Skip to content
Post Views: 1,783
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 16
எதுக்கு கங்கா இப்படி அழுதுட்டு இருக்கே?
பயமா இருக்குப்பா..
என்ன பயம்?
Advertisement
தெரியலப்பா..
அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு,தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.
அப்பா எல்லாத்தையும் பாத்துக்குவேன் கங்கா. நீ எதை எதையோ மனசுல வெச்சுட்டு படிப்பை விட்றாதே.
Advertisement
பிறப்பு மாறி இறப்பும் சகஜம்தான். யாருமே இறக்காமே,பிறந்துட்டு மட்டும் இருந்தா இந்த உலகம் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு.
Advertisement
யாருக்கும் நிக்க இடம் இருக்காது, அவ்வளவு ஏன் மூச்சுகூட விடமுடியாத அளவுக்கு கஷ்டமா இருக்கும் கங்கா.
ஒரு குழந்தை இந்த பூமிலே பிறக்கறதே அதோட கர்மவினையை அனுபவிக்கதான்.இது புரியாம பிறக்கும்போது நாம சந்தோச படுறோம்.
அதுவே இறக்கும்போது, முக்தி அடையறது தெரியாம நாம அழுகறோம்.
Advertisement
சரி பிறக்கறதே இறக்கறதுக்குனா கடவுள் எதுக்கு எல்லாத்தையும் பிறக்க வைக்கனும்ப்பா?
கங்கா, இந்த ரகசியத்தை இதுவரை யாருமே தெரிஞ்சிகிட்டது இல்ல.
எல்லாமே நமக்கு மேலே இருக்கறவன் நடத்தறது.உனக்கு இந்த வயசுல இதெல்லா புரியாது. அப்பா வயசு வரும் போது உனக்கு எல்லாம் புரியும்.
உனக்கு புரியற மாறி சொல்லனும்னா உங்க சித்தப்பா இப்போ சாமிகிட்ட இருக்காரு. நம்ம எல்லாத்தையும் அவரு சாமிகிட்ட இருந்து பாத்துட்டுதான் இருப்பாரு.
நீ இதெல்லா விட்டுட்டு தூங்கு. அப்பா உன்கூட இருக்கறே வரை உனக்கு இந்த பயமெல்லா இருக்க கூடாது.
சரிப்பா என மடியிலேயே படுத்து கொண்டாள்.அவருடைய கைகள் தன் தலையை வருடிவிடுவதை உள்ளார்ந்து உணர்ந்து கொண்டாள்.
பிறப்பு இறப்பு பற்றிய தெளிவு இன்னமும் அவளுக்கு கிடைக்க வில்லை.இருந்தும் சிவராமனின் வார்த்தைகளும், தாலாட்டும்,அவரது வருடலும் ஒரு பாதுகாப்பு கவசத்தை அவளுக்கு தந்தது.
நாட்கள் நகர கலா, அம்மா வீடு வந்துவிட்டாள்.வெண்ணிலாவை கிருஸ்தவ பள்ளியிலேயே சேர்த்து விட்டு,தனது மருந்தாளர் பணியையே தொடர்ந்தார்.யாருமே ஈடு செய்ய முடியாத இழப்புதான்.இருந்தும்
இருவரின் திடத்தையும் பார்த்த பெரியவர்களும் கலாவிடம் அவரது கணவரை பற்றி பேசி மேலும் காயப்படுத்த வேண்டாம் என முடிவெடுத்தனர்.
கங்காவும் சற்று தெளிந்து படிப்பில் கவனம் செலுத்தினாள்.இந்த வருடம் பப்ளிக் எக்ஸாம், அதுதான் உங்கள் வாழ்க்கையையே தீர்மானிக்கும் என வீட்டில் உள்ளவர்களின் அட்வைஸ் மழையில் நனைந்தார்கள் தோழிகள் இருவரும்.
ஏற்கனவே ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன பள்ளி பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் இன்னும் ஸ்டிரிக்ட் ஆக மாறியது.
ஆசிரியர்கள் கைகளில் உள்ள பிரம்பு கூட ஏகே 47 போல இருந்தது. காலை ஆறரை மணிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் ஆரம்பித்தால், இரவு எட்டரை மணிக்கு தான் முடியும்.
சூரிய உதயத்திற்கு முன்பு சென்று, அஸ்தனமத்திற்கு பின் வீடு திரும்புவதாக இருந்து.
