Skip to content
Post Views: 55
ரிதம் 26
ரிகர்சலை முடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து தன்னறையில் படுத்தவளின் அலைபேசி அவளை அழைத்தது.
Advertisement
எடுத்துப் பார்த்தவளின் முகம் சுருங்கியது. ‘அன்னோன் நம்பர்’ என்று இருந்தது. கடந்த மூன்று நாட்களாக இந்தத் தொல்லை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அழைப்பை எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அவள் எடுத்துப் பேசாத வரை அது நீண்டு கொண்டே செல்லும்.
Advertisement
Advertisement
“மேடம், நான் ராகவ் சாரோட பி.ஏ. பேசுறேன்.”
“சார், உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது?? எனக்கு எந்த ராகவ்வையும் தெரியாது” அழுத்தமாக உச்சரித்தாள் நத்தாஷா.
Advertisement
இதுபோல தினமும் அவள் பதிலளித்துவிட்டு அலைபேசியைத் துண்டித்துவிடுவாள். அதன் பிறகும் தொடர்ந்து வரும்போது, அவள் அதை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவாள். ‘என்ன இது புதுத் தொல்லை?’ என்றுதான் தோன்றியது.
சமீபகாலமாகத்தான் தன் வாழ்க்கையில் எல்லாம் சீராகச் சென்றுகொண்டிருக்கிறது என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, இப்பொழுது இது என்ன புதுப் பிரச்சினை?? என்று நொந்துகொண்டாள்.
“மேடம், போன வச்சிடாதீங்க. நான் உண்மையிலேயே சுப்ரீம் ஹீரோ ராகவ் சாரோட பி.ஏ. தான் பேசுறேன்.” என்றது அந்தக்குரல்.
“எத்தனை பேர் சார் இதுபோல கிளம்பியிருக்கீங்க?” அவளும் காட்டமாகவே கேட்டாள்.
“மேடம், உண்மையிலேயே அவர் உங்ககிட்ட பேசணும்னு பிரியப்படுறாரு. நான் அவர்கிட்ட கொடுக்கிறேன். அவர் குரலைக் கேட்டா உங்களுக்கு நம்பிக்கை வரும்” அவசரமாகக் கூறிவிட்டு, ராகவ்விடமும் அலைபேசியை நீட்டியிருந்தார்.
“ஹலோ நத்தாஷா” ராகவ்வின் கம்பீரமான குரல் அவள் அலைபேசியில் எதிரொலித்தது. நம்ப முடியாமல் அலைபேசியைத் தன் முகத்திற்கு நேராக எடுத்து வைத்துப் பார்த்தாள். டிஸ்ப்ளேயிலும் அவனுடைய முகம்தான் தெரிந்தது.
“சார், நீங்களா?” அதிர்ச்சி மாறாமல் நத்தாஷா கேட்க,
“நானே தான். உங்களை நேர்ல மீட் பண்ணி வாழ்த்து சொல்லணும்னு ஆசைப்படுறேன். அன்னைக்கு எல்லாரும் இருந்ததுனால உங்ககிட்ட தனியா பேச முடியல. கார் அனுப்பி வைக்கிறேன். என்னோட கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துருங்க” என்றான்.
“எதுக்கு சார்”?
“அதான் சொல்றேனே? நேர்ல பார்த்துப் பேசணும்னு.” சற்று கடுப்பாக வந்தது அவன் குரல்.
அவன் அழைக்கிறான். ‘வா என்றால் வர வேண்டியதுதானே? இதென்ன கேள்வி, எதற்கு என்று?’
“ஏ… ஏ… என்ன பேசணும் சார்?” இப்பொழுது அவளிடம் தடுமாற்றம்.
“உன்னோட குரல்ல இனிமை எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கணும். நீ எப்படிப் பாடுறேன்னு பாக்கணும். நீ பல குரல்ல பாடுவியாமே?? என் எதிர்க்க அதே பாடலை அதே கிறக்கமான குரலில் பாட வைக்கச் சொல்லி கேட்கணும். மீதி எல்லாம் நேர்ல சொல்றேன். கிளம்பி வா” என்றான்.
