Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 9

சடங்கு சம்பரதாயமெல்லாம் நாமாக ஏற்படுத்திக்கொண்டது,  சிலது உறவுகளைப் பலப்படுத்தச் சிலது கிடைப்பது வரை லாபம் என்று பிடுங்க.

 

 



Advertisement

அப்படியாக ராக்காயி கண்டுபிடித்த சடங்குதான் மறுவீட்டு விருந்து முடிந்து வரும் மருமகள்கள் புகுந்த வீட்டினருக்கு புதுத்துணிகள் கொண்டுவர வேண்டும் என்பது.

 

Advertisement

 

Advertisement

அவரின் மகள் ராஜலட்சுமியின் திருமணம் முடிந்து அவள் விருந்துக்கு வந்திருந்தபோது மகளுக்கும் மருமகனுக்கும் எடுத்ததோடு அவளின் மாமியாருக்கும் ஒரு புடவையைக் கொடுத்தனுப்பினார் அதைப் பெருமையாக உறவுகளிடம் சொல்லவும் செய்வார்.

 

Advertisement

 

உறவுக்குள் எங்கும் திருமணம் நடந்துவிடக் கூடாது “விருந்துக்கு வந்துட்டு போகும்போது அந்த வீட்டில எல்லார்க்கும் துணி எடுத்துக் குடுத்துவிடுங்க அதுதான் மரியாதை” என்பார்.

 

 

அவரிடம் நேரில் சொல்லமுடியாத உறவுகள் தங்களுக்குள் புலம்பிக்கொள்வர் “மாமனார் இல்ல, கூடப்பொறந்ததுன்னும் யாரும் இல்ல அப்படியொரு சம்மந்தத்தை புடிச்சிருக்கா அவ பொண்ணுக்கு, அந்த வீட்டில அதிகமா இருக்கிறதே அவ பொண்ணோட மாமியார் மட்டும் தான் ஐநூறு ரூபாக்கு ஒரு புடவையை எடுத்துக் குடுத்து வேலையை முடிச்சுட்டா”.

 

 

“இதுல பெருமை வேற நமக்கெல்லாம் அப்படியா சம்மந்திங்க மாப்பிளை கூடப் பொறந்தவங்க அவங்க புருஷன்  பொண்டாட்டிங்க பிள்ளைங்கன்னு ஒரு பட்டாளமே இருக்கு நம்மால எப்படி முடியும்” என்று.

 

 

இன்று நிச்சயம் ஒரு பிரச்சனையைக் கூட்டுவர் என்று ராஜகுமாரனுக்கு தெரியும் எத்தனை வருடமாகப் பார்க்கிறான், அதனாலே மனைவியிடம் கூடச் சொல்லாமல் அவளை அழைத்துச் சென்றிருந்தான்

 

 

“என்னம்மா” என்றான் ஒன்றும் அறியாதவனைப் போல.

 

 

“என்ன கைல துணிக்கடை பை இருக்கு” என்றார் கூர்மையாக அவனைப் பார்த்தபடி.

 

 

“ஓஹ்… இதுவா எல்லாருக்கும் துணி எடுத்துட்டு வந்தேன்” என்றவன் பைகளை வீட்டிற்குள் வைத்தான்.

 

 

நீ எதுக்கு இப்போ எடுத்துட்டு வந்த கல்யாணத்துக்கு தானே எல்லார்க்கும் எடுத்தோம்” என்றார் அவர்.

 

 

அவன் இதழ்களில் ஒரு கசந்த முறுவல், நாம் செய்தால் செலவு அதே பெண் வீட்டினர் செய்தால் அது கடமை என்ன மாதிரியான மனநிலை என்று தலையை உலுக்கியவன்.

 

 

“நான் வாங்கலமா அத்தையும் மாமாவும் வாங்கி குடுத்தாங்க” என்க செவ்வந்தியும் கனகமும் அவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தனர்.

 

 

“பெரியவன் வந்து ஒண்ணுமே சொல்லல இவளும் உங்கவீட்டில புது துணி எடுத்துகுடுக்கலயான்னு கேட்டதுக்கு திரு திருன்னு முழிச்சுகிட்டே நின்னா, இது  என்னடா மரியாதை அவங்க வீட்டோட மூத்த மாப்பிளை  இருக்குமோது உன்கிட்ட எடுத்துக் கொடுக்குறது” என்றார் அதிலும் குற்றம் கண்டுபிடித்து.

