Skip to content
Post Views: 1,928
கணவருடைய பாத்தியா நான் சொன்னது சரியா போச்சா என்ற பார்வை அவளுக்கு எரிச்சலை கிளப்பியது!
அவருடன் இது சம்பந்தமாக பேச கூட அவளுக்கு பிடிக்கவில்லை.
Advertisement
சரி உங்களை பொறுத்தவரை நான் சும்மா கற்பனை செய்து உடம்பை வீனா அடிக்கிறேன், அல்லது இல்லாததை சொல்கிறேன் என்றே வைத்துக்கொண்டாலும், இப்படி அப்பட்டமாக அவர் எப்படி அதை கூறலாம், என்ற வருத்தம் எழுந்தது.
அவள் மனம் புண்படும் என்ற கவலை இல்லாதவரிடம், மேலும் மேலும் பேச பிடிக்கவில்லை.
Advertisement
Advertisement
அதற்காக அதை அப்படியே விட்டுவிட்டு வேறு விஷயத்தில் கவனம் செலுத்தி, அவள் வழக்கமாக செய்வது போல்,அதை கடக்க முடியாமல், வலி அவளை முடக்கி போட்டது.
யோசைனையும், கவலையும் ஆக இருந்த மகன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.
Advertisement
அவளை குறிப்பாக பார்த்தப்படி மகனுக்கு எதிரே அவர் அமர்ந்தார்.
அதில் இருந்து ஒரு மூன்று வார காலத்திற்கு இருவரும் எதிர் எதிர் திசையில் தான் நின்றார்கள்…
” டெஸ்ட் ரிசல்ட்ஸ் நார்மல் என்று வந்திருக்கு, தட் இஸ் குட் ” என்று மெல்ல அவர் பேச்சை ஆரம்பிக்க
அவருடைய அலட்டிக்கொள்ளாத தொனியை தள்ளி விட்டு, நிஜ அக்கறையுடன், மகன் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி பேசினான்.
உடம்பில் வெளிப்புற அறிகுறிகள் இல்லாமல் , சிவந்து தடித்து போதல், அல்லது கட்டி, வீக்கம், இல்லை மூட்டுக்களில் வலி, என்று இல்லாத, உட்கார, எழும்ப, இன்னும் சிரமம் இல்லாது இருந்த அவளுக்கு என்ன வியாதி என்று கண்டு பிடிப்பது ரொம்ப சிரமமாய் தான் இருந்தது.
இத்தனைக்கும் வீட்டில் ஒன்றுக்கு இரண்டாய் மருத்துவர் இருந்த போதும்…
அப்படி இல்லை என்றால் கூட, மருத்துவர்களை வாயில் போட்டு மெல்லலாம்…
தேவை இல்லாத டெஸ்டுகளை எழுதி கொடுத்து, அநேகமாக அந்த லேப் கூட டை அப் வைத்து இருப்பாராக்கும், அதான் இத்தனை பரிசோதனை வெட்டியாக செய்ய வைத்தார் என்று அவரை திட்டி தீர்க்கலாம்.
அதற்கும் வழி இன்றி, இந்த வியாதியை எப்படி கண்டு பிடிப்பது என்று குடும்பமாக உட்கார்ந்து கவலை பட நேர்ந்தது, அதில் அவள் கணவர் இல்லை என்பது வேறு தனி கவலையை கொடுத்தது, வெவ்வேறு விதங்களில் மகனுக்கும், மனைவிக்கும்.
இது நாள் வரை எல்லா விஷயங்களையும், உட்கார்ந்து அவரோடு அக்கு வேறு ஆணி வேறாக அலசியவளுக்கு , இப்போது ரொம்ப தேவை படும் நேரத்தில், இந்த அவரின் வித்யாசமான போக்கு, வெகு அந்நியமாக பட்டது.
