Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 20

 

அத்தியாயம்:20

 மாவட்ட நீதிமன்ற வளாகமே அன்று ஒரு போர்க்களம் போலக் காட்சியளித்தது. நீதிமன்றத்தின் வாசலில் கொடிவீரன் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் கூடி நின்று கோஷமிட்டுக் கொண்டிருக்க, உள்ளே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Advertisement

அந்த கொடிவீரன் “நான் தொழிலாளர்கள் பக்கம், ஏழைகளின் தோழன்” என்று மேடைதோறும் முழங்கிவிட்டு, பின்னாள் இருந்து கார்ப்பரேட் மாஃபியாவுக்கு மில்லை அடிமாட்டு விலைக்கு விற்க ரகசியமாகத் காய் நகர்த்திய நரி அவன். அந்த வழக்கில் தான், மாவட்ட ஆட்சியர் மீராவும், மாவட்ட எஸ்பி வர்மனும் இணைந்து பக்கா ஆதாரங்களுடன் அவனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றக் கூண்டில் கொடிவீரன் கைகளைக் கட்டியபடி நிற்க, அரசு வழக்கறிஞர்களுக்கும் அவனது வக்கீல்களுக்கும் இடையே அனல் பறக்கும் வாதங்களுக்காக அந்த நாள் காத்திருந்தது.

Advertisement

Advertisement

மீராவும் வர்மனும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் காதலைப் பரிமாறிக்கொண்டு வெறும் இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்தன. இரண்டு நாட்களும் அலுவலக வேலைகள் நெட்டித் தள்ள பார்க்க கூட இருவருக்கும் வாய்க்கவில்லை. அதற்குள் இந்த எமர்ஜென்சி கோர்ட் ப்ரொசீடிங்ஸ் குறுக்கே வந்துவிட இதை காரணமாய் வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் காண வாய்ப்பு என பறந்து வந்திருந்தனர்.
சுற்றி ஏகப்பட்ட போலீஸ் அதிகாரிகளும், வக்கீல்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்திருந்ததால் அவர்களால் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள முடியவில்லை.

