Skip to content
Post Views: 63
அத்தியாயம் 7
பள்ளியில் எப்போதும் முதல் மாணவன் கிரி. படிப்பு விசயத்தில் வகுப்பாசிரியர்கள் எல்லோருக்கும் பிடித்த மாணவன் அவன். வகுப்பில் நிறையபேர் இவனை க்ரஷ் பட்டியிலில் சேர்க்கும் அளவிற்கு அழகனவனும் கூட..
கிரியின் தந்தை தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார் நல்ல சம்பளம் வேறு. ஈட்டும் வருமானம் சராசரிக்கும் மேல தான் அதனால் கையில் பணம் நிற்பதில்லை, செலவும் தாம் தூம் என அதிகமாகவே இருக்கும். சேர்த்து வைக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை வசந்தாவிற்கு.
வருமானத்தில் செலவு செய்து, சேர்த்து வைத்திருந்தால் இன்றைக்கு இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை.
Advertisement
பணத்தை பகட்டுக்காவே பார்த்து பழகியவர். அப்போதே புடவை நகையின் மேல் வெகு ஆர்வம், புதிதாய் புடவைகளை எடுத்து வந்து 3 பீரோக்களில் நிரப்புவார். புதுமாடலில் உடை பார்த்துவிட்டால் போதும் அது எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என வாங்கிவந்து கிரி, ராஜிக்கு போட்டு அழகு பார்ப்பார். பின் ஒரு மாதத்தில், எல்லாம் பழசாகிடுச்சு என புதிதான உடைகளை கூட இல்லாதவர்களிடம் மொத்தமாய் வழித்து கொடுத்துவிடுவார்.
நான்கு பவுன் நகை எடுத்து வந்தால் இரண்டோ, மூன்று வருடங்களில் மாடல் பிடிக்கவில்லை என எக்சேன்சில் நான்கை போட்டு மூன்று பவுனாய் எடுத்து வருபவர்.
பள்ளியில் படிக்கும் ராஜி, கிரி கைகளிலும் சரளமாய் விளையாடும் நூறு ரூபாய் தாள்கள் என செலவு செய்யும் பேர் வழியாய் இருந்தனர் அக்குடும்பம்.
Advertisement
வீடும் வாடகை வீடு தான். இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் எங்கே வீடு கட்ட? சேர்க்க வேண்டிய சொச்ச பணமும் விரலிடுக்கில் வழுக்கி சென்றுவிட்டது.
Advertisement
சரியாக சொல்லபோனால் கிரி பதினொன்றாம் வகுப்பு, ராஜி பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் ஆக்ஸிடன்டில் இறந்து போனார் கிரியின் தந்தை. இறுதி சடங்கிற்கே மோகன் தான் செலவு செய்தார். அதன் பின் இரண்டு மூன்று மாதங்கள் சொச்ச நகையையும் விற்று தான் ஓடியது அவர்களின் வாழ்வு.
ஆட்டம் கண்டது குடும்பம். பீரோவில் இருந்த புடவை உதவிகரம் நீட்டவில்லை. நன்றாக பணம் விளையாடியதில் சொந்தங்களை அப்போது இவர் எட்டி உதைக்க இப்போது முன் வந்து உதவி செய்ய சொந்தம் யாருமில்லை ஒருவரை தவிர. அது கிரியின் சித்தப்பா – மோகன், சித்தி – சுபா.
அவனது தந்தை இறந்த பொழுதே.. மோகன் அவனை அழைத்து வீட்டு நிலவரம் உலக நிலவரம் என அனைத்தையும் பட்ட புட்டு வைத்து, உன்னை நம்பி தான் உன் குடும்பம் என உணர வைத்தவர்.
Advertisement
படிக்கையில் தந்தை இல்லாத காரணம் சிறு வயதிலேயே வீட்டு பொறுப்பை தோளில் வாங்கி கொண்டான். கூடவே பள்ளி படிப்பை கை விட மனதில்லை. அக்கா இன்னும் ஆறு மாதத்தில் முடித்து விடுவாள். அடுத்து இவன்! எப்படியும் ஒன்றரை வருடங்கள் ஆகும்.
மூன்று வேளை உணவு, வீட்டு வாடகைக்காவது பணம் வேண்டுமே!
வருமானம் இல்லாத காரணத்தால் பள்ளி நேரம் போக அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை.
வசந்தா துணிகடைக்கு வேலைக்கு சென்றார். ராஜிக்கு உடல் வளையாது. அதனால் எங்கும் பகுதி நேர வேலைக்கு செல்லவில்லை. ஒரு வழியாய் நடுதெருவிற்கு வராமல் குடும்பம் செல்ல துவங்கியது.
