Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யென்னுள்ளில் எங்கோ 12 2

அவர் அவர் மனதில் ஆயிரம் துக்கம் தொண்டை வரை அடைத்து இருந்தது.. ஆனால் யாரும் வாய் திறந்து பேசவில்லை.. தங்கை மகள் திருமணம் என்று இந்தியா வந்த அந்த வீட்டின் பெரிய பெண்.. துர்கா தேவி மீண்டும் அமெரிக்கா சென்று விட்டாள்.. கூட மகள் ஸ்வேதாவை  அழைத்து கொண்டு தான்.. 

அமெரிக்கா செல்லும் முன் ஸ்வேதா வருண் கிருஷ்ணாவிடம்.. “எனக்கு என்னவோ வர்ஷா உனக்கு என்று தான் மனசுக்கு படுத்து வருண்..  இந்த சான்ஸையும் மிஸ் பண்ணிடாதே.” என்று கூறியவளிடம் வருண் கிருஷ்ணா.

“இப்படி அவள் கஷ்டப்பட்டா தான் எனக்கு வர்ஷா கிடைப்பா என்றால், அப்படியான ஒரு காதல் எனக்கு வேண்டாவே வேண்டாம் ஸ்வேதா..” என்று சொல்லி விட்டான்..

அவன் பேச்சில் ஸ்வேதா வருணை அணைத்து கொண்டாள்.



Advertisement

“அவளுக்கு உன்னை விட ஒரு நல்லவன் கிடைத்து விடுவானா டா.. முட்டாள் பக்கத்தில்  கோபுரத்தை வைத்து கொண்டு குப்பையில் உட்கார பார்த்தா பார்.. அவள் இடம் கோபுரம் தான் வருண்..  வர்ஷா உனக்கு தான்.. அடுத்து நான் இந்தியாவுக்கு வருவது என்றால் உனக்கும் வர்ஷாவுக்கும் மேரஜ் அப்போ தான் வருவேன் .” என்று சென்று விட்டாள்..

பின் அந்த வெள்ளை பங்களா மீண்டும் ஒரு நிலைக்கு வந்து விட்டது.. ஒரு நிலைக்கு என்றால் கல்லூரி செல்பவன்.. சென்று கொண்டும் .. தொழில் செய்பவர்கள் அதனை பார்த்து கொண்டும்.. 

நேரத்திற்க்கு உறங்க சென்று நேரத்திற்க்கு உணவு உண்டு என்று அது எல்லாம் சரியாக தான் நடந்து கொண்டு இருந்தது..

Advertisement

ஆனால்  வீட்டின் பெண்கள் ரசித்து ருசித்து உண்டார்களா…? உறங்க என்று சரியான நேரத்திற்க்கு சென்றவர்கள் உறங்கினார்களா..? அது  அந்த இறைவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்..

Advertisement

ஜோதிடத்தை நம்பலாமா வேண்டாமா என்று இருந்த ஆண்கள் கூட… இப்போது நம்ப தொடங்கி விட்டனர்..  இன்றைய தலை முறையான ஆண்கள் வம்சி.. வருண்.. தேவ்வை தவிர..

இந்த சூழ்நிலையிலும்   வம்சி கிருஷ்ணா செந்தூரா வேலைக்கு  என்று தாத்தாவிடம் அனுமதி பெற்று தங்கள் கிரானைட் கம்பெனியில் வேலைக்கு அமர்த்தி விட்டான்..

இந்த வேலை என்று இல்லை..  ஒரு மாதத்திற்க்கு முதலில் அனைத்தையும் பார்… உனக்கு எந்த வேலை செய்ய தோன்றுக்கிறதோ.. அதை பார்.. ஆனால் அனைத்து வேலைகளையும் கற்று கொள்ள வேண்டும்..

Advertisement

இது வரை  நம் வீட்டு பெண்கள்  நம்ம பிசினஸ்க்குள் வந்தது கிடையாது.. நீ வந்து இருக்க..உன்னால் முடிந்த பெஸ்ட்டை நீ கொடுக்க  வேண்டும் என்று  செந்தூராவிடம் சொல்லி விட்டான் .. முதல் நாள் கம்பெனிக்கு அழைத்து வந்த வம்சி கிருஷ்ணன்..

மகிழ்ச்சி இல்லாது ஏனோ செல்கிறது என்ற அது நாட்கள்.. கூட ஒரு முடிவுக்கு வந்து விட்டது.. வம்சியின் தங்கையான விந்தியா மீண்டும் கருவுற்று கலைந்து போனதில்..

பதினைந்து நாள் முன்பே.. விந்தியா உண்டாகி இருக்கிறாள் என்று அவள் மாமியார் வீடு சொல்லி விட.. கோசலை அப்போதே கணவனை அழைத்து கொண்டு  மகள் வீட்டிற்க்கு சென்றவர் கைய்யோடு மகளை  தங்கள் வீட்டிற்க்கு அழைத்து  வந்து விட்டார்.

