Skip to content
Post Views: 12,278
யாழி அமரவும் காரை சுற்றி கொண்டு வந்த அதிர் கதவை திறக்க அவன் கைபேசி ஒலித்தது எடுத்து பார்க்க சுந்தரலிங்கம் தான் அழைத்திருந்தார்.
‘டூ மினிட்ஸ் யாழி அப்பா கால் பண்றாரு பேசிட்டு வந்துடுறேன்’ என்று தன்னிடம் கூறிக்கொண்டு சென்றவனை யாழி விசித்திரமாக பார்த்திருந்தாள்..,
பின்னே ஒரு அழைப்பை ஏற்பதற்கு கூட சிறு பிள்ளை போல அவளிடம் சொல்லி விட்டு சென்றால் அவளும் என்ன நினைக்க..?? இவன் ஏன் இப்படி என்று பல நிமிடம் யோசித்தவள் இறுதியாக,
‘அதிர்துடியன் ஆள் வளர்ந்த அளவு இன்னும் அறிவு வளரவில்லை போலும்’ என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
Advertisement
பின்னே உடன் யார் இருந்தால் என்ன..?? எங்கு இருந்தால் என்ன..?? எந்த நிலையில் இருந்தால் என்ன..?? எந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தால் என்ன..?? அழைப்பு வந்தால் அதை அப்படியே ஏற்று பதில் அளித்து தான் அவளுக்கு பழக்கம், அதிலும் சிறுபிள்ளை போல ஒரு அழைப்பை ஏற்பதற்கு கூட மற்றவர்களின் அனுமதி வேண்டி நின்றாலோ அல்லது சொல்லி கொண்டு சென்றாலோ அவர்களின் மதிப்பு என்னாவது..??
எப்போதும் மிதப்பாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட தலைமுறையில் இருப்பவளுக்கு அவன் நடவடிக்கைகள் வித்யாசமாக தோன்றுவது நியாயம் தானே..!!
‘அதி ஒரு முக்கியமான விஷயம்பா’ என்று பீடிகையோடு தொடங்கியவர் எதிரே இருந்தவரை பார்த்தவாறே அவனிடம், ‘மகேஷ் கல்யாணத்தை தள்ளி போட சொல்றாரு’ என்று ஆரம்பிக்க அதியின் நெற்றி சுருங்கி விரிந்தது.
Advertisement
சில நிமிடங்களுக்கு பின், ‘ஏன்..??’ என்ற ஒற்றை கேள்வி மட்டுமே அவனிடம்.
Advertisement
‘அது வந்துப்பா..’ என்று அவர் எப்படி விஷயத்தை தொடங்க சற்று யோசிக்க,
‘நீங்க மிஸ்டர் மகேஷ் கிட்ட கொடுங்கப்பா’ என்றான் காரில் இருந்த யாழியை பார்த்தவாறு,
சுந்தரம் அதிர்துடியனுக்கு அழைத்து விடுவார் என்பதை எதிர்பாராத மகேஷிற்கு பதற்றம் தொற்றிக்கொள்ள நெற்றியை அழுந்த பிடித்து கொண்டு அமர்ந்திருந்த நபர் பின் முகத்தை அழுந்த துடைத்து கைபேசியை வாங்கி, ‘ஹ.. ஹலோ சார்’ என்று தொடங்க பல நிமிடங்கள் அவருடன் பேசி முடித்து வந்தவன் மெளனமாக காரை கிளப்பி இருந்தான்.
Advertisement
ஆனால் கார் கிளம்பிய சில நொடிகளிலேயே என்ன முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் யாழியின் பார்வை அவன் மீது மையலாக படிந்தது.
என்ன நடக்கிறது எனக்குள்..?? ஏன் இத்தனை கட்டுபாடின்றி இருக்கிறேன் நான்..?? கல்லூரியில் படிக்கும் போது கூட அவள் தோழிகள் எதிர்பாலினத்தினரை சைட் அடிப்பதையும் கல்லூரி தோழர்களுடன் கடலை போடுவதையும் கல்லூரியை கட் அடித்து விட்டும் விடுமுறை நாட்களில் வீட்டில் பொய் சொல்லி விட்டு அவர்களுடன் ஊர் சுற்றுவதையும் பார்த்திருந்தாலும் ஏனோ யாழிக்கு அதில் அத்தனை பிடித்தம் இல்லை.
இது தான் காரணம் என்று வரையறுக்க முடியாவிட்டாலும் ஏனோ அவளுக்கு அதில் உடன்பாடு இல்லை.
