ராகம் – 19.1
அதிர்துடியன் கிளம்பிய அடுத்த இருபது நிமிடத்தில் விஷ்ணு யாழியை தேடி வந்து விட்டான்.
ஆம் மறுவீட்டிற்கு அவன் விடுப்பு கேட்க அதிர்துடியனோ ‘ஏன் நீ என்ன எங்களுக்கு சமைச்சு போடபோறியா..?? என்றவன் போ.. போய் வேலையை பார் வேணும்ன்னா நைட் ஷிப்ட் பண்ண வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு’ என்று கூறி இருந்தான்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக யாழியிடம் சரியாக பேச கூட முடியாமல் ஏதோ இழந்தது போல உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்த விஷ்ணுவும் இன்று தமக்கையுடன் நேரம் செலவழிக்கும் குதூகலத்துடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்.
Advertisement
‘யாழி யாழி..’ என்று ஆர்பரித்தவாறே அவள் அறைக்குள் விஷ்ணு நுழைந்திட அது நேரம் வரை அதிர்துடியன் சொன்னது போல அவனை ஸ்னாக்ஸ் சாப்பிட விடாமல் காபி கூட குடிக்க விடாமல் செய்து விட்டோமே அது தவறு தானே என்ற குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டிருந்த யாழி தம்பியின் குரலில் சிந்தை கலைந்து அவனிடம் சென்றவள்,
“டேய் ஏன்டா லேட் ..?? நான் வரேன்னு தெரிஞ்சும் இப்போ தான் வருவியா..?? எப்படிடா இருக்க..??” என்று ஒரு நாள் பிரிவே பலமாதமாகி போனது போல அவள் கேட்க,
‘நல்லா இருக்கேன்டி’ என்றவன் கையோடு கொண்டு வந்திருந்த கசாட்டா ஐஸ்க்ரீமை அவளிடம் கொடுக்க,
Advertisement
“ஒரு கால் பண்ணி கூட என்கிட்டே பேசவே இல்ல இப்போ ஐஸ்க்ரீம் மட்டும் எதுக்கு..?? போடா எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்று யாழி முகம் திருப்பினாள்.
Advertisement
‘யாழி உன் நிச்சயம் அன்னையில் இருந்தே எனக்கு புல் டே பேக்டரில வேலை உனக்கே தெரியும் அங்க போன் அலோவ்ட் கிடையாது… நைட் ஷிப்ட் முடிச்சிட்டு வந்து காலையில உன் கிட்ட பேசலாம்ன்னு அம்மா கிட்ட போன் கேட்டா இங்க தானே வர போறா காலைலயே என்ன போன்னு ஒரே திட்டு’ என்றவன்,
சரி அதை விடு, ‘நீ எப்படிடி இருக்க..?? அங்க எல்லாரும் உன்னை நல்லா பார்த்துக்குறாங்க…’ என்று அவன் முடிக்கும் முன்னமே,
‘டேய் உனக்கு தெரியாதே அங்க என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்குறாங்கடா, நாம நினைச்ச மாதிரி சிலர் வீடியோல சொன்னது போல எல்லாம் இல்லை சாருக்கா, ப்ரித்வி மாமா, அத்தை, மாமா எல்லாரும் ரொம்ப ஸ்வீட் அம்மா சொன்னதை வச்சி நான் கேட்டப்போ கூட அத்தை என்னை எந்த வேலையும் செய்ய வேண்டாம் சொல்லிட்டாங்க..’
Advertisement
விஷ்ணுவிற்கு மற்றவர்களை பற்றி கவலை இல்லை அதனால், ‘அவர் எப்படி பார்த்துக்குறார்..??’ என்றான்.
‘எவர்டா..??’
‘அதான் உன்னோட ஹஸ்பன்ட் திரும்ப உன்னை ஏதாவது திட்டினாங்களா..?? மிரட்டினாங்களா..?? எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லு யாழி’
‘இல்லடா அப்படி எதுவும் இல்ல, உனக்கு தெரியுமா இன்னைக்கு காலையில என்னை படிக்க சொல்லிட்டு அவரே எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்..’
‘என்னது படிக்க சொல்லியா..?? என்னடி படிக்கிற..??’ என்று புரியாமல் அவன் பார்க்க,
‘அதை ஏன்டா கேட்கிற..??’ என்று நொந்து கொண்ட யாழி பரிதாபமாக தன் சோக கதையை சொல்ல அட்டகாசமாக சிரிக்க தொடங்கி விட்டான் விஷ்ணு..
