Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 24 2

“உன் ஒவ்வொரு முக பாவத்துக்கும்  எனக்கு அர்த்தம் தெரியும்மடி  என்  பொண்டாட்டி”..

“நான்  ரொம்ப  லக்கி  விக், சாரி அத்தான் உங்க பேரு தான் சொல்ல வருது..



Advertisement

“பேர  சொன்னா சொல்லு பல்லவி” என்றான்..

Advertisement

“இல்ல  மாத்திக்கிறேன்” என்றாள்..

Advertisement

“சரிடா ரொம்ப டயடா இருக்க தூங்கு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு  நீ தூங்கு நான் வேலையை  முடிச்சுட்டு வர்றேன்” என்றான்..

Advertisement

“அத்தான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்”…

“சொல்லு பல்லவி”..

“அம்மா  உங்ககிட்ட ஒன்னு கேட்க சொன்னாங்க”..

” என்ன பல்லவி”?..

“எனக்கு வளைகாப்பு  பண்ணலாமுன்னு  கேட்டாங்க”.. என்றாள்

“உனக்கு வளைகாப்பு பண்ணிக்கனுமா பல்லவி”?..

“ஆமாம்”  என்று  தலையாட்ட..

“சரி பண்ணிடலாம்  ஆனா மொத்த  செலவும்  என்னோடது” என்றான்…

“உங்க இஷ்டம்”  என்றவள் தூங்க சென்று விட்டாள்..

விக்ரம் வேலையை முடித்துவிட்டு பல்லவியின் அருகில் வந்து அவளை அணைத்து படியே தூங்கினான்..

விக்ரம் காலையில் எழுந்து பக்கத்தில் பார்க்க பல்லவி இல்லை. எழுந்துட்ட போல என்று பாத்ரூம் சென்று  குளித்துவிட்டு கீழே வர.. செல்லத்துரை  பல்லவியிடம்  “இன்னும் ஒன்னு சாப்பிடுடா! என்று மகளுக்கு   சாப்பிட  வெங்காய வடையை கொடுத்து  கொண்டு இருந்தார்..

பல்லவிக்கு  டி கடை வெங்காய பஜ்ஜி என்றாள் மிகவும் பிடிக்கும் அதனால்  செல்லத்துரை மகளுக்காக வாங்கி வந்தவர். மகளை உண்ண சொல்லிக்கொண்டு இருந்தார்..

விக்ரம் செல்லத்துரையும் பல்லவியும் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தவன். பல்லவியின் அருகில்  அமர. விக்ரமை பார்த்துக்கொண்டே சாப்பிட்டவள்..

அம்மா  என் வீட்டுகாரருக்கு  ஹெல்த் டிரிங்  கொண்டு வாங்க என்றாள்.. பைரவி கிச்சனில் இருந்தபடியே  “சரிமா”  என்றவர் மருமகனுக்கு  ஹெல்த் டிரிங்கை கொண்டு வந்து கொடுக்க..

“தாங் யூ அத்தை” என்றான்..

“எனக்கு எதுக்கு தாங்யூ மாப்பிள்ளை” என்றார்..

விக்ரம் பிள்ளைகளை எங்கே என்று கேட்க. “ஆத்துக்கு குளிக்க போயிருக்காங்க  இப்போ வந்துருவாங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே “டாடி” என்று கத்தி கொண்டே  சிவாக்குட்டி ஓடிவந்தவள் நாங்க   பெரிய ஸ்மிங்புலுல  குளிச்சோம் டாடி நல்லா இருந்துச்சு என்று  கதை பேச மகள் பேசுவதை கேட்டவன்..

பேபி ஹேர் தண்ணிய இருக்கு வாங்க டாடி தொடச்சி விடுறேன் என்று சொல்ல. நான் தொடச்சி விடுறேன்  என்று  பல்லவி சொல்ல. பல்லவியிடம் என்னென்ன பார்த்தேன்னு சொல்ல தொடங்கினாள் சிவாக்குட்டி..

