Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 45.2

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 45.2

கங்காவும் லட்சுமியும் சோர்வாக வீட்டிற்கு வர,சிவராமனின் ஃபோட்டோ ஃபிரேம் செய்து வந்திருந்தது. அதை பார்த்த லட்சுமிக்கு அவரே திரும்பி வந்துவிட்டதாக தோன்றியது.அதுவரை இருந்த களைப்பு அவரது முகத்தில் இல்லை.ஆனால் கங்கா மட்டும் ஃபோட்டோவை பார்ப்பதை தவிர்த்தாள். அவளுக்கு அவரை நினைவாக காணும் தைரியம் இல்லை.

வெள்ளை நிற சட்டையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார் சிவராமன். அவிநாசியப்பன் வீட்டு கிரகப்பிரேவசத்தன்று,லட்சுமி அவரை வற்புறுத்தி சிறிய ஜெயினையும், அவரது நெற்றியில் குங்குமமும் வைத்துவிட கெளசி அதை ஃபோட்டோவாக எடுத்து வைத்தாள்.

இன்று அதையே நித்யாவின் சித்தப்பாவிடம் கொடுத்து கங்கா ஃபிரேம் செய்திருந்தாள்.அதில் அமரர் ஏ.சிவராமன் என்றும் அவரது தோற்றம் மறைவு தேதிகளையும் குறிப்பிட்டு வாங்கியிருந்தாள்.



Advertisement

கங்கா ‘அமரர்’னா என்னடி அர்த்தம்?

‘அமரர்’னா ‘அழிவில்லாதவர்’னு அர்த்தம்.அங்கே பாரு தாத்தா ஃபோட்டோல கூட அப்படிதான் இருக்கு.

அப்பா என்னைவிட அழகுதானே? கங்கா.

Advertisement

ஓ!உனக்கு எங்க அப்பாவே விட நீ அழகுனு எண்ணம் இருக்கா?உங்க ரெண்டு பேரு கல்யாணத்தப்போ மட்டும் நான் இருந்திருந்தா…எங்க அப்பா கலருக்கும் அழகுக்கும்..எதாச்சு சினிமா நடிகையே கட்டி வெச்சிருப்பே..எங்க அப்பா கெட்ட நேரம் இந்த அவிநாசியப்பன் குடும்பத்துகிட்ட மாட்டிடாரு.

Advertisement

கங்கா,அப்பாக்கு நதியாவே ரொம்ப பிடிக்கும்டி.நதியா பாட்டு டீவிலே போட்டா பார்த்துட்டே இருக்கும். நான் கடுப்புல அமைதியா வெளியே போய் பீஸ் கட்டையே பிடிங்கிருவே.

அடிப்பாவி.

அப்பறோம் அதை எப்படி மாட்றதுனு தெரியாதா.அப்பாகிட்டயே சொல்லி மாட்டிக்குவே.

Advertisement

“உனக்கு எதுக்கு லட்சுமி இந்த வேண்டாத வேலை?உங்கப்பன் படிக்க வெச்ச ரெண்டாவது படிப்புக்கு கரண்ட் கூட எல்லாம் விளையாடுவையானு திட்டிட்டே சரிபண்ணும்” என்றார் லட்சுமி.

அதற்குள் கெளசியும் வீடு வந்து ஃபோட்டோவை பார்த்து முடிக்க,கங்கா அதை ‘வீட்டில் மாட்ட வேண்டாம்’ என கூறி, பீரோ மேலே வைத்து விட்டாள்.பின் இருவரும் சமையல் செய்ய கிளம்பினர்.

கங்கா வெறும் தரையில் படுத்துக் கொண்டே,சிவராமன் தந்தையின் ஃபோட்டோவை பார்த்தாள்.அவள் இதுவரை அவரை ஃபோட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறாள்.

சாந்தமான முகம். லேசான சிரிப்பு. அவிநாசியப்பன் அடிக்கடி கூறுவார், “உங்க தாத்தா நாணயமான ஆள். கொடுக்கல் வாங்கல் சரியா வெச்சிருப்பாரு. நான் எல்லா அவர்கிட்டதான் வேலை பழகுனே. எனக்கு அவர்தான் குரு.அந்த சொந்தம் விட்டு போககூடாதுனு தான் உங்க அம்மாவை இங்கே கட்டி கொடுத்தேன்” என…

இனி சிவராமனையும் அவரது பேரன்கள் ஃபோட்டோவில்தானே பார்க்க வேண்டும் என்ற வேதனை அவளை துயரடையச் செய்தது.

பிறக்காத தன் மகனிடம்,நினைவாகி போன தன் தந்தையை பற்றி பேச ஆரம்பித்தாள்.

“உங்க அப்புச்சி யார் தெரியுமா?எப்படிபட்ட ஆள் தெரியுமா?உனக்காக என்னவெல்லாம் செய்வாரு தெரியுமா?

