Skip to content
Post Views: 4,498

வானதியை அணைத்து அழுது கொண்டு இருந்தவளை அழைத்து ஒரு இடத்தை சுட்டி காட்டினாள்… அதை பார்த்துவிட்டு வானதியை பார்த்து பல்லை காட்டி நின்று விட்டாள்… அவள் பாரதி வானதியின் பக்கத்து வீட்டு பெண் அவள்….. இரவு வானதியுடன் தான் தூங்குவேன் என்றவளை தலையில் தட்டி அவளின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள் வானதி… அது தான் எழுந்தவுடன் இங்கு ஓடி வந்து விட்டாள்…..
பாரதி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்டவள்…. தற்போதும் அவருடன் தான் வசித்து வருகிறாள்…
Advertisement
வானதி காட்டிய திசையில் நேற்று கழுவ எடுத்து போட்ட பாத்திரம் தான் இருந்தது… நேற்று இரவு கழுவ விடமால் செய்தவளும் பாரதி தான்…. பாத்திரம் எல்லாம் காய்ந்து போய் இருந்தது… அதை ஊற வைத்து விட்டு தான் படியில் அமர்ந்து யோசித்து கொண்டு இருந்தாள்… தற்போது அதை கழுவ போனவளை தடுத்து நிறுத்தி அழுது கொண்டு இருக்கிறாள்…..
Advertisement
தன்னை பார்த்து சிரித்தவளை செல்லமாக முறைத்து விட்டு பாத்திரம் கழுவ சென்றாள்…. அவள் தேய்த்த பாத்திரத்தை பாரதி கழுவி கொடுத்தாள்….
Advertisement
பின் அவளை பள்ளிக்கு கிளம்ப அனுப்பி விட்டு இவளும் பள்ளிக்கு செல்ல தயாராக சென்றாள்….
**********************************************
Advertisement
இங்கு மண்டபத்தில்…
அருள் மணமகன் அறையில் தயாராகி இருக்க அவனுடன் அவனின் மற்ற நண்பர்கள் இருவர் இருந்தனர்…. ஒருவன் அவனுடன் நன்றாக பேசினாலும் இங்கு வந்ததில் இருந்து அவன் பேசவே இல்லை… இன்னொருவனுக்கும் இவனுக்கும் ஏற்கனவே சண்டை… அதனால் அருளிடம் பேசவில்லை… இருந்தும் அவனை முறைத்து கொண்டே இருந்தான்….நேற்று அதிகாலை தான் துபாயில் இருந்து இந்தியா வந்து இருந்தான்… இரண்டு வருட காண்ட்ராக்ட்டில் துபாயில் வேலை செய்து கொண்டு இருந்தான்….
நேற்று இருந்து அவனிடம் யாரையும் பேச விடவே இல்லை அவனின் அம்மாவும் அத்தை குடும்பமும்… இன்று காலை தான் இருவரும் வந்தனர்… அவனின் நண்பன் மணியிடம் “டேய் மணி என்ன மௌன விரதம் இருக்கியா…. பேசாம இருக்க… என்ன தான் பிரச்சனை நேத்துல இருந்து வேலு தங்கச்சி தம்பி யாரும் என்கிட்ட பேசல… நீயும் பேசல… இவன் ஏன் முறைச்சிட்டே இருக்கான்…. ஏன்டா நான் தேவியை கல்யாணம் பண்றதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை… அவளை உங்களுக்கு பிடிக்கும்ல… இப்போ ஏன் முகத்தை தூக்கி வெச்சிட்டு உட்காந்து இருக்கீங்க… “என்று கொஞ்சம் கோவமாகவே கேட்டான்….
மணி பேசவே இல்லை…. இன்னொருவன் தான் “முட்டாள் முட்டாள் ” என கூறி தலையில் அடித்து கொண்டான்… அவன் அவ்வாறு கூறியவுடன் அருள் “டேய் மூர்த்தி” என்று கூறி அவனை அடிக்க சென்றான்….
அவனை தடுத்த மூர்த்தி அவனிடம் “நீ முட்டாள் தான் டா… வடிகட்டுன முட்டாள்… உங்க அம்மா கிட்ட பொண்ணு யாருனு கேட்டியா…. உன் அத்தை குடும்பம் ஏன் எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்றாங்கனு யோசிச்சியா…. ” என்று கோவமாக கத்தினான் ….
“பொண்ணு யாருனு கேட்காம நான் எதுக்கு கல்யாணம் பண்ண போறேன்…. தேவி தானு பொண்ணு… அதுல உங்களுக்கு ஏன் டா காண்டு…. எதோ என் அத்தை குடும்பம் திருந்தி இருக்கும் …. ” என்று சாதாரனமாக கூறினான்…..
