Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 15

ஒருவாரத்திற்கு பிறகு அன்றுதான் பார்லர் சென்றிருந்தாள் சக்திப்ரியா முன்பே கல்யாணம் சீமந்தம் போன்ற விசேஷங்களுக்கு வந்த புக்கிங்கை திருமணம் என்று கூறி மறுத்திருந்தாள் மற்றபடி பார்லர் இயங்கியது.

 

இவள் காலை வந்தவுடனே புதிதாக வந்த புக்கிங் பற்றி விசாரித்தாள் கொஞ்சம் அதிகமே வந்திருந்தது இப்பொழுதெல்லாம் பெரிதாகப் பணத்தை பற்றிக் கவலை கொள்வதில்லை பலரும்,  வாழ்க்கையின் கனவு நாள் ஆகையால் அதை மிகச் சிறப்பாகவே செய்ய நினைக்கின்றனர்.


Advertisement

 

இவர்களிடம் கொஞ்சம் ரேட் கூடுதல் என்று தெரியும் இவர்களின் வேலையும் தரமானது தானே ஆகையால் அன்றைய நாளைச் சிறப்பாக மாற்றப் பிரியமை பலரும் நாடினர்.

Advertisement

Advertisement

 

“கொஞ்சம் டைட் ஒர்கா இருக்கும் போல” என்றாள் ப்ரியா.

Advertisement

 

“ஆமாக்கா இதுல ரொம்ப முக்கியமானது நம்ம ஆர்.வீ  குரூப்ஸ் வீட்டு விஷேஷம் தான் அவங்க மக கல்யாணம் அந்தப் பொண்ணு பேசினுச்சு,  அக்காக்கு கல்யாணம் இன்னும் மூணு நாள்ல வந்திடுவாங்கன்னு சொல்லியிருக்கோம்”.

 

“நிச்சயம் அடுத்த மாசம் கல்யாணம் மூணு மாசம் கழிச்சு போலக் கல்யாணத்துக்கு மட்டும் ஒரு வாரம் கேட்டிருக்காங்க, நான் கூட்டி கழிச்சு பார்த்தேன் எப்படியும் லட்சத்துக்கு மேல போவுதுக்கா” என்றாள்.

 

“ஹ்ம்ம்” என்றவள் “அப்போ இன்னைக்கு அவங்க வீட்டுக்குப் போய் என்னென்னன்னு விசாரிச்சுட்டு பேசிட்டு வரலாம்” என்றவள் உடன் மூன்று பெண்களைத் தன்னோடு கிளம்பசொன்னவள் மற்றவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக்கொடுத்தாள்.

 

“அமர்” என்று அழைக்கத் தயங்கி தயங்கி வந்து நின்றான் ஒருவன் “ஸ்டேப் கட்டிங் கேட்டவங்களுக்கு  லேயர் கட்டிங் வெட்டியிருக்க என்ன அமர் இது,  நம்ம மேல நம்பிக்கை போச்சுன்னா எல்லாமே போச்சு அவங்களை கன்வின்ஸ் செஞ்சு அனுப்ப எவ்ளோ கஷ்டமாச்சு தெரியுமா”.

 

“தப்பு நம்ம மேல அதால காசு கூட வாங்கல எல்லா வேலையிலும் தப்பு நடக்கும் இல்லன்னு சொல்லல ஆனா இவ்ளோ கவனம் இல்லாம என்ன செஞ்ச நீ இது முதல் தடவை அதால விடுறேன் அமர் திரும்ப நடக்க கூடாது ஓகே” என்க.

 

“தேங்க்ஸ்க்கா கண்டிப்பா நடக்காதுக்கா” என்றான்.

 

“குட் எல்லார்க்கும் தான் அவங்க என்ன சொல்றாங்கன்னு சரியா கேளுங்க இல்ல டவுட் இருந்தா என்னைக் கூப்பிடுங்க நான் பாத்துக்குறேன் புரிஞ்சமாதிரி தலை ஆட்டி உங்க இஷ்டத்துக்கு செய்யக் கூடாது” என்றவள் ஆட்டோ பிடித்து மற்ற மூவரையும் அனுப்பிவிட்டு இவளுடைய வண்டியில் இவளும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றாள்.

