Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 9 1

அத்தியாயம் 9

கிரி பேச்சை கேட்டதிலிருந்து வசந்தாவும் சரியில்லை, ராஜியும் சரியில்லை.

எப்போதுமே தன் பேச்சை மீறாதவன், இன்று என்னவெல்லாம் பேசிவிட்டான், எப்படியெல்லாம் பேசிவிட்டான், மனதே ஆறவில்லை வசந்தாவிற்கு.



Advertisement

பிடிக்காத திருமணத்தை நடத்தி வைத்த போது கூட பின் வாங்காதவன், வீடு கட்டியதில் என்ன செய்து விட போகிறான் என அசால்ட்டாய் இருந்து விட்டார் வசந்தா.

ஆனால் திருமணமான நாட்களில் இருந்து, அவன் பேச்சு, நடவடிக்கை இரண்டுமே வசந்தாவிற்கு எதிராக தான் இருந்திருக்கிறது. மகனின் திருமணத்திற்கு முந்தைய மகிழ்ச்சி சுமந்த முகமும், திருமணத்திற்கு பின்பான கலையில்லாத முகமும், அதன் பின்னான விரக்தியான பேச்சும், மகிழ்ச்சி சிறிதும் இல்லாமல் வழித்தெடுத்தது போன்ற இறுக்கமும் கண் முன் வந்து போனது.

ஆனால் இன்றோ கிரி, ராஜிக்கு செய்ததெல்லாம் இவன் சொல்லி காட்ட காட்ட, நிறைய தான் செய்து விட்டானோ! என்ற எண்ணமே எழுந்தது.

Advertisement

ராஜி, ராஜி என பெண் பிள்ளைக்காக பார்த்து, அவள் வாழ்க்கையை பிடித்து வைக்க,  ஆண் பிள்ளையை கைவிட்டுவிட்டாயே! என மனசாட்சி கூட கேட்டது.

Advertisement

“என்னம்மா இவன் இப்படி பேசுறான்” கடுகடுத்த முகத்தோடு ராஜி பேச

அது வரை விட்டத்தை பார்த்திருந்தபடிக்கு யோசித்த வசந்தா, மகளின் புறம் திரும்பி, சலித்தபடி “எப்போவாவதுன்னா பரவாயில்லை, பயங்கர விவரமா அவன் கிட்ட இருந்து எப்போவுமே புடுங்கிட்டே இருந்தா, பேச தான் செய்வான்” என்றார்.

“என்ன புதுசா உம் மகனுக்கு சப்போர்ட்டா!” ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தாள் ராஜி.

Advertisement

“சப்போர்ட் பண்ணிருந்தா, அவன் எனக்கு கொடுக்குற பணத்தை மிச்சம் வச்சு இரண்டு வருசத்துக்கு ஒருக்கா இரண்டு லட்ச ரூபா, சீட்டு போட்டு, இந்த நாழு வருசத்துல நாழு லட்ச ரூபாயை உன் கையில் தந்திருக்கவும் மாட்டேன், அதை வாங்கி நீ தங்கத்துல தாலி போட்டும் சுத்திட்டு இருக்க மாட்ட. வாய்க்கு ருசியா சாப்பிடாமல், கஞ்சி, கூல்னு குடிச்சிட்டு உனக்கு தாரை வாத்தேன்ல நீ இதுவும் சொல்லுவ.. இதுக்கு மேலயும் சொல்லுவ” என்றிருந்தார் வசந்தா.

“ஓ.. சொல்லி வச்சு பேசுறீங்களா இரண்டு பேரும்.. கொஞ்ச நேரம் முன்னாடி கிரி, இப்போ நீ.. செஞ்சதெல்லாம் சொல்லி காட்டுறதுக்கு எதுக்கு செய்யனும்?* வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் ராஜி.

“அவன் எங்கடி செஞ்சான், செய்ய வச்சிட்டியே!” வசந்தாவின் குரல் உயர்ந்தது.

என்ன பேசுகிறோம் என தெரியாத ராஜியும் “இப்போ என்ன உன்கிட்ட இருந்தும் உன் மகன் கிட்ட இருந்தும்  வாங்கினதை வட்டியும் முதலும் கொடுத்திடவா! அப்போவாவது வாயை மூடுவீங்களா?” என

“ஓஹோ.. குடுவேன் நானோ, கிரியோ வேணாம்னு சொல்ல போறதில்லை” எப்போதும் ராஜிக்கு சிங்க்ஜான் தட்டி கொண்டிருப்பவர், மனதில் தோன்றியதை அப்படியே கேட்டு விட்டார்.

