Skip to content
Post Views: 12,295
யாழி கண்விழிக்கவுமே அது நேரம் வரை கொண்டிருந்த மனக்கிலேசம் மொத்தமாக வடிய என்ன செய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் தன்னை மீறி அவளை இழுத்து அணைத்து முத்தமிட தொடங்கி இருந்தான் அதிர்துடியன்.
பாரமாகி போன இமைகளை கடினப்பட்டு திறந்த பெண்ணவள் அவனது இறுகிய அணைப்பையும் முத்தத்தையும் எதிர்பாராது அதிர்ச்சியில் மீண்டும் மயங்கி தோய்ந்து அவன் மார்பில் விழுந்த பின்பே தன்னிலை திரும்பினான்.
தன் மார்பில் படிந்திருந்த பெண்ணவளின் இதழ்களின் நடுக்கம் இன்னும் குறையாததை உணர்ந்தவன் அவளை அள்ளி எடுத்து தன் மடியில் கிடத்திட அவன் மனமோ, “இப்பதான் கண்விழிச்சா இன்னும் ஒரு வார்த்தை பேசல அதுக்குள்ள திரும்ப மயங்க வச்சிட்ட.., ப்ச் என்னடா பண்ணிட்டு இருக்க அதி” என்று கேட்க அவனோ பதிலின்றி அவள் முகத்தை பார்த்திருந்தான்.
‘என்ன ஆச்சு உனக்கு..?? ஒஹ் கம் ஆன் மேன் யாழி இஸ் அலைவ்..!! அவளுக்கு ஒன்னும் இல்ல, ஷி இஸ் இன் யுவர் ஹாண்ட்ஸ் அதை முதல்ல மனசுல பதிய வை.., நீயே இப்படி இருந்தா எப்படி..?? கம் பேக் டு நார்மல்’ என்று கூற அதிரனும் நெஞ்சை நீவி விட்டு தன்னை தானே தேற்றிகொள்ள முயன்றான்.
Advertisement
“ரொம்ப ஸ்பீடா போற அதி கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு இல்ல பயந்துடுவா..” என்று அவனுக்கு அவனே கட்டுப்பாடு விதித்து அருகே இருந்த பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் நீர் தெளித்து ‘யாழி’ என்று கன்னங்களை தட்டி எழுப்பினான்.
சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் கண் மலர்த்தி பார்த்த யாழி அவள் விழி வட்டத்தில் விழுந்தவனை கண்டு எதிர்பாராமல் திகைத்து பதறி எழுந்தமர்ந்திருந்தாள்.
‘தேங்க் காட்’ என்றவாறு ஆசுவாச மூச்சை வெளியேற்றியவன் , ‘ஆர் யு ஓகே நவ்..??’ என்று கேட்க,
Advertisement
யாழியோ விழிகளில் படர்ந்த அச்சத்துடன் மிரண்டு பின்னே நகர்ந்தவள் அப்போது தான் சுற்றம் உணர்ந்தாள்.
Advertisement
ஆம் அவள் காரினுள் இருப்பதையும் அவள் எதிரே அதிரன் அமர்ந்திருப்பதையும் அவன் தோற்றத்தையும் கண்டவளுக்கு பயத்தில் உடல் உதற தொடங்கி விட்டது.
இருக்காதா பின்னே..!! முதல் முறையாக தனிமையில் ஒரு ஆண் அவளுடன் அத்தனை நெருக்கத்தில் அதுவும் சட்டை இன்றி எயிட் பேக் உடற்கட்டுடன் இருப்பதை கண்டவளுக்கு தூக்கி வாரிபோட்டது.