 

கொஞ்சம் பெரிய குழுமம் அவர்களுடையது தீம் வெட்டிங் என்றார்கள் கோவாவில் வைத்துத் திருமணம் இங்கே வரவேற்பு வடநாட்டு திருமண முறை பினற்றி அதைபோல அனைத்திற்கும் தக்க மேக்கப் வேண்டும் என்றாள் பெண்.

 

“பணத்தை பத்தி கவலை இல்ல நீங்க எனக்குப் பெஸ்ட் காமிங்க” என்றாள்.

 

அதன்படி சேலை கட்டுமுதல் தலை அலங்காரம் மேக்கப் மருதாணி டிசைன் என்று அனைத்தும் காண்பித்து பேசி “ஓகேன்னா கால் பண்ணுங்க” என்று கூறி வந்துவிட்டாள்.

 

இவர்களிடம் மட்டுமில்லை இதுபோல் இன்னும் பலரிடம் விசாரித்திருப்பார்கள் சக்திப்ரியாவுக்கு பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை அவர்கள் வசதிக்கு எங்கேயிருந்து வேண்டுமானாலும் கூட்டிவருவார்கள் என்றாலும் அவளுடைய திறமைகளைத் திறம்படவே விலக்கிவிட்டு வந்திருந்தாள்.

 

ஒரு வாரம் அப்படியே கடந்தது இப்பொழுது பார்லர் செல்வதால் காலையிலே மதிய சமையலையும் முடித்துப் பேக் செய்து முத்துவின் கையில் கொடுத்துவிடுவாள் இந்த வாரத்திலே இரண்டு திருமணங்கள் இரண்டு ரிசப்ஷன் இருந்தது.

 

 

அன்று காலை ஒரு திருமணத்திற்கு செல்லச் சத்தம் காட்டாமல் அவள் தயாராக அவளையே பார்த்து அமர்ந்திருந்தான் சிவபாலன் நேரம் அதிகாலை ஐந்து ஆகியிருந்தது.

 

“எத்தனை மணி முகூர்த்தம்” என்ற சத்தத்தில் பதறிக் கையில் இருந்த ட்ரையரை தவற விட்டாள் சக்திப்ரியா.

 

“மச் இங்க யாரு வரப்போறா நான்தானே” என்றவன் “எப்போவும் இந்த மாதிரி காலைல போகணும்னா தனியாவா போவ” என்க.

 

“இல்ல அப்பா வருவார்”.

 

“இன்னைக்கும் வராரா” என்றான் ஒருமாதிரி குரலில்.

 

“ஹ்ம்ம் நேத்தே சொல்லிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவார்” என்றாள்.

 

“அப்போ என்ன எதுக்குடி கட்டின” என்று சீறியவனை அவள் விழி விரித்துப் பார்க்க.

 

“எல்லாத்துக்கும் அப்பாவைக் கூப்பிடுறவ அங்கேயே இருக்க வேண்டியதுதானே எதுக்கு கல்யாணம்” என்றான்.

 

“பாருடா உள்ள பொகையுது போலவே அட அட இது கூட நல்லா இருக்கே” என்று சிரித்தவள் அலைபேசியை எடுத்து மகேந்திரனை அழைக்க.

 

“இதோ கிளம்புறேன் பாப்பா” என்றார் அவர்.

 

“இங்க பாருங்க மகேந்திரன் நான் தான் ஏதோ சின்னப் புள்ள தெரியாம உங்களைக் கூப்பிட்டேன் நீங்க என்ன சொல்லியிருக்கணும் இங்க பாரு பிரியாமா உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு புருஷர் இருக்கார் இனிமே உன் தேவையை அவர்கிட்ட தான் கேக்கணும்”.

