Skip to content
Post Views: 1,083
மைவிழி – 5(b)
இரு குடும்பத்தாரின் சம்மதமும் கிடைத்து விட, அடுத்த வந்த நாட்களில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் துரிதமாய் நடந்தது.
Advertisement
இரண்டு குடும்ப பெரியவர்களும் பேச்சு வார்த்தையை முடித்த அன்றிலிருந்து அடுத்த பதினைந்து நாட்களில் திருமணத்தை வைத்துக் கொள்ள வேண்டி கேட்டிருந்தார் அமரேசன்.
ஆமென ஒத்துக் கொண்ட சத்ய நாதனுக்கு உள்ளுக்குள் மலைப்பு! அதுவும் அவர் குடும்பத்தில் முதல் கல்யாணம்.பெண் வீட்டார்களாய் இருக்கும் பட்சத்தில் வேலைகளும் அதிகமல்லவா! அமரேசன் கேட்கும் போது இவருக்கு மறுக்க முடியவில்லை.
Advertisement
Advertisement
‘எப்படி சமாளிக்க போகிறோம்?’ என நினைத்துக் கொண்டாலும், ‘எப்படியும் சமாளித்து விடலாம்!’ என மனதை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். இந்த அப்பாக்கள் சூப்பர் ஹீரோ என சொல்லப்படுவதில் குற்றமொன்றுமில்லை தான் போலும்!
அதிலும் அமரேசனுக்கு ‘மகன் மனது மாறிடுவானோ’ என்ற பயமிருக்க, திருமணத்தை இத்தனை அவரசமாக நடத்த நினைத்தார். அவர் எண்ணம் கீர்த்தி வாசனுக்கு புரிந்து தான் இருந்தது. என்ன சொல்லியும் தந்தையின் முடிவை மாற்ற முடியாது எனத் தெரிந்தவனாகையால் அவர்கள் முடிவிற்கே ஒத்துக் கொண்டான்.
Advertisement
இவனின் திருமண விடயத்தை கேள்விப்பட்டதிலிருந்து துள்ளிக் குதித்த அடுத்த ஜீவன் என்றால் சிவா.
“முழு மனசா தானே அந்த பொண்ணுக்கு சம்மதம் சொன்ன?”என அடிக்கடி கேட்டு வாசனின் முறைப்பை வாங்கிக் கொள்ள மறக்கவில்லை அவன்.
ஆனால் வாசனுக்குள்ளும் ஒரு வித யோசனை. அவன் கேட்டு கொண்டதற்கிணங்க தன் கடந்த காலத்தை பெண் வீட்டாரிடம் சம்மதம் பேசும் போதே சொல்லி விட்டதாக கூறிருந்தார் கிருஷ்ணன், இவனிடம். அதுவரையிலும் நிம்மதி! ஆனாலும் தனக்காக பேசிருப்பவள் என்ன நினைத்தாள் என அறிய வேண்டிய அவசியம் இருந்தது அவனுக்கு!
அவளைக் காண வேண்டும்; நேரில் பேச வேண்டும், தன்னைப் பற்றி தன் கடந்த காலத்தை பற்றி! எதையுமே அவளிடமிருந்து இவன் மறைக்க நினைக்கவில்லை! அது சரியும் இல்லை.
ஒரு வேளை தான் இதை நேரடியாக சொல்லும் போது அவள் எதிர்வினை என்னவாக இருக்கும் என பார்க்க வேண்டும்!திருமணத்தை மறுத்தால்? தனக்கே இவ்வளவு கேள்விகளும், பதட்டமும், பயமும் இருக்கும் போது அவளுக்கு தன்னிடம் கேட்க எத்தனை இருக்கும்? அது என்ன அவள்? அவள் பேர் என்ன? ஹாங், வேதவி! தனக்குள் உழன்றான் வாசன்.
திருமணம் வரையிலும் வேதவியை சந்திக்க வழியில்லாமல் இருந்தது(!) ஏனனின் அதற்கு வழி செய்திருக்கவில்லை பெரியவர்கள்.
பெண் பார்க்கும் படலம் தேவையில்லை என முடிவிற்கு வந்தவர்கள் முதல் ஏழு நாட்கள் கழித்து நிச்சயமும் அதன் பிறகு திருமணமும் வைத்துக் கொள்ளலாம் என தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.
தனக்கு வேதவியை பார்க்க வேண்டும் என நேரடியாக சகோதரனிடமோ, நண்பனிடமோ கேட்க முடியாமல் இருந்தான் வாசன். பின்னே!அவர்கள் பார்த்து வைக்கும் பார்வையை எப்படி எதிர் கொள்வதாம்.
