Skip to content
Post Views: 1,035
மைவிழி – 10(a)
அழுகை எல்லாம் மறைந்து எங்கோ சென்றிருக்க, கோபம் தான் முதலிடமாய் இருந்தது வேதவியிடம்.
Advertisement
இதுவரையிலும் அடித்திராத தந்தை அடித்ததும் அகத்தில் பெரும் வலியைக் கொடுத்திருந்தது பெண்ணுக்கு.
சத்யநாதன் என்ன தான் கடுமை என்றாலும் பிள்ளைகளின் மீது கை வைப்பதில்லை. அரட்டி மிரட்டுவாரே தவிர்த்து சரஸ்வதியைக் கூட அடிக்க விட்டதில்லை மனிதர்.
Advertisement
Advertisement
மகள் திருமணம் வேண்டாம் என கூடத்தில் இருந்து கத்திக் கொண்டிருந்தது கண் மண் தெரியாத கோபத்தை கொடுத்திருக்க அடித்து விட்டார் மகளை.
ஆனால் தன்னை மீறி அடித்து விட்டவரும் நிம்மதியாக இல்லை. அடித்தவர், மகள் அழுத முகத்துடன் கன்னத்தில் கை வைத்த படி திகைப்புடன் நின்றிருந்ததை பார்க்க முடியாமல்,
Advertisement
“உள்ள அழைச்சிட்டுப் போய் அவகிட்ட என்னனு கேளு சரஸு” என மனைவியிடம் சொல்லி விட்டு வெளி நடப்பு செய்து விட்டார்.
இதோ அறைக்குள் நுழைந்து அரை மணித்தியாலம் கடந்த பின்னும் மகளிடம் காணப்பட்ட அசாத்திய அமைதி சரஸ்வதி வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.
மகள் திருமணத்தை வேண்டாமென சொன்னது முதலில் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க ஏனென்று புரியாது இருந்தவருக்கு மகள் முகம் ஆழ்ந்து பார்த்ததில் தான் அவளிடம் மறைத்த விடயத்தினால் என புரிய வந்தது.
என்ன சொல்லி சமாளிக்க எனத் தெரியாது இவர் முழி பிதுங்கிக் கொண்டிருக்க, சற்றும் அசைந்து கொடுக்காமல் சரஸ்வதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேதவி.
முதலில் பொறுமையின்றி இருந்தவளுக்கு நிதானம் வந்த பின் தெள்ளத் தெளிவாய் புரிந்தது, தன்னிடம் வாசனின் காதல் தோல்வி பற்றி மறைத்தது சரஸ்வதியன்றி வேறு யாராகவும் இருக்காது என.
ஆனாலும் வாசன் பேசி விட்டது மீண்டும் மீண்டும் செவியினுள் ரீங்காரமிட உள்ளுக்குள் என்னவோ பிசைந்தது பெண்ணுக்கு. மீண்டும் கண்கள் கலங்கப் பார்க்க தாயிற்கு காட்டாது முகத்தை திருப்பி கண் சிமிட்டி கண்ணீரைத் தடை செய்தாள் வேதவி.
மகள் படும் பாட்டைக் கண்டு கலங்கிப் போனவராய்,
“வேணும்னே அம்மா மறைக்கலடி வேதா” என்றார் சரஸ்வதி.
ஒன்றும் பேசவில்லை இவள். தலை வலிக்க நெற்றியைப் பற்றிக் கொண்டவள்,
“நா.. நான் அப்பறமா பேசறேன் மா! நீ போ!” என்று கண் மூடிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.
இப்போதிருக்கும் மனநிலையில் தாயிடம் பேசப் போய் அவரை காயப்படுத்த போவது உறுதி. அதனாலே தவிர்த்தாள். ஏற்கனவே தன் பேச்சினால் பயத்தில் இருப்பவரை மேலும் நோகடிக்க விரும்பவில்லை வேதவி. இவளிடம் இந்தப் பொறுமை எல்லாம் அரிது!