தம்பியுடனும் தோழிகளுடனும் வெளியில் சுற்றி புகைப்படம் எடுத்து பதிவேற்றுவது காணொளி எடுப்பது, பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியை ஒரு முறை பெண்கல்வி குறித்த பாடம் எடுத்து அதன் தொடர்பாக பேசியதில் ஈர்ப்பு கொண்டு சமூக வலைதளங்களில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை படிப்பது கேட்பது, அப்போதைய ட்ரெண்டில் அப்டேட்டாக இருப்பது யூடியூப்காக என்று நேரம் செலவிடுவாளே தவிர பெரிதாக எந்த ஆண் மீதும் ஈர்ப்போ காதலோ ஏற்பட்டதில்லை.
ஆனால் அறிவிற்கும் மனதிற்கும் இடையில் ஊசாலாடிக்கொண்டு இருப்பவளுக்கு புகைப்படத்தில் இருந்தே அவளை வசியம் செய்து கொண்டிருப்பவனை என்ன முயன்றும் வெறுக்க முடியவில்லை…,
வெறுப்பு என்பதை கடைநிலையாக கொண்டாலும் அதற்கு முதல் தன் பார்வையையே அவன் மீதிருந்து திருப்ப முடியவில்லையே இதற்கு அவளும் என்ன செய்ய..??
எப்படி வேலியிட்டு அவளை அவள் கட்டுபடுத்த..?? என்ன விதமான உணர்வு இது..?? எதனால் இந்த பிடித்தம்..?? சுத்தமாக அவள் குணத்திற்கு பொருந்தாதவன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறாள் அதே போல அவள் லட்சியத்திற்கு முதல் தடையே அவனாக தான் இருப்பான் என்பது புரிகிறது.., அப்படி இருந்தும் இந்த பாழும் மனது ஏன் அவனில் கிறங்கி கிடக்கிறது என்பது தான் அவளுக்கு புரியாத புதிராகி போனது..!!
யாழி அவன் நினைவில் உழன்று கொண்டிருந்த அதே நேரம் ‘அம்மா கிட்ட என்ன சொன்ன..??’ என்றான் பார்வையை திருப்பாமல்.
ஓரவிழியால் அவனை பார்த்து கொண்டிருந்த யாழிக்கு அவன் குரல் எங்கே கேட்டது..?? அவன் கேசம் அசைந்தாடும் அழகில் தன் போக்கில் கருவிழிகளை சுழல விட்டு கொண்டு இருந்தாள்.
‘யாழி அம்மாட்ட என்ன சொன்ன..??’ என்று இப்போது அவள் புறம் திரும்பி சற்று குரலை உயர்த்தி கேட்க,
அவன் கேள்வியை எதிர்பாராமல் ‘ஹான் என்… என்னா.. என்ன கேட்டீங்க..??’
‘அம்மாட்ட என்ன சொன்னேன்னு கேட்டேன்..??’ என்று மீண்டும் அவன் கேட்க யாழியின் முகமோ பேயறைந்தது போலானது.
பின்னே அவள் தான் திருமணத்தையும் அவனையும் மறுத்து சுகமதியிடம் இஷ்டத்திற்கு பேசி வைத்திருக்கிறாளே இப்போது என்ன சொல்வது என்று புரியாமல் ‘அம்மாகிட்டயா..??’ என்று அவள் நெஞ்சம் வேகமாக அடித்து கொள்ள,
‘ஆமா’
‘அ..த.. துவா..??’ என்றவளின் முகத்தில் வியர்வை அரும்புகள் பூத்திருந்தன.
‘அ.. த்.. அத… அது..’என்று இதழ்கள் தந்தியடிக்க கைவிரல்கள் நடுக்கத்துடன் ஒன்றை ஒன்று பின்னிக்கொள்ள வியர்வை வழிய அவனை பார்த்தவளின் கண்களில் மீண்டும் நீர் திரண்டு விட்டது.
‘ஹே என்னாச்சு..?? குளிருதா..??’ என்று அவன் ஜன்னலை ஏற்ற அவள் இதழ்கள் அழுகையில் பிதுங்கி கொண்டது.
வீட்டில் பெற்றவர்களிடம் தவறு என்று தெரிந்தோ தெரியாமலோ எத்தனை அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், வயதிற்கே உரிய துடுக்குத்தனத்தோடு வார்த்தைகளை சிதற விட்டிருந்தாலும் நமக்கு பிடித்த ஆசிரியைக்கு அது தெரிந்து விடக்கூடாது எக்காலத்திலும் அவரிடம் அவப்பெயர் வாங்கி விடகூடாது என்று ஏங்கும் குழந்தையின் மனநிலையில் யாழி.
