Skip to content
Post Views: 5,110
அருள்மொழியின் தந்தை சாமியப்பன்…. இவர் மேலூரில் ஒரு பெரிய மளிகை கடை வைத்து நடத்தி கொண்டு இருந்தார்…. இவருக்கு தந்தை சிறு வயதிலேயே இறந்து இருக்க அவரின் தாய் தான் இவரை வளர்த்தினார்…. இவருக்கு ஒரு தங்கையும் உண்டு… சிறு வயது முதலே ஒரு வித அலட்சியம், சுயநலம், முன்கோவம், தான் என்ற கவுரவம் என்று தான் இருப்பார்…
ஓரளவு சொத்துகள் எல்லாம் தன்னுடைய சொந்த உழைப்பில் வாங்கி இருந்தார்… அப்போது இருந்தே நாயகிக்கு சொத்துகள் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும்…. இதில் இவர்களின் தாய் வேறு நாயகியிடம் இந்த சொத்தெல்லாம் உனக்காக தான் உன் அண்ணன் சேர்த்து வெச்சி இருக்கான் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்…. அதனால் நாயகிக்கு அது மனதில் நன்றாக புதைந்து போனது…
Advertisement
முதலில் நாயகிக்கு தான் கல்யாணம் நடந்தது…. அவருக்கு அமைந்த துணையும் இவரை போலே பேராசை பிடித்தவர் ஆவார்…. கண்ணப்பன் நாயகிக்கு கல்யாணம் நடந்து முடிந்து இரண்டாண்டுகள் கழித்து தான் சாமியாப்பனுக்கு பத்மினியுடன் கல்யாணம் நடைபெற்றது…. சாமியாப்பனுக்கு கல்யாணம் நடக்கும் வரை நாயகியை அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி மாத மாதம் பணம் வாங்கி வர கூறுவார் கண்ணப்பன் …. இது சாமியாப்பனுக்கு கல்யாணம் ஆகியும் தொடர்ந்தது….
Advertisement
ஒரு சில மாதம் அமைதியாக இருந்த பத்மினி அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார் …. இதனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வர ஆரம்பித்தது … இதை வைத்து சண்டையை இன்னும் அதிகரிக்கலாம் என நினைத்த நாயகியின் எண்ணத்தை அருள் மொழி பத்மினியின் வயிற்றில் தரித்து அதை தகர்த்து இருந்தான் …
Advertisement
தங்களுடைய வாரிசை பத்மினி தங்குவதால் தற்போது சாமியப்பனின் தாயார் அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்து இருந்தார் … பத்மினி நாயகிக்கு பணம் தர கூடாது என சொல்லவில்லை அவரிடம் …. தங்களின் வருமானத்தை காட்டி அதில் வருவதில் முக்கால் வாசி பணத்தை நாயகிக்கே குடுத்து விட்டால் கடைக்கு எப்படி பொருட்கள் வாங்குவது , எப்படி வீட்டை பார்த்து கொள்வது , குழந்தை பிறந்துவிட்டால் அந்த செலவை எவ்வாறு செய்வது என்று நியாயமாக தான் கேட்டார் …
Advertisement
சாமியப்பனின் அம்மாவிற்கும் இப்பொழுது தான் அனைத்து ம் புரிந்தது … தன்னுடைய மகளும் மருமகனும் இந்த இரண்டு வருடம் ஏமாற்றி கொண்டு இருந்து உள்ளனர் … சிறுவயதில் தன் மகளுக்கு தான் குடுத்த அதிக செல்லம் அவளை சோம்பேறி ஆக்கி உள்ளது என நினைத்து மிகவும் வருந்தினார் …
தன்னுடைய மருமகனும் எந்த வேலைக்கு ம் செல்லாமல் தன் மகனின் சம்பாத்தியத்தில் வாழ்கிறார் என்று அவருக்கு புரிந்தது …”இங்கு பாரு பத்மினி இதை ஒரே அடியா நிறுத்த முடியாது அதனால கொஞ்ச கொஞ்சமா நிறுத்திடுவேன் … ” என்று கூறி அவர் சென்றுவிட்டார் …. அவருக்கு தெரியவில்லை நாயகியின் உண்மை முகம் …. அதை பார்த்து அவரே அவரின் மகளை வெறுத்து ஒதுக்கி வைப்பார் என அவர் கனவிலும் நினைத்து இருக்கமாட்டார் …
நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது … வழக்கம் போல் மாதத்தின் முதல் தேதியில் நாயகி பணம் வாங்க அவரின் பிறந்த வீட்டிற்கு வந்து இருந்தார் … அந்த நேரம் சாமியப்பன் பத்மினியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தார் … நாயகி வீட்டிற்கு வந்தால் பத்மினி அவரின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும் … இல்லையென்றால் ஒருபாடு அழுது விட்டு தான் செல்வார் … என்னை கவனித்துக்கொள்ள கூட ஆளில்லை என … தற்போதும் அப்படி தான் “அண்ணி நடந்து வந்தது ல கலைப்பா இருக்கு … எனக்கு சூடா ஒரு டீ போட்டு கொண்டு வாங்க ” என்று கூறினார் ….
