Skip to content
Post Views: 555
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 23
கங்கா தனக்கு அடுத்த மாதம் திருமணம் என அருளிடம் பொய்யுரைத்தாள்.இதோடு அவன் விலகி விடுவான் என தப்பு கணக்கு போட்டுவிட்டாள்.
காலை வழக்கம் போல வகுப்பறையில் நுழைந்த கங்காவிற்கு ஒரே ஆச்சரியம்!நம் வகுப்புதானா இது என..
குழந்தைகள் கைகளில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காயின்களை வைத்துக் கொண்டு, தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
Advertisement
இவளை பார்த்தும் மேம் என ஓடி வந்து, அவளது பேக்கை கூட கழற்ற விடாமல் சூழ்ந்து கொண்டனர்.
இந்த காயினை பாருங்க மேம் இது கொல்கத்தால தாயாரிச்சுருக்காங்க, மேம் இது மும்பை என ஆர்ப்பரித்தனர்.
அவர்களின் ஆர்வம் கங்காவிற்கு பெருமையாக இருந்தது.நேற்று இந்திய காயின்களை வைத்து கூட்டல், கழித்தல் பாடம் நடத்தியவள்,பொது அறிவிற்காக அது எங்கு அச்சிடப்படுகிறது என சொல்லித் தந்தாள்.
Advertisement
நூறு,ஐம்பது,ஐந்நூறு நோட் எல்லாம் ரிசர்வ் பேங்க்ல அச்சிட்டு தருவாங்க.
Advertisement
காயின்ஸ் எல்லா நம்ம இந்தியாவுல நாலு முக்கிய இடத்துல தயாரிக்கறாங்க.நீங்க இன்னைக்கு வீட்டுக்கு போய் அம்மா கிட்ட காயின்ஸ் வாங்கி, அதுல இருக்கறே இயருக்கு கீழே பாருங்க. அங்கே டைமண்ட் சேப் இருந்தா அது மும்பைல தயாரிக்கறாங்க.
ஸ்டார் சேப் இருந்தா அது ஹைதராபாத்.
ஒரு சின்ன புள்ளி இருந்தா நொய்டா.
அப்ப எதுவுமே இல்லைனா என்னங்க மேம் அர்த்தம்?
Advertisement
எதுவுமே இல்லைனா அது கொல்கத்தாலே தயாரிக்கறாங்கனு அர்த்தம் என சொல்லி தந்தாள்.
அதை இந்த அளவு ஆர்வமாக தங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் என கங்கா எதிர்பார்க்க வில்லை.
எல்லோரும் தாங்கள் கொண்டு வந்த காயின்களை இவளிடம் விளக்கமாக கூறி விட்டே நகர்ந்தனர்.
சரி எல்லாரும் பத்திரமா காயின்ஸை வீட்டுல கொண்டு போய் கொடுக்கனும் சரியா என்றாள்.
‘சரிங்க மேம்’ என்றனர் மழலை மொழியில்..
மாலை வீடு திரும்ப பஸ்ஸிற்காக உடன் பணிபுரியும் தாரணியுடன் காத்திருந்தாள்.இருவரும் ஒரு வயதுடையவர்கள்.
ஆமா அடிக்கடி ஃபோன் பேசிட்டே இருக்கீங்களே யாருகிட்ட? என்றாள் கங்கா.
தாரணிக்கு முகம் முழுவதும் வெட்கம், தெளசன்ட் வாட்ஸ் பல்பு எரிந்தது.
பின் ஒருவழியாக தன் காதல் கதையை சொல்லி முடித்தார்.
நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் வரைக்கும் ஒன்னா படிச்சோம். அப்பறோம் வேற வேற காலேஜ் படிக்க போய்ட்டோம்.
டெய்லியும் பஸ் ஸ்டாப்ல மீட் பண்ணிக்குவோம்.
ஒருநாள் பஸ் ஸ்டாப்ல என்ன வெயிட் பண்ண சொன்னாரு . எனக்கு முதல்லையே தெரியும் அவரு ப்ரொபோஸ் பண்ண தான் வராருனு.
நான் பஸ் ஸ்டாப்ல இறங்கி வெயிட் பண்ணிட்டு இருக்கே. இவரும் என்ன பாத்து நேரா நடந்து வந்தவரு திடீருனு திரும்பி போய்டாரு.
நான் விடவே இல்லையே.பின்னாடியே போய்,நீ ப்ரோபோஸ் பண்ண தானே வந்தே அப்பறோம் ஏன் எதும் சொல்லாம போறேனு கேட்டே.