சூர்யாவும் , ஆஷிக்கும்  கூட நல்லா இருந்துச்சுப்பா நல்லா குளிச்சோம் என்று விக்ரமிடம் பேச..

பைரவி  மாப்பிள்ளை வாங்க சாப்பிட  என்று விக்ரமையும், பிள்ளைகளையும், சுந்தரை  அழைக்க.

பல்லவி விக்ரமை பார்த்து சிரிக்க.

“என்னடி சிரிப்பு” என்று முனு முனுத்து விட்டு சென்றான்..

அங்கே  டைனிங் டேபளில்  இட்லி, கறி கொழம்பு, குடல் கறி, மட்டன் கிரேவி, கேசரி, வடை என்று வரிசையாக இருக்க..

விக்ரம்  டைனிங் டேபளில்  இருந்தே  பல்லவியை பார்க்க. அவளோ  மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு என்ற பாடலை போனில் ஒலிக்க விட்டு சிரிக்க..

பைரவி ஜோதியும்  விக்ரம்  தட்டில்  இட்லியை கறிகொழம்பையும்  விக்ரம்  தட்டில் மாற்றி, மாற்றி  ஊற்ற..

“அத்தை  எனக்கு  இரண்டு இட்லி போதும்” என்றான்..

“மாப்பிள்ளை   நல்லா இருக்கும் சாப்பிடுங்க  என்று மறுபடியும். இட்லியையும் கறி கொழம்பை ஊற்ற….

“போதும்” என்றவன் தட்டை தூங்கிய   படியே  எழுந்து  நிற்றான்…. “ம்மா  அவர விடு போதும்” என்று பல்லவி சொல்ல..

 “சரி மாப்பிள்ளை” என்றார் பைரவி..

கைகழுவி வந்தவன் பல்லவி அருகில் அமர. ஜோதி பல்லவிக்கு ஊட்டி முடித்து  விட்டு சென்றாள்..

“வாழ்க்கை!  தான்டி  உனக்கு, ஒருதர் ஊட்டி விடுறது, ஒருதர்  தலைவாரி விடறது  ரொம்ப சொகுச இருக்க”  என்று  கிண்டல் பண்ண..

“இது என் அம்மா வீடு,  எல்லாம் பொண்ணுங்களும்  ஏன்  அம்மா  வீட்டுக்கு போறாங்க. அம்மா வீட்டுக்கு வந்த ஒருவேலை செய்ய தேவயில்ல, தட்டில்  சோறு. கையில தண்ணி எல்லாம் வரும். சாப்பிட்ட  தட்டை  கூட  எடுக்க  தேவையில்லை. நல்லா சொகுச பிறந்த வீட்டுல  இருக்கலாம், அதுக்கு தான் எல்லாம் பெண் பிள்ளைகளும்  அம்மா வீட்டுக்கு சந்தோஷமா வர்ராங்க”..

“அனுபவி, அனுபவி” என்றான் விக்ரம்  பல்லவியை  பார்த்து..

“அப்படி   சொல்லல்ல  அத்தான், அம்மா  வீட்டுக்கு வந்தா எல்லா பெண்களுக்கும் ஓய்வு கிடைக்குமுன்னு சொன்னேன்”..

செல்லத்துரை  “சம்பந்தி” என்று சுந்தரிடம் வாளைகாப்பை பற்றி பேச. சுந்தர் “விக்ரமிடமும் மருமக கிட்டையும் பேசுங்க” என்றார்..

 “நீங்க என் சொல்லுறீங்க  மாப்பிள்ளை”  என்றார் செல்லத்துரை..

 “உங்க  இஷ்டப்படி  செய்யுங்க  மாமா , ஆனா  செலவு என்னுடையது  என்றான்..

“அது  எப்படி மாப்பிள்ளை,  பல்லவிக்கு நாங்க  கல்யாணம் செலவு கூட பண்ணலை. சீர் கூட பண்ணல்ல.   நகை, பணம் எதுவும்  கொடுக்கல. வாளைகாப்பையாவது  நாங்க  பண்ணுறோம்” என்று கேட்க.