ஆம் சுகமதி, மகேஷ் இருவரும் பேசியதில் முழு தெளிவு இல்லையென்றாலும் யாழி திருமணத்தை மறுத்ததில் ஏதோ தவறு இருப்பது போல அவர்கள் பேசியது மட்டும் அதிக்கு தெரிந்தால் ‘அவனுக்கு தன்னை பிடிக்காமல் போகுமோ..??’ என்ற தடுமாற்றம் பெண்ணவளிடம்.
இதற்கு முன் அவள் மீதான மற்றவர்களின் மதிப்பீட்டையும் அபிப்ராயத்தை பெரிதாக மதிக்காதவள் ‘மை லைப் மை ரூல்ஸ்’ என்று எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காதவளுக்கு இப்போது புதிதாக என்றுமே அவன் குட் புக்ஸ்சில் இருக்க அவள் மனம் விழைகிறதே அதனால் புறப்பட்ட அழுகை இது..!!
‘யாழி வாட் இஸ் திஸ்..?? ஸ்டாப் க்ரையிங்..!! நான் என்ன கேட்டேன்னு இப்படி அழற..??’ என்று அவன் காரை நிறுத்த,
அவளிடம் இன்னுமே அழுகை அதிகரித்தது…,
‘ஐ செட் ஸ்டாப் க்ரையிங்’ என்று பொறுமை இழந்து அதட்டிவிட்டான்.
அதில் திடுக்கிட்டவள் சட்டென கேவலை நிறுத்தி ‘நா.. நான் ஒன்னும் சொல்லல்..’ என்று அவள் புறங்கையால் கண்ணீரை துடைக்க,
“ப்ச் என்னடி உன் பிரச்சனை..??” என்று அவன் காரை விட்டு கீழிறங்க யாழிக்கு இன்னுமே பதறி போனது, திருமணத்தை மறுத்ததால் இப்போது தன்னை அறைவானோ..?? என்று பலவித எண்ண அலைகள் அவளை சூழ்ந்திட அச்சத்தில் கண்களை மூடி மனம் வெதும்பி போனாள் பாவையவள்.
“கடவுளே கடவுளே ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்து, நான் வேண்டாம்ன்னு சொன்னது அவருக்கு தெரியவே கூடாது அப்புறம் கோபம் வந்து என்னை அடிச்சி பேட் கேர்ள்ன்னு சொல்லி இறக்கி விட்டுட்டா நான் என்ன பண்றது..??” என்று புலம்பியவாறே ஊரில் உள்ள கடவுள்களிடம் எல்லாம் யாழி வேண்டுதல் வைத்து கொண்டிருக்க அதே நேரம் அவள் நாசியை துளைத்தது சுக்கு காபியின் மணம்..,
உடனே கண்களை திறந்தவள் அவனையும் அவன் கையில் இருந்த கோப்பையையும் மாறி மாறி பார்க்க,
‘இதை குடி யு பீல் பெட்டர்’ என்றான் கட்டளையாக,
‘அவன் வார்த்தைக்கு மறுவார்த்தை என்பது ஏது அவளிடம் ..??’
தேங்க்ஸ் கடவுளே என்று மனதினுள் சொல்லியவாறே நடுங்கும் கரம் கொண்டு அவனிடம் இருந்து வாங்க முற்ப்பட்டாள்.
அவள் நிலை கண்டவன் ‘கொடு நான் கொடுக்குறேன்’ என்று கதவை திறக்க,
‘இல்லல்லா பரவால்ல நானே’ என்று சற்று பின்னே நகர்ந்து அவசரவசரமாக யாழி டம்ப்ளரை வாயருகே கொண்டு செல்ல அவள் பார்வை மீண்டும் அவனிடம்,
அது நேரம் வரை கார் கதவில் கரம் பதித்து அவளை பார்த்து கொண்டு இருந்தவன் ‘என்ன..??’ என்பதாக புருவம் உயர்த்த,
‘நீ.. நீங்க..?? உங்களுக்கு..??’ என்றவாறே காபியை டபராவில் பாதி ஊற்றி அவனிடம் கொடுத்தாள்.
அவள் செய்கையை எதிர்பாராதவனின் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.