பேச்சு ஆரம்பிக்கும்போது புரியாமல் இருந்தவளுக்கு, இப்பொழுது அவன் பேச்சின் தோரணை அதைப் புரிய வைத்திருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்புதானே ஸ்டூடியோவுக்கு வந்திருந்தான். பாடச் சொல்லி அன்று கேட்டிருக்கலாமே, இப்போது கெஸ்ட் ஹவுஸ்க்கு வா என்பதன் அர்த்தம் என்ன? நினைக்கும்போதே நெஞ்சு வெடித்தது. அவசரமாக அலைபேசியைத் துண்டித்தவள், அந்த எண்ணைப் பிளாக்கில் போட்டுவிட்டு, அலைபேசியையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.
கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகிவிடும் என்று பேதைபோலச் சிந்தித்தாள்.
எதிர்முனையில் இருந்தவனுக்குக் கோபம் கொப்பளித்தது. அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக வந்தது.
“லேண்ட்லைன்ல இருந்து கூப்பிடு” என்றான் ராகவ்.
அது ரிங் போனது. அவள் எடுக்கவில்லை.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அலைபேசி எடுக்கப்படாமல் போக, கோபம் கொப்பளித்தது அவனுக்கு.
“எவ்வளவு திமிர் இருக்கணும்?? நான் பேசிட்டிருக்கும்போது கட் பண்ணது மட்டும் இல்லாம, நம்பரைப் பிளாக் வேற பண்ணியிருக்காள். அவள் வீட்டுக்குக் காரை அனுப்பு” என்றான் அழுத்தமாக.
காரியதரிசி சரி என்றுவிட்டு, நத்தாஷாவின் வீட்டிற்குக் காரை அனுப்பியிருந்தார்.
………
“நத்தாஷா, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க பாரு” என்ற புஷ்பவல்லியின் குரலில், தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.
சிறிது நேரம் அப்படியே ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தாள். தாயின் குரலில் வேறு வழி இல்லாமல் கதவைத் திறந்து கொண்டு சென்றாள்.
ஈஈஈ என்று இளித்துக்கொண்டு ஒரு ஆடவன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் அதிர்ந்துபோய் மயங்கிச் சரிந்தாள்.
மீண்டும் அவள் தாயின் குரல். “நத்தாஷா, சாப்பிடாமலே படுத்துட்டியேம்மா?? கொஞ்சமாவது சாப்பிடு. இல்ல இந்தப் பாலைக் குடி” என்றபடி நின்றிருந்தார்.
நல்லவேளை கனவு என்று ஆசுவாசமாக மூச்சு விட்டாள். ஆனால் சற்று நேரத்தில் அது உண்மையாக நடந்தது. ராகவின் காரியதரிசி இரவு ஒன்பது மணிக்கு அவர்கள் வீட்டின் காலிங் பெல்லைத் அழுத்தினான்.
இந்த நேரத்துல யார்?? என்று சிந்தித்தாலும், ராகினி கதவைத் திறந்திருக்க, அங்கு நின்றுகொண்டிருந்தான் ஒருவன்.
“நத்தாஷா மேடம் இல்லைங்களா?? சார் அவங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு” நேரடியான வார்த்தைகள்.
தூக்கிவாரிப் போட்டது நத்தாஷாவிற்கு.
“எந்த சார்? அந்த சாருக்கு நேரம் காலம் இல்லையா?” என்றாள் ராகினி.
“மேடம், மைண்ட் யுவர் வேர்ட்ஸ். கூப்பிட்டது உங்களை இல்ல, நத்தாஷா மேடத்தை. அதுவும் சுப்ரீம் ஸ்டார் ராகவ் சார் கூப்பிட்டு அனுப்பியிருக்கார்” என்றான் தோரணையாக.
