Skip to content
Post Views: 2,411
யாதுமாகி #18
அண்ணி நீங்க பலே ஆளு….யாருக்கும் அடங்காத காங்கேயம் காளை எங்க விஷ்ணு அண்ணா, அவரையே சாய்ச்சுபுட்டீங்க.
மேலும் மேலும் சிவக்க வைத்தாள் அனுபமா.
ஹலோ உங்க அண்ணன் அப்படியே சாய்ந்துட்டாலும், வெட்கத்தை மறைத்து கோபம் போல் சிடு சிடுப்பாய் கேட்டாள்.
Advertisement
இல்லையா பின்ன? ஜோதி ஆன்ட்டி புலம்புவாங்க விஷ்ணு அண்ணா மேரேஜ் பண்ணிக்க இன்ட்ரஸ்ட் காட்டலைன்னு.
கல்யாணம்னா காத தூரம் ஓடின மனுஷன் அதிரடியா கல்யாணம் பண்ணி இருக்காருன்னா அதுவும் லவ் மேரேஜ்….அனு சொல்ல அவள் தோழிகள் “ஆவென” வாய்பிளந்து பார்த்தனர்.
ம்ம்க்கும்…மேரேஜ் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டாலும் நேத்ரா நொடித்துக் கொண்டாள்.
Advertisement
என்ன அண்ணி அப்படி சொல்லிட்டீங்க? எங்க விஷ்ணு அண்ணா உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குறார்.
Advertisement
கை வலிக்க போகுது…உங்க நொண்ணனை கீழே இறக்கி விட சொல்லு! நேத்ரா போட்ட மொக்கையில் குமரிகள் கூட்டம் கொல்லென சிரித்தனர்.
ஏய் அனு ஒரு நிமிஷம் இங்கே வாயேன்…அவசரமாக ஒருத்தி ஓடி வந்து அவள் கரம் பற்றி இழுத்து போனாள்.
எங்கேடி?
Advertisement
வா சொல்றேன்! ஆர்வமாய் இழுத்துக் கொண்டு போனாள்.
சற்று நேரத்தில் வந்த அனு கொளுத்தி போட்ட சரவெடியில் அங்கு வெடி சிரிப்பு அடங்க வெகு நேரமானது.
என்ன சிரிப்பு இது அற்பமா? இதெல்லாம் ஒரு ஜோக்கா? நேத்ரா காட்டமாய் கத்த…மொத்த கன்னியர் கூட்டமும் கப் சிப்.
வேறொன்றும் இல்லை…அனுவின் கல்லூரி தோழி ஒருத்தி அனுவை அழைத்து போய் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணுவை காண்பித்து இந்த ஹேன்சம் யாரு? செம்ம மேன்லியா இருக்காரு. இந்த குழந்தை யாரோடது? என்னை இன்ட்ரோ பண்ணு ப்ளீஸ் என்று சிணுங்கினாள்.
வா இன்ட்ரோ கொடுக்குறேன் என்று அவள் கரம் பிடித்து இழுத்து வந்தவள் நேத்ராவை காண்பித்து “குழந்தை இவங்களோடது” என்றாள் கொப்பளித்த குறும்பை அடக்கியப்படி
இவங்க குழந்தையா? இவங்க யாரு? அவரோட ரிலேட்டிவா?
ம்ம்ம்ம்ம்…. ரிலேட்டிவ் தான் கொஞ்சம் தூரத்து ரிலேடிவ்.
அப்படினா?
அப்படினா…..அந்த ஹேண்ட்ஸம்,மேன்லி ஹீரோ இருக்கிறாரே அவரோட வைஃப், என்றாளே பார்க்கலாம்.
அந்தப் பெண் முகத்தில் ஈ ஆடவில்லை. பயத்தில் எச்சில் விழுங்கினாள்.
நேத்ரா சிவந்த விழிகளை உருட்டி அந்த பெண்ணை பஸ்பமாக்க முயன்று கொண்டிருந்தாள்.
கூல் டவுன் அண்ணி,எங்க அண்ணா எவ்வளவு ஹேண்ட்ஸம் பாருங்க! உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கு அதுதான் அண்ணா கிடைச்சிருக்காரு. வேல்யூ தெரியாம எங்க அண்ணனை கேலியா பேசாதீங்க!அனு கண்சிமிட்டி சிரித்தாள்.
எனக்கு எல்லாம் தெரியும்! நீ கூட லவ் பண்ணி, ஃ பைட் பண்ணி தானே இப்போ மேரேஜ் பண்ணிக்க போற…? உனக்கும் அதிர்ஷ்டம் தான் இளிச்சவாய் மாப்பிள்ளை மாட்டிக்கிட்டாரே…நேத்ரா பதிலுக்கு வாரினாள்.