‘டேய் வாயை மூடுடா’ என்று அதட்டியும் அடங்கினான் இல்லை.
“ஏய் அன்னைக்கு நீ உருட்டின உருட்டோட எபெக்ட் இந்த அளவு இருக்கும்ன்னு நெனச்சி பார்க்கலைடி அதுவும் உன்னை கலெக்டரா நினைக்கிறப்பவே சிரிப்பை நிறுத்த முடியலை” என்றவன் படுக்கையில் உருண்டு புரண்டு சிரித்து கொண்டிருந்தான்.
‘விஷ்ணு’ என்று அவனை பிடித்து நிறுத்தி தலையணையை எடுத்து யாழி அடி போட,
‘இதுல ஹைலைட்டே வருங்கால கலெக்டர்க்கு குடும்பமே சேவை செஞ்சிட்டு இருக்குறது தான்… ஆனா ஒன்னு யாழி இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ தெரியலை’ என்றவன் கண்களில் வழிந்த நீரை துடைக்க யாழியோ,
‘விஷ்ணு அமைதியா இருடா.. புக் எடுத்தாலே நேரம் காலம் இல்லாம தூக்கம் வருது… அவர் வேற என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சி டைம் டேபிள் போட்டு டெஸ்ட்க்கு குவெஸ்ட்டீன் பேப்பர் செட் பண்ணினு என்னென்னமோ பண்றார்டா போற போக்கை பார்த்தா என்னை கலெக்டர் ஆக்காம விடமாட்டார் போல..’ என்று புலம்ப,
‘ஏன் யாழி உன்னை நம்பி இத்தனை பேர் இருக்கப்போ பேசாம நீ கலெக்டர் ஆகிடேன் நானும் கலெக்டர் தம்பின்னு ஊருக்குள்ள கெத்தா சுத்துவேன்… ‘
‘போடா டேய் நீயும் விளையாடாத.., முடிஞ்சா அவர் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஐடியா கொடு..!!’ என்றவள் பெருமூச்சுடன் தம்பியை பார்த்து,
‘நானே ஏற்கனவே சேனல் எந்த நிலைமையில இருக்குன்னு கூட தெரிஞ்சிக்க முடியாம இருக்கேன்.. இன்னும் எவ்ளோ சப்ஸ்க்ரைபர்ஸ் இன்க்ரீஸ் ஆகி இருக்காங்கன்னு தெரியலை, எத்தனை பேர் கமென்ட் பண்ணி இருக்காங்கன்னு தெரியலை’
‘ஏன்டி’
‘போன் உடைஞ்சி போச்சுடா’
‘என்னடி சொல்ற வாங்கி பத்து நாள் கூட ஆகி இருக்காது எப்படி உடைஞ்சது..?? நீ எப்பவும் இவ்ளோ கேர்லெஸ்சா இருக்க மாட்டியே எப்படிடி உடைய விட்ட..??’ என்று கேட்க யாழிக்கோ நேற்றைய இரவு நினைவில் வர பதிலின்றி அமர்ந்திருந்தாள்.
‘சொல்லுடி’
‘டேய் எப்படியோ உடைஞ்சது இப்போ அதுவா முக்கியம்..??’ என்றவள் உடைந்த பாகங்களை எடுத்து அவன் முன் நீட்டி
‘எவ்ளோ காஸ்ட்லி போன் ரிப்பேர் பண்ண முடியுமா பாருடா’ என்றிட,
‘சரி கொடுடி’ என்று விஷ்ணு தன் கையை நீட்ட யாழியின் பார்வையோ அவன் உள்ளங்கையை விட்டு அகலாமல் அதிர்ந்து போனது.
‘விஷ்ணு..’ என்று போனை கீழே போட்டவள் அவன் உள்ளங்கையை இழுத்து அருகில் பார்க்க அதுவோ ஆங்காங்கே கிழிந்து கன்றி சிவந்து போயிருந்தது.
‘என்னடா இது..?? உன் கை ஏன் இப்படி இருக்கு..??’
‘வேலை யாழி’
‘வேலைன்னா..??’ என்று புரியாமல் பார்த்தவள்,
‘ஏன்டா வேலைன்னா என்ன அர்த்தம்..?? அங்க போய் நீ என்ன கல்லா தூக்கி சுமக்குற..??’ என்று அவள் கோபமாக கேட்க,
‘ஆமா’ என்று தலை அசைத்தான்.
