ராகம் – Final 3
ஐந்து வருடங்களுக்கு பின் :

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் கலெக்டர் பங்களாவில் இருந்த சமையலறையில் அதிர்துடியன் ஒரு புறம் அதிதன் மறுபுறம் அதிரல் என்று இருமக்களையும் அருகே வைத்து கொண்டு ஆம்லேட் எப்படி போடுவது என்று அவர்களுக்கு கற்று கொடுத்து கொண்டு இருந்தான்.
மகன் அதிதன் மகள் அதிரல் கணவனின் பெயரை கொண்டே பிள்ளைகளின் பெயர் அமைய வேண்டும் என்று யாழி தேடி தேடி தேர்தெடுத்து சூட்டிய பெயர்கள். அவள் காதலின் ஆழத்தை உணர்ந்தவனும் மறுக்காமல் அதை ஏற்று கொண்டான்.
Advertisement
‘அப்பா.. நா.. நா..’. என்று இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அவன் கையில் இருந்த கரண்டியை வாங்க முற்ப்பட,
“செல்லம் அவசரப்படக்கூடாது ஒரொருத்தரா செய்வீங்க.., அப்பா ரெண்டு பேருக்கும் சான்ஸ் கொடுப்பேன் உங்க டர்ன் வரும்வரை பொறுமையா இருக்கணும் சரியா..??” என்றிட,
நான்கு வயது பிள்ளைகளும் ‘சரிப்பா’ என்று தலை அசைக்க முதலில் மகளின் கையை பிடித்து அதை திருப்பி போட வைத்தவன் அடுத்த ஆம்லெட்டையும் ஊற்றி அதே போல மகனையும் செய்ய வைத்தான்.
Advertisement
அதே நேரம் ஜார்க்கண்ட் முதல்வருடனான அவசர சந்திப்பை முடித்து கொண்டு அதிகாரிகளுடன் மேலும் சில மணி நேரம் கலந்துரையாடி அறிக்கையை தயாரித்து முடித்த பின் கிளம்பி இருந்தாள் யாழி. வாகனத்தில் அமர்ந்த மறுநொடியே கைபேசியை எடுத்தவள் யூடியூபில் நேற்று கல்லூரி மாணவர்களிடயே அதிர்துடியன் பேசிய காணொளியை திறந்து பார்க்க தொடங்கிவிட்டாள்.
Advertisement
அதிர்துடியன் வளாகத்தினுள் நுழைந்ததில் இருந்தே ஆர்பரித்த மாணவர்களின் கரகோஷம் அவன் மேடையில் சென்று அமரும் வரை தொடர்வதை கண்டவள் முகத்தில் புன்னகை விரிந்தது. ஆனால் அதிர்துடியன் மேடையின் நடுவே வந்து நின்று அவன் கையில் மைக்கை எடுத்த மறுநொடி மாணவர்களின் ஆரவாரம் அடங்கி அங்கே அத்தனை அமைதி..!!
இந்த காணொளி என்று இல்லை எப்போதுமே கூட்டத்தை வசபடுத்தும் வித்தை அறிந்தவன் மைக்கை எடுத்த நொடி அவன் பேச்சை எதிர்பார்த்து கூட்டம் அமைதியாகி விடும். யாழியோ எங்கே இமைக்கும் நொடி கூட ஆளுமையும் கம்பீரமுமாக நின்றிருக்கும் கணவனை ரசிக்க தடையாகி போகுமோ என்று விரிந்த இமை மூடாமல் அவனை பார்க்க தொடங்கி இருந்தாள்.
ஐந்து வருடங்களில் அவனிடம் எத்தனை மாற்றம்..!! அவளுக்காக தன் தோற்றத்தை மாற்றி கொண்டவன் சமூகத்திற்காக தன் கொள்கையையும் தளர்த்தி இருக்கிறான்.