“பால் காரங்க கூட இந்த டைமுக்கு எந்திரிக்க மாட்டங்க” என குறைபட்டுக் கொண்டாள் கங்கா .
இதில் ஐந்து சப்ஜெக்ட் ஆசிரியரும் டெஸ்ட் வைக்க தமிழ் டெஸ்ட் யாரும் நன்றாக எழுத வில்லை. அதனால் அவர்களின் தமிழ் அம்மா பத்து முறை இம்போசிஷன் கொடுத்தார்.
எப்படி எழுதுவது? காலை சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்கள். அதனால் கங்காவும் சுமதியும் முகம் சுளித்து ஒரு திட்டம் தீட்டினர்.
ஒரு புது மெஷின் வந்துருக்கு கங்கா, நாம ஒரு டைம் எழுதி அதுல பத்து டைம் ஜெராக்ஸ் போட்டுக்கலாம்டி என சுமதி சொல்ல, கங்காவும் ஆமோதித்தாள்.
பள்ளி முடிந்ததும், இருவரும் ஜெராக்ஸ் கடையை நோக்கி நடந்தனர். கையில் புத்தகங்கள், தோளில் பை, ஆயிரம் கதைகள் பேசிக் கொண்டே , ஜெராக்ஸ் போட்டனர்.
அது ப்ளாக் கலரில் வந்தது, அதிருப்தி உடன் அண்ணா எங்களுக்கு புளு கலர்லே வேணும் என்றனர்.
கடைக்காரர் இவர்களை ஒரு மாதிரி பார்த்து,”அப்படி எல்லாம் வராது முதலே ரெண்டு பேரும் எடுத்த ஜெராக்ஸிற்கு காசு கொடுத்துட்டு கிளம்புங்க” என்று விரட்டி விட்டார்.
இரு சுமதி நாம அபிக்கு போன் பண்ணி ஏதாச்சு ஐடியா கேப்போம் என ஒரு ருபாய் காயினை எடுத்து அந்த மஞ்சள் கலர் போனில் போட்டு, “முருகா அபியே போன் எடுக்கனும். அவங்க அப்பா எடுக்க கூடாது” என வேண்டிக் கொண்டே நெம்பர் டையல் செய்தாள் கங்கா.
அவள் வேண்டுதலுக்கு ஏற்ப அபியே போன் எடுத்தாள், இவள் விவரம் சொல்ல அபி சிரித்துக் கொண்டு, “எங்க கடையில கார்பன் ஷீட்னு ஒன்னு இருக்குடி! அதை வச்சு எழுதினா புளு கலர்ல வரும். ஒரு டைம் எழுதுனாகூட போதும்,” என்றாள்.
அந்த யோசனை கேட்டு இருவரின் கண்களும் மின்னின.அந்த இரவே, விளக்கு ஒளியில் கார்பன் ஷீட் வைத்து பத்து நகல்கள் எழுதி முடித்தனர்.
ஊரில் உள்ள பெண் பிள்ளைகளை மொத்தமாக அந்த பள்ளியில் சேர்ப்பதால் ஒரு வகுப்பில் நூறு பிள்ளைகள் இருப்பார்கள். அனைவரையும் தன்னால் செக் செய்ய முடியாததால் நஸ்ரின் என்ற பெண்ணை செக் செய்ய சொன்னார் தமிழ் அம்மா.
இருவரது குட்டையும் நஸ்ரின் போட்டு கொடுத்து விட்டாள். எழுதாத பெண்கள் ஒரு வரிசையில் நிற்க, இவர்கள் இருவரும் தனியாக நின்றனர். அவங்களாச்சு உண்மையை ஒத்துக்கிட்டு நிக்கிறாங்க ஆன நீங்க ரெண்டு பேரும் என்ன வேலைடி செஞ்சு வெச்சுருக்கீங்க? என அடி பின்னி எடுத்துவிட்டார்.
கங்காவிற்கு அவள் செய்தது தவறு என ஏற்றுக்கொள்ள மனமில்லாது, நஸ்ரின் மீது ஒரு வெறுப்பு உண்டானது.
எப்படியோ ‘பப்ளிக் பப்ளிக்’ என ஒருவழியாக எக்ஸாம் எழுதி நல்ல மார்க்குடன் இருவரும் பாஸ் செய்து விட்டனர்.
