Skip to content
Post Views: 2,897
3(1)
“இரண்டு நாளாக சாப்பிடாமல் என்ன தான் செஞ்சீங்க?” சினமுடன் சத்தம் போட்டான் இளந்திரையன். வைஷ்ணவி பயந்து சுப்ரியா கையை இறுக பற்றினாள்.
Advertisement
“ஒரு நிமிசம்..நான் கேட்பதற்கு நீங்க பதில் சொல்லுங்க?” வைஷ்ணவி கையை விட்டு எழுந்தாள் சுப்ரியா.
“நீ கேக்குறதுக்கு என் அண்ணன் பதில் சொல்லணுமா?” மாறன் அவளிடம் சீறிக் கொண்டு வந்தான். அவனை முறைத்து, “நான் உங்களிடம் பேசலை” என்று இளந்திரையனிடம் வந்தாள்.
Advertisement
Advertisement
“என் அக்கா. நான் அழுதேன். உங்களுக்கு எதுக்கு அக்காவை எண்ணி கண்ணீர் வந்தது? நீங்க எங்களிடம் உரிமை எடுப்பது போல இருக்கு?”
ஆமா, இவ எங்க சொந்தக்காரி பாரு. உரிமை எடுத்துக்க? என்னோட அண்ணா உதவினார் அவ்வளவு தான். இப்ப கூட நீங்க போகணும்ன்னா போகலாம். அவர்களை விரட்டுவதிலே இருந்தான் மாறன்.
Advertisement
“யாரும் எங்கும் போகக் கூடாது. உரிமை சொந்தமாக இருந்தால் தான் எடுத்துக்கணுமா?” இளந்திரையன் சீறினான்.
“அண்ணா” மாறன் சத்தம் போட, ஷ்…நான் பேசும் போது இடையில எதுக்கு பேசுற? மாறனிடம் சத்தம் போட்டான் இளந்திரையன்.
உன்னோட கேள்விக்கான பதிலை நான் சொல்றேன். நீயும் சொல்லணும்..
முதல்ல நீங்க சொல்லுங்க சார்..
இந்த வீட்ல பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி நாலு தேவதைகள் இருந்தாங்க. எனக்கு உங்களை பார்க்கவும் அதிலுள்ள மூன்று பேர் போல இருக்கு..
“தேவதையா? இங்க இருந்தாங்களா?” சுப்ரியா வீட்டை கண்களால் அளந்தாள்.
“உன்னோட பெயர் என்ன?” அக்சராவிடம் இளந்திரையன் கேட்டான்.
எதுக்கு? சுப்ரியா அவளையும் விட்டுக் கொடுக்காமல் அவள் முன்னும் வந்து நின்றாள்.
உங்களுக்கு உதவணும்ல்ல?
முதல்ல தேவதை கதை உண்மையா சொல்லுங்க?
ஆமா..உண்மைதான். அவங்களுக்கு உங்க வயது தான் இருக்கும்..
“அண்ணா” செழியன் அழைக்க, வேலன் அவன் கையை பிடிக்க, செழியன் அதிர்ந்து அவரையும் இளந்திரையனையும் பார்த்தான். மாறன் புரியாமல் நின்றான்.
இந்த வீடு சொர்க்கலோகம் போல இருக்கும். அந்த தேவதையின் சிரிப்பு இப்பொழுதும் எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கும்.
“எனக்கு எதுவும் கேட்கலை?” சுப்ரியா அழகாக முகத்தை வைத்தாள்.
என்னோட சிஸ்டரும்.. அத்தை பொண்ணுங்களும்..
“வாவ்! அவங்களை தேவதைன்னு சொல்றீங்களா? யூ ஆர் கிரேட் சார். இங்கேயும் இருக்காங்க பாரு!” அக்சராவை முறைத்து நொடித்துக் கொண்டாள் சுப்ரியா.
அவங்க எங்க?
நாங்க மட்டும் தான் உயிரோட இருக்கோம். அமைதியானான்.
அச்சச்சோ..
