Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️7

 அன்றைய நாளின் நினைவுக் கோர்வையில் அழையா விருந்தாளியாய் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவளை குழந்தையின் அழுகுரல் நிகழ்வுலகிற்கு உலுக்கி கொண்டு வந்தது.

 மங்களம்மா கொண்டு வந்து குழந்தையை கொடுத்துவிட்டு போனார்.

 குழந்தையின் உருவில் விஷ்ணுவின் முகமே அவளுக்கு தெரிந்தது. ஆழ்ந்து சுவாசித்து அழுந்த முத்தமிட்டாள் குழந்தையின் பட்டு கன்னத்தில்.

 அப்பனுக்கானதாய் இருக்கலாம் அந்த ஆழ்ந்த முத்தம்,ஆயினும் பெற்றுக் கொண்ட குழந்தை சமத்தாய் சிரித்தது.



Advertisement

 குழந்தையுடன் விளையாடிவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு தனதறைக்குள் புகுந்து கொண்டாள்.

 குழந்தை உறங்கிவிட தொட்டிலை ஆட்டிக்கொண்டே கையில் சித்ரா பானர்ஜியின் ஆங்கில நாவலை வைத்து சுவாரசியமாய் படித்துக் கொண்டிருந்தாள்.

 விரிந்த புத்தகம் நழுவி மார்பில் விழ அப்படியே கண்கள் சொருகி உறங்கிப் போனாள்.

Advertisement

 ஆறு ஆள் வேலையை விட ஒரு கைக்குழந்தையை பராமரிக்கும் அலுப்பும் அசதியும் அதிகம்.அதுதான் அயர்ந்து உறங்கிப் போனாள்.

Advertisement

“———–”

 இரவு பத்தரை மணி வாக்கில் வீட்டிற்கு வந்தான் விஷ்ணு.

 வெளி வாசலில் நின்று ஷூவை கழட்டி அதனுள் சாக்ஸை சுருட்டி சொருகி ராக்கில் வைத்துவிட்டு நகர்ந்தவனை வினிதாவின் குரல் சற்று தடுமாற வைத்தது.

Advertisement

 தாயும் மகளும் நட்ட நடு ஹாலில் அமர்ந்து காரசாரமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

 ஏம்மா நீ இப்படி எல்லாம் பேசி வைத்தது அண்ணனுக்கு தெரியுமா ஜோதியை கடுப்புடன் முறைத்தாள் வினிதா.

 ஏய் உன் திருவாயை மூடுடி! என்ன தப்பா பேசிட்டேன்…என் மனசுல இருந்ததை ஒளிவு மறைவு இல்லாம உன் தங்கச்சி அஸ்விதா கிட்ட சொன்னேன். அன்று பேசியதை இன்றும் பேசினார்.

 வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு கொதித்துப்போனான். பெற்றவள் என்றும் பாராமல் கொன்று விட வேண்டும் என்பது போல் வெறி கிளம்பியது.

 ஏற்கனவே அவர் ஒரு முறை தாம்பு கயிரை தூக்கிக் கொண்டு போய் கதவடைந்து டிராமா போட்டது நினைவிற்கு வந்தது.

 ச்சீ… இதெல்லாம் ஒரு பெண் ஜென்மமா? இந்த பெண்மணி வயிற்றிலா பிறந்தேன்? அருவெறுத்தான்.

 அம்மா நேத்ரா பாவம் அவ காதுபட இப்படி பேசினா அவ எப்படி கிச்சுக்கிட்டு இந்த வீட்டில் இருப்பா?

 யாரு இருக்க சொன்னா? கழுதை போகட்டுமே… எங்க பெரியப்பா பேத்தி சந்திரவதனி இன்னும் கல்யாணம் ஆகாம தான் இருக்கா! கண்கள் வைரமாய் மின்ன வாய் நெருப்புத் துண்டங்களை அள்ளி வீசியது.