அதுவும்  அவர்கள் காரை நடந்து செல்பவன் ஒவர் டேக் செய்யும்  அளவுக்கு காரை ஒட்டி கொண்டு வீடு வந்து பத்திரமாக இறக்கிய கோசலை.. பெண்ணை பத்திரமாக கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்.

பெண் நடக்கும் போது தன் கையை  கொண்டு அதை தாங்கவில்லை.. அது  ஒன்று மட்டும் தான் குறை.. கோசலை மட்டும் அல்லாது வீட்டில் இருந்த அனைவருமே பார்த்து கொண்டும்.. விந்தியா ஒரு நாள் தூங்கி எழுந்து குளிக்க  பாத்ரூமுக்குள் சென்ற போது உதிரமாக கொட்டியதை பார்த்து..

“அம்மா.” என்று ஒரு அலறல்.. எப்போதும் மகளின் அறையில் ஒரு காதையும், கண்ணையும் பதித்து இருந்த கோசலைக்கு விந்தியாவின் அந்த அலறல் உடனே கேட்டு விட..

தன் வயதையும் மறந்து  தங்கள் அறை நோக்கி ஒடினார்.. ஆம்  மகளை தங்கள் அறையிலேயே தங்க வைத்து கொண்டார்.. கணவரை வெளியில் அனுப்பி விட்டு.

அம்மா  அவர்  அறைக்கு இப்படி செல்வதையும்..  தங்கையின் குரலிலும்…   செய்திதாளை படித்து கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவும் அன்னைக்கு முன் விரைந்து சென்றான்..

குளியல் அறைக்குள்  இருந்து தங்கையின் குரல் கேட்கையில் வம்சி கொஞ்சம் தயங்கி நின்று விட கோசலை தான்..மூச்சு வாங்க வந்தவர்..

“என்ன டா..” என்று மகளிடம் கேட்கும் போதே கோசலையின் குரல் கர கரத்து விட்டது..

விந்தியா. “அம்மா ப்ளீடிங்க்..” என்று  அழுது கொண்டே மகள் சொன்னதுமே கோசலைக்கு  தெரிந்து விட்டது..அதற்க்குள் குடும்பத்தின் மொத்த பேரும் அந்த அறைக்கு வந்து விட்டனர்..

கோசலை அழுது கொண்டு இருந்தாரே தவிர. அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று  உணராது இருக்க….

வம்சி தான் “விந்தி கதவை  திற.. அம்மா வருவாங்க..” என்று சொன்னவன்..

“அம்மா தண்ணியில் ரொம்ப நேரம் இருக்க தேவையில்லை..” என்று கோசலையிடமும் கூற.. பின் தான் மகள் குளியல் அறைக்குள் இருப்பதே அவருக்கு உரைத்தது. ஆண்கள் அனைவரும் அந்த அறையில் இருந்து வெளி வந்து விட்டனர்..

பின் விந்தியாவின் நிலை பார்த்த பின் தெரிந்து விட்டது..

பல்லவி தான்.. “ஒரு சிலருக்கு கற்பம் கலையாது இருந்தாதும் இது போல ஆகும் விந்தியா..” என்று தைரியம் கூறினாள்.. அது இல்லை என்று விந்தியாவின் நிலை பார்த்தவர்களுக்கு புரிந்து விட்டது..

அது போல் என்றால் மிக லேசாக தான் ஆகும்.. ஆனால் இது.. அடுத்து திரும்ப மருத்துவமனை வாசம்.. பின் வீடு திரும்பல் என்று ஆனது..

விந்தியா முதல் முறை  இது போல் ஆன போது மனது தளர்ந்து விடவில்லை.. அதே போல் தான்  அவள் மாமியார் வீட்டவர்களும் இருந்து விட்டனர்.. இப்போது தானே திருமணம் ஆகி இருக்கிறது என்று..

ஆனால் மீண்டும் கரு கலைந்து விட்டதில், அனைவருக்குமே பயம்.. அதிலும் விந்தியா.

“அம்மா எனக்கு குழந்தையே  தங்காதமா.? நான் வெளியில் போய் .  ஏதாவது செய்து இருந்தா கூட பரவாயில்லை.. சரி அடுத்த முறை இன்னும் கேர் எடுத்துக்கனும் போல என்று நினச்சிப்பேன்.. ஆனா இப்படி பார்த்தும் .. எனக்கு பயமா இருக்கும்மா.?”  தன் அன்னையில் கை பிடித்து அழும் மகளை தேற்ற முடியாது இருந்தார்.

