Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முழுமை பெற்ற காதல் என்றால்

முழுமை பெற்ற காதல் என்றால் எபிசொட் 1

 கிளிகளின் கீச்சு குரல் கேட்டு தான் வழக்கம் போல அவளுக்கு விழிப்பு ஏற்பட்டது

      ஆனால் எழுந்து செய்ய தான் வேலை ஒன்றும் இல்லை

    நிற்க நேரமின்றி பம்பரமாய் சுற்றிய காலம் ஒன்று உண்டு, அப்போது அதற்கு தேவையும் இருந்தது

     இப்போதோ நிலைமையில் தலை கீழ் மாற்றம், மணித்துளிகளை புல்டோசர் வைத்து தள்ள வேண்டி இருக்கிறது



Advertisement

    பக்கத்தில் ஒரு தெரு தள்ளித்தான் மகன் குடி இருக்கிறான், கல்யாணம் ஆன கையோடு அவனை தனியே குடி வைத்ததும் அவளே, அவள் கணவனுக்கு கூட அவ்வளவு இஷ்டம் இல்லை, மகன் தள்ளி இருப்பதும், செலவு இரடிப்பு ஆவதும் அவருக்கு வருத்தமே, ஆனாலும் இவள் தான் பிடிவாதமாக அதை செய்து காட்டினாள், அவரவர்களுக்கான ஸ்பெஸ் உம்  (space ) பிறைவசியும் முக்கியம் அல்லவா…

     ஆனால் அவளுக்கு தான் நாள் ஆக ஆக நெஞ்சம் பழைய குருடி கதவை திறடி என்று  முந்தைய நிலைக்கு ஏங்கி  நின்றது.

     பேச்சும் சிரிப்பும் சிறு கேலியுமாய் கழிந்த பொழுதுகள், சோபாவில் சரிந்து கிடக்கும் மகனின் உருவம், மெல்ல ரிவர்ஸில் வந்து நிற்கும் அவன் கார் சத்தம் என்று ஒவ்வொரு நொடியும் நினைவில் ஆடி வலிந்து கடந்தது.

Advertisement

   அளவானது அவள் குடும்பம், கணவர் மருத்துவர், ஜெனரல் மெடிசின் படித்தவர், இரண்டு மகன்கள், மூத்தவன் தந்தையை போல மருத்துவர் ஆனால் கண் மருத்துவர், இளையவன் என்ஜினீயர், தற்போது இருப்பது அமெரிக்காவில்.

Advertisement

    மருத்துவரின் மனைவியாய் இருப்பதில் உள்ள சாதக பாதகங்களை அவள் நன்கு  அறிவாள், அதுவும் ஒரு முக்கிய காரணம் அவர்களை தனியே வசிக்க வைத்ததிற்கு, ஒரு உரையில் ஒரு கத்தி தானே இருக்க முடியும், இருந்தும் இந்த புத்தியின் வாதங்களை நெஞ்சம் ஒதுக்கி தள்ளியது

     மகன் அருண், அவன் மனைவி நித்யா இவளை போல ஹோம் மேக்கர் இல்லை, என்ஜினீயர் அதுவும்  கட்டிட கலைஞர் (architect ) ஆக இருவருக்கும் பொழுதுக்கும் நேரத்திற்கும் சரியாய் இருந்தது, ஞாயித்து கிழமை டூட்டி இல்லாமல் இருந்தால் இருவரும் வருவார்கள், அப்படியான பொழுதுகள் கண் மூடி திறக்கும் முன் ஓடி மறையும்

   அதற்கு பின் வழக்கம் போல நேரத்தை பிடித்து தள்ள வேண்டியது தான்

Advertisement

    சின்னவனுக்கு போன மாதம் தான் கல்யாணம் நடந்தது இருவரும் என்ஜினீயர்கள், அதிலும் அமெரிக்கன் வாழ்க்கை என்பதால் வாரம் ஒரு முறை ஒரு நீண்ட போன் உரையாடலுடன் கடமை முடிந்தது, அதை எவ்வளவு இழுத்தாலும் சில மணி நேரம் தான் கணக்கு, இப்போது சற்று அதிகமாய் போன் வருகிறது தான், சின்ன சின்ன சமையல் சந்தேகங்கள் மற்றும் அவர்கள் வார இறுதியில் சென்று வந்த இடம்,  குடி இருக்கும் வீட்டு வீடியோ என்று கொஞ்சம் பொழுது வளர்திகள் இருந்த போதும் அவை யானை பசிக்கு சோள பொரியே..