எனக்கு பயமா இருக்குனு அவரு சொன்னாரு. எனக்கு ஒரே சிரிப்பு. அப்பறோம் அப்படியே எங்க காதல் போய்ட்டு இருக்கு.
லவ் பண்றது தப்பு இல்ல.அதுவும் டீச்சரா இருந்துட்டு இதெல்லா பண்ணலாமா?என்றாள் கங்கா.
சிரித்து கொண்டே, காதல் தப்பில்லை அது கண்ணியமான ஒன்னு .எனக்கும் பர்ஸ்ட் பயமா தான் இருந்துச்சு. இப்போ வரைக்கும் எங்க வீட்டுல யாருக்கும் தெரியாது.ஆனா எனக்கு அவரே ரொம்ப புடிச்சு இருந்துச்சு.
ரெண்டு வீட்டுலையும் சொல்லி சம்மதம் வாங்கிதான் கல்யாணம் பண்ணுவோம்.
ஒருவேளை வீட்டுல ஒத்துக்கலனா என்ன பண்ணுவீங்க?ஒரு நிமிடம் அருள் அக்கா ஓடி வந்துருனு சொன்னது நினைவில் வந்தது கங்காவிற்கு.
நிச்சயம் ஓடி எல்லா போக மாட்டோம். ஸ்ட்ராங்க நின்னு அம்மா அப்பா சம்மதத்தோட தான் மேரேஜ் பண்ணுவோம் என்றார்.
அவரது திடமான பேச்சு கங்காவிற்கு பிடித்திருந்தது.அதோடு ஒரு பெண் தனக்கு பிடித்தவனுக்காக என்னவெல்லாம் செய்கிறாள் என யோசித்தாள்.
அன்றைய சினிமா படங்களில் எல்லாம் ஆண்தான் பெண்ணை சுற்றி சுற்றி வருவதாக காட்டப்படும்.இன்று தாரணியின் கதை வித்தியாசமாக தோன்றியது.தன் மனம் கவர்ந்த ஒருவருக்காக தானே முன்னின்று தன் மனதில் உள்ளதை சொல்லும் தைரியம் எல்லாம் இதுவரை அவள் கேள்வி படாத ஒன்று.
இந்த நினைவுகளோடு வீடு வந்தவளுக்கு மாலை டியூசன் பிள்ளைகள் தயாராக நின்றனர். அவர்களுக்கு பாடம் சொல்லித் தந்தாள்.
ஒரு சுட்டிப் பையனை எவ்வளவு முயன்றும் எழுத வைக்க முடியவில்லை.
கெளசியும் கூட பொறுமையாக சொல்லி கொடுத்துப் பார்த்தாள்.
‘ம்கூம்’ கங்காவிற்கு கோபம், இரண்டு அதட்டல் போட அழ ஆரம்பித்து விட்டான்.
மற்ற குழந்தைகளும் படிக்காமல் அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
லட்சுமி சமையல் வேலையை விட்டுவிட்டு வந்து, அந்த பொடியனுக்கு சாக்பீஸ் எடுத்து நிலத்தில் எழுதி காட்ட, பவ்யமாக எழுத ஆரம்பித்துவிட்டான்.
வீடு திரும்பிய சிவராமனை இந்த காட்சி வரவழைத்தது.
அவிநாசியப்பன் மகளே!உன்னோட ரெண்டாவது படிப்பு இப்படி வேல செய்யும்னு தெரிஞ்சுருந்தா நான் கங்காவுக்கு பதிலா உன்னை படிக்க வெச்சு டீச்சர் ஆக்கிருப்பனே என நக்கல் பேசினார்.
இன்று தன் வாழ்நாளின் கருப்பு தினம் என அறியாமல் பள்ளிக்கு சென்றாள் கங்கா.
மாலை நான்கு மணி நல்ல மழை. ‘வீட்டில் இருந்து ஃபோன்’ என கங்காவை ஆபிஸ் பாய் வந்து அழைத்தான்.
என்னவாக இருக்கும்? என யோசித்தவாறே சென்றாள்.
ஃபோனில் லட்சுமி அழுது கொண்டே, “கங்கா, அருள் ஃபோன் பண்ணி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கனும், அதை அப்பா கிட்ட சொல்ல நீ பயந்துக்கறேனு சொல்லுச்சு.
நான் அப்பா வந்ததும் சொல்லிட்டே என்றார் அப்பாவியாக..
கங்காவிற்கு உலகமே சுழல்வது ஒரு நொடி நின்றது போல் இருந்தது.அம்மா என்ன சொல்றே?அவுங்க சொன்னா உனக்கு அறிவு இல்லையா?அப்பா பத்தி தெரியும் தானே.என்கிட்டே இரு வார்த்தை இது உண்மையானு நீ கேட்காம எதுக்கு அப்பா கிட்ட சொன்னே.