 

 

“யாரு அண்ணாதான…  ஏதோ அப்பா சொன்னாருன்னு அங்க வந்து நின்னான் மத்தியானம் வரைக்கும் கூட நிக்காம எப்படி முறுக்கிக்கிட்டு வந்திருக்கான் பாரு,  பலகார பாத்திரத்தை ஆட்டோல ஏத்துற வரைக்கும் கூட நிக்குல பலகாரம் குடுத்தனுப்புறாங்கன்னு கூட அவனுக்குத் தெரியாது  மாமா சொல்றதுக்குள்ள அவன் தெருவைத் தாண்டிட்டான்”.

 

 

“அவர் பாவம் வயசான மனுஷன் பாக்கவே  சங்கடமா இருந்துச்சு அதான் நானே கூடப் போய் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எடுத்துட்டு வந்துட்டேன்” என்றவன் “இது உங்களுக்கும் அப்பாவுக்கும், இந்தாங்க அண்ணி உங்களுக்கும் அண்ணனுக்கும்”.

 

 

“அக்கா இந்தா இது உன் வீட்டுக்கு உன் மாமியாருக்கு கூட எடுத்திருக்கார்” என்றவன் இன்னொரு பையைக் காண்பித்து “இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும்” என்க,  அவனை நன்றியோடு பார்த்தாள் செவ்வந்தி.

 

 

“இதுக்கு போய் எதுக்கு அண்ணி அழறீங்க புடவை புடிச்சிருக்கா பாருங்க உங்க தங்கச்சிதான் எடுத்தா என் அக்காக்கு இந்தக் கலர் தான் பிடிக்கும்னு” என்றவன் உள்ளே செல்லுமாறு அண்ணிக்கு கண் காண்பிக்க தலை அசைத்தவள் பையோடு அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

 

 

“குடிக்க மோர் எடுத்துட்டுவா” என்று மனைவியிடம் சொன்னவன்  “பிடிச்சிருக்கா பாருங்க ரெண்டுபேரும்” என்றதோடு உள்ளே சென்றுவிட்டான்

 

 

ராஜி ஆசையாகப் பையைத் திறந்து ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டாள் மோரோடு உள்ளே வந்த கனகம் ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்த்து நின்றவனை பின்னிலிருந்து அனைத்து அவன் முதுகில் முகம் புதைத்தாள்.

 

 

அவள் விழிநீர் அவன் சட்டையை நனைத்தது அவளின் அதிரடியில் திகைத்தவன் அவள் கண்ணீரில் சட்டென்று திரும்பி அவளை மார்போடு சேர்த்தனைதான்.

 

 

“ஏய் என்னடி” என்க.

 

 

அவளிடம் மெலிதான விசும்பல் “கனகம் இங்க பாரு என்ன” என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

 

 

“எங்க சொந்தத்துல யாரும் இப்படிலாம் கொடுத்ததில்லை அதனாலதான் அப்பா அம்மாக்கு தெரியாம போயிருக்கும் இல்லனா செஞ்சிருப்பாங்க, நீங்க மட்டும் இப்படி வாங்காம வந்திருந்தா எங்க அப்பாவை என்னலாம் பேசியிருப்பாங்க” என்றவளுக்கு வார்த்தைகள் அதற்குமேல் வராமல் உதடுகள் துடித்தது.

 

 

அவளைத் தன்னோடு இறுக்கி அனைத்தவன் “இங்கயும் அப்படிலாம் சடங்கு இல்லடி அம்மாவா ஆரம்பிச்சு வெச்சதுதான் இப்படி எதிர்பார்ப்பங்கன்னு உன்கிட்ட சொல்லி உன் அப்பா அம்மாகிட்ட வாங்கி தரச் சொல்லியிருக்கலாம்”.

“அப்பறம் என்னடி ஆம்பள நான், ரெண்டு பொண்ணுங்கள கட்டிக்கொடுக்க அந்த மனுஷன் எப்படிலாம்  ஓடி ஓடி வேலை செஞ்சிருக்கார் உன்னோட கல்யாணம் அவங்க யோசிக்காத ஒன்னு இருந்தாலும் சம்மந்தம் கூடி வந்ததும் எப்படியோ சிறப்பா நடத்திகொடுத்திட்டார்”.