 

 

“அவர் தான் உனக்குக் கண்கண்ட தெய்வம்,  காத்தே புகாத அந்தக் கருப்பு ஜீப்புக்குள்ள மூச்சடைச்சுக்கிட்டு போகாம புல்லட்டுல அவர் பின்னாடி உக்காந்து மாப்பிளையை கட்டிக்கிட்டு நீ போறதை நான் கண் குளிர் பாக்கணும் அப்படின்னு எனக்கு அட்வைஸ் பண்ணியிருக்கணும்”.

 

“அதை விட்டுட்டு நான் கூப்பிட்டா உடனே டான்னு அஞ்சு மணிக்கு வந்திடுறேன் பாப்பான்னு பொறுப்பே இல்லாம சொல்றீங்க,  உங்களை நம்பி நான் கலயாணம் செஞ்சு புள்ள குட்டிய எப்படி  வளக்குறது” என்க.

 

“ஆண்டவா” என்று சிவபாலன் தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டான் அந்தப் பக்கம் மகேந்திரனுக்கு முகம் கொள்ளா புன்னகை,

 

“என்னடா மாப்பிளை நான் கூட்டிட்டு போகமாட்டேனான்னு கோபப்படுறாரா” என்க.

 

இதழ் கடித்து சிரிப்பை அடக்கியவள் “ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்றாள்.

 

“அடிதூள் நீ நடத்து டா” என்று அழைப்பைத் துண்டிக்க “நல்ல அப்பா நல்ல பொண்ணு” என்று தலையில் அடித்துக்கொண்டு போனார் பூரணி.

 

“கொஞ்சமாவே பேசமாட்டியா நீ அவர்கிட்ட என்னலாம் சொல்ற என்ன நினைப்பார்” என்றான் காட்டமாகவே.

 

“ஏழு மணிக்கு முகூர்த்தம்” என்றாள் அவள்.
“இம்சை இம்சை” என்றவன் வேகமாகக் குளித்துத் தயாராகி வந்தான் ஜீப்பின் சாவியை எடுத்தவன் அவளை ஒருமுறை திரும்பிப் பார்க்கக் குறுகுறுவென்று அவனைத்தான் அவளும் பார்த்தாள்.
“தோலை உரிச்சுடுவேன் வா” என்று முன்னே நடந்தான்.

 

“ச்ச ஜஸ்ட் மிஸ்” என்று சொல்லிக்கொண்டவள் அவனுடன் கிளம்பினாள் மண்டபத்தில் விட்டவன் “முடிஞ்சதும் கால் பன்னு” என்க.

 

“புல்லட் கொண்டுவருவீங்களா” என்றவளை பார்த்துக்கொண்டே கிளம்பிச்சென்றான்.

 

“இப்போ புல்லட் கொண்டுவருவாரா இல்லையா? முதல்ல வருவாரான்னு பாரு கடைசில ஆட்டோ பிடிச்சுதான் போகப்போற நீ” என்றது மனசாட்சி.

 

அவளுக்கு வேலைமுடிய ஒன்பதரை கடந்திருக்க ஆட்டோ வந்தது அழைத்துச் செல்ல “அட பாவி மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிருப்பாரோ” என்று புலம்பிக்கொண்டே வீட்டிற்கு சென்றாள்.

 

அவன் அலுவல் பார்க்கச் சென்றிருப்பான் என்று தெரியும் ஆகையால் அதை அவள் பெரிதாக எடுக்கவும் இல்லை காலை அவன் அப்படி கேட்டதே இன்னும் நெஞ்சின் அடி ஆழத்தில் தித்திப்பாய் நிறைந்து கிடந்தது.

 

 

சிறிது நேரத்திலே மீண்டும் கிளம்பி பார்லர் சென்றுவிட்டாள் அந்த வாரம் முழுவதுமே வேலை நிறைய இருந்தது அன்று ஒரு பேபி ஷோவ்ர் முடித்து வந்திருந்தாள் சக்திப்ரியா.

 

தலை வலி மண்டையை பிளந்தது எழுந்து சென்று காபி வைக்கவும் உடல் அசைய மறுத்தது,  நேரே வந்து ஹால் சோபாவில் அமர்ந்தாள் அங்குதான் அமர்ந்திருந்தார் பவுனுத்தாயி.