நீ பிறந்த உடனே உனக்கு வெள்ளி அரைஞாண் ஜெயின், தேக்கு தொட்டில் எல்லாம் வாங்கி தருவாரு.உன்னை அவரோட வண்டிலே உட்கார வெச்சு இந்த ஊரை சுத்தி காட்டுவாரு.நீயும் நானும் ஊருக்கு வரோம்னு சொன்ன உடனே காலைலே நேரமா கறி எடுத்து லட்சுமி அம்மா கிட்ட கொடுத்து சமைக்க சொல்லுவாரு.நாம்ம வீடு வர வரைக்கும் வாசல்லையே காத்துட்டு இருப்பாரு..”

இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இந்த விதி கொஞ்சமேனும் கங்காவிற்கும்,சிவராமனிற்கும் கருணை காட்டியிருக்கலாம். கொடூரமாக சிவராமனை அவளிடமிருந்து பறித்துக் கொண்டது.

அடுத்தநாள் காலை பள்ளி கிளம்பினாள் கங்கா.பாடம் நடத்திக் கொண்டிருந்தவளுக்கு இடது மார்பில் ஒரு பயங்கர வலி. அப்படியே அமர்ந்துவிட்டாள்.பின் தண்ணீர் குடித்து சிறிது நேரம் ஸ்டாப் ரூம்மில் படுத்துக் கொண்டாள்.இரண்டு மூன்று நாட்கள் கடந்தும் வலி சரியாகவில்லை.

கலா வேலை செய்யும் கிளினிகிற்கு செல்ல.. எதற்கும் ஒரு ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினர். இவளும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க ஒன்றுமில்லை.

அடுத்தடுத்த நாட்களில்,எடை அதிகமானது.நடக்கவே சிரமப்பட்டாள்.தன் எடையில் இன்னொரு மடங்கை தூக்கி நடப்பது போல தோன்றியது.மாடிப்படி ஏறி இறங்க மூச்சு வாங்கியது. இரண்டு படி ஏறுவது முடியாமல் அமர்ந்து விடுவது. தொண்டை வறண்டு அடிக்கடி தாகமெடுத்தது. லட்சுமியிடமும் கெளசியிடமும் எதுவும் சொல்லாமல் தவிர்த்தாள்.

எப்போதும் போல தஹஜ்ஜத் தொழுகைக்கு மறக்காமல் எழுந்து விடுவாள்.அதன் பிறகு தூக்கம் என்பது வருவதே இல்லை. இன்று எழுந்தவளுக்கு வயிற்றில் பயங்கர வலி பாத்ரூம் செல்ல, இடது கால் முற்றிலும் செயலிழந்தது.மெல்ல எழுந்து பாத்ரூம் வரை சென்றவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை.கீழே அமர்ந்து விட்டாள்.

எவ்வளவு நேரம் அமர்த்திருந்தாள் என்றெல்லாம் தெரியவில்லை. என்னதான் சிவராமன் தூக்கத்தில் இருந்தாலும்..மகள்கள் பாத்ரூம் சென்று திரும்பிவர தாமதம் ஆனால் உடனே லட்சுமியை எழுப்பி பார்த்து வரச் சொல்வார்.இன்று அவர் இல்லாமல் இவளை பார்க்க யாரும் வரவில்லை.

எப்படியோ கைகளை தரையில் ஊன்றி சுவற்றை பிடித்து எழுந்து வந்தாள். நாட்கள் போக போக மாதவிடாய், மலச்சிக்கல் பிரச்சனைகளும் சேர்ந்து கொண்டது. மூளை கட்டளையிடுவதை அவள் உடல் கேட்க மறுத்தது. ஹாஸ்பிடல் போனால் எல்லாம் நார்மலாக உள்ளது என்கின்றனர். ஆனால் இவளது உடல் இவளுக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்த நிலையில் மாலதி ஃபோன் செய்தாள்.சிவராமன் இறப்பு பற்றி நித்யா, சுமந்த் தவிர வேறு யாருக்கும் தெரியாது. கங்கா,”யாரிடமும் சொல்ல வேண்டாம்” என கூறிவிட்டாள்.

கங்கா ரிசல்ட் வந்திருச்சு பார்த்தியா?

பார்த்தே மாலதி.மூனு மார்க்லே ஃபெயில்..

நானும்தான் கங்கா.. நான் கூட நீ பாஸ் பண்ணிருப்பேனு நினைச்சே..

நீ எக்ஸாம் எழுதினையா?மாலதி. சொல்லவே இல்ல.

எக்ஸாம் முன்னாடி நைட் கூப்பிட்டு சொன்னனே.மறந்துட்டையா கங்கா.

எனக்கு எங்கே சென்டர்னு தானே கேட்டே.நீயும் எக்ஸாம் எழுதே போறேனு சொல்லுலையே..

நான் சொன்னே கங்கா.நீதான் சரியா கவனிக்கல போல..

சரிடி நான்தா கவனிக்கல விடு.நான் கொஞ்ச வேலையா இருக்கே அப்பறோம் கூப்பிடறே.

கங்கா நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லதான் கூப்பிட்டே

என்ன?

சல்மானும் அந்த விஜி பொண்ணும் அவுட்டிங் போய்ட்டு இருக்காங்கலாம்.