“இல்ல மாமா எனக்கு என் பொண்டாட்டிக்கு  நான்  தான் எல்லாம் செய்யனுமுன்னு  தோனுது, நானே  செய்யுறேனே” என்றான்..

பைரவி விக்ரமிடம்  வந்து மாப்பிள்ளை  “நம்ம  வேணா  பாதி, பாதி செலவு செய்யலாமே”  என்று  கேட்க.

அதற்கும்  ஒத்து  கொள்ள  வில்லை  விக்ரம்.. “அப்போ  எல்லா செலவும்  நீங்க பாத்துக்கோங்க. மாப்பிள்ளை

 சாப்பாடு  செலவு  மட்டும் நான் பாத்துக்கிறோம்”  என்றனர்.

“முறைப்படி  பிறந்த வீட்டியிருந்து  தான்  மாசமா  இருக்குற பொண்ணுங்களுக்கு  சாப்பாடு கொண்டு வருவாங்க மாப்பிள்ளை  என்றார்..

“சரி  சாப்பாடு  செலவு  மட்டும்  தான்  நீங்க. மத்த  செலவு  எல்லாம்  நான் தான் பண்ணுவேன்  என்றவனை என்ன  செய்ய  என்று பல்லவியின் வீட்டார் பார்த்து இருக்க..

 விக்ரம் மேலே உள்ள   அவனின் அறைக்கு  சொல்லி  சென்று விட்டான்…

பல்லவியின்  வீடு கல, கலவென இருந்தது பல்லவிக்கு 10  நாளில்  8 வது  மாதம்  பல்லவிக்கு தொடங்குவதால். வளைகாப்பை   அடுத்த 5  தாம்  நாளில்  வைக்க முடிவு எடுத்தனர்.. பைரவி  வளைகாப்பை  பத்திரிக்கை அடித்து  கல்யாணம் போல  சொந்தம், பந்தம் என அனைவரையும் அழைத்திருந்தார்..

மலேசியாவில்  இருந்து கூட அனைவரும்  வந்திருந்தனர்..

பல்லவி  வளைகாப்பை  விக்ரம் பெரிய  ஓபன்  ப்பிலேஸ்  ரிசார்ட்டில்  புக் பண்ணியிருந்தான்.  ஆயிரம் பேர் உங்கார கூடிய இடமாக இருந்தது..

விக்ரம் பல்லவிக்கு  உடை, நகைகள் அனைத்தும்  வாங்கியிருந்தவன்..

பல்லவி  சொந்த உறவினர்களுக்கும்  உடை  எடுத்து  கொடுத்து  இருந்தான்..

 பிரம்பாண்டமாக  பல்லவியின்  வளைகாப்பு  நடந்துக்கொண்டு  இருந்தது..

முதலில்  பைரவி, ஜோதி வளையல்  என்று உறவினர் பல்லவிக்கு  வளையல்  அடுக்க. பின்பு  வாஜிதாவும், முபாரக்கின் மனைவியும்  தங்க வளையல்கள்  போட்டனர். அடுத்து ஆஷிக், சூர்யா, சிவாக்குட்டி என்று மூன்று பேரும் சேர்ந்து  அவர்களின்  அம்மாவுக்கு  வளையல் போட்டு விட..

கடைசியாக வந்தான் விக்ரம். கைநிறைய வளையல் அணித்து, பாதி முகத்தை சந்தனம்  மறைத்திருந்தது பல்லவிக்கு,   கணவனை பார்த்து வெட்கப்பட்டு சிரித்தவள்,விக்ரம் கண்ணுக்கு பல்லவி அழகோவியமாக  தெரிந்தவளை  பார்த்து ரசித்தபடியே  வந்தவன். பல்லவியின்  கைகளுக்கு  வைரம் பதித்த தங்க வளையல் போட்டவள், மனைவியை மெல்ல அணைத்து நெத்தில் முத்தமிட்டவள்  வாழ்த்துக்கள்  பொண்டாட்டி” என்றான்..

பல்லவி  விக்ரம் கையை பிடித்து தன் முகத்தில்  அழுத்தி வைத்துக்கொள்ள..