அண்ணி நீங்க என்ன சொன்னாலும் உங்க லவ் ஸ்டோரி மாதிரி வராது. ஹரி டைரக்ஷன் மூவி மாதிரி செம்ம த்ரில்லிங்,சேசிங்….அனு தெறிக்க விட்டாள்.
அப்படியா சிஸ்டர்? அனுவின் தோழியர் கூட்டம் நேத்ராவை வட்டமிட்டது.
நேத்ராவிற்கு அன்றைய நாளை நினைக்கவே வெட்கம் அதிகமானது.
சிஸ்டர் ப்ளீஸ் சொல்லுங்க, சொல்லுங்க! உங்க லவ் ஸ்டோரியை கேட்க ஆர்வமா இருக்கோம். ஒருத்தி நேத்ராவின் கன்னம் பற்றி கொஞ்சினாள்.
ஏய் வாலுங்களா பங்ஷன் வேலையை பாருங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் வந்துடுவாங்க. கன்னியர் கூட்டத்தை கலைத்துவிட முயன்றாள்
பங்க்ஷன் ஆரம்பிக்க இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு. நீங்க அதுக்குள்ள ஷார்ட்டா, ஸ்வீட்டா,கிரிஸ்ப்பா அப்படியே ரொமான்டிக்கா சொல்வீங்களாம் நாங்க கேட்டு ரசிப்போமாம். அனு உரிமையாய் நச்சரித்தாள்.
லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி மாதிரி பிரசித்தி பெற்ற காதல் இல்லை எங்களோடது! நேத்ரா குறும்பாய் சிரித்தாள்.
ஹே… கேர்ள்ஸ்,அண்ணி இப்படி பேசுறாங்கன்னு ஈசியா நினைச்சுடாதீங்க, அண்ணி டெரர் பீஸ்! அனு இன்னும் ஏற்றி விட்டாள்.
நான் டெரர் பீஸா? உரிமையாய் அனுவை கிள்ளினாள்.
அண்ணி…பேச்சை மாத்தாம ஸ்டோரிக்கு வாங்க ப்ளீஸ். அனு அவள் கரம் பிடித்துக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
மொக்கையா இருக்கும் பரவாயில்லையா?
பரவாயில்லை என்றனர் கோரஸாக.
அன்றைய நினைவு மனத்திரையில் பளிச்சென்று படமாய் ஓடியது நேத்ராவிற்கு.
வடலூர் ரவுண்டானா….தெற்கே சேத்தியாத்தோப்பு கும்பகோணம் சாலை, வடக்கே பண்ருட்டி சாலை, மேற்கே விருத்தாசலம் சாலை, கிழக்கே கடலூர் சாலை என்று நான்கு சாலை சந்திக்கும் பரபரப்பான இடம்.
அந்த ரவுண்டானாவை ஒட்டிய இடத்தில் ஒரு ஆளை மிரட்டிக் கொண்டிருந்தார் டிராபிக் போலீஸ்.
வேறொன்றுமில்லை கர்ப்பிணி மனைவியுடன் டூவீலரில் வந்த ஒருவர் ஹெல்மெட் போடவில்லை என்றும் லைசென்ஸ் ஆர்சி இன்சூரன்ஸ் இல்லை என்றும் டிராபிக் போலீஸ் மடக்கி பிடித்துக் கொண்டார்.
அந்த மனிதரோ திடீரென்று மனைவிக்கு தலைசுற்றல் ஏற்பட்டு விட்டதாகவும், அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் வரும் அவசரத்தில் எதுவும் கொண்டுவரவில்லை என்றும் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
உன் கதை எனக்கு எதுக்கு? ஃபைன் கட்டிட்டு போ என்று வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டார் டிராபிக் போலீஸ்.
சார் அவசரமா போகணும்! கெஞ்சினார் அந்த மனிதர்.
வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்ற யாரும் என்ன ஏது என்று விசாரிக்க வரவில்லை.
காலை 10 மணிக்கு தோலை உரிக்கும் வெயில்.சோர்வுடன் நிற்க இயலாமல் அந்த கர்ப்பிணி பெண் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
லைப்ரரிக்கு செல்வதற்கு கிளம்பிவந்த நேத்ரா அய்யோ பாவமே…ஏதாவது செய்ய வேண்டும் என்று ஸ்கூட்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள்.
கர்ப்பிணியின் அவஸ்தை அவளை வெகுவாய் பாதித்தது.
