‘ஓ.. சுதாரிச்சததோட எபக்ட் தான் அவளை அப்படி கலைச்சு போட்டுட்டு வந்திருக்கியா!”
‘ப்ச்.. என் பொண்டாட்டி.. நான் என்ன வேணா பண்ணுவேன்’
Advertisement
‘எப்பா.. நீ அதை அப்புறமா பண்ணு, உங்குடும்பம் கிளம்பி நிக்கிது.. போ.. முதல்ல அவங்களை வழியனுப்பு’ என இவனும் இவன் மனசாட்சியும் பேசிட. ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமநிலை படுத்தி கொண்டு அவர்களருகே சென்றான்.
Advertisement
“ம்மா.. ஆட்டோ வந்திடுச்சு, போகலாமா” என பிரணியை கையில் வைத்து கொண்டு இவள் வசந்தாவிடம் கேட்டுக்கொண்டிருக்க,
“நீ போ.. நான் கிரி கூட வீட்டுக்கு போறேன்” என முறைத்து கொண்டு நின்றார் வசந்தா.
“ம்மா.. வம்பு பண்ணாத! ஒரு வாரம் எங்கூட இரு. அப்புறமா, அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்” என ராஜி பேச
Advertisement
“முடியாதுன்னா முடியாது தான்.. நான் என் வீட்டுக்கு தான் போவேன்” வசந்தா வெகு பிடிவாதமாய் நின்றிருக்க
“எதே உங்க வீடா.. இந்த விசயம் ஹவுஸ் ஓனருக்கு தெரியுமாத்தை.. ஏன்னா அது வாடகை வீடுன்னு கிரி சொன்னான்” செந்தில் பேச.
“வாயை மூடுங்க” என ராஜி சீற.. வசந்தா வெட்டவா குத்தவா என பார்த்து வைத்தார்.
கிரியோ அவர்களது பேச்சை காதில் வாங்கியபடி அவர்களருகே வந்து நின்றான் கிரி “என்னாச்சு” என இவன் கேட்க
“நம்ப வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போக மாட்டியாடா!” வசந்தா கேட்டிட
“ராஜி வீட்டில் எல்லா வேலையையும் இருந்து முடிச்சு குடுத்துட்டு வரேன்னு சொன்ன தானே! இப்ப என்ன? எதுவும் பிரச்சனையா?” கிரி கேட்டிட
“அக்கா.. இதென்ன பேச்சு..கிரி அப்படி சொல்றவனா!” என சுபா இவர்களுக்கிடையில் வர
“நீ வாயை மூடு.. நீயென்ன என் குடும்பத்துக்குள்ள வரது! வர வர கிரி உன் பையனா என் பையனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. உங்க கிட்ட இருந்து முதல்ல கிரியை பிரிச்சு வைக்கனும்” வசந்தா சற்று சத்தமாய் பேசிட,
“சுபா.. பேசாத..” என மோகனும் கண்டித்துவிட, அமைதியாகிப் போனார் சுபா. வசந்தா முடிவு செய்துவிட்டால் கலவரபூமியாகவே மாற்றிவிடுவார் என்பதை அறிந்த கிரியோ.. “சித்தி, சித்தப்பா நீங்க கிளம்புங்க.. நான் பார்த்துகிறேன்” என
“இல்லை கிரி.. அது” என மோகன் இழுக்க
“உங்களை அசிங்கப்படுத்துறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது சித்தப்பா கிளம்புங்க” கிரி உறுதியாய் கூறியதில் அவர்களும் கிளம்பிவிட
வசந்தாவிற்கு கிரி பேசிய எதுவும் உரைக்கவே இல்லை. ஆனால் அவர்கள் கிளம்பி போனதும் அத்தனை சந்தோஷம்.
“இப்போ சொல்லுடா.. நான் நம்ப வீட்டுக்கு வரகூடாதா?” கணீரென விழுந்தது அவர் குரல்.
கிரியின் பார்வை தன்னாலேயே மேடை அருகில் இருந்த அறையை வட்டமடித்து பின் மீண்டும் வசந்தாவிடம் வந்து நின்றது.
அதற்குள் “ம்மா.. நீ முதல்ல என்கூட வா.. நம்ப வீட்டுக்கு போகலாம்” என ராஜி திசை திருப்பிட
ஏதோ பிரச்சனை என உணர்ந்து கொண்டான் கிரி “அம்மா தான் அங்க வரேன்னு சொல்றாங்கல்ல.. ராஜி, விடு நான் கூட்டிட்டு போறேன். நீ செந்திலோட ஆட்டோல கிளம்பு” என ராஜியிடம் கிரி கூற
“அப்படி சொல்லுடா.. என்னை என் வீட்டிலிருந்தே ஆளாளுக்கு துரத்தபார்க்குறாங்க!” என வசந்தா ஆரம்பித்திட
“யாரு..” என்றான் கிரி.
