Skip to content
Post Views: 78
அது அவன் வீடு தான்.. முன்பு ஒரு அடுக்காய் இருந்தது இப்போது இந்த மூன்று மாதத்தில் இரண்டடுக்காய் வளர்ந்து, வீடு முழுமை பெற்று, ஒரு குடும்பம் வசிப்பதற்கு நான் தயராகிவிட்டேன் என கம்பீரமாய் நின்றது.
பார்த்தவனின் கண்கள் சிவந்து, கோபம் உச்சிக்கு ஏறியது.
அங்கே நள்ளிரவென்றும் பாராமல் வசந்தாவிற்கு அழைத்தான். இரண்டு மூன்று முறை அழைத்தும் எடுக்கவில்லை.
அடுத்து யோசிக்காமல் ராஜிக்கு அழைத்து விட்டான் அவளுமே நான்கைந்து முறையை விட்டு ஆறாவது முறை தான் எடுத்தாள்.
Advertisement
“என்ன கிரி.. இன்னனேரம் பேசுற?” பதற்றம் தெரிந்தது இவள் குரலில்.
“வீடு கட்டுற பிளான் யாரோடது, பணம் ஏது?” இரண்டே கேள்வி தான். தூக்கமெல்லாம் தூரபோக, எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.
யார் சொல்லியிருப்பா, எல்லாம் சித்தப்பா வேலையா தான் இருக்கும்! என்ற எரிச்சலில், தயக்கமே இல்லாமல் “எனக்கு தான் வீடு, கமலி நகையை பேங்கில் வச்சு தான் வீடு எடுத்தேன்! என் மாமியா நை நைன்னு புடுங்குறா, சீர் எதுவும் செய்யலன்னு சொல்லி தெரு முழுக்க அசிங்க படுத்துறா. நீயும் செய்ற மாதிரி இல்லை. அதான் நானே எடுத்துக்கிட்டேன். கீழ் வீட்டில் நீ இரு.. மாடிபடி கூட வெளி பக்கமா தான் இருக்கு, வெளி பக்கமிருந்து புழங்கிக்கிறேன். நான் பாட்டுக்கு இருந்துகிறேன். உனக்கோ, உன் பொண்டாட்டிக்கோ இனி எந்த வகையிலும் தொந்தரவு தர மாட்டேன். அங்க வாழ விடாமல் ஏதாவது பிளான் பண்ணின” என நிறுத்தியவள் “என் வாழ்க்கையை முடிச்சிப்பேன்” அவனது பதிலையும் எதிர்பாராமல் வைத்தும் விட்டாள்.
Advertisement
அக்காவின் இப்படி ஒரு பதிலில் சில்லு சில்லாய் உடைந்து போனான். அந்தபக்கம் போன் வைத்தது கூட தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் தனித்து விட்டதை போலானான் கிரி.
Advertisement
இவன் முகத்தை பார்த்த ராம் கூட திகைத்து “டேய், டேய்..” என உலுக்கினான்.
இவன் சத்தத்தில் அந்த வீட்டில் இருந்த இன்னும் இருவர் வந்து “என்னாச்சு பாஸ்..” “எதுவும் பிரச்சனையா” என வந்து நிற்க
“இல்லை ஒன்னுமில்லை” என அவர்களிடம் மறுத்த ராம்,
Advertisement
“வாடா” என கிரியை இழுத்து கொண்டு லிப்ட்டை நோக்கி சென்றான். நான்கு தளங்களை கடந்து மொட்டை மாடிக்கு வரும் வரையிலும், எங்கோ வெறித்திருந்த இவனை ராம் முறைத்து கொண்டு தான் இருந்தான்.
வந்த பிறகு கைபிடி சுவரின் அருகே அவனை அமர வைத்து இவனும் அமர்ந்தான்.
“உங்கப்பா இறந்தப்ப கூட இந்தளவு இடுஞ்சு போய் உன்னை பார்த்தில்லை கிரி, என்னடா பிரச்சனை?” பதற்றம் விடவில்லை ராமிற்கு.
விரக்தியாய் சிரித்தபடி அன்னாந்து வானம் நோக்கினான் கிரி. பக்கென இருந்தது ராமிற்கு
மேலே பார்த்தபடி இருந்த முகத்தை தன்புறமாய் திருப்பியவன், சிறிதும் யோசிக்காமல் பொளீரென விட்டான் ஒரு அறை.