 

“இந்த வீட்டில என் பேச்சுக்கு ஏதாவது மதிப்பிருக்கா” என்றவர் தொடங்க.

 

‘இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் தெரியலையே ஆத்தா பவுனுதாயி ஒரு காபீ குடுத்துட்டு உன் கச்சேரியை ஆரம்பி’ என்று மனதில் அவள் நினைத்துக்கொண்டிருக்க.

 

அவள் நாசிக்கு நேரே கமகம வாசம் ஆச்சர்யத்தோடு விழிகளை விரித்தாள் சக்திப்ரியா அன்புக்கரசிதான் அவளுக்கான காபியோடு நின்றார்.

 

அவள் அவரையே பார்க்க “நீ வாங்கி வெச்ச பொருள்ல உன்னோட பால்லதானம்மா போட்டேன்” என்றார், அவள் இதழ்களில் புன்னகை.

 

“காலைல நானும் உங்க அம்மாவும் கோவிலுக்குப் போயிருந்தோம் பேசும்போது சொன்னாங்க எப்போவும் இதுமாதிரி நீ போய்ட்டுவந்தா உங்க அப்பா சூடா காபியோட நிப்பாராம்” என்க தலை ஆட்டிக்கொண்டாள்.

 

எப்பொழுதும் போலத் தந்தையின் நினைவில் நெஞ்சம் நெகிழ்ந்தது “என் பிள்ளைக்குத் தான் குடுக்க முடியல நீயாவது என் கையால இதை மட்டுமாவது குடிடா” என்றார் அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை வாங்கிக்கொண்டாள்.

 

“ஏண்டி இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் மாமியாரும் மருமகளும் என்ன நாடகம் போடுறீங்க” என்றார் பவுனு.

 

“ஸ்டார்ட் மியூசிக்” என்று அவரைப் பார்த்தாள் சக்திப்ரியா.

 

“கல்யாணம் ஆன குடும்ப பொண்ணு நேரம் கெட்ட நேரத்துல வெளில போறா வாரா இப்படி ஊர் சுத்தவா கல்யாணம் கட்டி வெச்சது அடக்க ஒடுக்கமா வீட்டில இல்லாம இது என்ன, அதோட இவ பாக்குறது ஒரு வேலையா முடி மழிக்குற வேலைக்கே இவளுக்கு இவ்ளோ பவுசு வெளில நாலு பேருகிட்ட சொல்ல முடியுமா இவ பாக்குற வேலைய” என்க.

 

குடித்த கப்பை கிழே வைத்தவள் “சொல்ல முடியாத அளவுக்கு நான் என்ன ரெகார்ட் டான்ஸ் ஆடவா போயிட்டு வரேன்” என்றாள் என்னதிது என்று அவர் இவளை முறைக்க.

 

“அப்புறம் என்ன சொன்னீங்க மழிக்குற வேலையா ஆமா அதுதான் ஏன் அதைச் செய்யாமதான் இருந்து பாருங்களேன் எல்லாரும் காட்டுவாசி மாதிரிதான் சுத்திட்டு இருக்கணும்,  இதோ உங்க பேரன் பொண்டாட்டிகிட்ட  கேளுங்க அவங்க நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் எனக்கு எவ்ளோ குடுத்தாங்கன்னு” என்றாள் ஷார்மியை பார்த்து.

 

அவள் அமைதியாக நிற்க “அட சொல்லுங்க ஷர்மி எவ்ளோ குடுத்தீங்க ஏதோ ம*** வேலைன்னு சொல்றாங்களே” என்றாள்.

 

“நிச்சயத்துக்கு இருபது கலையானதுக்கு முப்பது” என்றாள் அவள்.

 

“ஆத்தி” என்று நெஞ்சில் கைவைத்தார் பவுனுத்தாயி.

 

“இது இவங்க சொன்ன சிம்பிள் மேக்கப்க்கு,  ஆர்.வீ குரூப்ஸ் வீட்டு பொண்ணு கல்யாணத்துக்கு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் சொல்லிட்டு வந்திருக்கேன்” என்க இப்பொழுது அனைவருமே அதிர்ந்து பார்த்தனர் அவளை.

