Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராம் வெட்ஸ் சீதா – 12 (1)

ராம் வெட்ஸ் சீதா 12{1}

பழனி மலை முருகன் கோவில்.



Advertisement

மினிபஸில் வந்த மக்கள் அனைவரும் படியில் ஏறி முருகன் சன்னதிக்கு சென்றார்கள்.

ராதாவோடு வந்த அனைவரும் ரோப் காரில் சென்று மேல் மலைக்கு சென்றார்கள்.

Advertisement

Advertisement

அங்கு ஒரு மண்டபதில் மணமகளுக்கு தனியாக இடத்தை புக் செய்து வைத்திருந்தான் வெற்றி.

அங்கு சென்று குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வரும் போது அறையில் யாருமில்லாதது, போக அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, மஞ்சத்தில் இருந்த பட்டுபுடவையை எடுத்து கட்டிக்கொண்டு, தலை முடியை அழகாக சீவி பின்னலிட்டு, நகைகளை எடுத்து அணிந்து கொண்டும், முகத்திற்கு எந்த மேக்கப் போடாமல் அங்கிருந்த பான்ஸ் பவுடரை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டு எட்டு சிறியகல் வைத்த பொட்டை நெற்றியில் வைத்து முடித்த சமயம் கதவு டொக் டொக்கென்று தட்டும் சத்தம் கேட்டது…..

அவளும் சீதா தான் வந்திருப்பாள், இல்லை அவளின் ஆத்தா வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு கதவை திறக்க, அங்கு சேட்டு வீட்டம்மாவை போல் உதட்டில் சாயம் பூசி, முகத்தில் மேக்கப் போட்டு யாரும் கண்டுகொள்ளாத வகையில் மாறுவேடத்தில் நின்றிருந்தார் கோமளம்.

Advertisement

அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை ராதாவால்.

குழப்பமான நிலையில் அந்த சேட்டும்மாவை பார்த்து “யாரும்மா நீங்க என்ன வேணும் உங்களுக்கு, “என்று கேட்ட ராதாவை உள்ளேத்தள்ளி தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மயக்க மருந்து தெளித்த கர்சிப்பை எடுத்து அவளின் மூக்கை பொத்தினார்…

மயக்கத்தில் சென்ற பெண்ணவளை இழுத்து மஞ்சத்தின் கீழே உள்ளே தள்ளியவர், சுற்றும் முற்றும் பார்த்து பெட்டில் இருந்த ஒரு போர்வையை எடுத்து அவளை உச்சி முதல் பாதம் வரை முழுவதும் போர்த்திவிட்டு, அப்பாடா என இடுப்பை பிடித்து நிமிரும் போது அவரின் இடையில் சொருகி இருந்த சாவி கொத்து கீழே விழுந்ததை கூட கவனிக்காது, அவளின் கைகால் ஏதாவது வெளிய தெரிகிறதா என்று பார்த்தார்..

ஏதும் தெரியாமல் போக முகத்தில் வழிந்த வியர்வை புடவை தலைப்பால் துடைத்து விட்டு, அவசர அவசரமாக அறையின் கதவை திறந்து வெளியேறினார்.

இதோ இப்பொது தான் பழனிமலையை அடைத்தது ராம் குடும்பத்தினரின் சுமோ வாகனம்.

அனைவரும் அங்கு ஒரு லாட்சில் குளித்துவிட்டு கிளம்பி வெளியே வந்து மின்சார ரயில் நிற்குமிடத்துக்கு வந்தார்கள், அங்கு டிக்கெட் கவுண்டரில் ராமும் முருகேசுவும் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து விட்டு திரும்பும்போது, ஏதேச்சையாக அவனின் பார்வை ஒரு இடத்தில் நிலையாக நின்றது.

அவனோ அந்த இடத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அங்கு அவனின் தேவதை போல் தெரிந்தாள் சீதா.

அவனின் கண்களில் எங்கு பார்த்தாலும் சீதா தான் தென்பட்டாள், இது என்ன மாயையாக இருக்குமோ என்று தனக்கு தானே தலையில் அடித்து கொண்டு “என்ன அவள போல இருக்கா அந்த பொண்ணு, நம்ம கண்ணுக்கு தான் அப்படி தெரிதோ, அவ எப்படி இங்க வர முடியும், “என அங்கு புத்தம் புதிய பட்டு பாவாடை தாவணியில், நீண்ட முடியை நன்றாக வாரி ஒருத்த சடை பின்னலிட்டு அதில் சாதிமல்லி மலரை சுற்றி பின்னால் போட்டுக்கொண்டு ஓடினாள் அவளின் அண்ணனை நோக்கி.

ஆனால் பக்கத்தில் நின்று இருந்து முருகேசு அவளை பார்த்துவிட்டான், நண்பனின் பார்வை சீதாவை நோக்கி செல்ல, அவனும் இது உண்மையில் சீதாவாக தான் இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவனின் கையில் எறும்பு கடிப்போல் எதோ கடிக்க, அவன் சுயநினைவுக்கு வந்து என்ன வென்று பார்க்க அபிநயா தான் அவனின் பார்வை சென்ற இடத்தில் பார்த்து விட்டு கோபமாக அவனின் கையில் கிள்ளினாள்.