அன்றைய வருட இறுதியில் ரிசல்ட் வர, ராஜி பெயில் ஆனாள். கிரி பனிரெண்டாம் வகுப்பு சென்றுவிட்டான்.
பெயிலாகி்ட்ட “திரும்ப படிக்கிறியா?” அவள் முன் வந்து நின்ற கிரியை பார்த்தவள், முடியாது என மறுத்து விட்டாள்.
“நான் வேலை பார்க்குற துணிகடைக்காவது வாடி” என அழைத்தார் வசந்தா, அப்போதும் முடியாது என்று விட்டாள்.
அப்போதே கிரிக்கும் ராஜிக்கும் ஆவதில்லை. பொறுப்பில்லாதவள் என தலையை உலுக்கி கொள்வான்.
அப்போது தான் செந்தில் பழக்கமானான், தாய் தந்தையைப் போல், இவளும் அழகு.. அழகில் விழுந்தான் செந்தில். வீட்டிற்கு தெரியாமலேயே காதல் சந்திப்புகளும் எந்த வித தடையும் இல்லாமல் அரங்கேறி காதல் நன்றாகவே வளர்ந்தது.
அவ்வப்போது மோகன், அவரது மகன் ராம் என இருவரும் அவர்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை வசந்தாவிற்கு தெரியாமலேயே கிரிக்கு செய்வர். கத்தாரில் இருக்கும் ராம் அவ்வப்போது போனில் பேசிகொள்வான்.
இவன் அதே சூப்பர் மார்க்கெட் சென்று விட்டு பள்ளிக்கூடமும் சென்று விடுவான். பள்ளி நேரம் தவிர்த்து மீத நேரம் படிக்க நேரமில்லை. ஆனாலும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றான் தான்.
மருத்துவ கல்லூரியில் படிக்க ஆசை.. யாராவது உதவி செய்ய மாட்டார்களா? நீட் படிக்க வேண்டுமே, கோச்சிங் செல்ல வேண்டுமே! ஒருவேளை நீட்டில் பாசானால்? மெடிக்கல் சீட் கிடைத்துவிட்டால்?
இத்தனை ஆசைகள் நிறைவேறினாலும், வீட்டு செலவும், கல்லாரி பீஸ் இரண்டும் முன் வந்து நின்றது. இரண்டிற்கும் வசந்தா, கிரியின் மொத்த சம்பளத்தை சேர்த்தாலும் பத்தாதே!
இப்படியே நான் பார்ட்டைமில் வேலை பார்த்து கூட என் குடும்பத்தையும் பார்த்து கொள்வேன் ஆனால் பீஸிற்கு என்ன செய்வது?
கண்களில் ஆசையோடும் எதிர்பார்போடும் அவர்கள் ஊரில் இருந்த எஜூகேஷன் ட்ரஸ்ட் எல்லாவற்றையும் சல்லடை போட்டு தேடி, உதவியை நாடி, இல்லையென அவர்கள் மறுத்து, சலித்து தூக்கி போட்டான் தன் எம்பிபிஎஸ் கனவை.
இறுதியில் சித்தப்பாவிடம் வந்து நின்றான். “நம்ப ராம் வேலை பார்க்குற இடத்திலேயே சேர்த்துவிட சொல்றேன். முதலில் சம்பளம் கம்மியா தான் இருக்கும் அடுத்து போக போக கையில் தங்கும். உள்ளூரில் இருந்தா சம்பாத்தியம் கையில் தங்காது, அதுக்கு தகுந்த மாதிரி படிப்பு? எதையாவது தேடலாமே கிரி!” சுற்றி வளைக்காமல் பேசினார் மோகன்”
“அதுக்கு பிளஸ்டூ போதுமா சித்தப்பா” கள்ளமில்லாமல் கேட்டான்.
“ஏதோ டிப்ளமோ கோர்ஸ் சொன்னான் ராம்.. படிப்பு வேலை இரண்டையும் ராம் கிட்ட விசாரி. பிடிச்சா ராம் கிட்ட போ.. இல்லைன்னா உனக்கு பிடிச்ச கோர்ஸ் சொல்லு, பீஸ் நான் கட்டிடறேன். என்னால் முடிஞ்சதை நான் பன்றேன்” என சொல்ல
“எனக்கு பிடிச்சதா? அது எத்தனை ஊர் தள்ளி இருக்கோ?” தன் நிலையை எண்ணி வருந்துகையிலேயே “மூஞ்ச இப்படி வைக்காதடா பாத்துகலாம்” என தோளில் தட்டி விட்டு சென்றார்.
