Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 24

 

 

அத்தியாயம் : 24


Advertisement

அந்தப் பிரம்மாண்டமான முதலிரவு அறை, சற்று முன்பு வரை காதலின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால், ஒரு நொடிப் புரிதல் பிழையால் ஏற்பட்ட அந்த வார்த்தை போர், ஒட்டுமொத்த அறையையும் ஒரு பனிப்பாறையைப் போல உறைய வைத்திருந்தது.

Advertisement

மீரா தன்  புடவையின் முனையை நெஞ்சோடு சேர்த்துப் பற்றி, மெத்தையின் ஓரத்தில் சிலையாக அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் வர்மனையே வெறித்தன. அவன் அவளுக்கு முதுகு காட்டி, ஒரு போர்வையைத் தனக்கு மேல் இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தான். அவனது அகன்ற முதுகு, கோபத்திலும் ஆத்திரத்திலும் சீரற்று உயர்ந்து தாழ்வதை அவளால் பார்க்க முடிந்தது.

Advertisement

“வர்மன்…” என்று மீண்டும் ஒருமுறை அவனது பெயரை மிக மெல்லிய குரலில் அழைத்தாள் மீரா. அந்தத் தொனியில் அத்தனை நடுக்கம் இருந்தது.

Advertisement

பதில் இல்லை. அந்தப் பெரிய அறையில் ஏசியின் மெல்லிய சத்தமும், அவளது இதயத் துடிப்பும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
“நம் உறவின் அச்சாரமான ஒரு நிகழ்வில் விதி உருவாக்கிய  குழப்பத்தை… நான் எப்படி கடந்து வந்தேன்னு சொல்ல நினைச்சது இவ்வளவு பெரிய தப்பாகுமா? என்னைப் போய்… நீ இந்த வர்மன ஒரு போதும் காதலிக்கல ன் னு எப்படி  உங்களால் சொல்ல முடிந்தது?”
” உங்க மசை கேளுங்க … உங்களோட ஒவ்வொரு அப்ரோச் அப்பவும் நான் எப்படி நெகிழ்ந்தேன்னு…”
” வர்மன் ! கேக்கறீங்களா இல்லையா ? ” அவள் அவன் தோள் பற்றி உலுக்க அங்கே பதிலில்லை.
“இப்படி வதைக்க தான் நீ என்னை காதலித்தாயா??
உனது காதல் இவ்வளவு தானா?”
நெஞ்சுக்குள் எழுந்த பல கேள்விகள் அவளது தொண்டைக்குள் முள்ளாகக் குத்தின. அழுது அழுது அவளது விழிகள் வீங்கிப் போயிருந்தன. ‘என் இறைவன் என்னை கை விடவில்லை’ என்று எண்ணி ஒரு நாள் கூட தீரல…. வாழ்க்கை அவளை இப்படி ஒரு அக்னிப் பரீட்சையில் நிறுத்தும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளது அத்தனை வருடக் காத்திருப்பின் நிறைவும், அந்த மல்லிகைப் பூக்களின் வாசமும் இப்போது அவளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது. அவள் உறங்கவில்லை; உறங்கவும் முடியாது.
அடுத்த நாள்.
அதிகாலை ஐந்து மணி.
அரண்மனையின் சமையலறையில் காபித் தூளின் நறுமணம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில், வர்மன் முழுமையாகத் தயாராகி, தன் கம்பீரமான ஐபிஎஸ் யூனிஃபார்மில் அறையை விட்டு வெளியே வந்தான். அவனது முகத்தில் நள்ளிரவில் இருந்த அந்தச் சோகத்தின் வடுக்கள் மறைந்து, ஒரு கறாரான போலீஸ் அதிகாரியின் குரூரமான அமைதி குடியேறியிருந்தது.
நேராகப் பெரிய பாட்டிமா நாகேஸ்வரியின் அறைக்குச் சென்றான். பாட்டி அப்போதுதான் தன் காலை வழிபாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்திருந்தார். வர்மனை இந்த நேரத்தில் யூனிஃபார்மில் பார்த்ததும் அவர் திடுக்கிட்டார்.
