Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 8 1

அத்தியாயம் 8

திருமண நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஊர் வந்து சேர்ந்தான். மறுநாள் நலங்கு வைக்கும் போது தான் பார்த்தான் நிஜ கமலியை. அதுவும் மேடையில் வைத்து. அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது அவன் முகத்தில். நெஞ்செல்லாம் படபடத்து போனது.

நிஜ கமலியை பாதியாக குறைத்தால் எப்படி இருப்பாளோ அப்படி இருந்தாள் ஏஐ கமலி. முகம் ஓரளவு ஒத்து போனதை வைத்து தான் ஒரே நொடியில் கண்டு கொண்டான் இவள் கமலி என.

உறுதி செய்ய சென்ற போது கமலியை வசந்தாவும் ராஜியும், நேரில் பார்த்திருப்பார்களே! அப்படியானால் பெண் வீட்டார் பக்கம் பிரச்சனையில்லை.. பிரச்சனை தன் வீட்டார் பக்கம் தான் என புரிந்தது.



Advertisement

இது எப்படி சாத்தியம், என தாயையும், தமக்கையையும் மேடையில் இருந்தபடியே இவன் பார்த்தான். இவர்களின் திருதிருத்த முழியே காட்டி கொடுத்தது அவர்களால் தான் சாத்தியம் என.

கண்கள் கூட கலங்கிக்கொண்டு வந்தது, மூச்சடைக்கும் உணர்வும் சேர்ந்து கொண்டது. மேற்கொண்டு அவனுள் ஏதோ நடக்கிறது, ஆனால் அது என்னவென்று தான் தெரியவில்லை.

மோதிரம் அணிய சொன்னார்கள், மாலை மாற்ற சொன்னார்கள், திருநீரு சந்தனம் குங்குமம் என அவன் கையில் கொடுத்து வைக்க சொன்னார். சொன்ன அத்தனையையும் செய்தான்.

Advertisement

அதன் பின் கடந்து அவளுடன் மேடையில் கடந்து சென்ற நிமிடங்கள் அனைத்தும் அவன் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள்.

Advertisement

அதை விட கொடுமை, ‘போனில் நன்றாக பேசியவன் ஏன் இப்போது முகத்தை கூட பார்க்க மாட்டேன் என்கிறான்’ என்பது போல் அவ்வப்போது கமலி பார்த்த பார்வைகள் அவன் உயிர் வரை ஊடுருவியது.

அந்த பார்வையை தாங்கி கொண்டு, மேடையேறும் அத்தனை பேரையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்வதே கொடுமையாய் இருந்தது கிரிக்கு.

ஒரு வழியாய் எல்லாம் முடிய ராஜியையும், வசந்தாவையும் இரவில் பிடிபிடியென பிடித்துவிட்டான் கிரி.

Advertisement

“வந்த ஒரே பதில், நம்ப வசதிக்கு அவ்வளவு தான் கிடைக்கும் கிரி.. வந்த வரணெல்லாம் அப்படி தான் இருந்தது. இருக்க மேல தேட முடியல.. எங்க நீ ஏத்துக்க மாட்டியோன்னு ஏஜல நான் தான் மாத்தி கொடுத்தேன்” என ராஜியும்

“ராஜி, வந்த நல்ல வரணையெல்லாம் தட்டி கழிச்சு தான் உருப்படாதவனுக்கு வாக்கபட்டா.. நீயும் அப்படி போய்ட்டா? உனக்கும் வயசு ஏறுதே, கமலியும் நல்ல பொண்ணு கிரி, குணமானவ” என வசந்தா சொன்ன காரணங்கள் ஏற்புடையாதாய் இல்லை தான்.

ஆனால் அதே போல் நல்ல வரண்கள் நீ் நான் என போட்டிபோட்டு கொண்டு வந்து நிற்க, இவனுக்கென பணம் கொட்டி கிடக்கிறதா? சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படிப்பாவது இருக்கிறதா? சொத்துகள் இருக்கிறதா? ம்ஹூம்… வீடு மட்டும் தான். அதுவும் லோனில்போட்டு போன மாதம் தான் முடித்தான் வீட்டு கடனை. சொந்தமாய் பைக் கூட இல்லை. இப்படி தான் போனது இவன் எண்ணங்கள்.