டாக்டர் கனவை எரித்து விட்டான். என்ஜினிரியங்? என யோசித்து அவ்வளவு பீஸை சித்தப்பா தலையில் கட்ட மனமில்லை.
சரி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் போலாம். ஆனால் விசாரிக்கனுமே! என ஆராய்ச்சியில் இறங்கினான். ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் படித்து முடித்த தனக்கு தெரிந்தவர்கள், ராமின் நண்பர்கள் என ஒரு வாரமாய் ஆராய்ச்சியில் இறங்கினான்.
அனைவரிடம் இருந்தும் வந்த ஒரே பதில்
“நானும் ஐஞ்சாறு வருஷமா இந்த ஸ்கூலில் வேலை பார்க்குறேன். ஆரம்பத்துல எட்டாயிரம், இப்போ பதினோராயிரம் அவ்வளவு தான் அம்மா அப்பாவையே பார்க்க முடியல, கல்யாணம் எல்லாம் கனவு தான் போல?”
“கம்பெனியில் சூப்பர்வைசரா இருக்கேன்.. சொல்லக்கிற வேலை தான் கிரி.. ஆனால் இன்கிரிமெண்ட் ஆமை வேகத்தில் தான் ஏறுது. ஆனா செலவும், ஒர்க் பிரஸரும் முயல் வேகத்துல போகுது இந்த வேலை வேணாம்டா.. வேற பாரு”
“நீ வேணா கவர்மெண்ட் எக்ஸாம் எழுதேன், கோச்சிங் சென்டர் ஏதாவது போடா.. லக் இருந்தா கவர்மெண்ட் வேலையும் கிடைக்கும்” இப்படி ஆளாளுக்கு எதிர்மறையை விதைத்துவிட இறுதியாய் அண்ணன் ராமிடம் போய் நின்றான்.
அவன் சொன்ன மூன்று வருட டிப்ளோமோ இன் கெமிக்கல் டெக்னாலஜி, பீஸூம் கம்மி, அருகில் இருக்கும் ஊரில் தான் கல்லூரி வேறு. அலைச்சல் இல்லை.
சேர்ந்து விட்டான். படிக்கும் போதே அதே சூப்பர் மார்க்கெட் வேலை, படித்து முடித்தபின் ராமுடன் சேர்ந்து கொண்டான்.
வந்துவிட்டான் இரண்டு பிளைட் மாறி கத்தாருக்கு, அங்கே நஜ்மா எனும் தமிழர்களுக்கான குடியிருப்பு மற்றும் தொழில் வாளாகத்தில் தான் இவனது இருப்பிடமும்.
அங்குள்ள பிரபல தொழிற்சாலையில் ஐந்து வருடங்களாக ஹெல்ப்பராக, பிறகு கெமிக்கல் சூப்பர் வைசராக இருந்து, இந்த வருடம் தான் அசிஸ்டன்ட் கெமிக்கல் என்ஜினியராக பணியாற்றுகிறான்.
நஜ்மாவில் முக்கால்வாசி பேர் தமிழர்கள் என்பதால் தமிழர்களுக்கான ஹோட்டல்களும், கடைகளும், சூப்பர்மார்க்கெட்களும், மற்ற பொருட்களுக்கான சந்தைகளும் அதிகளவில் இருக்கும். அதனால் நிறைய சிரமம் அவனுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.
அறைக்கு நான்கு பேர் என தங்குமிடம் சார்ந்த வசதிகளை தொழிற்சாலையே கொடுத்திருக்க, அண்ணனுடனேயே தங்கி கொண்டான். தவிர மேற்கொண்டு எதுவும் பிரச்சனையில்லை.
“சம்பளத்தை முழுசா அனுப்பிடுடா உனக்கு தேவையானதை நான் பார்த்துகிறேன்” அவனை புரிந்தவனாய் ராமும் தோள் கொடுக்க இவன் வாங்கும் சம்பளத்தில் வீட்டு செலவுக்கு அனுப்பியது போக மித பணம் அத்தனையும் மோகனுக்கு அனுப்பி விடுவான். தந்தையை போல இவன் ஏமாற தாயாரய் இல்லை.
கிரி வேலைக்கு சென்ற மூன்றாம் வருடம் இவன் பெயரில் இடம் வாங்கி போட்டு, அதில் லோன் எடுத்து அதற்கு அடுத்த வருடம் வீடும் கட்டி கொடுத்துவிட்டார். வாடகை வீடு ஒன் பிஹச்கே வீடாக மாறியது.
error: Content is protected !!