அவள் கண்கள் விரிந்துவிட்டன. “ஹீரோ ராகவ் சாரா?? எங்க அக்காவைக் கூப்பிட்டாங்களா, நானும் கூட வரவா?” என்று துள்ளலோடு கேட்டுவிட்டாள்.
கதாநாயகன் என்றதும், நேரம் கூட மறந்துபோனது.
அவளை ஏற இறங்கப் பார்த்தவன், ‘பாஸுக்கு இன்னைக்கு லாட்டரிதான் போல’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, “ஹோ, தாராளமா வரலாமே!” என்றான்.
அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவளுக்குக் காலுக்கு அடியில் பூமி நகர்வது போல் இருந்தது. வேகமாக நடந்து வந்தவள், தன் தங்கையைப் பின்னால் தள்ளிவிட்டு அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
“சார், உங்களுக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா? என்னால எங்கயும் வர முடியாது. நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை” என்றாள் அழுத்தமாக.
“நல்லா யோசிச்சுக்கோங்க மேடம். எங்க சாரைப் பகைச்சுக்கிட்டா, உங்களால் இந்த இண்டஸ்ட்ரில வாழ முடியாது. அவர் கூப்பிட்டு இதுவரைக்கும் யாரும் வரமாட்டேன்னு சொன்னதா சரித்திரமே இல்லை. நீங்க என்னன்னா அவர் போன் பேசும்போதே கட் பண்ணிட்டீங்க. அவர் செம கோவத்துல இருக்காரு. ஒழுங்கா வந்து அந்தக்கோபத்தை நீங்களே தணிச்சிருங்க. இல்லைன்னா விளைவு விபரீதமாகிடும்” என்று மிரட்டினான்.
பெரிய மகள் பேசும்போதுதான், பிரச்சினையின் சாரம்சம் தாய்க்கும் இளைய மகளுக்கும் புரிந்தது.
ஒருத்தி வாயில் கையை வைத்துவிட, இன்னொருத்தர் நெஞ்சில் கையை வைத்தபடி நின்றுவிட்டனர்.
“எனக்கு இந்த இண்டஸ்ட்ரியே வேணாம் சார். என்னால கெஸ்ட் ஹவுஸுக்கெல்லாம் வந்து பாட முடியாது. நீங்க கிளம்பலாம்” என்றபடி கதவை ஓங்கிச் சாத்தினாள்.
முகத்தில் அடித்ததுபோல இருந்தது அவனுக்கு. அலைபேசியில் பேசிக்கொண்டே வெளியில் வருவதற்கும், தந்தைக்காக மருந்து வாங்கிக்கொண்டு வந்த ரமேஷ் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது.
“ஹலோ, யாருங்க நீங்க?” என்று ரமேஷ் கேள்வி எழுப்பினாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வந்து அந்த உயர்தர காரில் ஏறிச் சென்றுவிட்டான்.
‘பயங்கர காஸ்ட்லி காரா இருக்கு. நம்ம வீட்டுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. நத்தாஷாவைத் தேடி வந்திருப்பாங்களோ? அப்படித்தான் இருக்கும். ஆனா எதுக்கு இந்த நைட்ல வந்திருக்கான்?? கௌதம் சார்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கணும்’ என்று நினைத்தபடி வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
இதற்குத்தான் தன் தந்தை, சென்னை வேண்டாம், திரைத்துறை வேண்டாம் என்று சொன்னாரோ?? இங்கு ஒருவர் மட்டும் நல்லவராக இருந்து எந்தப் பிரயோஜனமும் இல்லையே?? சுற்றி இருப்பவர்களும் இருக்க வேண்டும் அல்லவா? இப்பொழுது என்ன செய்வது? பொட்டுத் தூக்கம் இல்லை மூவருக்கும்.
இரவு முழுவதும் நடுங்கியபடி அமர்ந்திருந்தவர்கள், காலையில் பெட்டி படுக்கையையெல்லாம் கட்டிவிட்டார்கள், ஊருக்குச் செல்வதற்காக…
இந்தச் சென்னையும் வேண்டாம், இந்தத் திரைத்துறையும் வேண்டாம், பாடவும் வேண்டாம், புகழும் வேண்டாம். எல்லாவற்றிற்கும் பெரிய முழுக்குப் போட்டுவிட்டார்கள்.