Advertisement
ஆம் பல வருடங்களாகவே தந்தைக்கு பிடி கொடுக்காமல் நழுவியவன் இப்போது வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டி வேறு வழி இல்லாமல் அரசியலில் கால் பதித்து கல்வி துறை அமைச்சராகி இருக்கிறான்.
மாற்றம் மாணவர்களிடம் இருந்து கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தவன் இத்துறையை தேர்ந்தெடுத்து முதலில் தொழில்நுட்பம் குறித்த அடிப்படை புரிதலை மாணவர்களுக்கு கொண்டு வருவதோடு இயன்றவரை கைபேசியின் செயல்பாட்டை பள்ளி கல்லூரிகளில் தவிர்ப்பது என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறான்.
கணவனின் ஆளுமையில் மெய்மறந்து இருந்த யாழி அப்போது விஷ்ணுவின் அழைப்பு வந்து அவன் முகத்தை மறைக்க உடனே அதை துண்டித்தவள் மீண்டும் கன்னத்தில் கரம் பதித்து அவனை ரசிக்க தொடங்கி இருந்தாள்.
வருடங்கள் எத்தனை கடந்தால் என்ன எத்தனை பெரிய பதவியை வகித்தால் என்ன இன்னுமே கணவன் மீதான காதலும் நேசமும் மாறாது அவன் மீதான பித்தம் துளியும் குறையாது முதல் முறை அவனை கண்ட போது படிந்த அதே ரசனையுடன் யாழி.
அதேநேரம் சமையலறையில் பிள்ளைகளுக்கு பொடி தோசையை செய்த அதிர்துடியன் அவனே பரிமாறி அவர்களை சாப்பிட செய்திட மகேஷ்வரன், சுகமதி இருவரும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்…
இப்போது என்றில்லை கடந்த இரண்டு வருட காலமாகவே அதிர்துடியன் இங்கு வரும் போது எல்லாம் இது தான் வழக்கம். யாழி ஏழு மாதமாக இருக்கையில் தேர்வு முடிவுகள் வந்திருந்தது அதில் யாழி இந்திய அளவில் நூற்று எழுபத்தி மூன்றாவது இடமும் தமிழக அளவில் எட்டாம் இடமும் பெற்றிருந்தாள். அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது போல அடுத்த வருடம் ட்ரைனிங் சேர்ந்தவள் வெற்றிகரமாக முடித்து கடந்த இரண்டு வருடமாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பணி புரிந்து வருகிறாள்.
அதே போல ஆராதனாவும் இந்திய அளவில் அறுபத்தி ஐந்தாவது இடமும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து ட்ரைனிங் முடித்து வசீகரனுடன் கர்நாடகா மாநிலத்தில் பணி புரிந்து வருகிறாள்… ஆம் இருவரும் கணவன் மனைவி என்பதால் ஒரே இடத்தில் பணியமர்த்த பட்டிருந்தனர்.
யாழி முசோரிக்கு (mussori) ட்ரைனிங் கிளம்பிய போது அதிதனும் அதிரலும் ஒரு வயது குழந்தைகள் சுகமதி மரகதம் இருவரும் சேர்ந்து குழந்தைகளின் பொறுப்பை ஏற்று கொண்டிருந்தனர்..,
அதன் பின் யாழிக்கு ஜார்கண்டில் பணி ஒதுக்கிய போது அதிர்துடியன் சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நின்று அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகி இருந்தான்.
ஏற்கனவே இரு வருடங்கள் குழந்தைகளை பிரிந்திருந்த மனைவியின் நிலை உணர்ந்தவனும் மகேஷ்வரனிடம் பேசி அவள் பெற்றோரை உடன் அனுப்பும் முடிவை அதிர்துடியன் எடுத்திருந்தான்.