அப்படின்னா….உங்க வீட்ல பொண்ணுங்களே கிடையாதா? நீங்க நாலு பேர் மட்டும் தானா?
ஆமா..
நாங்களும் நாலு பேர் மட்டும் தான். அம்மா தான் இரண்டு நாளுக்கு முன் கொன்னுட்டான். அவன் யாருன்னே தெரியல. அவன் என்ன சொன்னான்னா…சுப்ரியா சொல்ல வர, சுபா சத்தமாக அழைத்தாள் அக்சரா..
உதட்டை கோணிக்காட்டி, “எங்களுக்கு இங்க வீடு ஏற்பாடு செய்து தர்றீங்களா? இந்த சீனரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்ப வீடு பார்த்தால் தான பள்ளிக்கு போக முடியும்?”
“எப்படிடி போக முடியும்? நம்ம ஊர்லயே எல்லாம் மாட்டிக்கிச்சே!” அக்சரா கேட்க, “நீ பேசாத. நா உன்னோட கா”.
மூச்சை இழுத்து விட்ட வைஷ்ணவி மெதுவாக எழுந்து செழியனிடம் வந்தாள்.
“ஆர் யூ ஓ.கே வைசு?” அவன் அவள் கையை பிடிக்க, வேலன் இளந்திரையனை பார்த்தார். அவனும் அவர்களின் இணைந்த கைகளை பார்த்தான்.
“ஓ.கே சீனியர்” என்று அவன் கையை இறுக பற்றி, அவனுக்கு நன்றி கூறி விட்டு, வீட்டை பற்றி கேட்டாள். அவன் இளந்திரையனை பார்த்தான். அவன் கண்கள் இன்னும் அவர்களின் இணைந்த கைகளையே வெறித்துக் கொண்டிருந்தது.
மெதுவாக செழியன் வைசுவின் கையை விட்டு, “அண்ணா” அழைத்தான்.
ம்ம்..
வீட்டுக்கு கேக்குறாங்க..
அதெல்லாம் வெளிய போக வேண்டாம். இங்கேயே இருந்துக்கோங்க. ஆனால் மேலிருக்கும் வலப்பக்க கடைசி அறைக்கு மட்டும் போகக் கூடாது.
“ஏன் சார்? அங்க உங்க தேவதைகள் இருக்காங்களா?” இளந்திரையனை நெருங்கி சுப்ரியா கேட்க, “இல்லை” என்று புன்னகைத்து, உன்னோட பெயர் கேட்டேன்.
“அண்ணா” மாறன் அழைக்க, இவங்க இங்க தான் தங்குவாங்க. வெளி ஆளுங்க வந்தால் கொஞ்ச நாள் நீங்க மூவரும் வெளியே வர வேண்டாம்.
வைஷ்ணவி அவன் முன் வந்து, “வேண்டாம்” என்று சைகையில் அவனிடம் பேசினாள்.
“நாங்க எதுக்கு மறைஞ்சு இருக்கணும்?” அக்சராவும் கேட்டாள்.
உங்க பாதுகாப்பிற்காக தான்.
“அண்ணா, ஆனால்…” செழியன் ஏதோ சொல்ல வந்தான்.
செழியா, அவனை நிறுத்திய இளந்திரையன், நீங்க வெளியே இப்பொழுதைக்கு போக வேண்டாம்.
“நான் எப்படி பள்ளிக்கு போறது? நான் எப்படி கல்லூரி செல்வது?” அக்காவும் தங்கையும் அவனிடம் கேள்வி கேட்டனர்.
கண்டிப்பா போகணுமா?
ஆமா, நான் தான் எங்கள் பள்ளியிலே முதல் மதிப்பெண்…
“ரொம்ப சந்தோசம்மா” வேலன் அவள் தலையை வருட, “உங்களுக்கும் எங்களை பார்த்தால் தேவதைகள் மாதிரி தெரியுறோமா?”
ஆமாம்மா..