அவன் வாங்காமல் அவளை பார்ப்பதை கண்டு, ‘ஏ.. ஏன் உங்களுக்கு பிடிக்காதா..??’ என்று தைரியத்துடன் கேட்டுவிட்டாலும் உள்ளே தடதடத்து கொண்டிருந்தது அவன் மறுத்து விடக்கூடாதே என்று..!!
கண்கள் புன்னகைக்க அவளிடம் இருந்து வாங்கியவன் குடிக்க தொடங்கிய பின்பே யாழியும் குடிக்க தொடங்கினாள்.
மீண்டும் வந்து அமர்ந்தவன், ‘ஆர் யு ஆல்ரைட் நவ்..?? பீலிங் பெட்டர்..!!’ என்று கேட்க ,
ஆம் என்று தலை அசைத்தவளின் பார்வை அவன் இடப்புற புருவ முடிவில் இருந்த தழும்பில் நிலைத்தது.
தன் இருக்கையை பின்னே தள்ளி தலைக்கு பின் இருகரங்களையும் கோர்த்து கொண்டவன் அவள் புறம் திரும்பி லேசாக குரலை செருமி ‘சரி இப்ப சொல்லு’ என்றிட,
‘என்ன சொல்லணும்..??’ என்பதான பார்வை பேதையிடம்.
‘யாழிக்கு என் போட்டோவை காட்டினப்போ எங்க அம்மா கிட்ட என்ன சொன்னன்னு கேட்டேன்..?? அதுக்கு ஏன் அப்படி ஒரு அழுகை..??’ என்று நிதானமாக கேட்க,
அவன் கேள்வி புரியவும் நெஞ்சில் கரம் பதித்து, ‘ஓஓஒ…’ என்ற ஆசுவாச குரல் அவளிடம்,
‘இப்போ சொல்லு என்ன சொன்ன..??’
‘பிடி.. பிடிச்சிருக்குன்னு சொன்னேன்’ என்று தன்னை மீறி கூறிவிட்டாள்.
‘நிஜமா..??’ என்று உயிரை ஊடுருவும் அவன் குரலுக்கு கட்டுபட்டவளிடம் ‘ஆம்’ என்பதான தலையசைப்பு.
புருவ மத்தி முடிச்சிட அவளையே சில கணங்கள் ஆழ்ந்து பார்த்தவன் பின் தீவிர யோசனையுடன் பார்வையை சாலையில் பதித்து இருந்தான்.
எத்தனை நேரம் என்று தெரியாது அவன் மௌனமாக வாகனத்தை செலுத்த, ‘ஏய் லூசு யாழி என்ன பண்ற நீ..??’ என்று அவள் மனம் கடிவதை பொருட்படுத்தாமல் அவள் பார்வை நொடிக்கொரு முறை ஒரு வித தாள லயத்தோடு கடந்த சில நிமிடங்களாகவே அதிர்துடியனின் நெற்றியில் படிந்து, புரண்டு தவழும் அவன் கேசக்கற்றையில் நிலைத்து இருந்தது.
அதிலும் அதிர் அவ்வப்போது ஸ்டீரிங்கை ஒரு கையால் பிடித்தவாறு நெற்றியில் புரளும் கேசத்தை இடக்கரத்தால் கோதி விடும் அழகு அவளை மொத்தமாக கொள்ளை கொள்ள தவித்து தத்தளித்து போனது பேதை நெஞ்சம்.
கண்களை இறுக மூடிக்கொண்டு எச்சிலை கூட்டி விழுங்கியவாறு ‘பார்க்காத, பார்க்காத’ என்ற அவளுக்கு அவளே இட்ட கட்டளைகள் எல்லாம் அதியின் ஆளுமையின் முன் மண்டியிட அவளும் என்ன தான் செய்வாள்..??
புகைபடத்தில் கண்ட நொடியே இத்தனை வருடங்களாக சலனமின்றி இருந்த பெண் மனதில் நுழைந்து கலகம் செய்து கொண்டிருப்பவனின் அருகாமையில் பெண்ணவள் படும்பாடு வார்த்தைகளில் அடக்கி விடக்கூடியவை அல்ல..!!
குளிர் தென்றலும் அனல் காற்றும் ஒன்றோடொன்று கைகோர்த்து அவளை தழுவி வதைக்க தொடங்கியதில் சுகவதை கொண்ட மனம் மீண்டும் மீண்டும் அவனையே முட்டி நின்றது.