“யாழி இங்க பாரு நான் தான்..!! தண்ணியில விழுந்தது நியாபகம் இருக்கா..??” என்று அவளை தேற்ற முற்ப்பட,
Advertisement
அவன் கேட்கவும் தான் தண்ணீரில் விழுந்த தனக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கண்விழித்தவள் கிரகிக்கும் முன்னரே அதிரனுடன் இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்பதை அவள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
அதிர்துடியனை இழந்த வருத்தம் மனதினோரம் இருந்தாலும் திருமணம் வேண்டாம் என்று சொன்ன பின்னர் அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெற்றோர் அதை நிறுத்தி விடுவர் அவனை இனி சந்திக்கவே போவதில்லை என்று அவள் நினைத்திருக்க நிஜமோ அவளை ஆழிபேரலையாய் சூழ்ந்து சிறுக சிறுக சுருட்டிக்கொண்டு இருப்பதை ஏற்க முடியவில்லை.
அதிலும் அவன் கோபம் குறித்து தந்தை மற்றும் தம்பி மூலம் அறிந்திருந்தவளுக்கு திருமணத்தை நிறுத்தியதற்க்காக இப்போது தன்னிடம் அவன் என்ன கேள்விகள் கேட்பானோ, மூக்கை உடைப்பானா அல்லது முகத்தை உடைப்பானா..?? அவன் கோபத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் அச்சம் அதிகரித்து தொண்டைகுழி வற்றி போனது.
******************************************
“கடவுளே.. கடவுளே.. கடவுளே.. ஏன் இப்படி என்னை தனியா கோர்த்து விட்ட..?? நான் கல்யாணம் வேண்டாம் சொன்னதால தான் என்னை இப்படி கடத்திட்டு வந்து அடைச்சி வச்சி இருக்காங்களா..??” என்று மனதினுள் வேண்டிக்கொண்டே டாப்ஸை இறுக பிடித்து தன் பதட்டத்தை தணிக்க முற்ப்பட்டால்.
அப்போது தான் அந்த வித்யாசம் புரிய உடனே குனிந்து தன்னை ஆராயந்தவளுக்கு அவள் இருக்கும் கோலம் நெற்றி பொட்டில் அரைந்திட விதிர்விதிர்த்து போனாள்.
‘நா.. நா.. என் என்னோட ட்ரெஸ் எங்க..??’ என்று அவள் திக்கி திணறி கேட்க,
‘உப்ஸ் பேசிட்டா’ என்று இதழ்களை குவித்து காற்றை வெளியேற்றிய அதிர் தலையை கோதிக்கொண்டே அவளை பார்க்க, யாழின் விழிகளும் அவளை அறியாமல் அவன் கேசத்தில் படிந்தது.
அதிர்துடியனோ அவள் நடுக்கத்தை கண்டு, ‘ஹே யாழி ரிலாக்ஸ்.., எதுக்கு இந்த நடுக்கம், ஒன்னுமில்லடா இனி பயப்பட தேவை இல்ல யு ஆர் சேப்..!! நீ பாதுகாப்பா இருக்க’ என்று அதிர் அவள் தோளை தொட முற்ப்பட சட்டென அவன் கையை தட்டிவிட்டவள் ..,
‘எ,,எனன்.. என் ட்ரெஸ் எங்க..??’ என்று உதடுகள் தந்தியடிக்க முயன்று அவனை பார்த்தவள்,
‘யா.. யார் இதை போட்டுவிட்டா..?’ என்று கலங்கிய விழிகளுடன் கேட்க,
அப்போது தான் அவள் உணர்வுகள் பிடிபட, ‘நத்திங் டு வொரி யாழி..!! அது ஈரமா இருந்ததுடா அதான் மாத்தினேன், ஈரத்தோட இருந்தா உனக்கு ஜன்னி வர வாய்ப்பு இருக்கு இங்க இருந்து ஹாஸ்பிட்டலும் தூரம் அதுதான்’
‘என்னது..??’ என்று பதறியவளுக்கு அவன் தனக்கு ஆடை மாற்றி இருக்கும் நிஜத்தை ஏற்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய தொடங்கியது,
‘ஹே என்ன ஆச்சு ஏன் அழற..??’
அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் இதழ்களை அழுந்த பற்றி அழுகையை நிறுத்த போராடி வெற்றிகரமாக தோற்றவளின் கேவல் அதிகரிக்க அதிர்துடியனுக்கு பதறி போனது.
