Skip to content
Post Views: 86
அத்தியாயம் 5
“ம்மா.. என் மாமியாகாரி வர்றாம்மா..” வசந்தாவின் காதை கடித்தாள் ராஜி்.
“எப்போடி? உன்புருஷன்? வரானா?” பீதியானார் வசந்தா.
“அவர் வரலை.. வேலை இருக்கும்ல.. அந்த பிசாசு வருதுன்னு சொன்னதே அவர் தாம்மா”
Advertisement
“வந்து என்ன கேட்பானு தெரியாதாக்கும்.. நாழு வருஷமா அதே புராணம் தான் பாடிட்டு இருக்கா உம்மாமியா. எனக்கென்னமோ பயமா இருக்கு.. உன் தம்பி கிட்ட சொல்லிவோம்டி, அவன் ஏதாவது செய்வான்” வசந்தா பயம் கொண்டார்.
“அப்போ நானும் என் புள்ளைகளும் இங்கே தான் இருக்கனும். அப்போவும் இந்த வீடு பாத்தாதும்மா.. ஒன்னு மாடி எடுக்கனும் இல்லை, வாடகைக்கு வீடு பாக்கனும். இரண்டுல எது செஞ்சாலும் நீயும் உன் மகனும் தான் எங்களுக்கு செலவு செய்யனும், அதுக்கு என் ஐடியா எவ்வளவோ பரவாயில்லை” எப்படி வசதி என திமிராய் புருவம் உயர்த்தினாள் ராஜி.
“இப்படியே நின்னு பேசிட்டு இருக்காமல் ஆக வேண்டிய வேலைய பாரு, எம்மாமியாரு வர முன்ன, முதலில் இந்த கமலியை எங்கையாவது அனுப்பி வை” கடுப்புடன் ராஜி பேச
Advertisement
கமலியை தேடி அவள் அறைக்கு சென்றார் வசந்தா.
Advertisement
அதற்குள் சுடிதார் ஒன்றை அணிந்தபடி ஹேண்ட் பேக்கோடு வந்தவள், “என்னத்தை, என்னைய கிளம்ப சொன்னீங்க, நீங்க கிளம்பலையா? கோவிலுக்கு போறமா இல்லையா” இவள் கேள்விகளை அடுக்க
“என்னவோ தெரியல கமலி இன்னைக்கு ரொம்ப கால் வலியா இருக்கு நீ மட்டும் போயிட்டு வாயேன்” என
“ஏற்கனவே லேட்டு, இதில் தனியாவா?” என யோசிக்கையிலேயே
Advertisement
“அவனும் இல்லையே, காலையிலேயே கிளம்பி போய்ட்டான். என்ன தான் பிரண்டோ டெய்லி பார்க்க போய்டுறான். நீ மட்டும் போயிட்டு வா கமலி, இப்போவே பத்தறை ஆச்சு, நடை சாத்தங்குள்ள போயிட்டு வா. அப்படியே வரும் போது மார்க்கெட் போயிட்டு மூனு நாளைக்கு தேவையான காய்லாம் வாங்கிட்டு வந்திடு” என ஒரு கட்டை பையையும் கொடுத்து அனுப்பினார் வசந்தா.
காலையிலேயே கிரியும் வெளியே சென்றுவிட்டான்.
இனி காந்திமதியை மட்டும் தான் சமாளிக்கனும் என சோபாவில் சாய்ந்தபடி, கண்மூடினார் வசந்தா.
சில நிமிடங்களுக்கு பின் “ராஜி.. ராஜி..” என குரல் கேட்க, அடித்து பிடித்து வாசலுக்கு விரைந்தனர் அம்மாவும் மகளும்.
ராஜியின் மூன்று வயது மகனை கையில் பிடித்தபடி வந்தார் அவளின் மாமியார்.
அவனோ, ஓடி வந்து “அம்மா” என இவளது முழங்காலோடு இறுக்கி கொள்ள, “சாப்பிட்டியாடா?” என தூக்கி இடுப்பில் அமர்த்தி கொண்டவள் “வாங்கத்தை, வாங்க அண்ணி” ராஜியும் வசந்தாவும் பலமாய் வரவேற்றனர்.
அதன் பின் நலவிசாரிப்பும், விருந்துபச்சாரமும் பலே பலே எனும் ரகமாய் நடந்து முடிந்திருந்தது.
அதன் பின் வீட்டை சுற்றி ஓடியது காந்திமதியின் பார்வை. ‘ட’ வடித்தில் இருந்த ஹால் சிலாப்பில் நிறைந்து கிடந்தது கமலியின் சீர் வரிசை பார்த்திரங்கள். அதில் நிறைய பித்தளை தான்.
