வசந்தாவை இவன் பார்த்த பார்வையில் “அவ்வா..” வாயில் அடித்து கொண்டு, “நான் அப்படி பேசவே இல்லடா” என பொய் உரைத்திட
பதிலுக்கு கமலியோ எதிர்ப்பேச்சு எதுவுமே பேசாமல் ‘உங்கக்காவை வேணா கேளுங்க’ என உறுதியாய் கிரியை பார்த்தபடி நின்றிருக்க. தவறு யார் பக்கம் என தெள்ள தெளிவாய் தெரிந்து போனது கிரிக்கு.
“பாரு உன்னையவே எப்படி பார்வையாலேயே மிரட்டி வைக்கிறா. இவ வேணாம் கிரி உனக்கு, ஆட்டி படைச்சிடுவா” என வசந்தா சிண்டு மூட்டி விட
அதற்கு கமலி வாய் திறக்கும் முன், “ஆட்டோ ரெடியா இருக்கா செந்தில்” என கேட்டு “ரெடி தான்” என செந்திலும் உரைக்க “ஆட்டோவில் நீ நம்ப வீட்டுக்கு போம்மா.. கமலி நீயும் கிளம்பி என் கூட வா.. நம்ப வீட்டில் வச்சு பேசிக்கலாம்” என முடித்து விட,
Advertisement
கிரியின் பார்வையும் பேச்சும் கமலிக்கு தைரியத்தை கொடுத்திட ‘சரி’ என்பது கமலி தலையசைத்திட,
வசந்தாவிற்கோ, அய்யோ இவன் எதையோ கண்டுபிடிச்சுட்டான் போலயே! பேச்சே சரியில்லை என பீதியானார் வசந்தா. இவளை இங்கேயே அத்துவிட்டு விட வேண்டும்’ என்ற நினைப்பில் இருந்தவரின் தலையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டியிருந்தான் கிரி.
ஆனாலும் விடுவாரா வசந்தா “இவ நம்ப வீட்டுக்கு வந்தா நான் அங்க வர மாட்டேன்” என கத்த துவங்கிட.
Advertisement
கமலி, கிரி இருவருமே அதிர்ந்து நின்றுவிட்டனர். “ம்மா.. அவ என் பொண்டாட்டி.. அவ வர கூடாதுனு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை” முகத்தலடித்தார்ப்போல் இவன் பேச
Advertisement
“இந்த ராட்சஷி வந்தா நான் வர மாட்டேன்” என வசந்தா இன்னுமே கத்த
“இவ்வளவு சொன்ன பிறகு நான் ஏன் வர போறேன்” என இடையில் புகுந்து கமலி கூறிட, அவளது அந்த பதிலில் “கமலி..” என கிரி அதிர்ந்து நிற்க, கமலியின் இந்த பதில் தானே வேண்டும் என வசந்தாவின் கண்கள் பள பளவென மின்னியது.
வசந்தாவின் மீதே பார்வை வைத்திருந்தவள் “நான் அங்கே வரலைன்னவுடனே எவ்வளோ சந்தோஷம்ல..” கமலி வசந்தாவை பார்த்து வெளிப்படையாகவே கேட்டிட, கிரி அப்போது தான் வசந்தாவின் முகத்தை பார்த்தான். அவனுக்குமே அதிர்ச்சி தான், தன் அம்மாவா இவர் என.
Advertisement
“கண்டிப்பா நீங்க இருக்குற இடத்துக்கு நான் வர மாட்டேன். உங்க முகத்தில் தெரியுற இந்த சந்தோஷம் அப்படியே நிலைச்சு நிக்கட்டும்” கோபமோ, எரிச்சலோ இல்லை இவளிடம், வெகு நிதானமாகவே பேசியவள், குழப்பமாய் பார்த்த கிரியின் அருகில் நெருங்கி நின்றாள்.
அவன் முழங்கைக்குள் கை விட்டு பிடித்துகொண்டு “கிரிகிட்ட இருந்து என்னை பிரிக்கனும்னா.. அது நான் செத்த பிறகு தான். தைரியமிருந்தா பிரிச்சு தான் பாருங்களேன்” வார்த்தைகள் வசந்தாவிற்கானது என்றாலும் அவளது பார்வை கிரிக்கானதாய் இருந்தது.
அதை உணர்ந்தோ என்னவோ அவன் விரல்களும் கமலியின் விரல்களை தன் முழங்கையோடு இறுக பிடித்து கொண்டது.
பயந்து தான் போனார் வசந்தா “இவ பேசியே கவுக்குறா.. கிரி.. இவ உனக்கு வேணாம். வா நாம போகலாம்” எங்கே மகன் கமலி பக்கம் சாய்ந்திடுவானோ என இவர் பதற
இவர்களின் சச்சரவு கர்ணா காதுகளை எட்டிட, செல்வம், மல்லிகாவுடன் அங்கு வந்து சேர்ந்தான். கூடவே பிரபா குடும்பம் அழைக்காமலே வந்துவிட்டது.
“இப்போவும் சொல்றேன். என்னையும் கிரியையும் பிரிக்கனும்னு நீங்க பிளான் பண்ணீங்கன்னா கண்டிப்பா நான் கிரியை அழைச்சிட்டு தனிக்குடுத்தனம் போவேன்” கமலியும் பேச
“கிரி முடிவா சொல்றேன், இவ உனக்கு வேண்டாம்” வசந்தா சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார்.
