தான் ராம். “என்னடா.. இப்போ தான் கடைக்கு வர்ற வழி தெரிஞ்சதா தெளிஞ்சிட்டியா?” நமட்டு சிரிப்பு சிரித்தான்.

அவனது பேச்சும் சிரிப்பும், இவனுக்கு என்னத்தை உணர்த்தியதோ, துரை மாதிரி, இவன் என்னத்தை பார்த்தான் தெரியலையே. ஒரு மார்க்கமா சிரிச்சு வைக்கிறான் என நினைத்து “ண்ணே..” என இவன் முறைத்துவைக்க

“உடம்பு சரியா போச்சான்னு கேட்டேன்டா..” ராம் சிரிப்பை நிறுத்தாமல் ராம் கேட்டிட

ஒரு நொடி விழித்து பின் “ம்.. சரியா போச்சு..” ஒற்றை வார்த்தையில் கிரி முடித்து வைத்திட

“ம்.. மாத்திரை மருந்துக்கு கேட்காத காய்ச்சல், பொண்டாட்டி பேச்சை கேட்குது போல” எழும் சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசினான் ராம்.

‘என்ன, இவன் மரண கலாய் கலாய்க்கிறானே’ என பார்வையை விட்டு “ண்ணா.. அப்படிலாம் இல்லை” என்றிட

“பொய் சொல்லாதடா.. நேத்து நைட், சரியா எட்டு மணிக்கு வெஸ்பாவை பாலோ பண்ணிட்டு ஒரு யூனிகார்ன் போச்சு, பார்த்துட்டு தான் பேசிட்டு இருக்கேன்” என இவன் இன்னுமே கலாய்க்க, முகத்தை எங்கே வைப்பது என தெரியாமல் இங்குமங்குமாய் பார்த்து கொண்டிருந்தான் கிரி.

“அப்போ நான் சொன்னது சரி தான!” என விடாது கலாய்த்து கொண்டிருந்தான் ராம்.

அதுவரை தூரத்தில் இருந்தபடியே இவர்களை  அமைதியாய் பார்த்து கொண்டிருந்த மோகன், இவன் அதிகமாக பேச ஆரம்பித்தவுடனே, அவர்களிடம் வந்தார். “விட்றா.. சின்ன பையனை போட்டு கலாய்ச்சிட்டு” என ராமை திட்டி, “முடிக்க வேண்டிய வேலை இன்னும் கிடக்கு.. ஆகுற வேலையை பார்ப்போம்” என அவர்களது பேச்சிற்கு தடை போட்டார்.

‘ஹப்பாடா தப்புச்சிட்டேன்’ என கிரி நைசாய் நழுவிட எத்தனிக்க, “கிரி.. இங்கேயே இரு” என்றவர், மேனேஜருக்கு போன் செய்தார்.

“நேத்து தான் கிரி, மேனேஜர் சூப்பர் வைசர்னு ஒரு ஜஞ்சு பேரை இன்டர்வியூ மாதிரி நாங்களே வச்சு எடுத்தாச்சு..” என மோகன் சொல்ல, “நீங்க எடுத்துடீங்கல்ல.. அப்போ சரியான ஆட்களா தான் இருப்பாங்க சித்தப்பா”  கொண்டிருக்கையிலேயே, ‘ஐவர் கொண்ட குழு இவர்களை நெருங்கினர்’

அவர்கள் மோகனருகில் வர “என்னோட இன்னொரு மகன், கிரி.. ஒன் ஆப் த பார்னர்” என கிரியை அவர்களுக்கும், “இவங்க நாலு பேரும் சூப்பர்வைஸர்ஸ், அப்புறம் இவர் மேனேஜர்” என அவர்களை கிரிக்கும் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டார்.

“எல்லா வேலையையும் நீங்களே பார்த்திட்டீங்களா சித்தப்பா” என இவன் அதிர்ச்சி கொள்ள

“அப்படிலாம் சந்தோஷபட்டுக்காத கிரி. ப்ரமோஷனுக்கான ஆட் டீமை உன் தலையில் கட்டியாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவானுங்க.. அது உன் பொறுப்புடா” என இடையிட்டான் ராம்.

“ம். பார்த்துட்டா போச்சு..” என்றவன் “ப்ர்ஸ்ட் டே ஆபர், இல்லை ஒன் வீக் ஆபர் ஏதாவது கொடுக்கலாமா சித்தப்பா” இவன் கேட்க

“அதான் சொல்லிட்டானா அது உன் பொறுப்புனு.. நீ முடிவு பண்ணிடு கிரி” என பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டனர்.