அதிலும் அதிர்துடியனின் இடதுபுற புருவ முடிவில் இருந்த சிறு தழும்பு அவன் வசீகரித்தை கூட்டிட அதை தொட்டு பார்க்கும் எண்ணம் எழ திடுக்கிட்டு போனாள்.
“வேணாம் யாழி தப்பு பண்ணாத அவருக்கும் உனக்கும் நிறைய வயசு வித்யாசம் கண்டிப்பா போடா வாடான்னு சொல்ல முடியாது அது கூட பரவால்ல உன்னால அவரை பார்த்து பேச கூட முடியலை எப்படி காலம் தள்ள முடியும் வேண்டாம்டி உங்களுக்குள்ள கண்டிப்பா செட்டே ஆகாது…, அதோட உன் யூடியுபர் கனவும் கோவிந்தா கோவிந்தா தான் சோ கண்ட்ரோல் யுவர்செல்ப்” என்று மனதை அடக்க அவள் அரும்பாடுபட,
அதுவோ அவளுக்கு எதிராகவே திரும்பியதோடு அல்லாமல் கடிவாளமற்ற குதிரையாக அதிர்துடியனிடம் சரண் புக துடித்து கொண்டிருந்தது.. அவள் எத்தனையோ முயன்ற போதும் அதை இறுக்கி பிடிக்க முடியாமல் அவள் விழிகளும் மனதோடு கூட்டு சேர்ந்ததில் அவளையும் அறியாமல் சுற்றம் மறந்து அவனில் லயித்து கிடந்தாள்.
“ஏன் யாழி இப்படி பார்த்துட்டு இருக்க..??? மானத்தை வாங்காதே தயவு செய்து திரும்பு” என்று அவளே அவளுடன் போராடி களைத்து போனாள்.
கடைசியா போன வருஷம் அக்வ்வேரியம்ல ( aquarium) ஒரு குட்டி மல்டிகலர் மீனை இப்படி தான் உன்னையே மறந்து உத்து உத்து பார்த்து ரசிச்சுட்டு இருந்த ஆனா இப்போ அதை விட அதிகமா ஏன் உன் கண்ணு அவர் மேல போகுது.. ஏன்டி இப்படி பண்ற..?? இதுவரை நீ இப்படி யாரையும் பார்த்தது இல்லையே, என்னதான் அவர் பார்க்காதப்போ பார்த்தாலும் அது அவருக்கு தெரிஞ்சா மானமே போயிடும் அமைதியா இருடி” என்று உள்ளுக்குள் நொந்து போனாள்.
என்ன விதமான உணர்வு இது..!! ஒருவேளை விஷ்ணு சொன்னது போல அவன் தனக்கு முட்டை மந்திரித்து விட்டானோ என்று யோசிக்க அப்போது தான் தம்பியின் நினைவே வந்தது அவளுக்கு அதுவும் பல மணி நேரம் கடந்து..,
பதறிக்கொண்டு ‘விஷ்ணு’ என்று சப்தமிட போனவள் எங்கே அதிக்கு அது கேட்டுவிட்டால் அன்று வீடியோ எடுத்ததற்காக தம்பியை அடித்து மூக்கை உடைத்தவன் மீண்டும் அடிப்பானோ என்று தோன்ற வார்த்தைகளை அப்படியே தனக்குள் விழுங்கி கொண்டாள்.
ஒருபுறம் அவனுக்கு என்னவானதோ என்ற பரிதவிப்பு எழுந்தாலும், மறுபுறம் நிச்சயம் குன்றில் இருந்து எப்படியும் தன்னை தேடி கீழே வந்தவன் அவள் ஆற்றில் விழுந்ததையும் காப்பாற்றபட்டதையும் அறிந்து கொண்டு வீட்டிற்கு சென்று சேர்ந்திருப்பான் என்று நம்பினாள்.
அதனாலேயே தேவை இல்லாமல் அதிர்துடியனிடம் தம்பியுடன் வந்தது அங்கு நடந்தது எல்லாம் சொல்லி அவன் கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்று அமைதியாகி போனாள்.
***************************************
பெண்ணவளின் அவஸ்த்தைகள் அவளோடு நிற்காமல் அவ்வப்போது அவள் அறியாமல் அவள் மீது பார்வை பதித்து இருந்தவனையும் சிறுக சிறுக சேர்த்திழுக்க அவன் விழிகளும் கட்டுபாடின்றி அவளில் படிந்து மீண்டு கொண்டு தான் இருந்தது.
