Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 5 2

கேட்பது இவன் தானா? என ஷாக் அடித்தாலும் அதை மறைத்து “ம்ஹூம் வேணாம்” என ஜூஸை மறுத்தவள், ஒர்க் ஷாப்பை பார்வையிட்டபடி “கல்யாணமான மறுநாளில் இருந்து பார்க்க வர்ற ப்ரண்டு அவர் தானா” நக்கலாய் கேட்டாள்.

“ம்” என்றான் இவன் இவள் விழிகளை பாராமலேயே.



Advertisement

“ப்ரண்ட பார்க்க வந்த மாதிரி தெரில.. ஏதோ இரண்டு கார், அமவுண்ட் னு காதில் விழுந்தது” விசாரணையை இவள் துவங்க

“இது உனக்கு தேவையில்லாத ஆணி.. வீட்டுக்கு தானே போற.. வா போவோம்” குறைவேனா என்ற திமிறில், காய்கறிப்பையை பிடுங்கி கொண்டு இவன் நடக்க ஆரம்பிக்க,

‘கமலி, ஏதோ சரியில்லடி.. வீட்டுக்கு போனா இந்தளவுக்கு கூட உன்ட பேசமாட்டான் பிடி அவனை’ என மனம் கூற

Advertisement

“நீங்க சொல்லாம இங்கிருந்து நான் வரமாட்டேன்” அழுத்தமாய் சொன்ன வார்த்தை, பார்வையில் தெரிந்த உறுதி, இரண்டும் அவனை எரிச்சல் கொள்ள வைத்தது.

Advertisement

“சும்மா தான் பார்க்க வந்தேன்னு சொல்றன்ல்ல, வா வீட்டுக்கு போவோம்” என இறங்கி வந்தான்.

“நீங்கள் சொல்லுங்க.. இல்லை நான் உங்கள் பிரண்டு கிட்டயே கேட்டுகிறேன்” என நடையை அந்த பக்கமாய் திருப்பி போட்டாள்.

சட்டென அவளை கைபிடித்து தடுத்தவன், விடாது இழுத்து வந்தான் அந்த ஜூஸ் கடைக்கு.

Advertisement

அவள் மீது இவன் விரல் பட்டதற்கே ஜிவ்வ்வென குளிர்ந்தது போல் ஆனது அவள் உடல்.. கமலி இதுக்கேவா? என கேட்டு அவள் மனம் கண்ணா பின்னாவென சிரித்தது.

பிடித்த கையை விடுத்து இடம் பார்த்து அவளை அமர சொன்னவன், பையை ஓரமாய் வைத்தான்.

அவள் அருகில் இவனும் அமர்ந்தான். “ஐஸ்கிரீமும் இருக்கு, ஜூஸூம் இருக்கு.. என்னணா வேணும்” என ஒரு பையன் வந்து நிற்க,

இவள் ‘பலூடா’ என யோசிக்காது சொன்னாள்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்தான் கிரி. அருகில் இருந்ததாலோ என்னவோ அதிலிருந்த ஒற்றை நூறு ரூபாய் மட்டுமே நீட்டிக்கொண்டிருந்தது.

‘பலூடா நூத்தி முப்பதாச்சே’ என பர்ஸை இவன் பட்டென மூட

‘பலூடா வேணாம், ரோஸ் மில்க், இரண்டு’ என அவனுக்கும் சேர்த்து இவளே ஆர்டர் கொடுத்தாள்.

‘பார்த்துட்டாளோ’ என இவன் அவளை பார்க்க

அவள் எதையும் முகத்தில் காட்டாதவளாய் “சொல்லுங்க” என இவள் விட்டதில் தொடர

“விடமாட்டியா.. ஏன் தொல்லை பண்ற?”

“அப்படி தான் பண்ணுவேன், நீங்க சொல்லுங்க இல்லை, உங்க பிரண்டு கிட்ட.” என இவள் மீண்டும் அதிலேயே வந்து நிற்க

“கையில் காசு இல்ல.. வீட்டு செலவுக்கு வேணும்ல அதான் பிரண்ட் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்க்குறேன்” சுவரில் பார்வை பதித்தபடி இவன் கூற, உள்ளுக்குள் ஏதோ தடம் புரண்டது.