‘யாழி என்னடா.. ஏன்..??’ என்று அவளை நெருங்க அவளோ அவனிடம் இருந்து இன்னுமே பின்னடைந்து கார் கதவோடு முட்டி நின்றாள்,
‘ஹே பார்த்து’ என்று அவள் தலையை பிடிக்கும் முன் அவன் கரத்தை தட்டி விட்டவள் தன் தைரியத்தை ஒன்று கூட்டி,
‘நீ.. நீ… நீங்க ஏன்..?? எப்படி..??’ என்று அழுகையினூடே கேட்க முயன்றவளின் குரல் கமறி தொண்டை அடைக்க இரும தொடங்கிவிட்டாள்.
‘ரிலாக்ஸ் யாழி’ என்று தண்ணீரை எடுத்து அவளுக்கு புகட்ட முற்ப்பட அவளோ இருபுறமும் தலை அசைத்து மறுத்தவள் இருமலை கட்டுபடுத்தி கொண்டே நாசி விடைக்க அவனை பார்த்து, ‘எ.. என்..பப்… பா… பர்மிஷன் இல்லாம எப்..படி நீங்க என்..’ என்று பற்கள் நடுங்க உதடுகள் துடிக்க தேம்பிக்கொண்டே பார்த்தவளின் அழுகை இன்னுமே அதிகரிக்க வலியோடு அவனை பார்த்தவள் பின் கண்களை இறுக மூடி கால்களை இருகரங்களால் இறுக்கி பிடித்து கொண்டு அதில் முகம் புதைத்திருந்தாள்.
இப்போது கை முஷ்ட்டிகள் இறுக நெற்றி சுருங்க இடுங்கிய கண்களுடன் அவளை பார்த்த அதிர்துடியனின் முகம் கறுத்து சிறுத்து போனது.
‘என்ன நினைத்து கொண்டிருக்கிறாள் இவள் என்னை பற்றி…??’ என்ற சீற்றம் அவனிடம்.
பின்னே எத்தனை நேர போராட்டத்திற்கு பிறகு அவளை காப்பாற்றி கரை சேர்த்து அவள் உயிரை காப்பாற்றியவன் அவள் நினைப்பது போல வெளியே சென்று வேறு பெண்கள் யாரையேனும் மற்றவர்களின் பார்வையில் படாதவாறு அவர்கள் கேமராவில் விழாதவாறு அழைத்து வருவதற்குள் யாழி இந்நேரம் ஜன்னி கண்டு இறந்திருப்பாள். அப்படியே அழைத்து வந்திருந்தாலும் காரின் கண்ணாடிகளை ஊடுருவி உள்ளே நடப்பதை காணொளி எடுக்க தான் முயன்றிருப்பார்.
அதுதான் அவள் தண்ணீரில் விழுந்ததில் இருந்தே ஒரு கூட்டமே கையில் செல்போனை வைத்து கொண்டு அவர்களை விரட்டி படம் பிடித்து கரை சேர்ந்த போதும் சுற்று வளைத்திருக்க அவனும் என்ன தான் செய்ய..??
ஏற்கனவே அவளை கரை ஏற்றிய சில நொடிகளுக்குள் ஆடை நெகிழ்ந்து இருந்தவளை பல்வேறு கோணங்களில் பலர் படம் பிடித்து விட்டதை உணர்ந்தே கைக்கு எட்டியது வரை பறித்து தூக்கி போட்டான், அவன் கையில் சிக்காமல் இன்னும் எத்தனை பேரிடம் அவள் புகைப்படம் உள்ளதோ தெரியாது.., அவனுக்கு பயந்து கூட்டம் கலைந்திருந்தாலும் அவர்களில் சிலர் கன்டென்ட்டிர்க்காகவும், சென்சேஷனல் செய்திக்காகவும் எங்கேனும் மறைந்திருந்து கூட காரில் என்ன நடக்கிறது என்று பார்த்து கொண்டிருக்கலாம் அல்லது உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியா விட்டாலும் காரை போகஸ் செய்து கொண்டிருக்கலாம்.