Advertisement

ஆனால், அவர்களின் கண்கள் ரகசியமாகப் பேசிக்கொண்டன. ஒரு மாவட்ட ஆட்சியரும் எஸ்பி யும் காதலின் முன் தோற்றுப் போய் இளம் பிள்ளைகளாய் கள்ளம் அணிந்திருந்தனர்.
வர்மன் தன் கம்பீரமான போலீஸ் யூனிஃபார்மில், கையில் இருந்த ஃபைலை நோட்டமிடுவது போலப் பாசாங்கு செய்து, தன் மொபைலில் விரல்களை ஓட்டினான்.
வர்மன் : “அழகி … மிஸ் யூ டீ….”
“பக்கத்துல தான இருக்கேன்…”
“சரி … சரி….எதிர்த்தரப்பு மனுவோட 4-வது பக்கத்தைப் பாரு…. மூணாவது பாரகிராஃப். “
மீரா தன் பார்வையை கீழே திருப்பாமலேயே மொபைலில் விரல்களை ஓட்டினாள்.
“பார்த்துட்டு தான் இருக்கேன். பொது அமைதிக்கு ஆபத்துன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கென்ன இப்போ?”
“இப்போ இந்த எஸ்பி-யோட இதயத்துடிப்பு ஆபத்தான கட்டத்துல இருக்கு. உன்னால . . .”
“ஏன்?”
“நீ என்ன பார்க்கவே மாட்டேன்றியே…”
” சுத்தி கேமரா இருக்கு வர்மன். ஒழுங்கா ஃபைல பாருங்க…”
“கவனிக்கிறேன்… ஆனா ஃபைல்ல எல்லாம் மீரா மீரான்னு உன் பேராகவே தெரியுது.”
உதட்டைக் கடித்து புன்னகையை மறைத்தபடி “காக்கி யூனிஃபார்ம்ல இருந்துட்டு இப்படி ரீல் ஓட்டக் கூடாது.”
” ரீல் இல்லை, ரியல். இன்னைக்கு நைட் டின்னருக்கு என்னோட வர்ற…”
“ம்ம்..ம்ம்…”
திடீரென நீதிமன்றக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ‘அமைதி காக்கவும்’ என்று தாரகர் குரல் எழுப்பினார். அடுத்த நொடியே, வர்மன் தன் போனை பாக்கெட்டில் திணித்துவிட்டு, நீதிபதி உள்ளே நுழைந்ததும் கம்பீரமாக எழுந்து நின்றான். மீராவும் அவனுக்கு அருகில், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அதே அரசு அதிகாரத் தோரணையுடன் எழுந்தாள்.
அந்த மாவட்டத்தில் உள்ள மிக சக்திவாய்ந்த இந்த இரு துருவங்களும், தங்களுக்குள் ஒரு ரகசிய காதல் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் என்பதை அந்த அறையில் இருந்த யாருமே ஊகிக்கவில்லை.
கோர்ட் லஞ்ச் பிரேக்கிற்காக ஒரு அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட, மீரா அவசரமாக வளாகத்திற்கு வெளியே வந்தாள். கைப்பேசியில் ரஞ்சனா என பெயர் பளிச்சிட காலை அட்டெண்ட் செய்தாள்.
“ஹலோ, மீரா!” ரஞ்சனாவின் குரலில் அப்படி ஒரு படபடப்பும் எக்கச்சக்க உற்சாகமும் கலந்திருந்தது.
“சொல்லுடி ரஞ்சு, சென்னைக்கு ஓடினவ… அங்க என்ன பண்ற?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மீரா.
“டி… முக்கியமான விஷயம்! செம்பியன் இன்னும் ரெண்டு வாரத்துல லண்டனுக்குத் திரும்பணுமாம். அதனால, அவங்க குடும்பத்துல பெரியவங்க எல்லாரும் சேர்ந்து, அவன் கிளம்புறதுக்குள்ள அட்லீஸ்ட் நிச்சயதார்த்தத்தையாவது முடிச்சிடலாம்னு சொல்லிட்டாங்க. இப்போ என் குடும்பமே சென்னையில இருந்து கிளம்பி, அவங்களோட சொந்த ஊரான ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குப் போறோம்! நீயும்…
நீயும் என்கூட உடனே கிளம்பி வர்றேடி… ப்ளீஸ், நீ இல்லாம எனக்கு ரொம்பப் பதறும்…,” என்று ரஞ்சனா கெஞ்சினாள்.
” ஏய் நான் எப்படிடீ?
” நான் ஈவ்னிங் மதுரை ரீச் ஆவேன் டி… உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்…”
” ஏ ரஞ்சு…”
” ஒன்றும் சொல்லாத ஜஸ்ட் வா…. ஐ நீட் யூ அட் மை லைப்ஸ் இம்பார்ட்டன்ட் டே”
இவள் யோசனையாய் உள்ளே வந்தாள்.
மாலை 7 மணி
ரஞ்சுவும் மீராவும் மதுரையில் சந்தித்தனர்.
 தோழியின் வாழ்க்கையின் முக்கியக் கட்டம் என்பதால், மீராவும் யோசிக்காமல் உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு, ரஞ்சனாவோடு ராமநாதபுரம் நோக்கிய பயணத்தில் இணைய வந்திருந்தாள்.