சிரித்த இதழ்கள், சுருண்டு போக, நிமிர்ந்திருந்த தலை இப்போது குனிந்திருந்தது.
“சொல்லித் தொலைடா.. எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே வச்சு நெஞ்சு வெடிச்சு செத்துடாத! ஒரு நாளும் கமலி கிட்ட கூட போன் பேசி பார்க்கலை, கல்யாணம் ஆனவன் தானே நானும்” ராமும் இவனை நினைத்து கலங்கி போனான் இவன் செய்கையில்.
“எதுவுமே பிடிக்கலை” என்றான் தலை குனிந்த படியே
“கடன் தொல்லை தாங்காம நான் வந்தேன், பொழப்பை தேடி நீ வந்திருக்க, இதோ நம்ப கூட இருக்கானுகளே, வீட்ல இருந்து அடிச்சு பத்தி விட்டு வந்திருக்கானுக. ஆமா அப்படியே எல்லாரும் பிடிச்சு தான் வாழ்ந்துட்டு இருக்குற மாதிரி.. இவனுக்கு மட்டும் பிடிக்கலையாம். மயி* தெளிவான சொல்லி தொலைடா” என
“கமலிய பிடிக்கலை.. அவளோட வாழ பிடிக்கலை” நோக்கி திணறி வந்தன வார்த்தைகள்.
மயக்கமே வரும் போல இருந்தது ராமிற்கு.. “என்னடா சொல்ற?” கல்யாணத்துக்கு முன்னாடி போனில் நல்லா தானே பேசிட்டு இருந்த..”
அதற்கு கிரியோ பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து லாக்கை விடுவிக்க, ஸ்கீரின் சேவரில் முழுதாய் இருந்தாள் அழகோவியமான கமலி.
“அம்மா அனுப்பினது இந்த போட்டோ” என சொல்லிவிட்டு, வாட்சப்பில் தன் நண்பர்கள் அனுப்பி வைத்த கல்யாண போட்டோவை எடுத்து காண்பித்து “இது..” காட்டிவிட்டி என விரக்தியாய் இவன் சிரிக்க.. சகலமும் புரிந்து போனது ராமிற்கு.
“கமலியை எனக்காக பார்க்கலை, உன் அம்மாக்காக, ராஜிக்காக பார்த்திருக்குறாங்க, கமலியை வச்சு, ராஜி வாழனும், ரொம்ப நல்லா வாழனும்னு பிளான் போட்ருக்கா” இவன் சொல்ல சொல்ல, கிறு கிறுத்து போனான் ராம்.
“ராஜிக்கு சீர் எதுவுமே நான் செய்யலையாம். அதனால் அவளே கமலியோட நகையை வாங்கி வீடு எடுத்துகிட்டாளாம்”
“எனக்கு புடிச்ச எதுவுமே என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காதாண்ணா” கிரி என வாய் விட்டு கேட்க, ஆணின் மனம் இன்னொரு ஆணுக்கு தான் தெரியும் என்பது போல, கிரியை முழுதாய் உணர்ந்தவனாய் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் ராம்.
அதன் பின் அவன் முகத்தை பாராமலேயே சொல்லிவிட்டு வேகமாய் எழுந்து கீழே இறங்கி சென்றுவிட்டான் கிரி.
அவன் சென்ற அடுத்த நொடி, நேரம், காலம் பாராமல் இவனுமே வசந்தாவிற்கு போன் அடிக்க, எடுக்கவில்லை அவர்.
ஏனோ கிரியின் கோபம் இவனிடமும் தொற்றி கொண்டது. மனதே ஆறவில்லை. எப்படி ஆளாளுக்கு இவனை ஏமாற்ற மனது வந்தது என சுவற்றில் சாய்ந்து கண்மூடி அமர்ந்துவிட்டான் ராம்.
மறு நாள் காலை விடியலில் போன் அடிக்கும் சத்தத்தில் கண் விழித்தான் ராம். அன்று விடுமுறை வேறு. அருகே கிரி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அடிப்பது தன் போன் தான் என வேகமாய் எடுத்தான் ராம்
அது வசந்தா என தெரியவும், அட்டெண்ட் செய்தபடி எழுந்து வெளியே வந்தான்.