அந்த அளவு அவன் பார்த்து வளர்ந்ததில் இருந்து மாறுபட்டு தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டு, மனித உணர்வுகளை மதிக்காத அளவு சமூகம் மாறியிருப்பதையும் அத்தகைய சமூகத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நினைத்தவனுக்கு கசந்து போனது.
செல்போன் யுகத்தில் சமூகம் அந்தளவு மாறி போயிருக்கிறதே..!!
அனைத்திருக்கும் மேலாக ஆண் பெண் என்ற பாகுபாடு பார்க்கும் நிலை அங்கு இல்லை, ஒரு உயிரை காப்பாற்றும் வேகம் மட்டுமே..!!
ஆம் அவளை காப்பாற்றும் முனைப்புடன் செயல்பட்டவன் அவள் டாப்ஸை கழற்றிய கையோடு துவாலையால் அவளை போர்த்தி துடைத்தவன் மறுநொடியே தன் டீஷர்ட்டை அவளுக்கு அணிவித்திருந்தான்.
இதே யாழி இடத்தில் வேறொரு ஆணோ பெண்ணோ யார் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பான்.
அவள் தன் மனம் நிறைந்தவள் என்பதாலோ அல்லது நாளை தன் மனைவி ஆகக்கூடியவள் என்பதாலோ அவளுக்கு உடை மாற்றியபோது ஒரு நொடி கூட தடுமாறவில்லையே…, அவன் பார்வை தடம் மாறவில்லையே..!!
******************************************
‘இதை எப்படி அவளுக்கு புரியவைக்க..??’ என்று நெற்றியை தேய்த்தவாறு அமர்ந்தவனுக்கு அப்போது தான் அவள் வயது நினைவில் வர அவள் மனநிலையும் புரிந்தது.
ஆம் யாழி தான் அவனுக்கு பார்த்த பெண் என்று தெரியவும் அவள் குறித்த தகவல்களை படித்து பார்த்தவனிடம் அவள் வயதை கண்டு சிறு அதிர்வு, பின்னே எப்படியும் அவளுக்கு இருபத்தைந்து, இருபத்தாறாவது இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க அவளுக்கு இருபத்தி இரண்டு தான் என்பதை எதிர்பார்க்கவில்லை.
இப்போது தன் கோபத்தை தள்ளி வைத்து அவளை நெருங்கி யாழியின் முகத்தை நிமிர்த்திட இன்னுமே குறையாத அழுகை பெண்னவளிடம்.
அவள் கண்ணீரை துடைத்து ‘யாழி’ என்று அவனழைக்க
அவன் குரலுக்கு கட்டுப்பட்டு இதழ்களை கடித்து கொண்டு அவனை பார்த்தவளிடம் மௌனக்கண்ணீர்.
‘இப்போ நான் உனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டது தானே உன் பிரச்சனை..??’ என்று கேட்க,
விடைத்த நாசியுடன் வார்த்தைகள் இன்றி அவனை பார்க்க முயற்சித்து முடியாமல் போக அவள் விழிகள் தழைந்தது.
‘பைன் !! நான் சொல்றதை யாழியால நம்ப முடியுமா..??’ என்று கேட்க,
‘உன்னை நம்பாமல் வேறு யாரை நம்புவேன்’ என்று அவள் மனம் கூக்குரலிட்டது.
‘எப்படி இந்த நம்பிக்கை வந்தது..?? எதனால் அவன் வார்த்தைகளை மதிக்க தோன்றுகிறது..??’ என்று புரியாமலே அவன் மார்பில் விழிகளை நிலைக்கவிட்டவளிடம் ‘ஆம்’ என்ற சிறு தலையசைப்பு.
‘குட் !! யாழிக்கு நான் ட்ரெஸ் மாத்தலை’
‘அப்..அப்..போ..’
