Skip to content
Post Views: 2,533
யாதுமாகி #13
அமைதியான கார் பயணம் இதமான ஏசியன் மிதமான குளுமையில் குழந்தை சுகமாய் உறங்கி இருந்தது.
இருவரும் பேசிக்கொள்ள முயலவில்லை.மௌனத்தின் கணம் தாளாது விஷ்ணு தான் பேச்சை ஆரம்பித்தான்.
நேத்ரா நீ எம் ஃபில் ஜாயின் பண்ணிக்கிறியா?
Advertisement
எம் பில் படித்து என்ன பண்ணப் போறேன்? விட்டேற்றியாய் பேசினாள்.
அப்போ வீட்டில் இருந்து ஏதாவது பிசினஸ் மாதிரி பண்ற ஐடியா இருக்கா? உனக்கு மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்லையா.
பிசினஸா…ஊறுகாய் அப்பளம் போட்டு விற்கவா? இல்லைனா நாலு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கவா? கேலியாய் சிரித்தாள்.
Advertisement
திமிரு! கடுமையாய் முறைத்தான்.
Advertisement
ம்க்கும்… எதார்த்தம் சொன்னேன்! ஒரே நேரத்தில் பெத்தவங்க,பொண்டாட்டி இரண்டு பேரையும் திருப்திப்படுத்த முடியாது.
என்னை சமாதானம் செய்ய இப்படி ட்ரை பண்ற ஐடியாவை விடுங்க.நான் எங்கே போயிடப் போறேன்?சோ உங்களை பெத்தவங்களுக்கு நல்ல பிள்ளையா இருங்க.
வேதனையின் கணம் தாளாது கண்மூடி கொண்டாள்.
Advertisement
வெறுப்பின் உச்சம் அவள் பதிலில் விரவிக் கிடப்பது கண்டு மெய்யாகிலுமே வருத்த முற்றான்.தன் கையறு நிலையை எண்ணி தன்னையே வெறுத்தான்.
தன்னை விரும்பி மணந்தவளை நிம்மதி இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவனை சில நாளாகவே தூங்கவிடாமல் இம்சிக்கிறது.
என்ன செய்ய என்று அனு தினமும் யோசிக்கிறான் விடை தான் கிடைத்தப்பாடில்லை.
தந்தையின் புகழுக்கு கொஞ்சமும் குறைவின்றி, குன்றாத புகழுடன் மிகச் சிறந்த ஆட்சி பரிபாலனம் செய்த ராஜேந்திர சோழனின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம் வந்து சேர்ந்தனர்.
கட்டிட அமைப்பு,விஸ்தீரணம் ஈசன் பெயர் அனைத்திலும் தஞ்சையை ஒத்த அதே பிரதிபலிப்பு. ஆம்! அதே பெருவுடையார் தான் இங்கும் வீற்றிருக்கிறார்.
“——————-”
முன்பொரு முறை காதல் பறவைகளாய் இங்கு வந்திருக்கிறார்கள்.
கோயிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க, தெய்வீக காதல் என்று சொல்வதற்காகவா? அவனை செல்லமாய் சீண்டினாள்.
நீ ஏன் இப்படி பண்ணின? கோபமாய் கேட்டான்.
எப்படி பண்ணினேன்?அறியாத குழந்தை போல் கண் சிமிட்டி கேட்டாள்.
என்னடி இது? கட்டுப்போட்டிருந்த இடது மணிக்கட்டை காட்டினான்.
அது… சும்மா!
ஓங்கி ஒன்னு போட்டேன்னா மண்டை ரெண்டா உடைஞ்சிடும்,ஆக்ரோஷமாய் கை ஓங்கினான்.
பயத்தில் கண்களை இறுக மூடியவளின் விழியில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிதறியது.
நேத்ரா…ஏய் நேத்ரா… உன்னைத்தான்! இங்கே பாரு, அவள் முகவாய் பற்றி நிமிர்த்தினான்.
இது உனக்கே சைல்டிஷா இல்லையா?பைத்தியக்காரி கை நரம்பை கட் பண்ணி இருக்கியேடி! செத்து தொலைத்து இருந்தால் என்ன ஆகிறது? ஆத்திரமும், கோபமுமாய் தன் அடர்ந்த கேசத்தை அழுந்த கோதி கொண்டான்.
சாகிறது ஈசி,உங்களை மறக்கிறது கஷ்டம்! அவன் தோளில் சாய்ந்து விம்மி அழுதாள்.
