Skip to content
Post Views: 975
மைவிழி – 14(c)
அனைவரும் தூங்கிருக்க, இவர்கள் வருவார்களென கதவை தாழ் போடவில்லை அமரேசன்.
Advertisement
வந்ததும் வாசன் குளிக்க சென்று விட்டான்.நகைகள் ஒவ்வொன்றாய் கழட்டிக் கொண்டிருந்த வேதவி, காதில் கை வைக்க ஜிமிக்கியைக் காணவில்லை.
ரூமிலும் தேட, அங்கேயும் இல்லை. வெளியில் விழுந்துருக்குமோ என வெளியே வர, குளித்து விட்டு வந்தவன் என்னவென்று கேட்டான்.
Advertisement
Advertisement
“ஜிமிக்கிய காணோம்ங்க” பதட்டமாகச் சொன்ன வேதவி முற்றத்திலும் தேடினாள்.
“லேட் ஆச்சு வேதா! பகல்ல தேடிக்கலாம்”
Advertisement
“ப்ச்”
“நான் வாங்கி கொடுத்த ஜிமிக்கி தானே.! கோல்ட் கூட இல்ல அது.”
கணவனை முறைத்தாள் அவள்.
“கவரிங்னா தேடக் கூடாதா? என் ஜிமிக்கி, எனக்கு ப்ரீசியஸ்-ஆன ஜிமிக்கி” என்று கரகரப்பாய் கூறியவள் தேடலை நிறுத்தவில்லை.
எங்கும் இல்லாமல் பதட்டம் கூட இவள் கண்களில் அலைப்புறுதல். தொண்டை அடைத்து மனமெல்லாம் கலங்கி விட்டது வேதவிக்கு.
அவள் நிலை கண்டு,
“ஏய் வேதா..!விடுடா. நான் புதுசு வாங்கித் தரேன்”என்றான் வாசன்.
“ம்ஹூம்!”என்றவளுக்கு தன்னைப் போல விழிகளெல்லாம் கலங்கி விட்டது.
வாசன் அவளுக்கே அவளுக்காய் முதன் முதலில் வாங்கிக் கொடுத்த பரிசு. இன்னும் எத்தனை ஜிமிக்கி வந்தாலும் அது தான் அவளுக்கு பொக்கிஷம்.
மனைவியின் கலங்கிய விழிகளைப் பார்த்தவனுக்கு வெறும் காதணிக்காக கலங்கும் அளவு என்ன அவசியம் எனப் புரியவில்லை.
காலையில் கூட அத்தனை ஆசையாய் அணிந்து கொண்டவளைப் பார்த்தவன் தான்.
“வேதா!” என்க.
“நான் வீட்ல கேக்கறேன். அங்க தான் விட்ருப்பேன் போல!” கண்களை துடைத்துக் கொண்டு அவள் அறை செல்ல,
“எல்லாரும் தூங்கற டைம் வேதா! நாளைக்கு கேட்டுக்கலாம்” என பின்னோடு வந்தான்.
“ப்ச், போங்க!” என சரஸ்வதிக்கு அழைத்து விட்டாள்.
அவர் என்னவென்று கேட்க, விஷயத்தை சொன்னாள்.
“இங்க இல்லையேடி!”என்றார் அவர்.
“நல்லாத் தேடிப் பாரு ம்மா!மேல எங்க பெட் ரூம் போய்ப் பாரும்மா!” என படபடத்தாள் இவள்.
“இருடி” என்ற சரஸ்வதி, ஐந்து நிமிடங்களின் பின்,
“இங்கேயும் இல்லடி. நல்லா தேடிட்டேன்!”என்கவும், அதுவரை கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டு விட்டது.
“ம்ம்மா!”அழுதே அழைக்க பதறிவிட்டார் அவர்.
பார்த்துக் கொண்டிருந்த வாசன் தான், மனைவியிடமிருந்து ஃபோனைப் பறித்து மாமியாரிடம் ஆறுதலாகப் பேசி விட்டு வைத்தான்.
“பைத்தியமா நீ? இப்படி அழுது பேசுனா அவங்க பதற மாட்டாங்களா? நீ இப்படி இல்லையே, இது என்ன சின்னப் புள்ள மாதிரி கண் தண்ணி வெச்சுட்டு!”எனக் கடிந்தவன்,
“ஆஃப்ட்ரோல் கவரிங் ஜிமிக்கி.! அதுக்கு அழுவியா?போனாப் போகுது. நானே இன்னொன்னு கோல்டுல வாங்கித் தரேன்” என்றான்.