“தேங்க்ஸ் அங்கிள்” புன்னகையுடன் சுப்ரியா சொல்லி, அவர்களின் பெயர்களை அறிமுகப்படுத்தினாள்.
வைஷ்ணவி மட்டும் விருப்பமில்லாதது போல நின்றாள்.
“உட்காரு” என்ற இளந்திரையன் “ஆடையை மாற்றி விட்டு சாப்பிடுங்க” அவன் சமையலறை சென்றான்.
“அண்ணா, சாப்பாடு குறைவா தான் இருக்கு” செழியன் அவன் பின்னே ஓடி வந்தான்.
அவனை பார்த்து விட்டு, “பழங்களை வெட்டு” என்று ப்ரூட் சாலட், பிரட் டோஸ்ட் அவனே தயார் செய்ய, “வாவ் சார் உங்களுக்கு சமைக்க கூட தெரியுமா?” சுப்ரியா சமையலறை வாசலில் நின்று வினா தொடுத்தாள்.
“வா” செழியன் அவளை அழைத்தான்.
அக்காவும் நல்லா சமைப்பாங்க. என்னோட ப்ரெண்ட்ஸ் அக்கா சமையலால் தான் என்னிடம் நண்பர்களானார்கள்.
“அப்படியா? நல்லா சமைப்பாளா? எனக்கு தெரியாதே!”
நீங்க சீனியர். இதெல்லாமா சொல்றது? சும்மாவே யாரிடமும் பேச மாட்டா..
“சார், இதை எடுத்துக்கவா” தேன் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்தாள்.
“ஏய்! இப்படி குடிக்கக் கூடாது” செழியன் அதை பிடுங்க, இளந்திரையன் அவன் கையை தட்டி விட்டு, “நீ குடி குட்டிம்மா”
குட்டிம்மாவா? செழியன் கேட்க, வாயில் வழிந்த தேனுடன் அவனை பார்த்தாள் சுப்ரியா.
சுபான்னே அழையுங்கள்.
ஏன் குட்டிம்மா நல்லா இல்லையா?
அது..அக்கா ஏதாவது சொல்லுவா. பசங்களோட அம்மா நெருக்கமா பழக விட மாட்டாங்க. அக்காவும் அப்படியே. ஆனால் என்னோட ப்ரெண்ட்ஸூடன் மட்டும் நல்லா பழகுவேன்..
அப்படின்னா நாங்களும் ப்ரெண்ட்ஸ் ஆகிக்கிறோம்..
“அண்ணா” செழியன் அவனை பார்த்தான்.
“ஏன்டா, படிக்காதவன் படிச்ச பிள்ளைங்களோட ப்ரெண்டாக கூடாதா?” கேட்டான்.
“படிக்கலையா? ஏன் படிக்கலை?” சுப்ரியா கேட்டாள்.
அதுவா? என்னோட தேவதைகளை பார்த்துக்கணும்ல்ல? அதான் நான் படிக்கப் போகலை. நான் படிக்க போனதால் தான் அவங்கள இழந்துட்டு நிக்கிறேன்.
தேவதைங்க தான் உயிரோட இல்லையே!
அவன் அமைதியாக இருந்தான்.
அவன் முகத்தை சுப்ரியா ஆழ்ந்து பார்த்து, சமையலறை மேடையில் ஏறி அமர்ந்து, “ஓ! அதான் தாடியை இப்படி புதர் மாதிரி வளர்த்துருக்கீங்கல்லா இல்லை லவ் பெலியரா?”
“லவ் பெலியர்ன்னா சொல்லுங்க சார். நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கும் சமைக்கிற வேலை இருக்காதுல்ல?” சிரித்தாள்.
இதை கேட்ட மாறன் சீற்றமுடன் அவளிடம் வந்து, அவளை இழுத்து கீழே தள்ளினான்.
“அம்மா” பொத்தென சுப்ரியா விழ, “மாறா” சீற்றமுடன் கத்தினான் இளந்திரையன்.