“நீ கேட்டாலும் திருப்பி தர முடியாது” மல்லுக்கு நின்றாள் ராஜி.

ம்க்கும் இவளுக்காவது ரோஷமாவது? என நினைத்தவர் “தெரியுதில்ல.. உன்னாலயோ, உன் புருஷனாலயோ, வாங்கின எதையும் குடுக்க முடியாதுன்னு உனக்கே தெரியுதில்லை.. அப்புறம் என்ன பகுமானம் கேட்குது” இவர் நக்கலடித்திட

“நீ இப்படியெல்லாம் பேசினா, ரோசம் வந்து வீடு வேணாம்னு போயிடுவேன்னு நினைச்சியா! அப்படி போறதுக்கு நான் கமலி இல்லை” ராஜி சொல்ல

“அதன்னவோ, உண்மைடி.. உன்னைய விட ரோசக்காரி தான். ஏமாளியும் கூட சண்டை போட்டு மல்லுக்கு நிக்காம அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டா” வசந்தா ஏற்றி விட

“ஆக மொத்தம் கமலி இங்க இருக்க மாட்டால்ல.. ரொம்ப நல்லதும்மா, கீழ நீ இருந்துக்க, மேல நான் இருந்துக்கறேன்” வீரியம் புரியாது பேசினாள் ராஜி.

முன்பு மகள் தனக்கு துணையாய் ஓரே வீட்டில் இருப்பாள் என நினைத்திருந்த அதே வசந்தா

“கமலி இல்லாதது தாண்டி எனக்கு கவலையே. உன்னை, உன் குடும்பத்தை தனியா சமாளிக்கிறதை நினைச்சாலே பயமா இருக்கு, அதுவும் உன் புருஷன் இருக்கானே, வகை தொகையா கேட்டு சமயகட்டுகள்ளயே புதைச்சுருவான்” சொல்லியே விட்டார் வசந்தா.

“நீயாம்மா இப்படியெல்லாம் பேசுற!” ராஜி அதிர

“முன்னையும் நீ இங்க வருவ, உன் குடும்பமுமர வரும். ஆனால் அப்பலாம் இல்லாத அளவுக்கு , நீயும், செந்திலும் அதிகமா உரிமை பாராட்டுறதும், நீ எனக்கு செஞ்சு தான் ஆகனும் என திமிர் காட்டுறதும்” என நிறுத்தியவர் “எனக்கென்னவே சரியாபடலைடி” என்றுவிட்டார் வசந்தா.

“ஆத்தாடி.. இதென்னம்மா, மரத்துக்கு கிளை பாரமா? ஒரு தாய் பேசுற பேச்சா இது.. நீ.. கிரிக்கு, கமலிக்கு செய்யும் போது கசக்கல.. எனக்கு செஞ்சா கசக்குதா. ராஜி, ராஜினு கிடப்ப.. இப்போ கிரி முக்கியமாயிட்டானா” கோபம் எல்லையை கடந்தது ராஜிக்கு.

“கிரி தான் முக்கியமா தெரிஞ்சிருந்தா, கமலியை எம் மகனுக்கு பக்கத்தில கூட நிறுத்த விட்ருக்க மாட்டேன். அவனுக்கு கூட சொல்லாமல் உனக்காக வீடெடுக்க விட்டிருக்க மாட்டேன்” என சீறியவர் “மனசாட்சிய தொட்டு செல்லுடி, உனக்கும் ஒரு மகன் இருக்கான், நாளைக்கு அவனுக்கும் கமலி மாதிரி பாப்பபியாடீ” வசந்தா தாங்க முடியாமல் கேட்டு வைக்க

“பாப்பேன்..ஏன் நீ பார்க்கும் போது, நான் பார்க்க மாட்டேன்?” என வசந்தா எதி்ர்பாராத பதிலை சொல்லி பெரிதாய் குட்டொன்றும் வைத்து “சொகுசா வாழனும்னா எதையாவது விட்டு தான் கொடுக்கனும்”  என அசராமல் கூறிய ராஜி “கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா முடியுமா?” எரிச்சலாய் வசந்தாவை பார்த்து வைத்தாள்.