 தப்புமா! நீயும் ரெண்டு பெண்ணை பெத்து வச்சிருக்க மறந்துடாத சொல்லிட்டேன். தான் அன்னம் வளர்த்த பேத்தி, ஊருக்கே நியாயம் சொல்லும் வேணுகோபாலனின் ரத்தத்தில் ஜனித்த மகள் என்று நிரூபித்தாள் வினிதா.

 ஏய் அடங்குடி! நான் என்னவோ வேணும்னே அவள் காதில் விழட்டும்ன்னு குத்தி காட்டி பேசின மாதிரி சொல்ற?

 மனம் கிடந்த கேடு என் ஆத்தாமை  நான் கூட குறைய நாலு வார்த்தை பேசிட்டேன். அந்நேரம் பார்த்து கிச்சனுக்கு வந்த அந்த ராங்கி காரிக்கு கேட்டுருச்சு.

என்ன பேய் ஆட்டம் ஆடினா தெரியுமா?

 ஆடாம….அம்மா அனேகமா நேத்ரா அண்ணன் கிட்ட நடந்ததை சொல்லலை போல வினிதா அஞ்சி நடுங்கினாள்.

 ஆமா சொல்லலைன்னு தான் நினைக்கிறேன்.

சொல்லியிருந்தால் உங்க அண்ணங்காரன் பொண்டாட்டிக்கு பரிந்து கதகளி ஆடி இருப்பான். வினையமாய் சிரித்தார் ஜோதி.

 அம்மா இனியாச்சும் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு!

 நீ எனக்கு புத்திமதி சொல்ல வந்துட்டியா? நான் தான்டி உன்னை பெற்றேன் நீ என்னை பெறல! மகளை கடுமையாய் ஆட்சேபித்தார் ஜோதி.

 அம்மா எவ்வளவு பெரிய வார்த்தையை பேசி இருக்கேன்னு உண்மையிலே உனக்கு புரியலையா?இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா? பல்லை கடித்தபடி தலையில் அடித்துக் கொண்டாள் வினிதா.

 என்னடி அந்த சீனா சிலுக்குக்கு நீ சப்போர்ட்டா? குதர்க்கம் பேசினார் ஜோதி.

 அம்மா இதே வார்த்தையை என் மாமியார் பேசியிருந்தால் நான் கொலையே பண்ணி இருப்பேன்! நேத்ராவா இருக்கவே உன்னை விட்டுட்டா.கடும் முறைப்புடன் எழுந்து உள்ளே போனாள் வினிதா.

 போடி போ! என்னை கண்டால் உங்க மொத்த பேருக்கும் எட்டிக்காய் தான். எல்லாம் இந்த கிழவி வளர்ப்பு அப்படித்தான் இருக்கும்.

 தலையைப் பிடித்துக் கொண்டு சோஃபாவில் சரிந்தவரை புழுவை விட அற்பமாக ஒரு பார்வை பார்த்தான் விஷ்ணு.

 எதை எதையோ யோசித்த மனம் உழப்பி உழப்பி அவனுக்கு கோபத்தை சிரசில் ஏற்றியது.

 இப்போதைக்கு உள்ளே போவது நல்லதல்ல என்று கூறி நிலையிலும் மூளை எச்சரிக்கை விடுத்தது.

“————–”

 காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அதிக போக்குவரத்தற்ற இரவு நேர சாலையில் கார் பறந்தது.

சேத்தியாதோப்பு தாண்டி காரை கொண்டு சென்றவன் வீராணம் ஏரி கரையில் காரை நிறுத்தி இறங்கினான்.

 கருமை பூசிய காரிருளில் பறந்து பட்ட ஏரியை வெறித்து பார்த்தான்.

 இதுபோல் பரந்த மனப்பான்மை மனிதர்களுக்கு ஏன் இல்லை?தன் அம்மாவிற்கு ஏன் இல்லை? சிலு சிலுவென வீசும் ஏரிக்கரை காற்று கூட அவன் தகித்த மனதை இதமாக்கவில்லை.

 நேத்ரா பாவம்,அம்மா சொல்லால் அடித்த அடி பொறுக்காது எனக்கு எட்டு முறை கால் பண்ணி இருக்கிறாள் பெங்களூரில் இருந்த நான் தான் வேலை மும்மரத்தில் அதை கவனிக்கவில்லை.

