சென்னையில் இருந்து இட்டா நகர் சென்ற விமானம் அங்கு போய் சேர்ந்ததும் கடைசியாக விமானத்தில் இருந்து இறங்கி பெண் தன் முகத்தை துணியில் கட்டி கண்களில் கூலர்அணிந்திருந்தாள். பளிச்சென்றுமஸ்டர்ட் கலர் ஷார்ட்குர்த்தி, பாட்டில் க்ரீன்பட்டியாலாபேண்ட், அதே க்ரீன் கலர் துப்பட்டாவை முகத்தை மூடி கட்டியிருந்தாள்.
ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவள் முதலில் தன் கூலரை கழற்றி வைத்தாள். அந்த ஏர்போர்ட் அமைந்த இடத்தின் அழகை கண்டு மயங்கி நின்றாள். பசுமையானமலைகளால்சூழப்பட்டு மிக அழகாகவும், கம்பீரமாக காட்சி அளித்த அந்த இடம் அவளுக்கு அதிக சந்தோஷத்தை தந்து ஏதோ ஒரு பாட்டை வேறு மெல்ல முணுமுணுக்க வைத்தது.
அங்கு அதிகமான ஆட்கள் இல்லாததால் பார்த்ததும் தெரியும் அளவுக்கு உயரமாக நின்று கையில் அட்டையை தாங்கி நின்றவனிடம் சென்று அந்த அட்டையைகாண்பித்து தன்னை காண்பித்தாள். அந்த அட்டையைதாங்கியவனும் “ஆப்அனாமிகாஹை…நமஸ்தே..ஆயீயேமேம்சாப்..மேரா நாம் சரன்ஜித்ஹை..இட்டா நகர் வெல்கம்ஸ்யூ” என சொல்ல அவளும் மெல்ல சிரித்து கை கூப்ப அதை பார்த்து மெல்ல புன்சிரித்து தன் ஜீப் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றான்.
Advertisement
இனி அவர்கள் ஹிந்தியில் பேச நமக்காக தமிழில் வரும். ஜீப் அருகில் செல்லும் போது அதில் இருந்த சின்னங்கள் எல்லாம் இராணுவசின்னங்களாக இருக்கவே அனாமிகாகேள்வியாகவந்தவனை பார்க்க “நாங்க இருக்கறதுஆர்மில..என்னோடசீனியர் உங்களை கூப்பிட்டு வர சொன்னார்…”
அதை கேட்டு தலை அசைத்து விட்டு வெளியே பார்த்து தன் கடிகாரத்தை சில தடவைகள்பார்க்க..அதை புரிந்த அவனும் “எங்கஆர்மிபேஸ் இங்கே இருந்து போக குறைந்தபட்சம் மூணு மணி நேரம் ஆகும் மேம்..”
“நீங்க லஞ்ச்சாப்பிட்டீங்களா..”
Advertisement
இல்லை என அவள் தலையசைக்க “நீங்க லஞ்ச்சாப்பிடலேனாஇங்கேந்து அரை மணி நேரடிஸ்டன்ஸ்லஎக்ஸ்சர்வீஸ்மேனாட வீடு இருக்கு.. உங்களை சாப்பிட வெச்சு கூப்பிட்டு வரணும்னு ஆர்டர்…” என சொல்லி எதுவும் பேசாமல் வழியை பார்த்து ஓட்ட ஆரம்பித்தான்.
Advertisement
அவன் சொன்னபடி அரை மணி நேரத்தில் அந்த மனிதரின் வீட்டை அடைந்து உள்ளே போய் அவர்களை அழைத்து வந்த சரன்ஜித் “மேம்..சார் தான் மனன்…சரவணன்சாருக்குதெரிஞ்சவர்..இவங்கசாரோட மனைவி ஶ்ரீஜாமேம்..”
அவளை காட்டி “இவங்க தான் அனாமிகாமேம்..சரவணன் சார் சொன்னவங்க..”என சொல்லி “போய் சாப்பிட்டு வாங்க மேம்..” என்று விட்டு தன் ஜீப்பை நோக்கி போனான்.
