Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 33 5

“கிரி வேற டிரெஸ் தாங்க கிரி” ப்ளீஸ் இவள் கேட்க

“ம்ஹூம்..” என சொல்லி கொண்டு இவளை இவன் நெருங்க..

“கிரி.. நோ.. ஸ்டே பேக்” இவள் அவனை மிரட்டி கொண்டிருக்கையிலேயே, அவள் கை இரண்டையும் பிடித்து விரித்து சுவரோடு சுவராய் பிடித்தான். அவன் பார்வையோ ரசனையாய் அவளில் படிந்து விழிகளாலேயே ருசித்து கொண்டிருந்தது.

“கிரி.. ப்ளீஸ் அப்படி பார்க்காதீங்க” செக்க சிவந்து போனது இவளது முகம்.



Advertisement

“சரி பார்க்கலை” என்றவன், குனிந்தபடி இதழ்களால் அவளை வருடிவிட, துள்ள துவங்கிவிட்டாள் கமலி.

“கிரி.. ப்ளீஸ்..” இவள் கெஞ்சியதில், அவளை விட்டு நிமிர்ந்து

“வெயிட்டை குறைக்கிறதுக்கு மட்டும் தான் கிளாஸ் போனியா.. இல்லை.. என்னை எப்படி உயிரோட கொல்றதுன்னு கத்துகிறதுக்கும் கிளாஸ் போனியாடி?”

Advertisement

சொல்லிவிட்டு மீண்டுமாய் கழுத்தடியில் புதைந்துகொண்டு  “என்னை கொல்றதுக்குன்னே ஸ்பெஷலா ஜிம் போய் டிரையினிங் எடுத்து பிட்டா ரெடியாகி வந்திருக்கடி” சொல்லியவன்,  கண்ட இடமெல்லாம் கடித்து வைக்க, அவள் அணிந்திருந்த உடையும் வழிவகை செய்து கொடுத்திருக்க, சில நிமிடங்களிலேயே அவன் கைக்குள் துவண்டு போனாள் கமலி.

Advertisement

சரிய இருந்தவளை இழுத்து கைகளில் ஏந்தி கொண்டு கட்டிலில் கமலியோடு சரிந்தான். ஈருடலும் ஓர் உயிராகும் வரை தொடர்ந்து கொண்டிருந்தான் அவனது சத்தத்துடன் கூடிய யுத்தத்தை.

*******

மீண்டுமாய் இவள் எழுகையில் மாலை ஆகிப்போயிருந்தது.

Advertisement

களைப்பாய் அருகில் திரும்பி பார்க்க, அவனில்லை. மெல்ல எழுந்தமர்ந்தாள். நழுவி ஓடிய போர்வையை இவள் இறுக்கி பிடித்து கொண்டு, ‘வித் அவுட்லையே’ சுத்த விட்ருவானோ! என சுற்றி முற்றி பார்த்தாள்.

கட்டிலின் ஒரு மூலையில் புதிதாய் ஒரு கவர் தெரிய எழுந்து சென்று பார்த்தாள். புதிதாய் இரு நைட்டிகள் இருக்க உஃப் என இதழ் குவித்து ஊதி விட்டு, நைட்டியை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள்.

சில பல நிமிடங்களின் பின் பாத்ரூமை விட்டு வெளியே வந்தவள், கதவை திறந்து கொண்டு வெளியே வர, கிச்சனில் நின்றிருந்தான் கிரி.

“கிரி” என இவள் குரல் கொடுக்க, திரும்பியவன் “தூங்க வேண்டியது தானே! ஏன் அதுக்குள்ள எழுந்த” என்றபடி இவளருகே இவன் வர “தாகமா இருக்கு தண்ணி வேணும்” என இவள் கூற, டம்ளரில் தண்ணீரை எடுத்து கொடுக்க, இவளோ வாங்கி கொண்டு ஹால் சோபாவில் போய் அமர்ந்தாள்.

சில நிமிடங்களுக்கு பின் இரண்டு தட்டில் சமைத்த உணவை போட்டு எடுத்து வந்தான்.

அவள் முன் ஆவி பறக்க தக்காளி சாதத்தை இவன் நீட்ட, கூடவே அப்பளமும் இருந்தது.