அந்நேரம், சொன்னது போல அவர்களும் லேப்டாப்பும் கையுமாக வந்து இறங்கிட, விளம்பரம் தொடர்பான பேச்சுகள் அலுவல அறைக்குள் துவங்கிவிட்டது. சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மக்களை ஈர்க்கும் படி துண்டுப் பிரசுரங்கள் , பேனர்கள், மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் என அனைத்தையும் பேசி முடிவு செய்தான்.

அதன் பின் ஆஃபர்கள் (Opening Offers): வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சில நாட்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள், கொடுக்கபட வேண்டிய பரிசுகள் என திட்டமிட்டனர். பின் எல்லாவற்றையும் முடிவு செய்து அவர்களை அனுப்பி வைக்கையில் மதியம் இரண்டாகி போனது.

அந்நேரம் சுபா இவர்களுக்கான உணவை எடுத்து கொண்டு வந்தார். ஆபீஸ்ரூம் டேபிளை நிறைத்து பரிமாற, பிரியாணியையும், சிக்கனையும் கண்டு கிரியோ விழித்து கொண்டிருந்தான்.

வாந்தி, காய்ச்சல் எதுவும் இல்லாமல் இப்போது தான் உடல் நிலை சரியாகிக் கொண்டிருக்கிறது. இப்போது இதை உண்ணவா வேண்டாமா என இவன் யோசித்து கொண்டிருக்கையிலேயே வந்து சேர்ந்தாள் கமலி.

இம்முறை பச்சைநிற குவாட்செட் கூடவே அதே போல லன்ச் பேக்கோடு வந்து சேர்ந்தாள், கிரிக்கோ அப்படி ஒரு நிறைவு. இவளை பார்த்ததும் “என்ன கமலி நீயும் சாப்பாடு கொண்டு வந்திருக்கியா!” என கேட்டார் சுபா.

“ம்.. ஆமாம் அத்தை.. அவருக்கு இன்னும் உடம்பு சரியாகலை. அதான் ரசம் வச்சு எடுத்துட்டு வந்தேன்” என கூறியபடியே இவள் அவர்கள் அருகே வந்தாள் கமலி.

“ம்.. சரி தான்” என சுபா கூட சிரித்திட, மோகன் ஒரு பக்கம் சிரிக்க, ‘என்னடா இது குடும்பமே சிரிக்குறாங்க” என நினைத்து கொண்டிருக்க,

 “என்னடா மறுபடியும் காய்ச்சலா.. சரி பண்ண தான் கமலி வந்திருக்காப்லையா!” என ராம் கேட்டு வைக்க, பேய் முழி முழித்தான் கிரி.

கமலி கூட ஒரு வேகத்தில் வந்துவிட்டாளே தவிர, கணவனுக்கு சுபா உணவை கொண்டு வந்திருப்பார்களோ! எதையும் கேட்டு வைக்காமல் நான் வேறு இவனுக்கு தனியாய் உணவை கொண்டு வந்துவிட்டேனோ! அட்லீஸ்ட் கிரியிடமாவது சொல்லிவிட்டு வந்திருக்கலாமோ! இப்படி பல விதமாய் எண்ணங்க்ள ஓடிக்கொண்டிருந்தது அவளுள்.

“உன் புருஷனை சைட் அடிச்சது போதும் கமலி, பரிமாறு, உனக்காக தான் காத்திட்டு இருக்கான்” சுபா சொல்ல, வெட்கம் பிடுங்கி தின்றது இவளை.

குனிந்த தலை நிமிரவில்லையே இவள், லன்ச் பேக்கில் இருந்த உணவை எடுத்து பிரித்து, அவனுக்கென கொண்டுவந்த தட்டில் வைத்து பரிமாறினாள். அவனுக்கு தொந்தரவு தராத வகையில் குலைய வடித்த சாதம், ரசம், காரமில்லாத அவியல், பருப்பு துவையல் என கிரிக்கு பரிமாறினாள் கமலி.

அதை பார்த்தபடி “நீ செஞ்சியா, அம்மவா” சுபா கேட்க “நானே சமைச்சேன் த்தை..” எனவும், தனக்கும் போட்டு கொண்டு அமர்ந்தார் சுபா.

பதறிபோனாள் கமலி “அத்த நீங்க பிரியாணி சாப்பீடுங்க” என இவள் தடுக்கும் முன்

“எல்லா நாளும் எனக்கு நானே சமைச்சு போரடிச்சிடுச்சு. இன்னைக்கு உன் சமையலை டேஸ்ட் பண்ணுவோம்” என சாப்பிட ஆரம்பித்தார் சுபா.

ரசமும், அவியலும், பருப்பு துவையலும் வாய்க்கு ருசியாகவே இருந்திட “நல்லா இருக்கு கமலி. நல்லா சமைச்சிருக்கிற” என்றிட சிறு சிரிப்போடு அவரை பார்த்து வைத்தாள் கமலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!