நேற்றும் இந்தளவு பொறுமையாவது இருந்திருக்கலாம் என நொந்து கொண்டவள்,
கதவு வரை சென்றவரை, “ம்மா!” என்று அழைத்தாள்.
நின்று திரும்பி பார்த்தவரை உணர்ந்தவளாய், “அ.. அது கல்யாணம் நீங்க நினைச்ச மாதிரியே நடக்கட்டும்” என்றாள் கண்களைத் திறவாமல்.
போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது சரஸ்வதிக்கு.
“பயந்தே போயிட்டேன்டி” என்று அழு குரலில் மகளிடம் சொல்லியவர், வெளியேறிய நேரம் பதட்டமாய் வீட்டினுள் நுழைந்தான் கிஷோர்.
சித்தி முகம் கலங்கி இருப்பதைக் கண்டவன்,
“என்ன சித்தி இங்க நீயும் அழுகுற?” என்றபடி அவர் தோளை அணைத்துக் கொள்ள,
“நான் அழுகுறேன்னா வேற யார் அழுகுறா கிஷோர்?” என கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டார் சரஸ்வதி.
“சித்தப்பு தான்! எங்க வீட்டுக்கு கோபமா வந்தவர் என்னைப் பார்த்ததும் முகம் எல்லாம் கலங்கிப் போச்சு! என்னனு கேட்டதுக்கு வேதவிய அடிச்சிட்டேன்னு சொல்லி ஒரே ஆர்ப்பாட்டம்” என்றவன்,
“வேதவி எங்க? என்ன நடந்துச்சு அவளை அடிக்கற அளவுக்கு?”என தங்கையை தேடியபடி, சரஸ்வதியோடு அமர,கையைப் பிசைந்தவாறு பாவமான முக பாவனையுடன்,
“நான் தான்டா கிஷோர் காரணம் இதுக்கெல்லாம்” என்றார்.
“உனக்கு இதே வேலையாப் போச்சு சித்தி! என்ன தான் செஞ்சு வெச்ச?”
“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்ற?”
“பின்ன,எப்பவுமே சித்தப்புவை டென்ஷன் பண்றது நீதானே!இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுக்கிட்டா நம்பிடுவேனா!”
“இல்லைன்னா மட்டும் உன் சித்தப்பா குதிக்காம இருப்பாரு பாரு!”
“ப்ச். அதை விடு சித்தி! இப்போ என்ன ஆச்சு? எங்கப்பா தான் ஆம்புள புள்ளைன்னு பார்க்காம புள்ளைங்களுக்கு அடி வெளுப்பார். இங்க என்னடான்னா கை நீட்டாத மனுஷனையே கை நீட்ட வெச்சிருக்க!”
“அதுடா.. அது வந்து கிஷோர்” என தயங்கியவர், அவன் கைகளை பற்றிக் கொண்டு,
“நா..நான் சொல்வேன் ஆனா நீ ரவிக்கிட்ட மட்டும் சொல்லிடக் கூடாது” என்றார் சரஸ்வதி.
“அண்ணா கிட்டயா? அப்போ ஏதோ பெருசா செஞ்சிருக்க” என்றான் இவன்.