மகேஷ் வேலையை விட்டுவிட்டு செல்ல வேண்டுமா என்று தயங்கிய போது ‘உங்க பொண்ணு மாமா.., இந்த இடம் அவளோட சொந்த முயற்சி’
‘என்ன மாப்பிள்ளை இது ..?? நீங்க இல்லன்னா இதெல்லாம்…’
“இருக்கட்டும் மாமா ஆனா அவ முயற்சி பண்ணாம போயிருந்தா இது சாத்தியமில்லை, என் அம்மா ஹெல்த் பத்தி உங்களுக்கே தெரியும் .., ஏற்கனவே ரெண்டு வருஷம் குழந்தைகளை பிரிஞ்சு இருந்துட்டா இப்போ திரும்பவும் நிச்சயம் அவளால முடியாது இப்ப எனக்கும் உங்களை விட்டா வேற வழி இல்ல மாமா…”
‘என்ன மாப்பிள்ளை பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு..,’
‘அப்படி இல்ல மாமா என்னோட ப்ரெசன்ஸ் இல்லாம கண்டிப்பா இங்க கஷ்டம் அதுக்காக பாமிலியை பிரிஞ்சு இருக்கிறதும் என்னால கண்டிப்பா முடியாது ஆனா எப்படியும் மாசத்துல சில நாள் அங்க இருக்கிற மாதிரி நான் ஸ்கெட்யூல் பண்ணிட்டு வந்துடுவேன்..’
எப்போதும் போல அவனது தீர்க்கமான முடிவுகளை இப்போது வியந்த வண்ணமே, ‘சரி மாப்பிள்ளை ஆனா விஷ்ணு..’ என்று மகனை நினைத்து அவர் தயங்க..,
‘அவன் என் பொறுப்பு மாமா நீங்க கவலை படாதீங்க அவனுக்கு விருப்பம் இருந்தா இங்க எங்க வீட்ல இருந்தே வேலைக்கு போகட்டும் இல்லைன்னாலும் பரவல்ல எப்பவும் அவனுக்காக இங்க நான் இருக்கேன்’ என்று தைரியமளித்து அனுப்பி வைத்தவன் அதோடு சொன்னது போலவே தவறாமல் இருமாதங்களுக்கு ஒரு முறை இங்கே தங்குவது போல வருபவன் இடையில் ஒன்றிரண்டு முறை ஓரிரு நாட்களும் வந்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டு செல்வான்.
*************************************************
ராஞ்சிக்கு மனைவி குழந்தைகளை அழைத்து சென்றவன் மாமனார் மாமியாரை அவளோடு துணைக்கு இருத்தி விட்டு திரும்பியவனுக்கு கல்வி அமைச்சர் ஆன பிறகு முன்பு போல அடிக்கடி செல்வது என்பது முடியாமல் போனாலும் மகேஷ்வரனோ அல்லது ப்ரித்வியோ குழந்தைகளை அழைத்து கொண்டு இங்கு வந்துவிடுவார்கள்…
தந்தையுடன் ஓரிரு வாரங்கள் இருக்கும் குழந்தைகளுடன் முடிந்தவரை நேரம் செலவிடுபவன் அவர்களை கொண்டு சென்று விட்டுவிட்டு ஓரிரு நாள் தங்கி விட்டு வருவான்…
கணவன் மனைவி இருவருமே புரிதலுடன் திட்டமிட்டு கொண்டதில் பெரிதாக குழப்பமோ சண்டை சச்சரவிற்கு இடமின்றி போனது. தூரமிருந்தாலும் இருவருமே மனதளவில் நெருக்கமாவே உணர்ந்திருந்தனர் பின்னே தினமும் இரவில் குழந்தைகளுக்காக என்று ஆரம்பிக்கும் அவர்கள் பேச்சு நிச்சயம் அரை மணி நேரம் தாண்டி நீண்டு செல்லும்..,
இப்போது குழந்தைகள் அனைவருக்கும் காதணி விழா நடத்த இருப்பதால் யாழி இருபது நாள் மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டு தமிழகம் கிளம்புகிறாள் அவளை அழைத்து செல்லவே அதிர்துடியனின் அவசர வரவு இங்கு.