‘என்னடா சொல்ற..??’
“ஆமாடி இந்த ஒருவாரமும் என்னை கிரானைட் கல்லை ஏத்தி இறக்கிறது பாலிஷிங் போடுறதுன்னு செய்ய சொல்லிட்டாங்க அதான் இப்படி ஆனா அடுத்த வாரத்துல இருந்து வேற வேலை இருக்கும்ன்னு அப்பா சொன்னார்”.
‘விஷ்ணு என்ன இது..?? நீ எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்ற..?? யார் உன்னை செய்ய சொன்னா சொல்லு’ என்று கேட்க அதிர்துடியன் முகம் கண்கள் முன் வந்து போனாலும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
பின்னே அவனுக்கு அவன் காயம் கஷ்டத்தை விட தமக்கையின் வாழ்க்கை முக்கியமில்லையா..?? அதனால் அதிர்துடியனுக்கு அடிபணிந்து செல்கிறான்.
‘சொல்லு விஷ்ணு யார்டா என் தம்பியை இப்படி அடிமாடு மாதிரி நடத்துறது..?? செய்ய முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானேடா.. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க’ என்று கண்ணீருடன் கேட்க
‘ப்ச் யாழி எதுக்கு அழற..?? விடுடி அழாத’ என்று அவள் கண்ணீரை துடைக்கவும்,
‘கஷ்டமா இருக்காடா..?? இதோ பார் என்கிட்டே பொய் சொல்லாம சொல்லணும் சொல்லுடா’
‘முதல்ல ரெண்டு நாள் கொஞ்சம் கஷ்டமா இருந்ததுடி அப்புறம் பழகிடுச்சி இப்போ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’
‘கையெல்லாம் அங்கங்க கீறி கிழிச்சி ரத்தம் வந்திருக்கும் போல இருக்கேடா’ என்று அவன் உள்ளங்கையை வருடியவள்,
‘விஷ்ணு காரம் பட்டா ரொம்ப எரியுமே எப்படிடா சாப்பிடுற..??’
‘அம்மா ஸ்பூன் கொடுத்துடுவாங்கடி அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்’.
‘வேண்டாம் விஷ்ணு இனிமேல் நீ வேலை செய்யாதே நான் அவர்கிட்ட பேசுறேன்’
‘ஏய் லூசு என்ன இது..??’
‘ஆமாடா வேலை செஞ்சிட்டு இருந்தா நீ எப்போ படிப்ப..??’
‘அதெல்லாம் பிரச்சனை இல்லடி நாளையில இருந்து சார் கிட்ட சொல்லிட்டு காலேஜ் போயிடுவேன் நைட் ஷிப்ட் தான் பார்ப்பேன்..’
‘டேய் உனக்கு என்ன கட்டாயம்..?? வேண்டாம் முடியாது சொல்லுடா, இல்ல இப்பாவே நான் போன் பண்ணி அவர்கிட்ட கேட்கிறேன்’ என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே இருவரையும் இரவு உணவிற்காக அழைத்தார் சுகமதி.
******************************
குவாரியில் பணியாளர்கள் இடையே வேலை பகிர்வில் வார்த்தை தடித்து வாக்குவாதம் ஏற்பட்டு அது ஒரு கட்டத்தில் பூதாகரமாகி அவர்களிடம் கைகலப்பையே உண்டாக்கி விட்டிருந்தது.. அதிர்துடியன் அங்கு சென்று சேர்வதற்குள் வேலையை நிறுத்திவிட்டு ப்ரித்வி அனைவரையும் பேக்டரிக்கு அழைத்து வந்து விட்டிருக்க பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்து வைத்தவன் நேரே தன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
இரவு ஒன்பது மணி வாக்கில் வந்த அதிர்துடியனை கண்ட மரகதம், ‘உன் மாமனார் வீட்டில் தங்கறதா தானே இருந்த இப்போ என்ன..?? அதுவும் தனியா வந்திருக்க யாழி எங்க அதி..??’ என்று கேட்க
‘ம்மா குவாரில கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சி அதான்.., சரியான பசி நான் குளிச்சிட்டு வரேன் நீங்க சாப்பாடு எடுத்து வைங்க’ என்றவன் வேகமாக மாடிக்கு சென்று திரும்பிட..,
மரகதம் கணவனையும் மகனையும் அமர வைத்து சூடாக இட்லி சாம்பார் பரிமாறி இருந்தார்.