ஒன்னும் இருக்காது சரியாயிடும் கவலைப்படாதே என்ற அவருடைய வார்த்தைகளும், அது கொடுக்கும் பலமும் அவளுக்கு ரொம்பவே தேவைப்பட்டது.
இத்தனை வருடங்களில் அவர்கள் வாழ்வில் எத்தனையோ, சிறிய பெரிய, கவலைகளை, அவர்கள் பெற்றவர்கள் சுகக்கேடு, பிள்ளைகள் அடிபட்டு வருவது என்ற நிலைகளை , வார்த்தையாலும், செய்கையாலும், அவர் கொடுத்த தெம்பினால் தான் கடந்து வந்திருக்கிறாள்.
,
அட அப்படி இல்லாமல், அவர் வழக்கப்படி, வெளியில் சொல்லாமல் அவர் கவலை பற்றிருந்தால் கூட அவள் கவலை மறந்து, அவரை ஒன்னும் இருக்காது என்று சமாதான படுத்தி இருப்பாள்.
இந்த இரண்டும் இல்லாது புதிதாக அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு அவளை வியாதியுடன் சேர்த்து சுழற்றி அடித்தது!
அது மகனையோ வேறு விதத்தில் பாதித்தது.
பொதுவாக வியாதியை ஆண்கள் அணுகுவதற்கும், பெண்கள் அணுகுவதற்கும் வித்தியாசம் இருப்பதாய், மகன் சாதாரணமாய் பேசும் போது சொல்வது உண்டு.
அதாவது, பொதுவாக நிறைய கம்பளைய்ண்ட்ஸ் உடன்,உயிரே போகுது டாக்டர் என்று வரும் பெண்களை சோதித்து பார்த்தால், பெரும்பாலும் ஒன்றும் கவலை படும் படியாக இருக்காது என்றும், ஊசியோ, மருந்தோ, கனிவான வார்த்தைகளோ போதுமானதாக இருக்கும் என்றும்,
அதுவே ஒன்றும் பெரிசாய் இல்லை டாக்டர் என்று வந்து அமரும் ஆண் நபரை பரிசோதித்தால், அவருக்கு பெரிய அளவில் வியாதி இருக்கும், அது முற்றிய நிலையில் எப்படி வலியை சகித்து கொண்டு நடமாடுகிறார் என்று பார்க்கும் அளவில் இருக்க,
இன்றே அட்மிட் ஆகுங்கள், வைத்தியம் தொடங்கலாம் என்றால், சற்று யோசனையாக நான் நாளைக்கு வரேன் டாக்டர் என்பார், அவருக்கு நிலைமையின் தீவிரத்தை எடுத்து சொல்லி சேர்க்க வேண்டி இருக்கும் என்றும் சொல்வதுண்டு.
அதை போல் அம்மா விஷயத்தில் அப்பா நினைத்துக்கொண்டு அசால்ட்டாக இருப்பது, மேற்கொண்டு என்ன செய்வது என்று அவருடன் கலந்து ஆலோசிப்பதில் சிக்கலை கொண்டு வந்தது.
அவர் ஒரு சிந்தனையில் இருக்க, அவனுக்கு செய்வது அறியாமல், அவருடைய அனுபவ அறிவின் உதவியும் கிட்டாமல், அம்மாவின் நிலை பயமுறுத்தியது.
அதையும் தாண்டி தீவிரமாக யோசித்தத்தின் பலனாக, இனி இதை தாங்கள் மட்டும் டீல் பண்ணுவது சரி அல்ல என்றும், அதற்கென்று இருக்கும் துறை மருத்துவரை நாடி, அவர் வழி காட்டலில், சிகிக்சை தொடர வேண்டும் என்று அவன் கருத்தை உரைக்க,
அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது.