     இதை எல்லாம் தாண்டி பட்டிமன்றங்களில் சுட்டி காட்டுவதை போல அந்த பாவப்பட்ட ஜென்மம் அதாங்க முப்பது வருடம் முன்பு தாலி கட்டி கணவர் என்ற பொறுப்பில் இருக்கும் அப்புரானி கூட இருக்க தான் செய்தது, ஆனால் அவரை அவசியதுக்கு அன்றி தொந்தரவு செய்வதை நிறுத்தி வருடங்கள் பல ஆகுதே, இருக்கட்டும் மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டியது தான்

    அதில் ஒரு வசதி என்னவென்றால், அவள் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் அல்லவா அந்த ஜீவன்.

   அவருடனான பொழுதுகளை  சுவா ரிசியப்படுத்த வேண்டியது தான் பாக்கி,

     ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல, எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும் நேரம் தவறாமையும் கடை பிடிப்பவர் அவர், மருந்துக்கு கூட அதை செய்யாதவள் அவள்

       இருக்கட்டும் எல்லாவற்றிக்கும் ஒரு தொடக்கம் உண்டள்ளவா..

விஜி ரெடி ஆகிட்டியா, அவங்க வந்திடுவாங்க, அப்புறம் எல்லாம் தொடங்கிடும், லேட் பண்ண கூடாது என்று அவளை நங்கு அறிந்த  தந்தை  சொல்ல தான் ஆரம்பித்தது எல்லாம்.

     ஆம் அன்று தான் நம்முடைய ஜெனரல் மெடிசின் சேர்ந்திருந்த டாக்டர் அருள் அவளை பெண் பார்க்க வந்தது.

     இரண்டு குடும்பங்களுக்கும் பரிச் சியம் ஆன ஒருவர் வீட்டிலே பெண் பார்க்க ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.

     அவள் குடும்பம் சேலத்தில் வசித்ததால், மாப்பிளை பார்க்க சென்னையில் அவர்கள் மாமா வீட்டில் ஏற்பாடு செய்தனர், மாமா வகையில் கொஞ்சம் தூரத்து சொந்தம் தான் மாப்பிள்ளை, இருவருக்கும் உறவு என்ற அடிப்படையில் அவர் வீட்டில் ஏற்பாடு ஆகி இருந்தது.

     மாமா மகள் முகில் துணையுடன் அவள் மாப்பிள்ளையை  எதிர்கொண்டாள்

      ஒரு நொடிக்கும் குறைவான நேரம் கூட அவள் அவனை பார்க்கவில்லை

     பார்க்க முடியவில்லை என்று இல்லை, பார்க்க மாட்டேன் என்பது அவள் வரை கொண்ட உறுதி, அதாவது அப்பா செலக்ட் செய்தவரை அப்படியே ஏற்பது, ஹி ஹி கூடவே இன்னொரு காரணமும் இருந்தது, அவர்கள் குடும்பங்களில் பொண்ணு பார்ப்பது என்பது ஒரு சம்பரதா யமே, மற்ற அனைத்தும் கூடி வந்தால், பெண் பார்க்க போவார்கள், முக்கியமாக பார்த்துவிட்டு மறுப்பது என்பது கிடையாது,  பையனுக்கும், பொண்ணுக்குமே அந்த விதி பொருந்தும், அதனால் பார்த்து என்ன செய்ய என்று கிண்டலாக நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லுவது உண்டு.