 

“என்கிட்டே பத்து பேர் வேலை செய்றாங்க அவங்களுக்கு சம்பளம்,  கட்டிடம் என்னோடதா இருந்தாலும் அதுக்கு கரண்ட் செலவு தண்ணி செலவு வாங்குற மேக்கப் பொருட்கள் செலவுன்னு மாசம் லட்சக்கணக்குல செலவு இருக்கு எனக்கு”.

 

“ஆனா நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவேன் என் பார்லர் லாபத்துல போகுதுன்னு ஏன்னு தெரியுமா இவ்ளோ செலவு செஞ்சும் என் கைல கணிசமான காசு நிக்குது இதெல்லாம் இப்படி வீட்டுல சும்மா உக்காந்துகிட்டு எல்லாரையும் வம்பு பேசிட்டு வாயைப் பாத்துகிட்டு இருந்தா வராது”.

 

“ஓடணும் உழைக்கணும் மத்தவங்கள ஏமாத்தாத வயித்துல அடிக்காத துரோகம் செய்யாத எந்த வேலையும் நல்ல வேலைதான் எனக்கு நான் செய்ற வேலை பெருமையானதுதான் என் வேலை என்னன்னே தெரியாம அதைத் தப்பா பேசாதீங்க சும்மா இருக்க மாட்டேன்” என்றவள்.

 

நடந்துகொண்டே “நான் உழைச்சு நான் சமைச்சு சாப்பிடும்போதே இவ்ளோ பேச்சு இவங்க சின்னப் பேரன் பொண்டாட்டி  மாதிரி வீட்டில வெட்டியா உக்காந்து சாப்பிட்டா என்ன பேசியிருப்பாங்க”  என்று சத்தமாகவே சொல்லிச்சென்றாள்.

 

உடனே ஷர்மியின் விழிகள் பவுனுத்தாயின் மீது யோசனையாகப் படிந்தது அன்று இரவே கணவனுடன் மல்லுக்கட்டி அடுத்தநாள் முதல் கதிருடன் கயர் பாக்டரி செல்லத் தொடங்கிவிட்டாள் ஷர்மிளா.

 

“என்ன சுகம் என்ன சுகம் கூட்டணியைப் பிரிச்சாச்சு” என்று மாமியாருக்கு பேடா கொடுத்து அதைக் காலை உணவோடு கொண்டாடினாள் சக்திப்ரியா.

 

தங்களை இப்படி அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறாளே என்ற கோபம் எரிமலையாய் உள்ளுக்குள் கனன்றது கவிதாவுக்கும் பவுனுதாயிக்கும்.

 

அன்றும் ஒரு திருமணம் முடித்து அவள் வர அன்புக்கரசி காபி போட்டுக்கொண்டிருந்தார் அங்கே வந்த பவுனுத்தாயி “அன்பு என் படுக்க விரிப்புல ஏதோ கரை இருக்கு வேற மாத்து இப்போவே” என்க.

 

“இத பிரியாகிட்ட குடுத்துட்டு வரேன் பெரியம்மா” என்றார் அவர்.

 

அங்குவந்த கவிதா “அவளே வந்து எடுத்துப்பா நீங்கப் போங்க” என்றாள்.

 

அவரும் பவுனுதாயுடன் செல்லத் தோட்டத்தில் முகம் கழுகிக்கொண்டிருந்தாள் சக்திப்ரியா அவள் வருவதற்குள் அந்த டம்பளரை அப்படியே ஸ்டவ்வில் வைத்து அடுப்பை எரிய விட்டாள் கவிதா.

 

ப்ரியா வரும் அரவம் கேட்டதும் அடுப்பை அனைத்தவள் “சூடு போகாம இருக்க அடுப்பு மேல வெச்சிருக்காங்க எடுத்துக் குடி” என்றாள், அவளும் பெரிதாக யோசனையெல்லாம் செய்யவில்லை அதை எடுக்கக் கை மொத்தமாகப் பழுத்துவிட்டது.

 

“அம்மா” என்று வலியில் கத்தி டம்பளரை தவறவிட்டாள் அடித்துபிடித்து ஓடிவந்தார் அன்புக்கரசி.