” யாரை பார்க்கணும் ன்னு நினைக்கிற, என்னானு சரியா புரிப்படாத நிலையில் ” என்றார் அவர் கூலாக
” அதே தான் நானும் சொல்றேன், நம்ம அறிவுக்கு புலப்படாதது, அதெற்கென்று, ஸ்பெஷலைஸ் பண்ணியவர்களுக்கு, புரிப்படும், வழிகாட்ட கூடும் ” என்றான் அவன் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு!
மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிவு இல்லாத சாமானியருடன் பேசுவது போல் மருத்துவர் ஆன தன் தந்தையுடன் பேச நேர்ந்தது அவன் பொறுமையை சோதித்தது.
இதுவே இவளுக்கு பயம் என்று நடுங்க, இருவரும் பேசி புரிய வைத்தால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு!
இங்கு நிலைமை தலை கீழ் மாற்றமாக, அவருடன் மல்லுக்கு நிற்க வைத்ததை விதி என்று சொல்வதா!
“சரி அப்படி யாரு கிட்ட காட்ட நீ விரும்பர “என்றார் மறுபடி சற்று அமர்த்தலாக…
“ருமட்டாலஜிஸ்ட் (முடக்கு வாத இயலார் )” என்றான் சுருக்கமாக
“நீயுராலஜிஸ்ட்,(நரம்பியல் நிபுணர்) வேண்டாமா “என்றார் மறுபடி கூலாக
“அவர்ட்டயும் காட்டலாம், இவரையும் பார்க்கணும்,தாத்தாட்டையும், ஒரு வார்த்தை கேட்கணும் “என்றான் சற்று அழுத்தமாக
தந்தையும் மருத்துவர் என்ற போதிலும், அவர் வயதை கருத்தில் கொண்டு, இன்னும் அவரிடம் தன் நிலைமையை விவரமாக பகிராமல் இருந்தாள், இப்போதோ அவரிடமும் கேட்பது சரி என்றே பட்டது.
பொதுவாக உறவினர்கள், நண்பர்கள், மருத்துவ தேவைக்கு எந்த டாக்டர் என்று முடிவு செய்யும் முன் இருவரும் அந்த துறையில் இருந்தாலும், அவரோட அனுபவ அறிவும் இத்தனை காலம் அந்த பீல்ட்ல் மற்ற டாக்டர்கள் கூட கலந்து பணி ஆற்றிய அனுபவமும் கை கொடுக்கும் என்பதால் அவர் கருத்துக்கே முதல் இடம்.
புதுமையான மருத்துவ முறைகள் பற்றி அவன் கருத்தையும், அதில் முதன்மையாக இருப்பவர் பற்றி அவனிடன் அவர் கேட்பது உண்டு,
அதை கேட்கவே அவளுக்கு சந்தோசமாக இருக்கும், வளர்ந்த மகன் அவருக்கு இணையாக பேசுவது, கலந்து ஆலோசிப்பது, பெருமையாக இருக்கும்.
” சரி கேட்டு முடிவு செய்வோம் ” என்று சொன்னாரே ஒழிய, தந்தை சொன்ன டாக்டர் ராமிடம் அழைத்து செல்ல பிரிய படவில்லை.
முன்னும் பின்னும், நிறைய பேசி, ஒரு வழியாக, தன்னுடன் சேர்ந்து பணி புரிந்த டாக்டரிடம் கூட்டி செல்ல முடிவு எடுத்து அப்பொய்ன்மெண்ட் வாங்கி, சென்று பார்க்க மேலும் ஒரு வாரம் ஆனது.
தன் தட்டில் மஞ்சள் கலரில் கொழ கொழ என்று இருந்ததை யோசைனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருள்.
பேரு வைக்காத அந்த வஸ்துவை வாயில் வைப்பதா வேண்டாமா என்று அவன் முடிவுக்கு வருவதற்குள், இளம் பச்சை கலர் சட்னியை அதற்கு தொட்டுக்க வைத்துவிட்டு, மலர்ந்த முகத்துடன் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் அவன் அருமை மனைவி.