அதில் அவன் முகம் கசங்கி போனது. “இதோ இப்போ விளாவாரியா சொல்ற மாதிரி, அப்போவே சொல்லி, அவளோட ஒரிஜினல் போட்டோவை அனுப்பிருக்கலாமே? எதுக்கு வேற போட்டோவை அனுப்பின?” இவ்வேலை ராஜியுடையதாக தான் இருக்கும் என அவளிடமே கேட்டான்.

“நீ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு, ஒத்தைல நின்னுட்டா, அதான் ஏஐல போட்டு அனுப்பினேன், அம்மாக்கு ஒன்றும் தெரியாது. அவரை திட்டாதே.. நீயும் கல்யாணத்துக்கு ரெடி ஆகற வழிய பாரு” மனசாட்சியே இல்லாமல் பேசி சென்றுவிட்டாள் ராஜி.

ஏற்கவோ மறுக்கவோ நினைப்பதற்கு கூட நேரமில்லை அவனிடம். மனதில் திரித்து வைத்திருந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில், உடலளவிலும், மனதளவிலும் சற்றும் பொருத்தமில்லா கமலியை தான் தனக்கானவள் என ஏற்று கொண்டே ஆக வேண்டிய நிலை. நிராகரிப்பதற்கோ, மறுபரிசீலனை செய்யவோ அவனுக்கு வாய்ப்புகள் கொடுப்படாத பட்சத்தில்  என்ன செய்திட முடியும் அவனால்.

“யாரையாவது காதலித்திருக்கலாமோ, ஊர் சுற்றி இருக்கலாமோ, இளமையை கொஞ்சம் கொஞ்சம் கொண்டாடி இருந்திருக்கலாமோ” எண்ணங்கள் சுயநலமாய் யோசிக்க துவங்கியது. கண் போன பிறகு இயற்கையை ரசிக்க முடியாமா என்ன?

“பிடித்தவனை பல வருடங்களாய் காதலித்து போராடியாவது திருமணம் செய்து கொண்ட ராஜிக்கு இருக்கும் தைரியம் தனக்கில்லை. ஆம்பளையா நானெல்லாம்” கட்டுக்கடங்கா  ஆத்திரம் தான் மேலோங்கியது.

“ஏன் எனக்கு மட்டும், இத்தனை நிராசைகள்? எதற்குமே தகுதியில்லாதவனா நான்? ஆசைப்பட்ட எதுவுமே நிலைக்காதா”

யோசித்து யோசித்து மூளை சூடாகி விடியா இரவாய் கழிந்தது.

ஆயிரமாயிரம் கனவுகளோடு கை கோர்க்க வேண்டிய துணையின் கரத்தை,  வேண்டா வெறுப்பாய் பிடித்தான்.

அதன் பின் நடந்தது தான் தெரியுமே! லீவை கேன்சல் செய்துவிட்டு, வெளிநாடு வந்து விட்டான்.

‘இவன் வருவதை உணர்ந்து ராம் தான் பீதியானான். என்னாச்சுன்னு தெரியலை. இரண்டு மாசம் லீவு எடுத்தான், இப்போ பதினைந்து நாளில் வந்து நிக்கான். இந்த மடப்பயலுக்காக தான் நான் கூட லீவு போடாமல் இருந்தேன்’ விசயம் என்னவென தெரியாமல் டென்சனாகி கொண்டிருந்தான்  ராம்.

ராமும், கிரியும் ஒரே கம்பெனி என்பதால் இருவருக்கும் ஒரே நேரத்தில் அதிக நாட்களுடன் விடுமுறை தரவில்லை. “நான் அங்க வந்து என்ன பண்ண? வந்துட்டு உடனே திரும்பனும். அப்பா எல்லாம் பாத்துப்பாங்கடா.. எனக்கும் சேர்த்து நீயே லீவு எடுத்துக்க” என மகிழ்ச்சியாய் தான் அனுப்பி வைத்தான் ராம். அதை விட பத்து மடங்கு சந்தோஷமாய் சென்றவன் தான் கிரி.

இன்று பத்து மடங்கு சோர்வுடன் வந்தவனை கண்டு அதிர்ந்து தான் போனான்.