போலீஸ் என்றால் கொஞ்சம் பயம் அவளுக்கு. என்ன கேட்பது? எப்படி கேட்பது? நகம் கடித்துக்கொண்டு நின்றாள்.
அவ்வழியே வந்த ஒருவன் நடந்தவற்றை அறிந்து அவருக்குத் தான் ஃபைன் கட்டுவதாக கூறினான்.
டிராபிக் போலீஸ் வரம்பு மீறி பேச, பொறுமை இழந்த அவன் சட்டையை கொத்தாக பற்றி அரைந்து விடும் வெறியோடு கையை ஓங்கினான்.
டேய்…போலீஸ் மேல கை வைக்கும் அளவிற்கு நீ பெரிய பிஸ்தாவா? அவமானத்தில் போலீஸ் எகிறினார்.
மரியாதை இல்லாம பேசின பல்லை உடைப்பேன்.
“நீ காக்கிசட்டைகாரன்னா,நான் கருப்பு கோட்காரன்” கொஞ்சமும் அசரவில்லை அவன்.
ஓ…வக்கீலா? நீ லாயர்னா பப்ளிக்கா வந்து சீன் காட்டுவியா? கடுகடுத்தார் போலீஸ்.
எது சீனா? அந்த பொண்ணு எப்படி வெயிலில் தவிச்சுட்டு நிற்கிறாங்க, நீ ஈவு இரக்கம் இல்லாம நிற்க வச்சிருக்க. என்ன கொடூர புத்தி உனக்கு?
டேய்… யாருகிட்ட பேசற… போலீஸ் அவனை அடிக்க பாய… அந்த கரத்தை அசால்டாய் மடக்கி பிடித்தவன். ஸ்பாட் ஃபைன் கட்டியே தீரனும்னு எந்த கட்டாயமும் இல்லை! பொறுமையா கூட கட்டலாம்னு ரூல்ஸ் இருக்கு.தெரியுமா, தெரியாதா உனக்கு?
பப்ளிக்னா உனக்கு அவ்வளவு இளப்பமா? பல்லை கடித்தான்.
இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு…. ச்ச..முதலில் அவர் வண்டி சாவியை கொடுத்து அனுப்புங்க, இல்ல இப்பவே டிஎஸ்பிக்கு கால் பண்ணுவேன்.
டிஎஸ்பி என்று சொன்னவுடனே அந்த போலீஸ் ஆடிப்போனார்.
என்ன பார்க்கிற? டிஸ்பி நடராஜன் என் பெரியப்பா மகன் தான். இப்போவே கால் பண்றேன்! கோபமாய் போனை கையிலெடுத்தான்.
சார் ப்ளீஸ் வேண்டாம். அந்த போலீஸ் இறங்கி வந்தார்.
முதலில் மனிதாபிமானம் உள்ள மனுஷனா இருங்க, அப்புறம் காக்கிசட்டை போட்டு கடமை ஆற்றும் போலீஸா இருங்க! கடுமையாக எச்சரித்தவன் என்னை என்ன செய்யணும்னாலும் செய்யுங்க, இப்போ அவங்களை அனுப்புங்க. தன் விசிட்டிங் கார்டை எடுத்து கொடுத்ததுவிட்டு, வண்டி சாவியை பிடுங்கி அந்த கர்ப்பிணியின் கணவனிடம் கொடுத்து அனுப்பி விட்டு தான் கிளம்பினான்.
தேங்யூ சார் என்றார் அந்த பெண்ணின் கணவர்.
ம்ம்ம்ம்ம் என்றவன் அந்த பொண்ணுக்கு ஜூஸ் வாங்கி கொடுத்து கூட்டிட்டு போங்க! என்றவன் போலீசை முறைத்தான்.
Wow…what an interesting character he is! வாய்விட்டு ரசித்து சிலாகித்தாள் நேத்ரா.
போலீசை முறைத்துக் கொண்டே மிடுக்காய் தன் ராயல் என்ஃபீல்டில் ஏறி பறந்து விட்டான்.
ச்ச…எவ்வளவு தைரியம்! எவ்வளவு கம்பீரம்! சான்ஸே இல்லை…மெச்சிக்கொண்டாள்.
நமக்கெதுக்கு வம்பு என்று கடந்து சென்ற மனிதர்களுக்கு மத்தியில் இவன் எவ்வளவு நல்ல மனம் படைத்தவன்!
திருகிய மீசையும்,எதிரியை துவம்சம் செய்யும் அவன் கூரிய விழிகளும் அவள் மனதில் ஆழப் பதிந்து விட்டது.
யாருடா இந்த ஆளு…அழையா விருந்தாளியாய் அவன் நினைப்பு அவளுக்கு.
“———————”
error: Content is protected !!