கைதட்டி கூப்பிட்டவள் அவன் திரும்பியதும் சாப்பிட வாங்க என சைகையால் அழைத்தாள். “இல்லமேம்என்னோடலஞ்ச்கேம்ப்லமுடிஞ்சாச்சு…நீங்க சாப்பிட்டு வாங்க..”
Advertisement
அவனை திரும்பி பார்த்தபடி அவர்களோட வீட்டின் உள்ளே சென்றவளை வரவேற்று உட்கார வைத்தனர்.
அவர்களை பார்த்து சிரித்தவளுக்கு ஶ்ரீஜாவை பார்க்க தென்னிந்திய ஜாடை தெரிய அவளை உற்று பார்த்தாள்.
“மேம்..சாப்பிட வாங்க..” என ஹிந்தியில் அழைக்க எழுந்து டைனிங் டேபிளில் அமர அங்கிருந்த உணவுகளைபார்த்தவளுக்கு மலைத்து போனது.
அதில் பல வகைகள் அவள் பார்த்ததே இல்லாததால் ஶ்ரீஜாவின் கையை பிடித்து ஆங்கிலத்தில் மெல்ல “தப்பாநெனக்கலேனா இதெல்லாம் என்ன டிஷ்..நான் பாத்ததேஇல்ல…”
“எஸ்மேம்..இது எல்லாம்அருணாச்சலபிரதேசத்தோடயூனிக்அன்ட்ஸ்டேபிள்டிஷ் .. இது ‘கோட் பிதா’ வெல்லம், மைதா மாவு, வாழைப்பழம்வெச்சுசெய்யற ஸ்வீட் இது ‘குரா’ கருப்பு சென்னாலசெஞ்ச சப்பாத்தி.. இது ‘ச்சூரா சப்ஜி’ சீஸ்ஸும், சில்லி ப்ளேக்ஸும்வெச்சுசெய்யறசைட்டிஷ்.. இதுக்கு பேரு ‘பெஹக்’ ஊற வெச்சசோயாபீன்ஸும், காஞ்சமிளகாயும்வெச்சுசெய்யற சட்னி
இது ஆலுபராட்டா, சாதம், சாம்பார், வெண்டைக்காய், ரசம், தயிர், ஊறுகாய்…
“யார்னே தெரியாத எனக்காக எப்படி இவ்ளோ ஐட்டம்செஞ்சீங்க… அவ்வளவும் வெஜ்ஜாபாத்துபாத்துசெஞ்சிருக்கீங்க..”
“சரவணன் எனக்கு தம்பி..இந்தவீட்டுல அவன் சொன்னா அதுக்கு அப்பீலேகிடையாது..அவனுக்காக இது கூட செய்யலேனாஎப்டி..”
“நீங்க லாங்டிஸ்டன்ஸ்ட்ராவல் பண்ணி வர்றதாலநான்வெஜ்வேணாம்னு சொல்லவே செய்யல..இல்லே அதுவும் செஞ்சிருப்பேன்..”
அதை கேட்டதும் பெரிதாக சிரித்த ஶ்ரீஜா “வந்ததுமேகேப்பீங்கனுநேனச்சேனே..இப்ப தான் தெரிஞ்சிதா..”
“இல்லஅப்பவேகேக்கணும்னுநெனச்சேன்..ஆனாதப்பாநெனச்சுப்பீங்களோனு தான்..” என உடனே தமிழில் மாறினாள்.
“நமக்கு சென்னை தான் பூர்வீகம்..பலதலைமுறைகளாகஎங்கவீட்டுல அங்க தான் இருக்காங்க..”