 

 

“பாவம்டி… அந்த மனுஷனை இன்னும் என்னனு கஷ்டப்படுத்த இது நான் முன்னாடியே  யோசிச்சு வெச்சிருந்ததுதான் இதெல்லாம் அத்த மாமாகிட்ட சொல்லிட்டு இருக்காத வருத்தப்படுவாங்க” என்றவனை விழியில் வழியும் நீரோடு அத்தனை காதலோடு அவள் பார்த்திருக்க.

 

 

“என்ன சண்டைக்கோழி பார்வையெல்லாம் பலமா இருக்கு” என்று இடையோடு இறுக்கி அணைக்க “இந்தக் களவாணியை பிடிக்க ஆரம்பிச்சிருச்சு போல” என்றாள் முகத்தை அவனிடம் காண்பிக்காமல் திருப்பிக்கொண்டு.

 

 

“பாருடா… ஹ்ம்ம் அப்போ இவ்ளோ நாள் பிடிக்கலையா” என்றான் கன்னத்தை அழுத்தமாகப் பற்றி அவளைத் தன்னை பார்க்க வைத்து, அவள் முகம் செம்மையுற விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

 

 

அவள் செவி மடலைத் தீண்டியது அவன் மீசை முடிகள் “ஆனா எனக்கு இந்தச் சண்டைக்கோழியை ரொம்ப பிடிக்கும்” என்றவன் இதழ்கள் மெல்ல மெல்ல அவள் கன்னத்தை உரசிக்கொண்டே வந்து சட்டென்று அவள் இதழ்களைச் சிறைபிடித்துக்கொண்டது.

 

 

கனகாம்பரம் அதிர்ந்து விழித்தாள் அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள் விழிகள் மெல்ல மூடிக்கொண்டது சில நொடிகளில் “ஏண்டி சின்னவளே மோரு குடுத்துட்டு வர இம்புட்டு நேரமா” என்ற மாமியாரின் குரலில் அடித்துப் பிடித்து அவனிடமிருந்து விலகியவள் திரு திருவென்று விழிக்கச் சத்தமாகச் சிரித்துவிட்டான் அவன்.

 

 

 

“அச்சோவ்” என்றவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்க்காமலே வெளியில் ஓடினாள்.

 

 

மதியம் சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பிவிட்டாள் ராஜி, பலகாரங்களோடு அங்கிருந்து வந்த பித்தளை பாத்திரத்தில்  ஒன்றும் மகள் வீட்டிற்கு சென்றது.

 

 

“நாளைல இருந்து அவங்க ரெண்டுபேரும் வேலைக்குப் போகணும் சாப்பாடு கட்டிட்டு போய்டுவாங்க சூரியன் உச்சிக்கு வர வரைக்கும் படுத்து உருளாம விடிகாலைல எழுந்திருச்சு காலைக்கும் மதியத்துக்கும் சமைச்சு வைங்க” என்றார் ராக்காயி அதிகாரமாக.

 

 

அடுத்த நாள் என்ன சமைக்க என்று பேசிக்கொண்டே  இருவரும் வேலைகளை முடித்தனர்,  ராக்காயி விதவிதமாகவெல்லாம் சமைக்க மாட்டார் காலை வேளை கம்பு கூழ்,  ராகி கூழ் இல்லையேல் பழையது  இட்லி தோசை இப்படித்தான்.

 

 

மதியத்துக்கு பெரும்பாலும் இருவரும் வெளியில் சாப்பிட்டு கொள்வார்கள் அப்படியே கொடுத்தாலும் கிளறிய சாதம் ஏதேனும் ஒன்றுதான் இருக்கும்.

 

 

“ஏன் புள்ள காரக்குழம்பு வெச்சு கோஸ் பொரியலும் முட்டையும் வெச்சுடலாம், அப்பளமும் வெச்சுடலாம்” என்றாள் செவ்வந்தி.

 

 

“ரசமும் வைக்கணும்க்கா வெறும் காரக்குழம்பு மட்டும் எப்படி சாப்பிடுவாங்க” என்றாள் கனகம்.