அவன் கன்னியாகுமரிலே இருக்கான். இவ இங்கே இருக்கா.எப்படி அவுட்டிங் போவாங்க?

விஜி பொண்ணுதான் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்கா.சல்மான் அப்பா இறந்தப்போ பட்ஜெட் போட்டுக் கொடுத்து இருக்கா. நாம்ம அவன் வீட்டுக்கு போய் அவன் அம்மாவ பார்த்துட்டு வந்ததே அவகிட்ட சொல்லி, அவளையும் நம்மள மாதிரியே அவங்க அம்மாவுக்கு எதாச்சு வாங்கி கொடுக்க சொல்லிருக்கான்.
இவன் ஊருக்கு வரும் போது எல்லா நாலு மணிக்கு வந்து அவனே பிக்கப் பண்றாளாம்.

கூட சல்மான் அம்மாவும் தானே வருவாங்க. இவ எப்படி அவனே மட்டும் பிக்கப் பண்ணிட்டு வருவா?மாலதி

நீ இப்படி யோசி கங்கா.அவங்க அப்பா அவனே பிக்கப் பண்ணினா, இவ அவங்க அம்மாவ பிக்கப் பண்ணிட்டு போவா இல்ல.

இதெல்லா நம்பற மாதிரி இருக்கா.யார் உன்கிட்ட இப்படியெல்லா சொல்றது?சரி நீ சொல்ற மாதிரி இவ அவனே பிக்கப் பண்றதுல நியாயம் இருக்கு.அவங்க அப்பாவும் கூடவே வருவாரா?எந்த அப்பாவாது இப்படி போவாரா?அதும் சல்மான் ஒரு பொண்ணை நாலு மணிக்கு வரச் சொல்லுவானா?

ஏன் கங்கா அவன் வரச் சொல்ல மாட்டானா?அவனை நீ ஜென்டில்மேனா நினைச்சிட்டு இருக்கே. அவன் எல்லா வேலையும் பண்ணுவா.நீ யோசிச்சு பாரு அத்தனை பொண்ணுங்க க்ளாஸ்லே இருக்கையிலே இந்த பொண்ணை மட்டும் இவன் எதுக்கு ஹெல்ப்புக்கு கூப்பிடனும்.இவனே பொறுத்தவரை பொண்ணு நல்லா வெள்ளையா இருக்கனும்.அவன் சொல்லறதே எல்லா கேட்கனும்.

அவனுக்கு நம்மள எல்லா பிடிக்காது கங்கா.அதுமட்டுமல்ல நம்ம அவனுக்கு பண்ணுனே சாட் எல்லா விஜிகிட்ட காட்டியிருக்கான்.நம்ம நெம்பரை அவகிட்ட கொடுத்து ப்ளாக் செய்ய வெச்சிருக்கான்.

இதெல்லா யாரு உனக்கு சொன்னாங்க? மாலதி.

எல்லாமே விஜி அவ ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிருக்கா.அவங்கதான் என்கிட்ட சொன்னாங்க.நீ வேணா சல்மானுக்கு ஃபோன் செஞ்சு பாரு. அவன் உன் நெம்பரை ப்ளாக் பண்ணி வெச்சிருப்பான்.

இதற்குமேல் இவளின் கட்டுக்கதைகளை கேட்க விரும்பவில்லை கங்கா.எப்படி நித்யாவை கட் செய்தாலோ அதே போல் மாலதியையும் வெட்டிவிட தீர்மானித்தாள்.

ஏற்கனவே அப்பாவின் இழப்பு, கடை, வீடு, கெளசியின் திருமணம்,அம்மா என பொறுப்புகள் வரிசை கட்டி நிற்க..உடல் நிலை அதற்கு மேல் தன் பங்கிற்கு வேலை காட்டியது.

மாலதி சொல்வதையும் நம்ப முடியாது. விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்வது போல் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
இவளை இன்றோடு முடித்து விட்டால் நல்லது என எண்ணினாள்.

விஜியும் சரியான பெண்ணாக தெரியவில்லை.இப்படி ஊரெல்லாம் அவன் வீட்டில் நடப்பதை கூறி இருக்கிறாளே..
மேற்கொண்டு மாலதியை போன்று இவளும் சல்மானை ஏதாவது செய்ய காத்திருந்தால் என்ன செய்வது? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தோன்றியது.

படிக்க தன்னிடமிருந்து வாங்கிய புத்தகத்தை திருப்பி தர கேட்க, வீட்டிற்கே வந்து தருவதாக மாலதி கூறினாள்.கங்கா மறுத்து கலா கிளினிக்கின் அருகில் இருக்கும் பேக்கரிக்கு வரச் சொன்னாள்.

இரவு ஒன்பது மணி சல்மானை பற்றி எதுவும் பேசக் கூடாது. போகிறோம் கடுப்பில் இரண்டு வார்த்தைகளை கொட்டிவிட்டு புத்தகத்தை வாங்கி வந்து விடுகிறோம். இதற்குமேல் நம் பக்கம் அவள் தலைவைத்து கூட படுக்க கூடாது என்ற முடிவோடு கிளம்பினாள்.

–தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!