‘யாழியை நாளைக்கு கூட்டிட்டு வரேன்ம்மா’ என்றவன் சுந்தரலிங்கத்துடன் பேசியவாறே இரவு உணவை முடித்து அவன் அறைக்குள் நுழைந்திருந்தான்.
உள்ளே நுழைந்த அதிர்துடியனுக்கு அவர்கள் புகைப்படம் கண்ணில் பட நேரே அங்கு சென்று நின்றவன் புகைப்படத்தில் பார்வை பதிக்க அவன் மனமோ நேற்று இரவு யாழியுடனான நிமிடங்களை அசையபோட தொடங்கி இறுதியில் இதழ் கொள்ளா புன்னகையுடன் ‘என்னடி பண்ற நீ என்னை..??’ என்று கேட்டு புகைப்படத்தில் இருந்தவளை வருடி கொண்டிருந்தான்.
தலையில் இருந்து மெல்ல நகர்த்தி கொண்டே வந்தவனின் விரல்கள் அவள் மூக்குத்தியில் தேங்கி நிற்க அவன் அதரங்களோ ‘வெரி டேஞ்சரஸ்’ என்று முணுமுணுத்து அங்கே தன் அச்சாரத்தை பதித்தது..,
‘கொஞ்ச நேரத்துல என்னையே கண்ட்ரோல்ல இருக்க விடாம பண்ணிடுச்சி’ என்றவனுக்குமே மனம் நிறைந்தவளின் நெருக்கம் பாதிக்க செய்திட எங்கே அவளருகே தன்னிலை இழந்து போவோமோ என்ற அச்சத்திலேயே தன் வீட்டிற்கு திரும்பி விட்டான்.
தம்பியுடன் வெளியில் வந்த யாழி அன்னையிடம் இருந்து தட்டை வாங்கியவள், முதலில் விஷ்ணுவிற்கு ஊட்டி விட்ட பின்பே தானும் உண்டு முடித்தவள் அவனுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு சுகமதியின் போனை எடுத்து கொண்டு மாடிக்கு வந்து அதிர்துடியனுக்கு அழைத்தாள்.
மறுபுறம் அவள் புகைப்படத்தை பார்த்தவாறு தலையணையை எடுத்து போட்டு படுத்து கொண்டிருந்த அதிர்துடியனுக்கு அவள் நினைவுகள் அலைகழிக்க பேசிவிட்டு படுக்கலாமே என்று வெளியில் வந்து அவன் கைபேசியை எடுக்கவும் யாழி அவனுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது.
‘ஹலோ’ என்றவுடனே,
‘ஏன் என் தம்பியை கல் தூக்க சொன்னீங்க..??’ என்றாள் கோபமாக,
அதை கேட்டவனின் முகத்தில் புன்னகை படர்ந்தது…
‘இதை கேட்க தான் கால் பண்ணியா..??’
‘ஆமா..’ என்றாள் நாசி விடைக்க,
‘அழறியாடி..??’ என்று அவன் கேட்கவும் யாழிக்கு தொண்டை அடைத்து கொண்டு வந்தது..,
‘என் தம்பி கை எப்படி இருக்கு தெரியுமா..?? அவனால சாப்பிட கூட முடியல’
‘ஏன் நீ என்ன பண்ற..?? அவனுக்கு ஊட்டி விட வேண்டியது தானே..??’
‘நீங்க ஒன்னும் சொல்ல தேவை இல்ல எனக்கே தெரியும் நான் விஷ்ணுக்கு ஊட்டி விட்டுட்டு தான் சாப்ட்டேன்’
‘குட்… அப்புறம்…’
‘இனி என் தம்பி கல் தூக்க சொல்ல கூடாது, அப்படி பண்ணா அவன் வேலைக்கே வர மாட்டான்’
‘அப்படியா..??’
‘ஆமா’
‘இதையே உன் தம்பியும் சொல்லுவானா..??’