 

 

“ராக்காயி மருமவள்களா நீங்க இதை மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்  நாலு நாள் சமைக்க வேண்டியதை ஒரே நாள்ல செல்வழிக்கிறீங்கன்னு உங்கள நார் நாரரா கிழிச்சுடுவாங்க” என்றான் ராஜா சிரித்துக்கொண்டே.

 

 

“அப்போ என்னதான் கொடுத்தனுப்ப” என்றாள் அவன் மனைவி.

 

 

“உங்க இஷ்டம்போலச் சமைங்க ஓடி ஓடி ஒழைக்கிறதே இந்த வயித்துக்குத்தானே அம்மாக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை, ரொம்பவெல்லாம் செஞ்சு கஷ்டப்படாதீங்க சாதம் ஒரு கொழம்பு போதும் நாங்க சாப்பிட்டுப்போம்” என்றான்.

 

 

“அதிகமா செஞ்சா அத்த திட்டுவாங்களா” என்றாள் கனகம் அவனைப் பார்த்துக்கொண்டே, அவள் விழிகளில் ஏக்கம் கணவனுக்குத் தன் கையால் நல்லதாகச் சமைத்துப்போட வேண்டும் என்ற ஏக்கம்.

 

 

“இல்ல நீ செய் நான் பேசிக்கிறேன்” என்றான் அவள் முகம் உடனே மலர்ந்துவிட்டது.

 

 

“என்ன வேணும்னு லிஸ்ட் குடுங்க நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வரேன்” என்று அவர்களிடம் கூறியவன் “அண்ணி அண்ணனுக்கு இந்த மாதிரி கொழம்பு பொரியல் அப்படி நெறய வெச்சு சாப்பிட பிடிக்கும்,  ஆனா வாயத்தொறந்து கேக்க மாட்டான் அவனுக்கு இந்த வெரைட்டி ரைஸ் பிடிக்காது ஆனா அதைச் சொல்லமாட்டான்”  என்று சொல்லிச்சென்றான்.

 

 

அடுத்தநாளுக்கு தேவையானதை எடுத்துவைப்பது அடுப்படியை சுத்தம் செய்வது என்று நேரம் பத்து மணியைத் தொட்டிருந்ததது ராக்காயும் கனகசபையும் உறங்கிவிட்டனர்.

 

 

“படுக்கலாம்க்கா காலைல வேற எழனும்” என்ற தங்கையைத் திரும்பிப் பார்த்த செவ்வந்தி “ஏண்டி இன்னுமா ரெண்டுபேரும்…” என்று இழுக்க.

 

 

“ஈஈ…” என்று பல்லைக் காண்பித்தவள் “போப்போ வளவளன்னு பேசிட்டு” என்று தமக்கையை துரத்திவிட்டாள், அவளுக்குத்தான் உள்ளே போகவே முடியவில்லை அடுப்படியின் நீல அகலத்தை அளந்து கொண்டிருந்தவளை வாய் பொத்தி தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன் அறைக்குள் சென்று கதைவடைத்தான்.

 

 

“என்ன பண்றீங்க” என்றவள் இதழில் விரல் வைத்தவன் “மூச் எதுவும் பேசக் கூடாது கேடி… அங்க உங்க வீட்டில எதுவும் செய்ய மாட்டேன்னு சொன்னேன் இங்க சொல்லல” என்றவன் அவளை ரசனையாகப் பார்த்திருக்க.

 

 

“ஆத்தி காமப்பார்வையா இல்ல இருக்கு”  என்று எண்ணியவள் “அது நான் கருப்பசாமிக்கு விரதம் பத்து நாள்” என்று விரல்களை எண்ணி காமிக்க.

 

 

“உனக்குதான விரதம் எனக்கில்லையே” என்றான் அவன்.

 

 

“ஏதே” என்றவள் பதற “உன் விரதத்தையும் இன்னைக்கு சேத்து முடிக்குறேண்டி” என்றவன் அவளை எங்குப் பேசவிட்டான்.

 

 

அருகிலிருந்த அவனின் அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள் கனகாம்பரம் நள்ளிரவு இரண்டு மணியைத் தொட்டிருந்தது அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.