வர்மன் விஷயம் கேள்வி பட்டதும் எல்லாம் ஏற்கனவே அறிந்தவன் போல முகமெல்லாம் மலர
” போயிட்டு வா … போயிட்டு வா..இந்த ரஞ்சு நிச்சயத்துக்கு என்ன அழைக்கலயா . . . .பார்த்துக்கறேன்..” என்றிருந்தான்.
ராமநாதபுரம் நோக்கிய அந்த லாங் டிரைவ் பயணத்தில், காரின் ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்க, ரஞ்சனாவின் பேச்சு முழுக்க முழுக்க செம்பியனைப் பற்றியேதான் இருந்தது.
மீரா தன் தோழியின் முகத்தில் இருந்த பரவசத்தைப் பார்த்துவிட்டு, அவளைக் கிண்டல் செய்யும் தொனியில், “ஏண்டி ரஞ்சு… உன் பிரின்ஸ் எப்படிடி? பார்க்கத்தான் அந்த ராயல் லுக்ல ரொம்ப கம்பீரமா, கறாரா இருக்காரு… பழக எப்படி?” என்று ஆவலாகக் கேட்டாள்.
“தெரியுமா மீரா… நாங்க போன்ல பேசப் பேச, எங்களோட வேவ்லென்த் (Wavelength) அநியாயத்துக்கு அலைன் ஆகுதுடி!
நான் ஒரு விஷயத்தை மனசுல நினைச்சா, அதை அவரே அடுத்த செகண்ட் வாயைத் திறந்து சொல்றாரு. பழக ரொம்ப ரொம்ப ஸ்வீட்!” என்றாள் ரஞ்சனா, தன் முகத்தில் அப்பட்டமான வெட்கத்தோடு.
“அப்படியா ரஞ்சு? வேற என்னென்ன பேசினீங்க?” என்று மீரா புன்னகையுடன் கேட்டாள்.
“லண்டன்ல அவரோட இம்போர்ட்-எக்ஸ்போர்ட் பிசினஸை அப்படியே இங்க மாத்தி, அவரு இந்தியாவிலேயே வந்து நிரந்தரமா செட்டில் ஆகப்போறாராம்டி. இனிமே இங்கதான் அவரோட மொத்த ஃபியூச்சர் பிளான்ஸும். என் விருப்பப்படியே எல்லாம் பண்ணலாம்னு சொல்றாரு,” என்று ரஞ்சனா உற்சாகமாக அடுக்கினாள்.
“ஓ… அவரு இங்கேயே செட்டில் ஆகப்போறாரா? ரொம்ப சந்தோஷம்டி,” என்று சொன்ன மீரா, மெதுவாகத் தன் மனதில் இருந்த கேள்வியை நோக்கிப் பேச்சைத் திருத்தினாள். “ஆனா ரஞ்சு, செம்பியன் ரொம்பப் படிச்சவர் போல? இங்க மதுரையிலதான் ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சாரா?”
” மதுரையா?” ரஞ்சனா உடனே கலகலவெனச் சிரித்தாள். “இல்லவே இல்லடி! செம்பியனுக்கு அஞ்சு வயசுல லண்டன் போயிட்டாங்களாம். ஜஸ்ட் ட்டு த்ரீ டைம்ஸ் வந்து போயிரு ப்பாங்க போல…”
“இப்போ இந்த அர்ஜுன்-கௌதமி கல்யாணத்துக்காகத்தான் ரொம்ப வருஷம் கழிச்சு மதுரைக்கே வந்திருக்காரு!”
” ஓ .. “ஒரே யோசனையாக இருந்தது பீராவுக்கு.
” சரி என்ன ஆனாலும் நேரே போய் செம்பியனிடம் பேசி நன்றி சொல்லிடனும் என மனதுள் நினனத்து கொண்டாள்.
மீராவின் மூளைக்குள் உண்மைகள் ஒவ்வொன்றாக உடைந்து சிதறத் தொடங்கின. செம்பியன் வீரன்.. அந்த ராயல் குடும்பம்… விதியின் அடுத்த நகர்வு என்ன என்பதை ஊகிக்க முடியாமல், மீரா ராமநாதபுரத்து அரண்மனை நுழைவாயிலை நோக்கித் திகைப்புடன் பயணித்தாள்.
ராமநாதபுரம் மண்ணிற்குள் நுழைந்ததுமே அந்தப் பாரம்பரியத்தின் வாசம் காற்றோடு கலந்து வீசியது. கார் மெல்ல நகர்ந்து, வரலாற்றுப் புகழ்பெற்ற ‘ராமநாதபுரம் சேதுபதி அரண்மனை’யின் பிரம்மாண்ட நுழைவாயிலைக் கடந்தபோது மீரா பிரமிப்பில் உறைந்து போனாள்.
பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த இராமலிங்க விலாசம் அரண்மனை, வெறும் கற்களாலும் செங்கற்களாலும் ஆன கட்டிடம் அல்ல; அது சேதுபதி மன்னர்களின் வீரத்தையும் கம்பீரத்தையும் பறைசாற்றும் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். காரை விட்டு இறங்கிய மீராவின் கண்கள் அந்த அரண்மனையின் கட்டிடக் கலையை வியப்புடன் நோக்கின.