பத்மினியால் இப்பொழுது எல்லாம் அதிக நேரம் சமையல் அறையில் இருக்க முடிவது இல்லை … தாளிக்கும் வாசனை பால் வாசனை என அனைத்திற்கும் அவருக்கு கும்மட்டல் வந்து கொண்டு இருந்தது … அதனால் அவரை ஒருவேலையும் செய்ய விடுவதில் லை தாயம்மாள் (சாமியப்பன் , நாயகி தாயார் )…
சாமியப்பனும் தன் மனைவியை அப்படி பார்த்துக்கொள்வார் ….அவரின் அதிக பொழுதுகள் கடையில் இருந்தாலும் அவருக்கு இருக்க கூடிய சிறு பொழுதுகளில் அவரை நன்றாக பார்த்துகொள்ளவார் …. பத்மினியின் வீட்டில் அவரின் அண்ணன் மட்டுமே … அவருக்கு தாய் தந்தை இருவரும் இல்லை ….சிறுவயதில் இருந்தே அவரின் அண்ணன் தான் பார்த்து கொண்டார் …
அதனால் அவரின் பிறந்த வீட்டிற்கும் செல்ல இயலாது … இங்கு தான் இருக்க வேண்டும் … அது வேறு நாயகிக்கு வயிறெரிச்சல் … அவருக்கு முன் தமக்கு கல்யாணம் ஆகியும் தனுக்கு இன்னும் குழந்தை உருவாகவில்லை என … அவரை வேலை வாங்குவதை பார்த்து தன் தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார் …. பத்மினி எதுவும் பேசாமல் உள்ளே டீ போட சென்றவரை தடுத்து “இந்தா பத்மினி ஆசுபத்திரிக்கு கிளம்பிற்று எங்க போற .. நீ போ நான் பாத்துக்குறேன் … தம்பி பாத்து பத்திரமா போயிட்டு வா “என்று கூறி கையேடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தான் உள்ளே நுழைந்தார் தாயம்மாள்…..
“என்னம்மா மருமகளை இப்படி தாங்குற …. டீ போட்டு குடுத்தா குறைஞ்சிடுவாங்களா அவங்க … ” என்று கோவமாக கேட்டார் நாயகி …
“அவளுக்கு இப்போ எல்லாம் அதிகமாக குமட்டிகிட்டு வருது … மாசமா இருந்தா இது எல்லாம் சகஜம் தான் நாயகி உனக்கு டீ தானு வேணும் அதை நான் போட்டு தரேன்” என்று கூறி சமையல் அரை நகர்ந்தார் …
அவர் சாதாரணமாக கூறியதை திரித்து “என்னம்மா உன் மருமக மாசமா இருக்கறதுனால வேலை வாங்கலையா … இல்ல எனக்கு இன்னும் குழந்தை உண்டாகலனு என்கிட்ட வராம பாத்துக்குறியா என்ன … இல்ல இன்னும் மாசமா இல்லை னு குத்திகாட்டுறியா ” என்று கோவமாக கேட்டார் நாயகி ….