வாங்கி கொண்டு சோபாவின் கீழே இறங்கி அமர, இவனும் அவளருகில் அமர்ந்தான்.

இருந்த பசிக்கு இரண்டே நிமிடத்தில் தட்டை காலி செய்துவிட்டாள் கமலி. குக்கரை எடுத்து வந்து மீண்டும் இவளுக்கு சாதத்தை வைக்க, மறுக்காமல் வாங்கி கொண்டாள். இவனும் வயிறார உண்டு, பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வந்தான்.

சோபாவிலேயே சுருண்டு படுத்திருந்தாள் கமலி.

‘வச்சு செஞ்சிட்டேன் போலயே’ பிடறியை அழுத்தமாய் வருடிக்கொண்டவன், அவளருகே அமர்ந்து, அவள் கால்களை எடுத்து தன் மடி மீது வைத்து கொள்ள, பட்டென கண் திறந்து இவனை பார்த்துவிட்டு கால்களை அவனிடமிருந்து விலக்கி கொள்ள எத்தனிக்க “ப்ச்.. அப்படியே இருடி” என கால்களை தன் மடி மீது வைத்து கொண்டான் கிரி.

சில நிமிடங்களிலேயே உறங்கியும் போனாள். மீண்டும் ஒரு அரை மணி நேர தூக்கம். மீண்டும் எழும் போது அதே சோபா, அதே கிரி, அதே போஸ் என அப்படியே தான் இருந்தாள்.

“சாரி கிரி.. ரொம்ப டயர்டா இருந்தது” என சொல்லியபடி இவள் எழுந்தமர “என்னடி கஷ்டமா இருக்கா” இவன் கேட்க

“டயர்டா இருந்தது, இப்போ இல்லை” என பூவாய் மலர்ந்து சிரித்திட, அவள் விரல் பிடித்து அழுத்தமாய் முத்தம் வைத்து,

“நீ தேடி வருவன்னு நினைக்கவே இல்லடி” இவள் விழி பார்த்து பேச

விழிகளை திருப்பிக்கொண்டாள் கமலி ஆனால் அது கூட தாங்காமல், அவள் தாடையை பிடித்து தன் பக்கமாய் திருப்பி “இரண்டு அடி கூட அடி இந்த மூஞ்ச  திருப்புற வேலை என்கிட்ட வேணாம்” என்றிட, அதற்கும் இவள் முறைத்து வைத்திட “ஒரு வேளை நான் தேடி வரலைன்னா சார் என்ன பண்ணிருப்பீங்க” இவள் கேட்க

அவள் தாடையை அப்படியே இடப்பக்கமாய் திருப்பி, சிதறி கிடந்த டிராலியை காட்டி, “பேக் பண்ணது எதுக்குனு நினைக்கிற.. வீட்டோட மாப்பிள்ளையா வர்றதுக்கு தான்” என்றிட “கிரி…” என இவள் அதிர்வாய் அவனை பார்க்க

“அம்மா தடுத்துடாங்க, மீறி போனால் கொள்ளி வச்சிட்டு போ, அது இதுன்னு டிப்ரஷனுக்கு உள்ளாக்கிட்டாங்க கமலி” என்றதில் விழி விரித்து பார்த்தாள் அவனை.

“நீ மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா, கண்டிப்பா பைத்தியம் ஆகி இருப்பேன் கமலி” சொல்லிவிட்டு அவள் மடியிலே சாய்ந்து கொண்டான் கிரி.

அவன் பேச பேச கமலியின் மனம் கிரியின் பால் இன்னுமே சாய்ந்தது. மடியில் படுத்திருந்தவனின் தலை கோதி, அவனை சமநிலைப்படுத்தியது.