உள்ளே நுழையும் போதே, தடிமனான வெள்ளை நிறத் தூண்களும், இயற்கைச் சாயங்களால் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் வரையப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற சுவரோவியங்களும் அவளது பார்வையை ஈர்த்தன. முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரின் வாழ்க்கை நிகழ்வுகள், தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களுடன் நடந்த போர்க்களக் காட்சிகள், மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தின் கிருஷ்ண லீலைகள் என அந்த ஓவியங்கள் கடந்த காலத்தின் பிரம்மாண்டத்தை மீராவின் கண்முன்னே நிறுத்தின. காற்றில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஆன்மீக வாசனையும், பழமையான சந்தன மணமும் கலந்திருந்தது.
மன்னர் காலத்துத் துப்பாக்கிகள், வாள்கள், வளரிகள் (Boomerangs) காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த நீண்ட தாழ்வாரத்தைக் கடந்து உள்ளே வந்தனர்.. அப்போது, சமஸ்தானத்துத் தலைமுறைப் பாரம்பரியம் மாறாத பெரியம்மாக்கள் இருவர் புன்னகையோடு அவளை எதிர்கொண்டு வந்தனர். மங்களகரமான பட்டுப்புடவை அணிந்திருந்த அந்தப் பெரியம்மாக்கள், கைகளில் வெள்ளித் தட்டில் குங்குமமும் மஞ்சளும் கலந்த ஆரத்தியை ஏந்தியிருந்தனர்.
அவர்களுக்குப் பின்னால் பன்னீர் சொம்புகளுடன் சில இளம் பிராய பெண்களும் நின்றனர்.
முன்னால் நின்ற பெரியம்மா, புன்னகையோடு ஒரு தட்டில் பன்னீரும் குங்குமமும் கலந்த ஆலாத்தி (ஆரத்தி) தட்டை ஏந்தி, ரஞ்சனாவுக்கும் மீராவுக்கும் சேர்த்துச் சுழற்றி, நெற்றியில் திலகமிட்டு அரண்மனைக்குள் வரவேற்றனர்.
“வாங்க கண்ணுங்களா… அரண்மனைக்கு மகாலட்சுமிங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்த மாதிரி இருக்கு,” என்று ஒரு பெரியம்மா மீராவின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டார்.
அவர்கள் காட்டிய அந்த அதீத அன்பும், உபசரிப்பும் மீராவின் மனதில் ஒரு பெரிய கேள்விக் குறியைத் தோற்றுவித்தது. ரஞ்சனா இந்த வீட்டுக்கு வரப்போகும் மருமகள், அவளுக்கு இந்த அரச குடும்பத்து மரியாதையும் உபசரிப்பும் கிடைப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால், அவளது தோழியாக வெறும் சாதாரண உடையில் வந்த தனக்கும், ரஞ்சனாவுக்கு இணையாக அதே தட்டில் ஆலாத்தி எடுத்து, அதே சமமான ராயல் மரியாதையோடு, கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?
“வர்மனும் இந்த குடும்பத்துக்கு சொந்தம் தானே … அதற்குள்ளாக என்னை பற்றி சொல்லி யிருப்பானா?”
அவர் வராமலே எனக்கு இங்க இவ்வளவு பெரிய மரியாதை நடக்குதே… வர்மன் தான் இதுக்கெல்லாம் காரணமா?’ என்று தனக்குள்ளேயே யோசித்தபடி, அரண்மனைப் பெரியம்மாக்களின் அன்பான உபசாரத்தில் திக்குமுக்காடிப் போனாள் மீரா.
வரவேற்பறையைக் கடந்து அரண்மனையின் உட்பகுதிக்குள் அவள் செல்லச் செல்ல, அங்கே காலத்தின் சாட்சியாகப் பல சுவர்கள் பழமையின் கம்பீரத்தோடு நின்றன. அதில் அந்த வலப்புற பெரிய சுவரில், தேக்கு மரச் சட்டங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான குடும்பப் புகைப்படங்கள் வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சமஸ்தானத்தின் தலைமுறைகளை விளக்கும் அந்தப் புகைப்படங்களை வேடிக்கை பார்த்தபடியே நடந்த மீராவின் பார்வை,  சட்டென்று நடுநாயகமாய் மாட்டியிருந்த ஒரு பெரிய படத்தின் மீது நிலைத்து நின்றது.
அடுத்த நொடி, மீரா அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்! அவளது கண்கள் அந்தப் படத்தை நம்ப முடியாமல் உற்றுப் பார்த்தன.
அந்தப் படத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த அழகர் திருவிழா பாட்டிமா… இல்லை… இல்லை… இரண்டு பாட்டிமாக்கள்… அச்சு அசலாய் ஒரே போல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!