……..
அதிகாலை விடியலை நோக்கி அந்தப் பெரிய மாநகரத்தின் மக்கள் கூட்டம் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்க,
இவர்கள் மட்டும் அந்த விடியலைப் பயத்தோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ரமேஷ் நியூஸ் பேப்பரை எடுப்பதற்காக வாசலுக்குச் செல்லும் போது, அந்த உயர்தர காரும் அதிலிருந்தவனும் வீட்டு வாசலைத் தட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.
அவனிடம் சென்று என்ன ஏது என்று விசாரிக்கும்போது, அவன் பதில் சொல்வதற்கு முன்னால், பெரிய டெம்போ ஒன்று வந்து நின்றது.
“யாரு சார் நீங்க? நைட் கூட வந்திருந்தீங்க?” என்று இவன் கேட்கும்போது, அந்த டெம்போவின் கிளீனர் அட்ரஸை உறுதிசெய்வதற்காக வந்து நின்றவன், அந்த வீட்டின் நம்பரைச் சொல்லி “இதுதானே?” என்று கேட்டான்.
“ஆமா, இதுதான். ஆனா நாங்க யாரும் புக் பண்ணலையே?” என்றான் ரமேஷ்.
“அண்ணா, நாங்கதான் புக் பண்ணியிருக்கோம்” என்ற குரலில் ரமேஷ் திரும்பிப் பார்த்தான். அங்கு நத்தாஷா நின்றிருந்தாள்.
“டெம்போ எதுக்கும்மா?” என்று கேட்டபடி அவன் அவளை நோக்கி நடந்தான்.
அதற்குள் அந்தக்காரியதரிசி கேட்டைத் திறந்து கொண்டு வீட்டின் உள்ளே வந்துவிட்டிருந்தான், கூடவே டெம்போ டிரைவரும்.
“நாங்க எங்க ஊருக்கே போறோம் அண்ணா. இந்தச் சென்னையும் வேண்டாம், இந்தத் திரை உலகத்துல பாடச் சந்தர்ப்பமும் வேண்டாம்” அழுத்தமாக ரமேஷின் அருகில் நின்றிருந்தவனைப் பார்த்துக் கூறினாள்.
“நல்லா யோசிச்சுக்கோங்க மேடம். எதுக்குத் தேவையில்லாத வேலையெல்லாம் பண்றீங்க?” என்றபடி அந்த மனிதன் பேச,
ரமேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் ப்ரீத்தியும் வெளியில் வந்துவிட்டாள்.
“உங்க ராகவ் சார்கிட்ட போய் சொல்லுங்க. அவங்களுக்கு எதுவுமே வேண்டாம்னு ஊருக்குக் கிளம்பிட்டாங்கன்னு” என்று கூறிவிட்டாள்.
அவன் முகத்தைச் சுருக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
“யாரு ராகவ், எதுக்காக ஊருக்குக் கிளம்புறீங்க”? என்று ரமேஷ் கேட்க,
ப்ரீத்திக்கு ராகவ் யார் என்று புரிந்தது. அவசரமாகத் தன் தோழியை நெருங்கியவள், “ஹீரோ ராகவ்வாடி?” என்று கேட்டாள்.
அவளும் ஒன்றுவிடாமல் அந்த மூன்று நாட்கள் நடந்ததையும், முதல் நாள் வந்த அழைப்பைப் பற்றியும் கூறினாள்.
“இவ்வளவு நடந்திருக்கு? என்கிட்ட ஏன்மா ஒரு வார்த்தை கூட சொல்லல?” என்று கேட்டான் ரமேஷ்.