ஆ வென வாய் பிளந்து நின்றுவிட்டார் வசந்தா.. “எதிர்பார்க்கவே இல்லை ராஜி.. நீ இப்படி ஒரு பதிலை சொல்வன்னு. உன்னை வெகுளி, பொழைக்க தெறியாதவனு நினைச்சிட்டு இருந்தேன். அதனால் தான் கிரிகிட்ட இருந்து நீ வாங்கும் போதெல்லாம் தடை போடாமல் இருந்தேன். ஆனா திட்டம் போட்டு காய் நகர்த்திருக்க!” விரக்தியாய் கூறினார் இவர்.

“ஆமா, உனக்கு அப்படியே ஒன்னும் தெரியாது பாரு, சீட்டு போட்டே நாழு லட்சம் எனக்கு கொடுத்துருக்க, போடாமல் எவ்ளோ நீ உனக்குனு வச்சிருக்க? நான் சொல்லவா? இதே தெருவில் இரண்டு பேருக்கு வட்டிக்கு கொடுத்திருக்கல்ல, அதுவும் ஐம்பாதியிரம், எழுபதாயிரம். இவங்க இரண்டு பேரு தானா இல்லை..!” என

“சீ வாயை மூடுடி.. நான் வட்டிக்கு தான் விடுறேன். ஆனா அந்த பணம் கிரிக்கு தான். சாகும் போது நானா எடுத்துட்டு போக போறேன். இல்லைன்னா அதையும் நீ தான் புடுங்கிட்டு போய்ருப்பா.. அதாவது பத்திரமா இருக்கட்டும்” இதுவரை காட்டாத கோபம் அவர் குரலில் தெரிய

“ஏதோ ஒண்ட வந்த பிடாரியை பேசுற அளவுக்கு பேசிட்டு இருக்கம்மா” நிஜமே அது தான் என தெரியாமல் பேசினாள் ராஜி.

ஆனால் அதை நிரூபிப்பது போல, “நீ அதுக்கும் மேல தான்” என கத்தியவர், ராஜியின் அதிர்ந்து முகத்தை பார்த்தபடி “என்னையே இந்த பேச்சு பேசுற.. பாவம்டி கிரி” என புலம்பியவர் “என் புள்ள வாழ்றானா இல்லையானே தெரிலடி.. அதாவது உன் கண்ணுக்கு தெரியாத இல்லையா? எவனாவது பதினைஞ்சு நாளில் பொண்டாட்டிய விட்டு போக நினைப்பனா? கர்ணா கிட்ட ஹனிமூனும் வேணாம்னு சொல்லி இருக்கான்” தன் போக்கில் புலம்பவே துவங்கிவிட்டார்.

“நீ தேவையில்லாததெல்லாம் யோசிக்கிறம்மா, லூசு மாதிரி பேசாத, அவங்க, அங்க இங்க ஒன்னா சுத்தறதை நானே பார்த்தேனே. அதெல்லாம் வாழ்ந்திருப்பாங்க” முகம் சுளித்தாள் ராஜி.

முகம் சுளிப்பதை பார்த்தவர், “எது இந்த பக்கத்து தெருவுல இருக்க சூஸ் கடைக்கு போய்ட்டு வந்ததையா சொல்ற?” ஆக்ரோசமாய் கேட்டார்.

“நீ மட்டும், கிரிகிட்ட இருந்து நாப்பாதயிரம் பணத்தை வாங்கிட்டு போய் செந்திலு கூட கேரளா, மூணாறுனு வெளியில் போய் சந்தோஷமா கொண்டாடுவீங்க. எம்மகன் சூஸ் கடையில முடிச்சுக்கனும்ல.. ரொம்ப நல்லா இருக்கு உன் நியாயம்” ராஜியின் வண்டவாளம் ஒவ்வொன்றாய் வெடித்து கொண்டிருந்தது வசந்தாவின் வாய் மூலம். ராஜியால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

“உனக்கென்ன, ஆணொன்னு, பொண்ணொன்னு உவ்வம்சம் தலைச்சிடுச்சு. ஆனால் கிரிக்கு தலைக்குமானே சந்தேகமா தான் இருக்கு. இந்த பாவமெல்லாம் உன்னை சும்மா விடாது, என்னையும் விடாது, மூல காரணமே நான் தானே” மேலும் என்ன சொல்ல வந்தாரோ,  ராஜியின் அதிர்ந்த முகம் கண்டு அப்படியே நிறுத்தி விட்டார்.

அந்நேரம் “ம்மா..” என்ற சத்தத்தோடு கேட்டை திறந்து கொண்டு கிரியின் நண்பன் துரை வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!