தேனிலவு முடிந்து, மேலும் இரண்டு வாரங்கள் கடந்து இருக்க, தேனிலவு காலமும் முடிந்து, ஒரு வழியாய் அழைத்தவர் வீடுகளில் சாப்பாடும் முடிந்து, அவர்களில் குடித்தனம், அவர்கள் சொந்த கைவண்ணத்தில் ஆரம்பித்திருந்தது.
நேரடியாக அவன் தட்டிலும் அது வீற்று இருந்தது.
அவளுக்கு ஆர்வம் இருந்த அளவுக்கு, பக்குவம் கை வரவில்லை, அதை சுட்டி காட்டும் அளவிற்கு இன்னும் காலமும் கடந்து இருக்கவில்லை!
” என்ன இன்னும் சூடாய் இருக்கா ” என்றாள்
காலையில் ஏழுக்கு கிளம்ப வேண்டும் அவனுக்கு, அதற்குள் டிபன் ரெடி செய்து, ஆர்வமுடன் பிளஸ் டூ ரிசல்ட்க்கு வெயிட் பண்ணும் மாணவியை போல் தன் முகம் பார்க்கும் மனைவியிடம்,எதையும் சொல்ல அவனுக்கு மனம் இல்லை…
லேசாக புன்னகைத்தபடி, ” நான் அங்கேயே பி ஜி கேன்டீன்ல சாப்பிடுடுவேன், உனக்கு எதுக்கு சிரமம் ” என்றான்.
” இதில் என்ன சிரமம், இப்போ நீங்க கிளம்பிட்டா அப்புறம் லஞ்ச் செய்யற வரை கொட்டு கொட்டு னு தான் உட்கார்ந்துத்திருக்கேன், ஸோ, நோ ஒர்ரிஸ், ” என்றுவிட்டு அவளும் ஒரு புன்னகையுடன்
” சாப்பிட கஷ்டமா இருக்கோ ” என்றாள் தலையை சாய்த்து நாக்கை கடித்தபடி..
எக்ஸாக்ட்லி யூ காட் தி பாயிண்ட் என்று சொல்வதற்கு பதில், அவசரமாய் தட்டில் இருந்ததை முழுங்கி விட்டு, ” நல்லா தான் இருந்தது, இன்னும் கொஞ்சம் ஆறினா சரியா இருக்கும் என்று நினைக்கிறேன் ” என்றுவிட்டு தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
இருவரும் இடம் பார்த்து அமர்ந்தபின், நிதானமாக தங்கள் முன் இருந்ததை சுவைக்க ஆரம்பித்தனர்.
இதை கொஞ்ச நாட்களாகவே கடை பிடிக்கின்றனர்..
அவன் வீட்டுக்கு ஏழு மணிக்கு முன் வரும் போதெல்லாம், இதோ அவர்கள் வீட்டில் இருந்து சற்று தள்ளி நடக்கும் தூரத்தில் இருக்கும், புதிதாக திறக்க பட்ட சிந்தாமணி என்னும் அரசு கூட்டுறவு மய்யத்திருக்கு வருகிறார்கள்.
அதுதான், அப்போதைக்கு இருந்த மால் போன்ற ஒன்று. அதுவே அண்ணாநகருக்கு இன்னொரு அடையாளம் என்றும் ஆகி போனது.
வரிசையாய், கடைகள் இருக்கும் ஒரு பெரிய வளாகத்தில், புதிதாக திறந்திருந்த நார்த் இந்தியன் பாஸ்ட் பூட் கடை தான் அவர்களது ஹாட் பாவ்வருட்.
அவனுக்கு அரிதாக கிடைக்கும் நேரத்தில் இங்கு வந்து, அவனுக்கு பிடித்த பாவ் பாஜ்ஜியும்அவளுக்கு பிடித்த பேல் பூரியுடன், அமர்ந்து ருசித்தனர்.