‘ஏன் சொல்லாம..?? அவன் எனக்காக எதுவும் செய்வான் .., நான் வேண்டாம் சொன்னா கண்டிப்பா அவனுக்கும் வேண்டாம் தான்’
‘சரி அவனையே சொல்ல சொல்லு நிறுத்திடுறேன்…’
‘அப்போ நீங்க தான் அவனுக்கு இந்த வேலை கொடுத்ததா..??’ என்றதற்கு மறுபுறம் அமைதி
‘சொல்லுங்க’
‘என்னடி சொல்ல..??’ என்று சிறு எரிச்சலுடன் கேட்டவன்,
‘இதோ பார் யாழி உன் தம்பி ஒன்னும் பேச தெரியாத குழந்தை கிடையாது அவனுக்கு எது சொல்றதா இருந்தாலும் நேரே என்கிட்டே பேச சொல்லு இப்படி தேவை இல்லாம எங்களுக்கு நடுவுல நீ வராத..’ என்றான் கடுமையான குரலில்
‘என்னது..??’ என்று அதிர்ந்தவள் கண்களை துடைத்து கொண்டு,
‘நீங்க தான்… நீங்கதான்… எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வந்து எங்களை பிரிச்சிடீங்க இப்ப என்னையே சொல்றீங்களா..??’
‘ப்ச் யாழி இப்போ உனக்கு என்கிட்டே சண்டை போடணுமா..??’ என்றான் நேரிடையாக,
‘சண்டையா..?? அப்.. அது.. இல்ல’ என்று தலை அசைக்க,
‘அப்போ போனை வை எனக்கு தூக்கம் வருது’ என்று துண்டித்திட யாழிக்கோ அவள் அலட்சியத்தை உணர்ந்து அதற்கும் சேர்த்து அழுகை பொங்கியது.
***********************************
அழைப்பை துண்டித்து படுக்கையில் சரிந்தவனுக்கு ஏனோ அவள் குரல் தூங்கவிடாமல் செய்ய திரும்பவும் சென்று அவளுக்கு அழைத்து விட்டான்.
‘ஹலோ’ என்றவளின் குரலே தழுதழுத்திருந்தது…
‘அழுதியா..??’
மறுபுறம் மௌனம்
‘அழுதியாடி ..??’
‘ஹ்ம்ம்…’
‘எதுக்கு..??’
மறுபுறம் மௌனம்
‘ப்ச்.. கேள்வி கேட்டா பதில் சொல்லி பழகு யாழி’
‘நீ… நீங்க எப்பவும் சிடுசிடுன்னு இருக்கீங்க’
‘வேற எப்படி இருக்கணும்..??’
‘லவ் பண்றவங்க இப்படி தான் பேசுவாங்களா..?? எவ்ளோ ஸ்வீட்டா, சாப்ட்டா… ரோ..’ என்றவளை தடுத்தவன்,
‘இதோ பார் யாழி மனுஷன்னா எல்லா விதமான உணர்வும் இருக்கும் லவ் பண்றதால எப்பவும் கொஞ்சிட்டே இருக்கனும்ன்னு அவசியம் கிடையாது அப்படி இருக்கவும் முடியாது’ என்றவன் ஒரு கணம் நிறுத்தி,
‘நான் இன்னும் உன்னை கொஞ்சவே ஆரம்பிக்கலை அது வேற விஷயம்’ என்றிட
அவளையும் அறியாமல் ‘ஏன்…??’ என்று விட்டாள்,
‘அதான் சொன்னேனே நீ கலெக்டர் ஆன பிறகு தான் கொஞ்சுறதுன்னு வேண்டிட்டு இருக்கேன்டி ‘
‘என்னது வேண்டுதலா..?? என்றவளுக்கு பூஜை, வேண்டுதல் என்று தனக்காக இத்தனை செய்பவனின் பேரன்பில் கலங்கி போனது…
‘யாழி’
‘ஹ்ம்ம்’
‘எனக்கு ரொமாண்டிக்கா பேச வராது வேணும்ன்னா நாம ஒரு செல்பி எடுப்போமா..?? என்னோட மொத்த காதலையும் காட்டுற மாதிரி’ என்று அவன் கேட்க.
‘என்னது செல்பியா..??’ என்ற யாழிக்கு தூக்கி வாரி போட,
‘ஆமா, இப்பவே !! வரட்டா..??’
‘ன்னன்ன்ன்ன்… நோ.. நோஓ எனக்கு தூக்கம் வருது குட் நைட்’ என்று முகத்தில் படர்ந்த செம்மையுடன் உடனே அழைப்பை துண்டித்து கீழிறங்கியவள் இழுத்து போர்த்தி படுத்து விட்டாள்.

