Skip to content
Post Views: 687
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 30.1
கங்காவால் தற்போது கெளசி வாழ்வும் கேள்விக் குறியாகி விட்டது.
சிவராமனுக்கு தன் மகள்களின் வாழ்க்கை இப்படி திசை தெரியாமல் நிற்பதே பெரும் வேதனையாக இருந்தது.
அப்பா நீ கவலைப்படாதப்பா… எல்லாம் சரியாகும். நான் இருக்கேன்ப்பா உனக்கு.ஆனா அதே சமயம் கங்காக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாக்கலாம்ப்பா என்றாள் கெளசி.
அவள் சொன்ன வார்த்தைகள் சிவராமனுக்கு சற்றே ஆறுதலை தந்தாலும், மனதில் இருந்த பாரம் குறையவில்லை.
Advertisement
இவர்கள் நிலை இப்படி இருக்க, ஒருநாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கங்காவிற்கு தெரியாத நம்பரிலிருந்து ஃபோன் வந்தது.
எடுத்தவுடன் மறுமுனையில் அருளின் குரல்.
“கங்கா… எனக்கு பையன் பிறந்திருக்கான்.”
Advertisement
அவள் எதுவும் பேசவில்லை.
Advertisement
“நான் பண்ணது எல்லாம் தப்புதான். அப்போ எனக்கு எதுவும் புரியல.இப்போ பையனை கையில எடுத்தப்போதான் குடும்பம்,உறவு,வலி எல்லாம் புரியுது.நீ என்னை மன்னிச்சிடு கங்கா…” என்றான் சற்றே தளர்ந்த குரலில்.
கங்காவிற்கு சிரிப்பா,அழுகையா என்றே தெரியவில்லை.
கர்மா, விதி, தண்டனை… இவை எல்லாம் தன்னிடம் மட்டும் வேலை செய்கிறது போலவே என எண்ணினாள்.
Advertisement
எல்லா சூழ்ச்சியும் செய்தவன்…
தன் வாழ்க்கையை சீரழித்தவன்…
இன்று மனைவி, குழந்தை என நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஆனால் தானோ இன்னும் ஒரு இருண்ட பாதையில் நின்றுகொண்டிருக்கிறோம்.
“ஏன்?” என்ற கேள்வி மட்டும் அவள் மனதை தினமும் கிழித்தது.
சில நொடிகள் அமைதிக்குப் பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“மன்னிப்புதானே வேணும்… இதோ கொடுத்துட்டேன்.
எடுத்துக்கோ”
“ஆனா இனிமே எந்த நிலையிலும் என்ன தொடர்பு கொள்ளாதே. உன்னோட குரலை கூட என் வாழ்க்கையில மீண்டும் கேட்க விருப்பமில்லை.”என ஃபோனை வைத்தாள்.
சில காயங்களுக்கு கண்ணீர் தீர்வாகாது… காலம்தான் மருந்து.
ஆனால் அந்த காலம் கூட கங்காவை இன்னும் சோதித்துக் கொண்டே இருந்தது…
பள்ளியில் ஒரு சிறு தவறு செய்து விட்டாள். இவளது வளர்ச்சி பிடிக்காத உடன் பணியாற்றுபவர். அதை சுதாவிடம் கொண்டு சென்றார்.
சுதா தற்போது கங்காவிடம் முன்பு போல இல்லை. நன்றாகவே நடந்து கொள்கிறார்.இந்த தவறுக்கு அவளை எதுவும் கேட்கவில்லை.
கங்காவின் காதுகளுக்கு இந்த விஷயம் செல்ல நேரே சுதாவிடம் வந்து மன்னிப்பு கேட்டாள். பரவாயில்லை கங்கா நீங்க ஏற்கனவே உங்க பர்சனல் விஷயத்துல ஸ்டக் ஆகி இருக்க,ஏன் இதை பெரிய பிரச்சனை ஆக்கனும்னு நான்தான் விட்டுட்டேன் என்றார்.
பர்சனல் வேறு, ப்ரோபசனல் வேறு. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றம்தான் என்பது கங்காவின் நிலை.
தவறுக்காக சுதா திட்டியிருந்தால் கூட, தன்னை மாற்றி இருப்பாள் கங்கா. ஆனால் பர்சனலோடு தொடர்பு படுத்தியது பிடிக்கவில்லை.
ஆசிரிய பணிக்காக எவ்வளவோ மெனக்கெட்டு தன்னை செதுக்கி கொண்டாள். ஆனால் இன்று அவை அனைத்தும் தவிடு பொடியாவதாக உணர்ந்தாள்.
இரண்டு நாள் நன்றாக யோசித்து விட்டு, ரிசைன் செய்வதாக சுதாவிடம் கூறினாள். மதியம் பனிரெண்டு மணி வரை டைம் எடுத்து யோசித்து விட்டு சொல்லுங்க கங்கா என்றார்.
எதற்கும் சிவராமனிடம் ஒருமுறை கேட்டு விடுவோம் என ஃபோன் செய்தாள். அவர் உனக்கு என்ன விருப்பமோ அதை செய் கங்கா என்றார்.
சுதாவிடம் உறுதியாக வேலையை விடுகிறேன் என கூறினாள். சுதாவும்,வனிதாவும் உங்களுக்காக எப்போதும் இந்த ஸ்கூல் கேட் திறந்தே இருக்கும்.நீங்க எப்போ வேணாலும் வாங்க என சொல்லி வழியனுப்பினர்.
இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தவள் அதற்கு மேல் இருக்க முடியவில்லை.
நாட்களும் நான்கு சுவர்களுக்கு இடையில் ஏன் தன் வாழ்வு இப்படி ஆனது? என்ற யோசனையிலேயே கடந்தது.