இன்னது தான் பேசினோம் என்று நினைவில் நில்லாத, ஆனாலும் தயக்கம் இல்லாமல் பேசியபின், கடைசியாக புதிதாக அறிமுக படுத்தப்பட்ட கோன் ஐஸ்கிரீம், அதாவது தாங்கி நிற்கும் வாபர் கோன்னையும் சேர்த்து சாப்பிடலாம் என்பதே புதுமையாக இருக்க, ஆளுக்கொரு வனில்லா ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டே வீடு வருவது அவளுக்கு ரொம்ப பிடித்த பொழுது போக்கு ஆனது.
பேச்சு வாக்கில் அவள் கசின் ஆதிரா விடம் இதை பகிர, அவள் பாவ் பாஜ்ஜி வீட்டிலேயே செய்யும் முறையை பகிர்ந்தாள்!
உருளை, கேரட் வேக வைத்து மசித்து, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பாவ் பாஜ்ஜி மசாலா சேர்த்து, மசித்த கிழங்கு சேர்த்து இறக்கினால், ஷாட் அண்ட் ஸ்வீட் பாஜ்ஜி தயார் , பாவ் வாங்கி நெய் விட்டு லேசாய் ரோஸ்ட் செய்து அவனுக்கு சாப்பிட கொடுத்த போது சந்தோசமாக இருக்க…
அவனும் அதை மிக விரும்பி சாப்பிட, அதற்கு அப்புறம் எத்தனையோ, சமையல் ஐட்டம் கற்று அவனுக்கு படைத்த போதும், பாவ் பாஜியின் இடத்தை வேறு ஏதும் பிடிக்கவில்லை.
ஓரளவிற்கு சமையல் கைவந்தபின், அவளுக்கு கை வசம் நேரம் நிறையவே இருந்தது.
சோபா, வால் ஹங்கர்ஸ், கப்போர்டு ஆகியவற்றை எத்தனை முறை மாத்தி அமைத்த போதும், நிறையவே நேரம் விருதே கழிந்தது.
பக்கத்தில் ஒரு வீட்டில் தையல் கற்று கொடுக்க, கொஞ்ச நாள் ஒரு ஷாட் கோர்ஸ் அதை எடுத்து முடித்தாள்.
சுறுசுறுப்பாக இரண்டு நயிட்டி, ஒரு ரவிக்கை, சில துண்டுகள் ஓரம் அடித்த பின், மெஷின் ஓரம் கட்டப்பட்டது.
நெஸ்ட், லிஸ்ட் ல இருந்த யோகாவையும் ஒரு கை பார்த்தாள்.
அதை கற்றுக்கொள்வதில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது, நம்ம குடும்ப இஸ்திரி கடமை, அவளை காலை எட்டு, ஒன்பது வரை, இழுத்து பிடிப்பதில், யோகா கிளாஸ் பொதுவாக அதற்குள் முடிந்துவிட, மாலையில் நடக்கும் ஒரு கிளாசில் சேர்ந்தாள்.
ஐந்து மணி தொடங்கி ஆறு மணிக்கு, அதை முடித்து வந்து, ஒரு குளியல் போட்டு, நைட் சமையல் செய்து முடிக்க, சரியாய் இருக்கும்.
சோதனை போல் அவள் கிளாஸ் சேர்ந்தவுடன், அவன் சீக்கரமே வீடு திரும்ப ஆரம்பித்தான். அப்புறம் என்ன, தி நேஷன் இஸ் அகைன்ஸ்ட் அஸ் லேர்னிங் யோகா, என்று அதையும் கைவிட்டாள்!
அவளுடைய இந்த சின்ன சின்ன முஷ்டிப் ஏதும் தேவை இன்றி அவள் நேரம் முழுமையும் இனிமையாக கழியும் வண்ணம் மகன் வந்து உதித்தான்!.
error: Content is protected !!