 

 

“இப்போவே ரெண்டு மணி ஆயிடுச்சு, அத்த வேற காலைல சீக்கிரம் எழனும் சொன்னாங்க, என்னத்த சமைக்க? சரியா சமைக்கலானா காலைல திட்டுவாங்களா” என்றவள் கேட்டு முடிக்க அதுவரை அவள் கன்னத்தில் விரலால் கோலமிட்டுக்கொண்டிருந்தவன் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.

 

 

அவளைப் பார்த்து  வாயில் கை வைத்து “அவ்வா, அடியே இங்க எவ்ளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு  நீ நாளைக்கு என்ன சமைக்கன்னு யோசிச்சு அதையே என்கிட்டே கேள்வியா வேற கேக்குற என்னடி என்னைக் கிண்டல் பன்றியா” என்க.

 

 

அவள் விழித்ததிலேயே கிண்டல் செய்யவில்லை உண்மையாகத் தான் கேட்டிருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

 

 

தலையில் அடித்துக்கொண்டவன் “ராஜகுமாரா ஆளானப்பட்ட ஆம்பள வம்சத்துக்கே அவமானம்டா” என்றவன் “சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டல  இருடி” என்றவன் அவளை இழுத்து அணைத்தான்.

 

 

சிணுங்கலும் கெஞ்சலும் “வேண்டாம் வேண்டாம் இனிமே அப்படி  சொல்லமாட்டேன், ஐயோ என்னங்க” என்று அந்த அறையே சங்கீதமாக அவளின் சிணுக்களில் நிறைந்து கிடந்தது.

 

 

உறங்கியது என்னமோ ஒருமணி நேரமே என்றாலும் முகம் பூரிப்பில் மலர்ந்து கிடந்தது கனகாம்பரத்திற்கு, அலாரம் அடிக்கும் முன்னே எழுந்துகொண்டாள், சத்தம் செய்யாமல் அவனுடைய வலிய கரங்களைத் தன்னிலிருந்து பிரித்து எடுத்துவிட்டு உடைகளோடு அறை வாயிலை அடைந்தாள்.

 

 

யாரும் எழுந்திருக்கவில்லை வேகமாகப் பின்வாசலை திறந்து குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள், குளித்து வந்தவள் சாப்பாட்டிற்கு அரிசியை கழுகி போட்டுவிட்டு முன்வாசலில் கோலமிட செல்லச் செவ்வந்தி வெளியில் வந்தாள், தங்கை தனக்கு முன்பே எழுந்து வேலை செய்வதை பார்த்தவள் வேகமாகச் சென்று குளித்துவந்தாள்.

 

 

“எழுந்துட்டியாக்கா” என்று வந்த நின்ற கனகத்தை பார்த்த செவ்வந்தியின் முகம் மலர்ந்துவிட்டது,  தங்கை முகத்தின் பூரிப்பே சொல்லியதே “அழகா  இருக்க” என்று தங்கைக்கு நெட்டி முறித்தவள் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.

 

 

முதலில் இருவருக்கும் காபியை வைத்த கனகம் “இதைக் குடி அப்பறம் பாக்கலாம் வேலையை” என்று செவ்வந்தியிடம் நீட்ட அவளும் பத்து  நிமிடம் ஆசுவாசமாக அமர்ந்துகொண்டாள் அதன் பிறகு வேகம் வேகம் மட்டுமே, மதிய உணவுக்கு அனைத்தையும் முடித்துக் காலைச் சாப்பிட  அடைக்கு மாவையும் அரைத்து வைத்தனர்.

 

 

இவர்கள் இங்கு வேலையாக இருக்க ராஜி தாய்க்கு அழைத்துவிட்டாள் “எம்மா ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செய்றதாதான் இருந்தாங்க நாம கேட்டதும் ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்தயும் ஒரே முகுர்த்தத்துல வெச்சிட்டாங்க”.

 

 

“ஒருத்திக்கு தானே நகையெல்லாம் செஞ்சு வெச்சிருப்பாங்க அப்போ அடுத்தவளுக்கு குடுத்ததுல பாதியும் கவரிங்கா இருக்கும், இல்லனா ரெண்டு பேருக்குமே பாதி தங்கம் பாதி கவரிங் தான் குடுத்திருப்பாங்க, நீ வாங்கி உரசி பாரு” என்று தாய்க்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாள் ராஜி.