“அப்டிலாம் இல்ல கிஷோர். மாப்ள தம்பிக்கு காதல் தோல்வின்றத இவகிட்ட சொல்லலப்பா. இப்ப எப்டியோ தெரிய வந்திருக்கு.அதான் கோபத்துல வேதவி கத்திட்டா” என வருத்தமாய் கூறியவரிடம்,
“என்ன சித்தி இப்படி சாதாரணமா சொல்ற?அவ்ளோ சொன்னோம் நாங்கெல்லாம், வேதவிக்கிட்ட இதை மறைக்காதீங்கன்னு! அன்னைக்கு ரவிண்ணாவ சொல்ல வேணாம்னு சொல்லி கண்ணீர் விட்டு கரைச்சிருக்க. சரி எப்படியும் நீங்களே சொல்லிடுவீங்கன்னு தான் நான் எதுவும் வேதவிட்ட பேசல. இப்ப எங்க வந்து நிக்குது பார்த்தீங்களா?”என்று சற்றே கோபமாய் பேசியவன்,
“பாவம் நீங்க பார்த்த வேலைக்கு என் தங்கச்ச அடிச்சிட்டாரு இந்த சித்தப்பு! இதுல வீட்டுக்கு வந்து அழுகை வேற. உன்னை வேணா அந்த மனுஷன் ரெண்டு போடு போட்டிருக்கலாம் சித்தி”என்கவும்,
“ஹ்க்கும்!”என நொடித்துக் கொண்ட சரஸ்வதி,
“தங்கச்சின்னு வந்தா அவளுக்குத் தான் இவனுங்க சப்போர்ட் எல்லாம். அவ கல்யாணத்தை வேணான்னு சொன்னதை சொல்லிருந்தா, அதை நிறுத்த இவனுங்களே போதும்” என முணுமுணுத்தவர்,
“நான் போய் வேதவிய பார்த்துட்டு வரேன்”என எழுந்தவனிடம்,
“தலை வலிக்குதுன்னு சொன்னா அவ. இந்த மாத்திரை கொண்டு கொடுப்பா” என மாத்திரைகளை நீட்ட,
“நீ செஞ்சு வெச்ச வேலைக்கு தலை வலி வரலைன்னா தான் மிச்சம்! என் தங்கச்சி தான் பாவம்” என பல்லைக் கடித்தவன்,
“கொண்டா இங்க!” என வாங்கிக் கொண்டு நகர்ந்து விட,
“அடேய், உங்க தங்கச்சி பாசம் தாங்க முடியலடா” என தலையில் கை வைத்துக் கொண்டார் சரஸ்வதி.
கிஷோர் வேதவியை அழைத்தபடி அவள் அறை நுழைய,
“வாண்ணா” என எழுந்தமர்ந்தாள் அவள்.
அழுகையால் வீங்கிருந்த தங்கை முகத்தை கவலையாய்ப் பார்த்தவன்,
“இந்தா மாத்திரையைப் போடு” எனக் கொடுக்க, வாங்கிப் போட்டுக் கொண்டாள் வேதவி.
அவள் போடும் வரையிலும் எதுவும் பேசவில்லை கிஷோர்.
சற்று நேர அமைதிக்கு பின்,
“ஏண்ணா நீங்க கூட சொல்லல எங்கிட்ட?” என கமறிய குரலில் கேட்டாள் வேதவி.
கிஷோருக்கு தங்கையின் இந்த நிலை தாளவில்லை. எப்போதும் அடமாய், திமிராய் மனதில் பட்டதை பட்டென பேசிவிடுபவள் இப்படி கலங்கிப் போய் கேட்க, “ சித்தி!” என சரஸ்வதியை நினைத்துப் பல்லைக் கடித்தான் அண்ணன்காரன்.
“மறைக்கனும்னு இல்லடாம்மா! நீ இப்படின்னு தெரிஞ்சா இந்த கல்யாணத்தை வேணானு சொல்லிருவேன்னு சித்தி பயந்துட்டாங்க” என்றவன்,
“கீர்த்தி கூட, இந்த சம்பந்தம் பேசும் போதே இங்க உன்கிட்ட சொல்லச் சொல்லிருக்கான்டா. நீ கோபத்துல அவனை ஒன்னும் பேசிடாதே!” என்றான், தங்கை பேசி வைத்ததை அறியாதவனாக.
இவளுக்கு தான் சுருக்கென்றது. நேற்று கோபத்தில் அவனை அத்தனை பேசி விட்டாள் அல்லவா! தங்கள் பக்கம் முழுப் பிழையும் இருக்க வாசனை மட்டும் எப்படி சாடுவது.
தங்கையின் அமைதியில் பயந்தவன்,
“வேதா, என் நண்பனுக்கு ஆதரவா பேசறேன்னு நினைச்சிக்காத! சக மனிதனா இதை சொல்றேன். சில உறவுகளை, நபர்களை, ஏன் சில பொருட்களை, சில சம்பவங்களை னு இப்படி ஒரு சிலவைகள் நம்ம வாழ்க்கைல முக்கியமானவையா, மறக்க முடியாதவையா மாறிடும்.