“என்னோட அண்ணா பக்கத்துல்ல வந்த உன்னை கொன்றுவேன். இதுக்கு தான் வீட்டுக்குள்ள வந்தீயா?” அவன் கேட்டு விட, தீரன் அவனை அடித்து விட்டான். வைஷ்ணவி அவளை அடித்து விட்டாள்.
“வா” என்று வைஷ்ணவி அவர்களது பையை எடுக்க சொல்லி தன் இரு தங்கைகளையும் இழுத்து வந்தாள். வேலன் அவள் பின்னாடியே ஓடி வந்தார்.
நின்ற வைஷ்ணவி கையெடுத்து கும்பிட்டு, “உங்க பையன் அதிகமா பேசிட்டான். போதும். நாங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க வரலை” வேகமாக கையையும் வாயையும் அசைத்து பேசினாள்.
அக்சரா அவள் கையை விட்டு வீட்டினுள் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
வைஷ்ணவி அவளை முறைத்து பார்த்தாள்.
“நான் வர மாட்டேன். இங்க தான் இருப்பேன்” அக்சரா பிடிவாதம் செய்ய வைஷ்ணவி அவளை அடிக்க வந்தாள். அவள் கையை பிடித்த இளந்திரையன் மாறனை முன் நிறுத்தினான்.
“சாரி, நான் அண்ணாவிடம் அவள் பேசியதால் இப்படி பேசிட்டேன்” தலைகவிழ்ந்து மன்னிப்பு கேட்டான்.
அவன் முகத்தை நிமிர்த்திய வைஷ்ணவி, “தவறு செய்தாலும் நிமிர்ந்து தான் நிற்கணும்” என்றாள் சைகையில்.
ஆச்சர்யமாக மற்றவர்கள் பார்க்க, மாறன் விடாது அவளையே பார்த்தான்.
அக்சரா கையை இழுத்தாள் வைஷ்ணவி.
அவளை தன் பக்கம் திருப்பிய இளந்திரையன், “குட்டிம்மா விளையாட்டுக்கு பேசியது புரியாமல் கோபப்பட்டுட்டான். அதுக்காக வெளிய போகணுமா?”
இல்ல சார், நான் அதுக்காக மட்டுமல்ல நாங்க இங்கிருந்தால் ஏற்கனவே இழந்த உங்களது தேவதைகள் போல உங்க தம்பிகளுக்கும் ஏதாவது ஆகிடும்..
“வைசு, அதெல்லாம் ஒன்றும் நடக்காது” செழியன் சொல்ல, இளந்திரையன் அவனை பார்த்தான்.
அண்ணா, அவ போனா கஷ்டப்படணும். அதான் சொன்னேன்.
யாரும் உங்களை ஏதும் சொல்ல மாட்டாங்க..
“ஆமாக்கா, நானும் இனி இப்படி பேச மாட்டேன். இனியும் நீ சாப்பிடாமல் மயங்கி விழுந்துட்டாங்க. நாங்க என்ன செய்றது? எனக்கு இங்க பிடிச்சிருக்கு. நான் இனி சார்கிட்ட அப்படி பேசமாட்டேன்” வைஷ்ணவியை அணைத்துக் கொண்டாள் சுப்ரியா.
அக்சராவை முறைத்து பையை கீழே வைத்தாள் வைஷ்ணவி.
மாறன் அவளிடம் வந்து, “நீங்க போக வேண்டாம். இங்கேயே இருங்க. இவள பேசாமல் அமைதியா மட்டும் இருக்க சொல்லுங்க. எனக்கு காது வலிக்குது. அப்புறம் என்னோட அண்ணா பக்கம் நீ வரவே கூடாது”.
“வந்தா என்னடா செய்வ? குட்டிம்மா என்னோட பேசுவா. உன்னால முடிஞ்சதை செய்” இளந்திரையன் சொல்ல, செழியனும் மாறனும் அவனையே பார்த்தனர்.