கீர்த்திக்கு அதை நினைக்கையிலே அதரங்கள் சிரிப்பில் விரிந்தது.
“டேய் கீர்த்தி!என்னடா தனியா சிரிக்கற”இவனையே பார்த்துக் கொண்டிருந்த சிவா கேட்க, கண்களை சுருக்கி உதட்டைப் பிதுக்கினான் வாசன்.
“உன் ஃபேஸ் ரியாக்ஷனே சரி இல்ல மச்சான்”என்றவன், வாசன் உட் கன்னத்தில் நாக்கு முட்டி சிரிப்பதைக் கண்டு,
“உனக்கு எதோ ஆச்சு!” என்றான் சந்தேகமாக.
“எனக்கு பொண்ணை பார்க்கணும் டா சிவா! அதுவும் நேர்ல”என்றான், மேலுதடு கடித்து சிரிப்புடன் ஒரு தோரணையில்.
சிவாவின் கண்கள் விரிந்து நிலை குத்தி நின்றன, வாசனின் மேல்!ஷாக்காயிட்டாராமாம்!
நண்பனின் இந்த பார்வையை சற்று முன்வரை எதிர் பார்த்தது தானே!
பிடரியை தடவிய படி சிரித்தவனை எட்டாம் அதிசயம் போல பார்த்து வைத்தான் சிவா.
“நீயா பேசியது என் நண்பா..
நீயா பேசியது!”என பாட்டு வேறு.
“சிவா டேய்!இதுக்கு தான் சொல்லாம இருந்தேன்” என்றான் வாசன், நண்பனை முறைத்தபடி.
“நல்லா சொல்றீங்கடா டீட்டைலு”- கடுப்புடன் சிவா.
இவன் அமைதியாக இருக்க,
“அந்த பொண்ணு நம்பர் இல்ல?”என கேட்க, இல்லையென்று தோள் குலுக்கினான் வாசன்.
“நான் வேணா கிருஷ்ணாண்ணாட்ட கேட்டு வாங்கி தரட்டா?”என வினவ, முறைத்து வைத்தான்.
“இதுக்கும் முறைச்சா என்ன செய்றது?”
“…..”
“ஐடியா, அவங்க அண்ணன், நம்ம நண்பன் கிஷோர்ட்ட கேக்கவா?”
“போடா டேய்! போடா”என்ற வாசன் அங்கிருந்து கிளம்பி விட,அடுத்த நாள் அவனுக்கு கிடைத்திருந்தது, வேதவியின் அலைக்கும் பேசி இலக்கம்.
******
அன்று மாலை வேதவியைப் பார்க்க ரவி வந்திருந்தான்.
வீட்டுக்கு பெயிண்ட் அடித்தலும், புது தளபாடங்கள் மாற்றுவதுமாக திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது அங்கே.
முழுக்க முழுக்க கனியனின் நண்பர்கள் தான் உதவி. கனியன் வேலை விடயமாக சென்னையில் மாட்டிக் கொண்டிருப்பதால் நண்பர்களை அனுப்பி வைத்திருந்தான்.
அவர்களை கண்டு ஒரு தலையசைப்போடு உள்ளே நுழைந்த ரவி,
“வேதவி!”என அழைக்க, அப்போது தான் வகுப்பு முடிந்து வந்திருந்தவள் தலைக்கு குளித்து தயாராகிருந்தாள்.
தமையனின் அழைப்பு கேட்கவும் வெளியே வந்தவள்,
“வாண்ணா!”என வரவேற்று அவனருகே அமர்ந்தாள்.
“சித்தி எங்கடா?”
“அம்மாவும், பெரிம்மாவும் தான் வீட்டுக்கு பொருள் வாங்கனும்னு கடைக்கு போறாங்க. உனக்கு தெரியாது?அண்ணி சொல்லல?”
“ஓஹ், அப்படியா?அவ சொல்லல எங்கிட்ட”என்றவன், ஒரு பெட்டியை நீட்டினான்.
“என்ன ரவிண்ணா இது?”என கேட்டவளின் கரம் பிடித்து திணித்தவன்,
“புது ஸ்மார்ட் ஃபோன். அண்ணன் வாங்கித் தரேன்”என்றான்.
“ண்ணா!அதான் எங்கிட்ட போன் இருக்கே. இப்போ எதுக்கு?”என மறுத்தாள் வேதவி.