“என்னடா வர்மன்? விடியறதுக்குள்ள என்ன கோலம் இது? இன்னைக்கு நீங்க நாலு பேரும் கோவிலுக்குப் போகணும்னு பெரியம்மாக்கள் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்களே?” என்றார் பாட்டி கவலையுடன்.
வர்மன் தன் தொப்பியைக் கையில் ஏந்தியபடி, முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் பேசினான். “இல்லை பாட்டிமா. தேனி டிஸ்ட்ரிக்ட் பார்டர்ல ஒரு முக்கியமான லா அண்ட் ஆர்டர் பிராப்ளம். நைட்டே மெசேஜ் வந்துடுச்சு. ஒரு என்கவுண்டர் கேஸ்ல கொஞ்சம் பதற்றமான சூழல் நிலவுது. நான் உடனே ஸ்பாட்டுக்குப் போகணும்.”
“அதுக்காக இப்படியா? கல்யாணம் முடிஞ்ச மறுநாளே…” பாட்டி இழுத்தார்.
“டியூட்டி ஃபர்ஸ்ட் பாட்டிமா. அதுவும் இல்லாம, மீராவும் அங்கே தேனியில கலெக்டரா இருக்கிறதால, அவங்களுக்கும் அங்கே வேலை இருக்கும். நாங்க ரெண்டு பேரும் இப்போதே கிளம்புறோம்,” என்று கூறிவிட்டு, அவன் பாட்டியின் பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென்று வெளியே வந்தான்.
அதே நேரத்தில் மீராவும், ஒரு சாதாரண காட்டன் புடவையில், தன் ஐஏஎஸ் அதிகாரிக்குரிய மிடுக்கை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள். அவளது முகத்தில் இருந்த சோர்வையும், கண்களின் வீக்கத்தையும் பெரிய பாட்டிமா கவனித்தார்.
“மீராம்மா… என்னடா இது? வர்மன் தான் ஏதோ அவசரம்னு சொல்றான்னா, நீயுமா?”
மீரா ஒரு பலவீனமான புன்னகையை உதிர்த்தாள். “ஆமா பாட்டிமா. வர்மன் சொல்றது உண்மைதான். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வரும்போது நாங்க அங்கே இருக்கிறதுதான் நல்லது. ரஞ்சனாவும் செம்பியனும் இங்கேயே இருக்கட்டும். நாங்க கிளம்புறோம்,” என்றாள்.
அதற்குள் செம்பியனும் ரஞ்சனாவும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்தனர்.
“டேய் வர்மன்! என்னடா நடக்குது இங்க? நைட்டே என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல? நானும் வர்றேன்,” என்றான் செம்பியன் பதற்றத்துடன்.
“வேண்டாம் செம்பியா. நீ இங்க பாட்டிமாவையும், பெரியம்மாக்களையும் பார்த்துக்கோ. அங்கே சிச்சுவேஷன் கண்ட்ரோல்லதான் இருக்கு. ஆனா எஸ்பி யா நான் அங்க இருக்கிறது அவசியம். நான் பார்த்துக்கிறேன்,” என்று கறாராகக் கூறினான் வர்மன்.
ரஞ்சனா மீராவின் அருகில் வந்து அவளது கைகளைப் பற்றினாள். “மீரா… என்னடி இது? நேத்துதான் கல்யாணம் முடிஞ்சது… அதுக்குள்ளயா?” என்று ரஞ்சனா கேட்க, மீரா அவளது கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“ஒண்ணுமில்லை ரஞ்சு. டியூட்டிதான். நீ செம்பியனோட பத்திரமா இரு,” என்று மட்டும் கூறிவிட்டு காரை நோக்கி நடந்தாள்.
ராமநாதபுர அரண்மனையிலிருந்து தேனி நோக்கி எஸ்பி-யின் அதிகாரப்பூர்வ கார் பறந்தது.
முன்னால் டிரைவர் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார். பின் சீட்டில் வர்மனும் மீராவும் அமர்ந்திருந்தனர். ஆனால், இருவருக்கும் இடையே ஒரு நூறடி இடைவெளி இருப்பது போன்ற மௌனம் நிலவியது. வர்மன் ஜன்னல் வழியே வெளியை வெறித்துக் கொண்டிருந்தான். அவனது கைகள் முறுக்கேறியிருந்தன.