“என்னடா நேத்து நீயும் கிரியும் மாத்தி மாத்தி போன் பண்ணிருக்கீங்க?, அவனுக்கு அடிச்சா ஸ்விட்ச் ஆப். அவனை விடு, நீயேன் போன் பண்ண?என்னடா பெரியம்மா, இருக்குறது இப்போ தான் உன் கண்ணுக்கு தெரியுறனா?” வள வளவென்று வசந்தா பேசிகொண்டே செல்ல
“முதல்ல உனக்கு கண்ணு தெரியுதா.. பெரிம்மா? இல்லை ப்யூஸ் போயிடுச்சா” ராம் காட்டாமாய் கேட்டதிலேயே வசந்தாவிற்கு ப்யூஸ் போனது.
“டேய்.. என்னடா வார்த்தையெல்லாம் ஒருமார்க்கமா வருது”
“மரியாதை கொடுத்து பேசுறேன்னு சந்தோஷபட்டுக்கோ.. கிரி இடத்துல நான் இருந்திருந்தா அக்கா அம்மானு கூட பார்த்திருக்க மாட்டேன்”
“டேய் டேய், நிறுத்துடா.. நாங்க என்னடா பண்ணோம்”
“பண்ணின வரை போதும்.. பொண்ணா பார்த்திருக்க பொண்ணு.. கிரி இருக்கும் அழகுக்கு..” “ச்சை” முகம் சுளித்தான்.
பிரச்சனை இவன் வரை சென்று விட்டதா? என வசந்தா கடு கடுக்கும் போது அங்கு வந்தாள் ராஜி.
நேற்று கிரி போன் செய்ததை வசந்தாவிடம் சொல்ல காலையிலேயே கிளம்பி வந்துவிட்டாள் ராஜி, வந்தவள் வசந்தாவின் காதில் போனை பார்த்துவிட்டு
“யாரு.. போனில்? ஏன் மூஞ்சு இப்படி போது” என நச்சரித்ததில்.. “இந்த நீயும் அனுபவி” என ஸ்பீக்கரில் போட்டுவிட்டார் வசந்தா.
“கிரிக்கு, ஒரு கெட்ட பழக்கமில்லை, சினிமா அங்கே இங்கே என இவன் பிரண்ட்ஸலாம் சுத்தும் போது குடும்ப பாரத்தை இவன் தோளில் தூக்கி வச்சுடீங்க, படிப்பு ஒரு பக்கம், பார்ட்டைம் வேலை ஒரு பக்கம்னு அவன் இளவட்டமே பேச்சு. உங்களுக்கும், ராஜிக்கும் ரெஸ்ட் கொடுத்திட்டு, ஆறு வருசமா தனக்குன்னு வாழாமல் ரேஸில் ஓடுற மாதிரி ஓடி சம்பாத்யம் பண்ணி, வீடு கட்டி கொடுத்து உங்களை யார்கிட்டயும் கையேந்த விடாம பார்த்துகிட்டவன்.
இப்படிபட்ட மகனுக்கு எப்படி பொண்ணு பார்த்திருக்கனும், நீ எப்படி பார்த்து வச்சிருக்க. நீ நிஜமாவே அவனை பெத்தெடுத்தியா இல்லை தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தியா?” முழு மூச்சுக்கும் எகிறினான் ராம்
“முழுசா புரியாம பேசாதடா” வசந்தா தடுமாற
“ஆமாம், அறைகுறையா புரிஞ்சதுக்கு உங்களையெல்லாம் வெறுத்துட்டேன்.. முழுசா தெரிஞ்சா, வீட்டோட வச்சு எரிச்சாலும் எரிச்சுடுவேன்” இவன் கத்தி கொண்டிருக்கையிலேயே வந்துவிட்டான் கிரி.. பேசுவதை வைத்தே தன் வீட்டு ஆட்கள் தான் என தெரிந்தது.
அவனிடமிருந்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டான் கிரி.
“டேய் நான் ஓரிஜினல் போட்டோவை தான்டா அனுப்ப சொன்னேன்.. ராஜி தான்..” என இவர் சொல்லி முடிக்கும் முன்
“உன் வயசென்ன அவ வயசென்ன? அவளுக்கு தான் அறிவில்லை, உனக்குமா அறிவில்லை. நீ என்ன சொன்னாலும் மறு பேச்சு பேசிருக்கானா அவன். அவனுக்கு துரோகம் பண்ண எப்படி தான் மனசு வந்ததோ?”
“துரோகம் அது இதுன்னு என்னடா இப்படியெல்லாம் பேசுற” இன்னும் மகனின் துன்பம் புரியவில்லை வசந்தாவிற்கு.
error: Content is protected !!