‘வேற ஒரு லேடியை கூட்டிட்டு வந்தேன் அவங்க தான் மாத்தி விட்டாங்க போதுமா..??’ என்றிட,
சட்டென நிமிர்ந்து, ‘நிஜமா..??’ என்று இமைகள் படபடக்க அவள் பார்த்த அழகிலேயே சொக்கி போனவனுக்கு நிச்சயம் உண்மையை ஏற்று கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லாததாலும் அவன் மீதான நம்பிக்கையையும் உடைக்க மனமற்று ‘ஆம்’ என்று கண் மூடி திறந்தான்.
மனம் கவர்ந்தவனின் வார்த்தைகள் அவளை இத்தனை நேரம் அவள் கொண்டிருந்த சஞ்சலத்தில் இருந்து மீட்டெடுக்க முகம் தெளிந்தவளிடம் ஆசுவாச மூச்சு கூடவே இதழ் கொள்ளா புன்னகையும்..!!
இருக்காதா பின்னே அவனை பற்றி என்ன தான் விஷ்ணு எதிர்மறையாக கூறி இருந்தாலும் அவள் ஆழ்மனம் அதை நம்ப மறுத்து அவன் மீது எல்லையில்லா நம்பிக்கை கொண்டிருந்தது அதனால் ‘நீ நினைச்ச மாதிரி இல்ல யாழி கொஞ்சம் நல்லவங்களா தான் இருக்காங்க’ என்று மனம் எடுத்துரைக்க,
‘தேங்க்ஸ்’ என்று புன்னகைத்து அவன் வார்த்தைகளை மனம் ஏற்று கொண்டாலும் ஒரு புறம் சுயநினைவின்றி இருந்த போது அவன் கரத்தை பிடித்து தடுத்தது நினைவலைகளில் எங்கோ ஒரு மூலையில் தன் இருப்பை உணர்த்தி கொண்டு தான் இருந்தது.
ஆனால் அதை புறம் தள்ளி அவன் வார்த்தைகளில் திளைத்து கொண்டிருந்தவளின் புன்னகை இன்னுமே அழகாய் விரிந்தது.
யாழியின் புன்னகையில் சட்டென தோன்றிய கன்னக்குழியை பார்த்தவனுக்கு அதை தீண்டும் வேகம் பிறந்தாலும் இப்போது தான் சகஜமாகி இருப்பவளை கண்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டான்.
அதே நேரம் மரகதம் கூறிய போது கூட அவள் பிடித்ததை நம்பாதவனுக்கு இப்போது ‘தன் வார்த்தைகளை மறுகேள்வி கேட்காமல் நம்பும் அளவிற்கு இவளுக்கு தன்னை பிடிக்குமா..??’ என்ற கேள்வி எழ,
உடனே, ‘யாழிக்கு என்னை பிடிக்குமா..??’ என்றான்.
அதுநேரம் வரை பயத்தில் தனக்கு ஏதோ நிகழ்ந்து விட்டதோ என்ற தவிப்பில் அவனிடம் தைரியமாக பேசிக்கொண்டு இருந்தவளுக்கு எதிர்பாராத அவனது நேரடி கேள்வியில் நிதர்சனம் புரிபட, ‘ஹான்’ என்று திகைத்து பார்த்தாள்.
‘இல்லன்னு சொல்லு யாழி உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்ட தானே அப்போ உடனே பிடிக்காதுன்னு சொல்லு சொல்லு’ என்று ஒரு குரல் செவியில் ரீங்காரமிட,
அதியோ மீண்டும் ‘என்னை யாழிக்கு பிடிக்குமா..??’ என்று முன்னுச்சியில் புரண்டு விழுந்த முடியை கோதியவாறே இருக்கையில் சாய்த்து புன்னகையுடன் அவளை பார்க்க,
இப்போது அவள் விழிகளை நிறைத்தது என்னவோ இருக்கையில் இலகுவாக சாய்ந்து அமர்ந்திருந்த அதிர்துடியனின் அகன்ற தோள்களும், திரண்ட புஜங்களும், வெற்று மார்பும் தான்.., அதிலும் எயிட் பேக்ஸ் கொண்ட அவன் உடற்கட்டில் இருந்து அவள் கண்கள் அகல மறுக்க இமைக்கும் நேரம் கூட அவனை ரசிக்க தடையாகி போகுமோ என்று அவளை அறியாமல் அவனில் லயித்து கிடந்தாள்.