 

“ஐயோ என்னடா என்னாச்சு” என்றவர் அவள் கையைப் பார்த்துப் பதறிவிட்டார்.

 

பைப்பை திறந்துவிட்டு கையைக் காட்டினார் வலியில் துடித்துவிட்டாள் சக்திப்ரியா,  கவிதாவுக்கு இப்பொழுது கொஞ்சம் பயம் எட்டி பார்த்தது மெல்ல அறைக்கு நழுவிவிட்டாள்.

 

ஹாஸ்ப்பிட்டல் போகலாமா என்ற அன்புக்கரசியிடம் மறுத்துவிட்டு அறைக்குச் சென்றவள் சுருண்டு படுத்துவிட்டாள்,  இது போன்ற நாட்களில் மதிய உணவை வீடு வந்தபின் சமைத்து எடுத்துக்கொண்டு ஆபிஸ் சென்று கொடுத்துவிட்டு அவள் பார்லர் செல்லுவாள் இன்று நேரம் ஒருமணியை கடந்தும் அவள் வராமல் போக முதல்முறையாக அவனே அவளை அழைத்தான்.

 

வலி ஒருபுறம் சோர்வு ஒரு புறம் என்று வெகுநேரம் எரிச்சலில் அழுது தளர்ந்தவள் உறங்கியிருந்தாள்,  இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்காமல் போக முதலில் முத்துவை வீட்டிற்கு அனுப்ப யோசித்தவன் தானே கிளம்பினான்.

 

கீழே அவளைக் காணவில்லை யோசனையாக அவள் வாசல் நோக்கி நடக்க “தம்பி” என்று அழைத்தார் அன்புக்கரசி அவன் நின்று திரும்பிப் பார்க்க “ப்ரியாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல” என்றதும்.

 

“என்னாச்சு” என்றான் ஒருவித பதட்டத்தோடு.

 

“அது…” என்று தயங்கியவர் நடந்ததை சொல்ல அவனுக்குப் புரிந்துவிட்டது கவிதாவின் வேலை என்று

 

“ச்சீ என்ன செயல் இது” கவிதாவின் அறைநோக்கி சென்றவன் கதவை வேகமாகத் தள்ளித் திறந்தான்.

 

அவள் பதறி எழ “என்கிட்டே கேட்டீங்க செய்றேன் சொல்லித்தான் இந்தக் கல்யாணம் அதோட நீங்க ஒதுங்கிக்கோங்க, ஏதாயிருந்தாலும் அது என்னோட இப்போ அவ என் பொண்டாட்டி அவளைச் சீண்டுறது காயப்படுத்துறது எதுவும் இருக்க கூடாது திரும்ப இந்தமாதிரி நடந்துச்சு அப்புறம் என்னை நீங்க வேற மாதிரி பாக்கவேண்டி வரும்” என்றவன் வெளியேற அதிர்ந்து போய் நின்றாள் கவிதா.

 

கிட்டத்தட்ட ஓடிச் சென்றான் அறைக்கு அவள் கிடந்த கோலமே அவனைத் தாக்கியது அருகில் சென்றவன் “சக்தி” என்றான் அத்தனை தவிப்போடு அவளுக்குத்தான் கேட்கவில்லை.

 

கையை மெல்ல பற்றி உயர்த்தி பார்த்தான் கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவனால், அவளைக் கன்னம் தட்டி எழுப்பினான் முகத்தைச் சுருக்கிக்கொண்டு விழிகளைத் திறந்தவள் கண்டது கண்களில் பெரும் தவிப்பை சுமந்து நின்ற கணவனைத்தான்.

 

அவள் எழுந்து அமர “வா ஹாஸ்ப்பிட்டல் போலாம்” என்றான் “இல்ல…” என்றவள் ஏதோ சொல்லவரா.

 

“செவுல பேக்கபோறேன் வாடி” என்று மற்றைய கையைப் பிடித்து இழுத்து சென்றான் மருத்துவமனை சென்று திரும்பி வருகையில் அவனையேதான் பார்த்திருந்தாள் சக்திரப்ரியா.