மீரா அவனையே பார்த்தாள். ‘இத்தனை கோபமா வர்மன் உங்களுக்குள்? என் கடந்த காலத் தேடலின் ஒற்றைப் பக்கத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு, எனக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை இதுதானா?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். ஆனால், வெளியில் அவள் தன் கலெக்டர் என்ற கம்பீரத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
காலை பத்து மணியளவில் கார் தேனியில் உள்ள எஸ்பி குவார்ட்டர்ஸை வந்தடைந்தது. அங்கே கார் வந்து நின்றதும், மீராவும் வர்மனும் அதிர்ந்து போயினர்.
அங்கே வர்மனின் கீழ் வேலை செய்யும் டிஎஸ்பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரிகள், ஏடிசி என ஒரு பெரிய பட்டாளமே திரண்டிருந்தது. குவார்ட்டர்ஸ் வாசல் முழுவதும் தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்ததும், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கம்பீரமாக சல்யூட் அடித்தனர்.
“வெல்கம் சார்! வெல்கம் மேடம்!” என்று மலர்க்கொத்துக்களை நீட்டினர்.
வர்மனும் மீராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘அவசர வேலை என்று பொய் சொல்லிவிட்டு வந்த இடத்தில் இப்படி ஒரு வரவேற்பா?’ என்று வர்மன் மனதுக்குள் நினைத்தாலும், வெளியில் தன் முகபாவனையை சட்டென்று மாற்றிக் கொண்டான். ஒரு தேர்ந்த அதிகாரியாக, தன் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டான்.
“என்னப்பா இதெல்லாம்?” என்றான் வர்மன் தன் டிஎஸ்பி-யிடம்.
“சார்… நீங்க கல்யாணம் முடிஞ்ச கையோட, டிஸ்ட்ரிக்ட்ல ஏதோ பிராப்ளம்னு பதறிட்டு வந்திருக்கீங்க. ஆனா, இங்க எல்லாம் அமைதியாத்தான் சார் இருக்கு. நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சதும், நம்ம டிபார்ட்மென்ட்டும், மேடத்தோட ரெவென்யூ டிபார்ட்மென்ட்டும் சேர்ந்து உங்களுக்கு ஒரு சின்ன வெல்கம் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிட்டோம் சார்!” என்றார் அந்த டிஎஸ்பி பெருமிதத்துடன்.
மீரா உடனே சுதாரித்துக் கொண்டாள். தன் கணவனின் கையை எல்லாரும் பார்க்கும் வண்ணம் மென்மையாகப் பற்றிக் கொண்டாள். “ரொம்ப தேங்க்ஸ் அண்ணாதுரை. உங்க எல்லாரோட அன்பை நாங்க எதிர்பார்க்கவே இல்லை,” என்று மீரா கூற, வர்மன் அவளது கையின் தொடுகையில் உள்ளுக்குள் சிலிர்த்தாலும், அதை வெளியில் காட்டாமல், “தேங்க்யூ டீம். சரி, உள்ளே போலாமா?” என்றான்.
அங்கிருந்த பெரிய ஹாலில் ஒரு பிரம்மாண்டமான கேக் வைக்கப்பட்டிருந்தது.
“சார்… மேடம்… ப்ளீஸ் கேக் கட் பண்ணுங்க!”
வர்மனும் மீராவும் கேக்கின் முன்னால் வந்து நின்றனர். வர்மன் கத்தியைப் பற்ற, மீரா தன் கரத்தை அவனது கரத்தின் மேல் வைத்தாள். அந்த ஸ்பரிசம் இருவருக்குள்ளும் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சியது. வர்மன் அவளை லேசாகத் திரும்பிப் பார்த்தான். அவளது கண்கள் ‘என்னை மன்னித்துவிடு’ என்று கெஞ்சுவது போல அவனுக்குத் தோன்றியது. ஆனால், வர்மனின் பார்வையில் இன்னும் அந்த இறுக்கம் குறையவில்லை.
கேக்கை வெட்டியதும், அங்கிருந்த அதிகாரிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“சார்… மேடத்துக்கு ஃபர்ஸ்ட் பீஸ் ஊட்டி விடுங்க சார்!” என்று ஒரு இளம் இன்ஸ்பெக்டர் கத்தினான்.