இரவு உணவுக்கு பின் தோட்டத்தில் இருவருடனும் அவர்கள் பள்ளியில் நிகழ்ந்தவைகளை கேட்டுக்கொண்டு இருந்தவன் பின் கால்கள் ஓயும் வரை அவர்களை விளையாட வைத்து விஷ்ணுவிடம் கொடுத்து எட்டு மணியளவில் உறங்கவும் வைத்திருந்தான்.
அன்று அதிர்துடியன் அடுத்து என்ன செய்ய போகிறாய் என்று தீர்மானித்து செயல் பட சொல்லியதில் மேற்படிப்பு முடித்தவன் கடந்த இருவருடங்கலாக dtcp இல் assistant director ஆக பணி புரிந்து வருபவன் இம்முறை விடுப்பு எடுத்து கொண்டு அதிர்துடியனுடன் வந்திருந்தான்.
‘சாப்பிட வாங்க மாப்பிள்ளை’ என்று மகேஷ் அழைக்க,
‘யாழி வந்திடட்டும் மாமா நாங்க சேர்ந்து சாப்பிடுறோம் நீங்க சாப்பிடுங்க’ என்றவன் கைபேசியோடு வெளியில் வந்து அவளுக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்று ‘இன்னும் இருபது நிமிடத்தில் வந்து விடுவதாக’ யாழி கூறி இருக்க மனைவிக்காக காத்திருக்க தொடங்கினான்.
வருடங்கள் பல கடந்து எத்தனை பெரிய உயரத்தை அடைந்த போதும் மனைவிக்கான அவன் காத்திருப்பு இன்னுமே சுவை கூட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
யாழியிடம் பேசிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தவன் யாழி அவர்களறையில் இருப்பது போலவே இங்கும் இருவரின் புகைபடத்தை பெரிதாக்கி வைத்திருக்க அதன் எதிரே சென்று நின்ற அதிர் யாழியின் கள்ளபார்வையை கண்டு முறுவலித்து அவளை வருடி கொண்டிருந்த போதே சொன்னது போலவே அவளது அரசாங்க வாகனம் பங்களா வளாகத்தினுள் நுழைந்தது.
அதிர் வாசலுக்கு செல்லவும் அவனை கண்டு முகம் மலர்ந்தவள், ‘சாப்ட்டீங்களா..?? சிஎம் கூட எமெர்ஜென்சி மீட்டிங் அதான் இவ்ளோ டிலே பசங்க என்ன பண்றாங்க..??’ என்று கேட்டுக்கொண்டே அவனுடன் உள்ளே செல்ல,
‘தூங்கிட்டாங்கடி , நீ வா சாப்பிடலாம்’
‘அப்போ இன்னும் நீங்க சாப்பிடலையா..?? என்னங்க இது..?? டைம் என்ன ஆச்சு..??’ என்றவள் கூந்தலை அள்ளி கொண்டையிட்டு கொண்டு அவனை இழுத்து வந்து ‘ உட்காருங்க’ என்று உணவு மேஜை முன் அமர்த்தி அவனுக்கு பரிமாறியவள் தானும் போட்டுகொண்டு அமர்ந்தாள்.
‘அதிரல்க்கு மைல்டா பீவர் இருந்ததேங்க.. இப்போ எப்படி இருக்கா..??’
“ஒன்னும் பெருசா இல்ல சிரப் மட்டும் கொடுத்து தூங்க வச்சேன்.., ஆமா நேத்து பேசும்போது கூட நல்லா இருந்த குழந்தைக்கு திடீர்ன்னு என்னடி ஆச்சு..??”
‘நேத்து விளையாடிட்டு இருந்தப்போ சட்டுன்னு மழை ஆரம்பிக்கவும் உள்ள கூட்டிட்டு வரதுக்குள்ள லேசா நனைஞ்சுட்டா அதுக்கே இந்த பாடு..’, என்றவள் சாப்பிட்டு முடித்து அவனுடன் தோட்டத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்றாள்.
****************************************************