 

அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை  நேரே அவள் வீட்டில் கொண்டுவந்து நிறுத்தினான் வண்டியை.

 

“இங்க ஏன்” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன் “அங்க இருந்தா ஏதாவது நோண்டிட்டே இருப்ப ஒரு நாலு நாள் ஹோட்டல்ல சாப்பிட்டா நாங்க செத்து போய்டமாட்டோம் இறங்கு” என்றான்.

 

அவள் முகத்தை உர் என்று வைத்திருக்கச் சத்தம் கேட்டு வெளியில் வந்த பூரணி “வாங்க மாப்பிளை வாங்க” என்றவர் “பிரியமா வாடா” என்றார் ஆசையாக.

 

“நீதானம்மா சொன்ன இனிமே நானும் என் புருஷனும் நிம்மதியா இருக்கனும் நீ வராதன்னு இப்போ உன் மாப்பிளையை பார்த்ததும் அப்படியே பேச்சை மாத்துற நான் வரமாட்டேன் எனக்கும் புருஷன் இருக்கார் அவருக்கும் வீடு இருக்கு” என்று முகத்தை வெட்ட இவனுக்கு உதடுகள் சிரிப்பில் விரிய துடித்தது.

 

எப்போவும் எல்லாரையும் அதிர்ச்சியில் வெக்கணும் போல இவளுக்கென்று எண்ணியவன் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

 

“அடிப்பாவி” என்று வாயில் கைவைத்த பூரணி சங்கடமாகச் சிவபாலனை பார்த்தார்.

 

“பாப்பா வாடா” என்ற தந்தையின் குரல் கேட்டதும் உடனே இறங்கி தந்தையை கட்டிக்கொண்டாள் ப்ரியா பூரணி இருவரையும் விழியால் எரித்துக்கொண்டிருக்க அருகில் வந்த சிவபாலன் மனைவி ஷாலில் சுற்றி  ஒளித்துவைத்திருந்த கையை எடுத்து அவர்களுக்குக் காட்டி.

 

“கொஞ்சம் காயம் இருக்கு அங்க இருந்தா சும்மா இருக்க மாட்டா இங்க இருக்கட்டும் ரெண்டு நாள் நானே வந்து கூட்டிட்டு போறேன்” என்க.

 

மகளின் கைப்பார்த்த பெற்றோர் இருவரும் பதறிவிட்டனர் மகேந்திரன் விழிகள் கலங்கிவிட்டது “என்னடா இது” என்று கையில் ஊதிக்கொண்டிருந்தார்.

 

அங்கு நடந்த எதையும் கூறாமல் தான்தான் தெரியாமல் சூடான பாத்திரத்தை எடுத்துவிட்டதாகக் கூறிவிட்டாள் பிரியா “பாத்துக்கோ” என்றவன் கிளம்பிவிட்டான்.

 

உள்ளே அழைக்க “இல்ல கூப்பிட்டு போக வரும்போது வரேன் வேலை இருக்கு” என்று சென்றுவிட்டான்,  மகளை ஆறுதல் படுத்தி அத்தனை கவனமெடுத்து பார்த்துக்கொண்டனர் பெற்றோர்.

 

சக்திப்ரியாவுக்கு கணவனின் நினைவே அவனின் விழிகளில் தெரிந்த தவிப்பு அது அவ்வளவு பிடித்தது கூடவே இருக்கலாம்ல என்று அவள் மனம் முரண்டியது.

 

“எதுக்கு உன் இம்சை தாங்கமுடியாம அவன் தெறிச்சு ஓடவா” என்றது மனசாட்சி.

 

அதோடு ஒரு கைவைத்துக்கொண்டு எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை உடை மாற்றுவதுகூட முடியவில்லை வாழத்தொடங்கிய பிறகு அதுவேறு இப்பொழுது அவனிடம் இதையெல்லாம் எப்படி கேட்க,  கேட்பதில் அவளுக்கு ஒன்றுமில்லை அவன்தான் தெறித்து ஓடிவிடுவான் என்ற எண்ணமே  சிரிப்பை வரவைத்தது.