வர்மன் கேக் துண்டை எடுத்து மீராவின் இதழ்களுக்கு அருகே கொண்டு சென்றான். மீரா தன் இதழ்களைத் திறந்து அதை வாங்கிக் கொள்ளும்போது, அவளது இதழ்கள் அவனது விரல்களில் உரசின. வர்மனின் கண்கள் ஒரு நொடி தீவிரமடைந்தது போல மீராவுக்கு தோன்றியது. பின் மீரா ஒரு துண்டை எடுத்து வர்மனுக்கு ஊட்டினாள். சுற்றிலும் இருந்தவர்கள், “என்ன ஒரு மேட் ஃபார் ஈச் அதர் கப்பிள்! ஒருத்தர் எஸ்பி, ஒருத்தர் கலெக்டர்… டிஸ்ட்ரிக்ட் இனி மாஸா இருக்கும்!” என்று பாராட்டித் தீர்த்தனர்.
அந்த அதிகாரிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி, அனைவரையும் அனுப்பி வைக்க மாலை நான்கு மணி ஆகிவிட்டது.
அனைவரும் சென்ற பிறகு, அந்தப் பிரம்மாண்டமான எஸ்பி குவார்ட்டர்ஸ் வளாகம் மீண்டும் அமைதிக்குத் திரும்பியது. வேலைக்காரர்கள் அனைவரும் தங்களின் பணிகளை முடித்துவிட்டு அவுட்-ஹவுஸுக்குச் சென்றுவிட்டனர். வீட்டின் உள்ளே, வர்மனும் மீராவும் மட்டுமே இருந்தனர்.
வர்மன் மாடிப் படுக்கையறையை நோக்கிச் சென்று, அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன் யூனிஃபார்ம் சட்டையின் மேல் பட்டன்களைக் கழற்றிவிட்டு, சோர்வாகக் கண்களை மூடிக்கொண்டான். அவனது முகம் மீண்டும் பழையபடி இறுகத் தொடங்கியது.
மீரா சமையலறைக்குச் சென்று, இரண்டு கப் சூடான பில்டர் காபியுடன் அறைக்குள் வந்தாள். ஒரு கப்பை வர்மனின் முன்னால் இருந்த டீப்பாயில் வைத்தாள்.
“காபி சாப்பிடுங்க வர்மன்,” என்றாள் மென்மையாக.
வர்மன் காபியை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. “தேவையில்லை. நான் என் ரூமுக்குப்போய் ரெஸ்ட் எடுக்குறேன். நீ உன்னோட ரூமுக்குப் போய்க்கோ,” என்று கறாரான குரலில் கூறிவிட்டு எழ முயன்றான்.
ஆனால், மீரா அவனை விடத் தயாராக இல்லை. அவள் சட்டென்று அவனது கையைப் பற்றினாள். “வர்மன்! நில்லுங்க,” என்றாள் அதிகாரத்துடன். அவளது குரலில் இருந்த அந்த ஐஏஎஸ் கம்பீரம் வர்மனை ஒரு நொடி வியக்க வைத்தது. அவன் அப்படியே நின்று அவளைப் பார்த்தான்.
”  என்னை எவ்வளவு அதிகாரமா டீல் பண்றா இவ! “
“என்ன?” என்றான் ஒற்றை வார்த்தையில்.
மீரா தன் கையில் இருந்த காபி கப்பை கீழே வைத்துவிட்டு, அவனுக்கு மிக அருகில் வந்து நின்றாள். அவளது முகத்தில் இப்போது கோபமோ சோகமோ இல்லை. மாறாக, ஒரு கள்ளத்தனமான புன்னகையும், குறும்புத்தனமும் குடியேறியிருந்தன.
“ஏன் வர்மன்… இந்த எஸ்பி மிடுக்கெல்லாம் என்கிட்ட மட்டும்தான் செல்லுபடியாகுமா? மதியம் எல்லாரும் முன்னாடியும் எப்படி நடிச்சீங்க? ‘மேட் ஃபார் ஈச் அதர் கப்பிள்’னு எல்லாரும் சொல்லும்போது உள்ளுக்குள் உங்களுக்குப் பெருமையா இருந்ததே… நான் பார்க்கலையா?” என்று தன் இரு புருவங்களையும் வாரி உயர்த்திப் பேசினாள்.