“ஏய் குண்டு, ஏன் என்னைய கிள்ளிற, சும்மா இருந்தவனை யாராவது கிள்ளுவாங்களா, லூசே “…

“எதே லூசா, உன்னைய யாரு அந்த பொண்ணை பார்க்க சொன்னா கோவிலுக்கு வந்த இடத்துல பார்வை சாமிகிட்ட மட்டும் தான் இருக்கனும், உனக்கு பொண்ணு பார்க்கவுன்னு கோயிலுக்கு வரல , ஒழுங்கா தரையைப் பார்த்து கம்முனு வா, “என்று அவனுக்கு கட்டளையிட்ட, முருகேசுவோ அவளை முறைத்து பார்த்து “ஏய் குண்டு, உங்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இந்த அதிகாரம் உரிமை ஏதும் என்கிட்ட எதிர்பார்க்க கூடாதுன்னு, அப்புறம் பின்னாடி நீ தான் கஷ்ட படுவ, சொன்ன கேளு ஒழுங்கா “என்றான் அவன்.

“எதே நான் கஷ்டப்படுவனா , என் அண்ணன் நண்பன் நீ, அதுவும் இல்லாம என் செல்ல அத்தை மவன் நீ, உன்னைய கட்டிக்கிட்டா நான் எப்படி கஷ்டப்படுவேன், உன் மேல அதிகாரமும் உரிமையும் காட்ட எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு, வேற எவளுக்கும் உரிமை இல்லை ” என்று சீதா நிற்கும் திசையை நோக்கி கோபமாக கூற அவர்களின் இந்த குசும்குசும்பான பேச்சு ராமின் செவியில் விழ அவனோ அவனின் தங்கையை பார்த்து முறைத்தான்..

அண்ணன் முறைப்பை பார்த்தும் பயப்படாத அபிநயா முருகேசுவிடம் ” எனக்கு இங்கேயே ஒரு முடிவு சொல்லணும், இல்லை இதோ இந்த மலையிலே குதிச்சி செத்து போயிடுவேன், யாரு அவ, உனக்கு என்ன அங்க பார்வை வேண்டிகிடக்கு,”என்று மிரட்ட அவளின் இந்த வார்த்தையில் திகைத்து நின்றார்கள் ராமும் முருகேசுவும்.

“அடியேய் குண்டு, அவ உன் அண்ணன் சைட் அடிச்ச பொண்ணு டி நம்ம பக்கத்து ஊரு, “என்று கூறியதும் தான் தாமதம் ராம் அவனின் திருவாயை அவனின் கரங்களால் மூடி அவனை இழுத்து கொண்டு கொஞ்சம் தள்ளி சென்றான்..

“எதே ராம் அண்ணா சைட் அடிக்கிற பொண்ணா “என வாயை திறந்து சீதா நின்று இருக்கும் திசையை பார்த்தாள் அபிநயா.

சீதாவோ அவனின் அண்ணனிடம் சிரித்து பேசிகொண்டிருக்க, அபிநயாவோ “வாவ், பியூட்டிபியூல், பாக்க அந்த சீதை போலவே அழகா இருக்காங்க, ஆமா யாரு அந்த தடியன், நல்லா பல்லை இளித்து சிரிச்சிட்டு பேசறா, “என்று பலகோணங்களில் யோசிக்க ஆரம்பித்தது அவளின் குட்டி மூளை.

இதோ மின்சார ரயில் வந்துவிட்டது, அனைவரும் ஏறுவதற்காக ரயிலில் அருகில் செல்ல, ராமும் சீதா நிற்கும் இடத்திற்கு மிக அருகில் நின்று அவள் தன்னை பார்ப்பாளா, என அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவனின் என்னம் பலித்து விட்டது ஆம் சீதா ராமை கண்டுவிட்டாள்.

அவளின் விழிகள் அதிர்ச்சியாக அவனை நோக்கி செல்ல அவனோ அவளை பார்த்து புருவங்களை மேலே தூக்கி என்னவென்று கேட்க அவளோ, இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

அவனின் அண்ணன் தான் அவளின் கையை பிடித்து இழுத்த பிறகு நிஜவுலகிற்கு வந்தாள்..

இதோ அனைவரும் ரயிலில் ஏறி பழனி மேல் மலையில் இருக்கும் ஸ்ரீபாலதண்டாயுதபாணியை மனமுருகி வேண்ட செல்ல, ராதாவின் கதி தான் பெரும் பாடாய் இருந்தது.

முகூர்த்த நேரம் நெருங்க இன்னும் அரைமணி இருக்க, இதோ மாப்பிள்ளை வெற்றி திருக்கல்யாணம் நடக்கும் மணமேடைக்கு வந்து ஐயர் கூறும் மந்திரத்தை கூடவே கூறி கொண்டிருக்க, பொண்ணை அழைத்து வாங்கோ,என்று கூற ஹரிணியும் சிவகாமியும் மணமகள் இருக்கும் அறையை நோக்கி நடையை கட்டினார்கள்.

இந்த திருமணம் தடையில்லாமல் நடக்குமா? வெற்றியும் ராதாவும் மணவாழ்க்கையில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து காண்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!