நம்ம அனுமதியோடவோ இல்ல அனுமதி இல்லாமலோ ஏதோ ஒரு விதத்துல அது நம்ம லைப்ல கொடுக்கற எபெக்ட்னது மறுக்க முடியாத உண்மை!அப்படி தான் அவனுக்கு சஞ்சனா. ரொம்ப விரும்பினான் அந்தப் பொண்ணை.ப்ச்”என்றவனை இடையிட்டு,
“புரியுதுண்ணா!நா.. நான் அவர் பர்ஸ்ட் லவ் பத்தி தப்பா நினைக்கல. எங்கிட்ட எல்லாருமா மறைச்சிட்டாங்கன்ன வருத்தம் தான்”என சிறு குரலில் கூறினாள் வேதவி.
“ஹ்ம்ம். ஆனா நானும் இப்படியே விட முடியாதே! கீர்த்தி பத்தி உன்கிட்ட முழுசா சொல்லிடுறேன்” என்றவனிடம்,
“இ..இல்ல,வேணாண்ணா. நா.. நான் அவர்கிட்டவே கேட்டுக்கறேன்” என்றாள், தயக்கமாய் என்றாலும் அழுத்தமாக.
புன்னகைத்த கிஷோர்,
“சரிப்பா! ஆனா இப்படியே இருக்காதே என் தங்கச்சிய பார்க்க எனக்கே சகிக்கல.”என கேலி செய்ய முறைத்தவளிடம்,
“போய் பிரெஷ் ஆகிட்டு ரெஸ்ட் எடு வேதா! தெளிவா யோசி. எல்லாம் சரியாகிடும்”என்று அவள் தலையில் ஆதூரமாய் கை வைத்து சொன்னவன் சென்று விட, தன் பிழையைத் திருத்திக் கொள்ள முயன்றாள் வேதவி.
***************************
“முட்டாப் பய! முட்டாப் பய. ஆளு தான் ஆறடிக்கு மேல வளர்ந்ந்திருக்கானே தவிர்த்து மூளை வளர்ந்திருக்கா? என்னடா பேசி வெச்சிருக்க. அதுவும் கல்யாணமாகப் போற பொண்ணு கிட்டயே!” என நண்பனைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தான் சிவகுமார்.
“டேய் சிவா. கல்யாணப்..” வாசன் பேச்சில் இடையிட்டு,
“அடேய! கொலை வெறியாயிருவேன் பார்த்துக்க? கல்யாணப் பொண்ணில்ல வேதவினு கடுப்படிச்ச மனுசனாவே இருக்க மாட்டேன் அப்பறம்” என கடுத்தவன்,
“மனுஷனா இருக்க மாட்டேன்னா.. எருமைக்கடாவாகற ஐடியா எதுவும் வெச்சிருக்கியா மச்சான்” என கேலி பேசிய நண்பனைப் பார்த்து,
“அடேய்!”என பல்லைக் கடித்தான் அவன்.
“கூல் டா மச்சா” சிரிப்புடன் கீர்த்தி.
“பிபியை ஏத்தி விட்டதும் இல்லாம கூலாம் கூலு! விடியக் காலலை மூனு மணிக்கு போனை போட்டு எங்கிட்ட மூக்கால அழுத நாயி! இப்போ வந்து பல்லைக் காட்டிட்டு இருக்க! காத்து கருப்பு எதுவும் அடிச்சிடுச்சாடா?” என்ற எகிறிய சிவாவிற்கு நண்பனை நினைத்து ஆத்திரம் அடங்கவில்லை.
“….”
“இப்பெதுக்கு மூஞ்ச மூஞ்சூறுக்கு மூத்த கொழந்த மாதிரி வெச்சிருக்க?ஒன்னு பேசி அரு! இல்லன்னா இப்படி பேசாம சாவடி. உன்னைக் கட்டிக்கிட்டு அந்த பொண்ணு வேதவி என்ன பாடு படப்போகுதோ”என பொரிந்தவனிடம்,
“கட்டிக்குவாளா மச்சி?” எனக் கேட்டான் வாசன் பாவமாய்.