“மீரா… விளையாடாதே…” என்று வர்மன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனது குரல் எச்சரிப்பது போலக் கடினமாக இருந்தது.
” வர்மன்….  மீரா- வீரன் இது இறைவன் போட்ட முடிச்சு… வீரனும் என் வர்மனும் ஒன்னு தான் …உங்களுக்கு இது புரியுதா இல்லையா??”
” இன்னும் என்ன புரியனும்…!! ?
வர்மனின் குரல் மரக்கட்டை போல வறண்டு, நடுங்கிக் கேட்டது.
“வர்மன்…” மீரா அதிர்ந்து போய்ப் பார்த்தாள்.
“நீ எவ்வளவுதான் அழகான வார்த்தைகளால இதை மறைக்கப் பார்த்தாலும், உண்மை மாறாது மீரா. உன் மனசுல அந்த ‘வீரா’ங்கிற பிம்பம் தான் இவ்வளவு வருஷமா இருந்திருக்கு. அந்த ‘வீரா’ நான்தான்னு தெரியாத வரைக்கும் நீ என்னை ஒரு அந்நியனா, உன்னைத் துரத்துற ஒரு தொல்லையாத்தான் பார்த்திருக்க. ஒருவேளை… அன்னைக்கு அந்தத் திருவிழாவுல உன்னைக் காப்பாத்தினது செம்பியனா இருந்திருந்தா, இன்னைக்கு நீ அவன் மடியிலதான் அமர்ந்திருப்ப, அவனுக்குத்தான் இந்த விளக்கத்தைக் கொடுத்துட்டு இருப்பே!” வர்மனின் வார்த்தைகள் சாட்டையாய் வீசின.
“வர்மன்! என்ன வார்த்தை பேசுறீங்க? என் காதலைப் போய் இப்படி அசிங்கப்படுத்தாதீங்க…” மீரா கதறினாள்.
பின் நிதானித்தாள்.
” நீங்க நம்ம உறவ கொச்ச படுத்தறீங்க! “வீராவோ… வர்மனோ உங்கள்ட்ட மட்டும் தான் நான் தடுமாறினேன்…. நெகிழ்ந்தேன்… டோன்ட் யூ ரியலை ஸ் தட்?
” அத விட என் ஒவ்வொரு கஷ்டத்திலயேும்… நீங்க… நீங்க… மட்டும் தான் எனக்காக வந்தீங்க”  என கண்கலங்கி கூறினாள்.
” அதான் முடியலயேடி உன் கண்ல தண்ணி வந்தா… என் நெஞ்சில ரத்தம் வடியுதே..” என மனதுள் அறற்றியபடி
“நான் நம்ம உறவ அசிங்கப்படுத்தலை மீரா, நீதான் என்னை ஒரு மாற்று ஏற்பாடா  ஆக்கியிருக்க! வர்மனை உனக்கு பிடிக்கல… ஆனா அவன் தான் அன்னைக்குக் காப்பாத்தின ‘வீரா’ன்னு தெரிஞ்சதும், வேற வழி இல்லாம இப்போ உன் காதலை என் மேல திணிக்கப் பார்க்குற. என்னால இதை இவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியாது. என் காதலை நீ ரொம்ப சுலபமா எடை போட்டுட்டடி…” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான் வர்மன்.
மீரா என்ன நினைத்தாளோ… சடாரென்று அவன் தோளை சுற்றி மாலையாக கரங்களை இட்டு அவனது முகம் நோக்கினாள்.
அவன் வெகுண்டு அவளை தள்ள பார்க்க ..
” ஏன் ? ஏன் இப்படி வதை க்கிறீங்க? என்று அவனது மார்பில் அந்த தழும்பை குத்தி காண்பித்து கதறினாள்.
 அவளது கண்ணீர்த் துளிகள் வர்மனின்  மார்பில் சுடராக விழுந்து தெறித்தன. அவளது உடலின் நெருக்கமும், அந்த தீண்டலின் ஆக்ரோஷமும் வர்மனுக்குள்  விளைவுகளை ஆரம்பிக்க
நரம்புகளுக்குள் மின்னல் புகுந்தது.
வியர்த்து மீசை துடிக்க நின்றவனின் முகம் இழுத்தாள்.  அவன் இதழ்களில் இதழ் பதித்தாள்.