“ஹாப்பீயா மேடம்” என்றான்..

“நீங்க என்கூட இருக்குறவரைக்கும் ஹாப்பி தான்”  என்றாள்..

விக்ரம் பல்லவி நெத்தில்  முத்தம் கொடுத்ததை பார்த்த. சில பேர் ஆவேன  சிரிக்க.. சிலபேர்  வந்து நல்ல மருமகன்  உனக்கு பைரவி, இந்த  மாதிரியான மாப்பிள்ளை கிடைக்க  நீ கொடுத்த வச்சு இருக்கனும்..  என்று சொல்லி சென்றனர்..

வளைகாப்பு நல்ல படியாக  முடிந்து  அனைவரும் வீடு  வந்து சேர்ந்தனர்..

பைரவி  வீட்டுக்கு வந்தவுடனே, பல்லவியையும், விக்ரமையும், பிள்ளைகளையும்  அழைத்து உட்கார வைத்து அனைவருக்கும்  சுத்திப்போட்டார்..

விக்ரம்  லண்டனுக்கு  கிளம்புவதை  பத்தி இன்னும் சொல்ல வில்லை.

“என்ன  பல்லவி எப்போ  லண்டன்  போகலாம்” என்று  கேட்க..

“எப்பவேணுமுன்னாலும்  போகலாம்  அத்தான், உங்க இஷ்டம்” என்றாள்…

“சரி பல்லவி நாளை ஈவ்னிங் போகலாம்” என்றவன் அவன் அறைக்கு சென்று விட..

“அம்மா  நானும் போய் கொஞ்ச நேரம் படுக்குறேன்  என்று சொல்லி  கிளம்ப..

“பல்லவி மாப்பிள்ளை கிட்ட பேசுனீயா”   என்றார்  பைரவி..

“இல்லம்மா  அவரு   என்ன விட்டு போகமாட்டாரு நானும்  அவரை விட்டு இங்கே இருக்க மாட்டேன். அவங்க லண்டனுல இருக்கற   வேலை எல்லாத்தையும்  விட்டு இங்க வந்து. இவ்வளவு  பண்ணுனது  பெரிய விசயம்..

இவ்வளவு நாள் உங்க கூட இருந்ததே  எனக்கு போதும்.. அவர  மேலும், மேலும் கஷ்டபடுத்த  நான்  விரும்பல, முடிஞ்ச  நீங்க வாங்க லண்டனுக்கு. நாளைக்கு நான் ஊருக்கு  போறேன் என்றாள்.

அனைவரும் பல்லவி குடும்பத்தை  லண்டன் அனுப்பி வைக்க  திருச்சி ஏர்போர்ட் வந்திருந்தனர்.. பல்லவிக்கு  எவ்வளவு முயன்றும்  கண்ணீர்  வந்து விட்டது..”நான்  வர்ரேன்  என்று அனைவரிடம்  சொல்லி விட்டு செல்லும் போது.. பைரவியும், செல்லத்துரையும். “நல்லபடியா போயிட்டு வா. பல்லவி நானும்  அப்பாவும்   ஒரு நாள் வர்றோம் லண்டனுக்கு”  என்று  பைரவி  மகளிடம் சொல்ல..

“சரிமா”   என்றவளின்  கண்ணீர் நிற்கவே இல்லை..

விக்ரமுக்கு  பல்லவியை  பார்த்து  தாங்கமுடியாமல்  மெல்ல சிரிக்க..

விக்ரமை பார்த்து முறைத்தவள். என்ன சிரிப்பு  என்றாள்..

போன வாரம்  இவர்களை பார்க்க வரமாட்டேன் என்று சொன்னவளா. இன்று.இவர்களை பிரிய மனம் இல்லாமல் அழுவதை பார்த்தான்..

பல்லவி அனைவரிடமும் சொல்லிவிட்டு பைரவியிடம்  “வர்ரேன்மா”  என்று  சொல்லி விட்டு நடக்க..