“கேக்குறான் பாரு கேள்வி! கேனப்பய!அதை பேசறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும். எனக்கு காதலி இருந்தா, அவளை மறக்க முடியலன்னு எவனாவது சொல்லுவானா?கட்டிக்குவாளாமே வேணா கட்டையை எடுத்து நாலு சாத்து சாத்துவா!”
“சிவா டேய்”
“ஒன்னை எவ்ளோ திட்னாலும் அடங்கலடா எனக்கு! அங்க என்ன நடந்ததோ தெரில. அவங்க அண்ணன் கிஷோர்ப் பய என்னைப் புடிச்சி ஆட்டுறான். ‘என் தங்கச்சி வேதா ஒரே கண்ணீரும் கம்பலையுமா இருக்கா! என் சித்தப்பு வேற கோவமா இருக்காருன்னு’ இதுக்கென்ன டா பதில் சொல்லுவேன்?” என்றான் சிவா.
தன்னை வெளியில் சாதாரணமாக காட்டிக் கொண்டிருந்த வாசனுக்கு சிவா சொல்லியது கவலையைக் கொடுத்தது.
சத்தியமாய் அந்த நேரம் அப்படி பேசியிருக்க நினைக்கவில்லை இவன். வேதவியிடம் தன் கடந்த காதலை(!) தன்மையாகத் தான் சொல்ல இருந்தான்.ஆனாலும் அதையும் மீறி நிதானம் தவறச் செய்திருந்தது, வேதவியின் பேச்சு.
அவள் கோபத்தில் கொட்டி விட்ட வார்த்தைகளில் அவனின் குடும்பத்தை பேசியதும், அதை விட தான் அவள் மேல் வைத்திருக்கும் அன்பையே பொய் என்பது போல் சொல்லி விட்டாளே எனும் தோற்றத்தை கொடுத்திருக்க, காயப்படுத்தும் என புத்திக்கு அறிந்திருந்தாலும் பேசி விட்டான்.
தன்னை எப்படி அந்த சந்தர்ப்பத்தில் உண்மையாகக் காட்ட முடியும் என்பதற்காக சஞ்சனாவைப் பற்றி சொல்லிவிட்டிருந்தான்.
அதற்காக ‘சஞ்சனாவை மறக்க முடியவில்லை’ என்றது அவனைப் பொறுத்த வரையிலும் பிழையோ தவறோ அல்ல!எத்தனை காலமானாலும் அவனால் அவளை மறக்க முடியாது என்பது மறுக்க இயலாத உண்மை.
முதல் காதலை மறந்தது போல் நடிக்கலாமே தவிர்த்து மறக்க முடியாது. வேதவியிடம் அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை அவனுக்கு.
முன்பு எப்படியோ தெரியாது. ஆனால் வேதவி தான் அவனுக்கான துணையென உறுதியான பின்பு உண்மையாக் தான் இருக்கிறான்; இருப்பான். சர்வநிச்சயம்!
அதை அவன் சொல்லி அன்றி வேதவியே உணர வேண்டும் என நினைந்திருந்தது இவன் மனது. அவள் மனம் எந்நிலையில் இருக்குமென யோசிக்க மறந்தான் வாசன்.
தனக்கு காதல் தோல்வி இருப்பது தான் வேதவியின் பிரச்சனை என இவன் நினைத்துக் கொண்டிருக்க, அதை தன்னிடம் இத்தனை நாட்களாய் மறைத்தது தான் பெரும் வருத்தத்தையும், தாளாமையும் கொடுத்திருந்தது அவளுக்கு என இவன் அறிந்திருக்காதது பாவமே!