சிவராமன்,கேக் வாங்கி வந்து கங்காவை வெட்ட வைத்தார். சொத்து சேர்த்து வைக்காவிட்டாலும் நன்றாக படிக்க வைத்துவிட்டால் போதும் என எண்ணிக் கொண்டார்.
கங்கா,” நீ டீச்சர் வேலைக்கு படி, எப்படியாச்சு கவுர்மென்ட் வேலை வாங்கிக்கலாம்”என்றார்.
கலாவிடம் ஆலோசனை செய்தார் சிவராமன்.கலா,” கங்காவை நான் டீச்சர் ட்ரெயினிங் சேர்த்து விடலானு இருக்கே” என்றார்.
மாமா,அவ பனிரெண்டாவது முடிக்கட்டும் அப்பறோம் படிக்க வைக்கலாம்.
“ஏதோ குருப் நாமதான் செலக்ட் பண்ணணும்னு சொல்லிட்டு இருக்காப்டி நீ டீச்சர் படிப்புக்கு ஏத்தமாதிரி குருப் எடுத்து படிக்க சொல்லு கலா” என்றார்.
சரிங்க மாமா அவ வரட்டும் நா பேசறே
வெண்ணிலா தனக்கு வொயிட் ஃப்ராக் வேணும் என்று ஒரே அழுகை. கலா,நான் சம்பளம் வாங்கி எடுத்து தரேன் என இரவு முதல் சமாதானப் படுத்தியும் கேட்காமல் அழுதுகொண்டே இருக்க இரண்டு அடி போட்டுவிட்டார்.
சிவராமனுக்கு மனது கேட்கவில்லை. வெள்ளை ஃப்ராக் எடுத்து கொடுத்து விட்டார் வெண்ணிலாவுக்கு.
கங்கா,” உங்க அப்பா உன்னை டீச்சர் ட்ரெயினிங் சேர்த்து விடறேனு உங்க சித்தி கிட்ட சொல்லிருக்காருடி.நீ டீச்சர் ட்ரெயினிங் படிக்க போனா நாம பிரிஞ்சுருவோம் கங்கா”என்றாள் சுமதி.
இல்லடி நாம பர்ஸ்ட் ட்வெல்த் படிக்கலாம். அப்பறோம் எப்படியாவது நம்ம அம்மா அப்பா கைல காலுல விழுந்தாவது ஒரு டிகிரி படிச்சுகலாம்.
அப்பறோதா நான் டீச்சர் ட்ரெயினிங் சேருவே என்றாள்.
கங்காக்கு கெமிஸ்ட்ரி படிக்க ஆசை. ஆனா கலாவும் அவங்க பெரியம்மா பொண்ணு வேணியும் சயின்ஸ் குரூப் வேண்டா ரொம்ப கஸ்டம் மார்க் வராது. ஆர்ட்ஸ் குரூப் எடுங்கனு சொல்ல..
சித்தி எனக்கு கெமிஸ்ட்ரி படிக்க ஆசை.
அது ரொம்ப கஸ்டம் கங்கா.
ஆனா எனக்கு கெமிஸ்ட்ரியும் அதுல வரே ஈக்வேஷனும் புடிச்சு இருக்கு சித்தி.
சரி நீ டென்த்ல உன்ன மாதிரி நல்ல மார்க் எடுத்து,சயின்ஸ் குரூப் படிச்சவங்களோட ட்வெல்த் மார்க் கேளு. அப்பறோம் ஒரு முடிவு பண்ணி உங்க அப்பா கிட்ட பேசலாம்.
கங்காவும் ஊர் முழுக்க அலசி எடுத்துவிட்டாள்.அவளோட துர்அதிஷ்டம் டென்த்ல நல்ல மார்க் வாங்கி சயின்ஸ் குரூப் எடுத்த யாருமே ட்வெல்த்இல் நல்ல மார்க் வாங்கவே இல்லை.அது அந்த காலத்து மூடநம்பிக்கை போல தோன்றியது கங்காவிற்கு.
இருந்தும் அவளுக்கு உள்ளூர பயம்.ஒரு வேளை ட்வெல்த்ல நல்ல மார்க் வாங்க முடியாம போனா?அரை மனதாக அப்ளிகேஷன் ஃபார்மில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்தாள்.
அட்மிஷன் கவுண்ட்டரில் பஞ்சாயத்து. உனக்கு என்ன பைத்தியமாடி, நல்ல மார்க் வாங்கிட்டு ஆர்ட்ஸ் குரூப் வேணுங்கறே என்றனர் ஆசிரியர்கள்.