 

 

கையிலிருந்த மண்சட்டியில் மீனைப் போட்டு அலசிக்கொண்டிருந்தாள், இரண்டு கையும் பிஸியாக இருந்ததால் காதுக்கும் தோள்பட்டைக்கும்  இடையில் போனை அழுத்திப் பிடித்திருந்தாள்.

 

 

 

பேசிக்கொண்டே இருந்தவள் “ஆத்தி” என்ற அலறலோடு துள்ளி ஒருபக்கம் விழ மண்சட்டி சுக்குநூறாக உடைந்துகிடக்க மீனெல்லாம் சிதறி கிடந்தது  பின்னில் உக்கிரமாக நின்றிருந்தான் அவளின் கணவன் மாணிக்கம்.

 

 

 

“தினவெடுத்த கழுத அந்தப் பொண்ணுங்க வாழ வந்து முழுசா நாலுநாள் ஆகல அதுக்குள்ளே இங்கேர்ந்து சிண்டு முடியிறியோ, வேலைவெட்டி இல்லாத நாயி வேப்பமரத்துல ஏறி ஏறி எறங்குச்சாம்”.

 

 

“வீட்ல ஒரு வேலையை ஒழுங்கா பாக்க துப்பில்லை உனக்கு அங்க உரசி பாக்கணுமா, இன்னைக்கு உன்ன மிதிக்குற மிதில உன் கொழுப்பெல்லாம் கரைஞ்சு ஓடல என்னை என்னான்னு கேளுடி நீ” என்று அவளை நெருங்க.

 

 

“ஐயோ என்ன அடிச்சே கொல்லுறாங்களே” என்று அலறிக்கொண்டே வீட்டு தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தாள்.

 

 

“அவ இடுப்பெலும்பை ஒடச்சு போடு ராசா” என்று வாயில் வெத்தலையை அதக்கிக்கொண்டே மகனை ஏற்றிவிட்டார் அவளின் மாமியார், அக்கம் பக்கம் சிலர் எட்டிப்பார்க்க.

 

 

“என்னங்கடி புருஷனும்  பொஞ்சாதியும் ராத்திரி கொஞ்சிகிட்டது மிச்சத்தை இப்போ கொஞ்சிக்கிறாங்க அதையும் எட்டி பாக்க வந்துட்டாளுங்க போய்ச் சோலி கழுதையை பாருங்க” என்று அவர்களையும் விரட்டிவிட்டார்.

 

 

“நீ ஓடுடி எவ்ளோ ஓடுறன்னு நானும் பாக்குறேன்” என்றவன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து ராஜகுமாரனுக்கு அழைத்தான் மூன்று முறை முழுதாக அழைப்பு சென்று நிற்க.

 

 

“எடுறா மாப்ள” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அடிக்க அப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து விழிகளைப் பாதி திறந்து பார்த்தவன் அழைப்பை ஏற்று “என்ன மாமா” என்றான் தூங்கிக்கொண்டே.

 

 

“மாப்ள ஓ அக்கா இங்கேர்ந்து உன் அம்மாவுக்குச் சலங்கை கட்டி விட்டிருக்கா என் மாமியா அங்க ஆட ஆரம்பிச்சாச்சா இல்ல இனிமேதான்னு போய்ப் பாருடே,  இங்க உங்க அக்காளுக்கு இன்னைக்கு நான் தீபாவளி கொண்டாட்டிட்டு வரேன்” என்று அவன் அழைப்பைத் துண்டித்துவிட.

 

 

“மாமா… மாமா” என்றான் அவசரமாக.

 

 

“ஆண்டவா இந்தப் பிசாசு இன்னைக்கு என்ன பிரச்சனையை இழுத்து விட்டுச்சு எனக்குன்னே எங்கேயிருந்துடா யோசிப்பீங்க” என்று தலையில் அடித்துக்கொண்டவன் அவசரமாக வெளியில் வர.

 

 

“எங்க அப்பாரு ஏமாத்துக்காரரா? அவர் குடுத்த எல்லாமே தங்கமா இருந்தா என்ன செய்வீங்க அத்த” என்று அவனின் சண்டைக்கோழி  மாமியாரிடம்  சிலிர்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!