“சாப்பிட வாங்க” வேலன் அழைக்க, எல்லாரும் சாப்பிட அமர்ந்தனர். சுப்ரியா அதன் பின் பேசவேயில்லை. தீரன் அவனாக வந்து பேசியும் அவள் அதிகம் பேசவில்லை. அக்சரா எல்லாரையும் பார்த்துக் கொண்டே உணவை உண்டாள்.
“யாரென்ன சொன்னாலும்
எவர் என்ன சொன்னாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்”
பாடல் அலைபேசியில் ஒலிக்க, அனைவரும் மேசை மீதிருந்த அலைபேசியை பார்த்தனர்.
தீரன் எழுந்து அதை எடுத்து காதில் வைத்தான். பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“டேய், குடிச்சியா? திருவிழா நேரம் குடிக்கக்கூடாதுன்னு நான் எல்லாரிடமும் சொல்லி இருக்கேன். நீ குடிச்சிருக்க” தீரன் சத்தமிட, “தீரா..நடுரோட்ல்ல விழுந்து கிடக்கான். சீக்கிரம் வா” என்று குரல் “அம்மா” என்று கத்தும் சத்தம் கேட்டு பதறினான்.
“முனியா, என்னாச்சு?” தீரன் பதற, அலைபேசியை வைத்திருந்த குரு,
“மச்சான், இவனுக யாருடா எனக்கு நலங்கு வைக்கிறது போல சுத்தி சுத்தி வாராணுக” போதையில் உலறினான்.
“செழியா சித்தப்பூ, வீட்லயே இருங்க. இப்ப வந்துடுறேன்” என்று வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு இளந்திரையன் நகர, “தீரா யாருக்கு என்னாச்சு?”
“குரு பிரச்சனையில இருக்கான். வாரேன் சித்தப்பூ” என்று அவனது ராயல் என்பீல்டை உதைத்தான்.
தீரன் குருவிடம் வரும் போது அவனை சிலர் கட்டையால் அடித்துக் கொண்டிருந்தனர்.
பைக்கை அப்படியே போட்டு தன் நண்பனிடம் ஓடினான். இளந்திரையனை பார்த்தவுடன் குருவை அடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி விட்டனர்.
காயத்தை பார்த்து வருத்தமுடன் தன் நண்பனை தாங்கினான். குரு வலியில் பினாத்திக் கொண்டிருந்தான். அவனை பைக்கில் அமர்த்தி தீரன் அவனுடன் சேர்த்து கட்டி விட்டு பைக்கை எடுத்தான்.
குருவின் பேச்சை கவனித்துக் கொண்டே வண்டியை செலுத்தினான் இளந்திரையன். குரு ஒரு பொண்ணை பற்றி பேசிக் கொண்டு வந்தான். கடைசியில் அவன் அந்த பெண்ணின் பெயரை கூறவும் அதிர்ந்து பிரேக்கிட்டு நிறுத்தினான்.
குரு, “நான் யாருன்னு தெரியுதா?” இளந்திரையன் கேட்க,
“யாரு…யாரு என்னோட மச்சான்..மச்சான்..” பாடலாக இழுத்தான். இளந்திரையன் தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்குள் குருவை தாங்கி இழுத்து வந்தான். மாறன் அவனை பார்த்தும் டென்சன் ஆனான்.
அண்ணா, “நீ எதுக்காக இதெல்லாம் பண்ற?”
ஷ்….குரு விரலை மாறன் உதட்டில் வைக்க, மாறன் அவன் கையை சினமுடன் தட்டி விட்டான்.
மாப்பிள்ள, “என்னல்ல குடிக்காத பையன் குடிக்கிற?” வேலன் அவனிடம் வந்தார்.
“சித்தப்பூ, அங்கேயே நில்லு” என்ற இளந்திரையன் பெண்கள் மூவரையும் பார்க்க, அவர்கள் குருவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
படாரென தரையில் இளந்திரையன் குருவை தள்ளி விட, “தீரா என்னல்ல பண்ற?” வேலன் சினமானார்.
சித்தப்பூ, குடிச்சதில்லாமல் ஓவரா பேசுறான். செழியா தண்ணீ எடுத்துட்டு வா..