வேறு வழி இல்லாமல் அந்நேர வலியை மறக்க தான் தாய் வீடு போயிருக்கிறாள்.நான் தான் அவசரப்பட்டு அவளிடம் கடுமை காட்டி விட்டேன் தவித்து போனான்.

 கண் மூடி ஈரக்காற்றை இழுத்து பிடித்து நுரையீரலை நிரப்பிக் கொண்டான்.

 எவ்வளவு பண்பட்ட குணம் கொண்டவள்! இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகியும் வெளியில் ஒரு வார்த்தை கூறவில்லையே…

 தன்னவளுடனான காதல் கொண்ட தேன்சுவை பொழுதை எண்ணிக்கொண்டான். என் நேத்து எப்போதுமே உன்னதமானவள்…மெச்சிக்கொண்டான்.

“—————-”

“ ஓய் நீ அடங்கவே மாட்டியா?” கணேஷ் பவனில் மாதுளை ஜூஸ் அருந்திக் கொண்டிருந்தவன் அருகில் வந்து அமர்ந்தவளை கிண்டலாய் கேட்டான்.

 இது என்ன சார் வம்பா போச்சு! நான் ஜூஸ் குடிக்க வந்தேன். சாதாரணம்போல் சொன்னாள்.

அப்படியா? இவ்வளவு டேபிள் காலியா இருக்கே இங்கே ஏன் உட்காரணும்?

 என் மொத்த டேபிளையும் விலைக்கு வாங்கிட்டீங்களா?

 வந்த சிரிப்பை மென்று பற்களுக்கு இடையில் ஒளித்துக் கொண்டான்.

 மணிரத்தினம் ஃபேனா நீங்க?

 புரியாமல் பார்த்தான்!

 இல்ல…சிங்கிள் வேர்ட்ஸ் டயலாக் தான் பேசுறீங்க!

 மெல்ல இதழ் பிரியாது நகைத்தவன் நீ என்ன விசு ஃபேனா? பக்கம் பக்கமா டயலாக் பேசுற?

 சார் சூப்பர்ப் 👌 செமையா மடக்குறீங்க! லாயரோ? சும்மாதான் கேட்டாள்.

ம்ம்ம்ம்…யூ ஆர் கரெக்ட்!

 லாயரா! முகத்தை சுருக்கி உதட்டை சுழித்துக் கொண்டாள்.

 ஏன் லாயர்னா அவ்வளவு கசப்பா?

ச்ச…ச லாயரா இருந்தா ஓகே, லையராதான் தான் இருக்கக் கூடாது. அசராது பதில் கொடுத்தாள்.

 நீ காலேஜ் ஸ்டுடென்டா?

 காலேஜ் ஸ்டுடென்ட் தான் மூணு மாசத்துக்கு முன்னாடி!

இப்போ?

 இப்போ சும்மா உட்கார்ந்து சாப்பிட்டு டிவி பார்த்து தினமும் வேதாவை டென்ஷன் பண்ணி குஷி ஆகிட்டு இருக்கேன்.

வேதா எங்கம்மா சார்!மூக்கை சுருக்கி அழகாய் சிரித்தாள் உதட்டோடு கண்களும் கூட்டணி போட்டு சிரித்தது.

 எந்த காலேஜ்?

 எத்திராஜ்!

 சென்னையா?

எஸ்…தோளை குலுக்கினாள்.

 என்ன கோர்ஸ்?

 M A English Literature!

Is it? வியப்பாய் பார்த்தான்.

Yes! நூடுல்ஸ் போல் முன்னாள் சுருண்டு தொங்கிய ஒற்றை முடியை கோதிக் கொண்டாள்.

 உங்க பேர் என்ன சார்?அவன் முகம் பார்த்து,கண்கள் பார்த்து கேட்டாள்.

 பேர் தெரியாமலா தினமும் சைட் அடிக்கிற கண் சிமிட்டி சிரித்தான்.