 

மூன்றுநாட்கள் சென்று அழைக்க வந்திருந்தான் காயம் ஆறியிருந்தது கொஞ்சம் தயக்கத்தோடு உள்ளே வந்தான், தன் முன்னே நிரப்பட்ட பலகாரங்களைக் கண்டு விழி பிதுங்கியது கொஞ்சமாக எடுத்துக்கொண்டான் அன்று இரவுணவை பூரணியே கொடுத்தனுப்பிவிட்டார்.

 

நல்ல அசதி இரவு இருவருக்கும் உணவைக் கொடுத்தவள் பாத்திரத்தைக் கழுக எடுக்கப் பிடுங்கிக்கொண்டான் முத்து “கொஞ்ச நாளைக்கு உன் வீர சாகசத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வை பொறுமையா எடுக்கலாம்” என்றவன் அவனே கழுகி வைத்துவிட்டு சென்றான்.

 

சிவபாலன் சென்று பார்த்தபோது அதே போஸில் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள் கதவை அடைத்தவன்  மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளைத்தான் ரசித்திருந்தான்.

 

இதழ்களில் புன்னகை விரிந்தது “கும்பகர்ணி பெட்ட பாத்துட்டா போதும் நீட்டிட்டு படுத்திட வேண்டியது இதுல அம்மணிக்கு ஆறு புள்ளையாம் பேச்சு மட்டும்தான்” என்று அவளின் மூக்குத்தியை மெல்ல வருடியவன்.

 

“என்னடி செய்ற என்ன” என்றான் ரசனையாக.

 

தலையணையை இறுக்கமாகப் பற்றியிருந்த அவள் வலது கையை எடுத்துத் தன் தாடிக்குள் நுழைத்தான், விரல்களால் தேடி துழாவி அதை இறுக்கமாகப் பற்றி இழுத்துக்கொண்டாள் சக்திப்ரியா.

 

அவன் இதழ் கடித்து இமை மூடி அந்த வலியைச் சுகமாக ஏற்றான் “என்னடி பிடிச்சுது உனக்கு  என்கிட்டே உன்னைவிட வயசு கூட வசதி கம்மி,  அப்பன் இல்லாதவன் அம்மா இருந்தும்…” என்றவன் அடைத்த  தொண்டையை செருமி “கிட்டத்தட்ட அநாதை”.

 

“யாரவது வெட்டி வீசிட்டு போனாக்கூட ஏன்னு கேக்க நாதி இல்லாதவன் உரிமையா ஒருபிடி சோறு சாப்பிட்டதில்லை யார் வீட்டுலயும்,  சாப்பிடுறயான்னு கூடக் கேக்க யாருமில்லாம  இதே வீட்ல இருபது வருஷமா இருக்கேன் வந்த ரெண்டே நாள்ல என் வயிறை நிறைச்சிட்ட”.

 

“ஆனா இந்த முரடன் உனக்கு வலியைக் கொடுத்திருக்கேன்” என்றவனின் விரல்கள் மெல்ல அவள் கன்னத்தை வருடியது.

 

“இந்தக் கடனையெல்லாம் தீர்க்க முடியாது தீர்க்கவும் மாட்டேன் இதுதான் இப்படித்தான் உன் அன்புன்னா அது காலம் முழுக்க எனக்கே வேணும்,  உன்கிட்ட எப்போவுமே தீராக் கடனாளியாவே இருந்துக்குறேன்”  என்றவனை உறக்கம் அண்டவேயில்லை

 

அவள் கரங்கள் பிடிமானம் விட்டுக் கீழே நழுவ விழும்முன் பிடித்தவன் மீண்டும் தலையணையில் அவள் வலக்கரத்தை வைத்தான் எழுந்து வெளியில் சென்றவன் பெருமூச்சு ஒன்றை விட்டுப் புருவங்களை அழுந்த நீவினான்,  சுந்தரேசன் என்ற மனிதர் அவரைப் பற்றிய தேடலில்தான் இந்தச் சில மாதங்கள் கடக்கிறது அவனுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!