“டேய் உங்க அம்மா பாப்பாவை தேவினு தான் கூப்பிடுவாங்களா….. முட்டாள்… உங்க அம்மா உனக்கு கல்யாண ஏற்பாடு யார் கூட பண்ணி இருக்காங்க தெரியுமா… உன் சொத்தை பொண்ணு அந்த லூசு தேவிகா கூட…. கேஸ் உங்களுக்கு சாதகமா வர போகுது… அதுனால பிளான் பண்ணி எல்லாம் பண்ணி இருக்காங்க….. ரெண்டு வருஷமா நீ பாப்பாவுக்கு நகை செஞ்சி குடுனு உங்க அம்மா கிட்ட குடுத்த பணம் எல்லாம் உன் சொத்தை பொண்ணுக்கு தான் போய் இருக்கு… இன்னும் நம்பலான உங்க அம்மாகிட்டயே கேட்டுக்கோ…. ” என்று கூறிவிட்டு “டேய் மணி வா போலாம்” என்று கூறி மணியை இழுத்து கொண்டு சென்றுவிட்டான்….
என்ன சொல்லிட்டு போறான் இந்த லூசு பையன் என நினைத்து விட்டு அங்கு விளையாடி கொண்டு இருந்த ஒரு சிறுவனை அழைத்து பத்மினியை அழைத்து வர கூறினான்…. பத்மினியும் வந்தார்…. அவருடன் ஒட்டுண்ணியை போல் நாயகியும் உடன் வந்தார்….
அவரை பார்த்து முறைத்து விட்டு “ம்மா உங்களை மட்டும் தான் வர சொன்னேன்…. இவங்க எதுக்கு வந்தாங்க…. ஒழுங்கா வெளியே போக சொல்லு” என்று கோவமாக கத்தினான்….
“டேய் ஏன்டா கத்துற…. அவ உன் அத்தை டா…. அவ இருக்குறதுல என்ன பிரச்சனை???” என்று அவரும் வேகமாக கேட்டார்….
“இப்போ இவங்க வெளிய போகல… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஒழுங்கா போக சொல்லு” என்று கோவமாக கூறினான்….
ச்சே என நினைத்து கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டார் நாயகி…. வெளியில் நின்று ஒட்டு கேட்கலாம் என நினைத்து கதவின் அருகில் நின்றவரை மணியும் மூர்த்தியும் அந்த இடத்தில் இருந்து அனுப்பி இருந்தனர்…..
அரை மணிநேரம் நேரம் தாயும் மகனும் என்ன பேசினார்களோ வெளியில் வந்த பத்மினி நாயகி மற்றும் அவரின் குடும்பத்தை பார்த்து காரித்துப்பிவிட்டு கல்யாணம் நடக்காது என்று கோவமாக கூறி இருந்தார்….
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாயகியும் அவரின் கணவன் மற்றும் மகளும் அதை எதிர்த்து ஊராரிடம் உதவி கேட்டனர்…. அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக அருள் மற்றும் பத்மினியிடம் கேள்வி கேட்டனர்…. அவர்களிடம் அருள் எதோ ஒன்றை காட்டினான்… அத்தனை பேரும் கப்சிப்….
சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த போலீஸ் நாயகியின் கணவன் கண்ணப்பனை கைது செய்து அழைத்து கொண்டு சென்றனர்…. அதை பார்த்து கதறி அழுத தாயும் மகளும் இவர்களுக்கு சாபத்தை அள்ளி இறைத்து விட்டு பத்மினி போட்ட நகையுடன் நைசாக நழுவ முயன்ற தாயையும் மகளையும் பிடித்து அனைத்து நகையையும் வாங்கி கொண்டு மண்டபதை விட்டு அனுப்பினர்….
அருள் பத்மினியிடம் என்ன கூறி இருப்பான்?!?!?!….
★★★★★★★★★★★★★★★★★★
வானதியின் வீட்டில்…
பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டு இருந்த வானதியை பாரதி வந்து “அக்கா” என்று கத்திக்கொண்டு அணைத்து கொண்டாள் ….. அவளை விலக்கி தலையில் லேசாக கொட்டி விட்டு அவள் அணைத்தால் கலைந்த புடவையை சரி செய்து விட்டு இருவரும் வீட்டை பூட்டிவீட்டு பாரதியின் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு வானதி தன்னுடைய வண்டியை எடுக்க அவளுக்கு பின் அந்த வண்டியில் ஏறிக்கொண்டாள் பாரதி….
வாய் மூடாமல் பேசி வந்த பாரதி அவள் பள்ளி வந்ததும் வாயை மூடி கொண்டாள்…. அவள் மேட்டூரில் உள்ள அரசினர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள்…. பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றாலும் அவளுக்கு வந்த மற்ற பள்ளியில் சேரும் வாய்ப்பினை மறுத்து அரசினர் பள்ளியிலேயே படித்து கொண்டு இருக்கிறாள்….
பாரதி பள்ளியினுள் செல்லும் வரை பார்த்து விட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி வண்டியை செலுத்தினாள்…. வழக்கமாக செல்லும் பாதை அதனால் கை அதான்போக்கில் பாதையில் செலுத்த இவளின் யோசனை அவளின் மாமனை நோக்கி இருந்தது…. இந்த நேரத்தில் கல்யாணம் நடந்து இருக்கும் என்று எதோ ஒரு யோசனையில் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்….. வானதி பள்ளிக்குள் வண்டியை விட்டாள்…. அந்த பள்ளியின் பெயர் ஆகாயம் டெப் அன்ட் டம்ப் ஸ்கூல் (Aagayam deaf and dumb school)….
error: Content is protected !!