“மன்னிச்சிடுடி…” மனமுவந்து கேட்டிட

“உங்க வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு டார்க்கெட் பண்றாங்க உங்கம்மா.. நீங்க என்ன பண்ணுவீங்க!” கமலி சொல்ல

“நானே ராஜா, நானே மந்திரினு கை நிறைய பணத்தோட, ஒரு சர்க்கிள் குள்ள வாழ்ந்துட்டாங்க கமலி. எங்கே நீ அவங்களுக்கு போட்டியா வந்துவாங்களோன்ற பயம் தான் அவங்களை இப்படி பேச வைக்குது. தேவையில்லாததை எல்லாம் செய்ய வைக்குது” இவன் சொல்ல சொல்ல

தன் வீட்டில் அராஜகம் செய்யும், அண்ணியும், அடங்கி போகும் மல்லிகாவும் நினைவில் வந்து போயினர். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சனை! இதழ்கள் தானாகவே வளைந்தது.

இவனோ பேச்சை தொடர்ந்தான் “அம்மா டெம்பரவரியா தான் அக்கா வீட்டில் இருக்காங்க” என்றவன் தயங்கி தயங்கி “கண்டிப்பா ஒரு நாள் இங்கே வந்திடுவாங்க கமலி” கூற

“உங்க நிலைமையும் புரியுது கிரி. உங்கம்மா வரப்போ வரட்டும், நான் எதுவும் சொல்ல மாட்டேன். உங்க கடமையை நீங்க பாருங்க. நான் குறுக்க நிக்க மாட்டேன்” இவள் உறுதி கொடுக்க

“ஒரு வேளை அம்மா மறுபடியும் பிரச்சனை பண்ணினா!” இவன் சந்தேகமாய் கேட்க

“யோசிக்கவே மாட்டேன். இந்த மன்மதனை கடத்திட்டு எங்கையாவது ஓடிடுவேன். கடத்தலுக்கு ஆள் கூட ரெடி, கை காலை உடைக்க என் அண்ணன், அலேக்கா தூக்கிட்டு வர, செந்தில் அண்ணனு அல்ரெடி உங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுட்டேன். குறுக்க இந்த கௌசிக் வந்தான்னு உங்கம்மா வந்தா சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை!” என இவள் சிரிக்க

“கை காலை உடைக்கிற அளவுக்கு போயிட்ட” அவள் மடியில் படுத்தபடி கிரியும் சிரித்து வைக்க

“பின்ன விட்டுட்டு ஓட நினைச்சா..” புருவம் உயர்த்தி கொண்டு இவள் சிரிக்க..

“ஆனால் இனி முன்ன விட அதிகமா ஓட வேண்டியிருக்குமே என்ன பண்ணுவ?” என இவன் கேட்க

சிரித்து கொண்டிருந்த இதழ்கள் பட்டென சுருங்கிட

“இன்னைக்கு ஒரு நாள் தான் அண்ணன் லீவ் கொடுத்திருக்கான், நாளையிலிருந்து கடைக்கு ஓடனும். அடுத்த வாரம் கடை ஓபனிங் செரிமனி இருக்கு, அதுவரை அவசியம் வந்தா வெளியூருக்கா இருந்தாலும் ஓடனும், கடை ஓபினங்க்கு பிறகு டைமிங்க்கு வேலைக்கு ஓடியே ஆகனும், அப்புறம் ப்ரி டைம்மில் மேடம் பின்னாடி ஒடியே ஆகனும், அப்புறம் குழந்தைங்கனு வந்து அவுங்க பின்னாடி ஓடனும்….”

“குறுக்க இந்த கௌசிக் வந்தான்னு, உங்கம்மா அப்பப்போ வருவாங்க, அவங்களை பார்த்தவுடனே தெரிச்சு ஓடனும்” என இவள் சொல்ல

அப்படியே திரும்பி அவள் வயிற்றிலேயே கடித்து வைத்தான் கிரி, அதில் இவள் அலற, அவள் பிடறியில் கை போட்டு தன் முகம் நோக்கி இழுத்தவன்,

அலறிய இதழ்களை தனக்குள் புதைத்து கொண்டான்.

பல உறவுகள் மாறாதவை..

சில உறவுகள் மாற்ற முடியாதவை..

ஓரே ஒரு உறவு மட்டும் உனக்காகவே மாறுபவை..

அது வரம்..

இங்கு கமலி கிரிக்கு கிடைத்த வரம்..

நீ தவமிருந்து கிடைத்த வரம்…!

முற்றும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!