“எல்லாம் உன் பொண்டாட்டி தான்” எனவும் புருவம் சுருக்கி, அம்மாவையும், ராஜியையையும் மாறி மாறி பார்க்க,
அவளை என்ன பார்க்குற, நான் எல்லாத்தையும் சொல்றேன் என மடை திறந்த வெள்ளமாய் கிரி வருவதற்கு முன் கமலியோடு நடந்த வாக்கு வாதங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் வசந்தா கூறிட,
அனைத்தையும் பொறுமையாய் கேட்டவன், “அவ இவ்வளவு பேசுற அளவுக்கு நீ என்ன ம்மா பேசி வச்ச?” கிரி கிடுக்கு பிடி போட ‘பாவி, பொண்டாட்டின்னா மட்டும் எங்க இருந்து தான் வருமே கேள்வி’ கருவினார் வசந்தா.
“நான் ஒன்னுமே பேசலடா.. எல்லாம் நீ குடுக்குற இடம். வயசுக்கு கூட மரியாதை குடுக்காமல் பேசுறா!” திரி போட்டு தீபமேற்றினார் வசந்தா.
ஆனால் இவனா நம்புவான். கமலி மீது முன்பிருந்த போதே உருவான நம்பிக்கை அவ்வளவு சீக்கிரம் உடையுமா என்ன! காரணமில்லாமல் கமலி பேசமாட்டாள் என ஆணித்தரமாய் நம்பி இருந்தான். “கமலி வரட்டும்மா.. அவளையும் கேட்காமல் நான் ஒரு முடிவுக்கு வர முடியாது” வசந்தா ஏற்றிய தீபத்தை உஃப் என ஊதி அணைத்துவிட்டான் கிரி.
செந்தில் பக்கென சிரித்து வைத்திட, வசந்தாவோ திருடனுக்கு தேள் கொட்டியதை போல நின்றிருந்தார்.
பிடறியை அழுத்தமாய் வருடியபடி இவன் மேடையை பார்க்க அப்போது தான் கதவை திறந்து கொண்டு வந்தாள் கமலி.
அவளை பார்க்கையிலேயே சற்று முன் போய் வந்த சொர்க்கலோகம் கண் முன் ‘டிஞ்சக் டிஞ்சக்’ என டான்ஸ் ஆடியது. ‘போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணியோ, ஆட்டி படைக்குது’ எண்ணியபடி, முழு நிலவாய் ஜொலித்து கொண்டிருந்த இவளை தான் பார்த்திருந்தான்.
இவன் முழுதாய் கலைத்து போட்டதை, அழகாய் சரி செய்தபடி மேடையை விட்டு இறங்கிய கமலியின் மேல் படிந்தது கிரியின் விழிகள்.
இவனது பார்வை அவளையும் இழுத்ததோ, நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் கிரி. இவள் தன்னை பார்த்துவிட்டது புரிய கைநீட்டி இவளை அங்கிருந்தே அழைத்தான் கிரி.
கிரியை கண்டதும் நாணமேறி சிவக்க துவங்கிய முகம், அவனோடு அவன் குடும்பமே நி்ன்றிருப்பதை கண்டு அப்படியே உறைந்து போக, கிரியின் முகமும் சரியில்லாததை கண்டு கொண்டாள். என்னவாக இருக்கும் என யோசித்து கொண்டே நிதானமாக இவளும் வந்துவிட்டாள் இவனிடம்.
“பார்ரா நீ கூப்பிடுறது தெரிஞ்சும் ,ஆடி அசைஞ்சு வர்றதை. கொஞ்சமாச்சும் பயமிருக்கா” வசந்தா பேச, புருவத்தை உயர்த்தி கொண்டு கிரி பார்த்தானே ஒரு பார்வை, கப் சிப் என அடங்கி போனார் வசந்தா.
அதற்குள் கிரியிடம் வந்திருந்தாள் கமலி. கழுத்தோரமாய் இவன் வைத்த பற்களின் தடம் தெளிவாய் தெரிய, கழுத்தை விட்டு இயலாமையோடு இவள் முகத்தை பார்த்து
கமலிக்கோ பிரச்சனையின் முடிச்சு தெரிந்திட, சிறிதும் கவலை கொள்ளாமல், வசந்தாவை பார்த்து விட்டு “ஆமாம்.. என்னையும் உங்களையும் பிரிக்க நினைச்சா, வேற எப்படி பேசுறது” இவளும் வசந்தா பேசியதை போட்டுடைத்திட
‘அதானே..’ என கிரியின் பார்வை, வசந்தாவை கூறு போட்டது.