‘பொறந்தது..வளர்ந்தது..படிச்சது.. எல்லாம் சென்னை தான்..நான் ஒரே பொண்ணு..ஒரு அண்ணா இருக்கான்.வீட்டுக்கு ஒரு இன்ஜீனியர்திட்டத்துல நானும் இன்ஜினியரிங்படிச்சேன்…”
“இப்டி ஒரு தங்கச்சி இருக்கறதா அவன் இதுவரைக்கும் சொன்னதேஇல்லயே…
“எனக்கு கூட தான் இப்டி ஒரு அக்கா இருக்கறதா இதுவரை தெரியலயே…”
“யப்பா…சாமி..சரண்டர்…எனக்கு இப்டி ஒரு போட்டியா..நேரமாச்சு வாங்க.. சாப்பிடலாம்…வெளில ஒரு ராட்சசன் நிக்கறானே..அவனும் என் தம்பி தான்.. உங்களுக்கு சாப்பிட அரைமணி நேரம் தான் டயம்குடுத்திருக்கான்…”
“எல்லாம் ரெடியா வந்து பாத்துட்டுவேறபோயிருக்கான்..லேட்ஆனா நமக்கு புரிய கூடாதுனுமுறைச்சுக்கிட்டேபஞ்சாபில திட்டி தீர்த்திடுவான்…” என சொல்லி ஶ்ரீஜா வாய் விட்டு சிரித்தாள்
ஒவ்வொன்றும் சுவையில் அற்புதமாக இருக்க ஸ்வீட் மட்டும் நாலு தட்டில் வைக்க சொல்லி இது நம்மூர் அதிரசம் மாதிரி இருக்கு என ஆனந்தமாக ரசித்து சாப்பிட்டு தயிரோடு முடித்தாள்.
“ப்பா..ச்சான்ஸேஇல்ல..செம்மசமையல்ங்க..ரொம்ப நாளைக்கு அப்பறம்நல்லாஎன்ஜாய் பண்ணி சாப்பிட்டேன்..”
“என்ஜாய் பண்ணி சாப்பிடறவங்க தான் இப்டி வேக வேகமாசாப்பிடுவாங்களா..”
“இல்ல டைம் அரைமணி நேரம் தான் இருக்கு..ஏற்கனவே பேசி பத்து நிமிஷமாகிடுச்சே..மீதி கதை கேக்கமுடியாம கிளம்பி போனா எனக்கு தலையேவெடிச்சிடுமே..எப்டிங்க இந்த ஊருக்கு வந்தீங்க…சாரைபாக்க நம்மூர் ஆள் மாறி இல்லயே..”
“பார்ரா..எங்க கதை கேக்கவும்ஆளிருக்கு..எப்ப பாரு சரவணன் என்னை கலாய்ப்பான்..அவன் கிட்ட இத சொல்லி அவன் மூஞ்சி போற போக்க பாக்கணும்..”
“எனக்கு ஐடிகம்பெனில வேலை பண்ண பிடிக்கல..எங்க சித்தப்பா ஆர்மிலஇருந்தார்..சின்னவயசுலேந்தே அவரை பார்த்து ஆர்மிலசேரணும்ங்கறது என் கனவு…”
“ஆர்மில சேர பையனையேவிடாதவங்க..பொண்ணையாவிடுவாங்க..படிச்சுமுடிச்சதும் எனக்கு கல்யாணம் பேசிட்டாங்க..”
“ஐயோ..அப்பறம்என்னாச்சு..”
“எல்லாம் என் நேரம்…வீட்டுக்கு தெரியாமஆர்மி எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டு ஜாயின் பண்ண லெட்டர் வந்தப்பதொக்காமாட்டினேன்…”
“அம்மா, அப்பா, அண்ணானு வீட்டு ஆளுங்க தவிர ஊர்ல இருந்த அம்மா சைட், அப்பா சைட்னு ஏழு தலைமுறை சொந்தத்தையும் என்னை பெத்தநல்லவங்கஃபோன் போட்டு வரவழிச்சி, அவங்க எல்லாம் வீட்டுக்கு வந்து ஆளாளுக்கு திட்டு… அட்வைஸ்..ப்ரஷரே தாங்க முடியல..”