அத்தனை நேரம் வேடிக்கை பார்த்த மீனாட்சி “இந்த வயசுக்கு, இத்தனை ஆங்காரம் வேண்டாம்மா. சின்ன புள்ளைகளை வாழ விடாமல் பண்ணினா, குடும்பம் நிலைக்குமா. உனக்கும் ஒரு பொண்ணு இருக்கா தானே. புத்தியில உரைக்குதா இல்லையா” கணீர் குரலில் பேச
திக்கென அதிர்ந்தாலும், தான் வசந்தா என்பதை நிறுபிப்பது போல் “இது எங்க வீட்டு பிரச்சனை, பஞ்சாயத்து பண்ணுனு யாரும் உங்களை அழைக்கலை” மூஞ்சியில் அடித்தார்ப்போல் வசந்தா பேசிட
“உன் குடும்பத்துக்குள்ள நான் வரலை, நீ தான் எங்க குடும்பத்துக்குள்ள வந்திருக்க. ஒரு நல்ல காரியம் நடக்குற இடத்தில் இப்படி யாராவது சச்சரவு பண்ணுவாங்களா. உன் வீட்டில் வச்சுக்கோ உன் பிரச்சனையை” மீனாட்சி நாக்கை பிடுங்கும் படி தான் கேட்டார், வசந்தாவின் மூக்கு உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.
விடவில்லையே மீனாட்சி “இந்த பய ஏன் பாரின்லையே கிடந்தான்னு இப்ப தானே புரியுது. ஒரு ஆம்பளை பயல போட்டு பந்தாடினா! விளங்குமா வீடு” காறி உமிழாத குறையாய் பேசியவர்
“இந்தாடி கமலி, நீயும் எனக்கு பிரபா மாதிரி தான், இப்படி பட்ட மாமியாரோட நீ இருக்க வேண்டாம், தனிக்குடுத்தனம் பண்ற வழிய பாரு. சில ஜென்மங்களுக்கு சொன்னா புரியாது, பட்டா தான் புரியும்” என நல்லா நல்லா கேட்டார் மீனாட்சி.
“ஓ.. அப்போ நான் தான் இவங்க நிம்மதியை கெடுக்குறனா!” கண்ணீரை கேடயமாக்கினார் வசந்தா.
“ஆமாம், இதில் சந்தேகம் வேறையா! நான் நேத்து தான் என் பேத்தி வீட்டுக்கே வந்தேன். பொறுப்பா இருக்குறதென்ன! ஓடியாடி வேலை பார்க்குறதென்ன! வாய்க்கு ருசியாய் சமைச்சி போடுறதென்ன! இந்த பிள்ளையை குறை சொல்ல எப்படி தான் மனசு வருதோ!
வீட்லையும் சரி, இதோ மண்டபத்திலயும் சரி இவ பேச்சு தான். முன்ன எப்படி இருந்தவ தெரியுமா.. இன்னைக்கு இப்படி மாறி இருக்குறா. உருவத்திலேயும் சரி, மனசளவிலும் சரி அவ புருஷனுக்காக அவ அவ்வளவு மாறி இருக்குறா!
நீ உன் புள்ளைக்காக ஏதாவது மாறி இருக்கியா! இங்க வந்ததில் இருந்து உன் சங்கதியும் என் காதுக்கு வந்துட்டு தான் இருக்கு. இரண்டு பேரையும் சேர்த்து வாழ கூட விட மாட்ர இதில் வியாக்கானம் பேசிட்டு திரியுற” மீனாட்சி பேசிட, அங்கிருக்கும் யாரும் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஆனாலும் அடங்குவாரா வசந்தா “என்ன மல்லிகா, உன் வீட்டு ஆளை, பேசவிட்டு வேடிக்கை பாக்கிறியா!” இருக்கும் கோபத்தை மல்லிகாவிடம் காட்ட,
அவ்ளோ தான் பொறுமை பறந்தது கிரிக்கு “ம்மா.. பேச்சை நிப்பாட்டுறியா!” என கர்ஜிக்க
“நான் நிப்பாட்ட மாட்டேன் கிரி. தனிக்குடுத்தனம் போவேன்னு என் முன்னாடியே சொல்றா! கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவர், கமலியை குரூரமாய் பார்த்து
“இவ நம்ப வீட்டுக்கு வரவும் கூடாது, நீ அவளோட தனி குடுத்தனம் போகவும் கூடாது” வசந்தாவின் பேச்சில், கிரிக்கு உச்சிக்கு ஏறி நின்றது கோபம்
அவனின் விழிகள் கமலியை வருட, அவளோ சிறிதும் கலங்காமல் கிரியை பார்த்து வைத்தாள், பின் வசந்தாவை ஆழ்ந்து பார்த்து “நிச்சயமா அவ அந்த வீட்டுக்கு வரவும் மாட்டா, நானும் தனிக்குடுத்தனம் போகவும் மாட்டேன்” என நிறுத்தி நிநானமாக கூற
கமலி முகம் குழப்பமடைய, வசந்தாவின் முகம் தௌசன்ட் வால்ட் பல்பாய் பளீரிட, மல்லிகா, செல்வம் இருவரின் முகமும் இறுகி போக, கர்ணா வெட்டவா குத்தவா என நின்றிருந்தான்.