“இந்தக் காலத்துலயும் பட்டன் போன் வெச்சிருக்கற ஒரே பொண்ணு நீதான்” என்றவனிடம் முறைத்தபடியே அதை வாங்கிக் கொண்டாள் இவள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, சரஸ்வதியும், சங்கரியும் உள்ளே வந்தனர்.
“என்ன இன்னைக்கு வேலை முடிஞ்சு ரெண்டு பேரும் சீக்கிரமே வந்துட்டீங்க போல!”என்றார் சங்கரி மகன் அருகில் உட்கார்ந்த படி.
“ஆமாம்மா”என பதில் கொடுத்த ரவி,
“சித்தி எதனா உதவின்னா என்னை கூப்பிடுங்க. என் தங்கச்சி கல்யாணத்த நான் தான் முன் நின்னு நடத்தறது” என சொல்ல, புன்னகைத்தனர் பெண்கள்.
“அண்ணா போன் வாங்கி தந்துருக்கான் ம்மா!”என வேதா போனைக் காட்டினாள்.
“எதுக்குடா ரவி வீண் செலவு செய்ற? அவகிட்ட தான் இருக்குல்ல?”என சரஸ்வதி கேட்க,
“அதை தான் நானும் சொல்றேன். கேட்டா தானே!” என்றாள் வேதவி.
“அதெல்லாம் இருக்கட்டும்” என்று ஒரே சமயத்தில் தாயும்(சங்கரி), மகனும் சொல்ல,
“நம்ம சுஜி(ரவியின் மனைவி)ஒன்னும் சொல்ல மாட்டான்னாலும்.. ஏற்கனவே இவன் நிறையவே செய்றான் சங்கரி!” என்றார் சரஸ்வதி.
சுஜித்ரா நினைக்கா விட்டாலும், அவளின் அன்னை எதுவும் பேசி விட்டால் என்ற எண்ணம் சரஸ்வதிக்கு. அதிலும் ரவி தங்கை, தங்கையென பாசம் காண்பிப்பதில் அவருக்கு சிறிது பொறாமை தான். இதற்கு அவன், சுஜித்ராவிற்கு செய்வதில் எந்த குறையும் வைப்பதில்லை.
சொந்த அத்தையின் மகளைத் தான் திருமணம் செய்திருந்தான் ரவி. தங்கமான பெண் சுஜித்ரா. நாத்தனார்களின் மீது அத்தனை பாசம் அவளுக்கு. தன் காதல் கணவனின் அன்புக்குரியவர்கள் தனக்கும் அப்படியே என நினைப்பவள்.
ரவி தங்கைகளுக்கென என எது செய்தாலும் தடுப்பதில்லை அவள். அவர் தங்கை, அவருடைய கடமை செய்கிறார் என எண்ணுபவள். ஆனால் சுஜித்ராவின் அன்னையின் குணம் அவளுக்கு நேர்மாறானது.
குடும்ப அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதால் கண்டுகொள்வதில்லை சங்கரி. உறவுகளுக்குள் புரிதல் அவசியமாக இருக்கும் போது அது ஒரு சிலரிடம் இல்லாமல் இருப்பின் என்ன தான் செய்வதாம்!
“அவன் கடமை அவன் செய்றான் சரஸு! நீ விடு”என்றார் சங்கரி, தங்கையிடம்.
“அம்மா, புள்ளைய என்னால பேசி ஜெயிக்க முடியாதுப்பா”என்ற சரஸ்வதியைப் புன்னகையுடன் அருகில் அழைத்த ரவி, மெதுவாக எதுவோ கூறி விட்டு தாயுடன் புறப்பட்டு விட,
“அண்ணா என்னம்மா சொல்லிட்டு போறான்? அதுவும் ரகசியமா?”என கேட்டாள் வேதவி.
“அவன் தந்த போன் பெட்டிக்குள்ள மாப்பிள்ளை நம்பர் இருக்காம்! உனக்கு பேசனும்னா பேசட்டாம்”என சொல்லி சமையல் அறை புகுந்து கொள்ள,திகைத்து விழித்தவளின் கைகள் நடுக்கத்தில் அப்பெட்டியை அழுந்த பற்றிக் கொண்டன.
சரியாக அன்றிரவு பதினொரு மணியளவில் சேமிக்கப்படாதே எண்ணிலிருந்து வேதவிக்கு அழைப்பு வந்தது.
“ஹலோ யாரு?”தூக்கம் கலைந்ததில் சற்று எரிச்சலாகவே கேட்டாள் வேதவி .
“ஹ்ம்கும்! நா..நான் கீர்த்தி வாசன் பேசுறேன்!”
“ஹா!!!!!!!!!!”
error: Content is protected !!