அதில் கண்ணீரின் சுவை உணர்ந்தனர் இருவரும்!
முத்தம்… தன்னவள் அவளாக தரும் இதழ் முத்தம்… இத்தனை இனிக்குமா என வர்மனுக்கு உணர்வெல்லாம் துளிர்த்தது … உள்ளே அவள் நாவோடு நாவி ணைக்க பரபரத்தது.. ஆனாலும் உம் துவண்டது.
அவன் துவண்டு அவளை பார்க்க உடனே விடுவித்தாள்.
” உங்களுக்கு என்னைக்கு இந்த மீராவின் காதல் புரியுமோ , அப்போ வாங்க  ஐ வில் வெய்ட்” என்று சென்று விட்டாள்.
அன்று தொடங்கிய அந்த மௌனப் போர், அடுத்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. பகலில் இருவரும் தங்களின் உச்சக்கட்ட அதிகாரப் பதவிகளில், மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கையும் நிர்வாகத்தையும் செப்பனிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், மாலை மறைந்து இரவு தொடங்கும் அந்த கணத்தில், அந்த வீட்டிற்குள் நுழைந்ததுமே அவர்கள் வெறும் காயம்பட்ட இரு ஆன்மாக்களாக மாறிப்போயினர்.
அவர்களின் அன்றாட விடியல் இப்போது அத்தனை இயந்திரத்தனமாக மாறியிருந்தது.
காலை ஏழு மணி. மீரா குளித்து முடித்து, ஒரு நேர்த்தியான காட்டன் புடவையில், கலகலப்பு ஏதுமில்லாத முகத்துடன் கீழே இறங்கி வருவாள். டைனிங் டேபிளில் அவளுக்கு முன்பாகவே வர்மன் அமர்ந்திருப்பான். அவனது ஐபிஎஸ் யூனிஃபார்மின் கம்பீரமும், கஞ்சி போட்ட சட்டையின் மடிப்புகளும் அவனது இறுகிய முகத்திற்கு இன்னும் கூடுதல் கறாரான தோற்றத்தைத் தந்திருக்கும்.
ஒரு மாத காலமாக அவர்கள் நேருக்கு நேர் அமர்ந்து சாப்பிட்டதே இல்லை. வர்மன் தன் காலை உணவை முடித்துக் கொண்டு எழும்போதுதான் மீரா அறைக்குள் வருவாள். வேலைக்காரர்கள் முன்னிலையில் தங்களின் விரிசலைக் காட்டிவிடக் கூடாது என்பதில் இருவருமே அதிகாரிகளுக்கே உரிய ராஜதந்திரத்தைக் கையாண்டனர்.
அலுவலகத்திற்குப் புறப்படும்போது வர்மனின் எஸ்பி காரும், மீராவின் கலெக்டர் காரும் அடுத்தடுத்து வாசலில் வந்து நிற்கும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், தங்களின் கார்களில் ஏறி வெவ்வேறு திசைகளில் பறப்பார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், எஸ்பி அலுவலகத்திலும் அவர்களின் வேகம் அசாத்தியமாக இருந்தது. வர்மன் தன் கோபத்தை ஒட்டுமொத்தமாக ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் மேல் காட்டினான். இந்த ஒரே மாதத்தில் தேனி மாவட்டத்தின் குற்றப் பின்னணி பாதியாகக் குறைந்திருந்தது. வர்மன் என்ற பெயரைக் கேட்டாலே மாவட்டத்தின் சமூக விரோதிகள் நடுங்கினர்.
மறுபுறம், மீரா தன் தவிப்பையெல்லாம் கோப்புகளின் மேல் காட்டினாள். நள்ளிரவு வரை கலெக்டர் அலுவலகத்தின் விளக்குகள் எரியும். நிலுவையில் இருந்த அத்தனை கோப்புகளும் சரிபார்க்கப்பட்டன.
வாரம் ஒருமுறை நடக்கும் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு மறுஆய்வுக் கூட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் வரும். அரங்கத்தின் நடு நாயகமாக கலெக்டர் நாற்காலியில் மீராவும், அவளது வலதுபுறம் எஸ்பி நாற்காலியில் வர்மனும் அமர்ந்திருப்பார்கள்.