“மெக்கானிக்கல் வேலை தெரியாது. ஜஸ்ட் கார் கிளீன் பண்ணி தருவேன். அவனுக்கு சின்ன சின்ன ஹெல்ப் பண்ணுவேன், ஒரு நாளைக்கு எண்ணாறு ரூபாய் தருவான்” எனவும் இன்னும் கமலி அதிர்ந்து போனாள்.

பாரினிலும் வேலை, லீவிற்கு வந்தால் இங்கேயும் வேலையா? கண்ணை கட்டிக்கெண்டு வந்தது இவளுக்கு.

அதனால் தான் நிறைய நேரம் வீட்டிலேயே இவன் இருப்பதில்லையா? நான் வேறு திட்டினேனே! ஆணாக இருப்பதும் கொடுமை தான் போல.. உள்ளுக்குள் இப்படியாக எண்ணங்கள் ஓடியது.

அதற்குள் ரோஸ்மில்க் வர, ‘குடி’ என்றவன் அவனுக்கானதை எடுத்துக் கொண்டான்.

“அக்கவுண்டல எதுவும் சேர்த்து வைக்கலியா?” என இவள் சாதாரணமாய் கேட்க

அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து, இல்லை என தலலையசைத்தவன் “சம்பளம் எல்லாத்தையும் அம்மா அக்கவுண்டுக்கு அனுப்பிடுவேன்”

“மொய்பணம் நிறைய வந்ததே! இப்போதைக்கு அதை வச்சு சமாளிக்கலாமே”

“வரவை விட செலவு தான் ஜாஸ்தி, சித்தப்பா, அல்ரெடி கணக்கெல்லாம் பாத்து ஒப்படைச்சுட்டாங்க” எனவும்

சந்தேகமாய் இவள் பார்க்க “அப்படி பார்க்காத, சித்தப்பா கண்டிப்பா ஏமாத்த மாட்டாங்க.. அவரால தான், இந்த படிப்பும், இந்த வேலையும் கூட..” இவள் பார்வையை வைத்தே இவன் பதில் கூறினான்.

என் பார்வை புரிகிறதா இவனுக்கு..! ஏனோ அந்நொடி இலகுவாய் உணர்ந்தாள்.

“எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க, வீட்டுக்கு எவ்வளவு செலவாகுது” என வீட்டு நடப்பை இவள் விசாரிக்க.

முறைத்து பார்த்தான் அவளை “இதுக்கு பேர் தான் இருக்க இடம் கொடுத்தா, மடத்தை பிடுங்குறது. உன் கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சுல, அடுத்தடுத்து என்குயரி வைக்காம கிளம்பு” என்றவன் குடித்த ரோஸ்மில்கிற்கு, எண்பது ரூபாயை கொடுத்துவிட்டு மீதி இருபதை வாங்கி பர்ஸினுள் வைத்து கொண்டு, காய்கறிப்பையை தூக்கி கொள்ள, மளிகை சாமானை இவள் தூக்கி வந்தாள்.

“ஒரு நேரம் நல்லா பேசுறான்.. ஒரு நேரம் ஸ்ட்ரெஸ் ஆக்கி விட்டுறான்.. ஸ்ட்ரெஸ் மேக்கர்” முகத்தை சுண்டிக்கொண்டே தான் இவன் பின் வந்தாள். ஒன்றாகவே வீடு வந்து சேர்ந்தனர்.

ஒன்றாக வந்த இவர்களை பார்த்த ராஜிக்கு குதுகலம் தான்.. அப்பாடா ஒன்னு சேர்ந்துட்டாங்க போல.. இனி நம்ப காட்டுல மழை தான் என குஷியாகிப்போனாள்.

ஆனால் இவர்கள் வந்தது பக்கத்து வீட்டு குழந்தைகளோடு தன் பேரனுக்கு உணவவூட்டி கொண்டிருந்த வசந்தாவிற்கு தெரியவில்லை.