“மாப்பிள்ளை நாங்க  உள்ள  வரலாமா”  என்று பைரவி  கேட்க..

“வாங்க  அத்தை, நாங்க  தனி  விமானம், அதனால நீங்க விமானம் கிட்ட வரைக்கும் வரலாம்”… என்றான்.

“சரி மாப்பிள்ளை” என்று பைரவியும், செல்லத்துரையும் பல்லவியோடு  விமானம்  இருக்கும் இடம் வரைக்கும் வர.

“அம்மா நாங்க  போறோம்  நீங்க  போங்க”  என்றாள்  பல்லவி..

விக்ரமுக்கு  வரும்  சிரிப்பை அடக்கிக்கொண்டு வந்தான்..

“நீங்க ப்பிளைட்குள்ள  வந்து பல்லவியை  உட்கார வச்சுட்டு போங்க  அத்தை”… என்றான்..

“ஒன்னும் வேண்டாம்  எனக்கு ப்பிளைட்டுகுள்ள  போக  தெரியும், நீங்க  கிளம்புங்க”  என்றாள்…

பைரவி பல்லவியிடம் “நாங்களும் ப்பிளைட்  உள்ள  வந்து  பார்த்துட்டு போறோம்”  என்றார்.. பல்லவி அமைதியாக வர.

அனைவரும் ப்பிளைட்டுக்குள் வர.

சிவாக்குட்டி பைரவியிடம் “பாட்டி நீங்க  என் கூட உட்காருங்க” என்று அழைத்து செல்ல..

பல்லவி சிவாவிடம் “சிவா  பாட்டி திருச்சி போறாங்க  நம்ம  கூட வரல”  என்றாள்..

“மம்மி  பாட்டி நேத்து  நைட்டே, என் கூட லண்டன் வர்ரேன்னு சொன்னாங்க  போ மம்மி”…என்றது குழந்தை…

பல்லவி  என்ன  என்பது  போல்  அனைவரையும் பார்க்க..

அனைவரும் இவளை பார்த்து சிரித்து விட்டு அவர்கள் சீட்டில் அமர.. செல்லத்துரை  சுந்தரின் அருகில் அமர்ந்து “நாங்களும் உங்க  கூட வர்ரோம் பல்லவி” என்றார்.

“மாப்பிள்ளை தான் உன் கிட்ட யாரும்  நாங்க வர்ரத  சொல்ல கூடாதுன்னு சொன்னாரு பல்லவி” என்றார்..

பல்லவி விக்ரமை பார்த்தவள். ஏதாவது கையில்  கிடைக்குமா என்று அவள் தேட..

“வேண்டாம்மடி   அடிச்சுறாத, உன் அடி  தாங்க  முடியாது”  என்று சொல்லி  சிரிக்க…

விக்ரமிடம் வந்தவள் ” என்னை  எல்லாரும்  சேர்ந்து ஏமாத்தி  அழவைக்கிறீங்க”  என்று விக்ரமை இரண்டு அடி முதுகில்  போட்டவள். அழுது கொண்டே  விக்ரம்மை அணைத்து க்கொண்டாள் பல்லவி….

“ஏன்  இப்படி  பண்ணுறீங்க” என்றவளிடம். “நான்  தான்  உன்கிட்ட  சொன்னேன் தானா. நீ  என்ன  நெனச்சாலும்  நான்  செய்வேன்னு. அப்பறம்  நீ ஏன்டி  என்கிட்ட எதையும்  சொல்ல மாட்டேங்கிறா”…

“இனிமே  எது  வேணுமுன்னாலும்  உங்க கிட்ட கேட்குறேன்  போதுமா” என்றவள்..

“ஐ லவ் யூ அத்தான்”  என்றாள் காதலாக…

விக்ரமோ சிரித்து விட்டு  “நானும் தான் பொண்டாட்டி வா வந்து உட்கார்ந்து திட்டு  அடி காலு வலிக்கபோகுது  என்றவன். அவளை அமர வைத்து. தன் கைஅணைப்பிலே  லண்டனுக்கு  அழைத்து வந்தான் பல்லவியை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!