உனக்கு நான் அப்படி என்ன பண்ணிட்டேன்? நீ உயிரை விடற அளவிற்கு உருகி உருகி லவ் பண்ற!
நீங்க எதுவும் பண்ணல அதுதான் ஸ்பெஷல்! கட்டுப்போட்டிருந்த இடது கரம் தூக்கி அவன் சிகை கோதி உரிமையாய் கலைத்து விட்டாள்.
லூசு கொஞ்சம் சீரியஸா திங்க் பண்ணு! என் ஃபேமிலி செட்டப் உனக்கு சரியா வராது. அவளுக்கு புரிய வைக்க போராடினான்.
அதெல்லாம் சரியா வரும். சலுகையாய் அவள் மார்பில் புதைந்தாள்.
முட்டாள்,கல்யாணம் விளையாட்டு பேச்சு இல்லை.சரியோ தவறோ அந்த பந்தத்தில் இணைந்துட்டா அதன் புனிதத்துக்கு கட்டுப்பட்டு வாழனும்!
நான் வாழ மாட்டேன்னு சொல்லலையே…என்னை பத்தி நீங்களா ஒரு அசெம்ப்ஷனில் இருக்கீங்க! அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள்.
உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு! யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கிற கதை தான் உன் கதை.
நீ ஏன் சூசைடு வரை போன? கோபமும் பாவமுமாய் கேட்டான்.
டாடிக்கு என்மேல் சந்தேகம் வந்துடுச்சு போல.எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க அவள் கண்களில் பீதி.
நல்ல மாப்பிள்ளையா இருந்தா கன்சிடர் பண்ணலாமே…
டேமிட்….அப்போ நீங்க கெட்ட மாப்பிள்ளையா?
லூசு எங்க அப்பா அக்செப்ட் பண்ணிக்கிட்டாலும் எங்க அம்மா….சான்சே இல்லை, அவன் தயக்கத்துடனே கூறினான்.
ஏன் உங்க அம்மாக்கு என்னை பிடிக்காதா? பரிதவித்து போனாள்.
அப்படி இல்லை எங்க அம்மா அவங்க பெரியப்பா பேத்தி சந்திரவதனியை தான் நான் கட்டணும்னு கனவு கண்டுகிட்டு இருக்காங்க.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.
ஹேய் என்ன லுக்கு? கண்ணகியா மாறிடாதேம்மா… அவ என்னோட முறை பொண்ணு அவ்வளவுதான். தோளை குலுக்கினான்.
முறை பொண்ணுனா ரொமான்ஸ் பண்ணிட்டு முறைத்து முறைத்து பார்ப்பீங்களா?
சேச்சே அவதான் என்னை முறைத்து முறைத்து பார்ப்பா,அத்தான் அத்தான்னு அன்பா சுத்தி சுத்தி வருவா.
அவன் வெறுப்பேற்றியதில் அவள் பற்கள் நரநரவென அரைப்பட்டது.
அழகா இருப்பாளா?
யாரு அழகா இருப்பா? புரியாதது போல் விழி உயர்த்தி கேட்டான்.
அதுதான் வழிஞ்சு குழைந்து சொன்னிங்களே… இந்திராவோ, சந்திராவோ….முகம் வெளிறி விட்டது அவளுக்கு.
அவ இந்திரா இல்ல சந்திரா.ஆளு அம்சமா இருப்பா! உன்னை மாதிரி போனி டெயில் இல்லை, மயில் தோகை மாதிரி கூந்தல் இடுப்புக்கு கீழே சதிராடும். நீ பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி ஜீரோ சைஸ் இருக்க.அவ பூசின மாதிரி கண்ணுக்கு லட்சணமா அழகா இருப்பா. நீ மாநிறம் தான்,அவ நம்ம தமன்னா கலரில் தகதகன்னு இருப்பா.
“வில் யு ப்ளீஸ் ஸ்டாப் திஸ் டாப்பிக்” காதை பொத்திக்கொண்டு கத்தினாள்.
என்னாச்சு? அப்பாவியாய் சீண்டினான்.
உங்களை குமுதத்தில் வர்ற மாதிரி ஆறு வித்தியாசமா கண்டுபிடிக்க சொன்னேன்?
ஹேய் நேத்து குட்டி ஆறு இல்லை அறுபது வித்தியாசம் கூட….அவன் சொல்லி முடிக்கும் முன் சரமாரியாய் அடித்தாள்.
ஹே…. லாயர் மேல கை வைக்கிற நீ!அவள் இரு கரங்களையும் வளைத்து பிடித்தான்.