அதே ஹாலில் கவர் கூட பிரிக்க பெரிய சைஸ் படாத எல் சேப் சோபா, அதன் எதிர்புறம் இருந்த டைனிங் டேபிள், பிரிக்கபடாத வாசிங் மிஷின் என ஒவ்வொன்றாய் கடந்து கமலி அறைக்குள்ளும் சென்றவர் கட்டில் மெத்தை, பீரோ, டிரெஸிங் டேபிள் என அனைத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்தவர், “பிரிட்ஜ், உன் தம்பிக்கு பைக்” இரண்டு தான் மிஸ் ஆகுது” என ஒய்யாரமாய் சோபாவில் அமர்ந்தார், காந்திமதி, ராஜியின் மாமியார்.
‘என்னலாம் பேச்சு வாங்கனுமோ’ என ராஜியும் வசந்தாவும் ஒருவரையொருவர் பார்த்துகொள்ள, “புடிச்சது தான் புடிச்ச, உன் புள்ளைக்கு பெரிய புளியங்கொம்பா புடிச்சிட்ட, உன் மருமக மகாலட்சுமி, வாரி இறச்சுட்டா, எனக்கும் வாச்சிருக்கே” ஏதோ்சொல்ல வந்து நிறுத்த, ராஜி முகத்தில் உள்ளூர் கொள்ளும் வெடித்தது.
“இருக்க தான் பெத்தவங்க சொல்ற இடத்தில் பொண்ணு எடுக்கனும்.. வீடும் மனசும் நிறஞ்சுடும், அது நஉக இஷ்டத்துக்கு பெத்தவங்க பெரியவங்களை எதிரத்துட்டு பொண்ணு எடுத்து வீடு வழிச்செடுத்த மாதிரி தான் போகும்”
“என்ன அண்ணி ஏதேதோ பேசுறீங்க.. எங்களுக்கென்ன ஆசையா இல்லை ராஜிக்கு செய்யனும்னு.. பணம் சேரனுமே” வசந்தா மெதுவாய் பேச
“ம்.. நீங்களும் சீர்செய்றோம் செய்றோம்னு சொல்லி நாழு வருசமும் முடிஞ்சது” சொல்லிய மறு நொடியே.
“இன்னும் ஆறு மாசத்தில் மாடி எடுத்து முடிச்சிருவோம் அத்தை” ராஜி உள்ளே புகுந்தாள்.
“நாலு வருஷம்னு சொல்லி நாலா போச்சு, இன்னும் ஆறு மாசமா? ஆறா போகாமா இருந்தா சரி தான்” முகத்தை அஷ்டகோணலாக்கியவர்
“ஏதோ ஆசைபட்டுச்சுகனு கல்யாணம் பண்ண கேட்ட வசந்தா.. நகை நட்டு இல்லை.. எம்புள்ள இப்போ தான் பாரினுக்கு போய் சம்பாத்யம் பண்ண ஆரம்பிச்சிருக்கான். இரண்டு வருசத்துல செய்வான்னு சொன்ன! நடக்கலை..
இப்போ தான் வீடு கட்றான்.. இன்னும் ஒரு வருசத்துல செஞ்சிடுவன்னு சொன்ன! அதுவும் நடக்கலை.
அதுக்கு பிறகு அதை பத்தின பேச்சே எடுக்கலை. அதையும் மீறி நான் பேச்செடுத்தா, நகை விக்கிற வெலைக்கு இப்ப வாங்க முடியாதுன்னு கதை விட்டீங்க.
சரி வீடாவது கட்டி கொடுங்கனு சொன்னப்போ சரின்னு சொல்லீட்டிங்க, ஆத்தாளும் மகளும்.
ஆனா செய்ய தான் மாட்டேன்கிறீக. கல்யாண வீடாச்சே எதுவும் பிரச்சனை வேணாம்னு தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். உன்புள்ளைய ஒரு வாரம் பார்த்ததே பெரிய விசயம்..
இந்தா உன் புள்ளய கூட்டிட்டு வந்துட்டேன். நீ வீடு எடுக்குற வரை உன் புள்ள உன் கூட, என் புள்ள என் கூட! கிளம்புறேன்” என வந்த வேகத்திலேயே கிளம்பி சென்று விட, யானை புகுந்த வீடு போல தான் இருந்தது.
இப்படி பட்ட பேச்சை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அவ்வளவு பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை.. “பொம்பளையாடி உன் மாமியாரெல்லாம், விட்டா கடிச்சு அப்படியே தின்னுரும் போல மாமிச பட்சி. என்ன பேச்சு பேசுறா.. இவகிட்டலாம் நான் வாங்கி கட்டனும்னு என் தலையெழுத்து.
பனிரெண்டாப்பு முடிச்சு, காதல், கல்யாணம்னு வந்தப்போவே சொன்னேன், நம்பள விட உசந்த சாதி, அந்த ஊர் காரங்களுக்கு, இரட்டை சீர் கொடுக்கனும், அதுவும் மூனு வருசத்துக்குனு.. ‘கட்டுன புடவையோட வா போதும்னு உம்புருஷன் அன்னைக்கு வாயில வடை சுட்டான்… இன்று ஊசி போச்சு’ சொன்ன பேச்ச கேட்டா தானே! எல்லாம் எந்தலையெழுத்து” தலையிலேயே அடித்து கொண்டு சென்றுவிட்டார் வசந்தா.