அவன் செம்பில் தண்ணீரை எடுத்து வந்தான்.
“செம்பு எம்மாத்திரம் இவனுக்கு?” என்ற இளந்திரையன் பக்கமிருந்த குடத்து நீரை குருவின் மீது மொத்தமாக கவிழ்த்தான். எல்லாரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
“எவன்டா என்னை மழைக்குள்ள தள்ளி விடுறது?” புலம்பிக் கொண்டே குரு கண்ணை தேய்த்தான்.
“மாறா, இன்னொரு குடத்தை தூக்கிட்டு வா” இளந்திரையன் சொல்ல, தீரா அவர் உன்னோட ப்ரெண்டு..
அதான் இதோட நிறுத்திக்கிறேன்.
மாறன் சிரித்துக் கொண்டே குடத்து நீரை எடுத்து தீரன் முன் வந்தான்.
ஊத்துடா இவன் மேல!
ஏற்கனவே கடுப்பில் இருந்த மாறன் தண்ணீரை மட்டுமல்லாது குடத்தையும் அவன் மேலே போட்டான்.
“எவன்டா என்னை கொல்லப் பாக்குறீங்க?” குரு போதை தெளிந்து மயக்க நிலையில் கேட்க, “உன்னோட அப்பன்டா ராஸ்கல்” இளந்திரையன் அவன் முதுகில் ஓங்கி அடித்தான்.
“மச்சான், என்னை எதுக்குடா அடிக்கிற? ஐ அம் பாவம்..”
“யாரு நீயா பாவம்? எழுந்திருடா” அதட்டினான் இளந்திரையன்.
மச்சான், அசைய முடியல. கொஞ்சம் தூக்கி விடேன்.
அடிங்கோ, இப்ப நீ எழுந்திரிக்கலேன்னா அடுத்து ஐஸ் தண்ணீர் தான்..
“ஆத்தாடி, இந்த குளுருல்ல என்னை கொல்லப்பாக்குறீயேடா? நீ நண்பனாடா பாவி..”
“இப்ப நீ எழலை…” இளந்திரையன் மேலும் அதட்ட, “வேண்டாம்டா பாகுபலி. என்னை விட்ரு. நானே எழுந்திருக்கிறேன்” எழுந்து தள்ளாடிக் கொண்டு குளிரில் நடுங்கியவாறு கையை கட்டி நின்றான்.
“இந்த மரியாதை நல்லா இருக்கே அண்ணா!” செழியன் நகைத்தான்.
“அண்ணா சொல்லாதடா செழியா! மாமா சொல்லு இல்லை மச்சான்னு சொல்லு” குரு மேலும் இளந்திரையனை ஏற்றி விட்டான்.
“மாமன் மச்சானா?” இளந்திரையன் சினமுடன் அவனருகே செல்ல, “தீரா எதுக்கு இவ்வளவு கோபம்?” இளவேலன் கேட்டார்.
“சித்தப்பூ, இவன்….” என்று சொல்ல வந்து பேச்சை நிறுத்தி இளந்திரையன்..
“ஏலேய் குரு, நீ கண்டுபிடிச்சிட்டியா?” என்று அவன் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு காகிதத்தை எடுத்தான். அது முழுவதுமாக நனைந்து எழுத்துக்கள் அழிந்து இருந்தது.
“மச்சான், நான் ஒண்ணுமே செய்யல. நீ தான் தண்ணீய என் மேல ஊத்தி நனைச்சு விட்டுட்ட?” என்று பொண்ணுங்களை பார்த்து, “தீரா வீட்ல பொண்ணா? ஓ..காட் என்னால நம்பவே முடியல” என்று உற்று பார்த்து வைஷ்ணவி அக்சராவை பார்த்து அதிர்ந்தான்.
“ஏலேய் தீரா…இவங்க..” அவன் பேசத் தொடங்க, வேலன் அவன் வாயில் கையை வைத்து அவரறைக்கு இழுத்து சென்றார்.