ஏன் என்றால் அப்போது கோசலைக்கே ஒருவர் தேற்றும் நிலையில் தான் அவர் மனது இருந்தது.

செந்தூராவுக்குமே  அந்த வீட்டில்  சூழ்நிலை ஒரு மாதிரியாக தான் இருந்தது.. முன் இரண்டு மூன்று நாட்கள் தங்கும் போது .. அவர்கள் மட்டும் தான் தனித்து இருப்பர்.. இந்த வீடு தினம் தினம் விழா கோலம் போல் தான் இருக்கும்.. ஒரு சின்ன பண்டிகையை கூட அப்படி கொண்டாடுவார்கள்..  ஆனால்  இப்போது நல்ல நாளை கூட மறந்து தான் இருக்கின்றனர்..

பத்மினியின்   உடல் நிலை  இப்போது மெல்ல மெல்ல தேறி கொண்டு வருகிறது.. உடல் நிலையில் மட்டும் தான்  அந்த முன்னேற்றம்.. மனநிலை… அதுவும் தன் மகளை பார்க்கும் போது எல்லாம் தன் திருமணம் தடைப்பட்டு பின் அமையாது திருமணம் முடிந்து.. அதையும் இழந்து இங்கு வந்து நின்றது தான்   அவரின் நியாபகத்திற்க்கு வரும்.. தன்னை போல தன் மகளுக்கும் அந்த நிலை வந்து விடுமோ என்ற பயம்..

கூடவே  இன்னொரு  பயம் தன் உடல் நிலை இப்படி  ஆனதில் மகளை  தனித்து விட்டு சென்று விடுவோமோ என்று.. தன் உயிர் இருப்பதற்க்குள் மகளை ஒருவன் கையில் பிடித்து கொடுத்து விட வேண்டும் என்றதிலேயே மனதில் கவலை   இருந்தாலும், உடலை  கவனித்து கொண்டார்..

அன்று உணவு  உண்ணும் சமயம்.. எதிரில் அமர்ந்து இருந்த வருண் கிருஷ்ணாவை பார்த்து பதிமினி தான் முதல் வாழ்த்து… “பிறந்த நாள் வாழ்த்துக்கள் வருண்..” என்று வாழ்த்தவும் தான்..

மற்றவர்களுக்கு அவனுக்கு இன்று பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வந்தன..

அதுவும் அவன் அன்னை. வருண் அருகில் ஒடி சென்று கட்டி கொண்டார்.

“சாரி  வருண்.. மறந்துட்டேன்.. ஹாப்பி பர்த்தேடா கண்ணா.” என்று ஆள் ஆளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்..எப்போதும் அந்த வீட்டவர்களின் ஒவ்வொருவரின்  பிறந்த நாளையும் அப்படி கொண்டாடுவார்கள்..

ஸ்டார் ஒட்டலில் பார்ட்டி.. சில முறை வெளி நாட்டிற்க்கு என்று கூட திட்டமிட்டு இருக்கிறார்கள்.. ஆனால் இந்த முறை அவனின் பிறந்த நாளையே மறந்து  விட்டது குடும்பம்..

அனைவருக்குமே ஒரு மாதிரி நிலை தான்.. தங்களையே மறக்கும் நிலையில் இருக்கிறதே குடும்ப நிலை.. அதை நினைத்து வேதனை..

தாரகராம் உடனே தாங்கள் நடத்தும் அநாதை இல்லத்திற்க்கு அழைத்து.. உணவுகளில் சேர்க்க  வேண்டிய உணவு வகைகள்.. குழந்தைகளுக்கு உடை.. என்று சொல்லி விட்டவர்..

இரவு  ஒரு ஸ்டார் ஒட்டல் பார்ட்டிகும் ஏற்பாடு செய்து விட்டார்..

பணம் இருந்தால் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் செய்து முடித்து விடலாம் என்பதற்க்கு உதாரணம்.. இதோ  தாரகராம்.. அரை மணி நேரத்தில் அனைத்தும் செய்து முடித்தவர்.

குடும்பத்தினரிடம்.. “யார் ..? யாரை.. அழைப்பது என்பதை நீங்க பார்த்து கொள்ளுங்கள்.. இனி இது போல இந்த குடும்பம் இருக்க.. கூடாது.. இனி  இந்த குடும்பத்தில் எல்லாம் நல்லதா தான் நடக்கும்.. அதுக்கு உண்டானதை நான் பார்த்து கொள்கிறேன்..” என்று செந்தூராவை பார்த்த வாறு சொன்னவர்.

தன் மூத்த மருமகளிடம்..

“ஈவினிங்க வம்சி வந்து விடுவான் தானே..” வெளி ஊருக்கு சென்று இருந்த தன் பேரன் வருகையையும் தெளிவு படுத்தி கொண்டார்..

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!