“ஆமா, உங்களுக்கு எல்லாமே ஆஃப்ட்ரோல் தான்ல?” கோவமாய் கேட்டவள்,
“ம்ஹூம்! உங்களுக்குப் புரியாது வாசன். எனக்கது வேணும். அ..அது நீங்க வாங்கித் தந்த ஃபர்ஸ்ட் கிப்ட்! என்னை பொறுத்தவரை ரொம்ப ரொம்ப ப்ரீசியஸ். அப்போ சொன்னீங்களே என்ன கொடுக்கறோம்னு முக்கியம் இல்ல, யார் கொடுக்கறான்னது தான் முக்கியம்னு. அது எனக்கான உங்க அன்புல்லப்பா?!” வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கேட்டாள்.
மனைவியின் இந்த அலைப்புறுதலிலும்,கண்ணீரிலும் நிலை கொள்ளவில்லை வாசனுக்கு.
அவனோ சாதாரண ஜிமிக்கி என நினைத்திருக்க, இப்படி பொக்கிஷமாய்ப் பாதுகாப்பவளின் அன்பில் நெஞ்சமெல்லாம் கலங்கிட கரைந்து தான் போனான்.
அதிலும் இதற்கே இத்தனை வருந்துபவள், அன்று சஞ்சனா பற்றி தான் சொல்லும் போது எப்படி அவளையே அவள் வருத்திக் கொண்டிருப்பாள் என நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை இவனால்.
தான் கொடுத்த பொருளைக் கூட தன்னுரிமையாய் வைத்திருப்பவள், அந்நேரம் அவளுக்கே உரிமையான தன்னை, பேச்சுக்காக கூட வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க விரும்பாது எப்படி தவித்திருக்க கூடும்?
அன்று தன் கதையைக் கேட்டு அழுதவள்,அதன் பின் எத்தனை கலங்கியிருப்பாள்.?
அன்றைக்குப் பிறகான அடுத்த வந்த நாட்களில் சாதாரணமாக வளம் வந்தாளே என எண்ணியிருக்க இப்போது தான் அவளை அனைத்தும் புரிவதாய். இத்தனை நேசிப்பவளிடம் எதைக் கொண்டு நிறைப்பதாம்.. அவன் நேசத்தை தவிர?!
“வேதா”என முனகியவன் அவளையே இமைக்காமல் பார்த்திருக்க, இதற்கிடையில் சங்கரி வீட்டிற்கு அழைத்திருந்தவள், விடயத்தை சொல்லிக் கேட்க, இவள் புடவை உடுத்தவற்காக சுடிதாரைக் களைகையில் அதில் கொழுவிப் பட்டதென அங்கேயே கழட்டி வைத்து வந்து விட்டதாக கூறிய சங்கரி, சுடிதாரோடு பத்திரப் படுத்தி வைப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.
“ஜிமிக்கி அங்க தான் இருக்காங்க!”என அதுவரையிலிருந்த அலைப்புறுதல் நீங்கி, ஆசுவாச மூச்சுடன் மனம் லேசாக, இதழில் புன்னகையுமாய் நிமிர்ந்தவளை.. என்னவென உணர்வதற்கும் முன் தன் இறுகிய அணைப்பினுள் கொண்டு வந்திருந்தான் கீர்த்தி வாசன்.
திடீரென்ற அணைப்பில் திடுக்கிட்டு திகைத்தவளின் தேகம் நடுங்கினாலும் அணைப்பின் அர்த்தம் புரியாத நிலை பெண்ணுக்கு!
தன் முகம் பார்க்க முயற்சித்தவளின் தலையை தன்னோடு அழுத்திய வாசன் அவள் உச்சியில் அழுந்த முத்தமிட்டான்.
உடல் சிலிர்க்க, கண் மூடியவளின் மூளை விலகச் சொல்லி கட்டளையிட்டாலும் அதற்கெதிராய் அழுத்தமாய் கணவனின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள் வேதவி.
தவிப்பில் ஏறி இறங்கிய அவன் ஆடம்ஸ் ஆப்பிளில் மோதியது, அவளின் மூச்சுக் காற்று.
இருவருக்கும் இதயம் உயர் வேகத்தில் படபடவென அடித்துக் கொள்ள,தம் இணையின் இதயத்தை துடிப்பை இருவருமே உணர்ந்து கொண்டிருந்தனர்.