“எனக்கு தெரியலடா சிவா! வேதவிக்கு இந்த விசயத்தை முன்னாடியே அவங்க வீட்ல சொல்லித் தான் சம்மதம் வாங்கிருப்பாங்கன்னு நெனச்சேன். ப்ச்.!ஆனா நான் அன்னைக்கு சரியா கேட்டிருக்கனும்!” என ஆயாசத்துடன் வாசன் சொல்ல,
“என்னடா சொல்ற? அன்னைக்கு என்னத்த தான் பேசுன? அத்தனை ஆர்ப்பாட்டம் செஞ்ச. பேசனும், கேக்கனும் அப்டின்னெல்லாம்! இப்போது இப்படி சொல்ற?” என வினவினான் சிவா.
“ப்ச்”
“ப்ச் ன்னா! என்னடா இது?” தலையைத் தாங்கிக் கொண்டு சோர்ந்து போய் இருந்தவனைப் பார்க்கையில் சிவாவிற்கு மனம் கனத்தது.
“விட்றா டேய்! எல்லாம் சரியாகிடும்” என தோளைத் தட்டிக் கொடுத்தான்.
“ஹ்ம்ம். சரியாகிடும். சரியாகிடனும்!”என தன்னைப் போல் சொல்லிக் கொண்டவன்,
உதட்டில் நெளிந்த முறுவலுடன்,
“பிடிக்கலைன்னா கல்யாணத்தை நிறுத்திட சொல்லி அவகிட்ட சொன்னேன் மச்சா. அதான் கோபக்காரி வீட்ல இந்த கல்யாணத்த நிறுத்த சொல்லிருப்பா போல” என்றான், வேதவியை ஓரளவிற்கு புரிந்து வைத்திருந்தவனாக.
“அடேய்!!”
வாசன் அதே சிரிப்புடன் திகைத்துப் போயிருந்தவனைப் பார்க்க,
“சிரிக்கறான் பாரு! என்னை கடுப்பேத்துறதுக்குன்னே”என்ற சிவா,
“இது தெரிஞ்சு தான் இந்த கிஷோர் பய என்னைய புடிச்சி உலுக்குறானா?”எனக் கேட்டுக் கொண்டவன்,
“இல்ல, தெரிஞ்சிருந்தா உலுக்கரதோட விட்ருக்க மாட்டானே!”என யோசித்தபடி,
“கல்யாணம் நின்னு போயிரும்னு கொஞ்சமாவது பயமிருக்கா பாரேன்” நண்பனைப் பார்த்து பல்லைக் கடித்தான்.
“அதெல்லாம் நிக்காது!”என முறைப்புடனே கூறிய வாசனிடம்,
“ஆமா, உன் மாமனார் சொன்னாரு பாரு”என்ற சிவா, காபி கப்புக்களுடன் அங்கு வந்த மனைவியைக் கண்டு,
“இவனைப் பாரேன் பார்கவி!” என்றான் சலிப்பாக.
“ஹ்ம்ம். நீங்க பேசிக் கிட்டதெல்லாம் நானும் கேட்டேன்!”என்று காபியைக் கொடுத்த பார்கவி,
“அண்ணா நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க!” என வாசனிடம் கூற அவன் தலையசைக்கவும்,
“என்ன இருந்தாலும் அந்த நேரம் அப்படி நீங்க சொல்லிருக்க கூடாது அண்ணா! சஞ்சனாவப் பத்தி வேதவிட்ட கொஞ்சம் பொறுமையா புரிய வெச்சிருக்கலாம்! பொண்ணுங்க எப்பவுமே தனக்கு துணையா வரப் போறவங்களுக்கு நாம தான் முதன்மையா இருக்கனும்னு எதிர்பார்ப்பாங்க. அதுலயும் கல்யாணப் பொண்ணு வேதவி. அவகிட்ட உங்களுக்கான எதிர்பார்ப்பு இன்னுமே அதிகமா தான் இருந்திருக்கும்.முதல்ல இந்த விஷயத்தை அவகிட்டருந்து மறைச்சது ஷாக்னா, அடுத்து நீங்க பேசுனது இன்னுமே காயத்தை தான் கொடுத்திருக்கும்”என்றாள்.
பார்கவியின் பேச்சில் வேதவியின் அகம் புரிய, புரியச் செய்தது இவன் அகத்தை ஆட்டம் காணச் செய்தது.
error: Content is protected !!