இந்த கேள்விகளை தாயம்மாள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை …. நாயகியின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் நின்று இருந்தார் தாயம்மாள்…
*********************************************************************************************************************************************************
சாமியப்பன் மெதுவாக தன்னுடைய எம் 80 (M80) வாகனத்தை செலுத்தி கொண்டு இருந்தார் … அவரின் வேகத்தில் சலித்த பத்மினி “மாமா கொஞ்சம் வேகமா தான் போங்களேன் …. இவளோ மெதுவா போனா எப்போ போறது ஆசுபத்திரிக்கு ” என்று சலிப்பாக கேட்டார் …
அவர் பதில் கூறுவதற்குள் அவரின் நண்பர் எதிரில் நடந்து வந்து கொண்டு இருந்தார் … அவரை பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு “என்ன டா நடந்து வந்துட்டு இருக்க தங்கச்சி வீட்டுல இல்லயா என்ன … பார்த்து கூட ரெண்டு மூணு நாள் ஆச்சு உன்னை ” என்று கேட்டார் சாமியப்பன் …
“ஆமா டா அவளை அஞ்சு மாசத்துக்கு பிறந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க … அவளை தான் போய் பார்த்துட்டு வரேன் … வண்டி கொஞ்சம் மக்கர் பண்ணிச்சு … அது தான் பஸ் ல போயிட்டேன் ” என்று கூறினார் வாஞ்சிநாதன் …..
“நீ முன்னாடியே சொன்ன ல மறந்தே போயிட்டேன் ….” என்று கூறினார் …. பின் நாதன் பத்மினியிடம் திரும்பி “எப்படி இருக்க தங்கச்சி நல்லா பாத்துக்குறானா.. ??” என்று கேட்டார் …
அதற்கு பத்மினி “நல்லா பாத்துக்குறாரு ண்ணா … அண்ணி எப்படி இருக்காங்க …. ??” என்று கேட்டார் …
“நல்லா இருக்கா தங்கச்சி … எங்க ஆசுபத்திரிக்கா ???? ” என்று கேட்டார் ….
“ஆமா ண்ணா … ஆனா இவரு கூட போனா சாயங்காலம் தான் போக முடியும் போல … ரொம்ப மெதுவா போறாரு ண்ணா ” என்று குற்றம் கூறினார் பத்மினி ….
“இந்த நேரத்துல மெதுவா தானு ம்மா போகணும் …. வேகமா நம்ம ஊரு ரோட்டுல போக முடியுமா …. மெதுவா போனாலும் பத்திரமா போக வேண்டாமா ” என்று நாதன் கேட்டார் …
“அண்ணா அதுக்கும் நடந்து போறவங்க கூட வேகமா போற மாதிரி ஓட்டுறாரு …. நானும் ரொம்ப வேகா மா போகனும்னு சொல்லல ண்ணா … கொஞ்சம் தான் வேகமா போக சொல்றேன் ” என்று கூறினார் …
“டேய் கொஞ்சம் வேகமா போ … கவனமா போ கிளம்புங்க தாமதம் ஆகிட போகுது ” என்று கூறி அனுப்பி வைத்து விட்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் வாஞ்சிநாதன் …
மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்த்து அவர் பரிசோதனை செய்து விட்டு “கொஞ்சம் சத்து கம்மியா இருக்கு …. அதுக்கு மாத்திரை தரேன் … பழங்கள் நிறைய சாப்பிடுங்க … கனமான பொருள் தூக்க கூடாது ” என்று கூறி அனுப்பி வைத்தார் மருத்துவர் …
********************************************************************************************************************************************
வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த நாயகியை பணம் குடுத்து அனுப்பி விட்டு ஒரு பெருமூச்சை விட்டு அமர்ந்தார் தாயம்மாள் ….
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது …. அன்று நாயகியின் வேறு ஒரு முகத்தை பார்த்து அவரின் தாயும் தமையனும் அதிர்ந்து நின்றுவிட்டனர் … அன்று அவரை வீட்டை விட்டு அனுப்பியது தான் அதன் பிறகு அவரை வீட்டிற்குள் வர அனுமதிக்கவே இல்லை தாயம்மாள் …
error: Content is protected !!