“எனக்கு ஒண்ணுமே புரியல அண்ணா. முதல்ல என்ன ஏதுன்னு தெரியாமயிருந்துச்சு. புரியும்போது ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு. நாங்க யாருக்கும் பாரமாக இருக்க விருப்பப்படல. இவங்க எல்லாம் பெரிய இடம் அண்ணா. இவங்களைப் பகைச்சுட்டு இங்க எங்களால வாழ முடியாது. எங்களுக்கு உதவி பண்ணா உங்க வாழ்க்கையும் பாழாகிடும். நாங்க திரும்பி மதுரைக்குப்போறோம் அண்ணா. கஞ்சோ கூளோ, நாங்க மானத்தோட அங்கேயே இருந்து குடிச்சிக்கிறோம்” என்றபடி கண்ணீரைத் துடைத்தாள்.
“என்னடி உளறல் இது?? நீ வேலை செய்யும்போது கூடத்தான் இதுபோல நிறைய பேரைக் கடந்து வந்திருப்ப. பெண்களாக இருந்தா இந்தப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதுக்காக ஓடி ஒளிஞ்சிடணுமா?? கௌதம் சார்கிட்ட சொன்னியா”? என்று கேட்டாள் ப்ரீத்தி.
அவள் இல்லை என்று தலையாட்டினாள். “தெரியவும் வேண்டாம். கண்டிப்பா சொன்னா பிரச்சினை வரும். இதுபோல பெரிய இடத்தைப் பகைச்சுக்கிட்டா கௌதம் சாரோட வாழ்க்கையும் அழிஞ்சு போயிடலாம். அவரை நம்பி நிறையப் பேர் இருக்காங்க. என் ஒருத்திக்காக எல்லாரும் கஷ்டப்படுவதை நான் விருப்பப்படல. இதெல்லாம் உன்னால தான் தொடங்குச்சு, நீ எனக்குக் கை தூக்கிவிட்ட. ஆனா காலம் என்னை அடிச்சுச் சாய்க்கிறதுக்குக் காத்துக்கிட்டிருக்கு. மூழ்கிக்கிட்டிருக்க என்னைக்காப்பாத்தணும்னு நினைச்சு, நீங்களும் தண்ணீர்ல மூழ்கிடாதீங்க” என்றாள்.
“ஆனா அவர்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போறது தப்புன்னு உனக்குத் தோணலையா நத்தாஷா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“எனக்கு நல்லது நினைக்கிற நல்ல உள்ளங்கள்ல அவரும் ஒருத்தர். நீங்க என்னை எப்படிப் போக வேண்டும்னு சொல்றீங்களோ, அப்படித்தான் அவரும் சொல்லுவாரு” என்றாள்.
ப்ரீத்தியும் ரமேஷும் ஏதேதோ சொல்லிச் சமாதானப்படுத்தினார்கள். ஆனால் நத்தாஷா ஊருக்குக் கிளம்புவதில் திடமாக இருந்துவிட்டாள்.
புஷ்பவல்லி வாயடைத்துப் போய்விட்டார். பெண்ணின் நல்வாழ்விற்காகத்தான் அவள் எதிர்காலத்தை எதிர்நோக்கி வந்தார். ஆனால் அது சிதையுமெனும்போது அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை. அதனால் பெண் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டார். கஷ்டப்பட்டாலும் வாழ வேண்டும் என்று நினைத்தார்.
பொருட்கள் எல்லாம் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட வீடு காலியாகும் நிலையிலிருக்க, அந்த வீட்டின் வாசலில் வேகமாக வந்து நின்றது நீல நிற டொயோட்டா கார்.
அந்தக் காருக்குச் சொந்தக்காரன் யார் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. எந்த வேகத்தில் வந்தானோ, அதே வேகத்தில் கேட்டைத் திறந்து கொண்டு படிகளில் ஏறினான்.
அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, நத்தாஷாவின் மீது அழுத்தமாகப் படிந்தது அவன் பார்வை.
அந்தப் பார்வை ‘என்னை மீறி நீ சென்று விடுவாயா?’ என்று கேள்வி கேட்பது போல இருந்தது.
error: Content is protected !!