திடீரென வாகனம் நிற்கவும் புரியாமல் ‘ஏன்..?’ என்று அவனை பார்க்க கீழிறங்கிய அதிர்துடியன்,
‘டூ மினிட்ஸ் வந்துடுறேன்’ என்றவன் அருகே இருந்த கடைக்கு சென்று அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கான உடையுடன் திரும்பி இருந்தான்.
கதவை திறந்து அவளிடம் அதை கொடுத்து, ‘சேன்ஜ் பண்ணிக்கோ’ என்றான்.
‘ஏன்’ என்ற கேள்வி அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது என்றும் புரியாமல் அவள் அவனிடம் ‘ஏன்..??’ என்று கேட்டு வைக்க,
‘எவ்ளோ நேரம் டீஷர்டோட என்னை டெம்ப்ட் பண்ணிட்டு இருப்ப..??’ என்று அசராமல் கேட்டவனின் பார்வை மெல்லிய தேகம் கொண்டவள் அணிந்திருந்த டீசர்ட் மீது அழுத்தமாக படிந்தது.
சென்ற பிறந்தநாளின் போது சொக்கலிங்கம் அவனுக்கு பரிசளித்த டீஷர்ட் அது..!!
அளவு தெரியாமல் வாங்கி வந்ததில் அவனுக்கே அது சற்று பெரிதாக தான் இருக்கும்.. ஆனால் இப்போது அவள் அணிந்திருக்கையில் தொளதொளவென இருந்த அதனுள் அவன் தாராளமாக நுழைந்து கொள்ளலாம்.
ஆனால் அவனுக்கு பதில் மாலை நேர குளிர் காற்று அடிக்கடி டீஷர்ட்டினுள் நுழைந்து வெளியேறியதில் யாழி அவ்வப்போது இருகரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொள்வதை கண்டவனுக்கு காற்றுக்கு பதில் அவ்விடத்தில் தன்னை இட்டு நிரப்பிவிடும் வேகம்..!!
அவன் வார்த்தை புரியாமல் ‘ஹான்’ என்று அவள் மிரண்டு விழிக்க,
விரிந்த அவள் விழிகளும் சிப்பியாக திறந்திருந்த இதழ்களும் நாசியை அலங்கரித்து இருந்த ஒற்றை கல் மூக்குத்தியும் அந்தி சூரியனின் ஒளிக்கதிர் பட்டு வைரமாய் மின்னி அவனை பித்தம் கொள்ள செய்ய இருக்கும் இடம் மறந்து அவள் இருக்கையில் கரம் பதித்து அவள் தோள்களை சுற்றி படரவிட்டு அவளை நெருங்கி விட்டான்.
‘என்ன நடக்கிறது’ என்று புரியாமல் யாழி திகைத்து பார்க்க அதற்குள் அவள் நாசியை முட்டி நின்ற ஆடவனின் வெம்மை அக்னிசிதறலாய் பெண்ணவளை வதைக்க யாழியோ சொன்னதை செய்யாமல் கேள்வி கேட்டதற்காக எங்கே தன்னை அடித்து விடுவானோ என்று பயந்து கண்களை மூடிக்கொள்ள,
அதிரனோ மூச்சை ஆழ்ந்து வெளியேற்றி அவள் மூக்குரசி ‘என்னை பாருடி’ என்று கட்டளையிட்டான்.
அவன் குரலுக்கு கட்டுப்பட்டு மெல்ல கண்களை திறந்து கருவிழிகள் நர்த்தனமாட அவன் விழிகளை சந்தித்தவள் ‘நான் ஒன்.. ஒன்னும் பண்ணல’ என்று எச்சிலை கூட்டி விழுங்க,
அவனோ தன்னை மீறி ஒற்றை கல் மூக்குத்தியில் தன் அதரங்களை பொருத்தியவன் அங்கிருந்து நகரும் எண்ணமில்லாமல் அங்கேயே கூடாரமிட படபடத்து போனது யாழிக்கு..,
பயத்தில் தாளம் தப்பி போன அவள் மூச்சுக்காற்று அதிவேகமாக அவன் முகத்தில் அறையவும் தான் கடினப்பட்டு தன்னை மீட்டெடுத்து அவளை பார்த்தவன்,
‘என்னை என் கன்ட்ரோல்ல இருக்க விட மாட்டேங்கிறடி நீ..!! இப்போ நீயே மாத்திக்க போறியா இல்ல நான் மாத்தி விடட்டுமா..??’ என்று கேட்க யாழியின் முகம் நிறமிழந்து போனது.
error: Content is protected !!