“எஸ்பி சார்… பார்டர் செக்போஸ்ட்ல கஞ்சா கடத்தல் அதிகமாயிருக்கதா ரிப்போர்ட் வந்திருக்கு. வாட் இஸ் யுவர் ஆக்‌ஷன் பிளான்?” என்று மீரா கோப்புகளைப் பார்த்தபடியே கறாராகக் கேட்பாள்.
“ஆக்‌ஷன் ஆல்ரெடி ஸ்டார்ட்டட் மேடம். இன்னும் டூ டேஸ்ல அந்த நெட்வொர்க்கையே க்ளோஸ் பண்ணிடுவேன்,” என்று வர்மன் அவளது கண்களை நேராகப் பார்த்துப் பதிலளிப்பான். அவனது பார்வையில் இருந்த தீவிரம் அவளை உலுக்கும்.
இரவு பத்து மணி.
அலுவலகப் பணிகள் முடிந்து குவார்ட்டர்ஸுக்குள் நுழையும்போது இருவருமே மரணச் சோர்வோடு வருவார்கள். ஆனால், அந்தச் சோர்வையும் மீறி, படுக்கையறைக்குள் நுழைந்ததும் அவர்களின் உள்மனக் காயம் மீண்டும் விழித்துக் கொள்ளும்.
அன்றும் அப்படித்தான்.
இரவு இன்னும் ஆழமானதாய் நீண்டது.
அறையெங்கும் ஒரு தகிப்பான மௌனம் நிலவியது. மீரா தன் காட்டன் புடவையை மாற்றிவிட்டு, இரவு உடைக்காக நளினமான இளஞ்சிவப்பு நிற சில்க் நைட்டியை அணிந்துகொண்டு மீண்டும் படுக்கையறைக்குள் வந்தாள். தலைமுடியை அவிழ்த்துவிட, அது அவளது இடுப்பு வரை அலை அலையாகப் பரவி நின்றது. அவள் தன் முகத்தில் இருந்த கலைப்பை நீக்க பன்னீர் தெளித்துக் கொண்டாள். அந்தப் பன்னீரின் நறுமணம் வர்மனின் நாசியைத் துளைத்தன.
வர்மன் படுக்கையில் ஒருபுறமாகத் திரும்பிப் படுத்து, தன் கண்களை மூடிக் கொள்ள முயன்றான். ஆனால், அவளது இந்த அதீதப் பேரழகு அவனது கோபக் கோட்டையை அடியோடு உலுக்கியது. உள்ளுக்குள் மோகம் தலைதூக்கினாலும்,   அவனது பிடிவாத கசப்பின் … காதலின் மேல் அந்த மோகத்தால் ஏறி வர இயலவில்லை. ‘இவள் என்னை விட அந்தப் பழைய பிம்பத்தைத்தான் அதிகம் நேசிக்கிறாள்’ என்ற எண்ணம் அவனை கட்டுப்படுத்தியது.
ஒரு மாத காலமாகியும் வீரன் அவள் வர்மன் அவளுக்கு அந்நியனாய் நிற்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
” இதற்கு ஒரு விடிவில்லையா? “என தோன்றிற்று.
மீரா மெல்ல நடந்து வந்து, கட்டிலின் மறுபுறம் ஏறி, அவனுக்கு மிக அருகில் அமர்ந்தாள். அவளது உடலின் சூடும் நறுமணமும் வர்மனை இன்னும் நிலைகுலைய வைத்தன.
மீரா அவன் தோள்களை தொட்டாள்.
வர்மன் சட்டென்று கண்களைத் திறந்து, அவளது கையைத் தட்டிவிட்டுப் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.
“உனக்கு என்னதான் வேணும் மீரா? நான் தான் தனியா இருக்கணும்னு சொல்றேன்ல? ஏன் என் தூக்கத்தைக் கெடுக்குற? நாளைக்கு விடியற்காலை அஞ்சு மணிக்கு எனக்கு ஒரு ரைடு (Raid) இருக்கு. நான் தூங்கணும்,” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
 ” எங்க போறீங்க…”
”  இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸினஸ்”
” சொல்லுங்க”
” சொல்ல முடியாது போடி! என திரும்பி படுக்க… இவள் அவன் முதுகை வெறித்து கிடந்தாள்.
அடுத்த நாளின் பயங்கரம் உணராமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!