“வா..ஸ்.. வாசா”என்றவளின் இதழ்களும்,மூச்சும் அவன் கண்டக்குழிக்குள் உரசி நின்று கண்டமாக்கின!
குறையும் தவிப்போடு முகம் முழுவதும் விரிந்து விட்ட புன்னகையுடன் அவள் முகத்தை தன்னிலிருந்து விலக்கி.. நிமிர்த்தியவன், மூடிய அவள் விழிகளைக் கண்டு, அனிச்சையாய் அதிகரித்த புன்னகையின் பரபரப்பளவை உணர்ந்து முன்பை விட அழுத்தமாய் நெற்றியில் முத்தம் வைத்தான்.
பட்டென விழி திறந்தவள் மையலேறிய அவன் விழிகளைக் கண்டு விட்டு படக்கென கண்களை மூடிக் கொண்டாள்.
உடல் குலுங்க அப்படியொரு சிரிப்பு வாசனிடம்.
இரு பெருவிரலாலும் அவளிருபக்கக் கன்னங்களை வருடிக் கொடுத்தவன், வேதவியின் கண்கள், கன்னங்கள், மூக்கு என முத்தி விட்டு அவளிதழை மிச்சம் வைத்தான்.
இது தான் சமயமென, Jugular notch -இல் தன் nose பதிய முகம் அழுத்த முயற்சித்தவளை தடுத்து.. மீண்டும் தன் முகம் காணச் செய்தான் இவன்.
“லுக் அட் மை ஐஸ் வேதா!” மென்மையான குரலும், கன்னத்தை தீண்டும் விரல்களும் அவள் கண்களின் இறுக்கத்தை இன்னுமே கூட்டின.
“இப்படியே கண்ணை மூடிட்டிருந்தா.. நான் எப்படி உன்னை கிஸ் பண்ண?” சிரித்தபடி அவள் காதருகில் கேட்டான் வாசன்.
“ப்ச்,ம்ஹூம்!”
“வேதாம்மா!”
கணவனின் நெருக்கமும், கழுத்தில் பதிந்து, கன்னத்தை உரசிய மீசை தாடியும் இனிய இம்சையாய் மாறி அவஸ்தையை கூட்ட,
“ப்ச்,இவ்ளோ நேரம் எப்டி கொடுத்தாங்களாம்..!”என முணுமுணுத்தவளின் சம்மத்தில் மனைவியின் இதழ்களை களவாடிக் கொண்டான் வாசன்.
அன்பின் அணைப்பு ஆலிங்கினமாகி மெது மெதுவாய் தடம் பதித்தலின் இடம் மாறிப் போக, தடை தகர்ந்து விடை கிடைத்தது இருவருக்கும்.
‘ப்ச்’கள் எல்லாம் இச்களாய் மாறிய விந்தை இங்கு மட்டுமே.!
மனைவியோடு மஞ்சம் சேர்ந்தவன் மிதமாய் அவளை ஆட்கொள்ளத் தொடங்கி விட,
“எ.. ஏதாவது பே..பேசுங்க வாசு!” கணவன் தோளில் முகம் பதித்தபடி கிசுகிசுப்பாய் கேட்டாள் வேதவி.
“பேசிடலாமே வேதாஜி” என்றவன் பேசத் தொடங்கிய விடயத்தில் கன்னங்கள் சூடாக அவனை முறைக்க முயன்று தோற்றவளாக “வாசு..!” என சிணுங்கினாள்.
சிரித்தவனிடம்,
“பேச வேணாம்… பாடுங்க!”என சொல்ல,
“இன்று முதல் இரவு”என ஹஸ்கி வாய்ஸில் ஆரம்பித்தவனை பாட விடவில்லை வேதவி.
சத்தமில்லா முத்தங்கள் வன்மையில் பதிய,
“கேடி கேவி!”என்றவளை முழுதாக தனக்குள் வாரிச் சுருட்டிக் கொண்டான் கீர்த்தி வாசன்.
ஒருவரை ஒருவர் ஆகர்ஷித்து, ஆராதித்து,ஆர்ப்பரித்து, அடிமையாகி, அடிமையாக்கியென அழகாக வாழ்க்கையை தொடங்கினர்.
வாசன் வசமானாள் வேதவி! வேதாவே அவன் வேதமானாள்!
error: Content is protected !!