எனக்கு அருள் அப்படி சொன்னதும் அப்பாவ நினைச்சு பயமா இருந்துச்சு அதா அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டே.
அப்பா,உன்னை வீட்டுக்கு வந்தா கண்டதுண்டமா வெட்டி எரியறே பாருனு கோபமா சொல்லிட்டு போய்ருக்கு கங்கா என்றார்.
நீ என்ன ஆனாலும் வீட்டுக்கு மட்டும் வந்தராதே கங்கா,அப்பா கோபத்துல உன்ன எதாச்சும் பண்ணிறே போது…
வீட்டுக்கு வரமே நான் எங்கம்மா போறது? என்ன நடந்தாலும் பரவா இல்ல நான் வீட்டுக்கு வரே.அப்பா அடிச்சாலும் பரவா இல்ல நான் வாங்கிக்கறே.
கெளசி போனை வாங்கி,கங்கா இது விளையாட்டு இல்ல.அப்பா ரொம்ப கோபமா போய்ருக்கு.உன்ன ஏதாச்சு செஞ்சு அப்பா ஜெயிலுக்கு போகனுமா? என்றாள் பழைய நினைவுகளின் பயத்தால்…
கங்காவிற்கும் சிவராமனை பற்றி தெரியுமே..கெளசி சொல்வது போல் ஏதாவது விபரீதம் ஆகி விடுமோ?என பயந்தாள்.
கெளசி அம்மா ஃபோன்ல அருள் நெம்பர் இருக்கும் அது சொல்லு என அருகில் இருந்த பேப்பரில் குறித்துக் கொண்டாள்.
பின் உடன் பணிபுரியும் தோழியிடம் விவரம் சொல்லி அவர் ஃபோனை வாங்கி அருளிடம் கேட்க…
அவன் ரொம்ப கூலாக ஆமா சொன்னே எனக்கு நல்லா தெரியும் கங்கா உனக்கு என்ன பிடிச்சிருக்குனு.ஆனா உங்க அப்பாவை பாத்து நீ பயப்படறே அதான் உங்க அம்மா கிட்ட நம்ம விஷயத்தை சொல்லி,உங்க அப்பா கிட்ட சொல்ல சொன்னே.
நான் எப்போ உங்களை பாத்து காதலிக்கறேனு சொன்னே?உங்கனாலே எங்க வீட்டுல எவ்வளவு குழப்பம் தெரியுமா.வீட்டுக்கு கூட போக முடியாத சூழ்நிலையிலே நான் இருக்கே.
என்ன கங்கா சொல்றே உனக்கு என் மேலே விருப்பம் இல்லையா?
இல்லைங்க..
என்னை மன்னிச்சிடு கங்கா உன் மனசுல இருக்கறது தெரியாம நான் உங்க அம்மாகிட்ட வேற சொல்லிட்டே. இப்போ உங்க வீட்டுல என்னால தானே பிரச்சனை.நானே அதை சரி பண்றே.
நீ கிளம்பி கோயமுத்தூர் ல இருக்குற எங்க அக்கா வீட்டுக்கு வா.எங்க அக்கா மாமா வோட வந்து உங்க வீட்டுல பேசி நாங்க உன்னை விட்டுட்டு வரோம் என்றான்.
என்னால அவ்வளவு தூரம் எல்லா வர முடியாது.நீங்க உங்க அக்கா மாமாவ கூட்டிட்டு இங்க வாங்க
சரி நா எங்க அக்காகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்.
சிறிது நேரத்தில் ஃபோன் வந்தது. இந்த முறை அவன் அக்கா பேசினார்.கங்கா உங்க அப்பா ரொம்ப கோப படுவாரு போல தெரிது.நாங்க மூனு பேரும் மட்டும் வந்து அங்க ஒன்னும் பண்ண முடியாது.நா ஊருலே இருக்கறே எங்க அப்பா அம்மா கிட்ட விவரம் சொன்னே அவங்க கிளம்பிட்டாங்க.
நீ இங்க கிளம்பி வா அவங்களும் வரட்டும்.நாங்க உன் மேலே எந்த தப்பும் இல்லைனு உங்க அப்பாகிட்ட சொல்லி விட்டுட்டு வறோம் என்றார்.
கங்காவிற்கு ஒரே குழப்பம் அங்கே போவதா வேண்டாமா என.. கெளசியிடம் ஃபோனில் நடந்ததை சொல்ல.. அவளும் லட்சுமியும் அருள் அக்காவிடம் பேசினர்.