‘யாழி என்ன பார்த்துட்டு இருக்க, உன்னை தான் கேட்கிறாங்க பதில் சொல்லு இது தான் சான்ஸ் பிடிக்காதுன்னு சொல்லிடு’ என்றிட,
அவளோ ‘என்ன சொல்ல..?? ஏது சொல்ல..??’ என்று புரியாது வார்த்தை வசப்படாது தவித்து மெல்ல அவள் விழிகள் மேலுயர்ந்து அவன் முகத்தில் படிந்தது.
அவள் பார்வை செல்லும் திசையை கண்டவனின் முகத்தில் புன்னகை அரும்ப இனி அவள் வார்த்தை தேவையே இல்லை அவனுக்கு,
பெண்ணவளின் விழி மொழி அவன் மீதான அவள் காதலை அத்தனை அழகாக ஆடவனுக்கு கடத்திட அதிர்துடியனின் மகிழ்ச்சியை வார்த்தையில் வடிக்கவும் வேண்டுமா என்ன…??
மனமெங்கும் அத்தனை நிறைவு கொண்டவன் அவள் முன் சொடக்கிட்டு, ‘நான் இப்படியே இருந்தா பார்க்க உனக்கு நல்லா இருக்கலாம் ஆனா எனக்கு குளிர் ஜுரம் வந்துடும் போல, சந்தேகமே வேண்டாம் ஐ ஆம் ஆல் யுவர்ஸ்..!!” என்று ஒற்றை கண் சிமிட்டிவன் அவள் முகத்தில் படர்ந்த செம்மையை ரசித்தவாறே,
“நீ நிதானமா கல்யாணத்துக்கு அப்புறம் பொறுமையா என்னை ரசிக்கலாம் ‘ என்று உல்லாசகுரலில் கூற அதை கேட்டவளின் முகம் குப்பென வெட்கத்தில் சிவந்து போனது.
‘அச்சோ’ என்று கண்களை மூடி தலை குனிந்து கொண்டவளின் அவள் கன்னத்தை தட்டி ‘இப்போ டைம் இல்ல நான் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்’ என்றுவிட்டு கீழே இறங்கியவன் தன் பெட்டியை திறந்து இடையில் துண்டை கட்டிக்கொண்டு உடை மாற்ற துவங்கிட அவன் பார்வை ஒரு முறை சுற்றத்தை அலசியது.
முன்புற கதவை திறந்து தன் கைபேசியை எடுத்தவன் பிரித்விக்கு அழைத்து அவனிடம் பேசி முடித்து வந்தவன் அவளிடம், ‘பின்னாடி சீட் ஈரமா இருக்கு’ என்று அவளிடம் தன் ஷார்ட்ஸ்சை கொடுத்து,
‘வெள்ளிக்கிழமை நிச்சயம்ன்னு சொன்னதால கிளம்பி வர அவசரத்துல எதுவும் தோணாம உனக்கு சாரி மட்டும் தான் எடுத்தேன் வேற வழி இல்ல இப்போ இதை போட்டுட்டு முன்னாடி வந்து உட்கார் வழியில பார்த்துக்கலாம்’ என்றான்.
அவளும் தன் இடையில் இருந்த துண்டை பார்த்தவள் மறுபேச்சு பேசாமல் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவனிடம் இருந்து வாங்க அதிர்துடியனோ கதவை சாற்றி விட்டு திரும்பி நின்று கொண்டு சுற்றுபுறத்தை நோட்டம் விட தொடங்கினான்.
அவன் கண்ணியமான செய்கையில் மனம் மீண்டும் அவன் புறம் சாய அவன் முதுகை பார்த்தவாறே மாற்றிக்கொண்டு ஜன்னலை தட்டி இறங்க அதிர் அவளை பத்திரமாக முன்புறம் அமர்த்தி இருந்தான்.
error: Content is protected !!