“என்னடா, அதுக்குள்ளயும் வந்துட்ட, லீவ் இன்னும் இருக்கே..” கேள்வியாய் பார்த்த ராமின் பார்வையை சந்திக்க முடியாமல் “என்கிட்ட எதுவும் கேட்காதண்ணா” உறுதியாய் சொல்லிவிட்டு இவன் அங்கிருந்து நகர்ந்திட, ராம் அவனை கட்டாயபடுத்தவில்லை.

உடனே மோகனுக்கு தான் போன் செய்தான் ராம். அவரும், “என்னனு தெரியலைடா.. நான் கேட்டதுக்கு, எமர்ஜன்சி வர சொல்லிட்டாங்கனு தான் சொன்னான்” என்றார் மோகன். ‘நமக்கு தெரியாமல் அப்படி என்ன கம்பெனியில எமர்ஜன்சி?’ என யோசனைகள் ஓடினாலும்

“கமலியால எதுவும் பிரச்சனையாப்பா?” இவன் இழுக்க

“ச்சே, நல்ல புள்ளடா, இரண்டு பேருக்கும் சண்டை மாதிரியெல்லாம் தெரியல, வேற ஏதோ, சொல்ல மாட்றான், கல்யாணம் ஆனதிலிருந்தே சரியில்லைடா” என இவரும் உறுதியளித்திட, “சரிப்பா நான் விசாரிக்கேன்”. என வைத்து விட்டான்.

அவனாக சொல்லாமல் எப்படி கேட்பது? அவனா வரட்டும்! என சிறிது நாட்கள் கிரியின் போக்கிலேயே விட்டுவிட்டான் ராம்.

அதே போல் பழையபடி கிரியும் உலாவ துவங்கிட, ராம் நிதானமடைந்தான்.

ஒரு மூன்று மாதங்கள் கடந்திருக்கும், சாப்பிட்டு முடித்த பிறகு “என்னடா இன்னும் கம்பெனியில லீவு கேட்காம இருக்க” ஆரம்பித்தான் ராம்.

நெற்றி சுருக்கியவன் “என்னை எதுக்குணா லீவு போட சொல்ற?” கிரி கேட்டான்.

இவன் புரிஞ்சு தான் பேசுறானா? யோசித்தவன் “வீடு கட்டுனதை தான் சொல்லலை.. பால் காய்ச்ச போறீங்க.. அதுக்காவது அழைப்பு இருக்கா இல்லையா?” என ராம் கேட்க

“என்ன, சொல்றண்ணே! புரியலை.. யார் பால் காய்ச்சு வச்சிருக்கா? யாருக்கு அழைக்கனும்?” கிரி குழப்பமாய் கேட்க

“என்ன விளாடுறியா.. நீ எடுக்க சொன்னனுனு தான் பெரியம்மா லோன் போட்டு மாடி வீடு எடுத்திருக்காம், அடுத்த வாரம் பால்காய்ச்சாறாங்களாம். அதுக்கு அடுத்த நாளே ராஜி பேமிலியோட ஷிப்ட் ஆகுதாமே! அப்பா போன் பண்ணாரு” ராம் எரிச்சலாய் கூற

“தெரியாம பேசாத.. நான் கஷ்டபடும்போதெல்லாம் கை கொடுத்தவங்க நீயும் சித்தப்பாவும். அப்படி உங்களுக்கு தெரியாம நான் எப்படி வீடு கட்ட முடியும். இப்போ இருக்கும் வீடே சித்தப்பா மூலம் தான் சாத்யமே ஆச்சு! அவரில்லாம மாடி வீடா.. வாய்ப்பே இல்லை! ஏன்னா பணம் மொத்தமும் சித்தப்பாகிட்ட தான் இன்னும் இருக்கு?”

“நீ லோன் எடுத்திருக்கன்னு சொன்னாங்க அப்பா” இப்போது இவன் குழப்பமானான்.

“லூசா நீ.. வீடு, நிலம் இரண்டும் எம்பேர்ல இருக்கு, நான் இங்க இருக்கும் போது, நான் கையெழுத்து போடாம எந்த பேங்க்ல லோன் தாராங்க?”  எரிச்சலாய் கேட்டான் கிரி.

அவனையே பார்த்தவன், போனை எடுத்து மோகன் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி இருந்த போட்டோவை எடுத்து அவனிடம் காட்டினான். என்னவோ என பார்த்த  கிரி திகைத்து போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!