மனம் ரொம்ப பாரமாக இருக்க, தன் ஆஸ்தான தெய்வம் முன் சென்று நின்றாள்.
கலை அழகா இல்லை இந்த சிலை அழகா?என அந்த சிலையின் அழகில் மெய் மறந்து நின்றிருந்தாள்.
உண்மையிலேயே இந்த சிலையை வடித்தவன் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் அந்த வள்ளி மணாளன் மீது காதல் கொண்டுதான் செதுக்கி இருக்க வேண்டும்.அவ்வளவு அழகு அந்த சிலையில்..
எவ்வளவோ நாட்கள் இந்த சிலைமுன், இல்லை இல்லை கங்காவை பொறுத்தவரை அது சிலை இல்லை. முருகன் அவளது முருகன். அதுவும் அவளுக்காகவே அங்கே வடிவெடுத்து நிற்கிறான் என்றே எண்ணி உருகி வேண்டிக் கொண்டிருக்கிறாள்.
இன்று ஒரு மர்மான புன்னகையுடன்,” வா கங்கா உனக்காகதான் நான் காத்திட்டு இருக்கே.
இப்போவெல்லா ஏன் நீ என்னை பாக்க வரதே இல்ல?” என்ற கேள்வியுடன் இவளை பார்த்து சிரிப்பது போல தோன்றியது அவளிற்கு.
மெதுவாக கந்தர் அலங்காரத்தை உச்சரித்தாள்.
“விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.”
முருகா எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தை தரே.என்னால இவ்வளவு பாரத்தை தாங்க முடியல.ரொம்ப வலிக்குது.எங்க அப்பா,அம்மாவும் என்னாலே ரொம்ப சோர்ந்து போயிட்டாங்க.உன் திருவிளையாடலே இதோட முடிச்சுக்க முருகா.நானா அந்த வாழ்க்கையே தேடி போகல.சூழ்நிலை என்னை அங்கே போக வெச்சிடுச்சு. நான் ஏதாச்சு தப்பு பண்ணிருந்தா எனக்கு மட்டும் தண்டனை கொடு,எங்க அப்பாவும், அம்மாவும் பாவம் அவங்கள கஷ்டப்படுத்தாதே.
அவங்களுக்கு சந்தோசம் தரே ஒரே விஷயம் என்னோட திருமணம் மட்டும்தான்.எனக்கு ஒரு நல்லவனை கொடு.எல்லா விதத்துலையும் அவன் எனக்கு உறுதுணையா இருக்கனும். எனக்கு உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை முருகா.எனக்கொரு நல்ல வாழ்க்கையை கொடு என வேண்டிக் கொண்டாள்.
அங்கே வந்த அவளது பள்ளித் தோழி நித்யா சிறிது நேரம் கங்காவிற்காக காத்திருந்தாள்.இவள் வேண்டுதல் முடிந்ததும் அவளை பார்த்தவள்.
நித்யா எப்படி இருக்கே?என்ன பண்ணிட்டு இருக்கே?என்றாள்.
இருவரும் கோவில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டார்கள்.
நான் நல்லா இருக்கே கங்கா.
நீ எப்படி இருக்கே? என்ற கேள்விக்கு தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.
ஃபில் பண்ணாதே கங்கா.எல்லாத்தையும் மறக்க ட்ரை பண்ணுடி என்றாள்.
சரி நித்யா நீ என்ன பண்ணிட்டு இருக்கே?
நான் பிஎச்டி ஃபனல் இயர் பண்ணிட்டு இருக்கே என்றாள்.
கங்கா கண்களில் வெளிச்சம்.நித்யா எனக்கும் பிஎச்டி பண்ணலாம்னு இருக்கு.
ஆமா நாம ரெண்டு பேரும் ஒன்னாதானே என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதினோம்.நீ ஜாயின் பண்ணவே இல்லையா?
இல்லடி .வீட்டுல வேண்டானு சொல்லிட்டாங்க அதா பண்ணுல.
சரி இனி நீ பிஎச்டி பண்ணு.உனக்கு அது ஹெல்ப்பா இருக்கும்.
ரொம்ப செலவாகுமா?நித்யா
இல்லடி நா கவர்ன்மென்ட் காலேஜ்ல தான் பண்ணிட்டு இருக்கே.இன்னும் நாலு மாசத்துல எனக்கு ‘வைவா’ வரும்.நீ அப்போ வா.சார்கிட்ட பேசி பிஎச்டி சேர்ந்துக்கலாம் என்றாள்.
இரண்டு வாரம் கடந்த நிலையில், இதற்கு மேல் தன்னால் சுவர்களை வெறித்துக் கொண்டு வீட்டில் இருக்க முடியாது என வேறு பள்ளியில் சேர்ந்து கொண்டாள் கங்கா.
மாலை டியூசன் எடுத்து கொண்டிருந்தவளுக்கு நித்யாவிடம் இருந்து ஃபோன்.
கங்கா நாளைக்கு நியூ இயர்.ரெண்டு பேரும் கோவில் போகலாமா?
நான் வீட்டுல கேட்டுட்டு சொல்றேன் நித்யா.
அம்மா நித்யா நாளைக்கு கோவில் போகலானு சொல்றா. நீ அப்பாகிட்ட கேட்டு சொல்லு என்றாள்.
சிவராமன் வீடு வந்ததும் கேட்க,சரி என்றார்.இவளும் நித்யாவுக்கு ஃபோன் செய்து வரேன் என கூறினாள்.
புது வருடம் கங்காவிற்கு புதுமையை தர காத்திருந்தது.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!