சாப்பிட்டு விட்டு இவன் வேலைக்கு கிளம்பிட, கமலி ‘தூங்க போறேன்’ என படுத்துவிட்டாள்.

இவன் வெளியே வரவும், வசந்தாவும், கூடவே “மாமா” என ராஜியின் மகனும் வர “நீ எப்படி வந்த” என தூக்கி கொண்டான்.

போர்டிகோவில் நின்றபடியே “அவ மாமியார் கொண்டு வந்து விட்டுட்டு போனா” என வசந்தா கூற

“என்ன மறுபடியும் சண்டையா, மாமாட்ட பேசவா” என இவனாகவே கேட்டான்.

“இது வேறடா.. அவ பாத்துப்பா” எனவும், தோளை குலுக்கிவிட்டு, மருமகனை கையில் ஏந்தியவனாய் பக்கதிலிருக்கும் கடைக்கு அழைத்து சென்றவன், சாக்லேட், சிப்ஸ் என வாங்கி கொடுத்து மீதமிருந்த இருபது ரூபாயையும் காலி செய்தான்.

மீண்டும் அவனை வீட்டினுள் விட்டுவிட்டு செல்ல இருந்தவனை

“கிரி நில்லுடா..” என போர்டிகோவிலே நிறுத்தினார்

“என்ன” என இவன் பார்க்க

”என்னடா பிரச்சணை உனக்கு” என பேச ஆரம்பிக்க

முகம் சுருக்கியவன் “உனக்கு என்ன பிரச்சனை இப்போ? ஏன் நந்தி மாதிரி வந்து நிக்கிற” திமிரான அவன் வார்த்தை சற்று அவரை திடுக்கிடசெய்தது.

“என்னடா ஆச்சு உனக்கு?”

“ப்ச்” சலித்து கொண்டவன், இடுப்பில் கை வைத்து நாலாபுரமும் பார்வையை சுழற்றிவிட்டு “என்னம்மா?” கடுப்பாய் கேட்டான்.

“ஹனிமூன் ஏன் வேணாம்னு சொன்ன? கமலி கண்டிப்பா வேணாம்னு சொல்ல மாட்டா. நீ தான் சொல்லியிருப்ப” என குற்றபத்திரிக்கை வாசிக்க துவங்கினார் வசந்தா.

“உனக்கு வேற வேலையெல்லாம் இல்லையா.. எப்படி தான் இதையெல்லாம் மோப்பம் பிடிக்கிற.. நேத்து இதையே கேட்டு அவ வாங்கினது பத்தலையா? நீயும் வாங்கி கட்டிக்காத” அடக்க முடியாத கோபம் கிளர்ந்தது.

“ஆனது ஆச்சு வாழற வழிய பாருடா.. குழந்தை குட்டினு ஆயிட்டா அழகெல்லாம் கண்ணுக்கு தெரியாது.. அக்கறை தான் தெரியும்” என வசந்தா பிடித்த பிடியிலேயே நிற்க

நிதானமிழந்தான் இவன், உப்.. என பெருமூச்சு விட்டவன் “எப்படி தான் உன்னால இப்படியெல்லாம் பேச முடியுதோ.. உன் இஷ்டம் மா, நீ பார்க்குற பொண்ணை நிச்சயம் கல்யாணம் செய்துப்பேன்னு நம்பிக்கை கொடுத்ததுக்கு, உன்னை, நம்பினதுக்கு எனக்கு நல்லா வேணும்”

“நீ அனுப்புன போட்டோவை நம்பி ஓகே சொன்னேன். போட்டோவில் ஒரு கமலி, நேரில் வேற கமலினு என்னை ஏமாத்திட்டல்ல” வலி தெரிந்தது அந்த முகத்தில்

“ஏன்டா” உன் பேச வந்தவரை தடுத்தவன் “உன் மகளுக்கு மட்டும் மாப்பிள்ளை பார்க்கும் போது எத்தனை வரணை நீ காட்டிருப்ப.. போட்டோவை பார்த்தே மூக்கு சரியில்லை, காது சரியில்லைன்னு ஒரு பத்து பதினஞ்சு வரணையாவது தட்டி கழிச்சிருக்க மாட்டிங்க.