 நீங்களே சைட்டுன்னு சொல்லிட்டீங்க! சைட் அடிக்க குலம்,கோத்திரம் ஜாதகம் எல்லாம் பார்ப்பாங்களா? அவனைப் போலவே கண் சிமிட்டி பதிலுக்கு சிரித்தாள்.

 ஆமா எத்திராஜ்ஜியன் ஸ்டூடண்ட்னு சொன்ன… அங்கே சென்னையில் செம ஹேண்ட்சம் பசங்க இருந்திருப்பாங்களே? ஆர்வமாய் கேட்டான்.

 அட பைவ் ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து ராகி மால்ட் (கேப்பை கூழ் )சாப்பிடுவது தான் சார் கெத்து.

 மேடம் கிராமத்தானை சைட் அடிக்க இப்படி ஒரு வியாக்கியானமா? அவளை சற்று கோபத்துடன் முறைத்தான்.

 சார் நீங்க என்ன எடக்கு நாட்டான் போலவா இருக்கீங்க?யூ நோ செம்ம ஹேண்ட்ஸம்மா மாடலிங் ஃபிசிக்கோட இருக்கீங்க சார்.

 அவள் பேசிய விதமும் குறுகுறு பார்வையும்… அவன் சிரித்தே விட்டான்!

 உனக்கு பொழுது போகலைன்னு என்ன வச்சி செய்றியா?ஆவலை அடக்கிக் கொண்டு மனதில் உள்ளதை கேலி போல் கேட்டு வைத்தான்.

 சேச்சே கொஞ்ச நாள் சைட் அடிச்சிட்டு அப்புறம் லவ் பண்ணிட்டு சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கணும் சார்! சீரியசாய் சொன்னாள்.

 எங்கம்மா டெரர் பீஸ் தெரியுமா?

 அட போங்க சார்… காமெடி பண்ணிக்கிட்டு!

 சீரியஸ் மா! மெகா சீரியல் எல்லாம் பார்ப்பியா? அதில் வரும் வில்லியை விட எங்க அம்மா டெரர்.அதுவும் ஹிந்தி சீரியலில் வரும் மாமியார் மாதிரி…ரிச்சான ஸ்டைலிஷ் ஆன வில்லி எங்கம்மா.

 தாயைப் பற்றி முற்று முழுதாய் அறிந்தே கூறினான்.

 ஹாய் ஜாலி…. அப்போ டெய்லி செம்மையா டைம் பாஸ் ஆகும்னு சொல்லுங்க! மீண்டும் மொக்கை சுருக்கி அழகாய் கபடமற்று சிரித்தாள்.

 அன்று அப்படி சிரித்தவள் இன்று கண்ணீரோடு கைக்குழந்தையை சுமந்து தாய் வீடு போயிருக்கிறாளே மனம் வாடி போனான்.

 விஷ்ணுவிற்கு தாயிடம் எப்போதும் நெருக்கம் இருந்ததில்லை.அதற்காக அன்பு இல்லை என்று அர்த்தம் இல்லை.

 தாயின் டாம்பீகம், செல்வ செருக்கு, சக மனிதர்களை மனிதர்களாக மதிக்க விரும்பாத குணம் இதெல்லாம் அவரை விட்டு படிப்படியாக விலக வைத்தது.

 இதோ இன்று அவர் எய்த சொல்லம்பு அவன் குருதி நாளத்தை ஆழக்கீறி ரத்தக்கண்ணீர் விட வைத்துவிட்டது.அவரது அபாண்டமான ஆணவ சொல் ஒரேடியாக அவரை வெறுக்க வைத்து விட்டது.

 நெடுநேரம் இருளை வெறித்தவன் நள்ளிரவு கடந்துவிட்டதை உணர்ந்தான்.

 வழக்கம்போல் எந்த முடிவும் எடுக்க இயலாமல் வீடு வந்து சேர்ந்தான்.

 ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் நேத்திரமானவளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

சாரிடி கண்ணம்மா…மானசீகமாய் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டவனுக்கு வேதனை இதயத்தை அழுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!