எனக்கு ஆர்ட்ஸ் குரூப்தான் வேணுங்க மிஸ்.
உங்க அம்மா அப்பா வரலயா?
அப்பா வந்துருக்காங்க மிஸ்
எங்கே?
மரத்தடியில் நின்றிருந்த சிவராமனை அழைத்து வந்தாள்.
உங்க பொண்ணு ஆர்ட்ஸ் குரூப்தான் வேணும்னு நிக்கறா. நீங்க கொஞ்சம் சொல்லுங்க.
கங்கா என்ன விருப்பப்படுதோ அதையே கொடுத்துருங்க
அங்கு நின்ற சில மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும் காட்டி ,இவங்கெல்லாம் மார்க் கம்மி ஆனா சயின்ஸ் குரூப்தான் வேணும்னு காலைலே இருந்து காத்துட்டு இருக்காங்க.
நீங்களும் உங்க பொண்ணு மட்டும் இவ்வளவு மார்க் வெச்சுட்டு ஆர்ட்ஸ் குரூப் வேணும்னு நிக்கறீங்க.
இல்லைங்க நாம இப்ப சொல்லறதுனாலே,கங்கா அந்த குரூப் எடுக்கலாம். ஆனா அது கங்காக்கு புடிக்கனும்,புடிக்காததே கொடுத்துட்டு படின்னு சொன்னா நல்லா இருக்காது.
கங்கா கேட்ட குரூப்யே கொடுத்துரூங்க என பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஒருவழியாக கங்கா,சுமதி இருவரும் ஆர்ட்ஸ் குரூப்பில் அட்மிஷன் போட்டனர்.
வரும் வழியில் சிவராமன்,கங்கா இந்த குரூப் எடுத்தா டீச்சர் ட்ரெயினிங் படிக்கலாம் தானே?
படிக்கலாம்ப்பா
இல்ல நீ டீச்சர் சொல்ற மாதிரி சயின்ஸ் குரூப் எடுத்துக்கவே
இல்லப்பா வேண்டா. யாருமே நல்ல மார்க் வாங்கலப்பா.நான் நிறைய பேர் கிட்ட விசாரிச்சிட்டுதான்,
இந்த குரூப் எடுத்திருக்கேன்.
சரி கங்கா ஒரு ரெண்டு வருஷம் படி அப்பறோம் நான் உன்னை டீச்சர் ட்ரெயினிங் சேர்த்து விடறேன்.
சரிப்பா
“முருகா!என்னை எப்படியாச்சு ஒரு டிகிரி படிக்க வெச்சுரு” என வேண்டிக் கொண்டாள்.
அவள் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ, கவர்மென்டுக்கு கேட்டு விட்டது.
சிவராமனுக்கு எழுத படிக்க தெரியா விட்டாலும்,தினசரி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள பிரபல நாளிதழை வாங்கி கங்காவை படிக்க வைத்து தெரிந்து கொள்வார்.
பழைமை விரும்பி என்றாலும் புதியதில் அப்டேட்டாக தன்னை வைத்துக் கொள்வார். டிவியிலும், ரேடியோவிலும் செய்திகளை கேட்டுக் கொண்டாலும், நாளிதழ் வாங்கியும் அதில் உள்ளதை தெரிந்து கொள்வார்.
காலை வழக்கம் போல பேப்பர் வந்தது. கங்கா படிக்க ஆரம்பித்தாள். இனிவரும் கல்வியாண்டு முதல் பனிரெண்டாம் வகுப்பு முடித்த உடனே டீச்சர் ட்ரெயினிங் சேரும் முறை ரத்து செய்யப்படுகிறது.ஒரு டிகிரி முடித்த உடன் ஒரு வருட பி.எட் சேர்ந்து கொள்ளலாம் என அச்சிடப்பட்டிருந்தது.
கங்காவிற்கு ஒரே குஷி.ஆனால் சிவராமனுக்கு முகமே வாடிப் போனது. இந்த இரண்டு வருடம் அதன்பின்,இன்னமும் ஒரு இரண்டு வருடம் படிக்க வைத்துவிட்டு, ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் முடித்து விடலாம் என எண்ணி இருந்தார். தற்போது அவரது ஆசை நிராசை ஆனது போல் இருந்தது.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!