   இங்கு புது இடம், அதிகம் பழகாத மனிதர்கள் என்று அனைத்தும் சேர்ந்து அவள் பேருக்கு அங்கே ஒரு நிமிடம் நின்றுவிட்டு வந்துவிட

     அவனுக்கு அது போல எந்த தடையும் இல்லாததால், நன்றாக நிமிர்ந்து  அமர்ந்து அவளை பார்த்த போதும், அவனுக்குமே சற்று சீக்கிரம் தான் எல்லாம் நடத்து முடிந்தது போல இருந்தது, ஆனாலும் குடும்ப வழக்கப்படி அவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைவரும் ஆற அமர பேசி, ஒப்பு  தாம் பூலம் மாற்றும் நேரம் தேதி, இடம் ஆகியவற்றை முடிவு செய்தனர்.

     ஒப்பு தாம்பூலம் என்பதும் நிச்சயதார்த்தம் போன்றதே, என்றாலும் மாப்பிள்ளையும் பெண்ணும் கூட கலந்து கொள்ள தேவை இல்லை.

பெரியவர்கள் கூடி ஊருக்கு இந்த கல்யாண ஏற்பாட்டை தெரிவித்து உறுதி செய்வது தான் நோக்கம், பொதுவாக அந்த  ஊரை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதாலும் மாப்பிள்ளையும் பெண்ணும் கலந்து கொள்வதில்லை.

      காலம் மாற, சம்பந்தங்கள் தெரியாத புது உறவுகளுடன் ஏற்பட, சம்பந்தக்காரர்களையும் பெண்ணையும் மாப்பிள்ளையும் கலந்து கொள்ள அனுமதிக்கபட்டது .

      அப்போதும் அவள் அவனை ஏரெடுத்தும் பார்க்கவில்லை, மேடையேறி புடவை பெற்று சென்று மாற்றி வந்து சபையில் நமஸ்காரம் செய்வது  ஒன்றே அவள் வேலை.

     அதை முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்து ரசிப்பது தான் அவன் வேலை.

     ரசிக்கும் அவனை படம் பிடித்து தான் தங்கைக்கு காட்டி விடுவோம் அவனை என்று அவள் அண்ணன் முயற்சிக்க , அந்த நேரம் பார்த்து அவன் திரும்பி  விட போட்டோவில் கூட அவனை பார்க்க கிட்டாது    போனது, இட் இஸ் ஆல் ரைட்  பா தீர்மானம் காப்போம் கல்யாணம் வரை என்று அவள் கண்டுக்காமல் விட, அவன் அப்படி விடவில்லை.

     அடுத்து வந்த ஞாயிற்று கிழமையில் இந்த பக்கம் வந்தேன், ஹொவ் இஸ் விஜி என்று வந்து அண்ணனிடம் நின்றான் அருள் மாப்பிள்ளை.

      இருந்தும் அது ஆடி மாசம் என்பதால் இவள் பெற்றோற்கு சற்று தயக்கம் இருந்தது, வீடு தேடி  வந்துவிட்டவரை உபசரித்து உணவு படைத்த  போதும் அவளை கண்ணிலே காட்டவில்லை. அவனாலும் அழுத்தி கேட்க முடியவில்லை, பாவம் பா பய புள்ளை, இந்த சாப்பாட்டுக்காகவா இவ்வளவு தூரம் வந்தேன் என்று நொந்து கொள்ளதான் முடிந்தது, சென்னை டு சேலமா என்றால் இல்லை அதே மாமா வீட்டிற்கு தான், அதாவது ஆனி மாதம் கடைசி முஹூர்த்ததில் ஒப்பு தம்புலம் முடிய, ஆவணியில் கல்யாணம் என முடிவாக, புடவை  எடுக்க இங்கே  மறுபடி வந்திருக்க ரெஸ்ட்  இஸ் ஹிச்டரி…

     அந்த சிறப்பான சம்பவத்திற்கு பிறகு மரியாதையாய் கல்யாணம் வரை காத்திருந்தார் மாப்பிள்ளை.

  குறித்த முஹூர்த்ததில் வெகு விமர்சையாய் அவர்கள் கல்யாணம் நடந்து முடிந்தது.

    அவன் கை பிடித்து சென்னையில் புது குடித்தனத்தை சிறப்பாக ஆரம்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!