கங்கா மேலே எந்த தப்பும் இல்ல.எங்க வீட்டு பெரியவங்க வந்ததும் பத்திரமா அவள உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வறோம் என தேன் வடிய பேசினர்.
கங்காவும் அவர்கள் வார்த்தையை நம்பி அங்கே போக முடிவெடுத்தாள். கையில் பணம் ஏதும் இல்லை.ஃபோன் இரவலாக கொடுத்தவரிடம் ஐம்பது ரூபாய் கடன் வாங்கி கொண்டு கோயமுத்தூர் போய் சேர்ந்தாள்.
அருளின் அக்கா “கங்கா! காபி,ஜூஸ்” என கொடுக்க அனைத்தையும் மறுத்து விட்டாள்.நேரம் இரவு ஏழு ,எட்டு என தன் வேலையை செவ்வனே செய்தது.
கங்காவிற்கு அந்த கடிகார முள்ளின் சத்தத்தை விட இதய துடிப்புடன் சத்தம் அதிகமாக கேட்டது.
இந்நேரம் அப்பா வீடு வந்து இருப்பார். என்னை தேடுவார். கோபத்தில் கத்துவார்.நான் இங்கே வந்தது தெரிந்தால் இன்னமும் கோப படுவார் என உள்ளூர நடுக்கம்.
அவர்கள் மூவரும் வழக்கம் போல பேசி சிரித்து சுடச்சுட இட்லி சாப்பிட்டனர். கங்கா அவர்கள் முன் பயத்தையோ, கோபத்தையோ காட்டவில்லை. சாதாரணமாக அமர்ந்து கொண்டாள். ஆனால் அவளுக்குள் ஒரு பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் இவர்கள் மூவரும் எந்த வித தீவிரமும் இல்லாமல் சாந்தமாக இருந்தனர்.
அம்மா,அப்பா எப்போ வருவாங்க?
வந்துட்டே இருக்காங்க..
இப்படியே மணி அதிகாலை இரண்டாகி விட்டது.அதன் பிறகே அவர்கள் வந்தனர்.ஒரு பத்து பதினைந்து ஆட்கள் இருப்பர்.கங்காவிற்கு அவர்களை பார்த்தும் பயமே.இருந்தும் வெளிக்காட்ட வில்லை.
கங்கா அவங்களுக்கு தண்ணி கொடு என அருளின் அக்கா கூற..
கங்கா, நான் எதுக்கு கொடுக்கனும்?என மறுத்துவிட்டாள்.
சரி எங்க வீட்டுக்கு வாங்க கிளம்பலாம். எங்க அப்பா என்னை காணோம்னு தேடிட்டு இருப்பாரு என்றாள்.
கங்கா உங்க வீட்டு நிலவரம் தெரியாம அங்க போக வேண்டாம்.காலைலே உங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி பேசிட்டு அப்பறோம் போலாம் என்றார் அருளின் அப்பா .
அப்பா, நாங்க அவங்க வீட்டுக்கு முன்னாடியே கூப்பிட்டு பேசிட்டோம். கங்கா ஓடி வந்துட்டதா அவங்க அப்பா கோபத்துல இருக்காறாம.
இப்போ நாம அங்க போனா அவரு கோபத்துல நம்மள எதாவது பண்ணிருவாரு என்றார் அருளின் அக்கா.
இங்க பாரு கங்கா,உங்க அப்பா உன்னை வெட்டிருவேனு உங்க அம்மாகிட்ட சொல்லிருக்காங்க.இப்போ அருளையும் கூட சேர்ந்து வெட்ட போறாங்க..அப்பறோம் உங்க அப்பா காலம் ஃபுல்லா ஜெயில்ல தான் இருப்பாரு.
அதுவே நீ அருளை கல்யாணம் செஞ்சுட்டு அவரு முன்னாடி போனா, உங்க ரெண்டு பேரையும் சந்தோசமா ஆசிர்வாதம் பண்ணுவாரு.முடிவு உன் கையிலே தான் என்றார் அருளின் மாமா.
என்ன முடிவெடுப்பாள்? அப்பா ஜெயிலுக்கு போக கூடாது.திருமணம் செய்யவும் விருப்பமில்லை.அதிகாலை இரண்டு மணி வீட்டிற்கு எப்படி போவது.
இவர்கள் நிச்சயமாக அப்பாவிடம் எந்த உண்மையையும் சொல்ல போவது இல்லை.கங்காவிற்கு உலகமே இருண்டு போனது.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!