“இந்த ப்ராசஸ் ஒரு வாரம், பத்து நாள் போச்சுனாபாத்துக்கோயேன்.. இதுலவந்தவங்களுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு, சாயந்திரம் காஃபிபோண்டா, ராத்திரி டின்னர் னு கவனிக்க முடியல..நேரமில்லனுசமையலுக்கு ஆள் வெச்சுபாத்தோம்..”
“இதை பாத்துஅக்கம்பக்கஆளுங்கஎங்க வீட்டு ஏதோ விசேஷம் அவங்களைகூப்பிடலனுசண்டைக்குவேறவந்துட்டாங்க..அவங்களைசமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னுஆகிடுச்சு..மேம்“
அதை கேட்டு கண்களில் நீர் வழிய சிரித்த அனாமிகா “எப்டி..எப்டி உங்களை திட்ட நீங்களே ஆளுங்களவரவழிப்பீங்க.. அவங்களுக்கு சமைக்க நேரமில்லாமஆள் வெச்சுசமையலா..வேறலெவல் கா..”
தன்னையும் அறியாமல் அவள் சொன்ன அக்காவை கேட்ட ஶ்ரீஜா அதை கவனிக்காதது போல “என் கதையவிடுங்க…உன்னை பத்தி சொல்லுங்கமேம்..”
“சொல்ல எதுவும் இல்ல.. அனாமிகாங்கற பேருக்கு ஏத்த மாறி இருக்கேன்..அவ்ளோ தான்..” தன்னை பற்றி சுருக்கமாக சொன்னவள் “அப்பறம்என்னாச்சுக்கா…”என ஆவலாக கேட்டாள்.
“இங்க வந்து தான் மனனைபாத்தேன்..மனனோட அப்பா அஸ்ஸாமி..அம்மா தமிழ்..அவங்க ஒரு வகைல எனக்கு அத்தை முறையா வரும் “
“அத்தை கிட்ட எங்கவீட்டுல என்னை பத்திரமாபாத்துக்கசொன்னாங்க.. நானும் பதிலுக்கு அவங்க பையனை பத்திரமாபாத்துக்கவே மறுபடியும் பிரச்சினை ஆரம்பம் ஆச்சு..”
“மனன் ரொம்ப அமைதியான ஆள். என் அதிரடி தாங்க முடியாம என்னை லவ் பண்ண ஆரம்பிச்சார்.
“வேலைக்கு போராடின மாறி அடுத்து இவரை கல்யாணம் பண்ண எட்டு வருஷம் போராடி அப்பறம் தான் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டு கல்யாணம் முடிஞ்சுதோ..பத்து வருஷம் ஆகிடுச்சு..”
“பையனுக்கு எட்டு வயசு.. பொண்ணுங்களுக்கு நாலு வயசு..ரெண்டுபேரும்பக்கத்துலஇருக்கறஸ்கூல்லபடிக்கறாங்க..மேம்..”
“சூப்பர் கா..சூப்பர்..உங்ககதையை ஏதோ சினிமா மாறி இருக்கு..” என சொல்லி சிரித்து கொண்டே வாசல் பக்கம் பார்க்க அங்கு தன் கைகடிகாரத்தையும்அவளையும் மாறி மாறி பார்த்து முறைத்து கொண்டு நின்றிருந்த சரன்ஜித்தை பார்த்தாள்.
“சொன்னேன்ல்ல..வந்துட்டான்.. பாருங்கமேம்..கேம்ப்லஇருக்கறவங்க வெளில எங்க போனாலும் திரும்பி ஆறு மணிக்கு ரிப்போர்டிங் டைம்..பேஸ்லஇருக்கணும்..அதான்முறைக்கறான்… “
“வாடா..நல்லவனே..உக்காரு..இந்த டீயகுடி..டைம்ஆகாது..உன்சீனியர் கிட்ட நான் சொல்றேன்…” சரன்ஜித்தை உபசரித்தாள்.
அவன் சில நொடிகளில் டீ குடித்து முடித்ததும் இருவருமாகமனனிடமும், அவளிடமும்கிளம்புவதாக சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.(தொடரும்)