அடுத்த நிமிடம் ராஜியின் போன் அலற, அவளது கணவன் செந்தில் தான் அழைத்திருந்தான்.
“அம்மா கிளம்பிட்டாங்களா”
“ம்.. இப்போ தான் போறாங்க.. வீடு எடுக்குற வரை அங்க வர வேண்டாம்னு சொல்லாமல் சொல்லிட்டு போய்ட்டாங்க”
“அதையே தான் நானும் சொல்றேன். வீடு எடுக்குற வரை அங்க வந்துடாத. எனக்கு பின்னாடி கல்யாணம் பண்ணின என் தம்பி, சீரும் சிறப்புமா வாழ்றான். நான் தான் பிச்ச காரணாட்டம் இருக்கேன். சீர் தான் செய்யலை, வீடும் வரலைன்னு வச்சிக்க.. அங்கேயே இருந்துக்க” என வைத்து விட்டான் செந்தில்.
இவனுடன் எல்லாம் அப்படி வாழ தான் வேண்டுமா? என அவ்வப்போது நினைத்தாலும்.
கோவிலில் வைத்து எளிமையாய் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியோடு அனுப்பி வைத்ததோடு சரி.
தனக்கென ஒரு குண்டு மணி தங்கம் கூட கொடுக்கவில்லை இந்த அம்மா.. ஆனால் மகனுக்கு மட்டும் பார்த்து பார்த்து வீடு கட்டி கொடுத்திருக்கிறாள்.
செந்தில் கேட்டான் என்பதை விட, அம்மா கொடுக்க மாட்டேன் என்கிறாள் என்பதே அவளுக்கு பெருங்கோபமாய் இருந்தது.
அதே கோபத்தில் உன் மகனுக்கு மட்டும் வீடு அப்போ எனக்கு? விடமாட்டேன்! என பங்கு கேட்டு வந்தவளை “மாடி எடுப்போம்” என வசந்தா சரி கட்ட விடாது பிடித்து கொண்டாள்.
அதற்கு பணம் வேணுமே..! அம்மாவையும் அழகாய் உள் இழுத்து போட்டாள். கூடவே பிளானையும் அவளே போட்டாள், அழகு குறைந்த பெண், நிறைய சீர் வரிசை.. முப்பது பவுன் நகை பிடித்து கொண்டாள்.
வசந்தாவை மூளை சலவை செய்தாயிற்று.
கிரி எங்கே மறுப்பானோ என மறுக்க முடியாதளவு அழகான போட்டோவாக மாற்றி அவனையும் ஏமாற்றி விட்டாயிற்று. திருமணத்தை நிறுத்த கூட நேரமில்லாம் படு விவேகமாய் அவனுக்கு செக் வைத்து விட்டாள்.
இனி ஆக வேண்டியதை பார்ப்போம் என சிரித்து கொண்டாள்.
***********
கோவிலுக்கு சென்று விட்டு, வரும் வழியில் காய்கறியும் வாங்கி கொண்டு திரும்பினாள்.
வரும் வழியில், மளிகை சமான் இல்லையென ஒரு லிஸ்டை சொல்லி அலையவிட்டாள் ராஜி.
ஒரு கையில் மளிகை சாமானும், மறுகையில் காய்கறி பையும் என மெதுவாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
மணி ஒன்றை கடந்து கொண்டிருந்தது. வெயில் மண்டைய பொளக்குது, இந்த லூசுக எதுக்கு இப்படி அலைய விடுதுகளோ..! திட்டிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள் கமலி.
“டேய், இன்னும் இரண்டு கார் இருக்குடா, வந்தன்னா அமவுண்ட் நீயே வாங்கிக்க” என்ற குரலும், “ஒரு இரண்டு மணிக்கு வந்திடுறேன்டா” என்ற பேச்சுகள் இவள் காதுகளில் கேட்க,
அவளுக்கு மிக பிடித்த குரலாயிற்றே.. திரும்பி பார்த்தவள் “கிரி” என அழைத்திட
ஒர்க்ஷாப்பை விட்டு வெளியே வந்த கிரி, சத்தம் வந்த திசைக்கு திரும்பி, இருவருமே “இங்க என்ன வேலை” என ஒரே நேரத்தில் கேட்டிட,
கையில் இருந்த பையை காட்டி, இதற்கு தான் வந்தேன் என பார்வையாலேயே பேசி, அவனையும் ஒர்க் ஷாப்பையும் பார்த்தவள் “நீங்க இங்க என்ன பண்றீங்க” என
“அது.. ப்ரண்டு கடை” என்றவன், வெயில்ல ஏன் வந்த என கேட்டவன், வேர்த்திருந்த அவளை பார்த்து “ஜூஸ் எதுவும் குடிக்கிறியா” என எதிரில் இருந்த கடையை காட்டினான்.
error: Content is protected !!