விம்மி அழுதவளின் மூக்கு புடைத்து,இதழ்கள் கடிபட்டு கண்ணீர் வெடித்து சிதறியது.
தாயிடம் கராராக சந்திரா வேண்டாம் என்று காலையில் தான் சொல்லி இருந்தான்.
சந்திரவதனி சிவராமனின் ஒரே பெண். சிவராமன் வீட்டோடு மாப்பிள்ளையாய் போய் அங்கும் மனைவி வழியில் கோடிக்கணக்கில் சொத்து சுகம் இருக்கிறது.
சந்திரா ஆளும் நல்ல அழகு! அவளுக்கும் விஷ்ணுவின் மேல் ஆசை உண்டு. சிவராமனும் தங்கை மகனுக்கு பெண் கொடுக்க தயாராகவே இருக்கிறார்.
விஷ்ணு சந்திராவை மறுக்க இரு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக அழைத்தது இரண்டாவது, சந்திரா கர்வத்திலும் ஆணவத்திலும் 100 ஜோதிக்கு சமம்.
மகள் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று திட்டவட்டமாய் மறுத்ததில் வேணுவிற்கு சொல்லொன்னா நிம்மதி,அன்னத்திற்கும் தான்.
விஷ்ணுவிற்கு தெரியும் ஜோதி ஒருபோதும் நேத்ராவை மருமகளாக ஏற்க மாட்டார்.
அதனால் தான் தன் காதலை அவளிடம் காட்டாது அமைதி காத்தான்.
அவளோ உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு போய்விட்டாள்.
லுக் நேத்ரா கிராமத்து வாழ்க்கை பாரதிராஜா படம் போல கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் என்று நினைக்காதே, அதை லீட் பண்றது ரொம்ப கஷ்டம்.
எப்படி இருந்தாலும் உங்களுக்காக ஏத்துக்குவேன். இம்மி அளவும் இளகாமல் பிடித்த பிடியில் வைராக்கியமாய் இருந்தாள் நேத்ரா.
பின்னாடி கஷ்டப்பட போற! அப்போ உனக்காக என்னால வக்காலத்து வாங்க முடியாது.உண்மை நிலையை வெளிப்படையாய்,எந்தவித மேல் பூச்சுமின்றி கூறினான்.
பிடித்தாலும் பிடிக்கலைனாலும் நீ ஜோதி கூடத்தான் மல்லுக்கட்டி குப்பை கொட்டனும்! நீ கண்ணை கசக்கிட்டு நின்னாலும் தனி குடித்தனம் போயிட முடியாது.
நீங்க என்ன சொன்னாலும், எப்படி பயமுறுத்தினாலும் என் முடிவு உறுதி. நான் என் விஷ்ணுவுக்கு மனைவியாகணும்! அவன் மீசையை திருகி குழந்தையாய் சிரித்தாள்.
அவள் மன உறுதி கண்டு பிரமித்து போனான்.
இந்த குங்குமத்தை எனக்கு வச்சு விடுங்க! அவன் முன் தன் கரம் நீட்டினாள்.
நான் வச்சுவிடறேன்,இனிமேல் இப்படி கையை கட் பண்ணிக்கிறது,ஸ்லீப்பிங் டேப்லெட் போடறதுன்னு எந்த கேவலமான முடிவுக்கும் போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு!
அவன் கரம் பற்றி சத்தியம் செய்தவள் அவன் தோள் மீது உரிமையாய் சாய்ந்து கொண்டாள்.
ஆவுடையாரை மனமுருக வேண்டி அவள் பிறை நெற்றியில் முழு மனதுடன் திலகமிட்டான்.
“——————-”
அம்மா அம்மா குழந்தை அவள் தலை முடியை பிடித்து இழுத்து கை கால் உதைத்து அவளை நடப்பிற்கு கொண்டு வந்தது.
நன்றி பெருக்குடன் மூலவர் ஆவுடையாரை வணங்கினாள்.
அன்று என் விஷ்ணு வேண்டும் என்று உன்னிடம் தான் வேண்டி நின்றேன்!
என் விஷ்ணுவை எனக்கு கொடுத்து உலகிலேயே நான்தான் அதிர்ஷ்டசாலி என்று வரம் கொடுத்தாய்.
இன்று என் விஷ்ணுவுடன் நிம்மதியாக வாழ அருள் கொடு என்று கேட்கிறேன்.கண்களால் கெஞ்சி உள்ளத்தால் முறையிட்டு மண்டியிட்டாள்.
error: Content is protected !!