பத்தாததுக்கு நேரில் வேற போய் பார்த்துட்டு வந்து ரதி மாதிரி இருக்குறவளை குரங்குக்கா கொடுப்பாங்கன்னு ஒரு பத்து வரணையாவது தட்டி கழிச்சிருக்க மாட்டீங்க.

இதுல பெரிய கொடுமை.. உன் மக ஒருத்தனை லவ் பண்றேனு வந்து, தகுதிக்கு மீறியும் அதை முடிச்சு வச்சு.. எத்தனை நாடகம், எத்தனை மழுப்பல்.. ப்ச்” சலித்து கொண்டவன்

ஏதோ சொல்ல வந்து, ராஜி வருவதை பார்த்து பேச்சை நிறுத்தி “உங்க கிட்டலாம் பேசி வேஸ்ட்.. பிளைட் டிக்கெட் கிடச்சிருச்சு, திரும்ப வேலைக்கு போறேன். என்னவும் பண்ணி தொலைங்க, இங்க பொறந்த பாவத்துக்கு நான் அனுபவிக்கலாம், ஆனா கமலி” ம்ஹூம் என தலையாட்டியவன், “முடிஞ்சா, தடை போடாம அவளை அவ வீட்டுக்கு போக விடுங்க” என இருவருக்கும் பொதுவாய் கூறினான்.

“என்ன கிளம்புறியா, இரண்டு மாசம் லீவு போட்ருக்கன்னு ராம் சொன்னான்!” துடுக்காய் கேட்ட ராஜியை, பார்வையாலேயே பொசுக்கிவிட்டான் கிரி.

அவன் ராஜியை பார்த்த பார்வையில் வசந்தா கூட இரண்டடி பின் நகர்ந்து விட்டார்.

“நான் போன பிறகு சீரியல் வில்லி மாதிரி ஏதாவது பண்ணிங்க.. மனுசனா இருக்க மாட்டேன்” இருவரையும் எச்சிரித்து சென்றுவிட்டான்.

திகைத்து போய் ராஜியை வசந்தா பார்க்க, “ம்” என கேள்வி கேட்க “ம்..ம்..” அப்டி தான் தெரிது என்றாள் ஈ என இளித்து கொண்டு.

“அப்புறம் ஏண்டி பிடிக்காத மாதிரியே இந்த துள்ளு துள்ளுறான்?” கொமட்டில் இடித்து கொண்டாள் வசந்தா.

“ஆம்பளைக அப்டி தான்.. முதல்ல முறுக்குறதும், அப்புறம் இளகுறதும்.. சரியாயிட்டாங்க.. நீ வா” என இழுத்து சென்றுவிட்டாள் தாயை.

மாலையில் இவன் மீண்டும் வீட்டிற்கு வரும் போது  பாத்ரூம் கதவினை திறந்து வைத்தபடி துணி துவைத்து கொண்டிருந்தாள்.

“ஏன் கையில் துவைக்கிற, வாசிங் மெஷின் தான் இருக்கே, உங்கப்பா வாங்கி கொடுத்திருக்காறே” என்றபடி கட்டிலில் அமர்ந்தான்.

“பிளக் கனெக்‌ஷன் இல்லையாம். எலக்டீரிசன் வந்தா தான் வேலை ஆகும் போல” என இவள் கூற..

ஆம், வசதியான பிளக் கனெக்‌ஷன் இல்லைல.. என போன் எடுத்து எலக்ட்ரீசனை வர சொல்லிவிட்டு இவளருகில் வந்தான்.

“என்ன” என்பது இவள் பார்க்க

குரலை செருமியவன் “ஏற்கனவே சொன்னேன்ல டிக்கெட் கிடச்சிருச்சு, நைட் பிளைட் கிளம்பிருவேன். நீ உங்க வீட்டுக்கு போறது பெஸ்ட்” என அவள் விழிகளை பார்த்தே இவன் பேச

கையில் இருந்த துணி நழுவி அப்படியே பக்கெட்டில் விழுந்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!