ம்ம்! ம்ம்! ம்ம்! திணறி கையை அவர்களிடம் நீட்டிக் கொண்டே அவர் இழுப்பிற்கு குரு சென்றான்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க. காலையில் வேலையாட்கள் எல்லாரும் வந்திருவாங்க. அதிகம் யாரிடமும் பேசாதீங்க” என்ற இளந்திரையன் வைஷ்ணவியை பார்த்து, எனக்கு உங்க பெயர் அழைக்க பிடிபடவில்லை. அதனால உங்கள சிட்டுன்னு அழைக்கவா?
ஏன்? அவள் கேட்க, செழியன் அதிர்ந்தான்.
எனக்கு பறவைகள் ரொம்ப பிடிக்கும். அப்புறம் உங்க தங்கச்சி என்று அக்சராவை பார்த்து தேனுன்னு கூப்பிடுறேன். குட்டிம்மா..உனக்கும் சரி தான?
ம்ம்! என்றனர்.
“அண்ணா, யார் அந்த தேவதைகள்? அம்மா அப்பாவா?” மாறன் கேட்க, “இல்லை” என்ற இளந்திரையன் கண்கள் கலங்கியது.
“தப்பா ஏதும் கேட்டுட்டேனா அண்ணா?”
இல்லடா, நம்ம அத்தை பொண்ணுங்க மூவரும், என்னோட தங்கை உன்னோட அக்கா யாழினியும் தான்.
யாழினியா நீ இதுவரை சொன்னதில்லை.
நீ கஷ்டப்படக்கூடாதுன்னு தான் சொல்லலை.
யாழினி மனதில் சொல்லி பார்த்த அக்சரா, “அத்தை பொண்ணுங்க மூவரா?” எண்ணியவாறு இளந்திரையன் அருகே வந்தாள்.
கையை தட்டி வைஷ்ணவி அவளை அழைக்க அவளை பார்த்து விட்டு இளந்திரையனிடம், “உங்க அத்தை பொண்ணுங்கல்ல யாரோ ஒருவரை லவ் பண்ணீங்களா?”
எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கணித்துக் கொண்டிருந்த செழியன் அக்சரா வார்த்தையில் வேகமாக நிமிர்ந்து இளந்திரையனை பார்த்தான்.
பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்த இளந்திரையன், என்னோட பத்து வயசுல்ல அவங்கள இழந்தேன். அப்பொழுது அத்தை பொண்ணுன்னு பிடிக்கும். அவளும் மாமா..மாமான்னு கையை பிடித்துக் கொண்டே இருப்பாள். அவள் அம்மா என்று அழைத்ததை விட மாமா என்று அழைத்தது தான் அதிகம். பிடிக்கும். காதலா என்று கேட்டால் எனக்கு தெரியாது.
“இப்பொழுது அவள் என் முன் வந்தாலும் அவளுக்கு என்னை நினைவிருக்குமோ என்னமோ? நினைவிருந்தாலும் நான் காதலித்தால் படிக்காத என்னை திருமணம் செய்து கொள்ள அவள் ஒத்துப்பாலா?” கண்கலங்கினான்.
“அண்ணா” தம்பிகள் சத்தமிட, கண்ணீரை துடைத்து, “நீங்க மூவரும் நல்லா ரெஸ்ட் எடுங்க. அலைபேசி இருக்கா?” சுப்ரியாவை பார்த்தான்.
இல்ல சார், மிஸ் பண்ணிட்டோம்.
நாளை வாங்கித் தாரேன். சிம் நீங்க சொல்ற எண்ணிற்க்கே வாங்கிக்கலாம்.
தேங்க்ஸ் சார்.
அக்சரா வைஷ்ணவியையும் இளந்திரையனையும் மாறி மாறி பார்க்க, அவன் அவள் பார்வையை கவனித்து, “போங்க” என்று அவர்களுக்காக தனித் தனி அறையில் அனுப்பி வைத்தான்.
error: Content is protected !!